வவுனியா வளாகம் பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடுகளை மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு!!

வவுனியா வளாகம்..

2020/2021 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான கையேட்டினை மாணவர்களுக்கு வழங்க யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் ஏற்பாடு செய்துள்ளது என வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் நாளை 01.06.2021 அன்று காலை 8 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள வவுனியா வளாகத்திலும், பழைய பேரூந்து நிலையத்தில் அமைந்துள்ள இராமச்சந்திராஸ் புத்தக நிலையத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே மாணவர்கள் தங்களது பாடசாலை அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து குறித்த கையேடுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பிரிவுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான இணையவழி கருத்தரங்கொன்றும் வவுனியா வளாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த கருத்தரங்கு 01.06.2021 காலை 9 மணி முதல் ZOOM ஊடாக இடம்பெறும். இதற்கான முகவரி: Meeting ID: 670 192 6578 கடவுச்சொல்: UAH@900Am என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய் மற்றும் தந்தையை 2 நாள் இடைவெளியில் அடுத்தடுத்து இழந்த இளம் பிள்ளைகள் : பின்னர் நேர்ந்த மற்றொரு சோகம்!!

தமிழகத்தில்…

தமிழகத்தில் கொரோனாவுக்கு பெற்றோரையும், பாட்டியையும் இழந்து இரண்டு சிறுவர்கள் தவித்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் தன்ராஜ் (45).

மருந்து கடை உரிமையாளர். இவருடைய மனைவி ஜெயந்தி (40). இவர்களுடைய மகன் விபின் (15). 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சாமுவேல் (8) 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர்களது குடும்பம் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் தன்ராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு மருத்துவமனையில் சேர்ந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 15-ந் திகதி இறந்தார்.

அவரை உடனிருந்து கவனித்து வந்த அவருடைய மனைவி ஜெயந்திக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், கணவர் இறந்த 2 நாட்கள் கழித்து 17-ந் திகதி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து ஜெயந்தியை உடனிருந்து கவனித்த அவருடைய தாய் பத்மா துரைக்கு (60) தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவரும் கடந்த வாரம் கொரோனாவுக்கு பலியானார். ஒரே குடும்பத்தில் பெற்றோர் மற்றும் பாட்டி என 3 பேர் அடுத்தடுத்து இறந்ததால் அந்த சோகத்தை தாங்க முடியாமல் விபின், சாமுவேல் ஆகியோர் கண்ணீருடன் சோகத்தில் தவித்து வருகின்றனர்.

சிகிச்சை பெற வேண்டும் இந்த நிலையில் தன்ராஜின் தாய் சாரதா (65) தனது பேரக் குழந்தை கள் விபின், சாமுவேல் ஆகியோரை தற்போது பராமரித்து வருகிறார்.

பெற்றோரை இழந்த விபின், சாமுவேல் ஆகியோர் கூறுகையில் கொரோனா சிகிச்சைக்கு சென்ற அப்பா, அம்மா திரும்பி வர வில்லை. அவர்களை இழந்து நிற்கும் எங்களின் உயர்கல்விக்கு யாராவது உதவ வேண்டும் என்றனர்.

கன மழையில் சேற்றில் சிக்கிய இளைஞர் : தேடிச் சென்றவர்கள் கண்ட பரிதாபக் காட்சி!!

சுனு ஜார்ஜ்…

இந்திய மாநிலம் கேரளாவில் கன மழையை தொடர்ந்து இரவில் சேற்றில் சிக்கிய இளைஞர் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் குடும்பத்தினரை உலுக்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல்கைமா மாகாணத்தில் சாரதியாக பணியாற்றி வருபவர் 34 வயதான சுனு ஜார்ஜ். 20 நாட்களுக்கு முன்னர் விடுமுறைக்காக கேரளா திரும்பிய சுனு ஜார்ஜ்,

அரசாங்கம் வலியுறுத்தியுள்ள தனிமைப்படுத்துதல் நாட்களை முடித்துக் கொண்டு, மனைவியின் குடியிருப்பு அமைந்துள்ள ஆலப்புழா மாவட்டம் சென்னித்தலா பகுதிக்கு சென்றுள்ளார்.

