கொவிட்19 வைரஸ் பரவல் காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையம் இன்றையதினம் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.
முதலாவது விமானம் இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இன்று முதல் வழமை போன்று அனைத்து நாடுகளிலிருந்தும் விமானங்கள் இலங்கை வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடு தொடர்பில் கண்டறிய சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உட்பட அதிகாரிகள் குழுவொன்று நேற்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் சுகாதார வசதி மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை இடம்பெறும் முறை தொடர்பில் அமைச்சர் உட்பட குழுவினர் கண்கானித்துள்ளனர்.
சுற்றுலா பணிகள் மற்றும் நாட்டு மக்களும் எந்த வகையிலும் தொடர்புபடாத வகையில் செயற்பாடுகள் அமையும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் வாங்கிய கடனுக்காக வங்கி, வீட்டை பறிக்க தயாரான நிலையில் ரப்பர் தொழிலாளிக்கு லொட்டரியில் ரூ 12 கோடி பரிசு விழுந்துள்ளது.
கேரளாவின் கைதாச்சல் கிராமத்தை சேர்ந்தவர் போருண்ண ராஜன். ரப்பர் அறுக்கும் தொழிலாளியான இவருக்கு கேரள அரசின் கிறிஸ்துமஸ் பண்டிகை லொட்டரியில் ரூ. 12 கோடி விழுந்தது.
தனக்கு லொட்டரியில் பரிசு விழ தன் வீட்டருகேயுள்ள முத்தப்பன் சாமிதான் காரணம் என்று ராஜன் கருதுகிறார். இதனால், முத்தப்பன் கோயிலை பெரிதாக எடுத்து கட்டுவதற்கு தனக்கு விழுந்த பரிசு தொகையில் இருந்து குறிப்பிடத்தக்க தொகையை ராஜன் ஒதுக்கியுள்ளார்.
இது குறித்து ராஜன் கூறுகையில், வங்கியில் நான் வாங்கியிருந்த கடனை அடைக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தேன். எனது வீட்டை கூட பறிமுதல் செய்ய வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த சமயத்தில்தான் லொட்டரி சீட்டை வாங்கினேன்.
என் முத்தப்பன் அருளால் இக்கட்டான சூழலில் எனக்கு லாட்டரியில் பரிசு விழுந்தது. இந்த ஒற்றை லொட்டரியால் என் வாழ்க்கையே மாறிப் போனது என கூறியுள்ளார்.
ராஜனுக்கு மனைவி மற்றும் இரு மகள்கள், மகன் உண்டு. தற்போது, லொட்டரியில் விழுந்த பணத்தை கொண்டு புது வீடு கட்டுவதற்கான வேலையை அவர் தொடங்கியுள்ளார்.
இந்திய மாநிலம் பீகாரில் 13 வயதே ஆகும் சி.று.மி.யை பணத்துக்காக 2 பேருக்கு பெற்றத் தாயே விற்றுள்ள சம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் கடந்த செவ்வாய்க்கிழமை சிப்பாபரோட் காவல் நிலையப் பகுதியில் 13 மூன்று வயது சி.று.மி ஒருவர் சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டறியப்பட்டார்.
அவர் கு.ழ.ந்.தை.க.ள் நலக் குழு (CWC) முன் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரைப் பற்றிய பல தி.டு.க்.கி.டு.ம் தகவல்கள் வெளிவந்தன. ஒன்பதாம் வகுப்பு படித்துவந்த அவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு வையனுடன் நட்பாகப் பழகிவந்துள்ளார்.
இந்த விஷயம் அவரது தாய்க்கு தெரியவந்தது. இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த அவர் ம க்களை உடனடியாக திருமணம் செய்துகொடுக்க முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, சிடாபரோட் பகுதியைச் சேர்ந்த பன்வாரி (27) என்பவரிடம் ரூ. 1 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு கடந்த ஆண்டு டிசம்பர் 7-ஆம் திகதி, த.ன.து ம.க.ளை வ.லு.க்.க.ட்.டா.ய.மா.க தி.ருமணம் செ.ய்து வை.த்துள்ளார்.
