ஆபத்து நாட்டிலிருந்து அகற்றப்படவில்லை : இலங்கையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை..

இலங்கையில் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படுகிறது, எனினும் விடுவிக்கப்படுகின்ற பகுதிகள் இன்னும் பாதுகாப்பாக இல்லை என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், கொரோனா பரவுவதற்கான ஆபத்து நாட்டில் இன்னும் நிலவுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொரோனா தொற்றாளிகள் பதிவாகியுள்ள நிலையில், பொதுமக்கள், சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுவது மிகவும் முக்கியமானது. ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது என்பது மக்கள் தங்கள் வழக்கமான செயற்பாடுகளுக்கு செல்லலாம் என்பதற்கான அர்த்தம் அல்ல.

எனவே ஆபத்து நாட்டில் இருந்து இதுவரை அகற்றப்படவில்லை என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார். அத்துடன், பேலியகொடை மீன் சந்தை தொடர்பான தொற்றுக்கள் இன்னும் பல்வேறு பகுதிகளிலிருந்து பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பது மற்றும் தேவையற்ற பயணங்களை கட்டுப்படுத்துவது என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு பெரிய பொறுப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கொ ரோ னா தொற்றும் என்ற அ ச் ச த் தி ல் உ யிரை மா ய்த்துக் கொ ண் ட ந ப ர்!!

கொரோனா..

கொரோனா வை ரஸ் தொ ற்றினால் உ யிரிழ க்கும் அ ச் ச த் தி ல் ந ப ர் ஒ ருவர் உ யி ரை மா ய் த் து க் கொ ண் டு ள் ளா ர். நாகொட வை த்தியசாலை ஊ ழியர்களை அ ழைத்து செ ல்லும் ந டவடிக்கையில் ஈ டுப ட்ட இலங்கை த னியார் பே ருந்தின் சா ர தி ஒ ருவரே இ வ்வாறு வி பரீத மு டிவை எ டுத்து ள்ளார்.

நே ற் று அ தி கா லை த ன து வீ ட்டிற்கு மு ன்னால் உ ள்ள ம ர த் தி ல் தூ க் கி ட் டு அ வ ர் உ யி ரை மா ய் த் து க் கொ ண்டுள்ளார் . கொடஉடஹேன, யட்டியன, அகலவத்தை பிரதே சத்தை பீ.வீ.சரதியல் எ ன்ற 56 வ யதுடைய இ ரண்டு பி ள்ளைகளின் த ந் தை ஒ ருவரே இ வ் வா று உ யிரிழந்து ள்ளார்.

பே ருந்துகளின் சா ரதிகளுக்கு கொரோனா ஏ ற்படுவதனால் அ ச் ச த் தி ல் இ ந்த ந ப ர் இ ருந்தார் எ ன அ வரது ம னைவி தெ ரிவித்து ள்ளார். இ ந்த நி லையில் தா ன் ப ணியா ற்றும் பே ருந்தில் ஒ ருவருக்கு கொரோனா தொ ற்று ஏ ற்பட்டுள் ளதாக த க வ ல் கி டைத்தது மு த ல் அ வ ர் அ ச் ச த் தி ல் இ ருந்து ள்ளார்.

கொரோனா தொ ற்றினால் உ யி ரி ழ க் க நே ரிடும் என்ற அ ச் ச த் தி ல் அ வ ர் உ யி ரை மா ய் த் து க் கொ ண்டுள்ளார் எ ன கு றிப்பிடப்படுகி ன்றது. ச ம்பவம் தொ டர்பில் பொ லிஸார் வி சாரணைகளை மே ற்கொ ண்டு வ ருகின் றனர்.

 

இன்று பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை!!

இடியுடன் கூடிய மழை..

