வவுனியாவில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் மரணம் : இன்று இரண்டாவது மரணம்!!

இன்று இரண்டாவது மரணம்…

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இன்று (02.06.2021) மரணமடைந்துள்ளார்.

குறித்த முதியவர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் மரணமடைந்துள்ளார்.

வவுனியா சின்னப்புதுக்குளம் பகுதியை சேர்ந்த 76 வயதான முதியவரே மரணமடைந்துள்ளதுடன், அவரது மரணத்துடன் வவுனியாவில் இன்று இரண்டு பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனைவி மாரடைப்பால் இ.றந்துவிட்டதாக அ.ழுத கணவன் : ச.டலத்தை சென்று பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் ம.னைவியை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு அவர் மா.ரடைப்பால் இ.ற.ந்.த.தா.க நா.டகமாடிய க.ணவன் கை.து செ.ய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரயை சேர்ந்தவர் ரமேஷ்.

இவரது மனைவி ராஜலட்சுமி (36). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ரமேஷ், கிருஷ்ணகிரி டேம் பொலிஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 23-ந் திகதி ராஜலட்சுமி வீட்டில் இ.ற.ந்.து கி.ட.ந்.தா.ர். அவர் மா.ரடைப்பால் இ.ற.ந்.து விட்டதாக ரமேஷ் பலரிடமும் கூறி அ.ழு.துள்ளார்.

ஆனாலும் அவரது சா.வி.ல் ச.ந்.தே.க.ம் உள்ளதாக கருதிய கிருஷ்ணகிரி தாலுகா பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, ராஜலட்சுமியின் க.ழு.த்.து ப.கு.தி.யி.ல் கா.ய.ம் இ.ருந்ததை க.ண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த.ன.ர்.

இதையடுத்து பி.ரேத ப.ரிசோதனையில், அவர் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.து தெ.ரியவந்தது. பின்னர் ரமேசிடம் பொலிசார் தீ.வி.ர வி.சாரணை ந.டத்தினார்கள்.

வி.சாரணையில் அவர் குடும்ப த.க.ரா.றி.ல், ம.னைவியை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.த.து.ம், பி.ன்னர் கொ.லை.யை ம.றை.க்.க மா.ரடைப்பால் இ.றந்து வி.ட்டதாக நா.டகமாடியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரமேசை பொலிசார் கை.து செ.ய்து தொ.டர்ந்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய 10 வயது மகனை கருணை கொ.லை செய்ய கோரிய தாய் : இறுதியில் நடந்த விபரீதம்!!

விபத்து..

விபத்து காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் கருணை கொ.லை.க்கு அனுமதி கேட்க நீதிமன்றத்திற்கு சிறுவனை அழைத்து சென்ற தாய் திரும்பி வரும் வழியில் சிறுவன் உ.யி.ரி.ழந்த ச.ம்.பவம் சோ.க.த்.தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பிரிஜிபள்ளி கிராமத்தை சேர்ந்த மணி,அருணா ஆகியோரின் பத்து வயது மகன் ஹர்ஷவர்தன். அங்குள்ள அரசு ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் வீட்டின் மேல்மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு இருந்து த.வ.றி விழுந்து படுகாயம் அடைந்தான். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹர்ஷவர்தன் உடல்நிலை தே.றி பள்ளிக்கு சென்று வந்தான்.

இந்த நிலையில் திடீரென்று அவனுடைய கண்கள், வாய், மூக்கு, ஆசனவாய் ஆகியவற்றிலிருந்து ர.த்.த.ம் வெளிப்படத் துவங்கியது. எனவே அவனை வேலூரில் உள்ள தனியார் ம.ருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் பெற்றோர் சி.கி.ச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனாலும் நிலைமையில் மாற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் ம.ன.நி.லை பா.தி.க்.க.ப்பட்ட அவனுடைய தந்தை மணி எங்கோ சென்றுவிட்டார். இதனால் செ.ய்.வ.த.றி.யாது திகைத்து நின்ற அருணா, மகனுக்கு சி.கி.ச்சை அ.ளி.க்க இயலாமல் ம.னம் க.ல.ங்கினார்.

இனிமேல் தான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று கருதிய அருணா, மகனை கருணை கொ.லை செ.ய்.ய அனுமதி வேண்டி புங்கனூர் நீதி மன்றத்திற்கு அழைத்து சென்றார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நீதிமன்றத்துக்கு விடுமுறை ஆகையால், மகனை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பி சென்றார் அருணா.

ஆனால் துரதிஷ்டவசமாக ஹர்ஷவர்தன் வீடு திரும்பும் வழியில் ப.ரி.தாபமாக ம.ர.ணம் அடைந்தான். ஹர்ஷவர்தன் மரணம், அவனுடைய தாயின் ப.ரி.தாபநிலை ஆகியவை அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.

மகனுக்காக 300 கிலோ மீற்றர் தூரம் சைக்கிளில் பயணம் செய்த தந்தை : நெகிழ்ச்சிக் காரணம்!!

கர்நாடகாவில்..

இந்திய மாநிலம் கர்நாடகாவில் மகனுக்கு மருந்து வாங்குவதற்காக தந்தை ஒருவர் 300 கிலோ மீற்றர் தூரம் சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே கனிகன கோப்பலு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது 10 வயது மகன் நரம்பு சம்பந்தமான நோயால் அவதிபட்டு வருகிறார்.

மைசூரில் சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில் பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு நாள் கூட தவறவிடாமல் மாத்திரை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்து இருந்தனர். சிறுவன் 18 வயதை அடைவதற்கு முன்னர் மருந்துகள் நிறுத்தப்பட்டால் கால்-கை வலிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்தநிலையில் கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அங்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதனால் மகனை பெங்களூரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லமுடியாமல் ஆனந்த் தவித்தார்.

ஒருநாள் கூட சிகிச்சை தவறாத வகையில் மகனுக்கு மருந்து வாங்கி வருவதற்காக 2 நாட்கள் பயணம் செய்து பெங்களூரு சென்றடைந்தார் ஆனந்த். கிராமத்தில் இருந்து சைக்கிளிலேயே ஆனந்த் வந்திருப்பதை அறிந்து அந்த மருத்துவமனை மருத்துவர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயினர்.

ஆனந்த்தின் முயற்சியை எண்ணி நெகிழ்ந்து போன அவர்கள் ஆனந்தின் மகனுக்கு தேவையான மருந்து மற்றும் செலவுக்காக ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்து அனுப்பினர்.

அதை பெற்றுக்கொண்டு ஆனந்த் அடுத்த இரு நாட்களில் வீடு வந்து சேர்ந்தார். மகனுக்கு மருந்து வாங்கி வருவதற்காக அவர் 300 கிலோ மீற்றர் பயணம் செய்துள்ளார்.

14ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிப்பு!!

பயணக்கட்டுப்பாடு..

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை வரை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 7ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு தொடரும் என இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் மரணம்!!

கொரோனா..

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இன்று (02.06.2021) மரணமடைந்துள்ளார்.

குறித்த நபர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் மரணமடைந்துள்ளார். வவுனியா நந்திமித்திரகம பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

7ஆம் திகதிக்கு பின் பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுமா? மக்கள் செயற்பட வேண்டிய விதத்தை தெளிவுப்படுத்தும் இராணுவ தளபதி!!

யணக்கட்டுப்பாடு நீக்கப்படுமா?

எதிர்வரும் 7ஆம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுமாக இருந்தால் மக்கள் எவ்வாறாக செயற்பட வேண்டும் என்ற விடயத்தை இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெளிவுப்படுத்தியுள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் பின்னர், வேலைகளுக்கு செல்வோருக்கு வழமை போன்று அனுமதி வழங்கப்படும். எனினும், வேலைக்கு செல்லாத ஏனையோருக்கு அடையாள அட்டை நடைமுறையின் பிரகாரமே வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படும்.

இதேவேளை, 7ஆம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாட்டை தொடர்வது குறித்து இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை. கோவிட் செயலணி மற்றும் சுகாதார தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியே, எதிர்கால தீர்மானங்கள் எட்டப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

கொரோனா தொற்றுக்குள்ளாக 8000 பேர் வீடுகளில் : மரணங்கள் அதிகரிக்கும் ஆபத்து!!

கொரோனா…

கொவிட் தொற்றுக்குள்ளான 8000 பேர் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப முடியாமல் வீடுகளில் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக கடந்த 31ஆம் திகதி வரை கொவிட் தொற்றுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் ஒக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ள 330 நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒக்ஸிஜன் வழங்கப்பட வேண்டிய 149 நோயாளிகள் 27ஆம் திகதி வரையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் 4 நாட்களுக்குள் மேலும் 120 நோயாளிகள் ஒக்ஸிஜன் தேவையுடன் அனுமதிக்கப்பட்டனர். 31ஆம் திகதிக்குள் அந்த நோயாளிகளின் எண்ணிக்கை 330ஆக அதிகரித்துள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய எதிர்வரும் நாட்களில் சுகாதார துறைகள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கொவிட் தொற்றினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்ப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

-தமிழ்வின்-

இணையத்தள கடன் மோசடி தொடர்பில் இலங்கை மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!

கடன் மோசடி..

சமூக வலைத்தளம் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை வங்கி தங்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளது. அதில், பேஸ்புக், மெசெனஜர் மற்றும் வட்ஸ்அப் ஆகிய சமூக வலைத்தளம் ஊடாக நிதி மோசடிகள் பல இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.

உடனடி கடன் வசதி வழங்குவதாக கூறி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் பணம் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இதன் மூலம் இடம்பெறுவதாகவும், வாடிக்கையாளர்கள் வழங்கும் தங்கள் கணக்கு தொடர்பான தகவலே இதன் பிரதான பங்கு வகிக்கின்றது.

இதனால் உங்கள் தொலைபேசிக்கு, மின்னஞ்சலிற்கு வங்கியினால் அனுப்பப்படுகின்ற உறுதி செய்யும் கடவுச்சொல் அல்லது ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்படும் கடவுசொற்களை மூன்றாம் நபருக்கு வழங்குவதற்கு தவிர்க்கவும்.

உங்கள் பணத்தை இவ்வாறான தொற்று நோய் காலப்பகுதியில் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட யுவதி உயிரிழப்பு!!

மதுரா அனந்தராம்..

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கனடாவின் ஒன்ராறியோ, North Bay அருகே வார விடுமுறையில் நிகழ்ந்த வீதி விபத்தொன்றில் குறித்த யுவதி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் ஸ்காபொரோவை சேர்ந்த 31 வயதான மதுரா அனந்தராம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நெடுந்தெரு 11இல் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. நெடுஞ்சாலையில் படகொன்றை இழுத்துச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் குறித்த யுவதி பயணித்த வாகனம் அதில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு வாகனங்களிலும் பயணித்தவர்கள் காயமடைந்துள்ளதுடன், இரண்டாவது வாகனத்தில் பயணித்த தமிழ் யுவதி படுகாயமடைந்ததை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் மேற்கொள்ளபடும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் வெளியாகும்!!

பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்..

வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கோவிட் – 19 பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் 24 மணிநேரத்தில் வெளியாகுவதற்குரிய நடவடிக்கைகள் பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கிணங்க மாகாண சுகாதார திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் இது வரையிலான காலமும் மேற்கொள்ளப்பட்ட கோவிட் – 19 பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழ்ப்பாணம் , அனுராதபுரம் , கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மூன்று நாட்களிலிருந்து ஏழு நாட்கள் வரையிலான காலப்பகுதியில் முடிவுகள் வெளியாகின.

இதன் காரணமாக கொரோனா தொற்றாளர்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்துவதில் பல சிரமங்களை சுகாதாரப் பிரிவினர் எதிர்நோக்கியிருந்தனர்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் சமூக மட்டத்திலான கொரோனா மரணங்கள் பதிவாக தொடங்கியுள்ளமை பல எண்ணிக்கையான தொற்றாளர்கள் சமூகத்தில் காணப்படுவதை உறுதிப்படுத்துவதாக தொற்றுநோய் துறை வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில், வவுனியா மாவட்டத்தில் நாளாந்தம் 130 நபர்களுக்கு மேற்கொள்ளப்படும் பி.சீ.ஆர் பரிசோதனைகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு 24 மணிநேரத்தில் முடிவுகளை பெறுவதற்குறிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா பிராந்திய சுகாதாரத்துறை இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போதுமானளவு பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வது மாவட்ட மக்களின் கொரோனா தொற்றுநிலையை எதிர்வு கூறவும் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (01.06) இரவு வெளியாகின.

அதில் லக்சபான வீதி காத்தார் சின்னக்குளம் பகுதியில் இருவருக்கும், குட்செட் வீதியில் இருவருக்கும், சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் ஒருவருக்கும், இராசேந்திரம்குளம் ஆடைத்தொழிற்சாலையில் ஒருவருக்கும்,

கூமாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், கற்பகபுரம் பகுதியில் ஒருவருக்கும், பூவரசங்குளம் குஞ்சுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் மூவருக்கும்,

தாண்டிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், ராணி மில் வீதியில் ஒருவருக்கும், சின்னப்புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில் ஒருவருக்கும் , கோதாண்ட நொச்சிக்குளம் பகுதியில் ஒருவருக்கும் என 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் பாஸ் நடைமுறையினை பெற்று முறைகேடு : 10 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

நாடு முழுவதும் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் பயணத்தடை விதிக்கப்பட்டு கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை சுகாதார பிரிவினருடன் இணைந்து அரசாங்கத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

பயணத்தடையின் போது மக்கள் பாதிப்படையாத வண்ணமும் மக்கள் ஒன்று கூடுவதினை தடுக்கும் முகமாகவும் வவுனியா பிரதேச செயலகத்தினால் மக்களை தேடி வீடுகளுக்கு சென்று பொருட்களை வழங்குமாறு வர்த்தக நிலையங்களுக்கும் நடமாடும் வர்த்தகர்களுக்கும் பாஸ் நடைமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பாஸ் நடைமுறையினை பெற்று வர்த்தக நிலையத்தினை முழுமையாக திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டமை, ஒர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதாக பாஸ் பெற்று வேறு கிராமங்களில் வியாபாரம் செய்தமை,

மாற்றுத் தேவைக்கு பயன்படுத்தியமை, வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க அனுமதி பெற்று அதனை மேற்கொள்ளாது ஒர் இடத்தில் வாகனத்தினை நிறுத்தி மக்களை ஒன்றுகூட்டியமை போன்ற பல முறைப்பாடுகள் சுகாதார பிரிவினருக்கு கிடைத்ததையடுத்து,

பண்டாரிகுளம் சுகாதார பரிசோதகர் வாகீசன், ஈச்சங்குளம் சுகாதார பரிசோதகர் விதுர்சன் தலைமையிலான குழுவினர் பண்டாரிகுளம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது பாஸ் விதிமுறை மற்றும் பயணத்தடை விதிமுறை ஆகியவற்றினை மீறி செயற்பட்ட வர்த்தகர்களின் பாஸ் சுகாதார பிரிவினரினால் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக முறைப்பாடு எழுதப்பட்டு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது வர்த்தக நிலைய உரிமையாளர்கள் நடமாடும் வர்த்தகர்கள் என 10 வர்த்தர்களுக்கு எதிராகவே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் மக்களை வீட்டிலே பாதுகாப்பாக இருந்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி நாடு வழமைக்கு திரும்ப ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களிடம் சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் அனுமதிப்பத்திரமின்றி திறக்கப்பட்ட வர்த்தக நிலையம் பொலிஸாரினால் மூடப்பட்டதுடன் மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதி பிரபல சுப்பர் மார்கட் வர்த்தக நிலையமும் பாஸ் நடைமுறையினை மீறி செயற்பட்டமையினையடுத்து பிரதேச செயலாளரினால் பாஸ் பறிமுதல் செய்யப்பட்டு மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரில் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து களமிறங்கிய இராணுவத்தினர்!!

களமிறங்கிய இராணுவத்தினர்…

வவுனியா நகரப் பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா நகரின் பிரதான சந்திகள், உள் வீதிகளின் சந்திகள் என்பவற்றில் விசேட கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் வீதிகளில் செல்லும் மக்களை மறித்து தேவையற்ற வகையில் பயணத் தடையை மீறி நடமாடி வருபவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கி வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வருகின்றனர்.

அத்துடன் நகரின் சில பகுதிகளில் இராணுவத்தினருடன் இணைந்து கடமையில் ஈடுபட்டுள்ள பொலிசார் தேவையற்ற வகையில் பயணத்தடையை மீறி நகரில் நடமாடுவோரை வழிமறித்து அவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்தும் வருகின்றனர்.

வவுனியாவில் பயணக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக பொலிசார் முறைப்பாடு பதிவு!!

பயணக் கட்டுப்பாடு..

வவுனியாவில் பயணக் கட்டுப்பாடுகளை மீறி வீதியில் நடமாடுவோருக்கு எதிராக பொலிசார் முறைபாடுகளை பதிவு செய்து அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி அத்தியாவசிய தேவையின்றி வீதிகளில் நடமாடுவோரை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வவுனியா பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா நகரின் முக்கிய பகுதிகளில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிசார் அத்தியாவசிய தேவையின்றி நகருக்குள் பிரவேசிப்பேர், வீதிகளில் நடமாடுவோர் ஆகியோரை மறித்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுவதுடன்,

அவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளையும் பதிவு செய்து அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். இதன் காரணமாக வவுனியாவில் மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு நகரம் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

இலங்கை மக்களுக்கு இன்று முதல் 5000 ரூபாய் கொடுப்பனவு!!

5000 ரூபாய் கொடுப்பனவு..

நாட்டில் நிலவும் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொவிட் நிலைமை மற்றும் பயணத்தடையை கருத்திற் கொண்டு மிகவும் சுகாதார பாதுகாப்புடன் இந்த பணத்தை பகிரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இம்முறை 5ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கி நிறைவு செய்வதற்கு ஒன்றரை அல்லது இரண்டு வாரங்களாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை மக்களை ஒரு இடத்திற்கு அழைத்து இந்த பணத்தை வழங்க முடியாத நிலைமை உள்ளது. இதனால் சுகாதார வழிக்காட்டலின் கீழ் இதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் இதனை பெற தகுதியுள்ளவர் என்றால் எவ்வித சந்தேகமும் வேண்டாம் பணம் உங்களை வந்து சேரும். சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோத்தர்கள் குழுவாக இணைந்து வருமானம் பெற முடியாமல் இருக்கும் குடும்பங்களுக்கு இந்த பணத்தை வழங்குவார் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.