இலங்கையில் மேலும் 42 பேர் கொரோனா தொற்றுக்கு பலி!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,405 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நேற்று (29) 2,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 180,538 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 2,029 பேர் நேற்று (29) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 148,391 ஆக அதிகரித்துள்ளது.

வவுனியா பெண் ஒருவர் கொரோனா தொற்றால் மரணம் : இன்று இடம்பெற்ற இரண்டாவது மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா, தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (29.05) இரவு குறித்த பெண் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார்.
வவுனியா, தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய பெண்ணே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

வவுனியா, மகாறம்பைக்குளம் ஸ்ரீராமபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் இன்று மரணமடைந்த நிலையில் இது வவுனியாவில் இன்றைய தினம் இடம்பெற்ற இரண்டாவது கொவிட் மரணமாகும்.

கனடாவில் சைக்கிளில் வெளியே சென்ற இலங்கையருக்காக காத்திருந்த குடும்பம் : நேர்ந்த துயரம்!!

கனடாவில்…

கனடாவில் சைக்கிளில் வெளியே சென்ற இலங்கையர் ஒருவர் வீட்டுக்குத் திரும்பாத நிலையில், அவர் மணல் முதலான கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் ட்ரக் மோதி உயிரிழந்தார் என்ற துயர செய்தி அறிந்து அவரது குடும்பத்தினர் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தெகிவளையில் பிறந்தவரான Dillan Fernando (49), இலங்கையிலிருந்து தன் குடும்பத்தை கனடாவுக்கு ஸ்பான்சர் செய்து அழைத்து வந்தவர் ஆவார். அவர்கள் அனைவரையும் Dillanதான் கவனித்தும் வந்தார்.

அப்போது, அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ் முதலான வாகனங்களுக்கு வழி விடுவதற்காக மற்ற வாகனங்கள் ஓரமாக ஒதுங்கி நின்றிருக்கின்றன. அவை சென்றதும் மீண்டும் போக்குவரத்து நகரத் தொடங்கியுள்ளது.

அப்போது எதிர்பாராதவிதமாக, மணல் போன்ற பொருட்களை கொண்டு செல்லும் ட்ரக் ஒன்றின் பின் புறம் Dillanஇன் சைக்கிளில் மோத, அவர் கீழே விழுந்திருக்கிறார்.

விழுந்தவர் மீண்டும் எழவேயில்லை. மாலை 3 மணியளவில் Dillan வீடு திரும்புவார் என அவரது குடும்பத்தார் காத்திருக்க, அவர்களுக்கு Dillan விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்திதான் கிடைத்திருக்கிறது.

தனது சகோதரி முதல் குடும்பத்தினர் அனைவரையும் கவனித்துக்கொண்ட Dillan, தன் பெற்றோருக்காக வீடு ஒன்றையும் வாங்கிக் கொடுத்திருக்கிறாராம்.

அவர் எங்களுக்காக நிறைய தியாகம் செய்திருக்கிறார் என்று கூறும் Dillanஇன் சகோதரி, அவர் அனைவரையும் நன்றாக கவனித்துக்கொண்டதாக தெரிவிக்கிறார். அவரது உயிர் விலையேறப்பெற்றது என்று கூறும் Dillanஇன் சகோதரர், இப்படி ஒரு அர்த்தமற்ற மரணம் இன்னொருவருக்கு வரக்கூடாது என்கிறார்.

Dillanஇன் எதிர்பாரா மரணத்தால் அவரது குடும்பம் துயரத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், அந்த விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.

வைத்தியசாலையில் இருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா நோயாளி மரணம்!!

கொரோனா நோயாளி…

ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14ஆம் திகதி இரண்டு முறை தப்பிச் சென்ற கோவிட் தொற்றாளர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தொற்றாளர் 65 வயதுடைய ராகம இஹலகம பிரதேசத்தை சேர்ந்தவர் என ஹோமாகம வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி தப்பிச் சென்ற இந்த நோயாளி வீடு ஒன்றிற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் அன்றைய தினம் மாலை 3 மணியளவில் வைத்தியசாலை இருந்து மீண்டும் அவர் தப்பி சென்றுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைக்கமைய 500 மீற்றர் தூரத்தில் வீடு ஒன்றுக்கு அருகில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவரின் தகன நடவடிக்கைகள் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேபிள் கார் விபத்தில் சிக்கி கோமாவிலிருந்த குழந்தை : கண் விழித்ததும் கேட்ட முதல் கேள்வி!!

இத்தாலியில்..

