யாழ்.பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாக மாணவி ஒருவர் இன்றிரவு 7 மணியளவில் தி டீரென ம யங்கி வி ழுந்தமையால் கொரோனா பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கம்பஹாவைச் சேர்ந்த குறித்த மாணவி யாழ்.பல்கலைக் கழகத்தின் பம்பைமடு பகுதியில் உள்ள வவுனியா வளாகத்தில் கல்வி கற்று வருகின்றார்.
திடீரென ம யங்கி வி ழுந்தமையால் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து வளாக மாணவர்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அம்புலன்ஸ் வண்டியில் கொண்டு செல்லப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் குறித்த மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவிக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கம்பஹாவைச் சேர்ந்த மற்றும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய வவுனியா வளாக மாணவர்கள் 90 பேரிடம் இன்று பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் க ணவனை கூ லி ப் ப டை யை ஏ வி கொ லை செ ய் ய தி ட் ட மி ட் டு ம னைவி நா டகமா டிய ச ம்பவ த்தில் மு க்கிய கு ற் ற வா ளி கை து செ ய்யப்பட் டுள்ளார்.
க டந்த ஆ கஸ்ட் மா த ம் க ணவனும் ம னைவியும் வீ ட்டில் தூ ங்கிக் கொ ண்டிருக்கு ம்போ து, கணேஷ் க ட்டிலில் இ ருந்து வி ழு ந் து த லை யி ல் அ டி ப ட் டு ர த் த ம் கொ ட்டி யதாக அ வரது ம னைவி கூ றினார்.
இ தை தொ டர்ந்து உ றவினர்கள் அ வரை ம ருத்துவம னையில் சி கிச்சைக்கு அ னுமதி த்தனர். அ ங்கு அ வருக்கு நி னைவு தி ரும்பாமல் இ ருந்ததால் மூ ன்று ம ணி நே ர ம் அ று வை சி கிச்சை ந டந்தது.
இ தை தொ டர்ந்து கணேஷ் தீ வி ர சி கிச்சை பி ரிவில் இ ருந்து வ ந்தார். பி ன்னர் நி னைவு தி ரும்பி யதும், வீ ட்டுக்குள் தூ ங்கிக்கொண் டிருந்த த ன்னை இ ருளில் யா ரோ அ டி த் த தா க அ வர் பொ லிசாரிடம் தெ ரிவித்தார்.
இ தையடுத்து கணேஷ் ம னைவி காயத்ரியிடம் பொ லிசார் வி சாரித்த போ து மு ன்னுக்குப் பி ன் மு ரணான த கவலை தெ ரிவித்தார். மே லும், க ள்ள க்காதல் வி வகாரத்தில் கூ லி ப் ப டை யை ஏ வி க ணவரை கொ ல் ல மு யன்ற தி டு க் கி டு ம் த கவல் வெ ளியானது.
காயத்ரிக்கும் மதுரையை சே ர்ந்த யாசின் எ ன்பவருக்கும் தொ டர்பு இ ருந்ததும், யாசினுக்கு த னது க ணவரின் பெ யரில் உ ள்ள வீ ட்டுப் ப த்திரத்தை வ ங்கியில் வை த்து காயத்ரி ப த்து ல ட்ச ரூ பாய் க டன் பெ ற்றுக் கொ டுத்ததும் தெ ரியவந்தது.
அ தாவது த னது ச கோதரரின் ப ணத்தேவை க்காக ப ணத்தை கொ டுத்ததாக க ணவரிடம் கா யத்ரி கூ றினார். ஆ னால் ச கோதரனுக்கு கொ டுக்காமல் யாசினுக்கு கொ டுத்து அ ந்த ப ணத்தில் யாசின் ப் ளே ஸ் கூ ல் ஆ ரம்பித்து ள்ளார். அ தி ல் ஆ சிரியையாக காயத்திரியும் சே ர்ந்துள்ளார்.
இ ந் நி லையி ல்தான் காயத்ரி த ன து ச கோதரனுக்கு ப ணம் கொ டுக்கவி ல்லை எ ன்பது க ணவர் கணேஷுக்கு தெ ரியவ ந்தது. அ தனைத் தொ டர்ந்து க ணவன் ம னைவியிடையே பி ர ச் சி னை ஏ ற்பட்டிரு க்கிறது.
இ தனை தொ டர்ந்து யாசினுடன் சே ர்ந்து க ணவனை கொ லை செ ய் ய தி ட்டமி ட்டு இ ருக்கிறார். அ தன்படி ச ம்பவத்த ன்று காயத்ரி வீ ட்டின் க தவுகளை தா ளிடாமல் தி றந்து வை த்துள்ளார்.
வீ ட்டினுள்ளே வ ந்த கூ லிப் ப டை யி ன ர் கணேசனை சு த் தி யா ல் த லை யி ல் அ டி த் து ள் ள தா க தெ ரிகிறது. இ தி ல் ம ண் டை ஓ டு உ டை ந் து ர த் த க் க சி வு ஏ ற்பட்டு இ ருக்கிறது. இ தி ல் கா யமடைந்த கணேஷ் மீ ட் க ப் ப ட் டு த னியார் ம ருத்துவம னையில் சே ர்க்கப்பட்டு சி கிச்சை பெ ற்றார்.
இ தனை தொ டர்ந்து அ வரது ம னைவி காயத்ரி ம ற்றும் கூ லி ப் ப டை யை சே ர்ந்த விஜயகுமார், கருணாகரன் ஆ கியோர் கை து செ ய்யப்பட் டனர், இ ந்த நி லையில் த லை ம றை வா க இ ருந்த மு க்கிய கு ற் ற வா ளி யாசின் நே ற்று கை து செ ய்யப்பட்டு ள்ளார்.
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி டச்பார் இக்னேசியஸ் விளையாட்டுக்கழக மைதானத்திற்கு அருகிலுள்ள மட்டக்களப்பு வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை, பொதுமக்கள் தகவல் வழங்கியதனைத் தொடர்ந்து குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கல்லடி டச்பார் பகுதியில் வசித்துவந்த 28 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக வி சாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
வவுனியா சமயபுரம் பகுதியில் முதாட்டியின் சங்கிலியை அறுத்த சகோதர்களை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சமயபுரம் பகுதியில் சிறிய கடை ஒன்றினை நடாத்தி வந்த முதாட்டியிடம் இரு இளைஞர்கள் சென்று வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் செயற்பட்டு முதாட்டி அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அறுத்து தப்பிச்சென்றுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் முதாட்டி வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு மேற்கொண்டதனையடுத்து விசாரணகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுனில் சாந்த தலமையிலான பொலிஸ் குழுவினர் மகாறம்பைக்குளம் பகுதியினை சேர்ந்த 20,22 ஆகிய வயதுடைய சகோதரர்களை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த முதாட்டின் சங்கிலியையும் மீட்டெடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்ட கொரோனா மூன்றாம் அலை காரணமாக நாட்டில் எந்தவொரு பகுதியிலும் செயலமர்வுகள் மற்றும் விரிவுரைகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கண்காட்சி, இசை நிகழ்ச்சி, களியாட்டங்கள், ஊர்வலம், பேரணி, தேவையற்ற ஒன்று கூடல் என்பவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு நாட்களாக நாட்டில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒரு சில பிரதேசங்களுக்கு ஊடரங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
திவுலப்பிட்டியை சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவர் பணியாற்றிய தொழிற்சாலையிலுள்ளவர்களுக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவாங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த மேலும் 139 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில் இன்று மாத்திரம் 605 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய குறித்த தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 708 ஆக அதிகரித்துள்ளது
கம்பஹாவில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுத்துவது குறித்து அறிவிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பில் சில திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முன்னதாக கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த திவுலப்பிட்டிய, மினுவாங்கொட, வெயாங்கொட ஆகிய பிரதேசங்கள் உள்ளிட்ட 15 பொலிஸ் பிரிவுகளில் இன்று மாலை 6.00 மணி முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்பொழுது இந்த அறிவிப்பில் திருத்தம் செய்யப்பட்டு புதிய அறிவிப்பினை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இதன்படி, கம்பஹா மாவட்டத்தின் கம்பஹா, திவுலபிட்டிய,
மினுவாங்கொட மற்றும் வேயான்கொட ஆகிய நான்கு பொலிஸ் பிரிவுகளுக்கு மட்டும் இன்று மாலை 6.00 மணி முதல் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டங்களின் அடிப்படையில் இந்த ஊரடங்குச் சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். சுகாதார சேவைப் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைய இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தப் பகுதிகளில் பேருந்துகள் பயணம் செய்ய முடிந்த போதிலும் எந்தவொரு தரிப்பிடத்திலும் நிறுத்தக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியின் பரீட்சைகள் கடந்த மாதம் 28ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் நாளை முதல் நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அதிபர் ஆ.நற்குணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இரு தினங்களுக்கு முன்னர் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் 39 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு வேலை செய்யும் 1400 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வெளியான முடிவுகளின் படி 569 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நாட்டில் ஏற்பட்ட கொரோனா அச்சநிலை காரணமாக இலங்கையில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் இடம்பெற்று வந்த பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் (07.10) வெளியாகவுள்ள பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகளை அடிப்படையாக கொண்டு உயர்தரம் மற்றும் புலமைபரிசில் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் பணியாற்றிய கூமாங்குளம் பகுதியில் வசித்து வரும் சமாதான நீதவான் ஒருவர் இன்று காலை பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா – கூமாங்குளம் பகுதியில் வசித்து வரும் குறித்த சமாதான நீதவான் வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சமாதான நீதவானாக கடமையாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் அவரிடம் ஒப்பம் பெற்றுக்கொள்வதற்காக கொரோனா நோய் தொற்றுக்கு உட்பட்டுள்ள தொற்றாளார் ஒருவர் வந்து சென்றதை உறுதிப்படுத்தியதையடுத்து அவரை தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 15 பகுதிகளில் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுல் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட திவுலபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட பகுதிகளில் தொடர்ந்து அமுலில் இருக்கும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அப்பகுதிகளில் இன்று மாலை ஆறு மணி வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே இன்று மாலையில் இருந்து மீளவும் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரையில் குறித்த தொழிற்சாலையில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியர்களின் எண்ணிக்கை 569 என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய ஆடை தொழிற்சலையில் மேலும் 246 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மினுவாங்கொடையில் கொரோனா கொத்தணி பரவலால் இதுவரை மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 569 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த ஆடைத் தொழிற்சாலையில் நேற்றைய தினம் 5 ஆம் திகதி 101 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அதன்பின்னர் 220 பேர் கொரோனா தொற்றாளர்களா அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில்,தற்போது 246 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆடை தொழிற்சலையின் 39 வயதுடைய பெண் ஊழியர் கடந்த சனிக்கிழமை இரவு கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக அடையாளம் காணப்பட்டார்.