இரவு சுமார் 8.30 மணியளவில் நன்கு அறிமுகமில்லாத பகுதியில் தனியாக நடந்து சென்ற அவர் கால் தடுமாறி வயல்வெளியில் விழுந்துள்ளார்.

ஏற்கனவே கன மழை காரணமாக அப்பகுதி முழுவதும் சேறாக மாறிப்போயிருந்துள்ளது. இந்த நிலையில் சேற்றில் சிக்கிய அவர், அதில் இருந்து மீண்டு வர முடியாமல் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

இரவு வெகு நேரம் கடந்தும் சுனு குடியிருப்புக்கு திரும்பாபத நிலையில், மனைவி ஷேர்லி மற்றும் உறவினர்கள் தேடத் தொடங்கியுள்ளனர். இதில் ஒரு குழுவினர், சேற்றில் சிக்கி சுனு இறந்து கிடப்பதை கண்டறிந்து உறவினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

முதலாமாண்டு திருமண நாளில் இ.ளம் பெ.ண்ணுக்கு நே.ர்ந்த வி.பரீதம் : பெற்றோர்கள் கண்ட அ.தி.ர்ச்சிக் காட்சி!!

இந்தியாவில்…

இந்தியாவில் திருமணமான ஒரு ஆண்டில் இளம்பெண் வி.ஷ.ம் கு.டி.த்.து உ.யி.ரி.ழ.ந்த நிலையில் கணவர் மற்றும் குடும்பத்தார் தான் அவரை கொ.லை செ.ய்.து வி.ட்டனர் என கு.ற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் பரமதியை சேர்ந்தவர் கீதாஞ்சலி (21). இவருக்கும் அபிஷேக் என்ற இளைஞனுக்கும் கடந்தாண்டு மே மாதம் 24ஆம் திகதி திருமணம் நடந்தது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தங்களது முதலாமாண்டு திருமண நாளை தம்பதி கொண்டினார்கள். அப்போது இருவரும் கேக் வெ.ட்.டி.யு.ள்.ள.ன.ர். இந்த நிலையில் அதே நாளில் கீதாஞ்சலி வி.ஷ.ம் கு.டி.த்.து.வி.ட்.ட.தா.க அபிஷேக் தனது மாமனார், மாமியாருக்கு போன் செய்திருக்கிறார்.

இதை கேட்டு ப.த.றி.ய அவர்கள் அங்கு வந்த போது கீதாஞ்சலி உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.ய.ப.டி இருந்ததை கண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த.ன.ர். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து தீ.வி.ர சி.கிச்சையளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உ.யி.ரி.ழ.ந்.தா.ர். இந்த நிலையில் அபிஷேக் மற்றும் குடும்பத்தார் தான் கீதாஞ்சலியை கொ.லை செ.ய்.து வி.ட்டனர் என அவர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த.ன.ர்.

இதையடுத்து ச.டலத்தை அபிஷேக் வீட்டுக்கு எடுத்து சென்ற அவர்கள் அங்குள்ள முற்றத்தில் இ.றுதிச்சடங்கு நடத்தி பு.தை.த்.த.ன.ர். பின்னர் அவர்கள் பொலிசில் அளித்த பு.கா.ரி.ல்,

அபிஷேக் வீட்டார் 51 சவரன் நகைகளை வரதட்சணையாக கேட்டனர். ஆனால் எங்களால் அவ்வளவு கொடுக்கமுடியவில்லை, சிறிது சிறிதாக கொடுத்து வந்தோம்.

இது தொடர்பாக கீதாஞ்சலியை அவர்கள் அ.டி.த்.து கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி வ.ந்தனர். திருமண நாளில் கேக் வெ.ட்.டி கொண்டாடுவது போல காட்டிவிட்டு அபிஷேக் தான் வி.ஷ.த்.தை வ.லுக்கட்டாயமாக கீதாஞ்சலி வா.யில் ஊ.ற்றியிருக்கிறான் என கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் தீ.வி.ர வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வாழ்ந்த திரைப்பட பெண் டப்பிங் கலைஞர், ஆண் நண்பருக்கு நேர்ந்த விபரீதம்!!

கேரளாவில்..

கேரளாவில் திரைப்பட பெண் டப்பிங் கலைஞரும், அவரின் ஆண் நண்பரும் வீட்டில் ச.டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் ரூபி பாபு (35). இவர் ஏராளமான மலையாள படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.

இவருக்கும் திருவனந்தபுரம் சுனில் என்பவருக்கும் (45) பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்யாமலேயே வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு சுனில், தனது நண்பருக்கு போன் செய்து, ரூபி பாபு தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார், நானும் சா.வை மு.த்தமிடப்போகிறேன் என்று கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.

இதனால் அதிர்ந்து போன நண்பர், பொலிசுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் பொலிசார் விரைந்து வந்து பூ.ட்டியிருந்த க.தவை உ.டைத்து பார்த்தனர்.

அங்கு ரூபி பாபுவின் உ.டல் கீழ்த்தளத்தில் உள்ள படுக்கையறையிலும், சுனில் முதல் மாடியில் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நிலையிலும் ச.டலமாக கி.டந்தனர்.

ரூபி பாபுவின் க.ழு.த்.தை இ.றுக்கியிருந்த க.யிறு அ.றுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வி.சாரணை நடத்தி வருகிறார்கள்.

நாட்டை தொடர்ந்தும் முடக்குவது குறித்து தீர்மானிக்கவில்லை : இராணுவத் தளபதி!!

இராணுவத் தளபதி..

எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதியின் பின்னர் நாட்டை தொடர்ந்தும் முடக்குவது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 21ம் திகதி முதல் நாடு தழுவிய அடிப்படையில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்த பயணத்தடை எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னரும் நாட்டில் பயணத்தடையை நீடிப்பதா இல்லையா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

பயணத் தடை தொடர்பில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், பயணத் தடையை நீடிப்பதா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதி தலைமையிலான சுகாதார தரப்பினரினாலேயே தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

மரண அறிவித்தல் : ஸ்ரீமதி உமாராணி நாகேந்திர சர்மா!!

யாழ்ப்பாணம் மண்டதீவை பிறப்பிடமாகவும் யாழ் கொக்குவில் மேற்கு மற்றும் வவுனியா குட்செட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி உமாராணி நாகேந்திர சர்மா அவர்கள் 31.05.2021 இறைபதம் அடைந்து விட்டார்.

அன்னார் மண்டைதீவு பிள்ளையார் கோவில் காலஞ்சென்ற அகிலேஷ்வர குருக்கள் விஐயலட்சுமி தம்பதிகளின் இளைய மகளும், நாகேந்திர சர்மா அவர்களின்
அன்பு மனைவியும்,

பிரபாகர குருக்கள் (வவுனியா), நளாயினி (பதுளை), காலம் சென்ற தாரணி ஆகியோரின் அன்பு தாயாரும் , சோமசுந்தரி அம்மா ஜெகனாதக்குருக்களின் (சுவிஸ்) சகோதரியும்,
காத்தியினி, ரமேஷ்வரக்குருக்கள் ஆகியோரின் மாமியாரும்
பிரபாஜினி, பிரதீக்ஷா, பிரவக்ஷிதா, சபரீஷன் சர்மா அவர்களின் அன்பு பேத்தியும் ஆவார்.

இத்தகவலை உற்றார் உறவினர் நன்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு அன்புடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் இறுதிநிகழ்வில் பங்குபற்றுவதையோ, நேரில் வந்து ஆறுதல் தெரிவிப்பதையோ இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

கனடாவில் விபத்தில் சிக்கி இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு!!

கனடாவில்…

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையரொருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது விபத்தில் இலங்கையின் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த டிலான் பெர்ணான்டோ எனும் (Dillan Fernando) 49 வயது என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மணல் முதலான கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனம் தனது சைக்கிள் மீது மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது சகோதரர் குடும்பத்தினர் அனைவரையும் கவனித்துக்கொண்டதாகவும், தனது பெற்றோருக்காக வீடு ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளதாகவும்,

அவரது உயிர் விலையேறப்பெற்றது என்றும் உயிரிழந்தவரின் சகோதரி தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கனடாவில் இந்திய வம்சாவளி இளம் மருத்துவருக்கு எதிராக கடும் எதிர்ப்பு!!

ரித்திகா கோயல்…

ரொறன்ரோ பல்கலைக்கழக மருத்துவரும், ஆசிரியருமான இந்திய வம்சாவளி மருத்துவரான ரித்திகா கோயல் யூதர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியதாக கூறி அவர் மீது கடும் நடவடிக்கை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இவர் யூதர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியதாக கூறி, அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி திறந்த மடல் ஒன்று கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு, அது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்த நிலையில் மருத்துவர் ரித்திகா கோயல் தொடர்பில், அவருக்கு ஆதரவாக நண்பர்களும் உடன் பணியாற்றுபவர்களும் களத்தில் குதித்துள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவர் கோயலை தமக்கு தெரியும் என கூறியுள்ள மருத்துவர் சமந்தா கிரீன், அந்த கடிதத்தை வாசித்து நான் ஆத்திரமடைந்தேன் என தெரிவித்துள்ளார்.தமது வாழ்க்கை முழுவதும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக பணியாற்றி வருபவர் கோயல் என தெரிவித்துள்ளார்.

மருத்துவர் சமந்தா கிரீன். சமீபத்தில் இஸ்ரேல்- காசா போர் மூண்ட நிலையில், பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்த 3,000 கனேடிய மருத்துவ ஊழியர்களில் மருத்துவர் கோயலும் ஒருவர்.

இஸ்ரேல் நாட்டின் நடவடிக்கைகளை பொதுவெளியில் விமர்சித்தால் உடனையே யூதர்களுக்கு எதிரான பாகுபாடு காட்டுவதாக குற்றஞ்சாட்டுவது பெருகி வருவதாக கோயலுக்கு ஆதரவாக பலர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாலதீன மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களை ஒடுக்குவதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் ரொறன்ரோ பல்கலைக்கழகம் கருத்து கூற மறுத்துள்ளதுடன், தனிப்பட்ட ஒருவரின் கருத்துகளுக்காக பல்கலைக்கழகம் பதில் கூற வேண்டும் என எதிர்பார்க்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி கொக்காவில் ஏ9 வீதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் தடம்புரண்டு விபத்து : 7 பேர் படுகாயம்!!

ஏ9 வீதியில்..

கிளிநொச்சி, கொக்காவில் ஏ9 வீதியில் வேக்கட்டுப்பாட்டை இழந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (31.05) மாலை இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, ஏ9, வீதி வழியாக கிளிநொச்சி நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் கொக்காவில் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் வாகன சாரதி உட்பட படுகாயமடைந்த ஏழு பேரும் மணலுக்குள் புதையுண்டு இருந்த நிலையில் வீதியால் பயணித்தவர்கள் அவர்களை மீட்டு நோயாளர் காவுவண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

சாரதி வாகனத்தை அதிவேகமாக செலுத்தியமையாலேயே குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாகனம் வீதியில் விபத்து க்குள்ளான நிலையில் வீதியில் பயணித்த வவுனியா ஊடகவியலாளர்கள் துரிதமாகச் செயல்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கியதுடன் நோயாளர் காவுவண்டிக்கும் அழைப்பை ஏற்படுத்தி காயமடைந்த ஏழு பேரையும் வைத்தியசாலைக்கும் அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

விமான நிலையங்கள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு!!

விமான நிலையங்கள்…

இலங்கையில் தீவிரமாக பரவி வரும் கோவிட் வைரஸ் காரணமாக அனைத்து விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

எனினும் நாளை முதல் கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என விமான சேவைகள் அமைச்சர் சானக தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ஒரு விமானத்தில் வரக்கூடிய அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை 75ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (30.05) இரவு வெளியாகின.

அதில் சகாயாமாதாபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கும், கோயில்குளம் பகுதியில் இரண்டு பேருக்கும், பெரியஉலுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், மூன்றுமுறிப்பு பகுதியில் இராணுவ வீரர் ஒருவருக்கும்,

மகாறம்பைக்குளம் பள்ளிவாசல் வீதியில் இருவருக்கும், பெரியகோமரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், அண்ணாநகர் பகுதியில் ஒருவருக்கும், கோதாண்டார் நொச்சிக்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

சின்னப்புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும் என 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் மரணம்!!

கொரோனா..

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வயதான நபர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இன்று (31.05.2021) மரணமடைந்துள்ளார்.

குறித்த நபர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் மரணமடைந்துள்ளார். நெடுங்கேணி கற்குளம் பகுதியை சேர்ந்த 52 வயதான நபரே மரணமடைந்துள்ளார்.

வவுனியாவில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு!!

கொரோனா தடுப்பூசி…

வவுனியா மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இன்று (31.05) முன்னெடுக்கப்பட்டது. சுகாதாரத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு வவுனியா வைத்தியசாலையில் வைத்து இத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலையில் அஸ்ராசெனிக்கா தடுப்பூசியில் முதலாவது டோஸ் பெற்றவர்களுக்கு, இதன்போது இரண்டாவது டோஸ் ஏற்றப்பட்டதுடன்,

சீன அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட சினோபாம் கொரோனா தடுப்பூசிகளும் முதன் முறையாக தடுப்பூசி போடுபவர்களுக்கு ஏற்றப்பட்டன.

இதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக சுகாதார துறையுடன் தொடர்புடையவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பயணத்தடையை மீறி நடமாடுவோரை ட்ரோன் கமரா மூலம் கண்காணிக்கும் இராணுவத்தினர்!!

ட்ரோன் கமரா…

இராணுவத்தின் வன்னிப் படைத் தலைமையாகத்தால் வவுனியாவில் ட்ரோன் கமரா மூலம் கண்காணிக்கும் நடவடிக்கை இன்று (31.05) மதியம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா பழைய பேரூந்து நிலையில் வைத்து இராணுவத்தால் ட்ரோன் கமரா பறக்கவிடப்பட்டதுடன், இதன்போது நகரப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டன.

அத்துடன், மோட்டார் சைக்கிள்களில் வந்த இராணுவ அணியினர் பயணக்கட்டுப்பாட்டு நடைமுறைகளை மீறி நடமாடியவர்களை இனங்கண்டு அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கி அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பியிருந்தனர்.

இதேவேளை, வவுனியா நகரப்பகுதியில் நேற்றைய தினம் (30.05) மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகிய நிலையில்,

நகரப் பகுதி இராணுவத்தின் ட்ரோன் கமராவின் உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வீதிகளில் நடமாடியவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டு திருப்பி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கொரோனா தொற்றால் முஸ்லிம் பெண் மரணம் : அடக்கத்திற்காக சடலம் ஓட்டமாவடிக்கு அனுப்பி வைப்பு!!

கொரோனா தொற்றால்..

வவுனியாவில் கொரோனா தொற்று மரணமடைந்த முஸ்லிம் பெண்ணின் உடல் அடக்கத்திற்காக மட்டக்களப்பு, ஓட்டமாவடிக்கு அனுப்பி இன்று (31.05) வைக்கப்பட்டுள்ளது.

வவுனியாஇ அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த 52 வயது பெண் ஒருவர் சுகயீனம் காரணமாக சனிக்கிழமை (30.05) இரவு அவரது வீட்டில் மரணமடைந்தார்.

குறித்த பெண்ணின் உடல் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரது உடலில் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் குறித்த பெண்ணிற்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று இரவு (31.05) உறுதி செய்யப்படது.

இதனையடுத்து, குறித்த பெண்ணின் உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் சுகாதார பிரிவினரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

இதனையடுத்து சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு, ஓட்டமாவடியில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதற்காக குறித்த பெண்ணின் உடல் சுகாதார நடைமுறைகளுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் இருந்து இன்று (31.05) மதியம் இராணுவ பாதுகாப்புடன் சுகாதார பிரிவினரால் மட்டக்களப்பு, ஓட்டமாவடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.