அவுஸ்திரேலியாவில் சாதனை படைத்த இலங்கை சிறுமி!!

அவுஸ்திரேலியாவில் சமையல் வல்லுனர் கிண்ணத்தை இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிறுமி ஒருவர் வென்றுள்ளார்.

“Junior Masterchef Australia 2020” என்ற போட்டியில் கலந்து கொண்ட 11 வயதுடைய ஜோர்ஜியா என்ற சிறுமி பட்டத்தை வென்றுள்ளார்.

இதன் இறுதி போட்டி அவுஸ்திரேலிய தொலைகாட்சியான Network 10 இல் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

ஏனைய போட்டியாளர்களை பின்தள்ளிய இலங்கை சிறுமி 25000 அவுஸ்திரேலிய டொலர் பணப்பரிசை வென்றுள்ளார்.

ஜோர்ஜியா உட்பட இறுதி சுற்றில் பங்கு பற்றியவர்களுக்கு இரண்டு பிரதான உணவுகள் தயாரிக்குமாறு கூறப்பட்டிருந்தது.

அதற்கமைய ஜோர்ஜியா இலங்கையின் தேசிய பொருட்களிலான உணவுகள் இரண்டினை தயாரித்திருந்தார். அதற்கு Tropical Mess என பெயரிட்டிருந்தார்.

எனது பாட்டி இலங்கையராகும். அவர் எனக்கு இலங்கை உணவுகள் சமைப்பதற்கு கற்பித்தார். அதற்கமைய நான் வெற்றி பெற்றேன். வென்ற பரிசு தொகையில் உணவு தொடர்பான விடயங்களுக்கு பயன்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கையில் வீட்டில் உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளால் ஆபத்து என எச்சரிக்கை!!

கொரோனா..

கொரோனா தொற்று ஆரம்பத்தை கண்டுபிடிக்க முடியாத பலர் சமூகத்திற்குள் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் உயிரிழந்த பின் கண்டுபிடிக்கப்படுகின்றனர். உயிரிழந்த பின் கண்டுபிடிக்கப்படுவர்களுக்கு எவ்வாறு கொரோனா தொற்றியதென்பது கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளதென சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக இதுவரையில் அடையாளம் காண முடியாமல் நோயாளிகள் பலர் தொடர்ந்தும் வீட்டில் உள்ளமை உறுதியாகியுள்ளது.

கொரோனா இதுவரையில் சமூகமயமாகியுள்ளதா இல்லையா என்பது தற்போது விவாத பொருளாகியுள்ளது. எனினும் சமூக மயமாகவில்லை என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல இடங்களில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்!!

டியுடன் மழை..

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்தப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

அத்துடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதற்கிடையில் மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் திறக்கப்படும் திகதி : கல்வி அமைச்சின் அறிவிப்பு!!

பாடசாலைகள்..

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாகச் செயற்படுத்தப்பட்டு எதிர்வரும் 23ம் திகதி மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காகப் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஷ் இதனை தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிலையில், 9ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் 3 வாரங்களுக்கு இணையம் மூலமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் படி, கொவிட் 19 கொரோனா தொற்று சூழ்நிலை யைக் கருத்திற்கொண்டு இணையம், வானொலி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாடசாலை மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் 15 முதல் ஆரம்பமாகும்.

இது தொடர்பாக அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், அரசு மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடுதழுவிய ரீதியில் உள்ள 170 தேசிய பாடசாலைகளுக்கும் அதிபர் நியமனம் விரைவாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஷ் தெரிவித்தார்.

-தமிழ்வின்-

வவுனியா செட்டிகுளம் பிரதேச சபை வரவு செலவு திட்ட அமர்வில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு!!

வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபை வரவு செலவுத் திட்ட அமர்வில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையானது சிறிலங்கா சுதந்திரக் கட்சி வசமுள்ளது. குறித்த பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றல் தொடர்பான அமர்வு இன்று (10.11) காலை 10 மணிக்கு ஆரம்பமானது. குறித்த அமர்வில் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.