இலங்கையின் வானிலையில் இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மேல், சப்ரகமுவ, தெற்கு மாகாணங்களில் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சில இடங்களில் சுமார் 100 மி.மீற்றர் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழைக்காலங்களில் வலுவான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும். பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை மத்திய, சப்ரகமுவ, மேற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று காலையில் மூடுபனி நிலைமைகளை எதிர்பார்க்கலாம் என்று வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது.

வவுனியாவின் முன்னாள் பா.உ அமரா் தா.சிவசிதம்பரம் அவர்களின் 28ம் ஆண்டு நினைவு தினம்!!

பா.உ அமரா் தா.சிவசிதம்பரம்..

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவு தினம் இன்று (09.11.2020) காலை 8.30 மணியளவில் வவுனியா வைரப்புளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் விழாக்குவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், நகரசபை உறுப்பினர் ந.சேனாதிராஜா, வவுனியா வடக்கு பிரதேச சபை தலைவர் தனிகாசலம், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார்,

பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் ஜெகசோதிநாதன், வைத்தியர் மதி, வர்த்தகர்கள், சமூக சேவையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாலையிட்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

வவுனியா தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர்.தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவான இச் சிலை நிறுவப்பெற்றுள்ளது.

ஞாபகார்த்த சிலை அமைப்புக் குழுவினரதும் அதன் தலைவர் நா.சேனாதிராசா ஆகியோரதும் வேண்டுகோளுக்கிணங்க வவுனியாவின் மூத்த சட்டத்தரணி முருகேசு சிற்றப்பலம் அவர்களினால் கடந்த 2015 ஆம் ஆண்டு 07ம் மாதம் 25ம் திகதி இச் சிலை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வன்னி தேர்தல் தொகுதியில் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டம்!!

வன்னி தேர்தல் தொகுதியில்..

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய, ஜனாதிபதி செயலணியின் ஒப்புதலின் கீழ், பிரதமர் அலுவலகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் ‘கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின்’ மற்றுமொரு கட்டம்,

இன்று 2020.11.08 (திங்கட்கிழமை) வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் வவுனியா மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்டதற்கமைய தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் அடிப்படையில் சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கு அரச பொறிமுறையை கிராமத்தை நோக்கி கொண்டு செல்வது இவ்வேலைத்திட்டத்தின் அடிப்படையாகும்.

அமைச்சர் நாமல் ராஜபக்வின் தலைமையில் கூடிய ‘சமூக உட்கட்டமைப்பு குழு’வினால் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான அமைச்சினால் எதிர்வரும் ஆண்டில் செயற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

அதிகாரிகளினால் மாவட்டத்திற்குள் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களினால் அப்பிரச்சினைகள் தொடர்பில் அச்சந்தர்ப்பத்தில் பதிலளிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, பிரியங்கர ஜயரத்ன, பியல் நிசாந்த, சிசிர ஜயகொடி, வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ், வன்னி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், குலசிங்கம் திலீபன், சாள்ஸ் நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம் மற்றும் மாவட்ட அரச அதிபர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

வவுனியா செட்டிக்குளத்தில் தீப்பற்றி எரிந்த ஹாட்வெயார் : பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்!!

ஹாட்வெயார்..

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செட்டிக்குளம் நகரப்பகுதியில் அமைந்துள்ள ஹாட்வெயார் நிலையம் தீப்பற்றி ஏரிந்துள்ளது.

இன்று (09.11.2020) காலை இடம்பெற்ற தீ விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், செட்டிக்குளம் நகரில் அமைந்துள்ள ஹாட்வெயார் பொருட்கள் விற்பனையகம் காலை 7.00 மணியளவில் திடீரேன தீப்பற்றி ஏரிந்துள்ளது.

இதனை அவதானித்த பொதுமக்கள் தீயினை கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டதுடன் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கும் தகவலை வழங்கியிருந்தனர்.

குறித்த இடத்திற்கு அதிவேகமாக வருகை தந்த நகரசபை தீயணைப்பு பிரிவினர் காலை 8.40 மணியளவில் தீயினை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்து காரணமாக பல லட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் ஏறிந்து நாசமாகியுள்ளது. மின்சார ஒழுக்கு காரணமாக இவ் தீவிபத்து சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என செட்டிக்குளம் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதுடன் தடவியல் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் வழமைக்கு திரும்பிய மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள்!!

போக்குவரத்து சேவைகள்..

கொவிட் 19 தாக்கம் காரணமாக நாடாளாவிய ரீதியில் பல பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது.

கடந்த 10 நாட்களாக வவுனியாவிலிருந்து வடமாகாணத்திற்குட்பட்ட பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பேரூந்து சேவை இடம்பெற்று வந்ததுடன் மாகாணங்கிடையிலான பேரூந்து சேவை முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் மேல் மாகாணத்தில் இன்றையதினம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் காரணமாக வவுனியா மாவட்டத்தில் தடைப்பட்டிருந்த வடமாகாணம் உட்பட வெளி மாவட்டங்களுக்குரிய போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதுடன் கொழும்பு , அக்கரைப்பற்று பகுதிகளுக்காக போக்குவரத்து தொடர்ந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

புதிய பேரூந்து நிலையத்திற்குள் செல்லும் பயணிகளும் கைகழுவதற்குரிய வசதிகள் பேரூந்து நிலையத்தின் வாயிலில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் பணிகள் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி ஏ9 வீதியில் வலயக்கல்வி பணிமனைக்கு அருகில் திடீரென டிப்பர் வாகனமொன்றின் தடுப்பு (Break) பிரயோகிக்கப்பட்டதால் அதே திசையில் வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டி குறித்த டிப்பரின் பின்பகுதியில் மோதி விபத்துக்கு இலக்காகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (08.11.2020) இரவு ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. பூநகரியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமுற்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுனியா பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற விசேட பிராத்தனை!!

விசேட பிராத்தனை..

நாட்டையும், மக்களையும் கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றுமாறு வேண்டி வவுனியா பெரியபள்ளி வாசலில் விசேட பிராத்தனை ஒன்று இன்று(08.11.2020) இரவு 7.15 மணியளவில் இடம்பெற்றது.

நாட்டில் கொரோனா நோயின் தாக்கமானது அதிகரித்ததை தொடர்ந்து அனைத்து ஆலயங்களிலும் விசேட வழிபாடுகளில் ஈடுபடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்ததை அடுத்து,

இலங்கையில் உள்ள பல்வேறு ஆலயங்கள், கிறிஸ்தவதேவாலயங்கள், மற்றும் பள்ளிவாசல்கள் இவற்றுடன் விகாரைகளிலும் இந்த விசேட வழிபாடுகள் மேற்கோள்ளப்பட்டு வருகின்றன.

இதனைத்தொடர்ந்து இந்த வழிபாடு இன்று வவுனியா பெரிய பள்ளிவாசலிலிலும் சமூக இடைவெளியை பின்பற்றி இடம்பெற்றிருந்தது.

அதிகாலையில் இளம் பெண் எடுத்த வி பரீத முடிவு : செல்போனில் அந்த வீடியோ அழிக்கப்பட்டதால் அ திர்ச்சி!!

சரண்யா…

நா ம க் க ல் மா வ ட்ட ம் ரா சி பு ரம் அ டு த்த ஆ யி ல் பட் டி யைச் சே ர் ந் தவ ர் கள் 41 வ ய தா ன ரமேஷ் – 29 வ ய தா ன ச ர ண் யா த ம்பதி. இ வ ர் க ளுக் கு ஒரு ம க ள், ஒரு ம க ன் உ ள் ள ன ர். டா ஸ் மா க் க டை யில் ர மே ஷ் ப ணி பு ரி ந்து வரும் நி லையில், வி வ சா யத் தை ச ரண்யா க வ னித்து வந் து ள் ளார்.