இத்தாலியில் கேபிள் கார் விபத்தில் சிக்கி 14 பேர் பலியான நிலையில், ஒரே ஒரு ஐந்து வயது சிறுவன் மட்டும் அதிசயமாக உயிர் தப்பினான்.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த Eitan Biran என்னும் அந்த சிறுவனின் தாய் Tal (26), தந்தை Amit (30), தம்பி Tom (2), தாத்தா Yitzhak Cohen (81) மற்றும் பாட்டி Barbara Koninsky (71) ஆகிய அனைவருமே அந்த விபத்தில் உயிரிழக்க,

உயிர் தப்பிய Eitan மட்டும் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். இந்நிலையில், கோமாவிலிருந்து கண் விழித்த Eitan, தன் அத்தையான Aya (41)இடம், அம்மாவும் அப்பாவும் எங்கே என்று கேட்டுள்ளான்.

கோமாவிலிருந்து கண் விழித்துவிட்டாலும் அவனால் சரியாக பேச முடியவில்லை. ஆகவே, எனக்கு தொண்டையில் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று கூறினானாம் Eitan.

நான் எங்கே இருக்கிறேன், நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள் என்று அத்தையிடம் கேட்ட Eitan, என் அம்மாவும் அப்பாவும் எங்கே என்று கேட்டிருக்கிறான்.

ஆனால், அவனிடம் அவனது பெற்றோர், தம்பி, தாத்தா பாட்டி ஆகியோர் இறந்துபோனார்கள் என்பது குறித்த விவரம் சொல்லப்பட்டதா என்பது தெரியவில்லை.

இந்நிலையில், விபத்துக்குள்ளான கேபிள் கார் நிறுவனத்தின் தலைவரான Luigi Nerini (56) என்பவரும், அவரது சக ஊழியர்களான Gabriele Tadini, Enrico Perocchio என்னும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  Luigi மீது 14 கொ.லை கு.ற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

திருமணத்தில் குவிந்த 250 பேர் : மாமனார் உட்பட 4 பேர் பரிதாபமாக பலியான சோகம்!!

தெலங்கானா…

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ளது முத்தியாலகுடம் என்ற கிராமம். இங்கு கடந்த 14 ஆம் தேதி திருமணம் ஒன்று நடந்தது. கொரோனா பரவல், சமூக இடைவெளி, முகக்கவசம் என அனைத்தையும் மறந்து, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 250 பேர் அதில் கலந்துகொண்டனர்.

விழா முடிந்ததும் ஜாலியாக அனைவரும் வீட்டுக்குத் திரும்பிவிட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சுகாதாரத் துறையினர், திருமணத்தில் கலந்து கொண்டவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

அதில், சுமார் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மணமகனின் அப்பா உட்பட 4 பேர் தொற்று காரணமாக உ.யிரிழந்தனர்.

கொரோனா பயத்தில் அவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யக் கூட அங்குள்ளவர்கள் யாரும் முன் வரவில்லை. பின்னர் கிராம பஞ்சாயத்து கூடி இறுதிச் சடங்கு செய்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 100 பேர், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே இந்த மாவட்டத்தில் தொற்று பாதிப்பு சமீபகாலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொ.டூரம் : நாட்டையே உ.லுக்கிய வீடியோ : அ.திரடியாக செயல்பட்ட போலீஸ்!!

இந்தியாவில்..

இந்தியாவில் இளம் பெ.ண் ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் 6 பேரை கை.து செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களாகவே இந்தியாவின் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வந்தது. அதில் பெண் ஒருவரின் உ.று.ப்.பி.ல், பா.ட்டிலை நுழைத்து கு.ம்பல் ஒன்று ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.வ.து போன்று இருந்தது.

இந்த வீடியோவைக் கண்ட பலரும் க.டும் அ.தி.ர்.ச்சியடைந்து, இந்த கொ.டூ.ர செ.யலில் ஈ.டுபட்டவர்களை பி.டி.க்.க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ப.லா.த்.கா.ர.த்.தி.ல் ஈ.டு.ப.ட்டவர்களை வைத்து, பொலிசார், இவர்கள் வட கிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள் போன்று இருப்பதாக கூறி, அசாம் பொலிசார் தீ.வி.ர வி.சாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து பெங்களூரு பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கை.தான நபர்களிடம் நடத்திய வி.சாரணைக்கு பிறகு,

ப.லா.த்.கா.ர.ம், தா.க்.கு.த.ல் உ.ள்ளிட்ட சம்மந்தப்பட்ட பிரிவுகளில் வ.ழக்குப் ப.தி.வு செய்துள்ளோம். 2 பெ.ண்கள் உட்பட 6 பேரை கை.து செய்துள்ளோம்.

கு.ற்.ற.வா.ளி.க.ள் அனைவரும் ஒரே கு.ழுவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள், பணப் பி.ரச்சனை தொடர்பாக, குறித்த பெ.ண்ணை வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் க.ட.த்.தி வ.ந்.து, இந்த கொ.டூ.ர செ.ய.லை செ.ய்.து.ள்ளனர்.

இப்போது, அந்த பெ.ண் தற்போது வேறு மாநிலத்தில் உள்ளார். அவரை அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இன்று காலை கு.ற்.ற.ம் சா.ட்டப்பட்டவர்களை கு.ற்.ற.ம் ந.டந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அதில் 2 பே.ர் தப்.பி.யோ.ட மு.யன்றதால், பொலிசார் உடனடியாக து.ப்.பா.க்.கி.ச் சூ.ட்.டி.ல் ஈ.டு.ப.ட்.ட.ன.ர்.

அப்போது கு.ற்.ற.வா.ளி.க.ள் கா.ல்.க.ளி.ல் கா.ய.ம் ஏ.ற்படவே, உடனடியாக அவர்கள் அங்கே சு.ரு.ண்.டு வி.ழு.ந்.த.ன.ர். இதையடுத்து, அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அடுத்தடுத்து உயிரிழந்த 4 மகன்கள் : அழுது கொண்டே தூங்கிய தாய் பேரதிர்ச்சியில் மரணம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் 4 மகன்களும் கொரோனாவுக்கு ப.லியானதை அறிந்த தாய், பே.ரதிர்ச்சியில் உ.யிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. திருப்பூரின் குன்னத்தூர் அருகே வெள்ளிரவெளி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள், இவருக்கு தங்கராஜ், ராஜா, சவுந்தரராஜன், தெய்வராஜ் என்ற 4 மகன்கள் உண்டு.

மகன்கள் தனித்தனியாக வசித்து வரும் நிலையில், அடிக்கடி வந்து தாயை சந்தித்து விட்டு செல்வது வழக்கம், மருமகள்களும் பாப்பம்மாளை நன்கு கவனித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இளைய மகனான தெய்வராஜ்(வயது 42), இவரின் மனைவி சாந்தி ஆகியோர் சில நாள்களுக்கு முன் கொரோனாவால் உ.யிரிழந்தனர். இதனை தொடர்ந்து,

அவரது சகோதரர்களுக்கும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி அடுத்தடுத்து உ.யிரிழந்தனர். இதற்கிடையே தன்னை மகன்கள் யாரும் பார்க்க வராததால், அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி விசாரித்து வந்துள்ளார் பாப்பம்மாள்.

அப்போது தான் மகன்கள் நால்வரும் உ.யிரிழந்தது தெரியவந்தது, இதனால் க.தறி அழுத பாப்பம்மாளை உறவினர்கள் தேற்றியதுடன் தூங்கவைத்துள்ளனர், ஆனால் இரவு உறக்கத்திலேயே பாப்பம்மாள் பரிதாபமாக உ.யிரிழந்துள்ளார்.

தடுப்பூசிகளுக்கான முற்பதிவு தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

வாட்ஸ்அப் செயலி ஊடாக தடுப்பூசிக்காக மக்களை பதிவு செய்வதற்கான எந்தவொரு நடைமுறையும் சுகாதார அமைச்சிடம் இல்லை என்று சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் வாட்ஸ்அப் அல்லது எஸ்.எம்.எஸ் செய்திகளை பதிவுளுக்காக பயன்டுத்த வேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிக்காக பதிவு செய்யுமாறு மக்களைக் கோரி சுகாதார அமைச்சகம் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சில நிறுவனங்கள் இதுபோன்ற பதிவு நடைமுறைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ,எனினும் இது தொடர்பில் அந்த நிறுவனங்கள் சுகாதார அமைச்சகத்திற்கு அறிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரியுடன் தொடர்புகொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தடுப்பூசி இயக்கத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மக்கள் பிரதிநிதிகள் சுகாதார ஊழியர்களின் கடமைகளை சீர்குலைப்பது வருந்தத்தக்கது என்று குறிப்பிட்டார்.

இது ஒரு முன்மாதிரி அல்ல. சமூகத் தலைவர்கள் இந்த பணியில் சுகாதார ஊழியர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா திருநாவற்குளத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது : கிராமத்தில் இருந்து வெளியேறத் தடை!!

திருநாவற்குளம்..

வவுனியா, திருநாவற்குளத்தின் பாதுகாப்பானது இன்று (29.05) மாலை முதல் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கிராமத்தில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருநாவற்குளம் கிராமத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், 12 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் 14 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கிராமத்தில் கொரோனா பரம்பலைக் கட்டுப்படுத்தும் வகையில் கிராமத்திற்கான நுழைவாயில் மற்றும் கிராமத்தில் இருந்து வெளியேறும் ஒழுங்கைகள் என்பவற்றில் இராணுவத்தினரும், பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிராமத்திற்குள் நடமாட்டதை கட்டுப்படுத்தி கொரோனா பரம்பலை தடுப்பதற்காகவே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு கடமையில் இருக்கும் பொலிசார் தெரிவித்துளளனர்.

வவுனியா திருநாவற்குளத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று : கடுமையாக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு!!

திருநாவற்குளம் பகுதியில்…

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் கொரோனா தொற்று காரணமாக பெண் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தார். இதனையடுத்து அவருடன் தொடர்புகளை பேணிய பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததுடன், இன்றையதினம் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை இன்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இதேவேளை நாடளாவிய ரீதியாக பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருநாவற்குளம் பகுதியில் அநாவசியமான முறையில் பொதுமக்கள் வெளியில் திரிவதாக சுகாதார தரப்பிற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.

இதனையடுத்து இன்று மாலை குறித்த பகுதிக்குச் சென்ற வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி யூட்பீரிஸ் தலைமையிலான குழுவினர் நிலமை தொடர்பாக ஆராய்ந்ததுடன், கிராமத்திற்குள் உட்பிரவேசிக்கும் முக்கியவாயில்களில் பொலிசாரையும், இராணுவத்தினரையும் கடமையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

அத்தியவசிய தேவையை தவிர்ந்த ஏனையவர்கள் கிராமத்திற்குள் செல்வதற்கும், கிராமத்தில் இருந்து வெளிச்செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பயணக்கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

பயணக்கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு…

வவுனியாவில் பயணக்கட்டுப்பாடுகளை மீறி வீதியில் நடமாடுவோருக்கு எதிராக பொலிஸார் முறைப்பாடுகளை பதிவு செய்து அவர்களைத் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி அத்தியாவசிய தேவையின்றி வீதிகளில் நடமாடுவோரைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வவுனியா பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா நகரின் முக்கிய பகுதிகளில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் அத்தியாவசிய தேவையின்றி நகருக்குள் பிரவேசிப்போர், வீதிகளில் நடமாடுவோர் ஆகியோரை மறித்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுவதுடன், அவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளையும் பதிவு செய்து அவர்களைத் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதன் காரணமாக வவுனியாவில் மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு நகரம் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

வவுனியாவில் வர்த்தகர்கள் மற்றும் மரக்கறி விற்பனையாளர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை!!

அன்டிஜன் பரிசோதனை…

வவுனியாவில் பயணத்தடை காலத்தில் அத்தியாவசிய பொருட்களை வழங்க அனுமதியளிக்கப்பட்ட வர்த்தகர்கள், மரக்கறி விற்பனையாளர்கள் மற்றும் வாகன சாரதிகளுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று காலை (29.05) சுகாதார பிரிவினரால் இப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

கொவிட் 19 இன் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே வழங்க கிராம மட்டத்தில் இருந்து நகரம் வரை சில வர்த்தக நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களைச் சேர்ந்தோர், மரக்கறி விற்பனையாளர்கள், அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் சாரதிகள் ஆகியோருக்கு கொவிட் தொற்று தொடர்பான அன்டிஜன் பரிசோதனையே இவ்வாறு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!!

திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி…

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த யாழ்.பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் ஒருவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியை சேர்ந்த திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்த விரிவுரையாளரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து விரிவுரையாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் அவர், யாழ்.போதனா வைத்தியசாலையிலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ச்சியாக சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரின் உடலை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஜுன் 8ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுகிறதா? வெளியான தகவல்!!

பயணக்கட்டுப்பாடு..

ஜூன் 7ம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது மக்களின் நடத்தையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை பொது மக்கள் கடைப்பிடித்து, பொறுப்புடன் நடந்து கொண்டால், ஜூன் 8 ஆம் திகதி கட்டுப்பாடுகளை நீக்க முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். ஜூன் 7 ஆம் திகதி வரை பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா திருநாவற்குளத்தில் 9 பேர் உட்பட 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியா திருநாவற்குளத்தில் 9 பேர் உட்பட 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (28.05) இரவு வெளியாகின.

அதில், வவுனியா திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த ஒன்பது பேருக்கும், சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், இராசேந்திரன்குளம் ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த இரண்டு பேருக்கும்,

தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், சூசைப்பிள்ளையார் குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், கோயில்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும்,

உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், குட்செட் வீதியைச் சேர்ந்த ஒருவருக்கும், செட்டிகுளம் பகுதியில் ஒருவருக்கும், பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் கொரோனா தாக்கத்தின் மூன்றாம் அலை காரணமாக ஒருவரர் ஏற்கனவே மரணமடைந்துள்ளதுடன், தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.