இம் அமர்வுக்கு செய்தி சேகரிப்பதற்கு சென்ற பிராந்திய ஊடகவியலாளருக்கு சபை தவிசாளர் ஆசிர்வாதம் அந்தோனியால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சபைக்கு வருவதாயின் தம்மிடம் முன் அனுமதி பெற வேண்டும். அதனால் குறித்த அமர்வுக்கு ஊடகங்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்து அவர் ஊடகவியலாளரை வெளியேற்றியிருந்தார்.

இதேவேளை, 17 அங்கத்தவர்களைக் கொண்ட குறித்த பிரதேச சபையில் பல உறுப்பினர்கள் சபை தவிசாளரின் செயற்பாடு தொடர்பில் அதிருப்தியில் உள்ள நிலையில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமணமாகி 12 ஆண்டுகளாக குழந்தை இல்லை : மனைவி அழகாக இருந்ததால் க ணவன் செ ய்த கொ டூ ர செ யல்!!

ருக்மணி..

தமிழகத்தில் ம னைவி அ ழகாக இ ருந்ததால் அ வ ரை கொ லை செ ய் த க ணவனின் செ யல் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த தம்பதி தங்கராஜ் – ருக்மணி.

இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் கு ழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. மேலும் ருக்மணி அழகாக இருப்பார் என்பதால் தங்கராஜ் ச ந்தேகப்பட்டு கு டி த் து வி ட் டு வ ந் து அ டி க் க டி ச ண் டை போ டுவதை வ ழக்கமாக கொ ண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று கு டி த் து வி ட் டு வீ ட்டுக்கு வ ந்த தங்கராஜ், ம னைவியுடன் ச ண் டை போ ட் டு ள் ளா ர். அதற்கு ருக்மணியும் அவருடன் வா க்குவாத த்தில் ஈ டுபட்டுள்ளார். பிறகு இ ருவரும் தூ ங்கிவிட் டனர்.

சிறிது நேரத்தில் தூ க்கத்தில் இ ருந்து எழுந்த தங்கராஜ், த லை யி ல் க ல் லை ப் போ ட் டு ருக்மணியை கொ லை செ ய் து வி ட் டா ர். அ தன் பி ன்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்ற அவர் பொ லிசில் ச ர ண டை ந் தா ர்.

இ தையடுத்து ருக்மணியின் ச ட ல த் தை கை ப் ப ற் றி ய பொ லிசார் தங்கமணியிடம் வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.

இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி : உடன் இருந்த வருங்கால கணவருக்கு ஏற்பட்ட அ திர்ச்சி!!

பூஜா..

இ ந் தி யா வி ல் வ ரு ங் கா ல க ண வ ரு ட ன் கா ரி ல் செ ன் று கொ ண் டி ரு ந் த இ ளம் பெ ண் ம ர் ம ந ப ர் க ளா ல் சு ட் டு கொ லை செ ய் ய ப் ப ட் ட ச ம் ப வ ம் அ தி ர் ச் சி யை ஏ ற் ப டு த் தி யு ள் ள து.

Gurugram-ஐ சே ர்ந்தவர் பூஜா சர்மா (26). இ வ ர் த னியார் நி றுவனத்தில் ப ணிபுரி ந்து வ ந்தார். இ ந்த நி லையில் சி ல தி னங்களுக்கு மு ன்னர் த ன து வ ருங்கால க ணவருடன் ஹொ ட்டலுக்கு கா ரி ல் செ ன்றார் பூஜா.

பி ன்னர் கா ரி ல் இ ருவரும் தி ரும்பி கொ ண்டிருந்த போ து பை க்கில் வ ந்த மூ ன் று ம ர் ம ந ப ர் க ள் பூஜா கா ரை வ ழி ம றித்தனர். பி ன்னர் அ வ ரை சு ட் டு வி ட் டு த ப் பி யோ டி ன ர்.

