மணமகளுக்கு கொரோனா : மணமகன் உட்பட 35 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்!!

மணமகளுக்கு கொரோனா..

மினுவாங்கொடவில் உள்ள மாடமுல்லா பகுதியைச் சேர்ந்த மணமகள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, திருமணத்தில் கலந்து கொண்ட மணமகன் உட்பட 35 குடும்பங்கள் அடங்கிய குழு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டதாக மினுவாங்கொட சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு மளிகை சாமான்களை வாங்க மினுவங்கொடவில் உள்ள ஒரு கடைக்குச் சென்றபோது மணமகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மினுவாங்கொட நிர்வாக பொது சுகாதார ஆய்வாளரால் மணமகன் உடனடி ஆன்டிபாடி பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும், அவர் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்ததும், மணமகள் சிகிச்சைக்காக வாரகபோலா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் திருமண விழாவில் பங்கேற்ற பின்னர், தனிமைப்படுத்தப்பட்ட 35 குடும்பங்கள் எதிர்வரும் சில நாட்களுக்குள் பி.சி.ஆர் தேர்வுக்கு அனுப்பப்படுவர் என நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பில் பரபரப்பை ஏற்படுத்திய இலங்கை ஜோதிடர்!!

கொரோனா வைரஸ் தொடர்பில் ..

கொரோனா வைரஸ் போன்ற தொற்று நோய் ஒன்று உலகை அச்சுறுத்தும் என தனக்கு முன்னரே தெரியும் என இலங்கையின் பிரபல ஜோதிடர் சந்திரசிரி பண்டார தெரிவித்துள்ளார்.

மக்கள் அச்சமடைவார்கள் என்பதனாலேயே தான் வெளியே கூறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நானும், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்கவும் 2019ஆம் ஆண்டு கலந்துரையாடல் மேற்கொண்டோம்.

அதற்கமைய 2019ஆம் செப்டெம்பர் மாதம் அளவில் எனக்கு தோன்றியது. எனினும் இவ்வளவு தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான திறன் கொண்ட உலக நாடுகளுக்கு இது சாத்தியமா என எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது.

எனினும் நான் தீவிரமாக ஆராய்ந்த போது இரண்டு வருடங்களுக்கு மேல் கையை கட்டிக்கொண்டு, வாயை மூடிக்கொண்டு வாழ நேரிடும் என எனக்கு சோதிடத்தில் காட்டியது.

எனக்கு ஒரு பயம் ஆரம்பம் முதல் இருந்தமையினால் இதனை உலகிற்கு கூறவில்லை. இதனை எஸ்.பீ.திஸாநாயக்கவும் பெரிதாக நம்பவில்லை. தற்போது அவரும் தனிமைப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நண்பர்களின் ஒன்றுகூடலில் கலந்து விட்டு வீடு திரும்பிய இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவேம்பு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனொருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் செங்கலடியில் வசிக்கும் இராமகிருஷ்ணன் மயூரன் (வயது 27) என்பவரே பலியாகியுள்ளார். குறித்த இளைஞன் சந்திவெளியிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும் போது மாவடிவேம்பு பகுதியில் வைத்து எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் மோதுண்டதால் படுகாயங்களுக்குள்ளான நிலையில் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

இதன்போது மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நண்பர்களின் ஒன்றுகூடலில் கலந்து விட்டு திரும்பும் வழியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் பாடசாலை மாணவர்களின் வரவு அதிகரிப்பு!!

மாணவர்களின் வரவு..

கடந்த 11 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டிற்கான வவுனியா மாவட்டம் தவிர்ந்த வடக்கிலுள்ள ஏனைய பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பமாகியிருந்தது. எனினும் மாணவர்களின் வரவு மிகவும் குறைந்தளவில் காணப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதையடுத்து நகரிலுள்ள ஆறு பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தது.

எனினும் தொற்றாளர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையடுத்து கடந்த 18 ஆம் திகதி வவுனியாவில் மூடப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்பட்டு கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இருந்தும் மாணவர்களின் வரவு மிகவும் குறைந்தளவில் காணப்பட்டுள்ளதுடன், பெற்றோர்களிடம் காணப்பட்ட கொரோனா அச்சம் காணமாக மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்றைய தினம் குறித்த பாடசாலைகளில் மாணவர்களின் வரவு வழமைக்குத் திரும்பியதை அவதானிக்க முடிந்துள்ளதுடன், கொரோனா நடைமுறை பாதுகாப்புக்களுடன் பெற்றோர்கள் மாணவர்களைப் பாடசாலைக்கு அழைத்துச் சென்றதை அவதானிக்கவும் முடிந்துள்ளது.

