ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஹட்டன் பொலிஸ் நிலைய சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.
ஹட்டனில் இருந்து கண்டி இராணுவ முகாமில் ஒப்படைப்பதற்காக கோவிட் சடலத்தை கொண்டு சென்ற வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்க சென்ற 57 வயதான எஸ்.பெனடிக் என்ற பொலிஸ் அதிகாரியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வாகனமானது வட்டவளை, கரோலினா தோட்ட பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.
விபத்தில் உப பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 3 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வாகன சாரதி, சடலத்தின் உறவினர்கள் இருவர் ஆகியோர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக உப பொலிஸ் பொறுப்பதிகாரி பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி பள்ளளத்தில் விழுந்து விபத்திற்கு இலக்காகியுள்ளதாக விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் ஹட்டன் மற்றும் வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேகாலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மாவனெல்லை, தெவனகலயில் வீடொன்றின் மீது பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நாடாளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இதுவரை 7 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன் இரத்தினபுரியில் மண்சரிவில் சிக்கிய 17 வயதான மாணவி ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
வவுனியா, சகாயமாதாபுரம் பகுதியில் 25 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ள நிலையில், தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் கிராமத்திற்குள் உள்நுழைய மற்றும் கிராமத்தில் இருந்து வெளியேற தடை விதித்து கிராமத்தைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக 11 கோவிட் தொற்றாளர்கள் வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியில் இனங்காணப்பட்ட நிலையில், அப் பகுதியில் நேற்று (04.06) மேற்கொள்ளப்பட்ட எழுமாறான 20 அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று (05.06) மேலும் ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பது அன்டிஜன் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் குறித்த கிராமத்தில் 25 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன் குறித்த கிராமத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கிராமத்தில் இருந்து வெளியேறவும், கிராமத்திற்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், கிராமத்தின் பிரதான வீதிகள், உள் வீதிகள் என்பன போக்குவரத்துக்காக தடை செய்யப்பட்டு கிராமத்தைச் சுற்றி பொலிசார் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வவுனியா திருநாவற்குளம் கிராமமும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவ்வாறு கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பயணத் தடை அனுமதியை தவறாக பயன்படுத்தி வியாபார நிலையங்களை திறந்து வைத்து விற்பனை செய்பவர்களின் அனுமதியை இரத்து செய்தல் வேண்டும் எனவும், பாஸ் அனுமதியை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு பொலிசார் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் எனவும் என பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தின் தற்போதைய கொவிட் நிலமைகள் தொடர்பில் அவசர கலந்துரையாடல் ஒன்று பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் நேற்று மாலை (04.06) நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இக் கலந்துரையாடலில் வைத்திய அதிகாரிகளிடம் தற்போதைய நிலைமை தொடர்பாக கேட்டறியப்பட்டதோடு, அவர்கள் கொவிட் பரவலை கட்டுப்படுத்த எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், பயணக்கட்ப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை மற்றும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் சுகாதார பிரிவினர் கொரோனா கட்டுப்படுத்துவதற்காக பல வழிகளிலும் கஸ்டப்படும் நிலையில் அவர்களுடன் இராணுவத்தினரும், பொலிசாரும் கட்டாயம் இணைந்துகொள்ளல்,
மரக்கறி உட்பட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்வதை உடன் கண்காணித்து நிறுத்தப்படல், 5000 ரூபா பணத்தை பெறும் வறுமைப்பட்டவர்களிடம் இன்சூரன்ஸ் மற்றும் லீசிங் நிறுவனங்கள் பணம் வசூலிப்பதற்கு தடைவிதித்தல்,
5000 ரூபா பணத்தை தமது அலுவலகத்தில் கொடுப்பது மட்டுமல்லாது அனைத்து கிராமங்களிலும் ஓர் இடத்தை தெரிவு செய்து வழங்குதல், அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படல்,
வியாபார நிலையங்களை திறந்து வைத்து விற்பனை செய்பவர்களின் அனுமதியை இரத்து செய்தல், பாஸ் அனுமதியை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு பொலிசார் நடவடிக்கை எடுத்தல் போன்ற பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான குலசிங்கம் திலீபனால் அறிவுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன், அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் கர்ப்பிணிப் பெண் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று (05.06) இரவு வெளியாகின.
அதில்,சூசைப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் ஒருவருக்கும், இராசேந்திரன்குளம் ஆடைத் தொழிச்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கும் என 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா சகாயாமாதாபுரம் பகுதியில் நேற்று (04.06) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி வவுனியாவில் 18 தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.
தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இன்றைய தினம் 48 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கோவிட்19 நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1656 ஆக உயர்வடைந்துள்ளது. ஒரே நாளில் இலங்கையில் பதிவான அதி கூடிய கோவிட் மரணங்கள் இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் இதுவரையில் 3398 கோவிட் தொற்று உறுதியானவர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக கோவிட் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை கடந்து பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் வகுப்பின் மூலம் ஏற்பட்ட காதலால், ஆசிரியை ஒருவர் மாணவனுடன் எஸ்கேப் ஆகியுள்ள சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது. கொரோனாவின் நோய் தொற்று காரணமாக கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில்,
மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையல் ஹரியானாவின் பானிபட் நகரில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் காணாமல் போனதாக மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அவர்களது புகாரில் 17 வயதான மகன் தேஸ்ராஜ் காலனியில் உள்ள ஆசிரியரின் வீட்டில் தினமும் 4 மணி நேரம் பாடம் கற்றுக்கொள்ள செல்வது வழக்கம். இந்நிலையில் பாடம் கற்க சென்ற தனது மகன் வீடு திறம்பவில்லை என்று கூறியுள்ளனர்.
குறித்த ஆசிரியை கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆசிரியையும் காணாமல் போனது அம்பலமான நிலையில், பொலிசார் இருவரையும் தேடி வருகின்றனர்.
மேலும் மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியை மீது க.ட.த்.த.ல் வ.ழ.க்கு பதிவு செ.ய்.யப்பட்டுள்ளது. வீட்டை விட்டு சென்ற இருவரும் பணம், நகை என்று எதையும் எடுத்துச்செல்லவில்லை என்பது வி.சா.ரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது அவர்களின் மொபைல் போன் சுவிட்ஆப் செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிசார் தீ.வி.ர.மாக தே.டி வருகின்றனர்.
மறைந்திருந்து பார்த்து மலர்ந்த காதல்..! பார்க்காமலேயே கடிதத்தால் சேர்ந்த காதல்..! காதலுக்கு மரியாதை என்றால் கண்டதும் காதல்..! என பல விதமான காதல் சினிமாக்களை பார்த்து ரசித்த நம்மவர்களுக்கு நம்ம சாப்ட்வேர் என்ஜினீயர் பிரசாந்தின் நாடு கடந்த காதல் நிறைய வலியும், கொஞ்சம் காஸ்ட்லியுமானது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தைச் சேர்ந்த பிரசாந்த், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். அப்போது முக நூலில் அறிமுகமான பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.
முகநூலில் உண்மை முகம் காட்டாத காதலியை நெஞ்சம் உருகிக் காதலித்துள்ளார். ஒரு நாள் காதலியின் புகைப்படத்தை பார்த்து அகமகிழ்ந்து போனதால், அவரை நேரில் பார்ப்பதற்காக 2017ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் ச.ட்.ட.வி.ரோ.த.மாக நுழைந்துள்ளார் நம்ம காதல் இளவரசன் பிரசாந்த்..!
அவரோட துரதிர்ஷ்டம் காதலியைக் கண்டு அவளது இதயச்சிறையில் அடைபடும் முன்பே, அவரை கை.து செ.ய்.த பாகிஸ்தான் காவல்துறை இஸ்லாமாபாத் சிறையில் அடைத்தது. பிரசாந்த் பணி நிமித்தமாக பாகிஸ்தான் செல்வதாக வீட்டில் பொய் சொல்லியிருந்த நிலையில்,
தனது மகன் 2 ஆண்டுகள் ஆகியும் வீடு திரும்பாததால், அவரது தந்தை பாபு ராவ் சைபராபாத் மாதபூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து பிரசாந்த் காணாமல் போனது குறித்து 2019 ஏப்ரல் மாதம் வ.ழ.க்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் காதலியை தேடிச்சென்று தாடியுடன் காத்திருந்த பிரசாந்த், பாகிஸ்தானில் இருந்து வெளியேற இயலாமல் தவிப்பதாக செல்போனில் எடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
4 வருடங்கள் கடந்த நிலையில் இந்த வீடியோ பாபுராவின் கண்களில் பட , இதனை ஆதாரமாகக் கொண்டு தன் மகன் பிரசாந்த் பாகிஸ்தானில் தவித்துக் கொண்டு இருப்பதை சுட்டிக்காட்டி அவரை உடனடியாக மீட்டுத் தரும்படி தந்தை பாபுராவ், சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனாரிடம் வேண்டுகோள் வைத்தார்.
இதனை வைத்து, மாநில அரசுக்கும் வெளியுறவு அமைச்சகத்திற்கும் காவல் ஆணையர் சஜ்ஜனார் கடிதம் எழுதினார். இந்த கடிதத்தின் அடிப்படையில் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் பேசி, நாடு திரும்ப இயலாமல் தவித்த பிரசாந்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசு, பிரசாந்தை இந்தியாவிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டது. அதன்படி வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் பிரசாந்தை பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
காதலியைத் தேடி சென்ற தன் மகன் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தாரின் தொடர்ச்சியான முயற்சியால் புதன் மாலை ஐதராபாத் அழைத்து வரப்பட்டு, வியாழக்கிழமை தனது சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்கு வந்து சேர்ந்தார்.
