சமூக ஊடகங்களில் அவதூறு செய்வோரை தண்டிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து கவனம்!!

சமூக ஊடகங்களில்..

சமூக ஊடகங்களில் அவதூறு பிரச்சாரம் செய்வோரை தண்டிக்கும் வகையில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நபர்களின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையிலான சமூக ஊடகப் பிரச்சாரங்களை குற்றச்செயலாக கருதி தண்டிக்கும் சட்டங்களை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்படுகின்றதாக தெரியவருகிறது.

நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு செய்வது உள்ளிட்ட மனித ஆளுமைகளை களங்கப்படுத்தும் செயற்பாடுகளை குற்றச் செயலாக அறிவிக்கும் சட்டத்திருத்தம் செய்யப்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தை நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் பியூமன்தி பீரிஸ் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்து சமூக ஊடகங்களில் அவதூறு பிரச்சாரம் செய்வோரை தண்டிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மனித கௌரவத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட நபர்கள் சமூக ஊடங்களில் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பிலா அல்லது திட்டமிட்ட வகையில் வேண்டுமென்றே அவதூறு பிரச்சாரம் செய்வோரா இதில் தண்டிக்கப்படுவார்கள் என்பது குறித்து இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

இணையத்தில் அவதூறு பிரச்சாரங்களை தடுப்பதற்கு தற்பொழுது குற்றவியல் விசாரணைப் பிரிவும், கணனி அவசர பதிலளிப்பு பிரிவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டை சோதனையிட்ட போது சிக்கிய பெண் : கணவர் தப்பியோட்டம்!!

திருகோணமலை..

திருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் கேரள க.ஞ்.சா மற்றும் ஹெ.ரோ.யி.ன் போ.தை.ப்.பொ.ரு.ளு.ட.ன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த சந்திரலால் தலைமையில் சென்ற குழுவினர் விசேட சோ.தனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அவரது வீட்டைச் சோ.தனையிட்ட போது பொதி செய்யப்பட்ட நிலையில் இருந்த 23 க.ஞ்.சா பொ.தி.க.ள் கை.ப்.ப.ற்றப்பட்டுள்ளன. அத்துடன் பொதி செய்வதற்காகப் பயன்படுத்தும் உபகரணம் உள்ளிட்ட பொருட்களையும் பொலிஸார் கை.ப்.பற்றியுள்ளனர்.

இதேவேளை 2.98 கிராம் ஹெ.ரோ.யி.ன் போ.தை.ப்.பொ.ரு.ளு.ம் மீ.ட்.க.ப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த ஜமால்தீன் சுமைரா (31வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், கணவர் பொலிஸாரை கண்டதும் த.ப்.பி.ச் சென்றுள்ள நிலையில் அவருடைய மோட்டார் சைக்கிள் ப.றிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், த.ப்பிச் சென்றவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட பெண்ணை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த பெண் தொடர்பில் ஏற்கனவே திருகோணமலை நீதிமன்றில் போ.தை.ப்.பொ.ரு.ள் வழக்குகள் இடம்பெற்று வருவதாகவும், ஏற்கனவே இப்பெண்ணுக்கு முன் கு.ற்றங்கள் இருப்பதால் வி.சாரணைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக மொரவெவ பொலிஸார் கூறியுள்ளனர்.

கொழும்பில் கோர விபத்து : இரண்டு இளைஞர்கள் பலி!!

விபத்து..

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டி, பொல்வத்தை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவத்துகொடையில் இருந்து வந்த மோட்டார் வாகனம் ஒன்று பொல்கட்டுவ வீதியில் திருப்ப முயற்சித்த போது பன்னிப்பிட்டிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.

குறித்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றைய இளைஞர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் யட்டின்தோட்டை, மலல்கொட பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய கசுன் பண்டார மற்றும் மீகொட பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய பிரபோத மதுஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியாவிற்கு வருகைதரும் ஜனாதிபதி : விசேட ஏற்பாடுகள் : களத்தில் அதிகாரிகளும், படைத்தரப்பும்!!

ஜனாதிபதி வவுனியா வருகை..

ஜனாதிபதியின் வவுனியா வருகையை முன்னிட்டு கலாபோகஸ்வெவ பகுதியில் பல்வேறு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ வடக்கு மாகாணத்திற்கான முதல் விஜயமாக வவுனியா சிங்கள குடியேற்ற கிராமமான கலாபோகஸ்வெவ பகுதிக்கு நாளை (03.04) விஜயம் செய்யவுள்ளார்.

கிராமத்துடன் உரையாடல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் கலாபோகஸ்வெவ பகுதிக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களின் குறைநிறைகள் தொடர்பாக கேட்டறியவுள்ளதுடன், பல்வேறு கிராமிய அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தவுள்ளார்.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கலாபோகஸ்வெவ பாடசாலை முழுமையாக சிரமதானம் செய்யப்பட்டு பிரமாண்டமான கொட்டகை அமைக்கப்பட்டு அப்பகுதி வீதிகளும் அவசர அவசரமாக செப்பனிடப்பட்டு வருகிறது.

மாவட்ட அரச அதிபர், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், வவுனியா வடக்கு மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மின்சார சபையினர்,

சுகாதார பரிசோதகர்கள் ஆகியோரும் விடுமுறையையும் பொருட்படுத்தாது நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். அத்துடன் குறித்த பகுதியின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் கிராம அலுவலரின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி வீட்டுத்திட்ட பயனாளிகளிடம் பணம்பெற முயற்சி!!

வவுனியா, பண்டாரிக்குளம் கிராம அலுவலரின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி அப் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டுத்திட்ட பயனாளிகளிடம் பணம் கோரியுள்ளதுடன்,

ஒருவருடன் தவறான முறையிலும் உரையாடியுள்ளதாக கிராம அபிவிருத்தி சங்க கூட்டத்தில் இன்று (02.04) பாதிக்கப்பட்டவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, பண்டாரிக்குளம், உக்குளாங்குளம் பகுதியை உள்ளடக்கிய பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் பிரதேச செயலகம் ஊடாக சிலருக்கு வீட்டுத் திட்டம் வழங்கப்படவுள்ளது.

அதற்கான பெயர் விபரங்கள் கிராம அலுவலர் ஊடாக பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிடமும் கிராம அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதியைச் சேர்ந்த நபரொருவர் கிராம அலுவலருக்கு தெரியாது வீட்டுதிட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளை தொடர்பு கொண்டு 25,000 ரூபாய் மற்றும் 50,000 ரூபாய் என பணம் கோரியுள்ளதுடன்,

அவ்வாறு பணம் தரும் பட்சத்தில் உங்களுடைய வீட்டுத்திட்டத்தை முன்னுரிமைப்படுத்தி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். வீட்டுத்திட்ட இடத்தையும் தான் பார்வையிட்டு சிபார்சு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒரு வீட்டில் வீட்டுத்திட்ட பயனாளியான பெண் ஒருவர் தனிமையில் குளித்துக்கொண்டு நின்ற போது அங்கு சென்று வீட்டுதிட்ட காணியைப் பார்க்க வந்ததாக தெரிவித்து, அவருடன் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கிராம அலுவலரின் கவனத்திற்கும், கிராம அபிவிருத்திச் சங்கம், கிராமிய சிவில் பாதுகாப்பு குழு என்பவற்றின் கவனத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் கொண்டு வந்துள்ள நிலையில், இது தொடர்பில் அப்பகுதி பொது அமைப்புக்கள் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளன.

வவுனியா வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மாணவிக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

யாழ் பல்கலைகழகத்தின் வவுனியா வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, பம்மைமடுவில் உள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் கல்வி கற்கும் மாணவிகள் சிலர் கண்டியில் உள்ள தமது வீட்டிற்கு சென்று வந்திருந்த நிலையில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்த பல்கலைக்கழ மாணவிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று இரவு (01.04) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுததவும், குறித்த மாணவியை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வயிற்றில் குழந்தை இருப்பது தெரிந்ததும் காதலனின் திடீர் முடிவு : காதலி எடுத்த அ.திர்ச்சி முடிவு!!

ஐஸ்வரியா..

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் 20 வயதேயான கர்ப்பிணி ஒருவர் கடிதம் எழுதி வைத்து தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம், குடும்பத்தாரை மொத்தமாக உ.லுக்கியுள்ளது.

ஐதராபாத் நகரின் மீர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வரியா. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தொடர்ந்து செயற்பாட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் 21 வயதேயான மாரெட்டி ஆஷிர் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் கிடைத்தது. மிக குறைந்த நாட்களிலேயே இருவரும் நண்பர்களானதுடன், அது பின்னர் காதலாக மாறியது.

இதனையடுத்து பிப்ரவரி 20ம் திகதி பெற்றோரின் ஒப்புதல் இன்றி ரகசியமாக கோவிலில் வைத்து ஐஸ்வரியா மற்றும் ஆஷிர் ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளது.

பின்னர் வாடகை அறை ஒன்றில் இருவரும் சில நாட்கள் குடும்பம் நடத்தியுள்ளனர். இந்த நிலையில், ஐஸ்வரியா திருமணம் செய்து கொண்ட தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஐஸ்வரியாவை நேரில் சந்தித்து, எச்சரித்ததுடன், முதலில் இருவரையும் வாழ்க்கைக்கு தேவையான பொருளீட்டும் படி கேட்டுள்ளனர். மேலும் ஐஸ்வரியாவை தங்கள் குடியிருப்புக்கே அழைத்து சென்றுள்ளனர் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்.

தமது விருப்பத்திற்கு எதிராக குடும்பத்தினர் செயல்படுவதாக கருதிய ஐஸ்வரியா, இனி மேலும் தமது கணவர் ஆஷிருடன் வாழ முடியாமல் போகலாம் என எண்ணியுள்ளார்.

இந்த விவகாரங்களால் மனமுடைந்த ஐஸ்வரியா ஒருகட்டத்தில் மீண்டும் வீட்டைவிட்டு வெளியேறி தமது நெருங்கிய நண்பர்கள் சிலருடன் பஞ்சிரா ஹில்ஸ் பகுதியில் குடியிருந்து வந்துள்ளார்.

இந்த தகவல் தெரியவந்த ஆஷிர் மீண்டும் ஐஸ்வரியாவை சந்தித்ததுடன், அவர்கள் நெருக்கமாக பழகத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தாம் கர்ப்பமானதை அறிந்த ஐஸ்வரியா அந்த தகவலை கணவர் ஆஷிருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

ஆனால், இது சரியான தருணம் அல்ல என்பதையும், கருவை கலைப்பதே தற்போதைய சூழலில் சரியான முடிவு எனவும் ஆஷிர் தமது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

கணவரின் முடிவை ஏற்க மறுத்த ஐஸ்வரியா, நேரடியாக ஆஷிரின் தாயாரை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே முறைப்படி இருவருக்கும் திருமணம் செய்து தர இருப்பதாகவும், தற்போது கருவை கலைத்து விடவும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ஆஷிர் மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த முடிவால், தாம் ஏமாற்றப்பட்டதாக கருதிய ஐஸ்வரியா, நேரடியாக ஹாஸ்டலுக்கு சென்று, கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார்.

கணவர் ஆஷிரால் தாம் ஏ.மாற்றப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் தாம் எந்த பிழையும் செய்துவிடவில்லை எனவும் ஐஸ்வரியா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வ.ழக்குப் பதிந்துள்ளதுடன், இளம் வயது க.ர்ப்பிணி த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதன் உண்மையான காரணம் தொடர்பில் விசாரித்து வருகின்றனர்.

வவுனியா உட்பட நாட்டு மக்களுக்கு காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

காலநிலை..

நாட்டின் பல பகுதிகளில் மிகவும் வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய நாளைய தினம் பல மாவட்டங்களில் அதீத வெப்பத்தால் மக்கள் பாதிக்கப்படலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, அநுராதபுரம், புத்தளம், குருணாகல், மாத்தளை, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, பதுளை, காலி, மாத்தறை, பொலநறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களில் அதிக அளவு வெப்பமான காலநிலை நிலவும்.

இந்த காலநிலை உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளபபட்டுள்ளது.

நாளையதினம் அதிகமாக நீர் அருந்துமாறும், நிழல் உள்ள இடங்களில் முடிந்த அளவு ஓய்வு எடுக்குமாறும் மக்களிடம் கோரப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும்.

சிறுபிள்ளைகளை தனியாக வாகனங்களில் விட்டு செல்ல வேண்டாம். அதிகமாக வெளியிடங்களில் கடினமான சேவை செய்வதனை தவிர்க்க வேண்டும். வெள்ளை அல்லது இளம் நிறத்திலான ஆடைகளை பயன்படுத்த வேண்டும் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இந்தியருக்கு அடித்த கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டம்!!

இந்தியாவை சேர்ந்த இந்தியர் ஒருவருக்கு, துபாயில் நடந்த லொட்டரி குழுக்களில் 2 மில்லியன் திர்ஹாம் பரிசாக விழுந்துள்ளதால், அவர் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளார்.

இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சினைச் சேர்ந்த ஆண்டனி ஜாய் என்ற 39 வயதான நபர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தின் ஓமானுக்கு குடிபெயர்ந்தார்.

இங்கு வந்து, கட்டுமான நிறுவனம் ஒன்றி தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றி வந்தார். அதன் படி அவருக்கு மாதம் 3000 திர்ஹாம் சம்பளமாக கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த புதன் கிழமை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனம் நடத்திய Mahzooz லொட்டரி குலுக்கலில், ஆண்டனி ஜாய்க்கு 2 மில்லியன் திர்ஹாம்(இலங்கை மதிப்பில் 10 கோடி ரூபாய்) பரிசாக விழுந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், இதை என்னா நம்பவே முடியவில்லை. கனவு போல் இருக்கிறது. நான் இதை வாங்கும் போது எனக்கு அதிர்ஷம் இருக்கும் என்று நம்பவில்லை, ஆனால் அது இப்போது உண்மையாகிவிட்டது.

எனக்கு வங்கிக்கடன்கள் இருக்கிறது. இந்த தொகை அந்த வங்கிக்கடன்களை அடைக்கவும், பெற்றோர்களை கவனித்து கொள்ள உதவும்.

அதுமட்டுமின்றி, நான் சில தொண்டு நிறுவனங்களுக்கும் இதில் வரும் பணத்தை நன்கொடை அளிக்க விரும்புகிறேன். ஆனால் இந்த பணம் செலவிடுவதில் எந்த ஒரு அவசரமும் காட்டவிரும்பவில்லை என்று கூறினார்.

கடந்த சனிக்கிழமை நடந்த இந்த குலுக்களில், ஆறு எணிகளில் ஐந்து எண்கள்((9-10-16-17-34-36) ), இவர் வாங்கிய லொட்டரி டிக்கெட்டுடன் பொருந்தியுள்ளது.

அடுத்த Mahzooz குலுக்கள் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 3-ஆம் திகதி) உள்ளூர் நேரப்ப்டி இரவு 9 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குலுக்கான டிக்கெட் விலை 35 திர்ஹாம் எனவும், இதை Mahzooz இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அன்பான கணவன், அழகான குழந்தை : இளம் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்!!

தமிழகம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி மேட்டுப்பாளையம் பகுதியை சார்ந்தவர் மகேந்திரன் (வயது 35). இவரது மனைவி அனுஷியா (வயது 25). இவர்கள் இருவருக்கும் 3 வயதுடைய பெண் குழந்தை உள்ளது.

திருப்பூரில் உள்ள அங்கேரிபாளையம் பகுதியில் மகேந்திரன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில், அங்குள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி அனுஷியா குழந்தையுடன் தி.டீரென மா.யமாகியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக மகேந்திரன் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை செய்து வந்தனர்.

விசாரணையில், அனுஷியா மற்றும் அவரது குழந்தை வேலம்பாளையம் பகுதியில் உள்ள அனுஷியாவின் க.ள்.ள.க்.கா.த.ல.ன் சதீஷ்குமாருடன் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நேரில் சென்ற காவல்துறையினர் இருவரையும் மீ.ட்டு, அறிவுரை கூறி கணவர் மகேந்திரனுடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தம்பதிகளுக்குள் மீண்டும் நே.ற்று த.க.ரா.று ஏ.ற்பட்ட நி.லையில், அனுஷியா தனது தோழி சுதா என்பவரின் வீட்டிற்கு குழந்தை மற்றும் கணவருடன் சென்றுள்ளார்.

இதன்போது, சுதா தம்பதிகள் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்த சமயத்தில், தோழியின் பேச்சினை கேட்காத தம்பதிகள் எங்களது வாழ்க்கை பி.ரச்சனை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துவிட்டனர்.

மேலும், குழந்தையுடன் வெளியே சென்று காத்திருக்குமாறு தெரிவிக்கவே, சுதா குழந்தையுடன் வெளியே சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் அனுஷியா அ.ல.று.ம் ச.த்.த.ம் கே.ட்.க.வே, அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.து உள்ளே சென்று பா.ர்க்கையில், அ.வர் து.ப்.ப.ட்.டா.வா.ல் க.ழு.த்.து நெ.ரி.க்.க.ப்.ப.ட்.டு ம.ய.ங்.கி கீ.ழே கி.ட.ந்.து.ள்.ளா.ர்.

அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லவே, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சிகிச்சை ப.ல.னி.ன்.றி ப.லி.யா.னா.ர்.

இந்த விஷயம் தொடர்பாக சுதா வழங்கிய புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அனுஷியாவின் கணவர் மகேந்திரன் மற்றும் க.ள்.ள.க்.கா.த.ல.ன் சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்தடுத்து 8 திருமணங்கள் : மனைவி மற்றும் மகளை மிரட்டி கணவன் செய்த கொடூரம்!!

ஆந்திர மாநிலத்தில்..

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அடுத்தடுத்து 8 திருமணம் செய்து கொண்ட நபர், சொந்த மகள் மற்றும் மனைவியை மி.ரட்டி பா.லி.ய.ல் தொழிலுக்கு கட்டாயப்படுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆந்திராவின் விசாகப்பட்டணம் பகுதியை சேர்ந்த அருண் குமார் என்பவருக்கு பா.லி.ய.ல் தொழில் மற்றும் போ.தை ம.ரு.ந்.து கு.ம்பலுடன் தொடர்பு உள்ளது.

இவர் க.த்.தி மற்றும் து.ப்.பா.க்.கி.யை கா.ட்.டி மி.ர.ட்.டி, பெண்களை தமக்கு பணிய வைத்துள்ளார். மட்டுமின்றி தனது முதல் தாரத்தின் மகளை பா.லி.ய.ல் தொழிலுக்கு க.ட்டாயப்படுத்தியதாகவும் அவர் மீது கு.ற்றச்சாட்டு உள்ளது.

மேலும், தமது முதல் மனைவி கீதாஞ்சலி, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட லட்சுமி ஆகியோரை கொ.லை செ.ய்.து விடுவதாக மி.ர.ட்.டி பா.லி.ய.ல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.

அருண் குமார் மொத்தம் 8 திருமணம் செய்து கொண்டதுடன், அதில் அனைவரையும் மி.ர.ட்.டி பா.லி.ய.ல் தொழிலில் ஈடுபட க.ட்டாயப்படுத்தி வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் பொறுமை இழந்த கீதாஞ்சலி மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் கடந்த மாதம் பொலிசாரை அணுகி, கணவன் அருண் குமார் பெயரில் புகார் அளித்துள்ளனர்.

மட்டுமின்றி, கணவரால் தங்கள் உ.யிருக்கு ஆ.பத்து இருப்பதாகவும் அந்த பு.காரில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் உள்ளூர் பொலிசாருக்கு அருண் குமாருக்கும் தொடர்பு இருப்பதால், அவர்கள் அருண் குமார் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளனர்.

பொலிசாரிடம் புகார் அளிப்பதால் எந்த பயனும் இருக்காது என அருண் குமாரே, தமது இரு மனைவிகளையும் மி.ரட்டியுள்ளார். மேலும், அருண் குமார் திருமணம் செய்து கொண்டதில் ஒருவர் மா.யமான விவகாரத்தில், அருண் குமாருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் பு.காரில் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூர் பொலிசார் அருண் குமார் மீது வழக்குப் பதிய மறுத்து வந்த நிலையில், கீதாஞ்சலி மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் மகளிர் ஆணையம் முன்பு தங்கள் கு.ற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இதனையடுத்து அவர்கள் இந்த விவகாரத்தை மாநகர பொலிஸ் தலைவர் மனிஷ் குமார் என்பவர் பார்வைக்கு கொண்டு சென்றனர். மட்டுமின்றி, அருண் குமாரால் பாதிக்கப்பட்ட பெண்கள், பேசி பதிவு செய்த ஓடியோ செய்தியையும் பொலிஸ் தலைவருக்கு அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்தே, உள்ளூர் பொலிசார் அருண் குமார் மீது வழக்குப் பதிய முன்வந்துள்ளனர். மேலும், அருண் குமார் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் மனிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, மாநில பொலிஸ் தலைவரும் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார். அருண் குமாருக்கு ஆதரவாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க தவறிய உள்ளூர் பொலிசார் மீதும் நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது.

டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் சாரதி படுகாயம்!!

விபத்து..

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி தள்ளாடி சந்தியில் கிரவல் மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் இன்று காலை 9.30 மணியளவில் குடை சாய்ந்து விபத்திற்கு உள்ளாகியதில் சாரதி காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மதவாச்சி பகுதியிலிருந்து மன்னார் நகருக்குள் கிரவல் மண் ஏற்றிக் கொண்டு வந்த போதே குறித்த டிப்பர் வாகனம் தள்ளாடி வை சந்தியில் வைத்து கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

இதன் போது குறித்த வீதியினால் பயணித்தவர்களினால் குறித்த டிப்பர் வாகன சாரதி மீட்கப்பட்டு காயத்துடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.

கிளிநொச்சியில் மனைவியின் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்த கணவனும் த.ற்.கொ.லை!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை தனது ம.னைவியை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு தானும் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டார்.

இச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். குடும்ப த.க.ரா.று காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தனது மனைவியை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.தி.ருக்கலாம் என தெரியவருகிறது. அத்தோடு மனைவியின் சேலையில் தூ.க்.கி.ட்.டு அவரும் த.ற்.கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர் எனவும் அயலவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இச் சம்பவத்தில் 38 வயதுடைய வேலாயுதம் சிவஞானம் என்பவரும் அவரது மனைவியான 36 வயதுடைய சிவஞானம் குகனேஸ்வரி என்வரும் இ.றந்துள்ளனர்.

இவர்களுக்கு 16 வயதில் மகளும், 13 மற்றும் 06 வயதில் இரணடு மகன்களும் உள்ளனனர். இவர்களின் இந்த நிலையில் மூன்று பிள்ளைகளும் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர். பொலீஸ் மேதிலக வி.சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இராணுவ பாதுகாப்பு!!

கிறிஸ்தவ தேவாலயங்களில்..

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தும் வகையில் இராணுவப் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின ஆரதானையின் போது இடம்பெற்ற வெ.டி.கு.ண்.டு தா.க்.கு.த.லி.னா.ல் பல பொதுமக்கள் உ.யிரிழந்தனர்.

இதன் காரணமாக தற்போது நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டு வந்திருந்தனர்.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு நிகழ்வுகள் வருகின்ற 4ம் திகதி தேவாலயங்களில் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

வவுனியாவில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் வைத்து முஸ்லிம் இளைஞன் கைது!!

கிறிஸ்தவ தேவாலயம்..

வவுனியா – இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றினுள் வைத்து முஸ்லிம் இளைஞனொருவர் நேற்று (31.03.2021) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிறிஸ்தவர்களின் புனித வாரம் தற்போது அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் குறித்த ஆலயத்தில் இரவு வழிபாடு இடம்பெற்ற நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞனொருவர் தேவாலயத்தினுள் சென்றுள்ளார்.

அங்கிருந்தவர்கள் குறித்த இளைஞனை விசாரித்தபோது கண்டி அக்குரன பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞன் என தெரியவந்துள்ளது. உடனடியாக அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-தமிழ்வின்-

நுவரெலியாவில் கோர விபத்து : 3 பெண்கள் பலி!!

கோர விபத்து..

நுவரெலியா – ஹக்கல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்றும் பார ஊர்தி ஒன்றும் மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, முச்சக்கரவண்டியில் பயணித்த 51, 52 மற்றும் 20 வயதுகளை உடைய பெண்களே உயிரிழந்துள்ளனர். பார ஊர்தியின் சாரதி தப்பியோடியுள்ளதுடன் அதன் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பார ஊர்தி சாரதியின் கவனயீனத்தால் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.