தமிழ் – சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் எல்லையற்ற இணைய வசதி வழங்கப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் காலை இரவு என்ற மாற்றமின்றி எல்லையற்ற இணைய வசதி பெற்றுக்கு கொள்ள முடியும்.
இதற்கு முன்னர் உரிய தொலைதொடர்பு நிறுவனங்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட யோசனையை கருத்திற் கொள்ளும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தற்போது உள்ள கட்டணங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட்டாது. எல்லையற்ற பெக்கேஜிற்காக தற்போது உள்ள கட்டங்களுடன் ஒப்பிடும் போது எல்லையற்ற பெக்கேஜ் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லையற்ற இணைய வசதி வழங்குமாறு வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் குடமுழுக்கு பெருவிழாவை முன்னிட்டு இன்று 01.04.2021 வியாழகிழமை காலை 6.00 மணிமுதல் எண்ணெய் காப்பு சாத்தும் வைபவம் இடம்பெற்று வருகின்றது.
மேற்படி வைபவத்தில் ஏராளமான அம்பாளின் பக்தர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டு தெய்வ விக்கிரகங்களுக்கு எண்ணெய் காப்பு சாத்தி வருகின்றனர்.
நாளை 02.04.2021 வெள்ளிகிழமையன்று காலை 9.00 மணி முதல் 10.15 மணிவரையான சுபவேளையில் ஆலயத்தில் குடமுழுக்கு பெருவிழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல சதொச விற்பனை நிலையங்கள் ஊடாகவும் 12 அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கிய 1000 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரண பொதி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
இதேவேளை 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வர்த்தகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில், அரிசியின் விலையில் தளம்பல் நிலை ஏற்படுவதற்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. புத்தாண்டு காலத்தில் நாட்டு மக்களுக்கு நிவாரண விலையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட ஆலோசனை வழங்கியுள்ளார்.
சிறு மற்றும் மொத்த உற்பத்தியாளர்களிடமிருந்து அத்தியாவசிய உணவு பொருட்களை நேரடியாக கொள்வனவு செய்யும் புதிய வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
விலை மனுகோரல் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்யாமல், கையிருப்பின் அடிப்படையில் பொருட்களை கொள்வனவு செய்யும் வழிமுறை தற்போது செயற்படுத்தப்படுகிறது. பண்டிகை காலத்தில் பல்வேறு துறைகள் ஊடாக நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய சதொச விற்பனை நிலையம் ஊடாக அத்தியாவசிய உணவு பொதி நிவாரண அடிப்படையில் இன்று முதல் ஏப்ரல் மாதம் வரை விற்பனை செய்யப்படும்.
வெள்ளை அரிசி, நாட்டரிசி, வெள்ளை சீனி, பருப்பு, கோதுமை மா என்பன தலா ஒரு கிலோகிராம், உப்பு, நெத்தலி 250 கிராம், துண்டு மிளகாய், தேயிலை தூள், சோயா மற்றும் முகக்கவசம் ஆகிய 12 அத்தியாவசிய பொருட்களின் பொதி 1000 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும். அத்தியாவசிய பொருட்களின் விலை கடந்த காலத்தை விட தற்போது பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் பல தேசிய மட்டத்தில் பயிரிடப்பட்டுள்ளன. எதிர்பார்க்கும் விளைச்சல் கிடைக்கப் பெற்றவுடன் தற்போது விலை அதிகரிக்கப்பட்டுள்ள மஞ்சள், உழுந்து, பயறு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின விலை குறைக்கப்படும் என கூறியுள்ளார்.
பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை.க்.கு ஆ.ளாக்கப்பட்ட 16 வயது சி.று.மியை, கு.டு.ம்ப உ.று.ப்.பி.னர்களே கிராம ம க் களுடன் சே.ர்.ந்து அ.டி.த்.து ஓ.ட.வி.ட்டு அ.சி.ங்.க.ப்.ப.டுத்திய ச.ம்.ப.வம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது.
இந்தியாவில் மத்திய பி ர தேச த்தில் ப.ழ.ங்.கு.டி.யினர் ஆ.தி.க்.கம் செ லு த்தும் அலிராஜ்பூர் மா.வ.ட்.டத்தில் இந்த ப.ய.ங்.க.ர.மான கொடூர ச.ம்.ப.வம் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த கொ.டூ.ர ச.ம்.ப.வ.த்.தின் வீ.டி.யோ சமூக வலைத்தளங்களில் வெ.ளி.யா.ன.தையடுத்து இந்தியா முழுவதும் பெ.ரு.ம் அ.தி.ர்.வ.லை.க.ளை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 16 வயது சி.று.மி அதே பகுதியைச் சே ர்த்த 21 வயது இ.ளை.ஞ.ரால் பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை.க்.கு ஆ.ளா.க்.க.ப்.பட்டுள்ளார்.
இதனை அறிந்த கிராம ம க் கள், அந்த இ.ளை.ஞனை அடித்து இழுத்து வ.ந்.துள்ளார். அதேபோல், பா.தி.க்.க.ப்ப.ட்ட சி.று.மி.யும் த.ண்.டனை.க்.கு உ.ரி.ய.வர் என, அவரையும் கை.க.ளை.க் க.ட்.டி அ.டி.த்து எல்லோரும் பார்க்க சாலையில் ந.ட.க்.க.வி.ட்.டு மா.ன.பங்.கம் செ.ய்.து.ள்.ளனர்.
இதில் கொ.டு.மை எ.ன்.ன.வெ.ன்றால், சி.று.மி.யின் கு.டு.ம்.ப.த்.தி.னர் தான் கிராம மக்களுடன் சே.ர்.ந்.நது இந்த பா.த.க செ.ய.லி.ல் ஈ.டு.ப.ட்டு..ள்ளனர். பின்னர் ச.ம்.ப.வ இ.ட.த்.து.க்கு வ.ந்.த பொ.லி.ஸ் சி.று.மி.யை கா.ப்.பாற்றி ம.ரு.த்.துவ உ.த.விக்கு அழைத்து சென்றுள்ளனர்.
து.ஷ்.பி.ர.யோ.கம் செ.ய்.த 21 இ.ளை.ஞ.ர் மற்றும் கு.டு.ம்ப உ.று.ப்.பினர்கள் உட்பட 6 பே.ர் கை.து செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்ளனர். கு.ற்.ற.ம் சா.ட்.ட.ப்.ப.ட்ட.வ.ர்கள் மீ.து இ.ந்.தி.ய த.ண்.ட.னை.ச் ச.ட்.டம் (IPC) மற்றும் போ க்ஸோ ச.ட்.ட.த்தி.ன் பல்வேறு பிரிவுகளின் கீழ் வ.ழ.க்.குப் ப.தி.வு செய்யப்பட்டுள்ளது.
தென்னிலங்கையில் இளைஞன் ஒருவரினால் கடனுக்கு கொள்வனவு செய்யப்பட்ட லொத்தர் சீட்டிற்கு கிடைத்த பணப்பரிசு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிட்டிகல தலகஸ்பே பகுதியில் லொத்தர் சீட்டினை விற்பனை செய்த பெண் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
நாளாந்தம் லொத்தர் சீட்டுகள் பலவற்றை ஒதுக்கிக்கொள்ளும் இளைஞன் வழமையை போன்று தனக்கு 5 லொத்தர் சீட்டினை ஒதுக்கி வைக்குமாறு விற்பனை செய்யும் குறித்த பெண்ணிடம் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இறுதியாக ஒதுக்கிய லொத்தர் சீட்டுகளை பெறுவதற்கு அந்த இளைஞன் வருகைத்தராமையினால் ஒதுக்கப்பட்ட லொத்தர் சீட்டிற்கு பரிசு கிடைத்துள்ளதா என குறித்த பெண் சோதனையிட்டுள்ளார்.
அவ்வாறு ஒதுக்கப்பட்ட லொத்தர் சீட்டு ஒன்றிற்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கிடைத்துள்ளது. உடனடியாக குறித்த இளைஞனுக்கு தொலைபேசியில் அழைப்பேற்படுத்திய பெண் தகவலை வெளியிட்டுள்ளார்.
அது மாத்திரமின்றி கிடைத்த பணத்தை உடனடியாக அவருக்கு பெற்றுக் கொடுக்கவும் அந்த பெண் நடவடிக்கை எடுத்துள்ளார். பரிசு வென்ற இளைஞன் மிகவும் மகிழ்ச்சியுடன் லொத்தர் சீட்டு விற்பனை செய்யும் பெண்ணுக்கு 5ஆயிரம் ரூபாய் பணத்தை பரிசாக கொடுத்துள்ளார்.
“என்னிடம் லொத்தர் சீட்டு பெற்றவர்களுக்கு பரிசு கிடைத்தால் அவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுப்பது எனது கடமை என லொத்தர் சீட்டு விற்பனையாளரான வஜித மல்லிக்கா என்ற பெண் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஊ.னமுற்று பெண் கு.ழ.ந்.தை பிறந்தமைக்காக இ.ளம் பெ.ண்ணை அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் தா.க்.கி.ய சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பபிதா தேவி. இவர் கணவர் பவன்குமார். த.ம்ப.திக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெ.ண் கு.ழந்தை ஒன்றுபிறந்துள்ளது.
அந்த குழந்தை பிறக்கும் போ.தே ஊ.ன.மா.க பி.ற.ந்ததால் அதை பார்த்து பவன்குமார் கோ.ப.ப்பட்டுள்ளார். இதை தொ.டர்ந்து ம.னைவியையும், கு.ழந்தையையும் அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தி வீட்டை வி.ட்டு விரட்டியுள்ளனர்.
இதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் க.ழி.த்.து கணவர் வீட்டுக்கு பபிதா தனது குடும்பத்துடன் வந்துள்ளார். அதன் போது கோ.ப.த்தோடு இருந்த பவன்குமார் மற்றும் அவர் குடும்பத்தார் அவர்களை அ.டி.த்.து விரட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் படு கா.ய.ம.டை.ந்.த பபிதா மற்றும் அவர் குடும்பத்தார் மருத்துவமனையில் சே.ர்.க்க.ப்ப.ட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலீஸார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று மதியம் கைது செய்யப்பட்ட கிராம அலுவலர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோவில்குளம் கிராம அலுவர் பிரிவின் கிராம அலுவலர் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து கொழும்பில் இருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் குறித்த கிராம அலுவலர் இலஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட கிராம அலுவலரை மேலதிக விசாரணைக்காக கொழும்பு கொண்டு செல்ல இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், குறித்த கிராம அலுவலர் தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும், நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததைதையடுத்து குறித்த கிராம அலுவலரை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிசாரிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் ஒப்படைந்திருந்தனர்.
இதனையடுத்து இன்று (31.03) மாலை குறித்த கிராம அலுவலர் வவுனியா வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளும், வவுனியா பொலிசாரும் முன்னெடுத்துள்ளனர்.
வாகன விபத்தில் கணவன் இறந்த நிலையில் சோகம் தாங்காமல் மனைவி தூக்கிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விழுப்புரம் அருகே கணவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் கழிவறைக்கு சென்று தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செய்துகொண்ட பெண்ணின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்த ஏந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் ரமேஷ் இரு தினங்களுக்கு முன்னர் கிளியனூர் பகுதியில் இருந்து இளவபட்டு அருகே இருசக்கரவாகனத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார்.