இ ந் நி லை யில் கடந்த 6ம் தே தி தூ க் கில் தொ ங் கிய நி லை யி ல் ச ர ண்யா பி ண மா க மீ ட் க ப் பட் டா ர். வி வ ரம் அ றி ந் த தும் வி ரை ந் து வ ந் த போ லீ ஸ் அ தி காரி க ள், ச ட ல த் தை கை ப் ப ற் றி ய து ட ன் மு த ற் கட் ட வி சா ர ணை யை தொ ட ங் கின ர்.

அதில், அக்டோபர் 5ம் தே தி இ ர வு, ச ர ண்யா வுடன் அ வ ரது வீட்டில், ஆ யி ல்ப ட்டி அ டு த்த உ டை யா ர்பா ளை ய த்தைச் சே ர் ந்த 29 வ ய தா ன பா லா ஜி எ ன் ப வர் இ ருந் த து தெ ரி ய வ ந்தது.

அ தா வ து, கு டு ம்ப ம ற் றும் ம ரு த்து வ செ ல வு க் கு ப ண ம் அ தி கம் தே வைப் ப ட் ட தால் நி லா எ ன் பவ ரி ன் தை ய ல் ப யிற் சி ப ள் ளிக் கு ச ர ண்யா வே லைக் கு சென் ற தும் , அங்கே நி லா வின் க ண வரான பா லா ஜி யுடன் தொ ட ர் பு ஏ ற் ப ட்ட து ம் தெ ரி ய வந் தது.

இ து ப ற்றி தெ ரிய வ ந்த து ம் பா லா ஜியி ன் கு டு ம்ப த் தில் பி ர ச் ச னை யா க ச ர ண்யா வி ல கிக் கொ ண்டார், இ ச் சூழ லில் தா ன் ச ர ண்யா ச டல மா க மீ ட் க ப் ப ட்டா ர். ச ம் பவ த் த ன் று வீ ட் டிற் கு வ ந் த பா லா ஜி ம து அ ரு ந் தி வி ட் டு தா யை அ டி த் த தா க ச ர ண்யா வி ன் ம கன் தெ ரி வி த்து ள் ளார்.

இ த னைய டு த்து ச ர ண்யா வின் ம ர ண த்தி ல் ச ந் தே கம் இ ரு ப்ப தா க கூ று ம் கு டு ம்ப த் தி னர், பா லா ஜி யை கை து செ ய் யுமா று போ லீ சா ரை வ ற் புறு த் தி யுள் ள ன ர். இ த ற்கி டை யே ச ர ண்யா வி டம் இ ரு ந்த 2 செ ல்போ ன் க ளி ல் ஒரு செ ல் போ னில் இ ரு ந்து அ வ ர து ஒ ரே ஒ ரு ப ட த்தை கு டு ம் ப த் தி னர் மீ ட் டுள் ள ன ர்.

மே லும் அ தி ல் ப ல ப ட ங்க ள், வீ டியோ க் க ள் இ ரு ந்த நி லையி ல் , அ தை அ ழித் த து ப ற் றி போ லீசா ர் கே ள் வி எ ழு ப்பா ம ல் இ ருப் ப தா க கு ற் றம் சு ம த்தி யு ள் ளன ர்.

 

தாயால் நஞ்சு கொடுத்து இறந்த சிறுமியின் இறுதிக் கிரியை இன்று : சிகிச்சை பெற்றுவந்த தாயும் உயிரிழப்பு!!

திருகோணமலையில் ..

திருகோணமலை – ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நஞ்சருந்தியதில் 16 வயது யுவதியொருவர் உயிரிழந்த நிலையில் இறுதிக் கிரியை இன்று இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமியின் தாயாரும் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை- ஆனந்தபுரி பகுதியினைச் சேர்ந்த என். நாகேஸ்வரி (31வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு நஞ்சருந்திய தாய் உட்பட 4 பேர் கடந்த 06 திகதி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மகள் என். விதூசிகா (16 வயது) அன்றைய தினமே உயிரிழந்திருந்தார்.அவரது இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்றுள்ளது. இதைவேளை அவரது தாயார் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் திருகோணமலை- ஆனந்தபுரி பகுதியைச் சேர்ந்த என்.வைஸ்னவீ (12வயது) ,என். ஐஸ்வர்யா (08வயது) மற்றும் என். கஜவீர் (02வயது) ஆகியோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் நஞ்சு அருந்தியமைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை எனவும், தந்தை இரண்டாவது திருமணம் முடித்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