ஆனால் அவருடன் வாழ விருப்பமில்லாமல் சி.று.மி ஓடிவந்துள்ளார். அப்படியும் விடாமல், அவரது தாய், சித்தி மற்றும் சித்தப்பா சேர்ந்து, அவரை மீண்டும் டிசம்பர் 24-ஆம் திகதி அதே பகுதியில் முகேஷ் என்பவருக்கு நிர்பந்தமாக திருமணம் செய்துகொடுத்துள்ளார்.
முகேஷிடமும் ரூ. 1.25 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார் சி.று.மி.யி.ன் தாய். இப்படி 17 நாட்களில் அந்த சி.று.மி 2 வெவ்வேறு ஆண்களிடம் பணத்துக்காக வி.ற்கப்பட்டுள்ளார்.
முகேஷின் வீட்டில் அ.டை.ப.ட்.டி.ரு.ந்.த சி.று.மி, எப்படியோ தப்பித்து வெகு தூரம் ஓடியுள்ளார். பின்னர் தெருக்களில் பசியும் பட்டினியாக அனாதையாக சுற்றித்திறித்துள்ளார். இந்த நிலையில் தான் காவல்துறையின் கண்ணில் சி.க்.கி.யு.ள்.ளா.ர்.
சி.று.மி வாக்குமூலம் கொடுத்ததன் அடிப்படையில், பொலிஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த திங்களன்று பன்வாரி, முகேஷ் மற்றும் கீதா சிங், திரிலோக் என அடையாளம் காணப்பட்ட இரண்டு நபர்களையும், பாதிக்கப்பட்ட சி.று.மி.யி.ன் தா யையும் போலீசார் கை.து செய்தனர்.
மேலும் இந்த விவகாரத்தில் கு.ற்.ற.ம் சா ட்டப்பட்ட மற்றவர்கள் இன்னும் கை.து செய்யப்படவில்லை. பா.திக்கப்பட்ட மைனர் சி.று.மி.க்.கு கவுன்சிலிங் கொடுத்து, Baran-ல் உள்ள கு.ழ.ந்.தை.க.ள் காப்பகத்திற்கு அனுப்ப Child Welfare Committee உத்தரவிட்டது.
துருக்கியில் தூக்கத்தில் இருந்த கணவனை எழுப்பி சாப்பிட அழைத்த மனையின் மீது கொ.தி.க்.கு.ம் நீரை ஊற்றி ப.ழி.வா.ங்.கி.யு.ள்.ள கணவன்.
துருக்கியின் Konya பகுதியில் இந்த மாத துவக்கத்தில் இந்த கொ.டூ.ர ச.ம்.ப.வ.ம் அரங்கேறியுள்ளது.
உ.ட.ல் முழுவது வெ.ந்.துபோ.ன நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட 23 வயது Rukiye Ay, நடந்த கொ.டூ.ர.த்.தை மருத்துவமனையில் வைத்து க.ண்.ணீ.ரு.ட.ன் பகிர்ந்துள்ளார். சம்பவத்தன்று தமது கணவருக்கு மிகவும் பிடித்த காலை உணவுகளை தயார் செய்து, தூக்கத்தில் இருந்த அவரை எழுப்பியதாக தெரிவித்துள்ளார்.
அது அவருக்கு கண்டிப்பாக ஆச்சரியமளிக்கும் என நம்பியதாக கூறும் Rukiye Ay, ஆனால், கோ.ப.ம.டை.ந்.த தமது கணவர் Ali Ay(28) எதற்கு தேவையில்லாமல் எழுப்பியதாக க.டி.ந்.து.ள்.ளா.ர்.
மட்டுமின்றி, தன்னைப்பற்றி கவலை கொள்ள தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தமது மகளுடன் காலை உணவை எடுத்துக் கொண்டதாக Rukiye Ay தெரிவித்துள்ளார்.
ஆனால், கொஞ்ச நேரத்தில் படுக்கை அறையில் இருந்து வெளியே வந்த தமது கணவன், தம்மை விவாகரத்து செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கொ.தி.க்.கு.ம் நீ.ரை தம்மீது கொ.ட்.டி.ய.தா.க.வு.ம் Rukiye Ay தெரிவித்துள்ளார். மட்டுமின்றி முகத்தின் மீது வீச இருந்ததை தாம் அதிர்ஷ்டவசமாக த.ப்.பி.ய.தா.க.வு.ம் அவர் தெரிவித்துள்ளார்.
அதில் இருந்து த.ப்.ப மு.ய.ன்.ற போது தாம் சு.ய.நி.னை.வ.ற்.று சரிந்ததாக கூறிய Rukiye Ay, கண்விழித்தபோது தமது கணவன் கூந்தலைப் பற்றி இ.ழு.த்.து.ச் செல்வதை உணர்ந்ததாகவும், ஆனால் அந்த நேரம் கணவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரவே,
தாம் அங்கிருந்து த.ப்.பி.ய.தா.க.வு.ம் Rukiye Ay தெரிவித்துள்ளார். பின்னர் பொலிசாருக்கு தகவல் அளிக்கவும், அவர்கள் வந்து தமது கணவரை கை.து செய்ததாக Rukiye Ay குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் உடனடியாக Ali Ay பி.ணை.யி.ல் வெளிவர, பொதுமக்கள் மத்தியில் அது கொ.ந்.த.ளி.ப்.பை ஏற்படுத்தியதும் அவர் மீண்டும் கை.து செய்யப்பட்டுள்ளார். Ali Ay எப்போது வெளியே வந்தாலும், அது தமக்கும் தமது மகளுக்கும் ஆ.ப.த்.தா.க முடியும் என்பது உறுதி என்கிறார் Rukiye Ay.
வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் பட்டப்பகலில் பெண் அணிந்திருந்த தாலிக்கொடியை அறுத்துச் சென்ற ஒன்று சம்பவம் நேற்று (19.01.2021) இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம் மதியம் வீட்டில் குறித்த பெண் இருந்த நிலையில் உள்ளே நுழைந்த திருடன் அவர் அணிந்திருந்த 7 பவுண் மதிப்பான தங்கத் தாலிக்கொடியைப் பறித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளான்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 19 நாட்களில் மாத்திரம் 10 ஆயிரத்து 958 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 806 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 120 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 809 பேருக்கும் வைரஸ் பரவியுள்ளது.
19 நாட்களில் 74 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, கடந்த நவம்பரில் 17 ஆயிரத்து 472 பேருக்கும், டிசம்பரில் 18 ஆயிரத்து 838 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.
வவுனியாவில் வளர்ந்து வரும் கலைஞர்களான ஸ்ரீ அருணன் மற்றும் குழுவினரது மற்றுமொரு படைப்பு. பொங்கல் வெளியீடாக வா தலைவா என்ற பாடலை ஆரி அர்ஜுனனிற்கு பலம் கூட்டும் முகமாக வெளியீட்டுள்ளனர்.
ஆரி அர்ஜுனன் இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்திருப்பது மட்டும் இன்றி Bigg Boss Tamil Season 4 நிகழ்ச்சியில் அவரது நேர்மையான விளையாட்டு அனைவரையும் கவர்ந்துள்ளது.
வந்தாரை வாழ வைக்கும் வவுனியா மண்ணிலிருந்து No Money Production இல் வெளியான இந்த பாடலில் ஸ்ரீ அருணனின் இசை மற்றும் வரிகளில் மேக் ரொனால்ட் வி.தீசோன் ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். ஸ்டூடியோ துசியின் படப்பிடிப்பில் பிரஷாந்த் VFX செய்துள்ளார்.
தெற்காசியாவில் வேகமாக வளர்ந்து வரும் வயதான மக்கள் தொகை அதிகம் உள்ள நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. மேலும் 2030ஆம் ஆண்டில், இலங்கையில் 5 பேரில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதில் பெரும்பான்மையானவர்களாக பெண்கள் என இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் தெரிவித்துள்ளது.
ஒரு தீவு நாடான இலங்கை காலநிலை மாற்றம், தீவிர வானிலை நிலைமைகளின் விரைவான விளைவுகளுக்கு பாதிக்கப்படையக்கூடியது.
2010 -2018 ஆம் ஆண்டில், சுமார் 14 மில்லியன் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் வறட்சி காரணமாக 12 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், வயதானவர்கள் சமூகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை உருவாக்குகிறார்கள், அவர்கள் அவசரகால சூழ்நிலைகளில் விகிதாசாரமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
புனானை கொவிட் சிகிச்சை நிலையத்திலிருந்து த ப்பிச் சென்றிருந்த கொரோனா நோயாளி க.ண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். புனானை கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 43 வயதான ஷெல்டன் பிரேமரத்ன என்ற நோயாளியே இவ்வாறு த ப்பிச் சென்றுள்ளார்.
குறித்த நபர் எஹெலியகொட பகுதியைச் சேர்ந்தவர் என்றும் போ.தை.ப் ப.ழ.க்.க.த்.தி.ற்.கு அ.டிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் கொலன்னாவை, மீதொட்டமுல்ல பகுதியில் அமைந்துள்ள பேக்கரியொன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 13ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் வைத்திய சிகிச்சைகளுக்கான வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனானை சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு 7.30 மணியளவில் அங்கிருந்து த.ப்பியோடியுள்ளார்.
இந்நிலையில் பொது மக்களின் உதவியுடன் த ப்பிச் சென்றவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்த நிலையில் அவர் இன்றைய தினம் எஹெலியகொட, பல்பிட்டிய பகுதியில் வைத்துக் கை து செய்யப்பட்டுள்ளார்.
தேங்காய் ஒன்று திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட நபர், ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கம்பஹா நீதிமன்றம் இவ்வாறு இன்றைய தினம் பிணை வழங்கியுள்ளது.
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். தேங்காய் ஒன்றை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபரை தென்னந்தோப்பு உரிமையாளரும்,
அவரது மகனும் இணைந்து பிடித்து, பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் சந்தேகநபரை கம்பஹா நீதவான் மஞ்சுள கருணாரட்ன விடுதலை செய்துள்ளார்.
மல்வத்துஹிரிபிட்டிய நில்மஹர பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என ஆங்கில இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு நிறைவடைந்த கடந்த 18 நாட்களில் மாத்திரம் நாட்டில் 10,437 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் 10,400 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். கடந்த 18 நாட்களில் பதிவான கொரோனா மரணங்களில் எண்ணிக்கை 66 ஆகும்.
இதனிடையே, இலங்கைக்கு சுற்றலாப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்கியிருக்கும் காலி தடல்ல பிரதேச ஹோட்டலில் மேலும் இரண்டு பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் கேகாலை, ஹெட்டிமுல்லை மற்றும் காலி, மஹமோதர பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். இதற்கு முன்னர் குறித்த ஹோட்டலின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டில் நேற்று 660 பேர் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 54,410 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை , மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7546 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனாவினால் மேலும் 3 பேர் மரணமானதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்ட நிலையிலேயே கொரோனா மரண எண்ணிக்கை 273 ஆக உயர்ந்துள்ளது.
சைப்ரஸ் நாட்டில் இருந்து கடந்த வாரம் அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு பணியாளர்கள் 45 பேருக்கு புதிய மரபணு மாறிய கொரோனா தொற்றியுள்ளதாக என பரிசோதிப்பதற்கு விசேட வைத்திய குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் வெளிநாட்டு பணியாளர்கள் 4200 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அந்த நபர்களுக்குள் சைப்ரஸ் நாட்டில் இருந்நது சந்த 150 பேரில் 45 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த வெளிநாட்டு பணியாளர்களை தனிமைப்படுத்துவதற்கான முழுமையான பணியை இராணுத்தினரே மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் அவ்வாறு வந்த பணியாளர்கள் மூலம் சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்று பரவாத வகையில் செயற்படுவதற்கு பார்த்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2021 ம் ஆண்டுக்கான டிப்ளோமா (NVQ 5), NVQ 4, NVQ 3 உட்பட அனைத்து கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கற்றை நெறிக்கான முடிவுத்திகதி எதிர்வரும் 31 ஆம் திகதி (31.01.2021) என்பதனால் ஆண்டு 9ல் இருந்து பாடசாலை விலகிய மாணவர் முதல் உயர்தர பரீட்சைக்குத் தோற்றியுள்ளோர் மற்றும்,
தொழில் புரியும் அரச மற்றும் தனியார் நிறுவன உத்தியோகத்தர் வரைக்கும் தத்தம் தேவைகளுக்கேற்ப கற்கை நெறிகளுடன் இணைந்து கொள்ள முடியும் என கல்லூரியின் அதிபர் ஆ.நற்குனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கற்கை நெறியின் போது மாணவர்களுக்கு இலவசக் கற்கைநெறி, மாணவர் ஊக்குவிப்புக் கொடுப்பனவு, போக்குவரத்துப் பயணச்சீட்டு, தொழில்வழிகாட்டல் சேவை கற்கைநெறியின் பின்னர் மாணவர்களுக்கு 06 மாத கால தொழிற்பயிற்சி,
உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு, உயர்கல்வி வாய்ப்பு, கடன் பெற்றுக் கொள்ளும் வசதி என்பனவும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
6 மாதம் அல்லது 01 வருட பயிற்சிநெறிகள்
வயதெல்லை 17 தொடக்கம் 29 வரை.
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள இங்கு அழுத்துங்கள்
அல்லது கல்லூரிக்கு நேரடியாகச் சென்று பெற்றுக்கொள்ளுங்கள்
மேலதிக தொடர்புகளுக்கு
அதிபர்,
தொழில்நுட்பக் கல்லூரி,
மன்னார் வீதி,
நெளுக்குளம்,
வவுனியா
தொலைபேசி இலக்கம் 024 222 3664, 024 222 6720.
பூனானி கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிசிக்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் த ப்பிச் சென்றுள்ளார்.
நேற்றிரவு 7.30 மணியளவில் தொற்றாளர் த ப்பிச் சென்றுள்ளாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
த ப்பிச் சென்றவர் 43 வயதுடைய எஹேலியகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“2021.01.13 அன்றைய தினம் குறித்த நபர் பீசீஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுததியாகியுள்ளது.
அதற்கமைய 17ஆம் திகதி அவர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பூனானி கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்நிலையில்நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த நபர் சிகிச்சை நிலையத்தில் இருந்து த ப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் கொலன்னாவை, மீதொட்டமுல்ல, விஹார மாவத்தையில் உள்ள பேக்கரி பணியாற்றும் ஒருவராகும். அவர் 43 வயதுடைய ஷெல்ட்ன பிரேமரத்ன என்பவராகும். அவர் ம.து போ.தை.க்.கு அ.டிமையாகிய ஒருவராகும்.
இரண்டாவது கொரோனா அலையின் பின்னர் 14 நோயாளிக் இவ்வாறு த.ப்பி சென்றுள்ளனர். அவ்வாறு தப்பிச் சென்ற அனைவரும் போ.தை பொ.ரு.ளு.க்.கு அடிமையானவர்கள்.
குறித்த புகைப்படத்தில் உள்ள கொரோனா நோயாளி தொடர்பில் ஏதாவது தகவல் அறிந்தால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
071 859 11 38 என்ற வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரியின் இலக்கத்திற்கு அல்லது 119 அவசர இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்த முடியும்” எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா, தட்சனாங்குளம் பகுதியில் சட்டவிரோத மா டறுப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், வெ ட்டப்படும் மா.ட்டின் த.லைகள் குளத்தினுள் வீசப்பட்டும் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியா, தட்சனாங்குளம் பகுதியில் உள்ள குளத்தை அண்டிய பகுதிகளில் மாலை மற்றும் அதிகாலை வேளைகளில் சட்டவிரோதமாக மாடுகள் வெ.ட்டப்படுவதுடன், வெ.ட்டப்படும் மா.ட்டின் த.லை மற்றும் கழிவுகள் அப்பகுதியில் உள்ள குளத்தினுள் வீசப்பட்டு வருகின்றன.
இவற்றை காகம் முதலிய பறவைகளும், நாய் போன்றனவும் எடுத்து செல்வதால் அப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய்கள் ஏற்படக் கூடிய நிலையும் உருவாகியுள்ளது. விவசாய தேவைக்காக பயன்படுத்தப்படும் குளத்து நீரும் மாசுபடுவதாக அப் பகுதி மக்கள் கு.ற்றம் சாட்டியுள்ளனர்.
அடிக்கடி இப்பகுதியில் ச.ட்டவிரோத மா.டு வெ.ட்டும் செயற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில் கடந்த இரு வாரங்களில் மாத்திரம் 259 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் இன்று (19.01) காலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனையில் 20 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன்,
இரவு 7.30 மணியளவில் வெளியான பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் 25 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,
மேலும் இன்று 9 மணியளவில் வெளியான முடிவுகளின் படி பட்டாணிச்சூர் பகுதியைச் சேர்ந்த மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றையதினம் மாத்திரம் 48 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வெளிக்குளம், நொச்சிமோட்டை, கந்தபுரம், பட்டாணிச்சூர் பகுதிகளை சேர்ந்த 48 நபர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்குள் 259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.