14ம் திகதி பயணத் தடை நீக்கப்படுமா? இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!!

இராணுவத் தளபதி..

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை தளர்த்தப்படுமா என்பது குறித்து எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த இருக்கும் இலகுவான வழிமுறை நாட்டை முடக்குவதென்றால் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியாக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாடளாவிய ரீதியில் நாளாந்தம் 2500க்கு மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். கோவிட் மரணங்களும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தொடர்ச்சியாக எமக்கு வலியுறுத்தினர்.

இந்நிலையில், தற்போது நாட்டைத் திறப்பது ஆரோக்கியமான விடயமல்ல என்பது எமக்கும் தென்பட்டது. ஏற்கனவே இரண்டு வாரங்கள் பயணத் தடை பிறப்பிக்கப்பட்டாலும் கூட அதில்முறையாக மக்கள் செயற்படாத நிலையொன்று காணப்பட்டது.

அதன் பின்னரும் ஒரு சில பகுதிகளில் மக்களின் அநாவசியச் செயற்பாடுகளை அவதானிக்க முடிந்தது. எனவேதான் 7ம் திகதி வரையில் பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடையை மேலும் ஒரு வார காலம் நீடிக்கத் தீர்மானித்தோம்.

இந்தத் தீர்மானமானது ஜனாதிபதியின் தனித் தீர்மானமோ அல்லது நான் எடுத்த தனித் தீர்மானமோ அல்ல. நாட்டிலுள்ள விசேட வைத்திய நிபுணர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு அமைய,கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படுகின்றது.

ஏற்கனவே 14 நாட்கள் பயணத் தடை பிறப்பிக்கப்பட்டாலும் கூட 21 நாட்கள் தொடர்ச்சியாகக் கட்டுப்பாடுகளை விதித்தால் மட்டுமே முழுமையான பெறுபேறுகள் வெளிப்படும்.

21 நாட்களுக்குப் பின்னரும் பயணத்தடை நீடிக்குமா? தளருமா? என்பது தொடர்பில் எதிர்வரும் 14ம் திகதிக்கு முன் அறிவிப்போம். கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த இருக்கும் சரியான வழிமுறை நாட்டை முடக்குவதென்றால் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதனால் மக்களுக்கு சிரமங்கள் ஏற்படும்.ஆனால், அதனையும் தாண்டி மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டே செயற்படுகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய 6 வர்த்தக நிலையங்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல்!!

பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய..

வவுனியாவில் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயற்பட்ட 6 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் இன்று (06.06) சீல் வைத்து மூடப்பட்டுள்ளதுடன், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களது அத்தியாவசிய தேவைகளை பெறும் வகையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீடு வீடாக சென்று வழங்குவதற்கு பிரதேச செயலங்கள் ஊடாக சில வர்த்தக நிலையங்களுக்கு பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதேச செயலகம் ஊடாக வீடு வீடாக பொருட்களை விநியோகிப்பதற்கு அனுமதி பெற்றுக் கொண்ட வர்த்தக நிலையங்கள் தொடர்பில் விசேட சோதனை நடத்திய சுகாதாரப் பிரிவினர்,

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயற்பட்ட வர்ததக நிலையங்கள் மற்றும் வீடு வீடாக பொருட்களை வழங்குவதற்கு வழங்காப்பட்ட பாஸ் அனுமதியை முறைகேடாக பயன்படுத்திய வர்த்த நிலையங்கள் என்பவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதன்படி பலசரக்கு வியாபார நிலையம் நான்கு, பாண் விற்பனை நிலையம் ஒன்று, ஸ்ருடியோ ஒன்று என 6 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் சீல் வைத்து மூடப்பட்டதுடன், குறித்த வர்த்தக நிலையங்கள் 14 நாட்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தல் சுவரொட்டி ஒட்டப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த இலங்கையர்களையும் தன்பக்கம் திருப்பிய நாயின் செயல்!!

மண்சரிவில்…

மாவனெல்லையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினரின் சடலத்தை கண்டுபிடிக்க அவர்கள் வளர்ந்த நாய் உதவி செய்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாவனெல்ல தெவனகல பகுதியிலுள்ள வீடொன்றின் மீது பாரிய மண் திட்டு சரிந்து வீழ்ந்த நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர்.

மண் குவியலில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில், சடலங்களை கண்டுபிடிக்க நாய் உதவியுள்ளது.

முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் மீட்புப் பணியாளர்கள் செல்ல அந்த நாயும் சம்பவ இடத்திற்கு வந்தபோது விரட்டினர். ஆனால் அது திரும்பி வந்து அதன் முன் பாதங்களால் சேற்றைத் கிளறத் தொடங்கியது.

மண்ணால் புதைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை எங்கு தேடுவது என்பது மீட்பவர்களுக்கு ஒரு துப்பு கொடுத்தது. இதன்போது சடலங்கள் அந்த இடத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த நாய் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருவதுடன், அனைத்து ஊடகங்களில் முன்னிலை செய்தியாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சகாயமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த மேலும் 7 பேர் உட்பட 29 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா, சகாயமாதாபுரம் பகுதியில் மேலும் 7 பேர் உட்பட 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு (05.06) வெளியாகின.

அதில், வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒமேகா ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவருக்கும், சகாயமாதாபுரம் பகுதியில் ஏழு பேருக்கும், திருநாவற்குளம் பகுதியில் நான்கு பேருக்கும்,

நெடுங்கேணி சேனைப்புலவு பகுதியில் ஒருவருக்கும், ஆச்சிபுரம் பகுதியில் மூன்று பேருக்கும், மன்னாரைச் சேர்ந்த வவுனியா சிறைச்சாலை கைதிகள் நான்கு பேருக்கும், வவுனியா ஹொவரவப்பொத்தானை வீதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் கடமையாற்றும் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த நான்கு பேருக்கும்,

இறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த மூன்று பேருக்கும், பெரியஉலுக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும் என 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, சனத்தொகை குறைந்த குறித்த சகாயமாதாபுரம் சிறிய கிராமத்தில் இதுவரை 31 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த கிராமத்தில் கோவிட் பரவலை தடுக்கும் வகையில் கிராமத்தில் இருந்து வெளியேறவும்,

கிராமத்திற்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், கிராமத்தின் பிரதான வீதிகள், உள் வீதிகள் என்பன போக்குவரத்துக்காக தடை செய்யப்பட்டு கிராமத்தைச் சுற்றி பொலிசார் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

21ஆம் திகதி வரை பயணத்தடையை நீடிப்பது தொடர்பில் ஆலோசனை!!

பயணத்தடை..

தற்போது நடைமுறையில் உள்ள முழுமையான பயணத்தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் நீடிப்பது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து ஏனைய தேவைகளுக்கு பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தமாதம் 25ஆம் திகதி அமுலுக்கு வந்த பயணத் தடை நாளை 7ஆம் திகதி தளர்த்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் 14ஆம் திகதி தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றின் தீவிரம் குறைவடையாத நிலையில் நாளாந்தம் பெருமளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதனால் , எதிர்வரும் 14ஆம் திகதியும் பயண தடையை தளர்த்த வேண்டாம் என பல தரப்பினரும் அரசை கோரி வருகின்றனர். அதனால் தற்போது அரச உயர் மட்டத்தில் பயண தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் நீடிப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது.

14ம் திகதி வரை பயணக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், கொரோனா பரவல் குறைவடையாதுள்ளதை கருத்திற் கொண்டே இந்த முடிவை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடு அமலில் உள்ள காலத்திலும், கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறையாமல், ஆபத்தான நிலைமையை நோக்கி தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, பயணக் கட்டுப்பாட்டு அமலில் உள்ள காலப் பகுதியில், மக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்துக்கொள்வதால், நாளை (07) முதல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மிக கடுமையாக நடைமுறைப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தமிழன் பத்திரிகை செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலே “பயண தடையை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உண்டு ” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை, எதிர்வரும் 21ம் திகதி வரை நீடிக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் உயர்மட்டத்தை மேற்கோள்காட்டி, தமிழன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மண்சரிவில் உயிரிழந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் தொடர்பில் வெளியான தகவல்!!

மண்சரிவில்..

மாவனெல்ல, தெவனகல பிரதேசத்தில் நேற்று வீடு ஒன்றின் மீது மண் சரிவு ஏற்பட்டமையினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 57 வயதான விஜேரத்ன, 55 வயதான அவரின் மனைவியும் 29 வயதான மகனும் 23 வயதான மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் இந்த கும்பத்தினர் உயிரிழந்தள்ளனர். இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டிருந்த இடத்தில் இதற்கு முன்னரும் சிறிய மண் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் மரணமடைந்த மகன் வெளிநாடு சென்று அனுப்பி பணத்தில் மண் சரிவு இடம்பெற்ற இடத்திற்கு முன்னால் இரண்டு மாடி வீடு ஒன்றை நிர்மாணித்துள்ளனர்.

உயிரிழந்த மகன் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் மீண்டும் வெளிநாடு செல்ல தயாராகியுள்ளார். நாட்டில் நிலவும் கோவிட் நிலைமை காரணமாக வெளிநாடு செல்வது தாமதமாகியள்ளது. எனினும் இறுதியில் முழு குடும்பம் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வவுனியாவில் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படும் மரக்கறிகள்!!

மரக்கறிகள்..

வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆதரவுடன் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் மரக்கறிகள் கொள்வனவு செய்யப்பட்டு பயணத்தடை நேரத்தில் அதிக விலையில் மரக்கறிகள் விற்பனை செயயப்பட்டு வருகின்றது.

கொரோனா அ.ச்சுறுத்தல் காரணமாக நாடு பூராகவும் பயணத்தடை நடைமுறையில் உள்ள நிலையில் வவுனியா மாவட்டத்திலும் மக்கள் தமக்கு தேவையான பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகளை வழங்குவதற்கு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தாலும், பிரதேச செயலகத்தாலும் பலருக்கும் பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுமதி பெற்றவர்கள், ஏற்கனவே பாதிப்படைந்துள்ள விவசாயிகளிடம் இருந்து மிகக்குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்து இரண்டு, மூன்று மடங்கு இலாபம் வைத்து மக்களுக்கு மரக்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாளாந்த கூலி வேலை செய்து அன்றாட சீவியத்தை போக்கும் மக்களும் மரக்கறிகளை வாங்க முடியாத அளவுக்கு விலை ஏற்றம் காணப்படுகின்றது.

இதன் மூலம் உற்பத்தியாளரும், பெறுனரும் பாதிப்படைய இடைத்தரகரான வியாபரிகளே அதிக இலாபத்தை பெறுகின்றனர். இதற்கு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களமும் உடந்தையாக செயற்படுகின்றது.

வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் மரக்கறிகளின் கொள்வனவு விலை மற்றும் விற்பனை விலை தொடர்பில் கட்டுப்பாட்டு விலையை அறிவித்துள்ளது.

அந்த விலையில் விவசாயிகள் பாதிக்கும் வகையிலும், இடைத்தரக்கர்களாக செயற்படும் வியாபாரிகள் அதிக லாபம் பெறும் வகையிலும் அந்த விலைப்பட்டியல் அமைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக விவசாயிகளிடம் இருந்து 80 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படும் கத்தரிக்காய் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 60 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படும் வெண்டிக்காய் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுன்றது.

சில இடங்களில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கும் மரக்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் கமநல அபவிருத்தி திணைக்களம் விவசாயிகளின் நலனை கருத்தில் கொள்ளாது செயற்படுவதாக பல்வேறு தரப்புகளில் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுத்துள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் குறித்த திணைக்களத்திற்கு எதிரான பதிவுகள் வைரலாகி வருகின்றன.

குடும்ப த.க.ரா.றில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : அ.திர்ச்சியில் குடும்பத்தினர்!!

ரஞ்சிதா…

நன்னிலம் அருகே கணவர் மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட குடும்ப த.க.ரா.றில் பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் ஒத்தவீடு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி மீரா என்கிற ரஞ்சிதா.

இருவருக்கும் காதல் திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் 4வயதில் ஆண் ஒரு கு.ழ.ந்தை உள்ளது. இந்த நிலையில் மாமியார் மற்றும் க.ண.வ.ரு.டன் ஏற்பட்ட த.க.ரா.று காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரஞ்சிதா தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ளார்.

இதையறிந்து வந்த நன்னிலம் காவல்துறையினர் இவரது உ.ட.லை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அ.ரசு மருத்துவ கல்லூரி ம.ருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நன்னிலம் காவல்துறையினர் சந்தேக ம.ர.ண.ம் என வ.ழ.க்.கு.ப்.பதிவு செ.ய்.து தீ.வி.ர வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாயம் விளையாட்டால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!

ஜூவிதா…

ஒட்டன்சத்திரம் அருகே கணவன் தாயம் விளையாடச் செல்வதால் ஏற்பட்ட ச.ண்டை காரணமாக ஆறு மாத கர்ப்பிணி பெண் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த செல்போன் பழுது நீக்கும் தொழில் செய்யும் அருள்மோகன் என்பவருக்கும், கண்ணியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாஸ்கோடு அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜூவிதா (JUVITHA) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

விருப்பாட்சி அகதிகள் முகாமில் வசித்து வந்த நிலையில் தற்போது முழு ஊரடங்கு என்பதால் அருள்மோகன் வேலைக்குச் செல்லாததால் தாயம் விளையாட பக்கத்து வீடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் தான் ஆறு மாத கர்பிணியாக உள்ள நிலையில் தன்னைப் பற்றி கவலை இல்லாமல் தாயம் விளையாடச் செல்ல வேண்டாம் என ஜூவிதா அ.டி.க்கடி அருள்மோகனுடன் ச.ண்.டை போ.ட்.டுள்ளார்.

இந்நிலையில் ஜூவிதாவின் பேச்சைக் கேட்காமல் அருள்மோகன் மீண்டும் தாயம் விளையாட சென்றுள்ளார். இதனால் ஜூவிதாவிற்கும் அருள்மோகனுக்கும் நேற்று மாலை மீண்டும் ச.ண்.டை ஏற்பட்டுள்ளது.

இதில் ஆ.த்.தி.ரமடைந்த ஜுவிதா வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் து.ப்.ப.ட்டாவில் தூ.க்.கிட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார். இச் சம்பவம் குறித்து சத்திரப்பட்டி போ.லீ.சா.ருக்கு தகவல் அளிக்கப்பட்டு,

அங்கு வந்த போ.லீசார் உ.ட.லை பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இ.ற.ந்த பெ.ண் ஆறுமாத கர்ப்பிணி என்பதால் பழனி கோட்டாட்சியர் ஆனந்தி வி.சா.ர.ணை ந.ட.த்தி வருகிறார்.

வவுனியா பண்டாரிக்குளம் கிராமத்தில் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கி வைப்பு!!

5000 ரூபாய் கொடுப்பனவு…

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பண்டாரிக்குளம் கிராமசேவையாளர் பிரிவில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவு இன்று (05.06) வழங்கப்பட்டது.

சமுர்த்தி பயனாளிகளுக்கான 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக சமுர்த்தி முத்திரை பெறும் 98 குடும்பங்களுக்கு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.

சமுர்த்தி கொடுப்பனவு பெறுபவர்கள், தொழில் பாதிப்புற்றோர், சிரேஸ்ட பிரஜைகள், நோய்பாதிப்புக்குள்ளானவர்கள் உள்ளிட்ட குடும்பங்கள் என்பனவே இவ்வாறு 5000 ரூபாய் கொடுப்பனவுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காதலியை காண மணப்பெண்போல் வேடம் அணிந்த காதலன் : பின்னர் நடந்த விபரீதம்!!

இந்தியா..

உத்திரபிரதேசத்தில் உள்ள பதோகி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொரோனா ஊரடங்கை மீறி காதலியின் வீட்டுக்கே சென்று காதலியை பார்க்க முயன்றுள்ளார்.

நேரடியாக சென்றால் காதலியின் குடும்பத்தினர் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் மணப்பெண்போல் வேடமிட்டு காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

என்னதான் வேடமிட்டாலும் அவரின் நடவடிக்கைகள் அவரை காட்டிக்கொடுத்துவிட்டது. உடனே அவரை சுற்றிவளைத்த குடும்பத்தினர் மணப்பெண்போல் வேடமிட்டவரை துருவித்துருவி விசாரித்தனர். பின்னர் அவரை பிடித்து அ.டி.த்.து உ.தை.க்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலுக்கு இ.டையூறாக இருந்த 3 வயது மகளுக்கு தாய் செய்த கொ.டூரம்!!

இந்தியாவில்..

க.ள்ளக் கா.தலுக்கு இடையூறு என்று கருதி மூன்று வயது ம.களை கொ.லை செ.ய்.து பு.தை.த்.த தா.யை எ.ன்.க.வு.ண்டர் செ.ய்.ய வேண்டும் என பொதுமக்கள் போ.லீ.சா.ரிடம் வா.க்.கு.வா.த.த்.தி.ல் ஈடுபட்டதால் ப.ர.ப.ர.ப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மரிக்கவலச கிராமத்தை சேர்ந்த பெண் வரலட்சுமி. கணவனை பி.ரிந்து வாழும் வரலட்சுமி அதே ஊரை சேர்ந்த ஜெகதீஸ்வர ரெட்டி என்பவருடன் த.கா.த தொ.டர்பு கொண்டிருந்தார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அவருடைய மூன்று வ.ய.து ம.க.ள் ம.ர்.ம.மான மு.றையில் ம.ர.ண.ம.டை.ந்து பு.தை.க்.கப்பட்டார். சி.று.மி.யி.ன் ம.ர.ண.ம் தொ.டர்பாக கிராம ம.க்களுக்கு ச.ந்.தே.கம் இருந்து வந்தது.

வரலட்சுமி த.ன்னுடைய ம.க.ளை Kolai செ.ய்.தி.ரு.க்.க.லா.ம் எ.ன்று க.ருதிய கி.ரா.ம ம.க்கள் போ.லீ.சாரு.க்கு த.கவல் அ.ளித்தனர்.
போ.லீ.சார் கி.ராமத்திற்கு வ.ந்து வரலட்சுமியிடம் வி.சாரணை ந.டத்தி போ.லீ.ஸ் வா.கனத்தில் ஏ.ற்றி கா.வ.ல் நி.லையத்திற்கு அ.ழைத்து செ.ல்ல மு.யன்றனர்.

அ.ப்போது போ.லீ.ஸ் வா.கனத்தை வ.ழி.ம.றி.த்.து நி.ன்.ற பொ.துமக்கள், க.ள்.ள.க் கா.த.லு.க்.கா.க ம.க.ளை இ.ப்படி செ.ய்த வ.ரலட்சுமி உ.டனடியாக எ.ன்.க.வு.ண்.டர் செ.ய்.ய வே.ண்டும், இ.ல்லையென்றால் எ.ங்களிடம் வி.ட்டு வி.டுங்கள். நா.ங்கள் பா.ர்த்துக் கொ.ள்கிறோம் எ.ன்று போ.லீ.சா.ருடன் வா.க்.கு.வா.த.த்.தி.ல் ஈ.டுபட்டனர்.

அ.ப்போது போ.லீசாருக்கும் பொ.து.ம.க்.க.ளு.க்.கு.ம் இ.டை.யே மு.ர.ண்.பா.டு ஏ.ற்.ப.ட்.ட.து. இ.ந்த நி.லையில் ஒ.ரு வ.ழியாக பொ.தும.க்களை ச.மா.ளி.த்.த போ.லீ.சார் வ.ரலட்சுமியை கா.வ.ல் நி.லையத்திற்கு அ.ழைத்து செ.ன்றனர்.

கொரோனா பாதித்த மாமனாரை தோளில் சுமந்து மருத்துவமனை சென்ற மருமகள்!!

அசாமில்..

இந்திய மாநிலம் அசாமில் கொரோனாவால் உ.யிருக்கு போ.ராடிய மாமனாரை தோளில் சுமந்து மருத்துவமனை சேர்ப்பித்துள்ளார் மருமகள். அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து வருபவர் 75 வயதான துலேஷ்வர் தாஸ். இவரது மகன் சூரஜ் தமது வேலை நிமித்தம் வெளியூர் சென்றுள்ளார்.

குடியிருப்பில் அவரது மனைவி நிகாரிகாவும் தந்தை துலேஷ்வர் தாசும் மட்டுமே இருந்துள்ளனர். இந்த நிலையில் துலேஷ்வர் தாசுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

ஊரடங்கு நேரத்தில் போக்குவரத்து இல்லாததால் மாமனாரை எப்படி மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என்று நிகாரிகா குழம்பிப்போயுள்ளார்.

தாமதித்தால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த அவர் சிறிதும் தாமதிக்காமல் கொரோனா பாதித்த தன் மாமனாரை தோளில் சுமந்து, கிடைத்த வாகனம் மூலம் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. இதனிடையே, மாமனாரை தோளில் சுமந்து வந்ததால் நிகாரிகாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கும் தொற்று உறுதியானது. அவரை வீட்டுத் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தனக்கு கொரோனா வந்தாலும் பரவாயில்லை என்று தன்னலம் பாராமல் மாமனாரை தோளில் சுமந்து சென்று பொறுப்புடன் செயல்பட்ட நிகாரிகாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

அமெரிக்கா வரை கொடிகட்டி பறக்கும் எங்கள் ஊர் பிட்டு!!