மகனின் வருகையால், மகிழ்ச்சியில் உள்ள குடும்பத்தினர், அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். மேலும் விடுதலைக்கு முயற்சி செய்த அனைத்துத் தரப்பினருக்கும் குடும்பத்தினர் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்த அந்த 4 வருடத்திலும், எப்படியாவது தனது காதலியை சந்தித்து விடமாட்டோமா ? என்ற தவிப்பிலேயே நாட்களை நகர்த்தி வந்த பிரசாந்த், தனது காதல் உண்மை என்றும் எப்படியும் தனது காதலி தனக்கு கிடைப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தவர் இப்போது தான் ஒரு தெளிவான மன நிலைக்கு வந்துள்ளார்.
அதே நேரத்தில் பிரசாந்திடம் பெண் பெயரில் பழகியது ஃபேக் ஐடியாக இருந்தால் பிரசாந்தின் நாடுகடந்த காதல், நித்தியின் இல்லாத கைலாசா தீவுக்கு வழி தேடுவது போன்றதாகிவிடும்.
தமிழகத்தில் இளம்பெண் பொலிஸ் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட நிலையில் அதன் பின்னணி வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டம் கஞ்சம்பமடியை சேர்ந்தவர் மகாலட்சுமி (25). கடந்த 2018-ம் ஆண்டு பொலிஸ் பணியில் சேர்ந்த இவர் கோவை புறநகர அ.திரடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.
இதற்காக அவர் கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள பொலிஸ் குடியிருப்பில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். மகாலட்சுமிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே படைப்பிரிவில் வேலை பார்த்து வரும் பொலிஸ்காரர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இது காதலாக மாறியது. ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். 2 பேரும் அடிக்கடி சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். சம்பவத்தன்று 2 பேரும் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வா.க்குவாதம் ஏற்பட்டது.
இதில் ம.னவேதனை அடைந்த மகாலட்சுமி தனது செல்போனை சுவிட் ஆப் செய்து விட்டு படுக்கை அறைக்கு சென்றார். அங்கு இருந்த மகாலட்சுமி காதலனுடன் ஏற்பட்ட தகராறில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து படுக்கை அறையில் தூ.க்.கு போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார்.
நீண்ட நேரமாக காதலியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் ச.ந்தேகம் அடைந்த இளைஞன் மகாலட்சுமியுடன் தங்கி இருக்கும் அவரது தோழிக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கூறினார்.
இதனையடுத்து அவர் மகாலட்சுமியின் அறைக்கு சென்று பார்த்தபோது அவர் அ.றையில் தூ.க்.கு.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதை பார்த்து அ.தி.ர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து தகவலறிந்து பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மகாலட்சுமியின் உ.டலை மீ.ட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வி.சாரணை நடைபெற்று வருகிறது.
உலக சுற்றுச் சூழல் தினம் நாளைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று காரணமாக சுற்றுச் சூழல் தினத்தை அனுஷ்டிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. “சுவாசம் வழங்கும் சுற்றாடல்” என்ற தலைப்பில் ஒவ்வொரு வீட்டிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மாதத்தின் 5ஆம் மற்றும் 6ஆம் திகதி வீட்டை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தப்படுத்துவதனை வீடியோ எடுத்து சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்புமாறு பாடசாலை மாணவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாட்களிலும் ஒவ்வாரு 3 மணித்தியாலத்திற்கு ஒரு முறை 3 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு 5000 ரூபாய் வரை பரிசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றமையால் திருமண மண்டபம் சுகாதாரப் பிரிவினரால் இன்று மாலை (04.06) சீல் வைத்து மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டது.
வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள ஞானவைரவர் ஆலய வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் மன்னாரைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கும், வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதன்போது சுகாதார அறிவுறுத்தல்களை மீறி அதிகளவிலான உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டதுடன், சுகாதார அறிவுறுத்தல்களும் பின்பற்றப்படவில்லை.
இந்நிலையில் அங்கு சென்ற சுகாதாரப் பிரிவினர் அங்கு கூடியிருந்தவர்களை கடும் எச்சரிக்கை வழங்கி அங்கிருந்து வெளியேற்றியதுடன், திருமண வீட்டாருக்கும் கடும் எச்சரிக்கை வழங்கினர்.
சுகாதார அறிவுறத்தல்களை மீறி மண்டபத்தை வழங்கி மக்களை ஒன்று கூட்டியமை தொடர்பில் திருமண மண்டபம் சுகாதாரப் பரிவினரால் சீல் வைக்கப்பட்டு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.
