தடையாக நின்ற தந்தை : அண்ணனும் தங்கையும் சேர்ந்து செ.ய்த மோ.சமான செ.யல்!!

அண்ணனும் தங்கையும்..

இந்தியாவில் அண்ணனும் தங்கையும் சேர்ந்து தி.ட்டமிட்டு தந்தையை கொ.லை செ.ய்.து.ள்.ள சம்பவத்தின் பிண்ணனி அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார். அவருக்கு ஆஷா தேவி என்ற மனைவியும், அனுஜ் என்ற மகனும் அல்பனா எனும் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், அனுஜ் தனது தந்தையின் சொத்துக்களை தனக்கு எழுதிவைக்க கேட்டுள்ளார், அதேபோல் மகள் அல்பனா தனது காதலனை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டுள்ளனர். ஆனால், சுனில் குமார் இருவரின் விருப்பத்துக்கும் ம.றுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இருவரின் ஆசைக்கும் த.டையாக இருந்த த.ந்தையை கொ.லை செ.ய்.ய தி.ட்டமிட்டுள்ளனர். அனுஜ், அல்பனா மற்றும் அவரது காதலன் ஆகியோர் மற்றோரு நன்பரின் உதவியுடன் சுனில் குமாரை அ.டி.த்.து கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.து.ள்.ள.ன.ர்.

பின்னர் தங்கள் மீது ச.ந்.தே.க.ம் வரக்கூடாது என்பதற்காக, அவர்களே பொலிஸில் தந்தையை கா.ண.வி.ல்.லை என வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் சுனில் குமாரின் உ.ட.ல் க.ண்டெடுக்கப்பட்ட நிலையில், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணையை நடத்திவந்தனர்.

சுனில் குமார் சமீபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள சொத்தை விற்றுள்ளதையும், அப்போது அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் இடையில் க.டும் வா.க்குவாதம் ஏற்பட்டதையும் பொலிஸ் தெரிந்துகொண்ண்டார்.

பின்னர், அனுஜ் மற்றும் அல்பனா மீது ச.ந்.தே.க.த்.தி.ன் பேரில் பொலிஸார் வி.சாரணை நடத்தியதில் அவர்கள் கு.ற்.ற.த்.தை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில், அனுஜ், அல்பனா உட்பட 4 பேரை பொலிஸார் கை.து செ.ய்.து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சொத்துக்கு ஆசைப்பட்டு மகனும், காதலனை திருமணம் செய்துகொள்ள மகளும் சேர்ந்து சொந்த தந்தையை கொ.லை செ.ய்.து.ள்.ள ச.ம்பவம் அப்பகுதியில் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் இருந்த 13 வயது பள்ளி மாணவி மாணவிக்கு நடந்த விபரீதம்!!

லீலாவதி..

தமிழகத்தில் பள்ளி மா.ண.வி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் மகள் லீலாவதி (13). அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்து பாடங்கள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி லீலாவதி வீட்டில் இருந்து பாடங்கள் படித்து வந்தார்.

மேலும் பெற்றோருக்கு உதவியாக வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் லீலாவதி திடீரென வீட்டில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு.க் கொண்டார்.

இந்த காட்சியை பார்த்து அ.திர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் உடனடியாக அவளை மீ.ட்.டு சிகிச்சைக்காக அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு லீலாவதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உ.யிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து மா.ண.வி லீலாவதியின் த.ற்.கொ.லை.க்.கா.ன காரணம் குறித்து வி.சாரித்து வருகின்றனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஹெ.ரோ.யினுடன் இளைஞன் கைது!!

பழைய பேருந்து நிலையத்தில்..

வவுனியா, பழைய பேரூந்து நிலையத்தில் ஹெ.ரோ.யி.ன் போ.தை.ப் பொ.ருளுடன் இளைஞன் ஒருவரை வவுனியா கு.ற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று (03.04) மாலை கை.து செ.ய்துள்ளனர்.

