கட்டார் மற்றும் டுபாயிலிருந்து இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா – பெரியகாடு மற்றும் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 39 பேர் இன்றையதினம் விடுவிக்கப்பட்டனர்.
கொவிட்-19 நோய்தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் கட்டார் மற்றும் டுபாயிலிருந்து அழைத்துவரப்பட்ட பயணிகள் பெரியகாடு மற்றும் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தநிலையில் 39 பேர் அவர்களது சொந்த இடங்களான திருகோணமலை, அம்பாறை மன்னார், பதுளை, காலி போன்ற பகுதிகளிற்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
குறித்த பயணிகளிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா புளியங்குளம் சின்னப்பூவரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் நேற்று (20.10.2020) இரவு யானைகள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.
பாடசாலை வளாகத்தினுள் புகுந்த யானைகள் பயன்தரு மரங்களான வாழைமரம், தென்னை மரங்களுக்கு சேதம் விளைவித்ததுடன் சிறுவர் விளையாட்டு மைதானத்தின் வேலிக்கும் சேதம் விளைவித்துள்ளது.
யானைகளின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு எப்போது அப்பகுதியில் யானைகளுக்கு வேலி அமைக்கப்படும்? என்ற கேள்விக்குறியுடன் பாடசாலை சமூகத்தினர்.
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டுப் போயுள்ளது.
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யமகா வகையைச் சேர்ந்த FZ ரக NP-BGJ-9562 இலக்க மோட்டார் சைக்கிளே நேற்று(20.10.2020) இரவு இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிதம்பபுரம் பொலிசில் உரிமையாளரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வவுனியா மக்களின் நலனை கருத்தில் கொண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் அமைக்கப்பட்ட ஆய்வுகூடம் இன்று (21.10.2020) காலை திறந்து வைக்கப்பட்டது.
ஆய்வு கூடத்தினை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மு.மகேந்திரன் திறந்து வைத்துடன் ஆய்வு கூடத்தில் பாலும் காய்ச்சப்பட்டது.
இந் நிகழ்வில் வைத்தியர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை உத்தியோகத்தர்கள், தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா புதிய பேரூந்து நிலையம் முன்பாக டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக உள்ள கழிவு வாய்க்காலில் கழிவு நீர் வழிந்தோடாது தேங்கி நிற்பதுடன், குறித்த கழிவு வாய்க்காலில் வெற்றுப் போத்தல்கள், பொலித்தீன் பைகள் என்பனவும் நீண்ட நாட்களாக அகற்றப்படாது பரவலாக காணப்படுகின்றது.
இதன் காரணமாக அப்பகுதியில் நுளம்புகளின் பெருக்கம் அதிகமாகவுள்ளதாகவும், டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
போக்குவரத்து பயணிகள், பேரூந்து சாரதி, நடத்துனர்கள், முச்சக்கர வண்டி ஒட்டுனர்கள், பொலிசார் என தினமும் பல நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்லும் இடத்தில் இவ்வாறு காணப்படுகின்றமை குறித்து பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் பிராந்திய சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ரி.தியாகலிங்கம் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் பதில் கிடைக்கவில்லை.
வவுனியாவில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பல விற்பனை நிலையங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளது.
கொவிட்-19 தாக்கத்தையடுத்து உலக பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளதுடன், நாடுகளுக்கிடையிலான வர்த்தகமும் பாதிப்படைந்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விற்பனை நிலையங்கள், கம்பனிகளில் வாகனங்கள் இல்லாமையால் பல விற்பனையகங்களும், கம்பனிகளும் இழுத்து மூடப்பட்டுள்ளதுடன், அதில் தொழில் வாய்ப்பைப் பெற்றிருந்த பல இளைஞர், யுவதிகளும் தொழில் வாய்பை இழந்துள்ளனர்.
இயங்குகின்ற சில வாகன விற்பனை நிலையங்கள் பழைய மோட்டர் சைக்கிள் மற்றும் பழைய முச்சக்கர வண்டி என்பவற்ரைற மீள கொள்வனவு செய்து அதனை விற்பனை செய்தும் வருகின்றன. இதனால் வவுனியாவில் மோட்டர் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.
வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவரும் மூன்று தொழிலாளர்களிற்கு கொரொனொ தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த ஊழியர்கள் பிரபல ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருவதுடன் நெடுங்கேணியின் பல்வேறு பகுதிகளில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் அவர்களில் 25பேருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பிசிஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றிருந்தது. அதன்படி 3பேருக்கு கோரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஊழியர்கள் பிரபல தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணிபுரிகின்றதுடன் உள்ளூர் தொழிலாளிகளும் அவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.பல்வேறு இடங்களிற்கும் அவர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பஹா மாவட்டம் முழுவதும் இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கு சட்டம் ஹம்பகா மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதுநாள் வரையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக காணப்பட்ட பிரதேசங்களில் மட்டுமே ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையும் அநேக நாட்கள் ஊரடங்கில் இருந்த மாவட்டமாக கம்பஹா மாவட்டமே இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டிய, ரத்மல்கொட பிரதேசத்தில் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 2ஆம் திகதி குறித்த பெண், தனது கணவருடன் குளியாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி அவர் சுகயீனமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டி திருணமத்தில் மணமகன் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அந்த பெண் மற்றும் கணவருக்கு தெரியவந்ததனை தொடர்ந்து 13ஆம் திகதி PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அந்த பெண்ணின் உடலில் மாத்திரம் கொரோனா தொற்றியுள்ளதாக நேற்றைய தினம் PCR பரிசோதனை முடிவுகளுக்கமைய உறுதியாகியுள்ளது. தொற்றுக்குள்ளான பெண் பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க எல்லாவல தெரிவித்துள்ளார். குறித்த பெண்ணின் வீட்டிலுள்ள ஏனையவர்கள் சுய சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பேலியகொடை மீன்சந்தையில் பணியாற்றுவோருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக களனி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளமையினால் அவர்கள் சென்று வந்த இடங்களில் ஒன்றாக பேலியகொட மீன் சந்தை உள்ளது.
இதனையடுத்து தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைய, நேற்று முன்தினம் அங்குள்ள பலர் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் 100 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 49 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோபத்தில் எடுக்கும் முடிவுகள் வி பரீதத்தையே தரும் என்பார்கள். அதுபோலவே நவராத்திரி தினத்தின் முதல் நாளான சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் வவுனியாவில் இடம்பெற்ற முக்கொ லைச் ச ம்பவம் பதிவாகியுள்ளது.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான ஓமந்தை, மாணிக்கவளவு, மாணிக்கர் இலுப்பைக்குளம் என்ற கிராமம் அமைந்துள்ளது. தினமும் நாட் கூலி வேலை, காடுகளுக்குச் சென்று வருமானத் தேடல் என அந்த மக்களின் நாளாந்த சீவியம் போ ராட்டத்துடனேயே சென்று கொண்டிருக்கின்றது.
அத்தகையதொரு போ ராட்டத்திற்கு மத்தியில் மக்கள் வாழும் அந்த கிராமத்தில் ஏற்பட்ட இ ரட்டைக் கொ லை சம்பவம் கா யமடைந்த மற்றைய நபரின் ( திங்கள் கிழமை 7.10) இறப்புடன் முக்கொ லையாக பதிவாகியுள்ளது. சந்தேக நபரான அந்த கிராமத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞன் கை து செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இக் கொ லை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கம றியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் வழங்கிய கு ற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்ட ஒரு அலசலே இது.
வவுனியா, ஓமந்தை, மாணிக்களவுப் பகுதியில் உள்ள மாணிக்கர் இலுப்பைக்குளம் என்ற பகுதியில் தம்பா என்றழைக்கப்படும் கோபால் குகதாசன் (வயது 42) தனது நான்கு பிள்ளைகளுடனான குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.
வழமையாக நாளாந்த வாழ்க்கைப் போ ராட்டம் ஒடிக் கொண்டிருந்த போது கடந்த வெள்ளிக்கிழமை மாங்குளம், ஒட்டிசுட்டான் வீதியின் 9 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள மேலியாவனம் என்ற கிராமத்தில் வசிக்கும் மச்சான் முறை உறவினரான சிவனு மகேந்திரன் (வயது 34) என்வரும், அவரது நண்பரான சு.சிவகரன் (வயது 41 ) என்பவரும் தம்பாவின் வீட்டிற்கு வருகை தந்தனர்.
