வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியின் கற்றல் செயற்பாடுகள் காலவரையறையின்றி நிறுத்தப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் ஆ.நற்குணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் சில தினங்களுக்கு முன்னர் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் 39 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு வேலை செய்யும் 1400 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வெளியான முடிவுகளின் படி 1022 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனை அடுத்து நாட்டில் ஏற்பட்ட கொரோனா அச்சநிலை காரணமாக இலங்கையில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் இடம்பெற்று வந்த பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று (06.10) அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் இலங்கையில் உள்ள அனைத்து தொழில்நுட்பக்கல்லூரிகளினதும் கற்றல் செயற்பாடுகள் காலவரையறையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா எ9 வீதியிலுள்ள பேயாடிகூழாங்குளம் இராணுவ முகாமிற்கு முன்பாக உள்ள மரம் ஒன்று இன்று (07.10) பிற்பகல் முறிந்து வீழ்ந்ததில் அவ்வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்து நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் வவுனியா கண்டி வீதி பேயாடிகூழாங்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்னாலுள்ள மரம் திடீரென்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது அவ்வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவ இடத்திற்கு முன்பாக உள்ள இராணுவ முகாமின் படையினர் முறிந்த மரத்தை போக்குவரத்திற்கு இடையூறு இன்றி அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பன ஏலவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் தலைத்தூக்கியுள்ள நிலையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு பரீட்சார்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும் அவருக்கு தனியாக ஒரு பரீட்சை மண்டபம் தயார் செய்து பரீட்சை எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.
மேலும், இன்று மாலை கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படும் விண்ணப்பத்தை பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கம்பஹா ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான பெண்ணைத் தொடர்ந்து நாட்டில் பலநூற்றுக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.
இந்நிலையில், கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் தந்தையொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த நபர் தற்போது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சென் ஜோசப் கல்லூரி நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேநேரம் அவர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்கத்கது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் 3வது அலை காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் வவுனியாவிலுள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களை மூ டு மா று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன உ த்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா வைரஸ் 3வது அலை காரணமாக நாட்டில் கம்பஹா, கிரிந்திவெவல, தொம்பே, பூகொட, கனேமுல்ல, வீரகுல, வெலிவேரிய, மல்வத்துஹிரிபிட்டிய, நிட்டம்புவ, மீரிகம, பல்லேவெல, யக்கல, ஜாஎல மற்றும் கந்தான
ஆகிய பொ லிஸ் பி ரிவுகளுக்கு ஊ ரடங்கு அ முல்படுத்தப்பட்டுள்ளதுடன் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் கா லவரையறையின்றி மூ டப்பட் டுள்ளது.
இந்நிலையில் பாடசாலை வி டுமுறையினையடுத்து வவுனியாவிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் காலை மாலை என இரு நேரங்களிலும் வகுப்புக்களை முன்னெடுத்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் 3வது அலையை க ட்டுப்படுத்தும் முகமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரும் வரை வவுனியாவிலுள்ள அனைத்து பாடசாலையும் மூ டுமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவியொருவர் விபத்தில் ப லியாவதற்கு காரணமான சாரதிக்கு பத்து ஆண்டுகள் சி றைத் த ண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
20 வயதான நிசாலி பெரேரா என்ற இலங்கை மாணவி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே உ யிரிழ ந்தார்.
நிசாலி, அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், குறித்த விபத்தினை மேற்கொண்ட சாரதியான 38 வயதான ஷேன் கோச்ரேனே என்பவருக்கு விக்டோரியா நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சி றைத் த ண்டனை விதித்துள்ளது.
இந்த சாரதி ஏற்கனவே மூன்று தடவைகள் போக்குவரத்து விதி மீ றல்கள் தொடர்பிலான கு ற்றச் செ யல்களில் ஈடுபட்டவர் என்பது வி சாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியா மிகவும் பா துகாப்பான நாடு எனவும் அங்கு தமக்கு எவ்வித ஆ பத்தும் ஏற்படாது எனவும் நிசாலி தன்னிடம் கூறியதாக அவரது தாயார் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு மகளை தனியாக அனுப்பி வைத்தது தங்களது தவறு எனவும் அவ்வாறு அனுப்பி வைத்திருக்காவிட்டால் இலங்கையில் அவர் இன்றும் உ யிருடன் இருந்திருப்பார் எனவும் அவரது தாயார் உருக்கமான குறிப்பிட்டுள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி அதிக வேகமாக வாகனத்தைச் செலுத்தியமை, விபத்தை மேற்கொண்டு த லைம றைவாகியமை உள்ளிட்ட பல்வேறு கு ற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஷேனுக்கு நீதிமன்றம் இவ்வாறு த ண்டனை விதித்துள்ளது.
லண்டனின் Brentford எ ன்ற பி ரதேசத்தில் ஒ ருவர் த னது ம னைவி யையும், பி ள்ளை யையும் கொ லை செ ய் து வி ட் டு, தா னு ம் த ற் கொ லை செ ய் து கொ ண் ட ச ம்பவம் நே ற்று இ டம்பெற் றுள்ளது.
பூர்ணா காமேஸ்வரி சிவராஜா எ ன்ற 36 வ ய து பெ ண்ணும், கைலாஸ் குகராஜ் எ ன்ற 3 வ யது பி ள்ளை யுமே இ வ்வாறு கொ ல் ல ப் ப ட் டி ரு ந் தா ர் க ள்.
இ வர்களை கொ லை செ ய் த வ ர் எ ன்று ந ம்பப்படும் குகராஜ் சிதம்பரநாதன் எ ன்ற 42 வ ய து ந பர் த ன் னை த் தா னே கு த் தி த ற் கொ லை செ ய் து ள் ள தா க வு ம் தெ ரிவிக்கப்ப டுகின்றது.
அ ண்மைக்கா லமாக கு டும்ப உ றுப்பினர்க ளுக்கு எ திரான ப டு கொ லை க ள் ஐரோப்பாவின் ப ல இ டங்களிலும் அ திகரித்து வ ருவதும், ம ன அ ழுத்தம் கா ரணமாக நி றையப் ப டு கொ லை க ள் கு டும்ப உ றுப்பினர்க ளாலேயே மே ற்கொள்ளப்பட் டுவருவதும் கு றிப்பிடத்த க்கது.
மினுவாங்கொட தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணி ஏற்கனவே ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த தொழிற்சாலையில் பணியாற்றும் பலர் கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினை காரணமாக அவதிப்பட்டதாக, தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்ட பெண், முதலாவதாக தொற்றுக்குள்ளான பெண் அல்லவென அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பெண்ணுக்கு செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதியே நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. அவர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொழிற்சாலை ஊழியர்களின் தகவல் பெறும் போது செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதியில் இருந்து பலருக்கு காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகள் ஏற்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. பின்னர் அந்தப் பிரச்சினை அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலைமை தொடர்பில் சுகாதார பிரிவிடம் தெளிவுப்படுத்தினோம். தொழிற்சாலைக்கு வெளிநாட்டவர்கள் வந்தமைக்கான சாட்சிகள் இன்னமும் கிடைக்கவில்லை.
எங்கிருந்து இவர்களுக்கு நோய் தொற்றியதென கண்டுபிடித்து விட்டால் நல்லது. அவ்வாறு இல்லை என்றாலும் எங்களால் நோயை கட்டுப்படுத்த கூடிய வல்லமை உள்ளதாக வைத்தியர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டுக்கான வடமாகாண பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
இப்போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த மூன்று மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர்.
யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் 59 கிலோகிராம் எடைப்பிரிவில் 112 கிலோகிராம் தூக்கி நி.சுஸ்மிதாகினி முதலாம் இடத்தையும்,
49 கிலோகிராம் எடைப்பிரிவில் 88 கிலோகிராம் தூக்கி ச.நிதர்ஷினி இரண்டாம் இடத்தையும், 81 கிலோகிராம் எடைப்பிரிவில் 74 கிலோகிராம் தூக்கி இ.கஜனிகா மூன்றாம் இடத்தையும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஞானஜீவன் ஆசிரியர் இவர்களிற்கு பயிற்சியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கம்பஹா மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.
தொற்றாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்பியுலன்ஸ் வண்டிகளை அனுப்பினால் அவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு செல்வனை புறக்கணிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். “சுகாதார அமைச்சினால் கம்பஹா மாவட்டத்தில் நோயாளிகளை அடையாளம் காண பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது அவர்கள் நோயாளிகள் என உறுதியானதைத் தொடர்ந்து அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்காக சுகாதார அமைச்சினால் அவர்களின் வீடுகளுக்கு அம்பியுலன்ஸ் வண்டிகளை அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எனினும் சிலர் சிகிச்சை நிலையங்களுக்கு செல்வதனை புறக்கணித்துள்ளதாக தகவல் கிடைத்தது. இலங்கை மக்களின் சுகாதார பாதுகாப்பு குறித்து கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சினால் வீடுகளுக்கு அனுப்பப்படும் அம்பியுலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.