வவுனியா கு.ற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையில் சார்ஜன்ட் விக்கிரமசூரிய, சமீர, நிமல உள்ளிட்ட கு.ற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் விசேட நடவடிக்கையில் ஈடுபட்ட போது ச.ந்தேகத்திற்கு இடமான முறையில் பழைய பேரூந்து நிலையத்தில் நடமாடிய இ.ளைஞன் ஒருவரை சோ.தனை செ.ய்தனர்.

இதன்போது குறித்த இளைஞனிடம் இருந்து 60 மில்லிகிராம் ஹெ.ரோ.யி.ன் போ.தை.ப் பொ.ருள் மீ.ட்கப்பட்டது. இதனையடுத்து அதனை உ.டமையில் வைத்திருந்த கு.ற்றச்சாட்டில் குறித்த இளைஞன் கு.ற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கை.து செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக வி.சாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சீனியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

சீனி…

பழுப்பு நிற சீனி சதோசவின் ஊடாக கிலோ ஒன்று 115 ரூபாவுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இது நடைமுறைக்கு வரும் என்று வர்த்தகத்துறைஅமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

லங்கா சீனி நிறுவனம் தற்போது இலாபத்தில் இயங்கி வருகிறது.எனவே அந்த லாபத்தின் பயனை பொதுமக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையிலேயே புதுவருடக்காலத்தில் சீனியின் விலையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

லங்கா சீனி நிறுவனம் நேற்று வியாழக்கிழமையன்று 142 மில்லியன் ரூபாவை விற்பனை வருமானமாக பெற்றதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் மே மாதம் முதல் சத்தோச நிறுவனம் கிராமப்புறங்களில் நிறுவப்படும் என்றும் பந்துல தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய 22 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம்!!

தங்கம்..

22 கோடி ரூபாய் பெறுமதியான 17 கிலோ கிராம் தங்கத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக கொண்டு செல்ல முயற்சித்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுத்தம் செய்யும் நிறுவனத்தின் சோ.தனையிடும் நடவடிக்கையில் ஈடுபடுபவர் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த நபராகும். போ.தை.ப்.பொ.ரு.ள் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபடும் சுங்க பிரிவு அதிகாரிகளினால் இது தொடர்பில் வி.சாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில்!!

விபத்து..

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உட்துறைமுக வீதியில் இன்று (03.04) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த மூவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன் விபத்தில் இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளன. விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியான திருகோணமலை – ஜமாலியா, நெல்சன் புறபகுதியைச் சேர்ந்த பரீஸ்தீன் (37 வயது) மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆனந்தபுரி பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இரு இளைஞர்கள் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை விபத்து தொடர்பில் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வர்த்தக சங்கத்தினருக்கும் சுகாதாரப் பிரிவினருக்கிடையே கலந்துரையாடல் : பல தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

கலந்துரையாடல்..

வவுனியா மாவட்ட வர்த்தக சங்கத்தினருக்கும் சுகாதார பிரிவினருக்கிடையிலான கலந்துரையாடலொன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று (03.04.2021) காலை 9.30 மணி தொடக்கம் 11.30 மணி வரை இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் தரம் பிரித்து கழிவகற்றல், உணவங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சுகாதார சான்றிதழ் கட்டாயமாக்கல், கோவிட் – 19 நடைமுறையினை இறுக்கமாக பின்பற்றுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் தரம் பிரித்து கழிவகற்றல் நடவடிக்கைக்கு வர்த்தக சங்கத்தினரின் ஒத்துழைப்பினை சுகாதார பிரிவினர் கோரியதுடன் காலை நேரத்தில் உணவுக் கழிவுகளும் மாலை நேரத்தில் பிளாஸ்டிக், காகிதங்கள், கண்ணாடி போன்ற கழிவுகளும் நகரசபை கழிவகற்றில் பிரிவினரினால் எடுத்துச் செல்லப்படும் என்பதுடன்,

கழிவகற்றல் தொடர்பில் முறைப்பாடுகள் எவையும் இருக்கும் பட்சத்தில் 024 -2222488 என்ற தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

இவ் கலந்துரையாடலில் வவுனியா வர்த்தக சங்க உறுப்பினர்கள் , சுகாதார பிரிவினர் என 50க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா வளாகத்தின் மாணவர் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டது!!