அதனையடுத்து அவரது மகளிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனைகளில் அவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டிருந்தது.
குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிந்த யாழ்ப்பாணம் மற்றும் மொனராகலையைச் சேர்ந்த தலா ஒருவரும், குருணாகலைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் மீரிகம, குருணாகல், கட்டான, திவுலப்பிட்டிய, மொனராகலை, யாழ்ப்பாணம், சீதுவ, ஜா – எல, மகர ஆகிய பிரதேசங்களிலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதுவரை 569 பேர் கொரோனா தொற்று தொடர்பில் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொவிட்-19 பரவலின் தற்போதைய நிலைமை குறித்து நாளைய தினமே முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாளைய தினம் (07.10) வெளியாகவுள்ள பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகளை அடிப்படையாக கொண்டு உயர்தரம் மற்றும் புலமைபரிசில் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுக்கவுள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் மிகவும் தீர்மானமிக்கது எனவும் அவர் குறிப்பிட்டதுடன் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்த மக்கள் சுய சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்றுதல் அவசியம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேலை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு பிறப்பித்தல் தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
திவுலப்பிட்டியை சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவர் பணியாற்றிய தொழிற்சாலையிலுள்ளவர்களுக்கும் பீஆர்சி பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவாங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 220 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
அதன் அடிப்படையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியர்களின் எண்ணிக்கை 323 என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது இராணுவ தளபதி இந்தத் தகவலை வெளியிட்டார்.
இந்த தொழிற்சாலையில் 1400 பேர் பணியாற்றி வரும் நிலையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 323 பேர் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் வவுனியா பொலிசார் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விசேட அறிவித்தலை இன்று(06.10) வழங்கி வருகின்றார்கள்.
கம்பஹா ஆடைத் தொழில்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணிய நிலையில் வவுனியாவிலும் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக பேணுமாறு வவுனியா பொலிசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.
அத்துடன், சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளானோருடன் தனிமைப்படுத்தல் காலத்தில் நேரடி தொடர்புளை பேண வேண்டாம் எனவும், தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும், சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுமாறு அறிவுறுத்துவதுடன் மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததையடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளிற்காக வவுனியாவில் பல்வேறுபட்ட நபர்களிடம் பிசிஆர் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் கல்வி பயின்றுவரும் கம்பஹா மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சேர்ந்த 90 பேருக்கு இன்றையதினம் காலை வவுனியா பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையால் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் வவுனியா தோணிக்கல் ஆலடிப்பகுதியில் வசிக்கும் உறவினர்களை மினுவாங்கொடையில் இருந்து வருகைதந்து சந்தித்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அக்குடும்பம் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, 3 சிறுபிள்ளைகள் என 5பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,
குறித்த பெண் தொடர்புகளை பேணியதாக தெரிவித்து வவுனியா நகர்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் இரு பெண்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளிற்கு உட்படுத்தப்பட்டனர்.
எனினும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட தமது சகோதரி கடந்தமாதம் 10 ஆம் திகதியே தமது வீட்டிற்கு இறுதியாக வந்ததாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதேவேளை சேகரிக்கப்பட்ட மாதிரிகள் யாழ் போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தோணிக்கல் ஆலடிப் பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றினை அண்மையில் சந்தித்த ஒருவருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அக்குடும்பம் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வவுனியா ஆலடிப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றினை அண்மையில் கம்பஹாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணொருவர் சந்தித்து சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு கம்பஹா பகுதியில் கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அவர் வவுனியாவில் சந்தித்த குடும்பத்தினைர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸார் குறித்த பகுதிக்கு அநாவசியமாக மக்களை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
தோணிக்கல் ஆலடிப்பகுதியில் உள்ள குடும்பமொன்றே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையும் இன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.