சிகிச்கைக்காக செல்லாமல் அதனை புறக்கணிப்பது தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தவறு என்பதனால், அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும்” என சுகாதார அமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கம்பஹா – மிரிஸ்வத்த, மெதவத்த பகுதியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி இதனை தெரிவித்துள்ளார். குறித்த இறுதிச் சடங்கில் அந்த தொழிற்சாலையின் ஊழியர்கள் ஏழு பேர் கலந்துகொண்டிருந்த நிலையில் அவர்களில் ஐவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஐந்து பேரும் மினுவாங்கொட வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 27ம் திகதி இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் தங்களது வீடுகளில் சுயத்தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இறுதிச் சடங்கு நடைபெற்ற மெதவத்த பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள வீட்டிலும் கிருமி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களில் இதுவரை 832 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 11 இளம் பெண்களும் அடங்குகின்றனர் என்று யாழ். மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணி அறிவித்துள்ளது.
குறித்த பெண்களில் பெரும்பாலானவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் புங்குடுதீவில் உள்ள வீட்டுக்கு விடுமுறையில் வந்தபோது யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் யாழ். மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணி மேலும் தெரிவித்துள்ளது.
ஏனைய 10 பேருக்கும் மினுவாங்கொடையில் நடத்தப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலால் குறித்த பெண்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களில் 832 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய எண்ணிக்கையிலான கொரோனாத் தொற்றாளர்கள் நேற்றே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களில் மொத்தமாக 832 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 252ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 3 ஆயிரத்து 266 பேர் குணமடைந்துள்ளனர். 973 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 பேர் சிகிச்சைகளின் போது உயிரிழந்துள்ளனர்.
தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்து கொள்ளமாறு வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமார் தெரிவித்தார். தற்போதைய அவசர நிலை தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,
பொதுமக்கள் முடிந்த அளவு வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் அவசியத்தேவையை தவிர வைத்தியசாலைக்கு வருவதை முற்றாக தவிர்க்கவும்.
மேலும் மாதாந்த மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் நோயாளர்கள் மாவட்ட வைத்தியசாலைக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொண்ட பின்னர் வருகை தரவும்.
மாதாந்த மருத்துவ பரிசோதனைகளை வழமையாக நடாத்துவது போல தற்போது நடாத்த முடியாமல் உள்ளது. அத்துடன் அவர்கள் ஏற்கனவே நோயாளர்களாக இருப்பதால் வைத்தியசாலைக்கு வரும் போது அவர்களை பாதுகாப்பது கடினமாக இருக்கும்.
அத்துடன் வைரஸ் தாக்கித்தினை கருத்தில் கொண்டு வைத்தியசாலை வளாகத்தினை தொற்று நீக்கும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவித்தார்.
யாழ் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாக மாணவி ஒருவர் நேற்றையதினம் இரவு திடீரென மயங்கி விழுந்தமையால் கொரோனா பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் இளைஞன் ஒருவனுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த 30 வயது பெண், அந்த இளைஞனால் கு த் தி கொ லை செ ய் ய ப் ப ட் ட ச ம்பவம் பெ ரும் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருச்சூர் அடுத்த கூத்தாட்டுகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சோனா(30). பல் மருத்துவரான இவர் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். சோனா கூட்டா நல்லூரில் கிளினிக் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சம்பவ தினத்தன்று, சோனா கிளினிக் உள்ளே க த் தி க் கு த் து கா ய ங் க ளு ட ன் உ யி ரு க் கு போ ராடியு ள்ளார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீ ட் டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், போகும் வழியிலே சோனா உ யிரிழந்துவி ட்டார். அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில், த ன் னை க த் தி யா ல் கு த் தி ய து, த ன்னுடன் லிவிங் டுகெதராக இருந்த மகேஷ் என்று சோனா அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட, பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டனர்.
வி சாரணையில், பல் கிளினிக் நடத்திவந்த மருத்துவர் சோனாவிடம் நிறையப் பணம் இருக்கும் தகவல் அறிந்த மகேஷ் அவருடன் நெருங்கி பழகியுள்ளர.
அவருக்கு உதவுவது போன்று, நட்பாக பழகி, அதன் பின் அவரை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இதில் ம யங்கிய சோனா, மகேஷ் உடன், குரியச்சிரை பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் லிவிங் டுகெதராக வாழ்க்கை நடத்தியுள்ளார்.
அப்போது சோனாவிடம் இருந்து மகேஷ் கொஞ்சம் கொஞ்சமாக 22 லட்சம் ரூபாய் வரை பணத்தை பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில், சோனா தான் கொடுத்த பணத்தை மகேஷிடம் திருப்பி கேட்டதால், இருவருக்கும் பி ரச்சனை ஏற்பட்டுள்ளது.
