வவுனியாவில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ – சாள்ஸ் எம்.பி கடும் தர்க்கம்!!

வவுனியாவில் இடம்பெற்ற கூட்டத்தில்..

மகாவலி எல் வலய விஸ்தரிப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கூட்டம் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (07.11) இடம்பெற்றது.

இதன்போது மகாவலி எல் வலய அபிவிருத்தி மற்றும் குளப் புனரமைப்பு பற்றி பேசப்பட்ட போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் மகாவலி அதிகார சபையின் செயற்பாட்டின் மூலம் தமிழர் கிராமங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதுடன், அவை சிங்கள கிராமங்களாக மாற்றப்படுகின்றன.

இந்த திட்டம் காரணமாக தமிழ் மக்களுக்கு ஆபத்து இருக்கிறது. இங்குள்ள மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது தொடர்பில் அமைச்சர் சமல் ராஜபக்ஸ அவர்களுக்கு 13 எம்.பிகள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை வழங்கி இது தொடர்பில் பேசியிருக்கின்றோம்.

அவர் இது தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுப்பதாக தெரிவித்திருக்கின்றார். எனவே அதுவரை குறித்த மகாவலி எல் வலய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என இரு தடவைகள் வலியுறுத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ, இங்கு வந்து இதை வைத்து அரசியல் செய்யாமல் சொல்வதைக் கேளுங்கள் என சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி மீது கை நீட்டி கடும் தொனியில் பேசியிருந்தார்.

அத்துடன், இந்த அரசாங்கம் எமக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என பார்காது தமிழ், முஸ்லிம், சிங்களவர் என்ற வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் அரசாங்கம் என்ற வகையில் பணியாற்றுகின்றது.

வடக்கிலும் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வன்னிக்கும் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தான் உண்மை. இந்த அரசாங்கம் எந்த பராபட்சமும் பார்க்காது இந்த நாடு என்ற அடிப்படையில் செயற்படுகிறது என கூறியிருந்தார்.

இதனையடுத்து சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி அமையாகி இருந்தார். அத்துடன் மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்கள், அகழிகள் மற்றும் குடியிருப்பு, பொது உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்பல குறுக்கிட்டு, அமைச்சர் சமல் ராஜபக்ச அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இவ் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதாக தெரிவித்திருந்தார்.

இலங்கையில் திடீரென கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்தமை ஏன்? சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!!

கொரோனா..

இலங்கையில் நோய் அறிகுறிகள் ஏற்படாத கொரோனா தொற்றாளர்களினாலேயே வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களின் பெரும்பாலானோர் நோய் அறிகுறிகள் அற்றவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அறிகுறிகள் அற்றவர்கள் ஊடாகவே கொரோனா பரவலுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறான அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக வைத்தியசாலைகள் அல்லாத இடை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தற்போது வைத்தியசாலை அவசியமில்லை. அவர்கள் ஊடாக கொரோனா தொற்று ஏனையவர்களுக்கு பரவாத வகையில் தடுப்பதே தற்போது அவசியமான விடயமாகியுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் தகன நடவடிக்கை, அவர்களின் மரண பரிசோதனை நடவடிக்கை எவ்வித தடையுமின்றி மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வறட்சியினால் பல கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு : 492 குடும்பங்கள் பாதிப்பு!!

வவுனியாவில் வறட்சி..

வவுனியா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்த வறட்சியான காலநிலை காரணமாக பல கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், 492 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் யூன் மாதத்தில் இருந்து கடும் வறட்சி நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் வழமையாக ஒக்டோபர் மாதத்தில் மழை கிடைக்கும். ஆனால் இம்முறை ஒக்டோபர் மாதத்திலும் வரட்சி நிலை நீடித்தமையால் குளங்களில் நீர் வற்றியுள்ளதுடன், கிணறுகளிலும் நீர் வற்றியுள்ளது.

அந்த வகையில் வவுனியா பிரதேச செயலக பிரிவில் உள்ள ஒமந்தையில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 93 பேரும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் ஊஞ்சல் கட்டியில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 99 பேரும், மருதோடையில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 74 பேரும்,

கற்குளத்தில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும், வெடிவைத்தகல்லில் 420 குடும்பங்களைச் சேர்ந்த 1020 பேரும், சின்னடப்பனில் 20 குடும்பத்தைச் சேர்ந்த 82 பேரும் என 492 குடும்பங்களைச் சேர்ந்த 1471 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர் கொண்டுள்ளனர்.

இவர்களுக்கான குடிநீரானது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது. இதற்காக இதுவரை 3 இலட்சத்து 54 ஆயிரத்து 448 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட ஆச்சிபுரம், தாஸ் நகர், சிறிநகர், அண்ணா நகர், சிறிராமபுரம், மகாறம்பைக்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள கிணறுகளில் நீர் வற்றி குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் கிராமங்களுக்கு 13 தண்ணீர் தாங்கிகள் வைக்கப்பட்டு அவற்றின் மூலம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ஊடாக குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், குளத்து நீர்களும் வற்றியமையால் கால்நடைகளும் நீர் இன்றி அவதிக்குள்ளாகியுள்ளன.

இவ்வாறு வழங்கப்படுகின்ற நீர் குடிப்பதற்கு மட்டும் போதுமானதாக இருக்கும் நிலையில் மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள நீரின்றி பிள்ளைகளுடன் அவலப்படும் நிலை தொடர்கின்றது.

எனவே, காலம் காலமாக வறட்சிக் காலப்பகுதியில் தாகத்தை தீர்ப்பதற்கு கூட கையேந்தும் நிலையில் உள்ள தமது குடிநீர் தேவையைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இம் மக்களின் ஏக்கமாகவுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை முதல் வவுனியாவில் பரவலாக மழை பெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா கருமாரி அம்மன் ஆலயத்தில் கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட விசேட பூஜை வழிபாடு!!

விடுபட விசேட பூஜை வழிபாடு..

கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட வவுனியா, குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு இன்று(08.11.2020) இடம்பெற்றது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால்,

இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வவுனியா, குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் ஆலயத்தின் பிரதமகுரு பிரபாகரக் குருக்கள் தலைமையில் இவ் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.

இதன்போது நாட்டிற்கு ஆசிவேண்டியும் கொரோனா தாக்கத்தில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காத்து, அவர்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும் இந்த யாகம் வளர்த்து விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. கருமாரி அம்மனுக்கு தீபமேற்றி மலர்தூபி இதன்போது வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதி பொலிஸ்மா அதிபர் லால் செனவிரட்ன, வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன்,

தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார், செட்டிகுளம் இந்து கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமார், சமூக ஆர்வலர்களான விக்னா, குமார், அரச அதிகாரிகள், ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் வெளிமாவட்டத்திலிருந்து வருகை தந்து யாசகம் : சொந்த இடங்களுக்கு செல்லுமாறு பணிப்பு!!

யாசகர்கள்..

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

யாசகர்களினால் கொவிட் -19 அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் வெளிமாவட்ட யாசகர்கள் வவுனியா குடியிருப்பு குளக்கட்டிற்கு அருகே தங்கியிருப்பது தொட்ர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் விக்டர்ராஜ் கவனம் செலுத்தியிருந்தார்.

வெளிமாவட்டத்தில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து யாசகம் செய்யும் யாசகர்கள் தங்கிருக்கும் பகுதியான குடியிருப்பு குளக்கரைப் பகுதிக்கு இன்று (08.11) காலை சென்ற அவர் அங்கு தங்கியிருந்த குழந்தைகள் , சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 8 பேரை சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து கலந்துரையாடினார்.

அதன் போது தாங்கள் கண்டி, ஏறாவூர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதியினை சேர்ந்தவர்கள் எனவும் தாம் வவுனியா வருகை தந்து மூன்று தினங்களே ஆகுவதாவும் யாசகர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் ஊடகவியலாளர்களினால் இவ்விடயம் தொடர்பில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் க.தியாகலிங்கம் அவர்களுக்கு தெரியப்படுத்தியமையினையடுத்து பொது சுகாதார பரிசோதகர் இளங்கேஸ் குறித்த பகுதிக்கு வருகை மேற்கொண்டிருந்ததுடன் அவர்களை அவர்களது சொந்த இடத்திற்கு செல்லுமாறு பணித்ததுடன் மீறி தங்கியிருந்தால் பொலிஸாரின் உதவியுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து யாசகர்கள் தாம் சொந்த இடத்திற்கு செல்வதாக தெரிவித்து அவ்விடத்திலிருந்து அகன்று சென்றனர்.

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு வரும் புதிய போக்குவரத்து நடைமுறை!!

வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான பாதையில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் புதிய போக்குவரத்து நடை முறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான பாதையில் வாகன நெரிசல் ஏற்படுவதனால் அவசர தேவைகளின் போது நோயாளர் காவு வண்டி செல்வதற்கு கூட சிரமமான நிலை காணப்பட்டது.

இதனை நிவர்த்தி செய்யும் வகையில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியினுள் சிறிய மற்றும் பாரிய ஊர்திகள் (பொருட்கள் ஏற்றும் வாகனங்கள்) செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியுடனான வாகனத்தடை தொடர்பான சமிக்கை வவுனியா நகர சுற்றுவட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

வவுனியாவில் கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட விசேட திருப்பலி ஆராதனை!!

விசேட திருப்பலி ஆராதனை..

கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட அருளாசி வேண்டி வவுனியா கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட திருப்பலி ஆராதனை ஒன்று இன்று(08.11.2020) இடம்பெற்றது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட ஆராதனைகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வவுனியா, இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆலய பங்கு தந்தை ஜெயபாலன் அடிகளால் தலைமையில் இவ் விசேட திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்றது.

இதன்போது நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரமர் ஆகியோருக்கு ஆசி வேண்டியும், கொரோனா தாக்கத்தில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காத்து, அவர்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும் விசேட திருப்பலி ஆராதனை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், மாவட்ட அரச அதிபர் சமன் பந்துல, பொலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் நால்வர் உயிரிழப்பு!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு – 10 மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 42 வயது பெண்ணொருவரும், கொழும்பு – 10 மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 69 வயது மற்றுமொரு பெண்ணும், வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 67 வயது ஆணும், கணேமுல்ல பிதேசத்தை சேர்ந்த 88 வயது பெண்ணும் என நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 13227 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், இலங்கையில் இதுவரையில் 7723 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.

 

மனைவி அழகாக இருந்ததால் சந்தேகம் : கணவனால் நடந்த வி பரீதம்!!

கி ரு ஷ் ண கி ரி யி ல்..

கி ரு ஷ் ண கி ரி யி ல் ம னை வி யி ன் மீ து ச ந் தே க ப் ப ட் ட க ண வ ன் த லை யி ல் அ ம் மி க் க ல் லை போ ட் டு கொ லை செ ய் த ச ம் ப வ ம் அ தி ர் ச் சி யை ஏ ற் ப டு த் தி யு ள் ள து. கி ரு ஷ் ண கி ரி மா வ ட் ட ம் ஊ த் த ங் க ரை அ டு த் து ள் ள து ப ள் ள சூ ள க ரை சே ர் ந் த வ ர் த ங் க ரா ஜ், இ வ ர து ம னை வி ரு க் ம ணி.

இ வர்களுக்கு தி ருமணம் ஆ கி 12 வ ருடங்கள் ஆ கியும் கு ழ ந் தை க ள் இ ல்லை, அ து ம ட்டுமின்றி தங்கராஜ் ம னைவி ருக்மணி மி கவும் அ ழகாக இ ருந்து ள்ளார். இ தனாலேயே க ணவருக்கு ச ந்தேக பு த்தி அ திகம் இ ருந்து ள்ளது.

மே லும் தங்கராஜ் டை ல ர் க டை ந டத்தி வ ருகிறார், இ ர வு வீ ட்டிற்கு வ ரும்போ து கு டி த் து வி ட் டு தா ன் வ ருவதுடன் ம னைவி ருக்மணியுடன் ச ண் டை யி டு வா ர்.

இ ந்த நி லையில் தங்கராஜின் ச ம்பாத்தியம் கு டும்பம் ந டத்த போ தாமல் இ ருந்த கா ரணத்தால் ருக்மணி ஒ ரு ஷூ க ம்பெனி க்கு வே லைக்கு செ ன்றுள் ளார்.

இ துவும் தங்கராஜ் ச ந்தேகத்தை வ லுப்படு த்தியது. வ ழக்கம் போ ல ச ம்பவத்தன்று ச ண் டை ஏ ற் ப ட் டு ள் ள து, ஒ ரு க ட்டத்தில் ருக்மணி உ றங்க செ ன்றுவி ட்டார்.

வி டிய வி டிய உ றங்கிக்கொண் டிருந்த ம னைவியின் அ ருகே அ மர்ந்தி ருந்த தங்கராஜ் ஒ ரு க ட்டத்தில் அ ருகில் இ ருந்த அ ம் மி க் க ல் லை க் கொ ண்டு ருக்மணியின் த லை யி ல் போ ட் டு கொ லை செ ய் து ள் ளா ர்.

இ தி ல் த லை சி த றி ருக்மணி ச ம்பவ இ ட த் தி லே யே உ யி ரி ழ ந் தா ர். இ தையடுத்து த கவலறி ந்த அ ப் ப கு தி ம க்கள் போ லீசாருக்கு த கவல் அ ளிக்கவும் வி ரைந்து செ ன்று தங்கராஜை கை து செ ய் த ன ர்.

ருக்மணியின் ச ட ல த் தை கை ப் ப ற் றிய அ திகாரிகள் பி ரே த ப ரி சோ த னைக்காக தர்மபுரி அ ர சு ஆ ஸ்பத்தி ரிக்கு அ னுப்பி வை த்தனர்.

இலங்கையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மேலும் 257 கொரோனா நோயாளர்கள்!!

கொரோனா..

இலங்கைக்குள் மேலும் 257 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த அனைவரும் முன்னைய தொற்றாளிகளின் தொடர்புகளால் தொற்றுக்கு உள்ளானவர்கள் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 13227 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை இலங்கையில் இதுவரையில் 7723 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர். மேலும் இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றால் 30பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் ஆரோக்கியமான குழந்தை பெற்ற பெண்!!

கொரோனா..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கர்ப்பிணி பெண் ஒருவர் ஆரோக்கியமாக குழந்தை பெற்றுள்ளார். கொழும்பு ஆரம்ப வைத்தியசாலையிலேயே அவர் குழந்தை பெற்றுள்ளார்.

சிசேரியன் சத்திர சிகிச்சை ஊடாக அவர் இந்த குழந்தையை பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சத்திர சிகிச்சைக்காக 20 பேர் கொண்ட வைத்திய குழுவொன்று செயற்பட்டுள்ளார்கள் என சத்திர சிகிச்சை மேற்கொண்ட விசேட வைத்தியர் மயுர மானதெவொலகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான தாய் ஒருவர் ஆரோக்கியமான முறையில் குழந்தை பெற்ற இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

 

வவுனியாவில் மரக் க ட த் த ல் மு றியடிப்பு : இருவர் கைது!!

வவுனியா – பூவரசங்குளம்..

வவுனியா – பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் வீதி இரண்டாம் செங்கல்படை பகுதியில் ச ட்டவி ரோதமான முறையில் க ட த் தி ச்செல்ல ப்படவிருந்த முதிரை மரக்குற்றிகள் மற்றும் முதிரைப் பலகைகள் என்பன பூவரசங்குளம் பொலிஸாரினால் மு றியடிக்கப்ப ட்டுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் முதிரை மரம் மற்றும் பலகைகள் அ றுக்கப்ப டுவதாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இர கசிய த கவலையடுத்து நேற்று அப் ப குதிக்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸாரும், இர கசிய பொ லிஸ் பு லனாய்வா ளர்களும் இணைந்து குறித்த ம ரக் க ட த் த ல் கா ர ர் க ளை ம ட க் கி பி டி த் து ள் ள ன ர்.

இச்சம்பவத்தில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 6 முதிரை மரக்குற்றிகளும், 7 இலட்சம் பெறுமதியான முதிரைப்பலகைகளும் கை ப் ப ற் ற ப் ப ட் டு ள் ள து ட ன், இக் க ட த் த லி ல் ஈடுபட்ட கு ற்றச்சா ட்டில் இருவர் கை து செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கை து செய்யப்பட்ட இருவரும் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸ் பெறுப்பதிகாரி எதிரிசூரிய தெரிவித்துள்ளார். இக் க ட த் த ல் தொடர்பான மேலதிக வி சாரனைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா பரவல் : உலக சுகாதார அமைப்பு புதிதாக வெளியிட்ட அறிக்கை!!

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா..

உலக சுகாதார அமைப்பு புதிதாக வெளியிட்ட அறிக்கையின்படி கொரோனாவின் சமூக பரிமாற்றத்தை நான்கு நிலைகளாக மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் பல சுகாதார வல்லுநர்கள் இலங்கை கொரோனா தொற்றில் ஏற்கனவே 3 வது நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் புதிய வகைப்பாட்டின் படி, நிலை 3 என்பது, கடந்த 14 நாட்களில் உள்நாட்டில் பரவலாக கண்டறியப்பட்ட அதிக தொற்றுக்களை குறிக்கிறது.

மேலும் நிலை 3 என்பது வரையறுக்கப்பட்ட மேலதிக எதிர்ப்பு திறன் மற்றும் சுகாதார சேவைக்கு ஆபத்தான சமூக பரிமாற்றத்தின் நிலைமை என வரையறுக்கப்படுகிறது,

இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கியுள்ள சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் ஜெயருவன் பண்டார, இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்ட சூழ்நிலையில் இருக்கிறது. எனவே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் பொதுமக்களின் ஆதரவு தேவை என குறிப்பிட்டார்.

 

கொரோனா தொற்றின் ஆபத்து குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

கொரோனா..

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சகம் தனது தினசரி நடவடிக்கைகளை மூன்றாவது இடர் மட்டத்தில் மேற்கொள்ள உதவும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா பரவுவதில் நான்கு நிலை ஆபத்துகள் உள்ளன.

முதல் கட்டத்தில், பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மட்டுமே அடையாளம் காணப்படுகிறார்கள், அங்கு பாதிக்கப்பட்ட கொத்துகள் எதுவும் காணப்படவில்லை.

இரண்டாவது கட்டத்தில், ஒரு நோயாளி கொத்தணியைக் கொண்ட பகுதியில் மட்டுமே ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டத்தில் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படுகின்றமை மற்றும் ஒவ்வொரு பகுதியிலும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படுகிறது.

நிலை நான்கு என்பது சமூக பரவுதல் ஆகும், இது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தொடர்பில்லாத நோய்க் கொத்துகள் தோன்றுவதை உள்ளடக்கியது.

சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டாராவின் கூற்றுப்படி, கொரோனா மூன்றாவது அலை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்படக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இலங்கையில் இதுவரையில் 80 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று!!

கொரோனா தொற்று..

நாட்டில் 80 கர்ப்பிணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிபுணத்துவ மருத்துவர் மயுரமான்ன தேவோலகே இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கிழக்கு கொழும்பு ஆதார வைத்தியசாலையில் 28 கர்ப்பிணிகளுக்கு கொவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்கு இலக்கான கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை வழங்கும் ஒரே பிரிவு கிழக்கு கொழும்பு ஆதார வைத்தியசாலை என தெரிவித்துள்ளார்.

இதுவரையில் நான்கு கர்ப்பிணிகள் குழந்தை ஈன்றுள்ளதாகவும் அவர்களின் உடலில் கொவிட் தொற்று நீங்கியதன் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

முக்கிய அறிவித்தல்..

வவுனியாவிற்கு வெளிமாவட்டங்களிலிருந்து உங்களது வீடுகளுக்கு வருகை தரும் உறவினர்கள், நண்பர்கள் தொடர்பான தகவல்களை வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களத்திற்கு வழங்குமாறு வவுனியா பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தால் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது .

இன்று காலை நகர்ப்பகுதியில் இவ்வாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வங்கிகள், அரச நிறுவனங்கள், தனியார் துறைகளுக்குச் செல்லும் பொது மக்கள் தமக்கிடையே சமூக இடைவெளிகளைப் பின்பற்றி ,கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லுதல் வேண்டும்.

அங்கு வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கைகழுவி சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும், வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் பொதுமக்கள் குடும்பத்தில் ஒருவர் சென்று தமக்குரிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்துகொள்ளுமாறும்,

சிறுவர்களை தேவையின்றி வெளியே அழைத்துச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும், கொரோனா நோய் தொற்றிலிருந்து உங்களையும் குடும்பத்தையும் பாதுகாப்புடன் வைத்திருப்பதற்கு, உங்கள் வீடுகளுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தரும் உறவினர்கள் நண்பர்கள் தொடர்பான தகவல்களை,

பிராந்திய சுகாதாரத்திணைக்களத்திற்கு வழங்கி கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு பிராந்திய சுகாதார திணைக்களத்தினால் மேலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.