உயிரிழப்புகளை சந்தித்துத்தான் கொரோனாவை விரட்ட முடியும் : இராணுவத் தளபதி விளக்கம்!!

இராணுவத் தளபதி..

“நாட்டின் தற்போதைய நிலைமையில் உயிரிழப்புகளையும் சந்தித்துத்தான் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.” இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாம் அலை எமக்கு பெரும் சவாலாக உள்ளது. எனினும், இதை எம்மால் விரைவில் கட்டுப்படுத்த முடியும்.

இதில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால், இதன்போது உயிரிழப்புகளையும் நாம் சந்திக்க வேண்டி வரும். அதாவது பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படாதவர்கள் தொற்றின் தாக்கத்தால் வீட்டிலேயே இறக்கின்றார்கள். இது தவிர்க்க முடியாத நிலைமை.

கொரோனாவால் நாட்டின் பல இடங்களில் முடக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளோம். இந்த முடக்கல் நிரந்தரம் இல்லை. படிப்படியாக முடக்கலைத் தளர்த்துவோம்.

முழு நாட்டையும் முடக்கல் நிலையில் வைத்திருக்கும் எண்ணம் எம்மிடம் இல்லை. எத்தனையோ மக்கள் நாளாந்த வாழ்வாதாரத்தை நம்பியே வாழ்கின்றார்கள்” – என்றார்.

-தமிழ்வின்-

இலங்கை கடற்பரப்பில் இந்தியர்கள் 04 பேர் உட்பட 6 பேர் கைது!!

6 பேர் கைது..

சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து 5711 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகளை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சிசெய்த 6 சந்தேக நபர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – மன்னாருக்கு இடைப்பட்ட குதிரைமலை பகுதியில் வைத்து இந்திய டவ் படகு மூலமாக கொண்டுவரப்பட்ட இந்த மஞ்சள் கட்டிகளை டிங்கிப் படகில் ஏற்றிக்கொண்டிருந்த போது இவர்கள் கைதாகியுள்ளனர் என கடற்படை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இலங்கைப் பிரஜைகள் இருவரும், இந்தியப் பிரஜைகள் நால்வரும் உள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில் கல்பிட்டி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் பெருந்தொகையாக மஞ்சள் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸார் மூலமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இரண்டு மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

வவுனியாவில் நோயாளரின் வீட்டிற்கே மருந்தை வினியோகிக்கும் திட்டம் அறிமுகம்!!

வவுனியா வைத்தியசாலையில் பதிவுசெய்துள்ள கிளினிக் நோயாளர்களிற்கான மருந்துகளை அவர்களது வீடுகளிற்கே கொண்டு சென்று வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.நந்தகுமார் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

தற்போதைய நெருக்கடியான சூழலில் வைத்தியசாலைக்கு வருகைதரும் மக்களின் தொகையை மட்டுப்படுத்தும் நோக்குடன் மத்திய சுகாதார அமைச்சின் DGHS/COVID 19/347/2020 (III) ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம் அஞ்சல் திணைக்களத்தின் ஊடாக அரச வைத்தியசாலையில் பதிவுசெய்துள்ள நோயாளர்களுக்கான மருந்து வகைகளை அவர்களது வீட்டிற்கே கொண்டு சென்று வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்தவகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கிளினிக்கில் பதிவு செய்து தற்போதைய சூழ்நிலையில் நேரடியாக வந்து மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாத பொது கிளினிக் நோயாளர்கள் 0740104936 என்னும் தொலைபேசி இலக்கத்துடனும்,