நாட்டின் பல இடங்களில் தங்கம் உள்ளிட்ட அரிய வகை உலோகங்கள் : செல்வந்த நாடாக மாறவுள்ள இலங்கை?

செல்வந்த நாடாக மாறவுள்ள இலங்கை?

இலங்கையில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடங்களில் ஒரு டொன் பாறைக்குள் 5 முதல் 10 கிராம் அளவிலான தங்கம் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் தொடர்பான மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் சில பிரதேசங்களில் தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் கண்டறியப்பட்ட தங்கத்தின் அளவானது ஒப்பீட்டளவில் அதிகமானது.

இந்தியாவில் ஒரு டன் பாறைக்குள் 0.5 கிராம் தங்கம் கிடைக்கும் நிலையில் ஆபிரிக்காவில் ஒரு டன் பாறைக்குள் 100 கிராம் தங்கம் கிடைக்கிறது.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்கமானது ஒரு டன் பாறைக்குள் 5 முதல் 10 கிராம் அளவிலானதாக இருக்கிறது. இதேவேளை, 12,000 சதுர கிலோமீட்டர் பரப்பிலான நிலப்பகுதியில் விலைமதிப்புள்ள பாறைகள் உள்ள வலயமும் கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களை உள்ளடக்கியதாக இந்த வலயம் இருக்கும் நிலையில் இந்த வலயத்தில் தங்கம், செப்பு, நிக்கல், இரும்பு உள்ளிட்ட அரிய உலோகங்களும் காணப்படுகின்றன.

மாத்தளை, பதுளை, பண்டாரவளை, பலாங்கொடை, இரத்தினபுரி, எல்ல, வெல்லவாய, உசன்கொட மற்றும் சேருவாவில முதலான பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அகழ்வுகளில் சிறு அளவில் தங்கம் கிடைத்துள்ளது.

எனவே நாட்டில் தங்க சுரங்க கைத்தொழில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் நாட்டில் தங்க சுரங்க கைத்தொழில் ஆரம்பிக்கப்பட்டால் எதிர்காலத்தில் இலங்கை செல்வந்த நாடாக மாறும் வாய்ப்பு அதிகம் என சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

-தமிழ்வின்-

கொழும்பு காலி முகத்திடலில் காதலர்களுக்கு ஏற்பட்ட நிலை : அதிகாரிகள் நடவடிக்கை!!

காலி முகத்திடலில்..

காலி முகத்திடலில் இருந்த காதலர்கள் இருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

சுகாதார அதிகாரிகள் அந்த ஜோடிக்கு அவ்விடத்திலேயே நடத்திய அன்டிஜன் பரிசோதனையில் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியுள்ளது.

இந்த விடயம் தெரியவந்தவுடன் தாம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டாம் என குறித்த காதலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எனினும் மாற்று வழியில்லாமையினால் சுகாதார அதிகாரிகள் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அங்கிருந்து அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் கடந்த வாரம் காலி முகத்திடலில் இருந்து பரவலாக தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பாடசாலை சுற்றுலா சென்ற மாணவி மரணம் : ஆசிரியை கைது!!

சுற்றுலா சென்ற மாணவி..

பலங்கொட பகுதியில் சுற்றுலா சென்ற மாணவி ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கல்தொட்ட பட்டகொல பிரதேசத்தில் மாணவர்கள் சிலர் ஏரியில் மூழ்கிய நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவி உயிரிழந்தமை தொடர்பில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்தொட்ட பொலிஸ் பிரிவில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பாடசாலையில் கற்கும் மாணவிகள் மற்றும் மாணவர்கள் 15 பேர் நேற்று முன்தினம் பாடசாலை சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு ஏரியில் குளிக்க சென்ற போது 16 வயதுடைய மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் எவ்வித அனுமதியுமின்றி குறித்த ஆசிரியை மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்றுள்ளமை தெரியவவந்துள்ளது. அதற்கமைய ஆசிரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியாவில் 362 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!

கொரோனா..

வவுனியாவில் இதுவரை 362 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்காணப்பட்டுள்ளதுடன் ஒருவர் இருந்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடமாகாணத்தில் ஜனவரி மாதத்தில் 557 பேர் கோரோனா வைரஸ் தொற்றுடையவர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 330 பேர் வவுனியா மாவட்டத்திலிருந்தும் 159 பேர் மன்னார் மாவட்டத்திலிருந்தும்,

46 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்தும் 14 பேர் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும், 8 பேர் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கோரோனா தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலத்திலிருந்து வடமாகாணத்தில் இதுவரை 805 கோவிட் -19 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் அதிகபட்சமாக 362 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 221 பேரும், மன்னார் மாவட்டத்தில் 176 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 34 பேரும் முல்லலைத்தீவு மாவட்டத்தில் 12 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

கோரோனா தொற்று ஆரம்பமான காலம் முதல் இன்று வரை வடமாகாணத்திலே கோவிட் -19 நோயால் மூன்று இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் இரு இறப்புக்களும் வவுனியா மாவட்டத்தில் ஒரு இறப்பும் ஏற்பட்டுள்ளது. என்று குறித்த அறிக்கையில் உள்ளது.

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு உலகில் இயல்பு வாழ்க்கை மீளத்திரும்பாது : வெளியான அறிவிப்பு!!

கொரோனா வைரஸ்..

நடப்பில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் செயற்திட்டத்தின் அடிப்படையில் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு உலகில் இயல்பு வாழ்க்கை மீளத்திரும்பாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசிகள் காரணமாக தொற்று நோயின் பரவல் குறையும் என்று பொருளாதாரம் தொடர்பான லண்டன் பள்ளியின் உலக சுகாதார கொள்கை உதவி பேராசிரியர் வைத்திய கலாநிதி கிலேர் வென்ஹம் இதனை தெரிவித்துள்ளார்.

உலக சனத்தொகை பாதுகாக்கப்படும் வரை கொரோனா தொற்று நோயின் பரவல் முடிவடையாது என்று அவர் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி உலகளாவிய ரீதியில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக வழங்கி முடிப்பதற்கு 2023-2024ஆம் ஆண்டு வரை செல்லக்கூடும். இது நீண்ட காலம் என்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை விரைவில் வழமைக்கு திரும்பாது என்று கிலேர் வென்ஹம் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டாலும் வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்று ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் எல்லை கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் கிலேர் வென்ஹம் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை : ஆயிரக்கணக்கானோர் கைது!!

விசேட சோதனை..

காவல்துறையினர் நேற்று நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின்போது சுமார் 40 ஆயிரம் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இவை சுமார் இரண்டாயிரம் சோதனை சாவடிகளில் சோதனையிடப்பட்டுள்ளன. இந்த சோதனை நடவடிக்கைகளில் 14ஆயிரத்து 420 காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

சோதனைகளின்போது 43ஆயிரத்து 596 வாகனங்கள் சோதனையிடப்பட்டநிலையில் 80ஆயிரத்து 985 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது போ.தை.வ.ஸ்.து, சு.டு.க.ல.ன்.க.ள் மற்றும் போக்குவரத்து மீறல்தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 172 பேர் ஹெ.ரோ.யி.ன் மற்றும் க.ஞ்.சா போ.தை.ப்.பொ.ரு.ளை வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8942 உள்ளூர் ம.து.பா.ன.ங்.க.ளு.ம் மூன்று உள்ளூர் தயாரிப்பு து.ப்.பா.கிகளும் கைப்பற்றப்பட்டதுடன் இதனுடன் தொடர்புபட்ட 243 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 40பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களாவர்.

மேலும், 195 பேர் ம.து.போ.தை.யி.ல் வாகனங்களை செலுத்தியமைக்காகவும், 5514 பேர் போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறியமைக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உருமாறிய மூன்று வகை கொரோனா : அதிக மரண ஆபத்தை ஏற்படுத்துமாம்!!

கொரோனா..

14 நாடுகளில் பரவியுள்ள 3 புதிய வகை கொரோனா வைரஸால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா சபை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா சபையின் அங்கமான பாஹோ என்று அழைக்கப்படுகின்ற அமெரிக்க சுகாதார அமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தற்போது உருமாறிய 3 வகை கொரோனா வைரஸ் 14 நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதில் இங்கிலாந்து நாட்டிலும் தென்னாபிரிக்காவிலும் கண்டறியப்பட்டவை இரு வகை கொரோனா வைரஸ் என்றும், மூன்றாவது வகை வைரஸ் பிரேஸில் நாட்டின் அமேசனோஸ் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்படுகின்றது.

சீனாவில் இருந்து வந்த கொரோனா வைரஸை விட உருமாறிய கொரோனா அதிக மரண ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் : உலக சுகாதார அமைப்பின் திடீர் அறிவிப்பு!!

