சமூக மட்டத்தில் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்கள் : வைத்தியர்கள் எச்சரிக்கை!!

கொரோனா..

இலங்கையில் எவருடனும் தொடர்பில்லாத கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் கொரோனா சமூக மயமாகவில்லை என தீர்மானிக்க முடியாதென சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

அத்துடன் வைரஸ் தொற்று பரவியமை தொடர்பில் சரியான தகவல்களை தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிடுவதாகவும் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மினுவாங்கொட கொரோனா பரவலுடன் தொடர்பில்லாத தொற்றாளர்கள் குறிப்பிடத்தக்க அளவு அடையாளம் காணப்பட்டிருந்தால், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடவடிக்கை போதுமானதாக இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா செட்டிகுளத்தில் தீயில் எரிந்து குடும்பப் பெண் மரணம்!!

செட்டிகுளத்தில்..

வவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் பகுதியில் தீயில் எ ரிந்து ஒரு பிள்ளையின் தாய் ம ரணமடைந்துள்ளார். குறித்த பெண் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்த போது தவறுதலாக தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கா யமடைந்த அவர் உடனடியாக மீ ட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (21) அவர் ம ரணமடைந்துள்ளார். குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க ஒரு பிள்ளையின் தாயாரே ம ரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரது ம ரணம் தொடர்பில் செட்டிகுளம் காவல்துறையினர் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

குதிக்கால் வலிக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும் : தி.கேதீஸ்வரன்!!

குதிக்கால் வலி..

குதிக்கால் வலியானது பெரும்பாலும் குதிவாதம் எனப்படும் Plantar fasciitis இனால் ஏற்படுகின்றது. பாதத்தின் அடிப்பகுதியிலுள்ள தடித்த சவ்வுப் பகுதியில் ஏற்படும் அழற்சியினால் இந்நிலை உருவாகின்றது.

இதன்போது பாதத்தின் குதிப்பகுதியில் குறிப்பாக உள்பக்க குதிப்பகுதியில் ஊசியால் குத்துவதைப் போல தீவிரமான வலி ஏற்படுகின்றது. மேலும் அழற்சியின் அறிகுறிகளான சிவந்திருத்தல், வீங்கியிருத்தல், சூடாக இருத்தல் என்பவையும் உணரப்படலாம்.

ஆரம்பத்தில் குதிவாதத்தினால் ஏற்படும் வலியானது அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுந்து முதல் சில அடிகளை வைக்கும் போது மிகத் தீவிரமாக இருக்கும்.

தொடர்ந்து நடக்கும் போது வலி தானாகவே குறைந்து விடும். ஆரம்பக் கட்டத்திலேயே பொருத்தமான சிகிச்சை எடுக்காவிட்டால் நாட்கள் செல்லச் செல்ல வலி நாள் முழுவதும் தீவிரமாக இருக்கும்.

40 தொடக்கம் 60 வரையான வயதுள்ள நபர்களே இந்நிலையால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் குதிவாதம் ஏற்படுவதற்கான காரணிகள் இவையென அறுதியிட்டுக் கூறமுடியாவிட்டாலும் சில காரணிகள் குதிவாதத்தை தோற்றுவிப்பதற்கான ஆபத்துக் காரணிகளாக உள்ளன.

குதிக்கால் மற்றும் அதனை சூழவுள்ள தசை மற்றும் சவ்வுப் பகுதிகளில் அதிகளவு அமுத்தத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை அல்லது பயிற்சிகளை செய்தல் அதிலொன்றாகும்.

அதாவது நீண்ட நேரம் நிற்றல், அதிக தூரம் நடத்தல், ஓடுதல், நடனம் ஆடுதல் போன்ற செயற்பாடுகளை நீண்ட காலமாக செய்வோருக்கு இந்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும்.

இயற்கையான மாறுபட்ட பாத அமைப்பு மற்றும் நடத்தல் பொறிமுறை இந்நிலை ஏற்படுவதற்கான தீவிரமான ஆபத்து காரணியாகவுள்ளது. அதாவது இயற்கையாகவே சிலரது பாதங்கள் தட்டையானதாகவோ அல்லது வளைவு கூடியதாகவோ இருக்கும்.

இவ்வேளையில் சாதாரண அமைப்பிலான பாதங்களை கொண்டிருப்போரை விட இவர்களின் பாத மென்சவ்வுகளில் அதிகளவில் அழுத்தம் ஏற்படும். இது நீண்டகாலத்தில் தீவிரமாக குதிவாத நிலைமையை ஏற்படுத்தும்.

மேலும் சிலரது மாறுபட்ட நடத்தல் செயற்பாடுகளும் குதிக்கால் பகுதியில் அழுத்தத்தை அதிகரித்து தீவிரமான குதிவாதத்தை ஏற்படுத்தும்.

அதிகரித்த உடற்பருமன் பாதத்தில் அதிகரித்த அழுத்தத்தை ஏற்படுத்துவதில் பங்களிப்பு செய்கிறது. இவ் அதிகரித்த அழுத்தம் குதிவாதத்தை ஏற்படுத்துவதில் பங்களிப்பு செய்கின்றது. எனவே அதிகரித்த உடற்பருமனும் குதிவாதத்தை ஏற்படுத்தும் காரணியாக அமையலாம்.

ஆடை உற்பத்தி நிலைய பணியாளர்கள், ஆசிரியர்கள் போன்ற நீண்ட நேரம் நின்று பணிபுரியும் பணியாட் தொகுதியினரிடையே குறித்த நிலையானது பொதுவாக காணப்படுகின்றது. கடினமான மற்றும் உயர்ந்த குதியுடைய பாதணிகளை பயன்படுத்துவோரிலும் இந்நிலை ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகளவில் உள்ளன.

குதிவாதத்தின் ஆரம்ப கட்டத்தில் வலி மற்றும் அழற்சியை குறைப்பதற்கான மருத்துகளுடன் பிசியோதெரபி சிகிச்சை பரிந்துரைக்கப்படுகின்றது. பிசியோதெரபி சிகிச்சையின் போது வலி மற்றும் அழற்ச்சியை குறைப்பதற்கான Ultrasound therapy மற்றும் Shockwave therapy என்பன பயன்படுத்தப்படுகின்றது.

மேலும் பாத சவ்வு மற்றும் கணுக்கால் தசை என்பவற்றிற்கு இழுவை சார்ந்த பயிற்சிகளும் மேலும் பாதத்தை சூழவுள்ள தசைகளை வலிமைப்படுத்தும் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றது.

பிசியோதெரபி சிகிச்சையின் போது குறித்த நபர் நாளாந்த பிசியோதெரபி பயிற்சிகளை செய்வதுடன் தினமும் குறைந்தது மூன்று வேளை குளிர் நீரைக் கொண்டு ஒத்தடம் செய்வதுடன் காலில் அதிகளவு பாரத்தைக் கொடுக்காதவாறு ஓய்வுடன் இருக்க அறிவுறுத்தப்படுவார்.

மேலும் இச் சிகிச்சையின் போது தொடர்ச்சியாக பாத சவ்வுகளில் ஏற்படும் அதீதமான அழுத்தத்தை குறைப்பதற்காக Taping மற்றும் Splinting போன்ற நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றது.

தட்டையான பாதம், வளைவு கூடிய பாதம் போன்ற இயற்கையான மாறுபட்ட பாத அமைப்பை உடையவர்கள் பிசியோதெரபி சிகிச்சையுடன் பொருத்தமான சார்புறுப்புக்களை பயன்படுத்த வேண்டும்.

இவை மாறுபட்ட பாத அமைப்பினால் உருவாகும் அதீத அழுத்தத்தை பாதங்களில் சரியான முறையில் பரவச் செய்கின்றது.

மேலும் இவ்வாறு மாறுபட்ட பாத அமைப்பை உடையோர் பரிந்துரைக்கப்பட்ட விசேட சார்புறுப்புக்களை தொடர்ச்சியாக பயன்பத்த அறிவுறுத்தப்படுகின்றனர். இதன் மூலம் இவர்களில் குதிவாதம் மீண்டும் மீண்டும் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள முடியும்.

வலி நிவாரண மருந்துகள் பயன்படாத சந்தர்ப்பங்களில் Corticosteroids மருந்துகள் ஊசி மூலமாக பாதிக்கப்பட்ட சவ்வுப்பகுதிக்கு நேரடியாக வழங்கப்படும்.

இதன் பின்னர் பிசியோதெரபி சிகிச்சை தொடர்ச்சியாக வழங்கப்படும். அது குறித்த நிலை சீராக குணமாவதையும் மீண்டும் ஏற்படாதிருப்பதையும் உறுதி செய்யும்.

அனைத்து மருத்துவ சிகிச்சைகளுக்கும் கட்டுப்படாது வலியானது ஒரு வருடத்திற்கு மேல் தொடருமானால் அறுவைச் சிகிச்சை பரிந்துரை செய்யப்படலாம்.

இதன் போது பாதத்தின் சவ்வுப் பகுதியானது என்புடன் இணைந்த பகுதியில் வெட்டப்பட்டு அதன் மீதான அழுத்தம் குறைக்கப்படும். அல்லது கணுக்கால் தசை என்புடன் இணையும் இடத்தில் பகுதியாக வெட்டப்பட்டு பாதத்தின் மீதான அழுத்தம் குறைக்கப்படும்.

ஆனாலும் அறுவைச் சிகிச்சையானது தொடர்ச்சியான வலி, நரம்பு பாதிப்பு, பாதத்தின் உறுதித்தன்மை குறைவடைதல் போன்ற பாதக விளைவுகளையும் ஏற்படுத்தலாம். எனவே இது கடைசி முயற்சியாக மிக அரிதாகவே பரிந்துரைக்கப்படுகின்றது.

தி.கேதீஸ்வரன்
பிசியோதெரபிஸ்ட்
மாவட்ட பொது வைத்தியசாலை
வவுனியா

வட மாகாணத்தில் வசிப்பவர்களுக்கு விசேட அறிவுறுத்தல் : வைத்தியர் கேதீஸ்வரன்!!

பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகத்தினர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் தற்போது தீவிரமடைந்துவரும் நிலையில் ,இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்தவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது. ஆகையால் வடமாகாணத்தில் பின்வரும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

01. சுகாதார அமைச்சினால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டமைக்கு அமைவாக கூட்டங்கள், ஒன்றுகூடல்கள் வைபவங்களை தவிர்த்துக்கொள்ளவும் அல்லது பிற்போடவும்.

02. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைவாக, அலுவலகங்கள் , பொது நிறுவனங்களில் முககவசம் அணிதல், கை கழுவுதல், சமூக இடைவெளி பேணுதல் , உடல்வெப்பநிலை அளவிடுதல் மற்றம் வருகை தருவோரின் விவரங்கள் பதிவேட்டினை பேணுதல் போன்றவற்றை இறுக்கமாகப் பின்பற்றவேண்டும்.

03. பொது இடங்களில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் கட்டாயமாக கடைபிடித்தல் வேண்டும். இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

04. தவிர்க்கமுடியாத கட்டாயமாக நடாத்தப்படவேண்டிய நிகழ்வுகளை மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான அங்கத்தவர்களுடன் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடாத்தப்படல் வேண்டும்.

05. வர்த்தக நிலையங்கள், சலூன்கள் உணவகங்கள் போன்றவற்றிற்கு ஏற்கனவே சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்

06. பொதுப் போக்குவரத்து வாகனங்களில் ஆசனங்களுக்கு அளவான பயணிகள் மட்டுமே பயணம் செய்யமுடியும்.

07. காய்ச்சல், இருமல், தடிமன், தொண்டைநோ உள்ளவர்கள் அலுவலகங்கள் அல்லது பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல் வேண்டும்.

08. இயலுமானவரை நீண்டதூர பயணங்களை தவிர்த்தல் வேண்டும்.

09. பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை நடாத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை இறுக்கமாக கடைப்பிடிக்கவும்.

எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று பரம்பலை எமது மாகாணத்தில் கட்டுப்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.

 

வவுனியாவில் பிரபல ஹாட்வெயார் உள்ளிட்ட மூன்று வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது!

மூன்று வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது..

வவுனியாவில் உள்ள பிரபல ஹாட்வெயார் உள்ளிட்ட மூன்று வர்த்தக நிலையங்கள் நேற்று இரவு தற்காலிகமாக மூடப்பட்டது. வவுனியா வடக்கு பகுதியில் மாகா நிறுவனத்தில் இணைந்து வீதி திருத்தப் பணியில் ஈடுபட்ட மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் அவர்கள் வந்து சென்ற வர்த்தக நிலையங்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி குறித்த கொரோனா தொற்றாளர்கள் வந்து சென்றதாக கருதப்படும் வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹாட்வெயார், பழைய பேரூந்து நிலையத்தில் உள்ள புத்தக விற்பனை நிலையம், ஹொரவத்பொத்தானை வீதியில் உள்ள ஹாட்வெயார் என மூன்று வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டது.

 

புகையிரத பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் ரயில்களை பயன்படுத்துமாறு ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பயணிப்பவர்கள் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என பிரதான பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயணிகளின் குறைவு காரணமாக நகரங்களுக்கு இடையிலான சில ரயில் பயணங்கள் தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளன.

வன்னியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன் காலமானார்!!

வை.பாலச்சந்திரன்..

முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன் மாரடைப்பால் காலமானார். வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் இவரின் உயிர் பிரிந்துள்ளது.

1994 முதல் 2000 ஆம் ஆண்டு வரை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் சார்பாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வை.பாலச்சந்திரன் கண்டியை பிறப்பிடமாக கொண்டவராவார்.

1951 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 69 ஆவது வயதில் வவுனியாவில் காலமானார்.

கொழும்பின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்!!

ஊரடங்கு சட்டம்..

கொழும்பின் சில பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

மட்டக்குளி, புளுமெண்டல், கிரேண்பாஸ், மோதர மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், கம்பஹா மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நேற்று மாலை ஆறு மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை வரை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொழும்பின் சில பகுதிகளுக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் உழுந்து விளைச்சல் இல்லையெனில் இறக்குமதி செய்ய வேண்டி ஏற்படும்!!

வவுனியா மாவட்டத்தில் 13 ஆயிரத்து 750 ஏக்கரில் உழுந்து செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், வவுனியாவில் இம்முறை விளைச்சல் இல்லையெனில் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகும் என கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

மாவட்ட மட்ட உழுந்து செய்கை தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்தின் ஆலோசனைக்கு அமைவாக வவுனியா மாவட்டத்தில் அதிகளவில் உழுந்து செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான உதவிகளையும், ஆலோசனைகளையும் எமது திணைக்களம் மற்றும் விவசாய திணைக்களம் என்பன வழங்கி வருகின்றன.

இம்முறை எமது மாவட்டத்தில் காலபோகத்தில் 13 ஆயிரத்து 750 ஏக்கர் நிலப்பரப்பில் உழுந்து செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே உழுந்து செய்கை தொடர்பில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். உழுந்து செய்கையில் பாதிப்புக்கள் ஏற்படின் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படாத வகையில் இழப்பீடு வழங்குவதற்கும் விவசாய காப்புறுதி சபை ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு ஏக்கருக்கு 2250 ரூபாய் பணத்தை செலுத்தி காப்புறுதி செய்தால் உழுந்து செய்கைக்கு அறுவடை நேரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் இடத்து ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை விவசாயிகள் பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன் உத்தரவாத விலையில் எமது திணைக்களம் உழுந்தை கொள்வனவு செய்யும். குறைந்த பட்சம் ஒரு கிலோ உழுந்து 220 ரூபாய்க்கு குறையாத வகையில் கொள்வனவு செய்யப்படும். வவுனியாவில் செய்கை பண்ணப்படும் உழுந்தினை கொள்வனவு செய்வதற்கு பல்வேறு கம்பனிகள் எம்முடன் தொடர்பை ஏற்படுத்தி பேசி வருகின்றன.

எனவே உழுந்து பயிர்ச்செய்கை ஊடாக விவசாயிகள் நன்மை அடையக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளது. ஆகவே, அச்சமின்றி செய்கையில் ஆர்வம் காட்டுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

 

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹாட்வெயார் தற்காலிகமாக மூடப்பட்டது!!

ஹாட்வெயார்..

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹாட்வெயார் ஒன்று இன்று(21.10) மாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

வவுனியா வடக்கு பகுதியில் வீதி திருத்தப் பணியில் ஈடுபட்ட மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் அவர்கள் வந்து சென்ற வர்த்தக நிலையங்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி குறித்த கொரோனா தொற்றாளர்கள் வந்து சென்றதாக கருதப்படும் வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹாட்வெயார் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டது.

ஈ வு இர க்கமின்றி தனது 2 கு ழந்தைகளை பா லத்திலிருந்து வீ சிய தா ய் : ஆற்றில் து டி து டிக்க இ றந்த பி ஞ்சுகள் : நெஞ்சை ப தற வைக்கும் காட்சி!!

ஈரா க்கில்..

ஈரா க்கில் பெ ண் ஒ ருவர் த ன து இ ர ண் டு கு ழ ந் தை க ளை ஆ ற் றி ல் வீ சி ய ச ம்பவம் வீ டியோவாக வெ ளியாகி நா ட்டையே உ லு க் கி யு ள் ள து. அ க்டோபர் 17 ம் தே தி அ திகா லையில் இ ந்த ச ம்பவம் ந டந்து ள்ளது.

அ திகா ரிகள் வெ ளியி ட்ட சி சி டி வி கா ட்சிக ளில் அல்-அய்ம்மா பா லத்தின் மீ து பெ ண் டைக்ரிஸ் ஆ ற்றில் கு ழ ந் தை க ளை வீ சு ம் கா ட்சிகளை கா ட்டியது. பா து கா ப் பு ப் ப டை யி ன ர் அ ந்தப் பெ ண் ணை அ டை யா ள ம் க ண் டு கை து செ ய்ததாக ஈராக் அ திகா ரிகள் தெ ரிவித்தனர்.

ஈரா க்கிய பா து கா ப் பு ப் ப டையின் சி றப்புக் கு ழு இ ர ண் டு கு ழ ந் தை க ளி ன் உ ட ல் க ளை மீ ட் டு ள் ள ன ர். உ யி ரி ழ ந் த கு ழ ந் தை க ள் 3 வ யதான ஹர் முகமது, ம ற்றும் 1 வ யதுடைய மசுமா முகமது எ ன அ டையாளம் கா ணப்பட்டு ள்ளனர்.

வி சாரணை யின் போ து, ​​வி வாகர த்து கோ ரும் க ணவருடன் ஏ ற்பட்ட த க ரா று கா ரணமாக தா ன் கு ழ ந் தை க ளை கொ ன் ற தா க அ ந்தப் பெ ண் ஒ ப்புக்கொ ண்டார்.

பெ ண் த ன து க ணவரிடமி ருந்து பி ரிந்து ஏ றக்கு றைய இ ரண்டு மாத ங்கள் ஆ ன நி லையில் நீ ண்ட கா லமாக கு ழ ந் தை க ள் கொ ல் ல தி ட்டமி ட்டு வ ந்ததாக கு ழ ந் தை க ளி ன் த ந்தை வ ழி தா த்தா அபு தஹ்சின் தேராஜி கூ றினார்.

தா ய் த ன து கு ழ ந் தை க ளை ஆ ற் றி ல் வீ சு ம் வீ டி யோ வெ ளியாகி ஈராக் ம க்களி டையே கொ ந் த ளி ப் பை ஏ ற்படுத்தியு ள்ளது.

50 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தாய்நாடு நோக்கி பயணம்!!

இரட்டையர்கள்..

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மருத்துவர்களின் கடும் போ ராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்டு இன்று தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரித்தானியாவில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் கடும் உடல் ரீதியான சிக்கல்களை எதிர்கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்களை இரண்டாக பிரிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில், வறுமையில் இருந்த ஜைனாப் செய்வது அறியாது திகைத்து நின்றிருந்தாள்.

இந்நிலையில் இவர்களது மருத்துவ செலவு உள்பட அனைத்து செலவுகளுக்கும் தேவைப்பட்ட சுமார் பத்து கோடி ரூபாயை பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபரான முர்தாசா லக்கானி என்பவர் கொடுத்து உதவியுள்ளார்.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்பது அரிதானது. இவர்களில் 20இல் ஒரு தொகுப்பினர் மட்டுமே தலைகள் இணைந்த நிலையில் ஒட்டிப்பிறக்கிறார்கள். இவர்கள் மருத்துவ ரீதியில் கிரானியோபாகஸ் இரட்டையர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். குறிப்பாக, இவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தை பருவத்தைத் தாண்டி உயிர் பிழைப்பதில்லை.

இந்நிலையில், சுமார் 50 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்ற மூன்று வேறுபட்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தைகள் வெற்றிகரமாக இருவர்களாக தனித்தனியாக பிரிக்கப்பட்டனர்.

தற்போது மூன்றரை வயதாகும் இரட்டையர்கள் இருவருக்கும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஏற்றவாறு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இருவருக்குமே கற்றல் குறைபாடு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக தற்போது குழந்தைகளுடன் ஜைனாப் தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு புறப்பட மருத்துவர்கள் அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து ஜைனாப் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாகிஸ்தான் பயணிக்கிறார்.

 

வவுனியாவில் வீதி பணிகளில் ஈடுபட்ட மூவருக்கு கோரோனா தொற்றின் எதிரொலி : 82 பேர் சுய தனிமைப்படுத்தலில்!!

82 பேர் சுய தனிமைப்படுத்தலில்..

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்களுக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து அவர்களுடன் பணியாற்றிய 82 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த 25 பேருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பிசிஆர் பரிசோதனைகள் நேற்று (20.10) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் படி 3 பேருக்கு கோரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த 82 நபர்களில் 60 நபர்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதியிலும் மிகுதி 22 நபர்கள் அவர்கள் தங்கியிருந்த பிற இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள 82 நபர்களிடமும் நாளையதினம் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் விஷ்வரூபம் எடுக்கும் கொரோனா : மேலும் 109 பேருக்கு தொற்று உறுதி!!

கொரோனா..

நாட்டில் மேலும் 109 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் பேலியகொட மீன் சந்தையில் உள்ள 49 பேரும், திவுலப்பிட்டிய கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 37 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுடன் நெருங்கி பழகிய 23 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், மினுவாங்கொட, திவுலப்பிட்டிய கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2451ஆக உயர்வடைந்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, 2406 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், 3501 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அத்துடன், இதுவரையில் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 5920 என அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

நூடுல்ஸ் உணவை சாப்பிட்ட ஒரே குடும்பத்தில் 9 பேர் பரிதாப மரணம் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

நூடுல்ஸ் உணவை சாப்பிட்ட..

சீனாவில் பிரீசரில் பாதுகாக்கப்பட்ட நூடுல்ஸ் உணவை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக ப லியான சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹீலோங்ஜியாங் பகுதியிலேயே குறித்த அ திர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. முதற்கட்ட வி சாரணையில், புளித்த சோள மாவு கலந்த வீட்டில் தயாரித்த நூடுல்ஸ் உணவானது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பிரீசரில் பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும்,

அந்த உணவை அக்டோபர் 10 ஆம் திகதி சமைத்து சாப்பிட்டதும் தெரிய வந்துள்ளது. இதில் 7 பேர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இ றந்துள்ளனர்.

இன்னொருவர் மருத்த்துவ சிகிச்சையில் குணமடைவார் என நம்பப்பட்டு வந்த நிலையில், திங்களன்று ம ரணமடைந்துள்ளார். ஆனால், சம்பவத்தன்று, அந்த நூடுல்ஸ் உணவை சாப்பிட மறுத்த மூன்று கு ழந்தைகள், அதிர்ஷ்டவசமாக உ யிர் த ப்பியுள்ளது.

பொதுவாக சோள மாவில் தயாரிக்கப்படும் நூடுல்ஸ் உணவானது, குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு ஒருவகை ரசாயனத்தால் கெட்டுப்போகும் எனவும், அது சீனாவில் அடிக்கடி நடப்பது தான் எனவும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாரு கெட்டுப்போன சோள மாவு நூடுல்ஸ் சாப்பிட்டதும் வயிற்று வலியில் தொடங்கி 24 மணி நேரத்தில் ம ரணம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் இதுபோன்ற உடல் உபாதைகளால் 1951 முதல் 1975 வரை ஆண்டுக்கு 288 பேர் பாதிப்புக்கு உள்ளானதாகவும், அதில் 34 பேர் ம ரணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

கணவனின் கொ டூர செயலால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

ஷில்பா..

இந்தியாவில் செவ்வாய் தோஷம் உள்ள இ ளம் பெ ண் த ற் கொ லை செ ய் து கொ ண்ட நி லையில் அ வரின் க ணவரை பொலிசார் கை து செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஷில்பா. இவருக்கும் சோனு என்பவருக்கும் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெற்றோர் வீட்டுக்கு தனியாக வந்திருக்கிறார் ஷில்பா.

இதையடுத்து கடந்த வாரம் வி ஷம் கு டி த் து த ற் கொ லை செ ய் து கொ ண்ட ஷில்பா இ றப்பதற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அதை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், என் கணவரை நான் மிகவும் நேசித்தேன், ஆனால் அவர் என்னை தள்ளியே வைத்தார். கணவர், மற்றும் மாமியார் , மாமனார் எ ன்னை த ற் கொ லை க் கு தூ ண்டினார்கள். அ வர்கள் தா ன் என் ம ரணத் துக்கு காரணம் என எழுதப்பட்டிருந்தது.

இது தொடர்பாக ஷில்பாவின் தந்தை ஹரி சிங் கூறுகையில், திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே என் மகளை சோனு மற்றும் அவர் பெற்றோர் கொ டு மை ப் ப டு த் தி வ ந்தனர்.

அதாவது, உனக்கு செவ்வாய் தோஷம் உள்ளது, அதனால் தான் எப்போதும் உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளாய். நீ என்னை விட்டு போய் விடு, எனக்கு விவாகரத்து வேண்டும் என கூறி சோனு ஓராண்டாக ஷில்பாவை து ன்பு று த் தி னா ர் என கூறினார்.

இந்த ச ம்பவம் தொடர்பாக சோனுவின் பெ ற்றோரை பொலிசார் ஏற்கனவே கைது செய்தனர். ஆனால் சோனு த லை ம றை வா க இருந்த சூழலில் நேற்று பொலிசார் அ வரை கைது செய்தனர். அவரிடம் தீ விர வி சாரணை நடந்து வரும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.