பொண்டேரா நிறுவனத்தின் தயாரிப்புக்களில் ஒன்றான அங்கர் வெண்ணெய் உற்பத்தியின் பொதியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா மாவட்ட இளம் ஊடகவியலாளர்களினால் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை காரியாலயத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழியில் பிரசுரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வந்த நிலையில் திடீரென தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேசத்திற்கு ஏற்றுமதி செய்வதால் சீன மொழியும் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இலங்கையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளமையானது தமிழ் மக்கள் மத்தியில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதுள்ளது.
கடந்த 2020.08.12ம் திகதி இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை (அதி விசேஷடமானது) வெளியானதில் (2188/31 ஆம் இலக்கம்) தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அத்தகைய பொருட்கள் / பண்டங்களின் பொதிகள், கொள்கலன்கள் அல்லது உறைகளின் மீது,
அதிகூடிய சில்லறை விலை, தொகுதி இலக்கம், காலாவதியாகும் திகதி, உற்பத்தித் திகதி, நிகர நிறை அளவு, உற்பத்தி செய்யப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட நாடு என பல விபரங்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தெளிவாகத் தெரியும் வகையில் அச்சடிக்கப்படுதல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளை அறிந்திராத தமிழ் மக்கள் நுகர்வின் போது சிரமங்களை எதிர்கொள்வதாக ஊடகவியலாளர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதனையடுத்து,
வவுனியா மாவட்ட இளம் ஊடகவியலாளர்களான பாஸ்கரன் கதீஷன், ராஜேந்திரன் சஜீவன் ஆகியோர் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட அங்கர் வெண்ணெய் உற்பத்தி பொருள் ஒன்றினை வர்த்தக நிலையமொன்றில் கொள்வனவு செய்தமையுடன் அது தொடர்பில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
வவுனியா மாவட்ட இளம் ஊடகவியலாளர்களான பாஸ்கரன் கதீஷன், ராஜேந்திரன் சஜீவன் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த நிறுவனம் மீது இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை (அதி விசேஷடமானது) யினை மீறி செயற்பட்டுள்ளமை தொடர்பில் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாக வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மரக்காரம்பளை பகுதியில் அமைந்துள்ள அரசங்குளத்தில் மீன் பிடிக்கச்சென்ற 17வயது இளைஞன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அரசங்குளத்தில் மீன் பிடிக்க சென்ற சமயத்தில் குளத்தினுள் 17வயதுடைய இளைஞன் முழ்கியுள்ளர். அயலவர்கள் உடனடியாக செயற்பாட்டு இளைஞரை மீட்கப் பேராடிய போதிலும் இளைஞன் சடலமாகவே மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் எடுத்துச் செல்வதற்குறிய நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியில் சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட எழுமாற்று பிசீஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் வீதிகளில் அத்தியாவசிய தேவையின்றி நடாமாடுவோர் மற்றும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட இடங்களில் சுகாதாரப் பிரிவினரால் இன்று (04.06) எழுமாற்று பிசீஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்தவகையில், ஏற்கனவே தொற்றாளர்கள் சிலர் இனங்காணப்பட்ட வவுனியா சகாயமாதாபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான 20 அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த கிராமத்தில் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் கிராமத்தை முடக்குவது குறித்தும் சுகாதாரப் பிரிவினர் கவனம் செலுத்தியள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தெற்கு மாமடு பகுதி சுகாதார திணைக்கள சாரதி உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும்,
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (03.06) இரவு வெளியாகின.
அதில் திருநாவற்குளம் பகுதியில் இரண்டு பேருக்கும், மாராஇலுப்பை பகுதியில் ஒருவருக்கும், எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் இருவருக்கும், கற்பகபுரம் பகுதியில் ஒருவருக்கும், கோமரசங்குளம் பகுதியில் இருவருக்கும்,
வைகறையைச் சேர்ந்த இருவருக்கும், குருமன்காடு பகுதியில் ஒருவருக்கும், மாமடு பகுதியில் சுகாதார திணைக்கள சாரதி ஒருவருக்கும் என 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியாவில் கிராமப் பகுதிகளில் வீதிகளில் நடமாடியோர் மற்றும் வங்கி ஊழியர்கள் உட்பட 70க்கு மேறபட்டவர்களுக்கு சுகாதார பிரிவினரினால் இன்று (04.06.2021) காலை பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில் தினந்தோறும் 130 பிசீஆர் முடிவுகள் 24 மணிநேரத்தில் வழங்க சுகாதாரப் பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில்,
வவுனியா சகாயாமாதாபுரம், மாமடு பகுதி கிராம மக்கள், வீதிகளில் அநாவசியமான முறையில் நடமாடியோர், வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் ஊழியர்கள் என 70க்கு மேற்பட்டவர்களுக்கு எழுமாறாக பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.