பிட்டு…

கடந்த பல மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் அதிகாரி ஒருவர் பிட்டு தொடர்பில் கதைத்து சர்ச்சையில் சிக்கினார். சர்ச்சையில் சிக்கியது என்னவோ அதிகாரிதான் ஆனால் அன்றில் இருந்து பிட்டுக்கு உலகளாவிய ரீதியில் மவுசு அதிகரித்தது.

பிட்டு பாடல், பிட்டு கதை, பிட்டு செய்முறை என இணையத்தில் ஒய்யாரமாக பிட்டு வலம் வந்தது. இந்த நிலையில், தற்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தக தளத்தில் தான் சுவைத்து உண்ட பிட்டு தொடர்பில் பதிவொன்றை இட்டுள்ளார்.

இதில் பிட்டு உணவை எனக்கு பரிந்துரைத்தமைக்கு நன்றி என்றும், இலங்கையில் சிறந்த உணவொன்றை நான் சுவைத்திருக்கின்றேன் எனவும், இதில் சிறிது தேங்காய்ப் பால் சேர்த்து உண்பது அதி சுவையாக இருந்தது என்றும் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவிற்கு பல இலங்கையர்கள் பிட்டின் சுவை தொடர்பில் கருத்து தெரிவித்து வருவதுடன், பிட்டினை பல்வேறு வழிகளில் எவ்வாறு சுவைக்கலாம், தேங்காய்ப்பாலுடன், சர்க்கரையுடன் என பல்வேறு கறி வகைகளுடன் சுவைத்துப் பாருங்கள் என தூதுவருக்கு பரிந்துரைத்து வருகின்றனர்.

இலங்கையில் பயணத்தடையை நீடிப்பது தொடர்பில் அமைச்சர் கெஹலிய!!

பயணத்தடை..

நாட்டில் தற்பொழுது அமுலில் உள்ள பயணத்தடை தொடர்ந்தும் நீடிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கோவிட் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதிலும் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14ம் திகதி வரையில் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்தப் பயணத் தடை மேலும் நீடிக்கப்படலாம் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

14ம் திகதி வரையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடையை அதிகாரிகள் தொடர்ந்தும் நீடிக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மக்கள் வீடுகளிலேயே இருந்தால் எதிர்வரும் 14ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ள பயணத் தடையை நீடிக்கப்பட வேண்டிய அவசியமிருக்காது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கொழும்பு ஊடகங்களுக்கு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வவுனியாவில் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி இடம்பெற்ற வியாபாரம் : வீதியில் இறங்கிய திலீபன் எம்.பி!!

திலீபன் எம்.பி..

வவுனியாவில் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி இடம்பெற்ற வர்த்தக நடவடிக்கைகளை கண்காணிக்கும் முகமாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் இன்று (05.06) திடீர் சோதனை நசடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வாகனத்தை வழிமறித்த பாராளுமன்ற உறுப்பினர் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் பின்பற்றிய சுகாதார நடைமுறைகளின் குறைபாடுகளை சுட்டிக் காட்டியதுடன்,

அனுமதியின்றி வியாபாரத்தில ஈடுபட வேண்டாம் எனவும், வியாபாரத்தில் ஈடுபட முறையான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் தெளிவு படுத்தி ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வாகனத்தை திருப்பி அனுப்பினார்.

இதனையடுத்து வேப்பங்குளம் பகுதியில் உள்ள ஐஸ்கிறீம் வியாபார நிலைய உரிமையாளரை அழைத்து தற்போதும் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபடுகின்றீர்களா என வினவியதுடன்,

குறித்த விற்பனை நிலையத்தின் பெயரில் அனுமதியின்றி வேறு நபர்களால் பயணத்தடை நேரத்தில் மேற்கொள்ளப்படும் வியாபார நடவடிக்கைகளை நிறுத்துமாறும், முறையான அனுமதியைப் பெற்றால் மாத்திரம் வியாபாரத்தில் ஈடபட முடியும் எனவும் அறிவுறுத்தினார்.

மேலும் பண்டாரிக்குளம் பகுதியில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட வாகனத்தை வழிமறித்து அந்த வாகனத்தில் விற்பனை செய்யப்படும் மரக்கறிகளின் விலைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன், சரியான கட்டுப்பாட்டு விலையை பேணுமாறும் அதனை மீறி விற்பனை செய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் இதன்போது அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

வவுனியாவில் பயணத்தடை நேரத்தில் கூட மக்களுக்காக களம் இறங்கி வேலை செய்யும் திலீபன் எம்.பியின் செயற்பாடு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.