அதன் போது விபத்து குறித்து தகவலறிந்து வந்த கிளியனூர் போலீசார் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ரமேஷ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி ரமேஷ் உயிரிழந்தார். ரமேஷ் உ.யிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் அவரது மனைவியான சரளாவிடம் தெரிவித்துள்ளனர்.
திருமணமான 4 மாதங்களுக்குள் காதல் கணவர் இறந்த துயரம் தாங்காமல் சரளா ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கழிவறையில் நேற்றைய இரவு துப்பட்டாவில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை.க்.கு மு.யன்றுள்ளார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்ட நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சரளாவும் உ.யிரிழந்தார். காதல் கணவர் இறந்த துயரம் தாங்காமல் மனைவி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் அப் பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கையுடன் இணைந்த வகையில் பயன்படுத்தக்கூடிய பேனையொன்றை கண்டியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
இந்த பேனை பயன்பாட்டின் பின்னரும், பலனை தரக்கூடிய வகையில் உள்ளதாக பேனையை கண்டுபிடித்துள்ள கண்டியைச் சேர்ந்த சுகிர்தன் தெரிவிக்கின்றார்.
பேனை பயன்படுத்தப்பட்டதன் பின்னர், அதனை மண்ணில் நடுவதன் ஊடாக, அதிலிருந்து மரங்களை வளர்க்க முடியும் என அவர் குறிப்பிடுகின்றார். இந்த பேனையானது, இயற்கையை வளர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்றைய தினம் 202 ரூபாயை நெருங்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய அமெரிக்க டொலர் விற்பனை விலை 201.93 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
இது இலங்கை வரலாற்றில் அமெரிக்க டொலர் ஒன்றிற்காக வழங்கப்பட்ட மிகப்பெரிய விற்பனை விலையாகும். நேற்று முன்தினம் அமெரிக்க டொலர் டொலர் ஒன்றின் விற்பனை விலை 201.77 ரூபாயாக பதிவாகியிருந்தது.
இதேவேளை, மத்திய வங்கியின் நேற்றைய நாணய மாற்று வீதத்திற்கமைய டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 196.83 ரூபாயாக பதிவாகியுள்ளது. இதேவேளை வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று வீதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை தற்போது வரையிலும் 202 ரூபாயை கடந்து சென்றுள்ளது.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோவில்குளம் கிராம அலுவலர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று (31.03) கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, கோவில்குளம் கிராம அலுவலர் தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து கொழும்பில் இதுருந்து வவுனியாவிற்கு வருகை தந்த லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் குறித்த கிராம அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கிராம அலுவலர் லஞ்சம் பெற்ற நிலையிலேயே கோவில்குளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்க லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த கிராம அலுவலர் தொடர்பில் அவர் பணியாற்றிய பல்வேறு இடங்களிலும் இருந்தும் பல முறைப்பாடுகள் கடந்த காலங்களில் வவுனியா பிரதேச செயலகத்தில் செய்யப்பட்ட போதும்,
அவருக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கப்படாது தொடர்ச்சியாக முறைப்பாடுகளையடுத்து இடமாற்றங்களே வழங்கப்பட்டு வந்திருந்த நிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் குறித்த கிராம அலுவலருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்ற 28 மாணவர்கள் கடந்த மூன்று மாதங்களில் பாடசாலையை விட்டு இடை விலகியுள்ளனர்.
அவர்களை மீள இணைப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர் கே.சுலோஜனா தெரிவித்துள்ளார்.
சிறுவர், பெண்கள் பாதுகாப்பு தொடர்பில் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்திருந்தார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாத காலப்பகுதியில் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து 28 மாணவர்கள் இடை விலகியுள்ளதாக கிராம அலுவலர் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் இடை விலகியமைக்கான காரணத்தை கண்டறிந்து அவர்களை மீளவும் பாடசாலை கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை கிராம அலுவலர்கள் மற்றும் எமது பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், பாடசாலை இடை விலகும் மாணவர் விபரத்தை அதிபர்கள் எமது பிரதேச செயலகத்திற்கு வழங்கினால் அவர்களை மீள் இணைப்பதற்கான நடவடிக்கைகளை கிராம அலுவலர் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களினூடாக முன்னெடுக்க முடியும் எனவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனை தடை செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி ஒருமுறை மாத்திரம் பயன்படுத்திவிட்டு அகற்றப்படுகின்ற பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல், மைக்ரோ இருபதுக்கும் குறைவான பொலித்தீன், பெட் போத்தல் , சம்போ பைக்கெட், கொட்டன் பட் மற்றும் காற்று நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருள்கள் என்பன தடைசெய்யப்படும்.
இந்த பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருள்கள் அதிகமானவை சூழலுடன் சேர்வதால் இந்நாட்டில் அதிகமாக சூழல் மாசடைவு ஏற்படுவதுடன், குடி தண்ணீர் மற்றும் நீர் மாசடைவதாகவும் தெரியவந்துள்ளது.
எனவே, இவ்வாறான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகள் சிலவற்றை மார்ச் 31 முதல் இலங்கையில் உற்பத்தி செய்ய மற்றும் விநியோகிக்கத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கு பதிலாக சூழலுக்கு உகந்த பொருள்களை அறிமுகப்படுத்தவும் சுற்றுச் சூழல் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நேற்று மாலை த.ற்.கொ.லை.க்.கு மு.யற்சித்த மா.ணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உ.யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி இந்து கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு உ.யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மா.ணவியின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பி.ரேத ப.ரிசோதனைகளின் பின் உறவினர் களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்நிலையில், த.ற்.கொ.லை.க்.கா.ன காரணம் இதுவரையில் தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கம்பஹா மாவட்ட பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட 10 ஆயிரம் ரூபாய் பணத்தை விழுங்கியமையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பொலிஸ் அதிகாரி போக்குவரத்து சிக்கலை தீர்ப்பதற்காக லஞ்ச பணத்தை பெற்றுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரி அவ்விடத்திற்கு வந்தமையினால் குறித்த பொலிஸ் அதிகாரி 5 ஆயிரம் ரூபாய் பணத்தாள் இரண்டினை விழுங்கியுள்ளார். பின்னர் அவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
வெலிவேரி பொலிஸ் நிலையத்தியத்தின் முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரியினால் இந்த பணம் இலஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கோவிட் – 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்ட அதிகமான நபர்களுடன் யாழ்ப்பாணக் கொத்தணி தொடர்ந்து வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று காலை நிலவரப்படி மேலும் 17 பேர் கோவிட் – 19 தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தாக, கோவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
நேற்று பகலில் அதிகமான மக்கள் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும், இன்று காலை சரியான எண்ணிக்கை எதிர்பார்க்கப்படுவதாகவும் யாழ்ப்பாண அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகள் வெளிவர இருப்பதாக யாழ்ப்பாண பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் வசிப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாழ்ப்பாணத்தில் 1,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் மேலும் 63 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்திருந்தனர். இதில் சுன்னாகத்தைச் சேர்ந்த 29 பேரும், யாழ்ப்பாண நகரப் பகுதியைச் சேர்ந்த 23 பேரும், கோப்பாயை சேர்ந்த 23 பேரும் அடங்குவதாகக் கூறினர்.
கோவிட் – 19 வைரஸ் வேகமாக பரவி வருவதால் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. யாழ். கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் திங்கள்கிழமை முதல் ஒரு வாரமாக மூடப்பட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் 88 பேர் கோவிட் – 19 வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை 23 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், வியாழக்கிழமை அந்த எண்ணிக்கை 77 ஆகவும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக அறிவிப்பு வரும் வரை திருமணங்கள், கூட்டங்கள் மற்றும் பிற நிகழ்வுகளையும் உள்ளூர் அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் தேவையற்ற நடமாட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.