பயணக்கட்டுப்பாடு தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!

பயணக்கட்டுப்பாடு..

அத்தியாவசிய சேவைக்காக செல்வோர் இன்று முதல் கடுமையாக பரிசோதிக்கப்படுவார்கள் என இலங்கை பொலிஸார் தெரிவிக்கின்றனர். உண்மையிலும் அத்தியாவசிய சேவைக்காகவா பயணிக்கின்றனர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

தொழிலுக்கான அடையாள அட்டையுடன், நிறுவன தலைமை அதிகாரியின் கடிதமும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அவர் கூறினார். போலியான கடிதங்களை வைத்திருப்போருக்கும் அவ்வாறான கடிதங்களை விநியோகிப்போருக்கும் எதிராக போலி ஆவணத் தயாரிப்பு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதனிடையே, பொது போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படமாட்டாது என அவர் கூறியுள்ளார். எனினும் வைத்தியசாலைகளுக்கும், மருந்தகங்களுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டங்களை பின்பற்றுகின்றமை குறித்து கண்காணிப்பதற்கு 23,000ற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே , அத்தியாவசிய சேவைகளுக்காக குறைந்தபட்ச பணியாளர் குழுவை மாத்திரம் சேவையில் அமர்த்துமாறு அனைத்து அரச நிறுவனங்களினதும் தலைவர்களிடம் பொதுச் சேவை, உள்ளூராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் அலுவலகங்களை திறக்குமாறும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி குறிப்பிட்டார்.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் வீடுகளில் இருந்து வௌியேறுவதை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் நடமாடும் சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாகவும் ஜே.ஜே.ரத்னசிறி கூறினார்.

எனினும், அதிகமான வாகனங்கள் நகர்ப் பகுதிகளுக்கு செல்வதை அவதானித்துள்ளதாகவும் இதனால் அத்தியாவசிய சேவைக்கான ஊழியர்களை மட்டுப்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய கல்வி சமூக அபிவிருத்தி நிதியம் ஊடாக உதவிகள்!!

உதவிகள்..

இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் நாடு முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

வவுனியாவில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், கூலி வேலை செய்வோர் என பலர் வீட்டிற்குள் முடங்கியிருப்பதால் ஒரு வேளை உணவிற்கு கூட சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய கல்வி சமூக அபிவிருத்தி நிதியம் ஊடாக நெளுக்குளத்தைச் சேர்ந்த லண்டனில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவரின் நிதி அனுசரணையில் வவுனியா பிரதேச செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட மிகவும் உதவி தேவைப்படும் 20 பேருக்கு தலா 3000 பெறுமதியான உணவுப் பொதிகள் இன்று (01.06.2021) வழங்கி வைக்கப்பட்டன.

இதே போன்று உதவிசெய்ய விரும்புபவர்கள் ஆலய நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

ஊரடங்கின்போது தந்தையை பல கி.மீ சைக்கிளில் அழைத்துச் சென்ற மகளை நினைவிருக்கின்றதா? நடந்த துயரம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் கடந்த பொதுமுடக்கத்தின்போது குருகிராமில் சிக்கிய தனது தந்தையை சைக்கிளிலேயே அழைத்து வந்த சம்பவம் வெகுவாகப் பேசப்பட்ட நிலையில், அந்த சைக்கிள் மகளின் தந்தை மோகன் பாஸ்வான் நேற்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

தர்பங்கா மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர் தியாகராஜன் இந்த தகவலை உறுதி செய்திருப்பதோடு, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தேவையான உதவிகளை செய்யவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு திடீரென்று எவ்வித முன் ஏற்பாடுகளும் இன்றி மத்திய மோடி அரசால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் ஆயிரம் கி.மீட்டருக்கும் மேல் சைக்கிளில் தன்னந்தனியாக பயணம் செய்து,

குருகிராமிலிருந்து காயம் பட்டிருந்த தனது தந்தையை தர்மங்காவுக்கு சைக்கிளிலேயே அழைத்து வந்த 16 வயது ஜோதி குமாரி பற்றிய செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டார். இவரைப் பற்றி செய்திகள் வெளியான நிலையில், இவருக்கு மிக மதிப்புள்ள சைக்கிள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விளையாட்டுத் துறையில் பயிற்சி அளிக்கவும் உதவிகள் குவிந்தன. இந்த நிலையிலேயே தந்தையை மாரடைப்பில் பறிகொடுத்துள்ளார் ஜோதி குமாரி.