அதன் பின் இருவரும் பிரிந்துள்ளனர். இதையடுத்து சோனா, காவல்நிலையத்தில் மகேஷ் மீது பண மோ ச டி பு கார் அளித்துள்ளார். இதனால் கோ ப த் தி ன் உ ச்சிக்கு சென்ற மகேஷ், சம்பவ தினத்தன்று சோனாவின் கிளினிக்கிற்கு சென்று, அவருடன் த க ரா றி ல் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும், வா க் கு வா த ம் முற்றிய நிலையில், மகேஷ், சோனாவை க த் தி யா ல் ச ரமாரி யாகக் கு த் தி வி ட் டு அ ங்கிருந்து த ப் பி ச் செ ன்று ள்ளார். த ப் பி ச் சென்ற மகேஷை பொலிசார் தே டி வ ருகின்றனர்.
தமிழகத்தில் திருநங்கையை காதலித்து திருமணம் செய்துவிட்டு, அதன் பின் அவரை தவிக்க விட்டு வேறொரு பெண்ணை அந்த இளைஞன் திருமணம் செய்யவுள்ளதால், திருநங்கை காவல்நிலையத்தில் கணவனை சேர்த்து வைக்கும் படி புகார் கொடுத்துள்ளார்.
சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் எச்.ஆர்.மேனேஜராக வேலை செய்து வந்த சோபனா. திருநங்கையான இவர் எம்.பி.ஏ படித்து பட்டம் பெற்றவர்.
மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று தன்னுடைய வேலையை பார்த்து வந்துள்ளார். அந்த நேரத்தில் கொரியர் பாய் கணேஷ்குமார் என்பவர் திருநங்கை சோபனாவை, இரண்டு ஆண்டுகளாக விரட்டி, விரட்டி காதலித்துள்ளார்.
முதலில் அவரின் காதலை ஏற்க மறுத்த சோபனா, அதன் பொன் அவருடைய காதலை ஏற்றுள்ளார். இவர்கள் இருவரின் காதலுக்கும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தாங்கள் கணவன் மனைவி என திருமண உறுதி மொழிபத்திரம் எழுதிக்கொடுத்து அமைந்தகரையை அடுத்த செனாய் நகரில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வாடகை வீட்டில் குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.
திருமணத்திற்கு பின் இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது போல, திருமண வாழ்க்கையில் இருவருக்கும் பிரச்சனை வந்துள்ளது.
கணேஷ்குமார் வேறொரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்துள்ளார். இதை அறிந்த சோபனா அவரிடம் இது குறித்து கேட்க, சண்டை முற்றிய நிலையில் சோபனாவை தவிக்கவிட்டு கணேஷ்குமார் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனால் மிகுந்த வேதனையடைந்த சோபனா த ற் கொ லை க் கு முயற்சி செய்ய, அருகில் இருப்பவர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர். திருமணத்திற்கு முன்பு, நல்ல வேலை என்று இருந்த சோபனாவின் வாழ்க்கை திருமணத்திற்கு பின்பு நரகம் போன்று மாறிவிட்டது.
இந்த பிரச்சனையால், வேலையை இழந்த சோபனா, உடல் அளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், கணேஷ்குமாரோ, வடபழனியில் உள்ள தனது 2-வது காதலியை திருமணம் செய்து கொள்ள நிச்சயம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, சோபனா உடனடியாக அருகில் இருக்கும் வடபழனி காவல்நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார்.
அதாவது, தற்போதைய சட்டத்தின்படி திருநங்கைகளை திருமணம் செய்த நபர் வேறு திருமணம் செய்ய வேண்டுமானால், முறைப்படி விவாகரத்து பெற வேண்டியது கட்டாயம் என்ற விதி இருப்பதால் பொலிசார், தனது கணவர் கணேஷ்குமாரை எப்படியும், தன்னுடன் சேர்த்து வைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் சோபனா காத்துக் கொண்டிருக்கிறார்.
கொரோனா வைரஸிற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு செல்லுமாறு நாட்டு மக்களிடம் அரசாங்கம் கேட்டுள்ளது.
சுவாச பிரச்சினை அல்லது கொரோனா தொற்றுக்கு சமமான சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திவுலபிட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றுடன் பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டமை தொடர்பில் கொரோனா சமூகத்திற்குள் பரவுவதனை தடுப்பதற்காக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு பின்னரே சமூகத்திற்குள் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அடுத்ததாக இந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மேற்கொண்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் சுமார் 600 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் கண்டுள்ள நிலையில், இந்த அவசர அறிவிப்பினை அரசாங்கம் சற்று முன்னர் விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கான அறிகுறிகள் இருந்து அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு செல்லாதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது.