கனடா அரசாங்கத்தின் சிறந்த பணியாளர்கள் பிரிவுகளில் முதலிடத்தை பெற்ற தமிழர்!!

கௌதமன் குருசாமி..

கனடிய அரசாங்கத்தின் மூன்று சிறந்த பணியாளர்கள் பிரிவுகளில் முதலிடத்தை தமிழரான கௌதமன் குருசாமி பெற்றுள்ளார்.

The Hill Times எனப்படும் சுயாதீனமான கனேடிய அரசியல் செய்தி பத்திரிகையின் 18வது வருடாந்த சிறந்த பணியாளர்கள் பட்டியலில் இந்த கௌரவத்தை கௌதமன் குருசாமி பெற்று முத்திரை பதித்துள்ளார்.

சிறந்த 25 பணியாளர்களை பட்டியலிடும் The Hill Times பத்திரிகை, இந்த வருடம் மிகச் சிறந்த ஒட்டுமொத்த பணியாளர் (Top Overall terrific staffer), சிறந்த சகலதுறை பணியாளர் (Best AllRound Terrific staffer), அமைச்சரவையின் சிறந்த பணியாளர் (Best Cabinet staffer) ஆகிய பிரிவுகளில் கௌதமன் குருசாமிக்கு முதலிடத்தை வழங்கியுள்ளது.

அத்துடன்,அதிக விபரங்களை அறிந்த பணியாளர் ( Most Knowledgeable Staffer) என்ற பிரிவில் முதலிடத்தை சமநிலையில் கௌதமன் குருசாமி பகிர்ந்துள்ளார். அவர் தற்போது கனடிய சுகாதார மூத்த கொள்கை ஆலோசகராக (Senoir policy adviser for Health Minister Patty Hajdu) பணியாற்றுகின்றார்.

தொழில்முறை அரசியல் பணியாளராக ஆறு வருடங்கள் மட்டுமே பணியாற்றியுள்ள கௌதமன் குருசாமி,2015 ஆம் ஆண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரியின் நிறைவேற்று உதவியாளராக அரசியலில் பணியாற்ற ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொவிட் தொற்றினை கட்டுப்படுத்தும் வரை பயணத்தடை அவசியம்!!

பயணத்தடை..

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமையை கட்டுப்படுத்தும் வரை பயண கட்டுப்பாட்டினை தொடர்ந்து நீண்டிக்குமாறு விசேட வைத்தியர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பயண கட்டுப்பாடு விதிப்பதன் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டாலும் மக்களுடைய உயிருக்கு ஏற்படும் ஆபத்துக்களை கணக்கிட முடியாதென அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார பின்னடைவை விடவும் மக்களின் உயிர் பெறுமதியானதென விசேட வைத்தியர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு சுகாதார பிரிவினரின் கோரிக்கைகளுக்கு செவிக்கொடுத்து மக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் பயணத்தடை விதிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை பாராட்டுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சுகாதார ஊழியர்கள் மற்றும் தாதிகளின் கோரிக்கைகளுக்கும் தீர்வு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய தினம் நாடு முழுவதும் தாதிகள் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றில் ஈடுவதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 36 பேர் உயிரிழப்பு!!

கொரோனா..

கோவிட் தொற்றால் மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,441 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இன்றைய தினம் 2,849 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய ,கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 183,387 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் இ.றந்தவரின் ச.டலத்தை பா.லத்திலிருந்து ஆ.ற்றில் தூ.க்கி வீ.சும் அ.வலம் : ப.த.ப.தைக்க வைக்கும் காட்சி!!

உத்தர பிரதேச மாநிலத்தில்..

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் இ றந்தவரின் ச.டலம் பாலத்தின் மேலிருந்து வீ.சப்படும் காட்சி இணையத்தில் வெளியாகி ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காட்சி Balrampur மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

வீடியோவில், பிபிஇ உடை அணிந்த ஒருவர் உட்பட இரண்டு நபர்கள் கொரோனாவால் இ.றந்தவரின் உ.டலை பாலத்திலிருந்து ஆற்றில் தூ.க்கி வீ.சுகின்றனர். அந்த வழியே காரில் சென்றவர்கள் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவ செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர், ஆற்றில் தூ.க்கி வீ.சப்பட்ட உ.டல் பிரேம் நாத் மிஸ்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரேம் நாத் மிஸ்ராவுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அவர் மே 25ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மே 28ம் திகதி அவர் சிகிச்சை பலனின்றி உ.யிரிழந்ததாக Balrampur தலைமை மருத்துவ அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

காதலித்து திருமணம் செய்த கணவன் செய்த கொ.டுமை : புகாரில் மனைவி கூறியிருந்த அதிர்ச்சிக் காரணம்!!

தமிழகத்தில்…

தமிழகத்தில் மனைவி ஒருவர் கணவர் தன்னை பா.லி.ய.ல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சிப்பதாக கூறி பு.கா.ர் கொடுத்துள்ளது, அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பகுதியைச் சேர்ந்த ஜபினாவுக்கும் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீநாத் என்பவருக்கும் கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு முஜம்மது ஷபி, அசேன் என இரு கு.ழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திருமணத்துக்கு பின்னர் ஜபினாவை இந்து மதத்துக்கு மாறக்கூறி ஸ்ரீநாத் அடித்து து.ன்.பு.று.த்.தி வந்துள்ளார்.

ம.து ப.ழக்கத்துக்கு அடிமையான ஸ்ரீநாத் ஜபினா மற்றும் கு.ழந்தைகளை அ.டி.த்.து பட்டினி போட்டு வந்துள்ளார். ஸ்ரீநாத்தின் கொ.டு.மை.க.ள் தாங்க முடியாமல், ஜபினா பலமுறை த.ற்.கொ.லை மு.யற்சி செ.ய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கணவனை விட்டு தாய் வீட்டிற்கு சென்று, அங்கு 2 ஆண்டிற்கும் மேலாக வசித்து வந்த நிலையில், கடந்த 27-ஆம் திகதி ராணிப்பேட்டையில் உள்ள ஜபினாவின் தாயார் வீட்டுக்கு வந்த ஸ்ரீநாத், ஜபினாவையும் கு.ழந்தைகளையும் கொ.லை செ.ய்.து விடுவதாக மி.ர.ட்.டியுள்ளார்.

இது தொடர்பாக ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜபினா பு.கா.ர் அளித்தார். அதில், தனது கணவர் அ.டி.த்.து து.ன்.பு.று.த்.து.வ.து.ட.ன் வி.ப.ச்.சாரத்தில் ஈடுபட கட்டாயப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பொலிசார் கணவர் மீது வழக்கு பதிவு செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் சுகவீனம் காரணமாக உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் சுகவீனம் காரணமாக அவரது வீட்டில் நேற்று மரணமடைந்திருந்தார்.

அவரது சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை இன்று(30.05.2021) உறுதிப்படுத்தப்பட்டது.

வவுனியா அண்ணா நகரை சேர்ந்த 52 வயதான பெண்ணுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

இந்த 1028 கிராமங்களில் கொரோனாவால் ஒருவர் கூட பாதிக்கவில்லை : ஆச்சரிய தகவல்!!

1028 கிராமங்களில்…

இந்தியாவில் இருக்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை எட்டிக் கூட பார்க்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலையால், இந்தியா நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதுடன், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உலகிலே கொரோனாவால் மோசமான பாதிப்புகளை இந்தியா சந்தித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இதே இந்திய நாட்டில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் கொரோனாவின் இரண்டாவது அலையால் யாரும் பாதிக்கப்படவில்லையாம்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், இதுவரை கொரோனா இரண்டாம் அலை எட்டிக் கூடப்பார்க்கவில்லை.

1,028 கிராமங்கள் எதிலும் இதுவரை ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை. எனவே, கட்டாக் மாவட்ட நிர்வாகம் இந்த கிராமங்களை பச்சை மண்டலங்களாக அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் இந்தக் கிராமங்களில் மிகச் சிறப்பான பின்பற்றப்படுவது மட்டுமின்றி கிராம நிர்வாகங்கள் கண்காணித்து வருவது தான் இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணமான 3 மாதத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணமான 3 மாதத்தில் காதல் மனைவியை கணவன் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.த சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவை சேர்ந்த வைபவ் என்பவரும் பூஜா என்ற இளம்பெண்ணும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே புதுமணத்தம்பதி இடையே சிறு விடயங்களுக்கு கூட வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வைபவ் – பூஜா இடையே மீண்டும் ச.ண்.டை ஏற்பட்டது.

அப்போது மாமியார் கண் எதிரிலேயே பூஜா தனது கணவர் வைபவை இழிவுப்படுத்தும் வகையில் மிகவும் கீழ்த்தரமாக திட்டி பேசி மோ.சமாக நடந்திருக்கிறார்.

தனது தாய் முன்னால் தன்னை மனைவி இப்படி அசிங்கப்படுத்திவிட்டாளே என ஆ.த்.தி.ரமடைந்த வைபவ் கண்ணிமைக்கும் நேரத்தில் பூஜாவை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.தா.ர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் அங்கு வந்து பூஜாவின் ச.டலத்தை மீ.ட்.டு வைபவை கைது செய்தனர். அவரிடம் தீவிர வி.சாரணை நடைபெற்று வருகிறது.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக புகைப்பிடித்தலை நிறுத்தியுள்ள 48 சதவீதமானவர்கள்!!

இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்றுப் பரவலுடன் புகைப்பிடிப்பவர்களில் 48 சதவீதமானவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியுள்ளனர் என்று ம.து.பா.னங்கள் மற்றும் போ.தை.ப்.பொ.ரு.ள் தொடர்பான தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியுள்ளவர்களில் சுமார் 50 சதவீதமானவர்கள் மீண்டும் ஒருபோதும் புகைப்பிடிக்க மாட்டார்கள் என்றும் ம.து.பா.ன.ங்.க.ள் மற்றும் போ.தை.ப்.பொ.ரு.ள் தொடர்பான தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.

புகைப் பிடிப்பவர்களிடையே கோவிட் தொற்று நேரடியாக தாக்கம் செலுத்துவதுடன், அவர்களின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது என்றும் ம.து.பா.ன.ங்.க.ள் மற்றும் போ.தை.ப்.பொ.ரு.ள் தொடர்பான தகவல் மையத்தின் பணிப்பாளர் சம்பத் த சரம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புகைப்பிடிப்பதால் தினமும் கிட்டத்தட்ட 40 பேர் உ.யிரிழக்கின்றார்கள் என்ற அ.திர்ச்சியான தகவலையும் அவர் கூறியுள்ளார்.

ஒருவர் புகைப்பிடிப்பதை நிறுத்தி விடுவது அவரின் உ.யிரைக் கா.ப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு என்றும் சம்பத் த சரம் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் குறைப்பதில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இலங்கை செயற்பட்டு வருகின்றது. எனினும், புகைப்பிடிக்கும் பழக்கத்தை நாட்டிலிருந்து முற்றாக நீக்க மேலும் பல கொள்கைகளைச் செயற்படுத்த வேண்டியுள்ளது.

புள்ளி விபரங்களின்படி கடந்த 10 ஆண்டுகளில் புகைப் பிடித்தல் 40 – 50 சதவீதம் குறைந்துள்ளதுடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு கிட்டத்தட்ட 12 சதவீதம் குறைந்துள்ளது.

இதனை மேலும் குறைப்பதற்கு சிகரெட்களை தனியாக விற்பனை செய்வதைத் தடுப்பது, மேலும், கல்வி நிறுவனங்களுக்கு 100 மீற்றர் சுற்று வட்டாரத்தில் சிகரெட் விற்பனையைத் தடை செய்வது போன்ற திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும்.

இலங்கையில் கோவிட் தொற்று அடையாளம் காணப்பட்டது முதல் பல தடவைகள் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக மக்கள் அதிகமான காலம் வீட்டில் இருக்க வேண்டி ஏற்பட்டது.

அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் பலர் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இந்த நிலையில், இவ்வாறு தேவையற்ற செலவுகள் மற்றும் உடல் நலத்தைக் கெடுக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டு நாடு முன்னேற்றம் கண்டுள்ளமை கோவிட் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் நாட்டில் ஏற்பட்டுள்ள சிறந்த மாற்றமே ஆகும் என்றார்.

அதிக விலையில் பொருட்கள் விற்றால் வர்த்தகரின் அனுமதிப்பத்திரம் இரத்து!!

அதிக விலையில்..

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்களின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் என கூட்டுறவு சேவை, விநியோக அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இரத்துச் செய்யப்படும் அனுமதிப்பத்திரங்களை அதே பகுதியில் உள்ள ஏனைய விற்பனையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வதற்காக இரண்டு வர்த்தகர்களுக்கு அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ஒரு சில வர்த்தகர்கள் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும், அந்த முறைபாடுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எடுத்த தீர்மானத்தில் மாற்றங்கள் வரலாம் : இராணுவத் தளபதி விசேட அறிவிப்பு!!

இராணுவத் தளபதி…

அடுத்த வாரம் நிலைமைகளை ஆராய்ந்து நிலைமைகள் மோசமாயின் 7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்படுத்த வாய்ப்புக்கள் உள்ளன என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 7ஆம் திகதியின் பின்னரும் பயணக்கட்டுப்பாடுகளை நீடிக்க வேண்டும் என சுகாதார துறையினர் வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கான தீர்வுகள் தொடர்பில் தெரிவிக்கும்போதே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தொடர்ச்சியாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என சுகாதார துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கமைய ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும் மக்களையும் கருத்திற் கொண்டு பயணக்கட்டுப்பாடு தளர்வுகளும் ஏற்படுத்தப்பட்டன.

எனினும் கடந்த 25ஆம் திகதி மக்கள் தமது தேவைகளுக்காக அவதிப்பட்டு செயற்பட்டனர். இதன்போது மக்களை குறைகூற நாம் விரும்பவில்லை. ஏனைய நாடுகள் போன்று அல்லாது எமது மக்கள் மிகவும் பொறுமையாக அர்ப்பணிப்புடன் எமக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.

அதனை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். எனினும் மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

நாட்டின் நிலைமைகள் குறித்து வைத்திய நிபுணர்கள் தொடர்ச்சியாக ஆய்வுகளையும் கண்காணிப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கூறும் காரணங்களை நாம் ஏற்றுக்கொண்டு அதற்கேற்றால் போல் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துகின்றோம்.

அவ்வப்போது தளர்வுகளை ஏற்படுத்தாது இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக நாட்டினை முடக்க வேண்டும் என இறுதியாக கூடிய செயலணிக் கூட்டத்திலும் வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தினர். எனவே அவர்களின் ஆய்வுகள் தரவுகள் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு கடுமையான தீர்மானம் ஒன்றை எடுக்க நேர்ந்தது.

அதற்கமைய 7ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் தொடர்ச்சியாக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தீர்மானங்களை எடுக்கையில் நாம் மக்களை கருத்திற் கொண்டுள்ளோம்.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் சகலருடனும் கலந்துரையாடி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடமாடும் வர்த்தக செயற்பாடுகள் மூலமாக மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் அனுமதியின்றி திறக்கப்பட்ட இரு வர்த்தக நிலையங்கள் பொலிசாரால் பூட்டு!!

வர்த்தக நிலையங்கள்…

வவுனியாவில் அனுமதியின்றி திறக்கப்பட்ட இரு வர்த்தக நிலையங்கள் பொலிசாரால் இன்று (30.05) காலை பூட்டப்பட்டன.

வவுனியா சந்தை உள்ளவட்ட வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பயணக்கட்டுப்பாட்டு நேரத்தில் வர்த்தக நிலையத்தை திறந்து வியாபாரம் இடம்பெற்றுள்ளது.

இங்கு பொதுமக்கள் பொருட்களை பெற்றுச் செல்வது தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து பிரதேச செயலகத்தினர் அங்கு சென்று பார்வையிட்டனர். இதன்போது அனுமதி பெறாது வியாபாரம் செய்தமை தெரியவந்தது.

இதனையடுத்து பிரதேச செயலாளரால் வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தியதையடுத்து குறித்த வர்த்தக நிலையத்திற்கு வருகைதந்த பொலிசார் வர்த்த நிலையத்தினருக்கு கடும் எச்சரிக்கை வழங்கியதுடன் வர்த்தக நிலையத்தை பூட்டுமாறும் பணித்திருந்தனர்.

அத்துடன் மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல சுப்பர் மார்கட் ஒன்று பயணக்கட்டுப்பாட்டு நேரத்தில் வீடு வீடாக சென்று பொருட்களை வழங்குவதற்கான அனுமதியைப் பெற்று வர்த்தக நிலையத்தை திறந்து வியாபாரம் செய்வதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து,

அங்கு சென்ற பிரதேச செயலாளர் குறித்த வர்த்தக நிலையத்த பூட்டுமாறு பணித்ததுடன் பயணக்கட்டுபாட்டு நேரத்தில் வீடுகளுக்கு சென்று பொருட்களை வழங்குவதற்காக பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் பயணக் கட்டுப்பாட்டை மீறி அதிகளவு மக்கள் நடமாட்டம் : வர்த்தக நிலையங்கள் சிலவும் திறப்பு!!

அதிகளவு மக்கள் நடமாட்டம்..

வவுனியாவில் பயணக்கட்டுபாட்டை மீறி மக்கள் வீதிகளில் அதிகளவு நடமாடுவதை அவதானிக்க முடிகிறது. அத்துடன் வர்த்தக நிலையங்கள் சிலவும் திறக்கப்பட்டுள்ளதையும், அங்கு மக்கள் சென்று வருவதையும் அவதானிக்க முடிகிறது.

நாட்டில் ஏற்படடுள்ள கொரோனா தாக்கம் அதிகரிப்பையடுத்து நாடு முழுவதும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு நகரங்களில் தெரிவு செய்யப்பட்ட சில மொத்த விறப்பனை நிலையங்கள் கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை வழங்குவதற்கும்,

தெரிவு செய்யப்பட்ட வர்த்தக நிலையங்கள் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்குவதற்கும் மட்டுமே நாடு முழுவதும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே நடைமுறையே வவுனியாவிலும் உள்ள போதும் அந்த நடைமுறைகளை மீறி பல மொத்த விற்பனை நிலையங்களும், சில்லறை வியாபார நிலையங்களும் திறக்கப்பட்டு விற்பனை இடம்பெறுவதுடன் அங்கு மக்கள் சென்று வருவதையும் அவதானிக்க முடிகிறது. இதனால் வீதிகளில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது.

அத்துடன், வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வவுனியா பிரதேச செயலகத்தால் அதிகமானவர்களுக்கு பயணக்கட்டுப்பாட்டு நேரத்தில் பயணிப்பதற்கான பாஸ் வழங்கப்பட்டுள்ளமையால் அதிகளவு வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுவதற்கும், அதிகளவு மக்கள் நடமாடுவதற்கும் கரணமாக அமைந்துள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் வவுனியா வர்த்தக சங்க செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அனுமதியளிக்கப்பட்ட மொத்த விற்பனை நிலையங்கள் கிராமப்புற கடைகளுக்கு பொருட்களை வழங்வும், அனுமதியளிக்கப்பட்ட சில்லறை விற்பனையகங்கள், மக்களுக்கு வீடுகளுக்கு கொண்டு சென்று பொருட்களை வழங்கவும் மட்டுமே பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் எவரும் வர்த்தக நிலையங்கள் திறந்து பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் வியாபாரம் செய்ய முடியாது எனத் தெரிவித்தார்.

ஜுன் இறுதி வரை பயணக் கட்டுப்பாடு? வைரஸை கட்டுப்படுத்த அரச மேல்மட்டத்தில் ஆலோசனை!!

பயணக் கட்டுப்பாடு..

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலிலுள்ள பயணக் கட்டுப்பாட்டை ஜுன் மாதம் இறுதி வரை முன்னெடுப்பதற்கு அரச மேல் மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாக பிரபல தமிழ் பத்திரிகையான தமிழன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழன் பத்திரிகையின் பிரதான தலைப்புச் செய்தியாக இந்த செய்தி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பயணக் கட்டுப்பாடு ஜுன் மாதம் 7ம் திகதி வரை நீடிப்பதாக நேற்று முன்தினம் அரசு அறிவித்த போதும், அதனையும் தாண்டி பயணத் தடை தொடரும் வாய்ப்பு இருப்பதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப் பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதால், இதனை தொடர்ந்து சில வாரங்களுக்கு நீடிக்க அரசு விரும்புவதாக சொல்லப்பட்டது.

நடமாடும் விபாயாரிகளின் சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வீடுகளின் அருகே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறைந்த வருமானமுடைய மக்களுக்கு 5000 ரூபா நிவாரணம் வழங்கப்படவுள்ளது. இதர அவசர சேவைகள் இயங்கும்.

அதனடிப்படையில் பயணக் கட்டுப்பாட்டை நீடிக்க அரசு ஆலோசிக்கின்றது என அந்த செய்தியில் மேலும் கூறப்படுகின்றது. வங்கிகளின் சேவைகளை குறிப்பிட்ட மணி நேரங்களுக்கு இயக்க வைக்கவும் ஆலோசிக்கப்படுகின்றது என அரசின் முக்கிய பிரமுகரொருவரை மேற்கோள்காட்டி, அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடவும் அரசு தீர்மானித்துள்ளது. பயணக்கட்டுப்பாடு குறித்தான அரசின் புதிய அறிவிப்பு ஜுன் 5 அல்லது 6ம் திகதிகளில் வெளிவருமென மேலும் சொல்லப்பட்டது.

7ம் திகதியின் பின்னரும் பயணத்தடை நீடிக்கப்படுமா? சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!!

பயணத்தடை..

ஜுன் 07ஆம் திகதிக்கு பின்னரும் பயணத்தடையை நீடிப்பது குறித்து உரிய மீளாய்வின் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் அமுலில் உள்ள பயணத்தடை ஜுன் 7ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னரும் பயணக்கட்டுப்பாடுகள் தொடருமா என்பது குறித்து இன்னும் எதுவும் அறிவிக்கப்படவில்லை என வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் தற்போது கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளது. கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளின் விளைவாகவே இந்தப் பெறுபேறு கிடைத்துள்ளது.

தற்போது தொடர் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனால் ஏற்படும் பெறுபேறுகளை 14 நாட்களுக்குப் பின்னரே அறியக்கூடியதாக இருக்கும். அதற்காக நாம் தற்போது சும்மா இருக்கவில்லை.

நிலைமை நாளாந்தம் மீளாய்வு செய்யப்படுகின்றது. நாட்டின் தற்போதைய நிலை, அடுத்து சில நாட்களில் ஏற்படும் நிலை, தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் வீதம், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னரே, எதிர்வரும் 07ஆம் திகதிக்கு பின்னரான காலம் குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (29.05) இரவு வெளியாகின.

அதில் தோணிக்கல் பகுதியில் 2 வயது மற்றும் 9 வயது சிறுவர்கள் உட்பட 4 பேருக்கும், மகாறம்பைக்குளம் ஸ்ரீராமபுரம் பகுதியில் 3 வயது மற்றும் 8 வயது சிறுவர்கள் இருவருக்கும்,

ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள இஸ்லாமிய கலாசார மண்டபம் முன்பாகவுள்ள பிரபல பலசரக்கு வர்த்தக நிலையம் ஒன்றில் இருவருக்கும், தவசிகுளம் பகுதியில் ஒருவருக்கும், நவகமுக பகுதியில் ஒருவருக்கும்,

திருவேகம பகுதியில் ஒருவருக்கும், நெடுங்குளம் பகுதியில் ஒருவருக்கும், வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவருக்கும், சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவருக்கும், தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

ஆச்சிபுரம் பகுதியில் ஒருவருக்கும், பெரிய கோமரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒருவருக்கும் என 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.