வவுனியா வளாகத்தின்..

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. வவுனியா வளாகத்தில் கல்விபயிலும் கண்டியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு கோவிட் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

விடுமுறையில் சென்ற அவர் மீண்டும் பல்கலைக்கழகம் திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த மாணவி கிளிநொச்சி கோவிட் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியின் ஒருபகுதி சுமார் 400 மாணவர்களுடன் இன்றுமுதல் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து வெளிச்செல்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அவர்களிற்கு கட்டம், கட்டமாக பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம்!(வீடியோ)

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் குடமுழுக்கு பெருவிழா இன்று 02.04.2021 வெள்ளிகிழமை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. 

காலை 6.00 மணிமுதல்  ஆலயத்தின் பிரதமகுரு சிவஶ்ரீ முத்துஜெயந்திநாதக்குருக்கள் தலைமையில் கிரியைகள் ஆரம்பமானதுடன்  காலை 9.00 மணி முதல் 10.15 மணிவரையான சுபவேளையில் ஆலயத்தில் குடமுழுக்கு பெருவிழா கும்பாபிசேக குரு சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சிவபோதம் ஶ்ரீ ஐயப்பதாச சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

மேற்படி குடமுழுக்கு பெருவிழாவின் போது  பல நூற்றுக்கணக்கான ஸ்ரீ கருமாரி நாகபூசணி அமபாளின்  பக்தர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

 

வவுனியாவில் பெரிய வெள்ளி விசேட ஆராதனைகள்!!

பெரிய வெள்ளி..

வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில் பெரிய வெள்ளி விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

இன்று (02.04.2021) மாலை நான்கு மணியளவில் தேவாலய பங்குத்தந்தை தலைமையில் பெரிய வெள்ளி விசேட ஆராதனை இடம்பெற்ற பெரிய வெள்ளி விசேட ஆராதனையில் வவுனியா நகர்ப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது தேவாலயத்தில் இராணுவத்தினரும் பொலிசாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாய்வானின் சுரங்கப் பாதையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 36 பேர் பலி!!

ரயில் விபத்தில்..

தாய்வானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் வெள்ளிக்கிழமை ரயிலொன்று தடம்புரண்டு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 36 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த விபத்தில் மேலும் 72 பேர் காயமடைந்துள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக ஆரம்ப கட்ட தகவல்களின் படி நால்வர் உயிரிழந்ததாகவும் 20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததாகவும் கூறியிருந்தன.

பல சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு தைப்பேவிலிருந்து டைதுங் நோக்கி பயணித்த எக்ஸ்பிரஸ் ரயிலொன்றே ஹுவாலியனுக்கு வடக்கே ஒரு சுரங்கப்பாதையில் தண்ட வாளத்திலிருந்து இறங்கி, சுரங்கப்பாதையின் சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் மரணம்!!

கொரோனா..

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயதான முதியவர் ஒருவர் கோவிட்-19 தொற்று காரணமாக வெலிகந்தையில் நேற்று (01.04) உயிரிழந்துள்ளார்.

வவுனியா வடக்கு அனந்தர் புளியங்குளம் பகுதியை சேர்ந்த குறித்த முதியவர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சில நாட்களிற்கு முன்பாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அந்த பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக வெலிக்கந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். இதேவேளை அவரது உறவினர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேலியகொடை மேம்பாலத்திற்கு அருகில் தீப்பிடித்து எரிந்த கார்!!

தீப்பிடித்து எரிந்த கார்..

பேலியகொடை மேம்பாலத்திற்கு அருகில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன் காரணமாக பேலியகொடை பிரதேசத்தில் வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 8 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை கோரமான வாகன விபத்துக்கள் காரணமாக நேற்றைய தினத்தில் மாத்திரம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

நுவரெலியா ஹக்கல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துடன் சம்பந்தப்பட்ட கொள்கலன் வண்டியின் சாரதியை கைது செய்ய தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நண்பர்கள் சகிதம் நீராடச்சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி!!

நீராடச்சென்ற சிறுவன்..

நுவரெலியா, இராகலை பகுதியிலுள்ள குளத்துக்கு நண்பர்கள் சகிதம் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரிழ் மூழ்கி பலியாகியுள்ளார். இன்று (02.04.2021) நண்பகலே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது என இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இராகலை சூரியகாந்தி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் உ.அபினேஷன் என்ற மாணவரே (வயது – 15) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனும், அவரின் மூன்று நண்பர்களும் இன்று இராகலை, மந்திரிதென்ன பகுதியிலுள்ள குளமொன்றில் நீராடச்சென்றுள்ளனர். இவ்வாறு நீராடிக்கொண்டிருக்கையில் குறித்த சிறுவன், சேற்றுக்குள் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார். அவரை மீட்பதற்கு முயன்ற மற்றுமொரு சிறுவனும் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து ஏனைய இருவரும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அறிவித்தனர். தீவிரமாக செயற்பட்ட மக்கள் இரண்டாவதாக சிக்கியவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

தேடும் நடவடிக்கை 3 மணிநேரம் தொடர்ந்ததும். அதன் பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏனைய இரு சிறார்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் ஐந்து பேர் அதிரடியாக கைது!

கைது..

வவுனியாவில் போ.தைப்பொருட்களுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வவுனியா பொலிஸார் நேற்றிரவு விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது வவுனியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்தோடு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து ஹெ.ரோயின் மற்றும் க.ஞ்சா என்பன மீட்கப்பட்டுள்ளன.

இதில் வைரவபுளியங்குளம் பகுதி மற்றும் சிவபுரத்தை சேர்ந்த இருவர்களிடமிருந்து 620 மில்லிக்கிராம் ஹெ.ரோயின் கை.ப்பற்றப்பட்டுள்ளது.அத்துடன், மற்றைய மூவரிடம் இருந்து 4 கிராம் க.ஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக வி.சாரணையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மறைந்த பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் புகழுடலுக்கு பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி!!

இராயப்பு ஜோசப் ஆண்டகை..

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக மன்னார் ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டகையின் பூதவுடன், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து பேரணியாக மன்னாருக்கு எடுத்துவரப்பட்டது. இதன்போது, மன்னார் மாவட்டம் முழுதும் உள்ள கத்தோலிக்க மக்கள் மட்டுமல்லாது அனைத்து மத மக்களும் இணைந்து வீதிக்கு இரு மருங்கிலும் கருப்புக் கொடிகளை நாட்டி பேரணியில் கலந்துகொண்டனர்.

தேவன் பிட்டிப் பகுதிகளில் இருந்து மக்கள் மலர் தூவி மோட்டார் வண்டிகளிலும் வாகனங்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் மன்னார் ஆயர் இல்லம் வரையில் ஊர்வலமாக ஆயரின் பூதவுடல் எடுத்துவரப்பட்டது.

அத்துடன், ஆயரின் பூதவுடல் மாலை 2.45 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு மக்களினுடைய அஞ்சலிக்காக மன்னார் ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆயரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உட்பட மன்னார் மாவட்டத்தில் உள்ள பொது மக்களும் இணைந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணியளவில் பவனியாக அவரது பூதவுடல் ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தொடக்கம் திங்கட்கிழமை மதியம் இரண்டு மணிவரை பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை மாலை மூன்று மணியளவில் பேராலயத்தில் இறுதித் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். இலங்கையின் அனைத்து ஆயர்களும் இணைந்து ,கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுப்பார்கள். அதனைத் தொடர்ந்து பூதலுடல் குறித்த பேராலயத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.