கல்லறையை தாங்களே தோண்டிய தாயும் மகளும் : தந்தையின் கொடூரத்தை அம்பலப்படுத்திய இன்னொரு மகள்!!

பிரேசில்..

பிரேசில் நாட்டில் ஒரு தாயாரும் அவரது ஒன்பது வயது மகளும் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு தங்கள் கல்லறைகளை அவர்களே தோண்ட கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், 34 வயதான கிறிஸ்டியன் அரினா மற்றும் அவரது மகள் கரோலின் விட்டோரியா ஆகியோரை கொ.லை செ.ய்.த கு.ற்றத்திற்காக ஃபேப்ரிசியோ புயிம் அரினா என்பவரை தே.டிவருகின்றனர்.

ஃபேப்ரிசியோ தமது மனைவி மற்றும் 9 வயது மகளை கொ.ன்.று, தமது குடியிருப்பின் உள் முற்றத்தில் பு.தைத்துள்ளதாக கிறிஸ்டியன் அரினாவின் இன்னொரு மகள் கு.ற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இருப்பினும், கு.ற்றச்சாட்டை முன்வைத்துள்ள இளம்பெண்ணுக்கும் ஃபேப்ரிசியோ முன்னெடுத்த கு.ற்றச்செயலில் பங்குள்ளதா என்பது குறித்தும் பொலிசார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடற்கூராய்வில், கிறிஸ்டியன் அரினா க.த்.தி.யா.ல் தா.க்.க.ப்.ப.ட்.டு இ.றந்ததாகவும், அவரது 9 வயது மகள் த.லை.யி.ல் தா.க்.க.ப்.ப.ட்.டு இ.ற.ந்.த.தா.க.வு.ம் தெரிய வந்துள்ளது.

கடந்த 2ம் திகதியே, ஃபேப்ரிசியோ புதிதாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட தமது குடியிருப்பின் உள் முற்றத்தை பொலிசார் தோ.ண்டி பரிசோதித்துள்ளனர்.

முன்னதாக, கிறிஸ்டியன் அரினா தமது ஆண் நண்பருடன் மா.யமானதாகவும், கூடவே தமக்கு நெருக்கமான மகளை அழைத்து சென்றதாகவும் தகவல் பரவியது.

இந்த நிலையிலேயே ச.ந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார், ஃபேப்ரிசியோ புதிதாக கட்டிமுடித்த உள் முற்றத்தை தோண்டி பரிசோதிக்க முடிவு செய்தனர். தற்போது மா.யமாகியுள்ள ஃபேப்ரிசியோவை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பெற்ற மகளை உ ள்ளாடையால் க.ழு.த்.தை இ.று.க்.கி கொ.லை செ.ய்.த தா ய் : கு ப்பையில் வீ சிய த ந்தை!!

பிரேசிலில்..

பெ.ற்.ற ம.களை உ.ள்.ளா.டை.யா.ல் க.ழு.த்.தை இ.று.க்.கி தா.ய் கொ.லை செ.ய்.ய, த.ந்.தை.யோ அ.தை கு.ப்பைத் தொ.ட்டியில் வீ.சி.ச் செ.ன்றுள்ளார்.

இந்த கோ.ர ச.ம்.ப.வ.ம் நடந்தது பிரேசிலில்… Rosiane Nascimento Correia (20) என்ற பெண் ம.ன அ.ழு.த்.த.ம் கா ரணமாக தா ன் பெ ற்ற ம.க.ளை கொ.லை செ.ய்.து.வி.ட்.ட.தா.க பொ லிசாரிடம் தெ ரிவித்துள்ளார்.

பி.ள்.ளை.யை.க் கொ.ன்.று.வி.ட்.டு, அ.தை ம.றை.ப்.ப.த.ற்.கா.க, Correiaவும் அ.வரது கா.தலருமான Antonio Carlos Batista Conrado (26)ம், யா.ராவது தெ.ருவில் ந.டமாடுகிறார்களா எ.ன்று பா.ர்க்கும் காட்சிகள் CCTV கமெராவில் பதிவாகியுள்ளன.

பின்னர், Antonio, கு.ழந்தையை ஒ.ரு கு.ப்பை போ.டும் க.வரில் வை.த்து தெ.ருவில் போ.ட்டுவிட்டு இ.ருவருமாக ஒ.ன்றும் தெ.ரியாதது போ.ல வீ.ட்டுக்குள் செல்வதை CCTV கமெராவில் பதிவாகியுள்ள கா.ட்சியில் காணமுடிகிறது.

மறுநாள், குப்பை பொறுக்க வந்த ஒருவர், குப்பை கவரில் கு.ழ.ந்.தை.யி.ன் உ.ட.லை.க் க.ண்டு பொ லிசாருக்கு த கவலளித்துள்ளார். த ம்பதிக்கு ஏற்கனவே மூ ன்று கு.ழந்தைகள் இருப்பதுடன், இ ந்த பெ ண் கு.ழந்தை Antonioவுக்கு பி றந்ததில்லை எ ன்பதாலும்,

இ ருவரும் த ங்களுக்கு அ ந்த கு.ழந்தை வே ண்டாம் எ ன மு டிவு செ ய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். தம்பதியும், கு.ழந்தையை ம.றை.க்.க அ.வர்களுக்கு உ.தவியதாக Correiaவின் ச.கோதரரும் கை.து செ.ய்யப்பட்டுள்ளார்கள்.

80 வயது தாத்தாவை காதலித்து திருமணம் செய்த 29 வயது மாணவி!!

29 வயது மாணவி..

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 29 வயது இளம் பெண் ஒருவர், தாத்தா வயதுடைய 80 வயது நபரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

காதல் எந்த வயதிலும் வரும், அதற்கு வயது வித்தியாசமே கிடையாது என்று நாம் பல கவிதை புத்தகங்களில் படித்திருப்போம். அப்படி ஒரு காதல் தான் 80 வயது நபருக்கும், 29 வயது பெண்ணுக்கும் வந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனைச் சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க Terzel Rasmus என்ற பெண் தன்னை விட 51 வயது மூத்தவரான 80 வயது மதிக்கத்தக்க Wilson Rasmus என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அவர் தன்னை மிகவும் அழகாக கவனித்து கொள்வதாகவும், அவருடன் இருப்பதில் மகிழ்ச்சியடைவதாக கூறும், Terzel Rasmus, அவரை முதன் முதலில் கடந்த 2016-ஆம் ஆண்டு செய்தித் தாள் நிகழ்ச்சி ஒன்றில் பார்த்ததாக கூறினார்.

அவருக்கு பேரக்குழந்தைகள் இருந்த போதிலும், அவருடைய காதல் மிக அழகாக இருந்தது. முதல் சந்திப்பே இருவருக்கும் இடையே ஒரு ஈர்ப்பை கொடுத்தது. அவர் தான் முதலில் என்னை கவனித்தார், அந்த நிகழ்ச்சியில் என் அருகில் வந்து உட்காரலாமா என்று கேட்டார்.

அதன் பின் இருவரும் பேசிக் கொண்டோம், இதைத் தொடர்ந்து இருவரும் வெளியில் செல்ல துவங்கினோம். டேட்டிங் சென்றோம். நாங்கள் சந்தித்த ஒரு வருடம் கழித்து, திருமணம் செய்து கொண்டோம்.

இவர்களின் திருமணத்திற்கு Terzel Rasmus பெற்றோர் ஒப்புதல் அளித்துள்ளனர். அதே போன்று Terzel Rasmus தன்னுடைய 56 வயது மகளை சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியர் தற்போது ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர், அவரின் படிப்புக்கு தேவையானதை Terzel Rasmus செய்து வருகிறார். இருவரும் வெளியில் சென்றால் மகள்-தந்தை என்று சில கூறுவதாகவும், ஆனால் அதை எல்லாம் இவர்கள் கண்டு கொள்ளாமல் தங்கள் காதல் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

சுற்றுலா விடுதியில் களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட 25 பேருக்கு அபராதம், 14 பேருக்கு பிடியாணை!!

சுற்றுலா விடுதியில்..

சுற்றுலா விடுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட 25 பேருக்கு தலா 4000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், 14 பேருக்கு பிடியாணை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி மட்டக்களப்பு – கல்லடியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் கோவிட் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி 39 பேர் களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் களியாட்ட நிகழ்வை நடத்தியவர்கள் மீது நீதிமன்ற அனுமதியின் பேரில் பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு மீதான விசாரணை நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போதே 25 பேருக்கு தலா 4000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், மன்றில் ஆஜராகத் தவறிய 14 பேருக்கும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

யாழில் முதன்முதலாக அழகிய இளம் பெண்ணாக மாறிய இளைஞன்!!

யாழில்..

இலங்கையில் முதல் முறையாக யாழ் போதனா வைத்தியசாலையில் ஆண் ஒருவர் பெண்ணாக மாறிய அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது. மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 22 இளைஞன் பெண்ணாக அறுவைச் சிகிச்சை மூலம் மாறியுள்ளார்.

சத்திரசிகிச்சை நிபுணர் இளஞ்செழிய பல்லவன் 12 மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர் ஆண் ஒருவரை பெண்ணாக மாறி வெற்றிகரமாக இந்த சத்திர சிகிச்சையை மேற் கொண்டுள்ளார்.

சத்திர சிகிச்சைக்குள்ளான குறித்த நபர் தனது கணவருடன் சந்தோசமாக வாழ்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்திய விவசாயிகளின் போராட்டத்தில் இலங்கை தேசியக் கொடியுடன் இருக்கும் நபர் யார்!!

இலங்கையர்..

இந்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள விவசாய சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கையர் ஒருவரும் கலந்துகொண்டுள்ளார்.

குறித்த இலங்கையரின் நடவடிக்கை இந்திய ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளன. இந்த போராட்டத்தில் இணைந்துள்ள இலங்கையர் தெரணியாகல பகுதியில் வசிக்கும் நாலக நாரமல்ல ஆகும்.

கடந்த ஆண்டு இந்தியாவுக்குச் சென்ற நாலக, கோவிட் – 19 தொற்றுநோய் பரவலால் விமானம் இரத்து செய்யப்பட்டதால் சுமார் ஒரு வருடம் இந்தியாவில் செலவிட வேண்டியிருந்தது.

இந்நிலையிலேயே, விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்க அவர் இலங்கைக் கொடியுடன் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விவசாயிகளின் போராட்டத்திற்கு அவர் அளித்த ஆதரவை இந்திய ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன.

விவசாயிகளின் போராட்டம் பற்றிய தகவல்களை இலங்கையர்களிடம் சமூக ஊடகங்களில் தெரிவிக்க நாலக மேற்கொண்ட முயற்சி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதானி உட்பட பல தனியார் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்திய அரசு நிறைவேற்றிய விவசாய சட்டங்களுக்கு எதிராக 2020 செப்டம்பரில் தொடங்கிய இந்திய விவசாயிகள் போராட்டம் இன்றுவரை தொடர்கிறது.

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் முழுமையாக திறக்கும் திகதி அறிவிப்பு!!

பாடசாலை..

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் முழுமையாக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர ஏனைய பாடசாலைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. மேல் மாகாணணத்தின் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டத்தில் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழுவின் பரிந்துரைகள் பெறுவதற்கு கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அதிகாரிகளிடம் தகவல் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன் மார்ச் மாதம் 15ஆம் திகதி மேல் மாகாணத்தின் பல பாடசாலைகள் ஆரம்பிக்க முடியும்.

அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 80 பாடசாலைகள் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனைய பாடசாலைகள் திறப்பதற்கு எவ்வித தடைகளும் இல்லை.

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11ஆம் திகதி வரையில் சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் நாட்டில் உள்ள சகல பாடசாலைகளும் சுகதார அதிகாரகளின் அனுமதியின் கீழ் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா தெற்கு வலயத்தில் இருந்து 3 பாடசாலைகள் 1000 தேசிய பாடசாலை திட்டத்தில்!!

ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ் வவுனியா தெற்கு வலயத்தில் இருந்து 3 பாடசாலைகள் தெரிவுக்காக முன்மொழியப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் நாடு முழுவதும் 1000 புதிய தேசிய பாடசாலைகளை உருவாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் இருந்து தமிழ்- முஸ்லிம்- சிங்களப் பாடசாலைகள் ஒவ்வொன்று வீதம் 3 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக உள்வாங்கப்படவுள்ளன.

அந்தவகையில் செட்டிகுளம் மகாவித்தியாலயம், அல்-ஹாமியா முஸ்லிம் வித்தியாலயம், பரக்கும் மகாவித்தியாலயம் என்பன தேசிய பாடசாலைகளாக உள்வாங்கப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் ஏற்கனவே இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, தமிழ் மத்திய மகாவித்தியாலயம், முஸ்லிம் மகாவித்தியாலயம், மடுகந்தை தேசிய பாடசாலை, காமினி மகாவித்தியாலயம் என்பன தேசிய பாடசாலைகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீநகர் கிராம மக்கள் சத்தியாக்கிரகப் போராட்டம்!!

ஸ்ரீநகர் கிராம மக்கள்..

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீநகர் கிராமமக்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சத்தியாக்கிரக போராட்டத்தில் இன்று (09.02.2021) ஈடுபட்டுள்ளனர்.

20 வருடங்களாகியும் தமது கிராமத்திற்கு காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை, உட்கட்டுமான வசதிகள் செய்துதரப்படவில்லை, மைதானம் இன்மை, வீட்டுத்திட்டம் வழங்காமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், பலவருடங்கள் ஆகியும் எமது கோரிக்கைகளிற்கு தீர்வு கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுனர், அரச அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தியும் எமது விடயத்தில் எவரும் கரிசனை கொள்ளவில்லை.

உட்கட்டுமானம் சீரின்மையால் மழைக் காலங்களில் வீடுகளில் நீர் தேங்கி நிற்கிறது. காணி உரிமைப்பத்திரம் வழங்கினால் அதனை வங்கிகளில் வைத்து கடன் பெற்றாவது வீடுகளை கட்டிக்கொள்ளமுடியும். அதுவும் வழங்கப்படவில்லை.

அத்துடன் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள புனர்வாழ்வு இணைப்புக் காரியாலம் மற்றும் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் எமது கிராமத்திற்குள்ளேயே வருகிறது.

எமது அடிப்படை கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளால் பலமுறை வாக்குறுதிகள் வழங்கியும் எவரும் அதனை தீர்த்துவைக்கவில்லை. எமாற்றமே மிஞ்சியது. எனவே எமது கோரிக்கைகளிற்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு பிரதேச செயலாளர் ந.கமலதாசன், பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் ஆகியோர் சென்றிருந்ததுடன் மக்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

முதற்கட்டமாக கிராமத்தில் உள்ள 95 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், ஏனைய காணிகள் குளத்தின் ஒதுக்கத்திற்குள் வருகிறது.

அதனை உரிய திணைக்களம் விடுவித்து தந்தால் அதற்கான உறுதிகளையும் வழங்கமுடியும் என்று பிரதேச செயலாளர் தெரிவித்ததுடன் ஏனைய பிரச்சனைகள் தொடர்பாக சாதகமாக ஆராய்வதாக தெரிவித்திருந்தார். கிராமத்தினையும் பார்வையிட்டிருந்தார்.

இதேவேளை கிராமத்தின் பின்பகுதியில் குளத்தின் நீரேந்து பகுதியில் 55 பேரது காணிகள் அமைந்துள்ளது. அதனை விடுவிப்பது தொடர்பாக எமது தலைமை அலுவலகமே தீர்மானிக்கமுடியும்.

எனவே நீங்கள் கோரிக்கைகளை வழங்கினால் மேலதிக நடவடிக்கைகளிற்காக அதனை எமது தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவைப்பதாக போராட்டகாரர்களை சந்தித்த நீர்பாசன திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் குறித்த மக்களின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

வவுனியாவில் பாடசாலை மாணவி சடலமாக மீட்பு!!

பாடசாலை மாணவி..

வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள வீட்டில் 16 வயதுடைய சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவி தூ.க்கில் தொ.ங்கிய நிலையில் இன்று (09.02.2021) மாலை ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளார்.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கா.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய பாடசாலை மாணவி மதியம் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பியதுடன் அவரும் அவரது தங்கையும் வீட்டில் இருந்துள்ளனர்.

குறித்த சமயத்தில் குறித்த மாணவி வீட்டின் அருகேயுள்ள பகுதியில் தூ.க்கில் தொ.ங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். வீட்டினுள் இருந்த தங்கை வெளியே சென்ற சமயத்தில் சகோதரி தூ.க்கில் தொ.ங்கிய நிலையில் இருப்பதை அவதானித்து,

உடனடியாக அயலவர் வீட்டிற்கு சென்று நடந்தவற்றினை தெரிவித்துள்ளார். எனினும் அயலவர்கள் வீட்டிற்கு வந்த சமயத்தில் குறித்த மாணவி தூ.க்கில் தொ.ங்கிய நிலையில் ச.டலமாக காணப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் அயலவர்கள் மாணவியின் பெற்றோர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தமையினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மாணவியின் ம.ரணம் தொடர்பிலான வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனைகளுக்காக மாணவியின் ச.டலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கல்வி கற்கச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு!!

நவ்வி பகுதியில்..

வவுனியா ஓமந்தை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் நேற்றயதினம் மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து சக மாணவனின் வீட்டிற்கு சென்று படித்து விட்டு வருவதாக தெரிவித்து சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரை காணவில்லை என ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் இன்று (09.02.2021) காலை முறைப்பாடு அழிக்கப்பட்டிருந்தது. இதேவேளை குறித்த சிறுவனின் புத்தகபை குறித்த சிறுவனின் சக மாணவனின் வீட்டிற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஒமந்தை பொலிஸார் மோப்ப நாய் சகிதம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சிறுவன் அவ் வீட்டில் காணப்பட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா நவ்வி ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வரும் 07 வயதுடைய ப.அபிசாந் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் ஒருவர் 6 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் கடனாளி : மத்திய வங்கியின் புள்ளிவிபரம்!!

மத்திய வங்கியின் புள்ளிவிபரம்..

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டி இருந்த மொத்தமான கடன் தொகை 14 ஆயிரத்து 605 பில்லியன் ரூபாய் என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிபர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த கடன் தொகையில் 8 ஆயிரத்து 258.9 பில்லியன் ரூபாய் தேசிய ரீதியில் செலுத்த வேண்டியது எனவும் 6 ஆயிரத்து 346.7 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு கடன் எனவும் மத்திய வங்கி கூறியுள்ளது.

இதனடிப்படையில் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் செலுத்த வேண்டிய இருந்த கடன் தொகையின் அடிப்படையில், இலங்கையில் தனிநபர் கடன் 6 லட்சத்து 69 ஆயிரத்து 981 ரூபாய். இதில் 2 லட்சத்து 91 ஆயிரத்து 133 ரூபாய் உள்நாட்டு கடன்.

இலங்கையை சேர்ந்த அனைத்து பிரஜைகளும் இரண்டு லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் வெளிநாட்டுக்கு கடன்காரர்கள். தனி நபர் கடன் சுமை என்பது நாடு என்ற வகையில் பெற்றுக்கொள்ளும் முழு கடன் தொகை நாட்டில் வாழும் மொத்த சனத்தொகையின் அடிப்படையில் பிரிக்கும் போது தனி நபர் கடன் தொகை கணக்கிடப்படுகிறது. இலங்கை மத்திய வங்கியின் புள்ளவிபரத்திற்கு அமைய இலங்கையின் சனத் தொகை 21.8 மில்லியனாகும்.

காதலர்களுக்கு பொலிஸார் விடுக்கும் கடுமையான எச்சரிக்கை!!

காதலர்களுக்கு..