போலி ஆவணங்களை சமர்ப்பித்து கொழும்பு வந்தால் 5 ஆண்டுகள் சிறை!!

5 ஆண்டுகள் சிறை…

போலி ஆவணங்களை சமர்ப்பித்து கொழும்பிற்குள் பிரவேசித்தால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயணத் தடை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி கொழும்பு நகரிற்குள் பிரவேசிக்கும் நபர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுண்டு என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இவ்வாறு தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக ஐம்பதாயிரம் ரூபா வரையில் அபராதம் விதிக்கப்பட முடியும் என குறிப்பிடுகின்றனர்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடந்த நேற்று முன்தினம் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கொழும்பு நகரிற்குள் பிரவேசித்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

நடுவீதியில் இளம்பெண்ணுக்கு நடந்த பரிதாபம்!!

ஈரோடு..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜியாவுல்லா. இவர் மாதம்பாளையம் சாலையில் தனது மொபட்டில், மனைவி ஹாஜிரா உடன் சென்று கொண்டிருந்தபோது,

பின்னால் சென்ற கார் ஒன்று மொபட்டின் மீது மோ.தியதில் இருவரும் நிலை தடுமாறி கீழே வி.ழுந்தனர். மனைவி ஹாஜிராவுக்கு இரண்டு கா.ல்களிலும் கா.ய.ம் ஏற்பட்டது.

இதை கண்ட அப்பகுதி மக்கள் இரு சக்கர வாகனத்தின் மீது மோ.திய காரை த.டுத்து நிறுத்தினர். அப்போது காருக்குள் இருந்து இறங்கிய ஓட்டுனர் ம.து.போ.தை த.லைக்கேறிய நிலையில் சாலையில் நின்று கொண்டு உ.ர.க்.க க.த்.தி வா.க்குவாதத்தில் ஈடுபட்டு ர.க.ளை செ.ய்ததால் ப.ர.ப.ரப்பு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் அந்த போ.தை ஓ.ட்டுனர், காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் ப.ல்லை க.டி.த்.து.க் கொண்டு தரையில் காலால் த.ட்டி கு.திப்பது போன்று குதித்து வி.பத்தில் சி.க்கிய கணவன் மனைவி முன்பு அ.ட்ராசிட்டியில் ஈ.டுபட்டார்.

பின்னர் தனது வண்டியை எடுக்கச் சென்ற ஜியாவுல்லாவை நோக்கி சென்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்ற அந்த கு.டி.கா.ர ஓ.ட்டுனரிடம் இருந்து எப்படி த.ப்.பி.ப்.ப.து என்று அவர் க.லங்கி நின்றார்.

சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி போ.லீ.சார் சம்பவ இடத்திற்கு சென்று ம.து.போ.தை த.லைக்கேறிய நிலையில் அ.ட்டகாசம் செய்த அந்த கு.டி.கா.ர காஞ்சனாவிடம் இருந்து வி.பத்தில் சி.க்.கி.ய கணவன் மனைவியை ப.த்திரமாக மீ.ட்டு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து விபத்துக்குள்ளான காரை ப.றி.முதல் செ.ய்.த போலீசார் அந்த போ.தை ஓ.ட்டுனரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று வி.சா.ரித்தனர். கஞ்சனா போல சாலையில் சடுகுடு ஆடிய கு.டி.கா.ர ஓட்டுனர் முத்துசாமி என்பதும் ம.து.க்.க.டை.க.ள் அ.டைக்கப்பட்டதால் சா.ரா.யம் கு.டி.த்.து.வி.ட்.டு போ.தை.யி.ல் வி.பத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. போ.தை எ.ப்போதும் கே.டு தரும்.