இ தை பா ர் த் த பூஜாவின் வ ரு ங் கா ல க ண வ ர் அ தி ர் ச் சி ய டை ந் த நி லை யி ல் பூஜா ப ல த் த கா ய ங் க ளு ட ன் ம ரு த் து வ ம னை யி ல் சே ர் க் க ப் ப ட் டா ர். ஆ னா ல் சி கி ச் சை ப ல னி ன் றி அ வ ர் உ யி ரி ழ ந் தா ர்.

இ ந்த ச ம் ப வ ம் ந ட ந் து சி ல தி ன ங் க ள் க ட ந் து வி ட் ட நி லை யி ல் கொ லை யா ளி க ளை பி டி க் க மு டி யா ம ல் பொ லி சா ர் தி ண றி வ ரு வ தா க த க வ ல் வெ ளி யா கி யு ள் ள து.

ஏ னெ னி ல் ச ம் ப வ ம் ந ட ந் த இ ட த் தி ல் உ ள் ள சி சி டி வி க மெ ரா க் க ள் ப ல வே லை செ ய் ய வி ல் லை எ ன தெ ரி ய வ ந் து ள் ள து. ஆ னா லு ம் தொ ட ர் ந் து கு ற் ற வா ளி க ளை பி டி க் கு ம் மு ய ற் சி யி ல் பொ லி சா ர் ஈ டு ப ட் டு ள் ள ன ர்.

நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!!

விசேட அறிவித்தல்..

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் சமூகத்திற்கு வரும் போது சுகாதார ஆலோசனைகளை முழுமையாக பின்பற்றுமாறு சுகாதார பிரிவு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சமூகத்திற்கு வருவதென்றால் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசேடமாக நாள்பட்ட நோயுடைய நபர்கள், வயோதிபர்கள் வீட்டிலேயே தங்கியிருப்பது அவசியமாகும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளளார்.

ஒரு மீற்றர் தூர இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல், முகக் கவசம் அணிதல் போன்றவைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது போக்குவரத்து பயன்பாட்டின் போதும் வர்த்தக நிலையங்கள் மற்றும் கடமை இடங்களுக்கு செல்லும் போது சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றுவது அத்தியாவசியமாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 64 வீத குடும்பங்களின் வருமானத்தில் நேரடி பாதிப்பு!!

கொரோனா தொற்று..

கொரோனா நோய்த் தொற்று வெகுவாக பரவி வருகிறது. இதன் காரணமாக 64 வீதமான குடும்பங்களின் வருமானத்தில் நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உருகுணை பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடம் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக 7 வீதமான குடும்பங்களின் வருமானம் முற்றுமுழுதாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நாட்டின் 45 வீதமான குடும்பங்கள் கடனை மீளச் செலுத்த முடியாத, அடகு வைத்த நகைகளை மீட்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான குடும்பங்கள் நிதி உதவிகளை எதிர்பார்த்திருப்பதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

 

கொழும்பு வரும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

கொழும்பு நகரத்திற்கு குறைந்த அளவிலானோரே வருகைதர முடியும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு விடயங்களுக்காக கொழும்பு நகரத்திற்கு வருவதனை தவிர்க்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்றைய தினம் தளர்த்தப்பட்ட போதிலும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களை தொடர்ந்து தவிர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மீறி நடந்தால் கொரோனா நோயாளியாகுவதனை தவிர்க்க முடியாத விடயமாகிவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மிகவும் ஆபத்தான பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஏனைய பகுதிகளில் கொரோனா நோயாளிகள் இல்லை என்பது அதன் அர்த்தம் அல்ல.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டால் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பது கடினம். இதனால் கொழும்பு வருவதனை தவிர்க்கவும். இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

 

கொரோனா காலமும் கிரக மாற்றமும் : ஒரு இளைஞனின் எண்ணத்திலிருந்து!!

