யாழ்ப்பாணத்தில் கணவன் கண்முன்னே மனைவி தீ.மூ.ட்.டி த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்ட சம்பவம் பதிவாகியுள்ளது. கணவனுடன் ஏற்பட்ட மு.ரண்பாட்டினை தொடர்ந்து கணவன் கண்முன்னே மனைவி தனக்கு தானே தீ.மூ.ட்.டி.க் கொ.ண்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனை தொடர்ந்து மனைவி மீது ப.ற்றியிருந்த தீ.யை கணவன் அ.ணைத்துள்ளதை தொடர்ந்து அந்த பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உ.யிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் – நாவற்குழி புதிய வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான நீ.நிரோஜினி (வயது 30) என்பவரே உ.யிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூண்டுலோயா – கம்பளை பிரதான வீதியில் நியங்கந்தர பகுதியில் இன்று (31.01.2021) மதியம் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உ.யிரிழந்துள்ளனர்.
கொத்மலையிலிருந்து பூண்டுலோயா பகுதியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் பூண்டுலோயா பகுதியிலிருந்து கம்பளை பகுதிக்கு சென்ற கனரக லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே உ.யிரிழந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உ.யிரிழந்தவர்கள் இராவணாகொடை கலப்பிட்டியவில் வசிக்கும் சந்தருவன் ரணசிங்க (வயது – 19) மற்றும் என்.ஜீ.தினேஷ் (வயது – 19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் போது, ஐந்து மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் குழு ஒன்று சுற்றி திரிந்ததாகவும்,
அந்த சுற்றி திரிந்த குழுவில் ஒரு சைக்கிளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாகவும் தெரிவித்த பொலிஸார், மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞனின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பில் கனரக லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் தொடர் சங்கிலி அ.றுப்புச் சம்பவங்கள் தொடர்பில் கை.க்.கு.ண்.டு.ட.ன் மூவர் கை.து செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒருவார காலப்பகுதியில் வவுனியா வேப்பங்குளம், சாந்தசோலை, இறம்பைக்குளம் பகுதிகளில் வீதியால் செல்லும் பெண்களை பின் தொடர்ந்து மோட்டர் சைக்கிளில் சென்ற நபர்கள் அவர்கள் அணிந்திருந்த சங்கிலிகளை அ.றுத்துச் சென்றிருந்தனர்.
இது தொடர்பாக பா.திக்கப்பட்டவர்கள் வவுனியா கு.ற்றத்தடுப்பு பொலிசாரிடம் மு.றைப்பாடு செய்திருந்தனர். குறித்த மு.றைப்பாடுகளிற்கமைய வி.சாரணைகளை மேற்கொண்ட பொலிசார் குறித்த சம்பவத்துடன்,
தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மதவாச்சி பகுதியை சேர்ந்த இரண்டு நபர்களை கைது செய்திருந்ததுடன், அவர்களது உடமையில் இருந்து கை.க்.கு.ண்.டு, மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன இலக்கத் தகடுகளையும் மீ.ட்டுள்ளனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட வி.சாரணைகளின் அடிப்படையில் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் அடைவு வைக்கப்பட்ட நிலையில் 9 பவுண் நகைகள் மீ.ட்கப்பட்டதுடன், கொழும்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கை.து செ.ய்யப்பட்டுள்ளார்.
கை.து செய்யப்பட்டவர்களை மேலதிக வி.சாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியாவில் நேற்றையதினம் (30.01.2021) 905 பேருக்கு கொவிட்19 தடுப்பூசி நேற்றையதினம் செலுத்தப்பட்டது. வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையாளர்கள், சுகாதார துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கு நேற்றையதினம் கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது.