வருகை தந்த அவர்கள் தம்பாவின் அயலவர்களிடம் உழவு இயந்திரம் ஒன்றை விரைவில் அனுராதபுரத்தில் கொள்வனவு செய்யவுள்ளதாகவும், இன்று தம்பாவைப் பார்த்து விட்டு போவோம் என வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
வந்தோரை வரவேற்கும் தமிழர் பண்பாட்டை பின்பற்றிய தம்பாவும் தனது மச்சானுக்கும், அவரது நண்பருக்கும் விருந்து கொடுக்க தீர்மானித்தார். கோழி சமைத்து சாப்பாடு வழங்கியதுடன், ம து வி ருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்தார்.
மாணிக்கர் இலுப்பைக்குளம் பகுதியில் தம்பா கட்டிய புதிய வீடு எவரும் இன்றி இருந்தது. அந்த வீட்டில் ம து வி ருந்துக்கும் ஏற்படாகியிருந்தது. வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகிய ம து வி ருந்து சனிக்கிழமை அதிகாலை 2 மணி தாண்டியும் நீடித்துள்ளது. குறித்த விருந்தில் நடந்த வீட்டில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள வீட்டில் 30 வயதுடைய கண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வசித்து வருகின்றார்.
1995 ஆம் ஆண்டு நாட்டு யு த்தம் காரணமாக இந்தியாவுக்கு தாய், தந்தையுடன் சென்று அங்கு படித்து வந்த கண்ணன் 2015 ஆம் ஆண்டு ச ட்டவிரோ தமாக கடல் மூலம் அவுஸ்ரேலியா சென்ற போது கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் 2 வருடம் த டுத்து வைக்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
அதன் பின் தாய், தந்தையரின் தொடர்பின்றி தாயாரின் காணியில் உள்ள மாணிக்கர் இலுப்பைக்குளம் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். கூலி வேலைக்கு செல்வதும், கூலி வேலை இல்லாத போது புதூர் காட்டுப்பகுதிக்கு சென்று தேன் எடுப்பதும் என இவரது நாளாந்த வாழ்க்கை பயணம் ஓடிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ம து அ ருந்திவி ட்டு கண்ணன் வீட்டில் உ றங்கியுள்ளார்.
இதன்போது, தம்பாவின் புதிய வீட்டில் இருந்து ச ண்டை போடுவது போன்று எழுந்த அதிக சத்தத்தையடுத்து அதிகாலை 2.00 – 2.30 மணியளவில் கண்ணன் அங்கு சென்றுள்ளார். அப்போது தம்பாவும், மச்சானும், மச்சானின் நண்பரும் ம து அ ருந்திக் கொண்டு இருந்துள்ளனர்.
கண்ணனைக்க் கண்டதும் தம்பாவின் மச்சானின் நண்பர் கதைத்த போது முன் பின் அறியாத இருவருக்கும் வாய்தர் க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தம்பாவும் மற்றைய இருவரும் கண்ணனை அறைக்குள் இழுத்து சென்று அ டித்து ள்ளனர். அங்கிந்து 2.45 மணியளவில் த ப் பி ச் சென்ற கண்ணன் தனது வீட்டில் படுத்துள்ளார்.
வெ றியில் இருந்த கண்ணனுக்கு அவர்கள் அ டித்தது கோ பத்திற்கு மேல் கோ பத்தை ஏற்படுத்தியது. தூக்கம் வரவில்லை. கோ பத்திற்கு ப ழி தீர்க்க முற்பட்டான். வி பரீத மு டிவெடுத்தான்.
நாளாந்தம் அவனது வாழ்க்கையுடன் பழக்கப்பட்ட கோ டரியையும், பக்கத்து வீட்டில் சில தினங்களுக்கு முன் கைமாறாக வேண்டிய காட்டுக் க த்தி யையும் எடுத்துக் கொண்டு அதிகாலை 4 மணியளவில் தம்பாவின் வீட்டிற்கு சென்றான். காட்டுக் க த் தி யை வேலியில் சார்த்திவிட்டு உள்ளே சென்ற போது அங்கு மூவரும் நிறை வெ றியில் உ றங்கிக் கொண்டிருந்தனர்.
எந்த ச த்தமும் இல்லை. அமைதியாக இருந்தது. மெல்ல நடந்து சென்ற கண்ணன் தம்பாவுக்கும், தம்பாவின் மச்சானுக்கும் நடுவில் நின்று கொண்டு தம்பாவின் உச்சந் த லை யி ல் கோ டரியால் கொ த்தினான். தம்பா எந்த அசைவும் இன்றி அந்த இடத்திலேயே ம ரணித்தார்.
மறுபுறம் திரும்பி தம்பாவின் மச்சானுக்கும் கோ டரியால் கொ த்தினான். அவரும் எந்த அசைவும் இன்றி அந்த இடத்திலேயே உ யிரிழந்தார். இர த்தம் பெ ருக்கெடுத்து ஓ டியது. நின்ற இடத்தில் இருந்து தம்பாவின் மச்சானின் நண்பருக்கு கொ த்திய போது நெற்றியில் பிளவு ஏற்பட்டது.
இதனையடுத்து பொலிசார் தன்னை கைது செய்து விடுவார்கள் எனக் கருத்திய கண்ணன் அங்கிருந்து வெளியேறி வேலியில் சாத்தி வைத்திருந்த காட்டுக் க த்தியையும் எடுத்து கொண்டு, சில நாட்களுக்கு முன் வாங்கிய அயல் வீட்டாரிடம் க த்தியை கொண்டு சென்று கொடுத்து விட்டு, நான் மூன்று பேரையும் போட்டுள்ளேன் எனத் தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.
கண்ணன் பகிடியாக கூறினான் என அவர்கள் நினைத்தார்கள். இருப்பினும் ச ந்தேகத்தில் அயலில் உள்ள பிறிதொரு நபரையும் அழைத்துக் கொண்டு சென்று பார்த்த போது மூவரும் இர த்த வெள்ளத்தில் கி டந்துள்ளனர். உடனடியாக ஓடிச் சென்ற அவர்கள் ஓமந்தைப் பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.
ஓமந்தைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஸ் த சில்வா அவர்களின் வழிகாட்டலில், ஓமந்தை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும், ஓமந்தை கு ற்றத்த டுப்பு பிரிவு பொறுப்பதிகாரியுமான எஸ்.சுகந் தலைமையில் பொலிஸ் குழுவினர் தீவிர வி சாரணையில் இறங்கினர்.
சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது இருவரது உ யிர் பிரிந்திருந்தது. தம்பாவின் மச்சானின் நண்பர் து டித் துக் கொ ண்டு இ ருந்துள்ளார். உடனடியாக பொலிசார் 1990 அவசர அம்புலன்ஸ் வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு குறித்த நபரை அனுப்பி வைத்தனர்.
அதன்பின் சம்பவ இடத்தில் காணப்பட்ட இரு ச டலங்கள் அங்குள்ள தடயப் பொருட்களை வைத்து ஓமந்தை கு ற்றத்த டுப்பு பிரிவு பொலிசார் வி சாரணைகளை முன்னெடுத்தனர். வவுனியா மாவட்ட நீதிபதி றியாழ் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதுடன் வி சாரணைகளுக்கும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், அக் கிராமத்தில் இருந்து பேரூந்தில் செல்வதற்காக சென்று கொண்டிருந்த இளைஞன் ஒருவரை கு ற்றத்த டுப்பு பிரிவு பொலிசார் ச ந்தேகத்தில் கைது செய்து வி சாரணை செய்த போது குறித்த இளைஞனே (கண்ணன்) இவ் இ ரட்டை கொ லையை யும் புரிந்ததாகவும், இலங்கையில் தனக்கு உள்ள ஒரேயொரு உறவினரின் மாத்தளையில் உள்ள வீட்டிற்கு செல்வதாகவும் பொலிசாரிடம் கு ற்ற ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
அத்துடன் குறித்த நபரிடம் இருந்து தா க் கு த லு க் கு ப யன்படுத்தியதாக கருதப்படும் கோ டரியும் பொலிசாரால் கைப்பற் றப்பட்டுள்ளது. அங்குள்ள சான்றுப் பொருட்களும், சாட்சியங்களும் கண்ணனுக்கு இக் கொ லை யி ல் தொடர்பிருந்ததை வெளிப்படுத்துகின்றன. இதனையடுத்து கண்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வி ளக்கமறி யலில் உள்ளார்.
அத்துடன், இர ட்டை கொ லை தொ டர்பான பி ரே த ப ரிசோ தனை அறிக்கை முடிவும் வெளியாகியுள்ளது. த லை யி ல் கூ ரி ய கோ ட ரி போ ன்ற ஆ யு த த் தா ல் கொ த்தியதால் த லை பி ளவடைந்து மூளை இரண்டாக பிளந்தமையால் இவ் இ றப்பு இடம்பெற்றது என அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
அத்துடன் கா யமடை ந்து சிகிச்சை பெற்று வந்த தம்பாவின் மச்சானின் நண்பரான சு.சிவகரனும் வவுனியா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள் கிழமை ம ரணமடைந்து ள்ளார்.
இதேவேளை, இ க் கொ லை ச் ச ம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்குமா அல்லு வேறு நபர்கள் அங்கு வந்து சென்றார்களா என்ற கோணத்திலும் ஓமந்தை குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தீவிர வி சாரணை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவையே உ லுக்கிய இந்தச் சம்பவம் அதிக கு டியாலும், கோ பத்தாலும் வந்த வினை. கு டி கு டியைக் கெ டுக்கும் என்பது போல் நான்கு பேரினதும் ம து போ தை இ ன்று மூ வருக்கு எமனாக மாறியுள்ளதுடன், ஒருவரை ஆ யுள் த ண்டனை கைதியாகியுள்ளது. இனி அவர்களது குடும்பங்களின் நிலை…?
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் திருடப்பட்ட 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டு இலத்திரனியல் மற்றும் தளபாடப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பெண் உட்பட இருவரை கைது செய்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை, நொச்சிமோட்டைப் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் அமைந்திருந்த வீட்டில் இருந்து,
தொலைக்காட்சி, குளிரூட்டி, அயன், கட்டில், மெத்தை, கண்ணாடி மேசை, கதிரை, மேசை என சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்டதாக ஓமந்தைப் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் வவுனியா ஓமந்தை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசார் மற்றும் போ தை ஒழிப்பு பொலிசார் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போது குறித்த பொருட்கள்,
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அவை மீட்கப்பட்டுள்ளதுடன், பிக்கப் ரக வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஓமந்தைப் பொலிசார் மேலும் சிலரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பிரபல திரைப்பட நடிகையான சோனா ஆபிரகாம், சமூகவலைத்தளங்களில் பரவி வரும், தன்னுடைய ஆ பாச கா ட்சிகளை நீக்க பொலிசார் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், த ற் கொ லை மு யற்சி யில் ஈ டுபட்ட ச ம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நடிகையான சோனா ஆபிரகாம் தன்னுடைய 14 வ யதில், பார் சேல் என்ற மலையாளப்படத்தில் ப டுக்கை அறை காட்சியில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் ஆனார்.
இந்நிலையில், இவர் அண்மையில் சமூக வலைதளங்களில் உள்ள தனது ஆ பாச வீடியோ காட்சிகளை நீக்க கோரி புகார் அளித்திருந்த நிலையில் த ற் கொ லை மு யற்சியில் ஈ டுபட்டுள்ளார். இதைக் கண்ட அவரின் பெற்றோர் உடனடியாக அவரை மீ ட் டு கா ப்பாற்றியு ள்ளனர்.
இதையடுத்து, தற்போது, தனக்கு நேர்ந்த அவமானம் குறித்தும், சமூக வலை தளங்களில் தன்னுடைய ஆ பாச காட்சி வெளியான பின்னணி குறித்தும் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் 14 வயதில் தான், காதல் சந்தியாவுக்கு தங்கையாக, பார் சேல் என்ற மலையாள படத்தில் நடித்ததாகவும், படத்தில் தான் ப லா த் கா ர ம் செ ய்யப்ப டுவதை பா ர்த்ததும் சகோதரியான காதல் சந்தியா த ற் கொ லை செ ய் து கொ ள்வது போ ல ப டத்தின் இயக்குனர் சதீஷ் அனந்தபுரி படம் எடுத்திருந்தார்.
150 பேர் முன்னிலையில் ப லா த் கா ர கா ட்சியை படமாக்க இயக்குனர் சதீஷ் அனந்தபுரி முடிவு செய்திருந்த நிலையில் தான் நடிக்க மறுத்ததால், தன்னை வ ற்பு றுத்தி இயக்குனர் அலுவலகத்திற்குள் வைத்து ப லா த் கா ர கா ட்சியை படமாக்கியதாகவும்,
அந்த காட்சி குறித்த புரிதல் ஏதும் அப்போது தனக்கு இல்லாததால், 10-ஆம் வகுப்பு படித்து வந்த தான் மறு நாள் வழக்கம் போல பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டதாகவும், அந்த படம் வெளியான போது கூட முறையாக எடிட் செய்யப்பட்டு ஆ பாச காட்சிகள் இல்லாமல் வெளியானதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் படம் வெளியாகி 2 ஆண்டுகள் கழித்து எடிட் செய்யப்படாத ஆ பாச காட்சிகளை சமூக வலைதளங்களில் யாரோ பரப்பி விட்டுள்ளதாகவும், அது பல்வேறு சமூக வலைதளங்களிலும் பரவிவருவதாக சில மாதங்களுக்கு முன்பு எனக்கு தெரியவந்தது.
அதனை பார்த்து அ திர்ச்சி அடைந்ததோடு அதனை, நீக்க நடவடிக்கை எடுக்க கோரி கேரள முதல்வர் , டிஜிபி, சைபர் கிரைம் பொலிசார் என அனைவரையும் சந்தித்து தான் புகார் அளித்ததாக சோனா அபிரகாம் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த வீடியோக்களை நீக்க இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அந்த வீடியோக்கள் பல்வேறு சமூக வலைதளங்களிலும் ஆ பாச இணையதளங்களிலும் தொடர்ந்து பரவிவருவதால்,
பல தரப்பில் இருந்தும் தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஏற்பட்ட அவமானத்தால் மன அழுத்தம் ஏற்பட்டு த ற் கொ லை க் கு மு யன்றதாக சோனா ஆபிரகாம் வே தனை தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேற்றாத்தீவில் அதி சொகுசு கார் விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (20.10.2020) அதிகாலை தேற்றாத்தீவு உப தபால் அலுவலகத்துக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த குறித்த காரே வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் வடிகானுள் சென்று விழுந்துள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த சாரதி உட்பட இருவர் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய கார் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா வேகமாக பரவி வருவதனால், விழாக்கள் மற்றும் பொது கூட்டங்களில் பங்கேற்க வேண்டாமென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான 87 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விசேடமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள மினுவாங்கொடை, கம்பஹா, கட்டுநாயக்க மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளிலேயே இவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
குளியாப்பிட்டிய பகுதியில் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டவர்களில் சிலருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனூடாக, இந்நாட்களில் மினுவாங்கொடை கொரோனா பரவலோடு தொடர்புடையவர்களுக்கு மேலதிகமாக ஏனைய தொடர்பாளர்கள் அடையாளம் காணப்படுவது, வெவ்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற திருமண மற்றும் இதர நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களே என்பது புலப்படுகின்றது.
ஆகவே, இயலுமானவரை பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு கோரப்படுகின்றது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட ஒரு லட்சம் பேருக்கு தொழில் வழங்குவதற்ககான கடிதம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 34818 பேர் தெரிவு செய்ய்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய அவர்களுக்கு 25 துறைகளின் கீழ் 6 மாதங்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கான சான்றிதழ் பின்னர் வழங்கப்படவுள்ள நிலையில், பயிற்சி காலப்பகுதியில் அவர்களுக்கு 22500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு வழங்குவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட அனைவரும் அரசாங்கம் அல்லது தனியார் நிறுவனங்களில் தொழில் செய்யாத குடும்பங்களின் உறுப்பினர்களாகும். பயிற்சியின் பின்னர் குறித்த நபர்கள் அமைச்சு, திணைக்களம், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு இணைக்கப்பட்ட நிறுவனங்களில் வெற்றிடங்களுக்காக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.