வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணம்!!

கொரோனா..

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வயதான நபர் ஒருவர் கொரோனா தொற்றால் இன்று(29.05.2021) மரணமடைந்துள்ளார்.

மகாறம்பைக்குளம் ஶ்ரீராமபுரத்தை சேர்ந்த குறித்த நபர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பாதித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் மரணமடைந்துள்ளார்.

மணமேடையில் மயங்கி விழுந்து மணமகள் திடீர் மரணம் : தங்கைக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!!

உத்தரப்பிரதேசத்தில்..

உத்தரப்பிரதேசத்தில் மணமேடையில் மயக்கம் ஏற்பட்டு மணமகள் உயிரிழக்க, அவரது தங்கைக்கு மணமகன் தாலிகட்டிய சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் எடவாஹ் மாவட்டத்தில், எடவாஹ் மாவட்டம் சமஸ்பூர் பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மணமேடைக்கு மணமக்கள் இருவரும் வந்து மாலைகளை மாற்றி,

திருமணச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென மணமகள் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவர் வரவழைக்கப்பட்டு சோதனை செய்த போது, மணமகள் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், ஒருகட்டத்தில் மனதை தேற்றிக் கொண்டு மணமகளின் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். இதனைதொடர்ந்து மணமகளின் உடல் ஒரு அறையில் வைத்துவிட்டு, மற்றொரு அறையில் திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.

ஒரு அறையில் மகள் பிணமாகவும், மற்றொரு அறையில் மகள் மணமகளாகவும் இருப்பதை கண்டு பெற்றோர் கதறி துடித்த காட்சியால் உறவினர்கள் கலக்கமடைந்தனர்.

மகளை திருமணம் செய்து வைப்பதாக அழைத்துச் சென்று தந்தை செய்த கொ.டூரம் : கதறும் உறவினர்கள்!!

இந்தியாவில்..

இந்தியாவில் மகள் காதலித்த இளைஞரை திருமணம் செய்து வைப்பதாக கூறி, தந்தை அவரை தனியாக அழைத்துச் சென்று, வெ.ட்.டி பு.தை.த்.த சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பலமனேர் பகுதியை சேர்ந்த பெங்கரகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர். இவர் பெங்களூரில் வேலை செய்து வரும் நிலையில், சைலஜா என்ற இளம் பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

சைலஜா பெங்கரகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் தான், இவரும் பெங்களூருவில் வேலை செய்து வந்துள்ளார் இந்நிலையில் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக தனசேகர் பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

மகளின் காதலை விரும்பாத சைலஜாவின் தந்தை பாபு திருமணம் தொடர்பாக பேசலாம் என்று மகள் செல்போனில் இருந்து தனசேகரை கடந்த சனிக்கிழமை அழைத்துள்ளார்.

பேசுவதற்காக சென்ற தனசேகரை சைலஜாவின் தந்தை தன்னுடைய தோட்டத்திற்கு அழைத்து சென்று து.ண்.டு து.ண்.டா.க வெ.ட்.டி கொ.லை செ.ய்.து அங்கேயே பு.தை.த்.து.ள்.ளா.ர்.

மகனை கா.ணாமல் தே.டி.ய தனசேகரின் பெற்றோர் பலமனேர் காவல் நிலையத்தில் பு.கா.ர் தெரிவித்துள்ளனர். பொலிசார் கடந்த நான்கு நாட்களாக தே.டி வந்த நிலையில், அவருக்கு இறுதியாக வந்த செல்போன் அழைப்பு அடிப்படையில் வி.சாரணை நடத்தி வந்தனர்.

அப்போது கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் பாபுவின் தோட்டத்தில் இருந்து தனசேகர் உ.ட.லை இன்று தோ.ண்.டி எ.டுத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் த.லை.ம.றை.வா.க இருக்கும் சைலஜாவின் தந்தை பாபுவை தீ.விரமாக தே.டி வருகின்றனர்.

கணவனை பழிவாங்குவதற்கு மனைவி செய்த விபரீத செயல் : அதிர்ச்சியில் உறைந்து போன கணவன்!!

இந்தியாவில்…

இந்தியாவில் கணவனை பழிவாங்குவதற்காக, மனைவி அவருடைய ஆ.பா.ச பு.கைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 29 வயது இளம் பெண், 30 வயது மதிக்கத்தக்க நபரை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி பி.ரச்சனை ஏற்பட்டதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இருப்பினும், கணவன் மீது கடும் கோ.பத்தில் இருந்த அப்பெண், அவரை ப.ழிவாங்க திட்டம் தீட்டியுள்ளார். அதன் படி சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கணவரின் பெயரில் பல கணக்குகளை ஆரம்பித்துள்ளார்.

அதன் பின், அதில் கணவனின் ஆ.பா.ச பு.கைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார். திருமணம் ஆன புதிதில், கணவனுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அவர் மட்டும் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதைக் கண்டு அ.திர்ச்சியடைந்த கணவன் உடனடியாக இது குறித்து சைபர் கி.ரை.ம் பொலிசில் பு.கா.ர் தெரிவித்துள்ளார். அதன் பின் பொலிசார் தீவிர வி.சாரணை மேற்கொண்டு, அவரைக் கண்டுபிடித்து கைது செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருவரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பொலிசார் அவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிடவில்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

பல பெண்கள் வாழ்க்கையில் விளையாடிய பாபா : வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்!!

பாபா..

இந்தியாவில் கடவுளின் பிரசாதம் என்று கூறி, க.ஞ்.சா.வை கலந்த இனிப்பை கொடுத்து பல பெண்களை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.த பாபாவை பொலிசார் கை.து செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த பங்கரோட்டா பகுதியில் முகுந்த்புரா என்ற ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்திற்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்வது வழக்கம்.

பாபா சந்நியாசி என்பவரால் தொடங்கப்பட்ட இந்த ஆசிரமம், தற்போது அவரது மகன் யோகேந்திர மேத்தாவால் (56) நடத்தப்பட்டு வருகிறது.

முகுந்த்புராவைத் தவிர, யோகேந்திர மேத்தாவின் ஆசிரமம் ஒன்று ரத்தல்யா சிகார்-டெல்லி சாலையிலும் உள்ளது. யோகேந்திர மேத்தா தன்னை பாபா சந்நியாசி என்று அழைத்துக் கொண்டு அப்பகுதியில் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில், பாபா சந்நியாசி யோகேந்திர மேத்தா மீது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பு.கா.ர் கொடுத்துள்ளார். இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து ஜெய்ப்பூர் பொலிசார் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளாக பெண் ஒருவர் தன் குடும்பத்துடன் முகுந்த்புரா ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கு கடவுளின் பிரசாதம் எனக்கூறி கஞ்சா கலந்த இனிப்புகளை யோகேந்திர மேத்தா கொடுத்து பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து.ள்.ளா.ர்.

பல முறை இப்படி நடந்துள்ளதால், பா.திக்கப்பட்ட பெண் அவர் மீது புகார் அளித்தார். அந்த புகாரில், என் கணவர் மற்றும் குடும்பத்தினர் அ.டிக்கடி பாபா கோயிலுக்கு சென்று வருவோம். பாபா அவ்வப்போது ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவார். 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரமத்திற்கு சென்று வருவோம்.

அப்போது, 4 நாட்கள் வரை ஆசிரமத்திலேயே தங்கி பக்தர்களுக்கு சேவை செய்வோம். ஆரம்பத்தில் ஆசிரமத்தில் எல்லாம் சரியாகதான் சென்றது. கொஞ்ச நாட்களுக்கு பின் பாபா மூலமாக எனக்கு பா.லி.ய.ல் தொ.ந்.த.ர.வு.க.ள் தொடங்கின.

தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை பாபாவின் ஆசிரமத்தில் பெண்கள் தங்கியிருக்க அனுமதி அளித்தார். நானும் என்னுடன் சேர்ந்த சில பெண்களும் தங்கினோம். ஒரு நாள் இரவு, என்னிடம் பேசிய பாபா அவர் தங்கியிருக்கும் மேல் மாடிக்கு வரச் சொன்னார்.

கடவுளுக்கு படைக்கப்படும் பிரசாதம் வழங்குவதாக தெரிவித்தார். அந்த பிரசாதத்தை சாப்பிட்டு கடவுளை தியானித்தால், நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கூறினார். அதுமட்டுமின்றி அவர் நானே கடவுள் என்றும் கூறினார்.

அங்கு அவர் வைத்திருந்த இனிப்பு பிரசாதத்தை கொடுத்தார். அதனை சாப்பிட்டவுடன் எனக்கு கொஞ்சம் போ.தை ஏ.ற ஆரம்பித்தது.

பின்னர் அவர் என்னை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.தா.ர். போ.தை ம.ய.க்.க.ம். தெளிந்த பின்னர், என்னை அங்கிருந்து விடுவித்தார்.

அன்றிலிருந்து நான் ஆசிரமத்திற்கு செல்லவில்லை. என் கணவரின் விருப்பத்தின் பேரில் 6 மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் ஆசிரமத்திற்கு குடும்பத்துடன் சென்றேன்.

அப்போது என்னை அழைத்த பாபா, மீண்டும் எனக்கு பிரசாதம் தருவதாக கூறினார். அதற்கு நான் ம.றுத்தவுடன், ஆட்களை ஏவி கொ.லை செ.ய்.வ.தா.க அ.ச்.சு.று.த்.தி.னா.ர். இதனால் வேறு என்ன செய்வது என்று தெரியாமல் கணவர் மற்றும் மகளிடம் கூறினேன்.

அவர்கள் உடனடியாக இது குறித்து நியாயம் கேட்பதற்காக, ஆசிரமத்திற்கு சென்றனர். அப்போது, அங்கிருந்த பாபாவின் ஆட்கள், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் குடும்பத்துடன் காலி செய்துவிடுவோம் என்று மி.ர.ட்.டி.ன.ர்.

என்னை போல், மேலும் 4 பெண்கள் பாபாவால் பா.திக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பு.காரின் அடிப்படையில் பொலிசார் கடந்த 5-ஆம் திகதி வழக்கு பதிவு செய்து வி.சாரணை மேற்கொண்டனர்.

த.லை.ம.றை.வா.க இருந்த பாபாவை கை.து செய்த பொலிசார் அவரிடம் தொடர்ந்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், பெண் ஒருவர் பாபாவால் நானும் பா.லி.ய.ல் து.ன்.பு.று.த்.த.லு.க்.கு ஆளானதாக பு.கா.ர் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருவை கலைக்க வைத்து அ.டித்து து.ன்.புறுத்தினார் : முன்னாள் அமைச்சர் மீது நடிகை பரபரப்பு புகார்!!

சாந்தினி தேவா..

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நாடோடிகள் திரைப்பட நடிகை சாந்தினி தேவா புகார் அளித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான மணிகண்டன் மீதே நடிகை புகார் அளித்துள்ளார்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் சாந்தினி அளித்த புகாரில், தன்னுடன் 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் மணிகண்டன் ஏ.மாற்றுகிறார், கருவை க.லைக்க வைத்து அ.டி.த்.து து.ன்.பு.றுத்தினார்.

அத்துடன் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டால், அ.ந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மி.ர.ட்டுகிறார்.

கூ.லிப்படையை வைத்து கொ.லை செ.ய்.து.விடுவதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மி.ர.ட்டுகிறார் என்று நடிகை சாந்தினி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பை அண்டிய கரையோர மற்றும் கடற்பரப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள ஆபத்து!!

கடற்பரப்பு…

இலங்கையின் மேற்கு மாகாண கரையோர பகுதிகள் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் மூடப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பற்றி எரிந்த கப்பலில் இருந்த இரசாயன பொருட்கள் கடலில் கலந்துள்ளதால், அது கடல் சுற்றுச்சூழல் பேரழிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையொதுங்கியுள்ள இந்த பிளாஸ்டிக் காரணமாக எதிர்வரும் நாட்களில் இலங்கையின் மேற்கு பிரதேசம் மற்றும் இந்தியாவின் தென் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

அத்துடன் இந்த பிளாஸ்டிக் துகள்கள் காரணமாக, அனைத்து கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடலில் காணப்படும் இந்த கழிவுகளை அகற்றுவது மிகவும் சிரமமானது எனவும் அவை கடற்கரை, கடல் மற்றும் கற்பாறைகளில் படியலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

விஷம் மற்றும் இரசாயனம் கலந்துள்ளதாக தெரிவிக்கப்படும் இந்த பிளாஸ்டிக் மிகவும் ஆபத்தானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!!

தொற்று நீக்கும் செயற்பாடு..

வவுனியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று (28.05) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிசார் சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 8 பொலிசார் இரு தினங்களில் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில், பொலிஸ் நிலையத்தின் அனைத்து பிரிவுகளிலும், பொலிஸ் விடுதிகளிலும் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா நகரசபை தவிசாளரின் ஆலோசனைக்கமைய நகரசபை பொது முகாமைத்துவ உதவியாளர் துரைராஜா சபேசன் தலைமையில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றத்தடுப்பு பிரிவு,

குற்றத்தடுப்பு பிரிவு, சிறுவர் பெண்கள் பிரிவு, சமூக நல்லுறவுப் பிரிவு, ம.து ஒழிப்பு பிரிவு, போக்குவரத்துப் பிரிவு, கேட்போர் கூடம், பொலிஸ் பொறுப்பதிகாரி அலுவலகம், பொலிஸ் சிறைக் கூடம்,

பொலிஸ் வாளாகம், பொலிசாரின் வாகனங்கள் என்பவற்றுக்கு தொற்று நீக்கும் மருந்துகள் விசிறப்பட்டு தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

31ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட மாட்டாது : 7ம் திகதிவரை நீடிப்பு : இராணுவ தளபதி அறிவிப்பு!!

பயணக்கட்டுப்பாடு..

தற்போது அமுலில் உள்ள பயண கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் கொவிட் தடுப்பு தேசிய செயலணி உறுப்பினர்களும் இடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 4 ஆம்திகதிகளில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படாமல், தொடர்ந்தும் ஜூன் 7 ஆம்திகதிவரை நீடிக்கும் என இராணுவ தளபதி தெரிவித்தார்.

நடமாட்டக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் மாவட்ட அரசாங்க அதிபர்களின் ஏற்பாட்டில் வாகனங்கள் ஊடாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வங்கிகளில் கடன் பெற்றோருக்கு மகிழ்ச்சியான செய்தி : இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு…

நாட்டில் கோவிட் வைரஸ் பரவல் அபாயத்தால் உருவாகியிருக்கும் பயணத்தடை காரணமாக வங்கிக் கடன்களை மீள செலுத்துவதற்கு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரையான நிவாரண காலத்தை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

சகல அங்கிகாரம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகளுக்கு இது தொடர்பான அறிவித்தலை இலங்கை மத்திய வெளியிட்டுள்ளது. மே 15 வரை செயலிலுள்ள, செயலில் இல்லாத சகல கடன் வசதிகளுக்கும் ஆகஸ்ட் 31 வரை மீளச் செலுத்தும் நிவாரண காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிவாரண காலப்பகுதிக்கு அறவிடப்படும் வருட வட்டி 6.18% என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையினூடாக ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை நிலுவைக் காலம் நீடிக்கப்படும் வசதிகளில் தொழிற்படு மூலதனம், அடகு, தற்காலிக மேலதிகப் பற்றுகள், குறுங்கால நிதி வசதிகள் போன்றனவும் அடக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மே 15 முதல் ஆகஸ்ட் 31 வரையான நிவாரண காலப்பகுதிக்கு தண்ட வட்டி அறவீடு மேற்கொள்ளப்படக் கூடாது என சுட்டடிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிவாரண வசதியை வழங்குவதற்காக வங்கிகளால் மேலதிக கட்டணங்களை அறவிட முடியாது.

மேலும் ரூ.500,000க்கு குறைந்த பெறுமதியான காசோலைகளின் செல்லுபடியாகும் காலம் ஜுன் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடன் அட்டைகள் மற்றும் இதர கடன் வசதிகள் மீதான காலம் தாழ்த்திய கொடுப்பனவு கட்டணத்தை,

ஜுன் 30ஆம் திகதி வரை அறவிடுவதை நிறுத்துவதுடன், முற்கூட்டியே செலுத்தி தீர்ப்பதற்கான கட்டண அறவீட்டை தவிர்க்குமாறும் மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் தமிழ் வைத்தியரின் நெகிழ்ச்சியான செயல் : தென்னிலங்கை மக்களின் பாராட்டு!!

வைத்தியர் மலரவன்..

வெசாக் காலப்பகுதியை முன்னிட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் விசேட கண் வைத்தியர் எம்.மலரவன் விசேட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

பல்வேறு கண் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மிகவும் ஏழ்மையான 2000 பேருக்கு கண் சத்திர சிகிச்சை செய்யும் புண்ணிய செயல் அவர் ஆரம்பித்துள்ளார்.

தென்னிலங்கை மக்களுக்கு மிகவும் பிடித்த மற்றும் நெருக்கமான தமிழ் வைத்தியராக மலரவன் உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாண வைத்தியசாலையில் ஒவ்வொரு வருடமும் வெசாக் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கும் வைத்தியர் மலரவன் தவற மாட்டார் என குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இம்முறை வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது முழுமையான நேரத்தையும் பல்வேறு கண் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 2000 நோயாளிகளுக்கு இலவசமாக சத்திரசிக்சை செய்யப்படவுள்ளது.

சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் அதிகமானோர் தெற்கில் விவசாயம் செய்து வாழும் சிங்கள விவசாயிகள் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொது மக்களுக்கு அடுத்த வாரம் முதல் மீண்டும் 5000 ரூபாய் கொடுப்பனவு!!

5000 ரூபாய்..

எதிர்வரும் வாரம் முதல் 5000 ரூபாய் கொடுப்பனவை மீண்டும் வழங்குவதற்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நிரந்தர வருமானம் இன்றி நாளாந்த வருமானத்தை பெறும் மக்களுக்கு இந்த கொடுப்பனவு மீண்டும் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கோவிட் பரவலின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு நாடு முழுவதும் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையினால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இம்முறை இந்த கொடுப்பனவு எவ்வளவு மக்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அமைச்சரவை மற்றும் உரிய பிரிவுகள் ஒன்றுக்கூடி இது தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளும்.

இந்த கொடுப்பனவினை எதிர்வரும் வாரத்திற்குள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையில் பயணத்தடை தொடர்பில் புதிய மாற்றங்களுடன் இன்று முக்கிய அறிவிப்பு!!

பயணத்தடை..

கொரோனா பரவல் நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடு முறைமையில் புதிய மாற்றங்களை அரசு இன்று அறிவிக்கவுள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் கோவிட் தடுப்புச் செயலணியின் விசேட கூட்டமொன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் பின்னர் விசேட அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. இப்போதுள்ள பயணத்தடை நிறைவடையவுள்ள திகதிகளில் மாற்றங்கள் செய்யப்படலாமென சொல்லப்பட்டது.

ஏற்கனவே கடந்த 25ஆம் திகதி பயணத்தடையில் தளர்வு கடைப்பிடிக்கப்பட்ட போது மக்கள் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டதால் இனி மக்கள் பாதிக்காத ஏற்பாடுகளை செய்து தொடர் பயணத்தடையை அமுல்படுத்த அரச மேல்மட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது.

வவுனியாவில் முகக்கவசம் அணியாதவருடன் தொடர்பை பேணிய 5பேர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா…

வவுனியாவில் முககவசம் அணியாத நிலையில் கைது செய்யப்பட்டு தொற்றாளராக இனங்காணப்பட்டவருடன் தொடர்பை பேணிய 5 பேர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (27.05) இரவு வெளியாகின.

அதில் பயணக்கட்டுப்பாடு தளர்வின் போது வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சீராக முககவசம் அணியாமையால் கைது செய்யப்பட்ட நிலையில்,

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பை பேணிய குறித்த வர்த்தக நிலையத்தை சேர்ந்த 5 பேருக்கும், நந்திமித்திரகம பகுதியில் ஒருவருக்கும், இறம்பைக்குளம் ராணிமில் வீதியில் ஒருவருக்கும், வவுனியா சிறைச்சாலை கைதிகள் இருவருக்கும்,

வவுனியா பொலிசார் ஒருவருக்கும், கோவில்புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் ஒருவருக்கும், சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும், இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள வத்தக நிலையம் ஒன்றில் ஒருவருக்கும் என 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை பயணக்கட்டுப்பாடு தளர்வின் போது முககவசம் சீராக அணியாத நிலையில் ஹொரவப்பொத்தானை வீதியில் இஸ்லாமிய கலாசார மண்டபம் முன்பாகவுள்ள பல்பொருள் வியாபார நிலையத்தில் கடமையாற்றிய போது கைது செய்யப்பட்டவருடன் தொடர்புடைய 7 பேர் இதுவரை தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் கொரோனா தொற்றால் ஐந்து வயது சிறுமி உயிரிழப்பு!!

யாழில்..

யாழ்.போதனா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி கடந்த 26ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமியின் பிரேத பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்கு,எம்.ஜே.ஜா மன்னபுரி சாலை பகுதியை சேர்ந்த 5 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இளம் பிரித்தானிய மொடல் : கோமா நிலைக்கு சென்று மரணம்!!

இளம் மொடல்…

பிரித்தானிய இளம் மொடல் ஒருவர், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டதைத் தொடர்ந்து மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு உ.யிரிழந்துள்ளார்.

பிரித்தானிய மொடலான Stephanie Dubois (39), சைப்ரஸ் தீவில் வாழ்ந்துவந்தார். இம்மாதம் (மே மாதம்) 6ஆம் திகதி Stephanie ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட Stephanie, மே 14ஆம் திகதி, உடல் முழுவதும் நடுங்குவதாகவும், மூட்டுக்களை அசைக்கமுடியவில்லை என்றும், தலை சுற்றல் இருப்பதாகவும், தலை வலி இருப்பதாகவும், மூச்சுவிட கஷ்டமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஒருவேளை தனக்கு கொரோனா தொற்றியிருக்குமோ என்று எண்ணி, கொரோனா பரிசோதனை செய்தபோது, பரிசோதனை முடிவுகள் அவருக்கு கொரோனா இல்லை என்றே கூறின.

பின்னர், மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு கோமாவுக்குச் சென்ற Stephanie, கடந்த சனிக்கிழமை உயிரிழந்துவிட்டார். இளம் மொடலான Stephanieயின் திடீர் மரணத்தால் அவரது நண்பர்கள், சக மொடல்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இத்ற்கிடையில், Stephanieயின் உயிரிழப்புக்குக் காரணம் ஆஸ்ட்ராசெனகா தடுப்புசிதானா என்பதைக் கண்டறிய சைப்ரஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளனர்.