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கோவிட்-19, “கோவிஷெல்ட்” தடுப்பூசிகள் வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்கள்கள், இராணுவத்தினருக்கு ஏற்றும் பணி நேற்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்துக்கு ஆயிரத்து 700 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டது. அதனை செலுத்தும் பணிகள் வவுனியா வைத்தியசாலை மற்றும் வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் போது 297 பேர் வவுனியா வைத்தியசாலை சார்ந்தவர்களிற்கும் 108 பேர் சுகாதார துறை சார்ந்தவர்களுமாக 405 பேருக்கு வவுனியா வைத்தியசாலையிலும்,
500 இராணுவத்தினருக்கு வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தில்
தடுப்பூசி போடப்பட்டுள்ளதுடன் இன்றைய தினமும் ஏனையவர்களிற்கு தடுப்பூசி போடும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 313 ஆக உயர்ந்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றும் எட்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, மூன்றாவது தொடர்ச்சியான நாளாக நேற்றும் இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 800ஐ தாண்டியது.
நேற்று மாத்திரம் 848 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நாட்டின் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 63ஆயிரத்து 293 ஆக உயர்ந்துள்ளது. 6703 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 56,277 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற 4 மாணவர்கள் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி தற்போது சிகிச்சைப் பெற்ற வரும் நிலையில் வைத்தியசாலையில் இருந்தவாறே அவர்கள் பரீட்சை எழுதி வருகின்றனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் இறுதி வருட இரண்டாம் தவணைப் பரீட்சையையே அவர்கள் இவ்வாறு எழுதி வருகின்றார்கள்.
எமது 4 மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டு, அவர்கள் அனைவரும் மட்டக்களப்பு பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலை கொவிட் – 19 இடைநிலைப் பராமரிப்பு நிலையத்திற்கு அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றார்கள்.
இந்நிலையில் எமது மாணவர்களுக்குரிய பரீட்சை 29, 30, 31, ஆகிய 3 நாட்களும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்குரிய நடவடிக்கைகளை இலங்கையிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்கள் எடுக்கவில்லை.
ஆனால் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாச்சார பீடம் எமது பல்கலைக் கழகத்தின் உப வேந்தரின் அனுமதியுடன் துணிந்து செயற்பட்டு, சகல வைத்திய நெறிமுறைகளையும் பின்பற்றி பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலையிலிருந்த வண்ணமே பரீட்சைக்குரிய மண்டப ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு எமது 4 மாணவர்களும் தற்போது பரீட்சை எழுதிவருகின்றார்கள் என கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி கே.கெனடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரே நேரத்திலும் கிழக்குப் பல்கலைக்கழத்திலும், பெரியகல்லாறு வைத்தியசாலையிலும் எமது மாணவர்கள் பரீட்சை எழுதி வருகின்றார்கள்.
3 நாட்களும் காலை 10 மணி முதல் மாலை ஒரு மணி வரையில் பரீட்சை நடைபெற்று வருகின்றது. இதற்குரிய சகல ஒழுங்குகளையும் சுகாதாரத்துறையினர் ஏற்படுத்தித் தந்துள்ளார்கள். அதனை நாங்கள் சீ.சீ.ரிவி கமரா மூலம் நாம் கண்காணித்து வருகின்றோம்.
கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் வைத்தியசாலையிலிருந்து கொண்டே பரீட்சையை எழுதுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய எமது பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் எவ.சி.றாகல், பதிவாளர் பகீரதன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அ.லாதாகரன்,
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மயூரன், மாவட்ட கொரோனா தடுப்பு இணைப்பாளர் வைத்திய கலாநிதி அச்சுதன், பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சிறிவித்தியன், உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது இந்த செயற்பாட்டைப்போல் ஏனைய பல்கலைக் கழகங்களும் பின்பற்றினால் நன்றாக அமையும், காரணம் மாணவர்களுக்கு எதுவித பயமோ, அச்சமோ இல்லாமல், அவர்கள் தமது பரீட்சையை சுயமாக எழுதுவதற்கு முடியும்.
இதுவரையில் கொவிட் தொற்றுக்குள்ளாகிய கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்கள் மாத்திரம் தான் இவ்வாறு தனியாகப் பரீட்சை நடாத்தப்பட்டது.