தடுப்பூசி..

பிரித்தானியா அதன் தடுப்பூசி திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மிக வேகமாக அதிகமான கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்திவரும் நாடுகளில் பிரித்தானியா, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னிலையில் உள்ளன.

இந்நிலையில், பிரித்தானியா, நாட்டில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் அனைவருக்கும் முதல் கட்டமாக 2021 பெப்ரவரி 15ம் திகதிக்குள் தடுப்பூசிகளை வழங்கி முடிக்கவுள்ளது.

அதே சமயம், பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன், நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் இலையுதிர் காலத்திற்குள் தடுப்பூசியின் முதல் டோஸை வழங்கிவிட வேண்டும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதும், பிரித்தானியா அதன் தடுப்பூசி திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஏனெனில் ஏனைய வளர்ந்துவரும் நாடுகளுக்கும் தட்டுப்பாடு இன்றி தடுப்பூசிகள் நேரத்துக்கு கிடைக்க உதவியாக இருக்கும் என்பதனால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று தடுப்பூசி திட்டத்தில் முன்னற்றம் அடைந்துவரும் ஒவ்வொரு நாட்டையும், முதல் ஒன்பது முன்னுரிமைக் குழுக்களுக்கு தடுப்பூசி போட்டவுடன் இடைநிறுத்தம் செய்யவேண்டி வலியுறுத்திவருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

செட்டிகுளம் நகர் பகுதியில்..

செட்டிகுளம் நகர் பகுதியில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று (31.01.2021) உயிரிழந்துள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி செட்டிகுளம் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் வீதியை கடக்க முற்பட்டபோது மதவாச்சியில் இருந்து மன்னார் பகுதி நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் செல்லப்பன் ராஜ்குமார் வயது 54 என்ற நபரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

லண்டனில் கொரோனாவினால் உயிரிழந்த இலங்கை வைத்தியருக்கு அரச மரியாதை!!

உப்புல் நிஷாந்த திஸாநாயக்க..

பிரித்தானியாவின் லண்டன் நகரில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை வைத்தியருக்கு பிரபுகளுக்கான அரச மரியாதையுடன் இறுதி அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.

லண்டனில் கொரோனா நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நாத்தன்டிய, வெலிப்பென்னகஹமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய உப்புல் நிஷாந்த திஸாநாயக்க என்ற வைத்தியராகும்.

ஒரு பிள்ளையின் தந்தையான அவர் கடந்த 20 வருடத்திற்கு முன்னர் பிரித்தானியா சென்றுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான குறித்த வைத்தியர் கடந்த 20ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

North Middlesex University வைத்தியசாலையில் ஏனைய வைத்தியர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் அவருக்கு பிரபுகளுக்கான அரச மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இலங்கை இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு..

இந்த வருடத்தினுள் 2 லட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பான், தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல நாடுகளில் 2 லட்சம் தொழில் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த வருடத்தில் ஜப்பானிற்கு மாத்திரம் 20000 இலங்கையர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு தொழிலுக்காக செல்லும் இலங்கையர்களுக்கு ஜப்பான் மொழி கற்பது கட்டாயமயாகும்.

அதற்கமைய 1000 பேர் கொண்ட முதல் குழுவினருக்கு ஜப்பான் மொழி கற்பிக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும்.
இதுவரையில் புதிய தொழில் சந்தர்ப்பங்கள்ள இலங்கைக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும் சில நாடுகளின் தூதுவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

கொரோனா வைரஸிற்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் இலங்கை!!

கொரோனா தடுப்பூசி..

கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கும் நடவடிக்கையை இலங்கை வைத்திய பரிசோதனை நிறுவனம் ஆரம்பித்துள்ளது. தடுப்பூசி தயாரிக்கும் பணி கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பித்ததாக விசேட வைத்தியர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தடுப்பூசி தயாரிப்பதற்கான வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்தப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார் விசேட வைத்தியர்கள் சபையினால் தடுப்பூசி தயாரித்த பின்னர் அதன் முடிவுகளை பெற்றுக் கொள்வதற்கு ஒரு மாத காலமாகும்.

அந்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் சுகாதார சேவை ஊழியர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பிரிவில் இணைந்துள்ள பாதுகாப்பு இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கு முதலில் வழங்கப்படும்.

தயாரிக்கப்படும் தடுப்பூசியினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் கடந்த வார இறுதியில் பரீட்சார்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விசேட வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.