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் மரணம்!!

கொரோனா…

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இன்று மரணமடைந்துள்ளார்.

குறித்த பெண் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் மரணமடைந்துள்ளார். அனுராதபுரம் பூனாவை பகுதியை சேர்ந்த 52 வயதான பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

சாலையில் ஆ.டையின்றி நடந்துச்சென்ற மர்ம உருவம் : கமெராவில் சி.க்கிய தி.டுக்கிட வைக்கும் காட்சி!!

இந்தியாவில்..

இந்தியாவில் சாலையில் மனிதனைப் போன்ற உருவம் நி.ர்.வா.ண.மா.க நடந்துச் செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகி ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியது. இந்நியாவில் ஜார்கண்ட மாநிலத்தின் Hazaribagh-ல் இச்சம்பவம் நடந்துள்ளது.

வீடியோவில், இருண்ட சாலையில் பைக்கில் செல்லும் நபர்கள், சாலை ஓரத்தில் மனிதனைப் போன்ற உருவம் நி.ர்.வா.ண.மா.க நடந்துச் செல்வதை கண்டு அ.தி.ர்ச்சியடைந்துள்ளனனர்.

மேலும், அதை பைக் லைட் வெளிச்சத்தில் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை கண்ட பலர் இது ஏலியன் எனவும், பேய் எனவும் தெரிவித்தனர்.

பலர் இது கிராஃபிக் காட்சி எனவும் கூறினர். வீடியோ குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

கணவன் மரணமடைந்த சில மணி நேரத்தில் உயிரிழந்த மனைவி : அனாதையான 3 பிள்ளைகள்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அடுத்தடுத்து உ.யிரிழந்த நிலையில் அவர்களின் 3 பிள்ளைகள் அனாதையாகியுள்ளனர்.

வேலூர் மாவட்டம் அண்ணாநகர் கொல்லை மேடு பகுதியை சேர்ந்தவர் பிச்சாண்டி (57). பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு கடந்த 21 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்தநிலையில் பிச்சாண்டியின் மனைவி செல்விக்கு (46) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிச்சாண்டி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வில் இருந்தார். அவருக்கு நேற்று முன்தினம் மதியம் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக பிச்சாண்டி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வியும், கணவர் பிச்சாண்டி இறந்த சில மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இறந்த பிச்சாண்டி- செல்வி தம்பதிக்கு அகிலா (23) என்ற மகளும், வசந்தகுமார் (22), விமல் (20) ஆகிய 2 மகன்களும் உள்ள நிலையில் பெற்றோரை இழந்து அனாதையாகியுள்ளனர்.

கணவன்- மனைவி இருவரும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தது பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!!

கோதுமை மா..

பிரிமா நிறுவனம் உற்பத்தி செய்யும் கோதுமை மாவின் விலை இன்று முதல் 4 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொத்து ரொட்டி, தேங்காய் ரொட்டி, கிழங்கு ரொட்டி, முட்டை ரொட்டி, புட்டு, இடியப்பம் மற்றும் பராட்டா உள்ளிட்ட உணவுகள் இந்த கோதுமை மாவின் மூலமே தயாரிக்கப்படுகின்றன. நுகர்வோரும் இந்த உணவுகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

பிரிமா நிறுவனம் உற்பத்தி செய்யும் கோதுமை மாவின் விலை இன்று முதல் 4 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

-தமிழ்வின்-

திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு : கைப்பட எழுதியிருந்த கடிதம்!!

பிரஞ்சல் கோல்..