இது பல்கலைக் கழக வரலாற்றிலே இலங்கையில் முதல் தடவை நடைபெறுகின்றது எனக் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி கே.கெனடி மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ச.ட்டவிரோதமாக ம.து.பா.ன.ங்.க.ளை விற்று வந்த தம்பதியை பொலிசார் கை.து செய்ய முற்பட்ட போது, ஆடை எல்லாம் க.ழற்றி த.ப்.பி.க்க முயன்ற மனைவியின் செயல் பொலிசாரை பெரும் அ.திர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சென்னை பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். 42 வயதாகும் இவருக்கு உஷா(38) என்ற மனைவி உள்ளார். ரத்தினம் அப் பகுதியில் ர.வுடியாக வலம் வருகிறார். அவர் மீது 20-க்கும் மேற்பட்ட வ.ழக்குகள் உள்ளன.
இந்நிலையில், இரவு நேரங்களில், ஓடைமாநகர் பகுதியில் டா.ஸ்.மா.க் ச.ரக்குகளை ச.ட்.ட.வி.ரோ.த.மா.க விற்பனை செய்வதாக, அதே சாஸ்திரி நகர் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பொலிசார் உடனடியாக அப்பகுதிக்கு சென்ற போது, அங்கு உஷா மற்றும் ரத்தினம், இவர்களின் மகன் கார்த்திக் மற்றும் சிலர் அங்கே உட்கார்ந்து கொண்டிருப்பதை கண்டுள்ளனர்.
அப்போது உஷா மட்டும் டம்ளர்களில் அங்கிருப்பவர்களுக்கு ஏதோ ஊற்றிக் கொடுத்து வந்துள்ளார். பொலிசார் வருவதைப் பார்த்தவுடன், உஷா உடனடியாக அங்கிருந்து த.ப்.பி.த்.து ஓ.ட முயற்சி செய்துள்ளார்.
இதனால் பொலிசார் மனைவி மற்றும் கணவர் இருவரையும் கை.து செய்ய முயன்றுள்ளனர். அப்போது முதலில் ரத்தினத்தை பி.டிப்பதற்காக வீட்டிற்கு பொலிசார் நு.ழைய முற்பட்ட போது, உஷா தன் ஆ.டைகளை எல்லாம் க.ழற்றி வீ.சியுள்ளார்.
எப்போது உஷா இப்படி தான் பொலிசாரிடம் இருந்து த.ப்பிப்ப.தற்காக செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். ஒவ்வொரு முறையும் கைது நடவடிக்கை என்றாலே உஷா வேகமாக ஆ.டைகளை க.ழட்டி வீ.ச ஆ.ரம்பித்துவிடுவார்.
இப்போதும் அப்படியே செய்ததால், பொலிசார் செய்வதறியாமல் தி.கைத்து நின்றுள்ளனர். இதற்கிடையில், உஷா வீட்டில் இருந்த ம.ண்.ணெ.ண்.ணை.யை எடுத்து த.ன.க்.கு.த்.தா.னே உ.ட.ம்.பி.ல் ஊ.ற்.றி கொ.ளு.த்.தி.க் கொ.ண்டார்.
இதனால் அ.தி.ர்.ந்.து போ.ன பொலிசார் உடனடியாக உஷா மீது ப.ற்.றி எ.ரி.ந்.த தீ.யை அ.ணைத்தனர். அ.வரை கா.ப்.பா.ற்.றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இப்போது உஷாவுக்கு சிகிச்சை நடைபெற்று வருவதாகவும், மேலும் 5 பிரிவுகளின் கீழ் உஷா மீது வ.ழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரத்தினம் த.லை.ம.றை.வா.கி.வி.ட்.ட.தா.ல், பொலிசார் அவரை தே.டி வ.ருகின்றனர்.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வவுனியாவில் பொலிஸார் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். போதனா வைத்திய சாலை ஆய்வுகூடத்தில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளிலேயே குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் பொலிஸார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் அமைந்துள்ள வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் 500 இராணுவத்தினருக்கு கொரோனா தடுப்பூசிகள் இன்று ஏற்றப்பட்டது.