காதலர் தினத்தை கொண்டாடும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடுவதற்கு அனுமதியில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளம் ஊடாக அவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடு செய்வது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான விடயங்களுக்காக ஹோட்டல்கள் மற்றும் நிகழ்வு மண்டபங்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமான முறையில் சிசுவின் சடலம் அடக்கம் : நீதிபதி முன்னிலையில் தோண்டி எடுப்பு!!

காத்தான்குடி..

சந்தேகத்திற்கிடமான முறையில் அடக்கம் செய்யப்பட்ட பிறந்த சிசுவின் சடலம் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று மாலை தோண்டி எடுக்கப்பட்டது. கடந்த 2ம் திகதி காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனை மையவாடியில் குறித்த சிசுவின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சிசுவின் தாய் வைத்திய பரிசோதனைக்காக சென்றபோது அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்படவே மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி சிசுவின் தாயை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் பொலிஸார் வி.சாரணைகளை மேற்கொண்டனர்.

அதன்படி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.றிஸ்வான் குறித்த ச.டலத்தை தோ.ண்டி எடுத்து வி.சாரணைக்குட்படுத்துமாறு உத்தரவிடவே நேற்று மாலை நீதிபதி முன்னிலையில் ச.டலம் தோண்டி எடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரிகள், உயர் பொலிஸ் அதிகாரிகள், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். காத்தான்குடி பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை மேற்கொண்டுண்டுள்ளனர்.

இலங்கையில் முதன் முதலாக நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை!!

சத்திர சிகிச்சை..

பிறப்பிலேயே காது கேட்காத பிரச்சினையுடைய இரண்டு வயதுடைய குழந்தைக்கு கோக்லியர் உள்வைப்பு சத்திரசிகிச்சை ஒன்று ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை அரச வைத்தியசாலை ஒன்றில் இரண்டு காதுகளுக்கும் இவ்வாறான சத்திரசிகிச்சை செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் தொண்டை காது மூக்கு தொடர்பான விசேட நிபுணர் சன்ஜீவனி ரூபசிங்கவின் தலைமையில் விசேட வைத்தியர்கள் 10 பேர் இணைந்து இதனை செய்துள்ளனர்.

10 மணித்தியாலத்திற்கு அதிக நேரம் இந்த சத்திரசிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. இந்த சத்திரசிகிச்சைகாக பயன்படுத்தப்படும் ஒரு உபகரணத்திற்கு 25 லட்சம் ரூபாய் வரையில் செலவிடப்படுகின்றது.

தனியார் வைத்தியசாலையில் இந்த சத்திரசிகிச்சை செய்வதற்கு 75 லட்சம் ரூபாய் செலவிடப்படுகின்றது. சத்திர சிகிச்சைக்கு அவசியமான உபகரணங்கள் குழந்தையின் பெற்றோர்கள் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

இதுவரை இலங்கையில் இது போன்ற சத்திரசிகிச்சைகள் ஒரு காதிற்கு மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இரண்டு காதுகளுக்கு ஒரே நேர்த்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதன் மூலம் அந்த குழந்தை கேட்கும் திறனை பெறும் என குறிப்பிடப்படுகின்றது.

திருமணத்தில் கலந்துகொண்ட மணமக்கள் உட்பட 136 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

குருணாகல் அம்பான்பொல பிரதேசத்தில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்துக்கொண்ட மணமக்கள் உட்பட 136 பேருக்கு கோவிட் – 19 வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளது.

இந்த கோவிட் – 19 கொத்தணியின் வைரஸ் துரிதமாக பரவும் என்பதுடன் அதிகளவிலான நோய் அறிகுறிகளை காண்பிப்பதால், வைரசின் புதிய திரிபாக இருக்கலாம் என சுகாதார துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 21 ஆம் திகதி அம்பன்பொல பிரதேசத்தில் இந்த திருமண வைபவம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தின் வரவேற்பு வைபவம் கடந்த ஜனவரி 24 ஆம் திகதி கம்பஹா அத்தனகல்லையில் நடைபெற்றுள்ளதுடன் அதில் 260 பேர் கலந்துகொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கோவிட் – 19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 136 பேரில் 96 பேர் மினுவங்கொடை உடுகம்பளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனைய 40 பேர் அம்பான்பொல பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.