பொதுவைத்திய நிபுணர்களிற்கான கிளினிக் நோயாளர்கள் (VP OPD) 0761001936 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை தொடர்புகொண்டு நோயாளரின் பெயர், தற்போதைய வதிவிட முகவரி, கிளினிக் பதிவு இலக்கம், பாவனையிலுள்ள தொலைபேசி இலக்கம், வீட்டிற்கு அருகாமையிலுள்ள தபால் கந்தோரின் விலாசம் ஆகிய தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதேவேளை நோயாளர்கள் தங்களின் கிளினிக் தினத்தின், முதல் வாரத்தின் புதன் கிழமைகளில் தங்களுக்குரிய மருந்துகளை பொதி செய்து அஞ்சல் திணைக்களத்தில் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக தங்களுடைய விபரங்களை திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் மேற்குறித்த தொலைபேசியினூடாக அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொலைபேசியூடாக அறியத்தர முடியாதவர்கள், தங்கள் கிராம உத்தியோகத்தர் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர் ஊடாக மேற்படி விபரங்களை அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வைத்தியரின் ஆலோசனையினை நேரடியாக பெறவேண்டும் என கருதும் நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வழமைபோன்று சமூகமளித்து வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.

 

அரிசிக்கான பற்றாக்குறை ஏற்படலாம் : வர்த்தகர்கள் எச்சரிக்கை!!

அரிசி..

அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள அரிசிக்கான ஆகக்கூடிய விற்பனை விலை காரணமாக நாட்டில் அரிசிக்கான பற்றாக்குறை ஏற்படலாம் என்று வர்த்தகர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசாங்கம் அரிசிக்கான ஆகக்கூடிய சில்லறை விலையை நிர்ணயித்தது. இதன்படி சம்பா 94 ரூபாவாகவும், நாடு 92 ரூபாவாகவும், சிவப்பு பச்சையரிசி 89 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவேண்டும் என்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் அரசாங்கம் அறிவித்துள்ள ஆகக்கூடிய சில்லறை விலைக்கு குறைவாக தமக்கு அரசியை கொள்வனவு செய்யமுடியாதுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகளை உள்ளடக்கிய வகையில் அரசாங்கம் குறித்த விலைக்கு அரிசியை விற்பனை செய்யமுடியாது என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அரசாங்கம் விதித்துள்ள ஆகக்கூடிய சில்லறை விலை அறிவிப்பை வர்த்தகர்கள் செயற்படுத்தவேண்டும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது.

பெரிய மற்றும் சிறிய அரசி ஆலை உரிமையாளர்கள் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அரிசியை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் இதனை செயற்படுத்தாது போனால் அரசாங்கம் சத்தோசவின் ஊடாக இந்த விலையை குறைப்பை அமுல்செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கு டும்பத்துடன் ச ண் டை : மேலும் பலர் தனிமைப்படுத்தல்!!

யாழில்..

பருத்தித்துறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கு டும்பத்துடன் அ டி த டி யி ல் ஈடுபட்ட 2 குடும்பங்களை சேர்ந்த 8 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண சுகாதார அதிகாரிகள், அவர்களை தனிமைப்படுத்துவதற்கு நேற்று மாலை நடவடிக்கை எடுத்துள்ளனர். கொரோனா தொற்றாளர் ஒருவருடன் பழகியமையினால் பருத்தித்துறையில் குடும்பம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த குடும்பத்தினர் யாழ்ப்பாணத்திற்கு கொரோனா கொண்டு வருவதாக கு ற்றம் சு மத்தி அ ந்த பி ரதேசத்தை சே ர்ந்த 2 கு டும்ப த்தினர் அ டி த் து ள் ள ன ர்.

இந்த சம்பவத்தின் பின்னர் பொலிஸார் குறித்த இடத்திற்கு வருகைத்தந்துள்ள நிலையில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன் பின்னரே சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸார் வி சாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.