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கொவிட்-19, “கொவிஷெல்ட்” தடுப்பூசிகள் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள்,மருத்துவ சேவையாளர்கள், பாதுகாப்பு படையினருக்கு ஏற்றும் பணி இன்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில், வவுனியா மாவட்டத்துக்கு ஆயிரத்து 700 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் நேற்று வழங்கப்பட்டது. அதனை செலுத்தும் பணிகள் வவுனியாவில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் உள்ள இராணுவத்தினர் 500 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தடுப்பு ஊசிகள் ஏற்றப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உ.யிரிழந்துள்ளார். யாழ். உரும்பிராய் பகுதியில் நேற்று (30.01.2021) இடம்பெற்ற விபத்தில் ஹயஸ் வேனில் மோ.துண்டு இளைஞர் ஒருவர் உ.யிரிழந்துள்ளார்.
தன்னுடைய சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது விபத்து ஏற்படப்போவதை அவதானித்த இளைஞன் த.ப்.பி.க்.க மு.யன்று பா.ய்ந்ததாகவும் வீதியில் அவர் வீழ்ந்தபோது அருகே வந்த வாகனம் அவர் மீது மோ.தியதாலேயே அவர் உ.யிரிழந்ததாகவும் தெரியவருகின்றது.
விபத்தில் 25 வயதான மயூரன் என்பவர் உயிரிழந்ததுடன், அவரது சகோதரனும் விபத்தினால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உ.யிரிழந்த இளைஞன் அரியாலை பார்வதி வித்தியாலய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஊசி மருந்தை ஒருவருக்கு வழங்குவதன் மூலம் மாத்திரம் அவருக்கு அதில் இருந்து பாதுகாப்பு கிடைக்காது எனவும், அதற்கு சில காலம் செல்லும் என்பதால், சுகாதார வழிக்காட்டல்களை தொடர்ந்தும் பின்பற்றுவது குறித்து மக்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொகுப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று ஒளிப்பரப்பான விவாத நிகழ்ச்சியில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த ஊசி மருந்து குறித்து எமக்கு 100 வீதம் தெரியாது. இது தொடர்பான பரிசோதனைகள் சில இடங்களில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊசி மருந்தை போட்டுக்கொண்டோம் என்பதால் அன்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும், கிடைக்காது என்பதை மக்கள் அறிந்துக்கொள்ள வேண்டும்.
ஒரு ஊசி மருந்தை போட்டுக்கொண்ட பின்னர் 4 முதல் 12 வாரங்களிலேயே அது செயற்பட ஆரம்பிக்கும். எனினும் 4 வாரங்களின் பின்னர் நாம் இரண்டாவது ஊசி மருந்தை போட்டுக்கொள்ள வேண்டும். இதன் பின்னர் இரண்டு, மூன்று வாரங்களில் நாம் எதிர்பார்த்த பாதுகாப்பு கிடைக்கும். இந்த ஊசி மருந்து 80 வீதம் பலன் தரும் என்றே கூறுகின்றனர்.
ஊசி மருந்தை போட்டுக்கொண்டவர்களில் 20 வீதமானவர்களுக்கு கொரோனா தொற்றக்கூடும். நான் ஊசி மருந்தை போட்டுக்கொண்ட பின்னர் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலத்திற்கு உடலில் இருக்கும் என்பது கேள்வி.
ஒருவரிடம் இருந்து பரவுவதை தடுக்க முடியுமா என்பது தெரியாது. அது இன்னும் ஆராய்ச்சி மட்டத்திலேயே உள்ளது எனவும் மருத்துவர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் பணிபுரியும் ப.ய.ங்.க.ர.வா.த வி.சா.ர.ணை.ப் பிரிவைச் (ரி.ஐ.டி) சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை பிசீஆர் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் மட்டக்களப்பு, புனானை வைத்தியசாலைக்கு இன்று (30.01) அனுப்பி வைக்கப்பட்டனர்.