நாளாந்த பத்திரிகைகளை நாள் தோறும் புரட்டும் வேலையினையே கிரமமாக செய்து வருகிறேன். நாட்டு நிலமையையும் வீட்டு நிலமையையும் கருத்திற்கொண்டே நான் மைதானத்திற்கு வருகை தருவதில்லை என்பதை ஒருவரேனும் புரியாமல் இருக்கமாட்டார்கள் என நம்புகின்றேன்.

அதுமட்டுமல்லாது, புதினப் பத்திரிகைகளை புரட்டும் போது வருகின்ற புதினங்கள் வீட்டுக்குள் அடங்கி இருப்பதன் அவசியத்தை வீட்டுக்காரருக்கும் சொல்லிவிடுகின்றது.
ஆனால் நிச்சயமாகவே நிலமை வழமைக்கு பழமை போல் திரும்பும் என நம்புகிறேன். அதற்காகவே காத்திருக்கிறேன்.

எனது சக வீரர்கள் விளையாடுவதை என்னால் ஊக்கப்படுத்த முடியவில்லை. மாறாக, தடுக்கவே சொல்கின்றது. ஆனாலும் அதற்கும் தடுமாற்றமாகவே இருக்கின்றது. எது எவ்வாறாக இருந்தாலும் சாதாரண பொது மகனாக நீங்கள் விளையாடுவதை என்னால் அனுமதிக்கவே முடியவில்லை. (மனதுக்குள் திட்டினாலும் மன்னித்திடுங்கோ தம்பி மார், அண்ணா மார்)

நீங்கள் விளையாடுவதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தால் முதலாவதாக முந்திக்கொண்டு முழுவதுமாக வீட்டிலிருந்து பார்ப்பது நானாக இருக்கும்.

கிரக மாற்றமேற்பட்டு மீண்டும் விளையாடுகின்ற சூழல் உருவானால் உங்களுடன் மைதானத்தில் இணைந்து கொள்வேன். அது வரை Viber இல் தொடர்ந்து இணைந்திருப்பேன்.

கொரோனா என்னும் கொடிய நோயை விரட்டியடிக்க இளைஞர்களாக எழுவோம்.

#சமூக இடைவெளியை தொடர்ந்து பின்பற்றுவோம்.
#கைகளை கழுவுவோம்.
#முகக்கவசத்தை முகங்கோணாது அணிவோம்.
#வீட்டிலிருப்போம்.

அரசாங்கத்தால் அவ்வவ்போது வழங்கப்படுகின்ற சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவோம்.

-தினேஸ்-

கிளிநொச்சியில் ஆட்டுக்கொட்டில் போன்ற கொட்டிலில் வசிக்கும் குடும்பத்தின் அவல நிலை!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி பெரியபரந்தன் டி5 கிராமத்தில் இரவு வீசிய காற்றினால் தற்காலிக வீடு ஒன்று சேதமடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக தற்காலிக வீட்டில் வசித்து வந்த குடும்பம் ஒன்று ஆட்டுக் கொட்டில் போன்ற ஒரு கொட்டிலில் தற்போது தங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு பெய்த மழையுடன் கூடிய காற்று காரணமாக பெரியபரந்தன் பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் வசிக்கின்ற விநாயகமூர்த்தி நித்தியானந்தன் என்பவரது தற்காலிக வீட்டின் கூரை காற்றினால் பிடுங்கி எறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கொட்டில் ஒன்றில் தங்கியுள்ளனர். அத்தோடு அப்பிரதேசத்தில் வேம்பு ஒன்று முறிந்து வீழ்ந்துள்ள நிலையில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிராம அலுவலர் ஊடாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பாதிக்கப்பட்டுள்ள குறித்த குடும்பத்திற்கு உடனடியாக அவர்களது சேதமடைந்த வீட்டின் கூரையினை திருத்துவதற்கு உதவி தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட மாணவிக்கு லண்டனில் நேர்ந்த துயரம்!!

சிறிஸ்கந்தராஜா மதுஜா..