இந்தியாவில் திருமணமான மூன்று மாதத்தில் இளம்பெண் மருத்துவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்னாவை சேர்ந்தவர் பிரஞ்சல் கோல் (24).

இவர் பெண் மருத்துவர் ஆவார். இவருக்கும் தயனேஷ்வர் என்ற இளைஞருக்கும் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் பிரஞ்சல் நேற்று முன் தினம் திடீரென வீட்டில் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிஸார் பிரஞ்சல் ச.டலத்தை கை.ப்.ப.ற்றினார்கள். இதோடு தனது தந்தை பெயரை தலைப்பாக போட்டு கடிதம் ஒன்றை பிரஞ்சல் எழுதி வைத்திருந்ததையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

அந்த கடிதத்தில், எனது ம.ரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்தது. பி.ரேத ப.ரிசோதனைக்கு பின்னர் பிரஞ்சல் ச.டலம் த.கனம் செய்யப்பட்டது.

இதையடுத்து அவரின் த.ற்.கொ.லை.க்.கா.ன கா.ரணம் குறித்து கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் பொலிஸார் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் சிறார்களை தாக்கும் புதிய காய்ச்சல்!!

புதிய காய்ச்சல்..

சிறார்களுக்கு இடையில் பரவி வரும் நோய் ஒன்றை பொரள்ளை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட சிறுவர் மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா கண்டறிந்துள்ளார்.

இது ஒரு வகையான காய்ச்சல் நோய் எனவும் இந்த நோய் 5 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு அதிகளவில் ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கண், நாக்கு, தோல் என்பன சிவந்து போதல், மூட்டு வலி, மூட்டு வீக்கம், சருமத்தில் கெப்பலங்களல் ஏற்படுவது இந்த காய்ச்சல் நோயின் ஆரம்ப அறிகுறிகள் எனவும் தீபால் பெரேரா கூறியுள்ளார்.

இந்த நோய் அறிகுறிகள் அல்லது காய்ச்சல் என்பன 14 நாட்களுக்கு மேல் நீடித்தல் கட்டாயம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும். அத்துடன் இந்த நோயை கோவிட் தொற்று நோயின் பக்கவிளைவாகவும் கருத முடியும் எனவும் மருத்துவர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று அறிகுறிகளுடன் பரவும் டெங்கு நோய் : இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!!

டெங்கு நோய்..

சில கொரோனா தொற்று அறிகுறிகள் டெங்கு நோய் தொற்றிற்கு சமமானதாக உள்ளதென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நோய் நிலைமை ஒன்று ஏற்பட்டால் வீட்டில் இருந்து ஆராயாமல் வைத்திய ஆலோசனைகளை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு தேசிய டெங்கு தடுப்பு பிரிவு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் வீரசிங்க, காய்ச்சல் மற்றும் உடல் வலி டெங்கு மற்றும் கொவிட் ஆகிய இரண்டு நோய்களும் காண கூடிய அடையாளங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட வைத்தியர் இந்திக்க விரசிங்க “வீட்டில் காய்ச்சல் ஏற்பட்டால் எனக்கு ஏற்பட்டது டெங்கு காய்ச்சலா? சாதாரண வைரஸ் காய்ச்சலா அல்லது கொவிட் தொற்றா என தீர்மானிப்பது நல்லதல்ல.

நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக வைத்தியரிடம் அல்லது வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டும். ஒரு நோய் அறிகுறி உள்ளவருக்கு வேறு ஏதாவது நோய்கள் இருப்பின் அது ஆபத்தான நிலைமைக்கு கொண்டு செல்ல கூடும். இதனால் கொவிட் தொற்றாளர் ஒருவருக்கு டெங்கு நோய் தொற்றினால் ஆபத்து அதிகமாகிவிடும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் 149 பேர் உட்பட வடக்கில் நேற்று 247 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

யாழ்ப்பாணத்தில் 149 பேர் உட்பட வடக்கில் நேற்று 247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 149 பேர், மன்னார் மாவட்டத்தில் 46 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் 27 பேர், வவுனியா மாவட்டத்தில் 16 போ், முல்லைத்தீவு மாவட்டத்தில் 09 பேர்.

இவ்வாறு வடக்கு மாகாணத்தில் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள பிந்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். ஆய்வுகூடங்களில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வட மாகாணத்தில் 135 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 96 பேர், மன்னார் மாவட்டத்தில் 14 பேர், வவுனியா மாவட்டத்தில் 11 போ், கிளிநொச்சி மாவட்டத்தில் 08 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 பேர்

இவ்வாறு, யாழ். ஆய்வுகூட பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில் 135 பேர் வட மாகாணத்தில் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுவோர் 6 பேர் உட்பட 32 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் 6 பேர் உட்பட 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (31.05) இரவு வெளியாகின.

அதில், வவுனியா சிறைச்சாலை கைதிகள் பத்து பேருக்கும், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், இராசேந்திரன்குளம் ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த ஆறு பேருக்கும், தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும்,

பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், பெரியகோமரசங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், செட்டிக்குளம் கூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும்,

மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், குஞ்சுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், கல்லாடங்குளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், புலவன்ஊர் பகுதியில் ஒருவருக்கும்,

கிடாச்சூரி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், சீரா கட்டடவேலை நிறுவனத்தினர் ஒருவருக்கும், நவ்வி பகுதியில் ஒருவருக்கும் நெடுங்கேணியில் ஒருவருக்கும் என 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா, நெடுங்கேணிப் பகுதியில் கொரோனா தாக்கத்தின் மூன்றாம் அலை காரணமாக ஒருவர் ஏற்கனவே மரணமடைந்துள்ளதுடன், நேற்று இரண்டாவது மரணம் நிகழ்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான்கு மணி நேரத்தில் கொழும்பு நகருக்குள் நுழைந்த 55,944 வாகனங்கள்!!

நான்கு மணி நேரத்தில்…

சுமார் நான்கு மணி நேரத்தில் 55,944 வாகனங்கள் கொழும்பு நகரிற்குள் பிரவேசித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரையான காலப்பகுதியில் குறித்த வாகனங்கள் கொழும்பு நகரிற்குள் பிரவேசித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 20,440 வாகனங்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டு சென்ற 7,000 வாகனங்கள், உணவு வழங்கும் 4,760 வாகனங்கள், நோயாளிகளைக் கொண்டு செல்லும் 8,232 வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான 8,232 வாகனங்கள் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பயணக் கட்டுப்பாடுகளை மீறி 3,528 வாகனங்கள் கொழும்புக்குள் நுழைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், பயணக் கட்டுப்பாடுகளை மீறிய நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் தொடர்பில் இன்றும் சோதனைகள் மேற்கொள்ளப்படும், அத்துடன், முன்னுரிமை பெற்ற அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றும் நபர்கள் மட்டுமே மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் உணவு விநியோக சேவைகளை விற்கும் வாகனங்கள் உப பாதைகளில் பயணிப்பதில்லை என்று முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்ந்தால் பிரதேச செயலாளர்களால் வழங்கப்படும் அத்தகைய விற்பனையாளர்களின் பயண அனுமதிகளை இரத்து செய்ய பொலிஸ்துறை நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

கொரோனாவின் தாண்டவம் தொடர்கிறது : நாட்டில் மேலும் 43 பேர் பலி!!

கொரோனா…

இலங்கையில் மேலும் 43 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1484 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 2,882 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 186,334 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 150,000 ஐ கடந்துள்ளது. இதற்கமைய,நேற்று மேலும் 1,915 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.

தொற்றுநோய் தடுப்புப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட நாளாந்த அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதன்படி நாட்டில் கோவிட் தொற்றுக்குள்ளாகி இருந்தவர்களில், 151,740 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.