வவுனியாவில் அமைந்துள்ள ப.ய.ங்.க.ர.வா.த வி.சா.ர.ணை.ப் பிரிவினரால் த.டு.த்.து வை.க்கப்பட்டு வி.சா.ர.ணை செ.ய்யப்பட்ட 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த பிரிவில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கும் பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் நேற்று (29.01) வெளியாகியிருந்தன.
அதன் அடிப்படையில் ப.ய.ங்.க.ர.வா.த வி.சா.ர.ணை.ப் பிரிவு மற்றும் அதனுடன் இணைந்தவர்கள் என 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ப.ய.ங்.க.ர.வா.த வி.சா.ர.ணை.ப் பி.ரிவினரில் 10 பேர் மட்டக்களப்பு, புனானை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (30.01.2021) காலை 300 மருத்துவ துறை சார்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றி வைக்கப்பட்டது.
இந்திய அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பல்வேறு மாவட்டங்களிலும் தேவையின் பொருட்டு பயன்படுத்துவதற்கான நடவடிக்கையினை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்திற்கு 1700 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர், வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதாரப் துறையினர், நோயாளர் காவு வண்டி சாரதிகள் என 300 நபர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டப்பட்டன.
அந்தவகையில் முதலாவது தடுப்பூசியினை வவுனியா மாவட்ட பிராந்திய பிரதி சுகாதாரப் பணிப்பாளர் மகேந்திரன் ஏற்றியதுடன் இரண்டாவதாக தொற்று நோயியல் நிபுணர் லவன் அவர்களும் மூன்றாவதாக வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி சுகாதார வைத்திய அதிகாரி துஸ்யந்தன் அவர்களும் நான்காவதாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் த.காண்டீபன் அவர்களும் ஏற்றிதை தொடர்ந்து ஏனைய மருத்துவதுறை சார்ந்தவர்களுக்கு ஏற்றப்பட்டது.
கிளிநொச்சி – பிரமந்தனாறு பாடசாலையில் கல்வி கற்கும் மா.ணவன் ஒ.ருவர் நேற்றைய தினம் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார்.
நேற்று பாடசாலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மா.ணவன், அங்கிருந்த மா ம.ரத்தில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். ச கோதரிகள் இ ருவர் பா டசாலைக்கு செ ன்றுவிட, தா ய் சிவில் பா.துகாப்பு திணைக்களத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
தந்தையும் கூலித் தொழிலுக்கு சென்றுவிட்ட நிலையில் குறித்த மா.ணவன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டுள்ளதுடன், த.ற்.கொ.லை.க்.கா.ன கா.ரணம் க ண்டறியப்படவில்லை.
இ வ்வாறு த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டுள்ள மா ணவன் உயர்தரம் வர்த்தக பிரிவில் கல்வி பயில்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ச.ட.ல.த்.தை பா.ர்வையிட்ட பின்னர் ச.ட.ல.ம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக வி.சாரணைகளை பொ.லிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கொரோனா தடுப்பூசி இலங்கையர்களுக்கு நேற்று போடப்பட்டது. நேற்றைய தினத்தில் 5286 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 1886 பேருக்கும், கொழும்பு வடக்கு வைத்தியசாலையில் 803 பேருக்கும் கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் 781 பேருக்கும் இராணுவத்தினர் 600 பேருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக பனாகொட இராணுவ முகாமில் 400 பேருக்கும், ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 382 பேரும், ஹோமாகம வைத்தியசாலை 190 பேருக்கும், முல்லேரியா வைத்தியசாலையில் 108 பேருக்கும் தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் 80 பேரும் வெலிசர இராணுவ முகாமில் 56 பேரும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும் இதுவரையில் எவ்வித பக்க விளைவுகளும் இதுவரையில் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது. இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளளதாக விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் 859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.