லண்டனில் யாழை பூர்வீகமாககொண்ட 19 வயதான மாணவி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் Queens mary’s பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவியான சிறிஸ்கந்தராஜா மதுஜா என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்த மாணவி மதுஜா நற்பண்புகளுடன் கல்வியிலும் சிறந்து விளங்கியவர். இவரின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினை மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியினையும் சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் தற்போது பரவும் கொரோனா அலையை கட்டுப்படுத்த ஒரு மீற்றர் சமூக இடைவெளி போதாது!!

சமூக இடைவெளி..

இலங்கையில் தற்போது பரவி வரும் கொரோனா அலையை பொறுத்த வரை ஒரு மீற்றருக்கும் அதிகமான சமூக இடைவெளியை பேண வேண்டிய அவசியம் உண்டாகியுள்ளதாக வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

கொவிட் – 19 வைரஸ் தொற்றின் தற்போதைய அலையின் பரவல் நிலையை அவதானித்ததன் மூலமே குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

மக்கள் அதிகம் கூடுமிடங்களில் நிபுணர்களின் ஆலோசனைக்கமைய குறைந்தபட்சம் ஒன்றரை முதல் இரண்டு மீற்றர் சமூக இடைவெளி தூரத்தை பேணுவது சிறந்தது.

மனித சமூகத்தின் செயற்பாடுகள் தான் கொவிட் – 19 வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதை தீர்மானிக்கிறது. இந்த நோய் பரவாமல் தடுக்கும் முக்கிய பணி உங்களுக்கும் எனக்கும் நாட்டிலுள்ல அனைவருக்குமுள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.

 

5000 ரூபா பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த பெண் கீழே விழுந்து மரணம்!!

வரிசையில் காத்திருந்த பெண்..

கொரோனா நிவாரண கொடுப்பனவாக வழங்கப்படும் 5000 ரூபாவினை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பெண் ஒருவர் கீழே விழுந்து மரணித்துள்ளார்.

நீர்கொழும்பு கட்டான கதிரான கிராம சேவகர் காரியாலயத்திற்கு எதிரில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. வடக்கு கதிரான பகுதியைச் சேர்ந்த உடுகம கோரலாகே சோமாவதி என்ற 60 வயதான பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா பீதி காரணமாக, கீழே விழுந்த பெண்ணுக்கு எவரும் உதவ முன்வரவில்லை எனவும் பின்னர் அங்கிருந்த இரண்டு இளைஞர்கள் பெண்ணை வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த பெண்ணின் மரணம் தொடர்பில் பிரேதப் பரிசோதனை நடாத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட உள்ளது.

கொரோனா ஏற்படுத்திய நெருக்கடி : கடனாளியாக மாறிய இலங்கையர்கள்!!

கடனாளியாக மாறிய இலங்கையர்கள்..

வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நகை அடங்கு பிடிக்கும் நிலையங்களில் நாட்டு மக்கள் 643 பில்லியன் ரூபாய் கடன் பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வருடத்தின் கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் இந்த கடன் பெறப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.

நகை கடனுக்காக வழங்கப்படும் பணம் அண்மைக்காலமாக குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வர்த்தக வங்கிகளில் ஒரு பவுண் நகைக்கு 57000 – 60000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

இதனை ஒப்பிடும் போது தங்க கடனுக்காக வருடாந்த வட்டி வீதம் 10 வீதம் வரை மத்திய வங்கியினால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சில தனியார் நிதி நிறுவனங்களில் தங்கம் ஒரு பவுணுக்கு 65000 ரூபாய் வரை வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையின் அனைத்து கடன் அட்டை பயனாளர்கள் நால்வரில் ஒருவர் இதுவரையில் கடனை மீள செலுத்த முடியாத நிலைக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

41 வீதமான கடன் அட்டை பயனாளர்கள் கடன்ன பணத்தை திருப்பி செலுத்தவில்வை என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.