வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா தொற்று..

வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்திருந்த நபர்களில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் வேலங்குளம் விமானப்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு நேற்றையதினம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இன்று (23.10.2020) மதியம் வெளியாகிய பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்களை யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை வைத்தியசாலைக்கு இடமாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் கொரியா நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு சட்டம் தொடர்பில் இன்று அடுத்த கட்ட தீர்மானம் : சவேந்திர சில்வா!!

ஊரடங்கு சட்டம் தொடர்பில்..

ஊரடங்கு சட்டம் தொடர்பான அடுத்த கட்ட தீர்மானத்தை இன்றைய தினம் கிடைக்கவுள்ள பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொாடர்பில் மேலும் குறிப்பிடுகையில், பேலியகொடை மீன்சந்தையில் உள்ளவர்களுடன் தொடர்பை பேணியவர்களிடமே இன்றைய தினம் அதிகளவில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை இலங்கையில் நேற்று மாத்திரம் 309 கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் மினுவங்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று காலை 50 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அவர்களில் 22 பேர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள 2 தொழிற்சாலைகளை சேர்ந்த ஊழியர்கள் எனவும், 6 பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்கள் எனவும், மேலும் 22 பேர் மினுவங்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

அதன்பிறகு, நேற்று மாலை மேலும் 259 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய நிலையில் அவர்களில் 2 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்தும், 182 பேலியகொடை மீன் சந்தையிலிருந்தும், 75 பேர் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

அதன்படி, மினுவங்கொடை கொரோனா கொத்தணியின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2817 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி!!

கொரோனா நோயாளி..

கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்ற இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். கொஸ்கம பிரதேசத்தில் அமைந்துள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனே இவ்வாறு தப்பி சென்றுள்ளார்.

இன்று காலை 6 மணியளவில் குறித்த இளைஞன் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயற்பாடு நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த இளைஞன் இன்று அதிகாலை 1.30 மணியளவிலேயே வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். அவர் 26 வயதுடைய சீத்தாவத்தை, புதிய களனி வீதி பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது புகைப்படம் ஒன்றும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

முகக் கவசம் தொடர்பில் பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை!!

முகக் கவசம்..

பயன்படுத்தி விட்டு அகற்றப்படும் முகக் கவசங்களை வீதிகள் உட்பட பொது இடங்களில் வீச வேண்டாம் என பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிலர் முகக் கவசங்களை அணிந்து விட்டு அதனை பாதுகாப்பற்ற முறையில் வீசிச் செல்வதால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்கள் முறைப்பாடு செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீக்கப்படும் முகக் கவசங்களை பாதுகாப்பான முறையில் குப்பை தொட்டியில் அல்லது உரிய இடத்தில் போடுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை சுகாதார முறையில் அகற்றாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் 14 வது கொரோனா மரணத்திற்கான காரணம் வெளியானது!!

கொரோனா..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் நேற்றைய தினம் உ யிரிழந்ததாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. உ யிரிழந்த பெண் குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றுக்குள்ளான பெண், கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் கடுமையான நியுமோனியாவில் பாதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் அந்த பெண் இதய நோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உ யிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா : ஜனாதிபதி கோட்டபாயவின் முக்கிய அறிவுறுத்தல்!!

கொரோனா ..

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்தல் மற்றும் வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தல் போன்ற எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் வர்த்தக நிலையங்களுக்கு சென்று அதிகளவான பொருட் கொள்வனவில் ஈடுபடுவதை தவிர்த்து செயற்படுமாறு இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் மீண்டும் தொற்றாளர்கள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

 

வவுனியாவில் 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் வெற்றிக் கொண்டாட்டம்!!

வவுனியாவில்..

20 ஆவது திருத்தச் சட்ட மூலம் இன்று (22.10.2020) நாடாளுமன்றத்தில் 91 மேலதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் 91 மேலதிக வாக்குகளை பெற்று 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து இரவு 8.10 மணியளவில் வவுனியா கண்டி வீதியில் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்களினால் பட்டாசு கொழுத்தப்பட்டதுடன் இனிப்புப்பொருட்களும் வழங்கி வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை தலைவர் வசந்த, ஆதரவாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பில்லி, சூனியம் எடுப்பதாக அழைத்த சாமியார் : நம்பி சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் பில்லி, சூனியம் இருப்பதாக கூறி, வேன் டிரைவரை அழைத்த சாமியார், அவரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு த லை ம றை வான ச ம்பவம் தெரியவந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜகுமாரன். 45 வயதான இவர் மினிவேன் டிரைவராக இருக்கிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது சாமியார் ஒருவரை ராஜகுமாரன் பார்த்துள்ளார்.

அப்போது அவரிடம், தனது குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அதற்கு என்ன காரணம் என்றும் கேட்டுள்ளார்.

உடனே அந்த சாமியார் உனக்கு பில்லி சூனியம் சிலர் வைத்துள்ளதாகவும், அதனை எடுக்க சென்னை வருமாறும், வரும்போது 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2 கோழிகள் எடுத்து வருமாறும் கூறியுள்ளார்.

அதை நம்பிய, ராஜகுமாரன் தனது மினிவேனை 5 லட்சம் ரூபாய்க்கு விற்று, விற்று உறவினருடன் வண்ணாரப்பேட்டை அருகே அந்த சாமியாரிடம் 2 லட்சம் பணம் மற்றும் 2 கோழிகளையும் கொடுத்துள்ளார்.

இதைபெற்ற சாமியார், அதன் பின் த லைம றைவாகியுள்ளார். இதனால் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து ஏமாந்ததை நினைத்து அ திர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்று பல போலி சாமியார்கள் திரிவதால், மக்கள் கவனமுடன், எ ச்சரிக்கையுடனும் இருக்கும் படி பொலிசார் கூறியுள்ளனர்.

வீட்டில் க ழு த் து அ று க் க ப் ப ட் டு கொ ல் ல ப்ப ட் ட திருநங்கை : நே ர்ந்த வி பரீதம்!!

திருநங்கை..

தமிழகத்தில் பிரியாணி தொழில் செய்து வந்த திருநங்கை வீ ட்டில் க ழு த் த று த் து கொ லை செ ய் ய ப் ப ட் ட ச ம்பவம் தொ டர்பில் அ தி ர் ச் சி த கவல் வெ ளியாகியு ள்ளது.

கோவை மாவட்டம் திருநங்கைகள் ச ங்கத் த லைவராக இ ருந்து வ ந்த சங்கீதா, ப ல ஆ ண்டுகளாக பி ரியாணி செ ய்யும் தொ ழில் செ ய்து வ ந்தார். 65 வ யதான இ வர்,

க டந்த மா த ம் கோவை ஆர்.எஸ்.புரத்தில் டிரான்ஸ் கிட்சேன் பி ரியாணி எ ன்ற ஹொ ட்டலை தொ டங்கினர். அ ந்த ஹொ ட்டலில் 10 திருநங்கைகள் ப ணியாற்றி வ ருகின்ற னர்.

அ ந்த ஹொ ட்டலுக்கு ம க்களிடத்தில் வ ரவேற்பு அ திகரித்து உ ள்ள நி லையில், நே ற்று சாய்பாபா கா லனியில் உ ள்ள அ வரது வீ ட்டில் க ழு த் து அ று த் து கொ ல் ல ப் ப ட் டு இ ருந்தது அ தி ர் ச் சி யை ஏ ற்படுத் தியது.

கொ லை யா ளி க ளை க ண்டுபி டிக்கவி ட்டால் போ ராட்டம் ந டத்துவோம் எ ன்று கா வ ல் ஆ ணையரிடம் கோவை தி ருநங்கைகள் தெ ரிவித்து ள்ளனர். மே லும் பி ரியாணி தொ ழிலில் ஏ ற்பட்ட போ ட்டியே அ வ ர் கொ லை க் கு கா ரணம் எ னவும் தி ருநங்கைகள் தெ ரிவித்துள் ளனர்.

க டந்த 10 ஆ ண்டுகளுக்கு மு ன்பு உக்கடம் ப குதியில் பி ரியாணி தொ ழில் செ ய்து வ ந்த அனிஃபா எ ன்ற ம ற்றொரு தி ருநங்கையும் க ழு த் து அ று த் து கொ லை செ ய் ய ப் ப ட் டா ர்.

அ ந்த வ ழக்கிலும் கொ லை யா ளி இ ன்றும் க ண்டுபி டிக்கவி ல்லை. இ ந்த நி லையில் த ற்போது கொ லை செ ய் ய ப் ப ட் ட தி ருநங்கை சங்கீதா ம ற்றோரு இ டத்தில் பி ரியாணி க டை தி றக்க தி ட்டமிட்டு இ ருந்தார் எ ன தெ ரியவந்து ள்ளது.

உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியிடுள்ள முக்கிய அறிவிப்பு!!

உயர்தர பரீட்சை தொடர்பில்..

க.பொ.த உயர்தர பரீட்சைக்குரிய பொது அறிவு பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொது அறிவு பரீட்சை தொடர்பில் கடந்த வருடாந்தம் நடைபெற்ற உயர்தர பரீட்சையின் போது 30 புள்ளிகள் அல்லது அதற்கு அதிகமான புள்ளிகளை பெற்றிருந்தால் மீண்டும் அந்த பரீட்சைக்கு தோற்ற அவசியமில்லை என அறிவிவுறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சாத்திகள் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து பரீட்சைகள் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளதோடு, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்தத் தகவலை குறிப்பிட்டுள்ளது.

முதற்தடவையாக இந்த முறை பொது அறிவு பரீட்சை எழுதவுள்ள பரீட்சார்த்திகளுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!!

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம்..

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் கிடைத்துள்ளன.

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் அனைத்து அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சியினர் அனைவரும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

19ஆவது அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி 20ஆவது அரசியலமைப்பு சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது கொண்டு வரப்பட்ட 19ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் நாட்டுக்கு பொருத்தமற்றது என சமகால அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆன 45 நாளிலே தூ க் கி ல் தொ ங் கி ய இ ளம் பெ ண் : க ணவன் எ டுத்த வி பரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணம் ஆன 45 நாளில் ம னைவி தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்ட நி லையில், ம ன வே தனையில் இருந்த க ணவனும் த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவம் கு டும்பத்தினரிடையே பெ ரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, செங்கலட்டு அடுத்து கல்பாக்கத்தை அடுத்த மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு ராணி என்கிற நந்தினி (23) என்ற மகள் உள்ளார்.

இவருக்கும், கல்பாக்கம் புதுப்பட்டினம் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த செங்கழனி என்பவரின் மகன் ஜெயபிரகாஷ் என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், புதுப் பெ ண் ராணி கடந்த அக்டோபர் 8-ஆம் திகதி வீட்டில் தி டீரென்று தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டார். இ ந்த ச ம்பவம் கு டும்பத்தினரிடையே க டும் அ திர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,

பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தி ருமணமாகி 45 நா ளில் பு துப் பெ ண் உ யி ரை மா ய்த்துக் கொ ண்டதால் செங்கல்பட்டு கோட்டாட்சியர் வி சாரணை ந டத்தி வருகிறார்.

ம னைவியின் இ ந்த மு டிவால் கொ ண்டதால், சோ கத்தில் இருந்த ஜெயப்பிரகாஷ் க டும் ம ன அ ழுத்ததில் இ ருந்துள்ளார். இதையடுத்து, ஜெயபிரகாஷ் செவ்வாய்க்கிழமை புதுப்பட்டினம் கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பு பகுதியில்,

உள்ள சிஐஎஸ்எப் பூங்காவில் உள்ள ம ரத்தில் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார். இ து கு றித்து கல்பாக்கம் கா வல் நி லையத்தில் வழக்குப் பதிவு செய்து பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுனியா நெடுங்கேணியில் 5 பேருக்கு கொரோனா தொற்று : 82 பேருக்கு பிசீஆர் பரிசோதனை!!

நெடுங்கேணியில்..

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து அவர்களுடன் இணைந்து பணியாற்றிய 82 பேருக்கு இன்று (22.10) பிசீஆர் ப ரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த 27 பேருக்கு திங்கள் கிழமை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பிசிஆர் ப ரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் ப ரிசோ தனை முடிவுகள் படி நேற்று (21.10) 3 பேருக்கும், இன்று (22.10) 2 பேருக்குமாக 5 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த 82 நபர்களில் 60 நபர்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதியிலும், மிகுதி 22 நபர்கள் அவர்கள் தங்கியிருந்த பிற இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள 82 நபர்களிடமும் இன்று (22.10) சுகாதார துறையினரால் பிசிஆர் ப ரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கொரோனா தொற்றால் இலங்கையில் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரிப்பு!!

கொரோனா..

கொரோனா தொற்றால் இலங்கையில் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குளியாப்பிட்டி பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பெண் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

விசேட பாதுகாப்பு உடையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்த ரிஷாட் பதியூதின்!!

ரிஷாட் பதியூதின்..

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் இன்று நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகள் சிலரினால் இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு ரிஷாட் பதியூதின் அழைத்து வரப்பட்டிருந்தார். விசேட பாதுகாப்பு உடை அணிந்து ரிஷாட் பதியூதின் இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.

சுகாதார பாதுகாப்பு முறைக்கமைய விசேட ஆசனம் ஒன்று அவருக்கு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

வவுனியா நெடுங்கேணியில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை பிசீஆர் பரிசோதனை மேற்கொண்டவர்களில் 25 பேரின் முடிவுகள் நேற்று (21.10) வெளியாகியிருந்தன. அதில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேலும் இருவரின் பிசீஆர் முடிவுகள் இன்று (22.10) மதியம் வெளியாகின. அதில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

நெடுங்கேணி பகுதியில் வீதி திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இரு தொழில் நுட்ப உத்தியோகத்தருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வவுனியா வடக்கு நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டவர்களின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது.