கொரோனா ஊரடங்கிலும் உலக சாதனை படைத்த கேரள மாணவி!!

ஆர்த்தி..

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றானது மனித சமூகத்தின் அன்றாட வாழ்வியலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இது சாதகமான விரும்பத்தக்க மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது என்றால் மிகையல்ல.

அந்த வகையில், நாட்டில் முதலில் கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்ட கேரள மாநிலத்தில் தற்போது பெண் ஒருவர் இந்த ஊரடங்கு காலத்தில், 350 ஆன்லைன் படிப்புகளை படித்து முடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

வேதியியல் பாடப்பிரிவில் இரண்டாம் ஆண்டு முதுகலைப் பட்டம் பயின்று வரும் கேரளாவைச் சேர்ந்த ஆர்த்தி, கொரோனா ஊரடங்கு காலத்தினை மிகவும் பயனுள்ளதாக கழித்துள்ளார்.

இவ்வாறான இணைய வழி கற்றலுக்கு, தனது கல்லூரி தலைமை ஆசிரியரான அஜிம்ஸ் ஜி முகமது, ஆசிரியர் நீலீமா மற்றும் இணைய வழி படிப்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஹனிவ்வா ஆகியோரின் தூண்டுதலே முக்கியக் காரணம் என ஆர்த்தி கூறியுள்ளார்.

பல்வேறு தளங்களில் பல படிப்புகளை முடித்த ஆர்த்தி தங்களுக்கு பெருமை சேர்த்துள்ளதாக மாணவியின் பெற்றோர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தின விழா!!

சர்வதேச சிறுவர்தின விழா..

சர்வதேச சிறுவர் தினம் நாடாளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்திலும் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.

குறித்த நிகழ்வு அன்பக மண்டபத்தில் இன்று (01.10.2020) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், வவுனியா உதவி பிரதேச செயலாளர் பிரியதர்சினி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா அந்தணர் ஒன்றியத்தின் உபதலைவர் பிரபாகரக் குருக்கள்,

பௌத்த மதகுரு குருந்துகொட பஞ்ச ஞானசாரதேரர், அருட்தந்தை வின்சன், நன்னடத்தை உத்தியோகத்தர் துஸ்யந்தன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் கெனடி,

சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் நந்தசீலன், கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் குகனேஸ்வர சர்மா மற்றும் விருந்தினர்களாக சட்டத்தரணிகள், அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள்,

பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிறுவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இங்கு சிறுவர்களின் நடனம் , கலை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

வவுனியா இரு பாடசாலை மாணவிகளை கா ணவில்லை : பொலிசார் அசமந்தம்!!

மாணவிகள்..

 

வவுனியா, சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் வசிக்கு இரு உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவிகளை கா ணவில்லை என அவர்களது பெற்றோர்கள் ஈச்சங்குளம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் உள்ள உயர்தர வகுப்பு மாணவி ஒருவரின் வீட்டில் தங்கி நின்று சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரும் கல்வி கற்று வந்தார்.

குறித்த மாணவியின் தாயார் கடந்த செவ்வாய் கிழமை காலை வேலைக்கு சென்ற நிலையில், பாடசாலையில் இருந்து குறித்த மாணவிகளை பரீட்சைக்கான அனுமதி அட்டையை பெற அனுப்பி வைக்குமாறு தாயாருக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவியிடம் இருந்த தொலைபேசிக்கு தாயார் அழைப்பை ஏற்படுத்திய போது பதில் கிடைக்கவில்லை. அயல் வீட்டாருக்கு தெரியப்படுத்தி வீட்டிற்கு சென்று பார்க்குமாறு தாயார் தெரிவித்துள்ளார்.

அயலர்கள் வீட்டில் சென்ற போது குறித்த இரு மாணவிகளும் வீட்டில் இல்லை. இதனையடுத்து குறித்த விடயம் தாயாருக்கு தெரியப்படுத்தப்பட தாயார் வருகை தந்து பிள்ளைகளை தே டியுள்ளார்.

அவர்கள் கிடைக்காத நிலையில் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் தாயால் மு றைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞன் ஒருவரை பொலிசார் கைது செய்து வி சாரணை செய்த போதும் அவரை விடுவித்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டு பிரதியை பொலிசார் வழங்கவில்லை எனவும், பொலிசார் அசமந்தமாக செயற்படுவததாகவும் பெற்றோர்களும், உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.

பெரும் ஆபத்தாக மாறிவரும் எலிக் காய்ச்சல் : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

எலிக் காய்ச்சல்..

லெப்டோஸ்பிரோசிஸ் என அழைக்கப்படும் ஒரு வித காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சுகாதார அமைச்சு எலி காய்ச்சல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார அமைச்சின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், மழைக்காலம் காரணமாக எலி காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தற்போது இலங்கையில் 6,096 லெப்டோஸ்பிரோசிஸ் நோயாளிகள் இருப்பதாகவும், லெப்டோஸ்பிரோசிஸின் விளைவாக இலங்கையில் 70 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக அளவில் லெப்டோஸ்பிரோசிஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இலங்கையில் உள்ள 1396 லெப்டோஸ்பிரோசிஸ் நோயாளிகளில் 1341 பேர் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனுராதபுரம், கேகாலை, களுத்துறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இதில் அடங்குவதாக வைத்திய நிபுணர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

 

தனுஸ்கோடி கடல் பிராந்தியத்தில் கரை ஒதுங்கிய இராட்சத ரப்பர் உருளை!!

இராட்சத ரப்பர் உருளை..

தனுஸ்கோடி அருகே அரிச்சல் முனை கடல் பகுதியில் இன்றைய தினம் கரை ஒதுங்கிய இரப்பர் உருளை குறித்து தமிழக கடலோர காவல் குழும பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ராமநாதபுரம் – தனுஸ்கோடி அருகே மீன் பிடிக்கச் சென்ற நாட்டு படகு மீனவர்கள் அரிச்சல் முனை அருகே இராட்சத ரப்பர் உருளை கரை ஒதுங்கியுள்ளதாக தனுஸ்கோடி தமிழக கடலோர காவல் குழும பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சுமார் 15 உயரமும் 6 அடி விட்டமும் கொன்ட இரப்பர் உருளை சுமார் 3 டன் எடை கொண்டதாக இருக்கும் என ராமேஸ்வரம் கடலோர காவல் குழும ஆய்வாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கரை ஒதுங்கிய பைபர் உருளை ஆழ்கடலில் செல்லும் கப்பல்களில் மிதவையாகவோ அல்லது துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடையாமல் தடுக்கும் உருளையாகவோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும், இந்த வகையாக ரப்பர் உருளை தூத்துக்குடி துறைமுகத்தில் பயன்பாட்டில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுகத்திற்கு வந்த கப்பல்களில் இருந்து தவறி விழுந்து தனுஸ்கோடி கடற்பகுதிக்குள் வந்திருக்கலாம் என்ற கோணத்திலும் மெரைன் பொலிஸாருடன் பாதுகாப்பு வட்டாரங்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

அதிகரித்து வரும் வாகனங்களின் விலை : அரசாங்கத்தின் நிலைப்பாடு!!

அதிகரித்து வரும் வாகனங்களின் விலை..

இறக்குமதி செய்யப்படுகின்ற வாகனங்களின் விலைகளைக் குறைப்பதற்கு அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.

வாகனங்கள் இறக்குமதியை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியிருக்கின்ற நிலையில் வாகனங்களின் விலைகள் குறித்து எழுந்துவரும் சந்தேகம் தொடர்பாக அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

தொடர்ந்தும் பேசிய அவர், எந்த காரணத்திற்காகவும் உள்நாட்டில் தற்சமயம் வாகனத் தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், வெளிநாடுகளுக்கு உள்நாட்டுப் பணம் மற்றும் அந்நிய செலாவணி என்பன கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

பே ருந்தில் செ ன்ற பெ ண் ணு க் கு பா லி ய ல் தொ ல் லை : இ ளைஞன் கை து!!

பே ருந்தில்..

க ளுத்துறை மு த ல் அ ளுத்கம வ ரை பே ருந்தில் ப யணித்த ஒ ரு அ ர ச அ தி கா ரி யா ன பெ ண் ஒ ரு வ ர் பா லி ய ல் கொ டு மை க் கு ஆ ளாகியுள் ளதாக தெ ரிவிக்க ப்படுகி ன்றது.

இ ந் நி லையில், கு றித்த ச ம் ப வ ம் தொ டர்பில் ச ந்தேக த்தில் அ ளுத்கம பொ லிஸார் இ ளை ஞ ர் ஒ ருவரை கை து செ ய் து க ளுத்துறை நீ திமன் றத்தில் இ ன்று ஆ ஜர்படுத்தியு ள்ளனர்.

கொ ழும்பு சி ங்கள ஊ டகம் ஒ ன்று வெ ளியிட் டுள்ள செ ய்தியில் இ ந்த வி டயம் தெ ரிவிக்கப்ப ட்டுள்ளது. 49 வ ய தா ன இ ர ண் டு பி ள் ளை க ளி ன் தா யே இ வ்வாறு பா திக்க ப்பட்டு ள்ளதாக தெ ரிவிக்கப்ப ட்டுள்ளது.

இ ந்த ச ம்பவம் தொ டர்பாக பா தி க் க ப் ப ட் ட பெ ண் செ ய் த மு றை ப் பா ட் டை தொ டர்ந்து, ச ந் தே க ந ப ர் நே ற்று மா லை அ ளுத்கம பே ருந்து நி லைய த்தில் வை த் து கை து செ ய்யப்பட்டு ள்ளார்.

இ வ்வாறு கை து செ ய்யப்ப ட்டவர் 24 வ ய தா ன கித்துல்கல ப கு தி யை சே ர்ந்தவர் எ னவும், அ வ ர் பா னந்துறையில் உ ள்ள சு ற்றுலா ஹோ ட்டலில் ப ணி பு ரிவதாகவும் தெ ரிவிக்கப்பட் டுள்ளது.

நே ற்று வே லை மு டிந்து வீ டு தி ரும்பும் போ து கொ ழும்பிலிருந்து அ ளுத்கம செ ல்லும் வ ழியில் ச ந் தே க ந ப ர் ப ல மு றை கு றி த் த பெ ண் ணி ட ம் பா லி ய ல் சே ட் டை செ ய் து ள் ளா ர். இ தனைய டுத்து, பா திக்க ப்பட்ட கு றி த் த பெ ண் பொ லிஸில் மு றை ப் பா டு செ ய்துள்ளதா கவும் தெ ரிவிக்கப்பட் டுள்ளது.

இ தன் போ து அ ளுத்கம பே ருந்து நி லையத்தில் க டமையில் இ ருந்த இ ரண்டு போ க்குவரத்து பொ லிஸ் அ திகா ரிகள் ச ந்தேக ந பரை கை து செ ய்துள் ளதாக அ ந்த செ ய்தியில் மே லும் தெ ரிவிக்கப்ப ட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வந்த கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு ஆபத்து!!

கையடக்க தொலைபேசி..

பதிவு செய்யப்படாத புதிய கையடக்க தொலைபேசிகளில் உள்ள சிம் அட்டைகள் இன்று முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கையடக்க தொலைபேசி கொண்டு வரும் நபர்கள் ஆணையத்தின் இணைத்தளம் ஊடாக தங்கள் கையடக்க தொலைபேசிகளை பதிவு செய்துக் கொள்ள முடியும்.

விற்பனை அனுமதி பத்திரம் கொண்டுள்ள விற்பனையாளர்களிடம் மாத்திரம் கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்யுமாறு ஆணையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பயனாளர்கள் தாங்கள் கொள்வனவு செய்யும் கையடக்க தொலைபேசி சட்டரீதியானதா என்பது தொடர்பில் தங்கள் கையடக்க தொலைபேசியில் உள்ள 15 இலக்கங்கள் கொண்ட இமி இலக்கங்களை 1909 என்ற இலக்திற்கு அனுப்பி உறுதி செய்துக் கொள்ள முடியும்.

போலி கையடக்க தொலைபேசிகள் நாட்டிற்குள் கொண்டுவருவதனை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசி பாகங்கள் இரத்து செய்யப்படும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

 

தென்னிலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கரி சுரங்கம்!!

நிலக்கரி சுரங்கம்..

உலக பாரம்பரிய தளமாகக் கருதப்படும் காலி கோட்டையின் “கறுப்புக் கோட்டையில்” புராதன மதிப்புள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை மத்திய கலாச்சார நிதியத்தின் தெற்கு மாகாணத்தின் திட்ட இயக்குநர் பேராசிரியர் நிலான் குரே தெரிவித்துள்ளார். பிரித்தானிய காலப்பகுதியில் கறுப்பு கோட்டையில் சிறைக் கூடமாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் நிலக்கரி சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“ஆவணங்களில் உள்ள தகவலுக்கமைய ஆயுதங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தும் இடமாக இது பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.புகை காரணமாக சுவர் கறுப்பாகியுள்ளது.

அதனால் தான் கறுப்புக் கோட்டை என்ற பெயர் இதற்கு பயன்படுத்தப்படுகின்றது. கறுப்பு கோட்டையை ஆய்வு செய்யும் போது இந்த நிலக்கரி சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான காலப்பகுதி தீர்மானிக்கவில்லை என்ற போதிலும் அது போர்த்துகீசியம் அல்லது டச்சு காலத்திற்கு சொந்தமான இடமாகும்.

நிலக்கரி இலங்கையில் இல்லை. இதனால் வெளிநாடு ஒன்றில் இருந்து தான் கொண்டுவரப்பட்டுள்ளது. வரலாற்று தகவலுக்கமைய போர்த்துகீசியம் அல்லது டச்சு காலத்திற்கு சொந்தமான நிலக்கரி என தெரியவந்துள்ளது.

அதற்கமைய இந்த நிலக்கரியின் காலப்பகுதியை ஆராய்வதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார நிதியத்தின் தெற்கு மாகாணத்தின் திட்ட இயக்குநர் பேராசிரியர் நிலான் குரே தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா நோயாளிகள் : வைத்தியர் கடும் எச்சரிக்கை!!

கொரோனா..

இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து தீவிரமடைந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு எச்சரித்துள்ளது. நாட்டினுள் தற்போது வரையிலும் மூவாயிரத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

அவர்கள் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளான யாரேனும் சமூகத்திற்குள் எந்த சந்தர்ப்பத்திலும் கண்டுபிடிக்கப்படலாம் என பிரதான வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்திய மீனவர்கள் ஊடாக இலங்கை மீனவர்களுக்கு மிகவும் இலகுவாக கொரோனா வைரஸ் தொற்ற கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் முடிந்த அளவு சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்குமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நட்சத்திரங்கள் தொடர்பில் ஆய்வு செய்த 9 வயது இலங்கை சிறுவன் : நாசா பாராட்டு!!

இலங்கையை சேர்ந்த சிறுவன் சர்வதேச மட்டத்தில் பிரபல்யம் அடைந்துள்ளார்.

பொலநறுவை – ஜயந்திபுர பிரதேசத்தை சேர்ந்த ஒஜித் துலங்ஞன் சில்வா, சிறுவயதிலேயே சர்வதேசம் வரை சென்று வெற்றி பெற்றமை தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

நட்சத்திரங்கள் தொடர்பான ஆய்வாளராக வேண்டும் என்று கனவு காணும் 09 வயது சிறுவனே இவ்வாறு பிரபல்யம் அடைந்துள்ளார்.

ஒஜித் துலங்ஞன் சில்வா என்ற குறித்த சிறுவன் தோபாவெவ ஆரம்ப பாடசாலையில் 4ஆம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார்.

குறித்த சிறுவன் இணையம் ஊடாக ஒன்லைன் மூலம் நாசா நிறுவனம் நடத்தும் பரீட்சைக்கு முகம் கொடுத்து இதுவரையில் 3 சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

ஒஜித் துலஞ்சன் தனது பெற்றோருக்கு ஒரே மகனாகும். தங்கள் மகன் அதிகாலை 2 மணிக்கு எழுந்து நட்சத்திரங்கள் தொடர்பில் ஆய்வு செய்வதாக ஒஜித்தின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பை அச்சுறுத்தும் மற்றுமொரு ஆபத்து!!

மற்றுமொரு ஆபத்து..

இந்த வருடம் அதிகமான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுமத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முமையான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 27,733 ஆகும். அதில் 3675 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தில் 3040 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொனராகலை மாவட்டத்தில் மாத்திரம் ஒரு டெங்கு நோயாளியேனும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.

மழையுடனாக காலநிலை அதிகரித்துள்ளதனை டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளனர். நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதனை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த வருடத்தில் இதுவரை காலப்பகுதியில் டெங்கு நோயினால் 23 பேர் உ யிரிழந்து ள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருன ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போதைய மழைக் காலம் என்பதால் கொழும்பில் மேலும் பல டெங்கு நோயாளர்கள் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

பாடசாலை விடுமுறை..

அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளின் 2020ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அந்த அறிக்கையில் அறிவித்துள்ளது.

இதேவேளை,க.பொ.த உயர் தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் பீ. சனத் பூஜித தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 12ம் திகதி முதல் நவம்பர் 6ம் திகதி வரை க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் 55 மில்லியன் செலவில் கட்டப்பட்ட கேட்போர் கூடம் திறந்து வைப்பு!!

கேட்போர் கூடம்..

வவுனியா மாவட்ட செயலகத்தில் 55 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கேட்போர் கூடத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (01.10.2020) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றிருந்தது.

கேட்போர் கூடத்தின் நினைவுக்கல்லினை உள்ளகப் பாதுகாப்பு , உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச திரைநீக்கம் செய்து வைத்துடன் கட்டிடத்தினையும் திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் உள்ளகப் பாதுகாப்பு , உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ்,

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான குலசிங்கம் திலீபன், செல்வம் அடைக்கலநாதன், ரிசாட் பதியூதின், காதர் மஸ்தான் மற்றும் வடமத்திய மாகாண ஆளுனர், கிழக்கு மாகாண ஆளுனர்,

வடக்கு கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் , இராணுவத்தினர், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச கலந்து கொண்ட நிகழ்வு இருளில் முழ்கியது!!

சமல் ராஜபக்ச..

வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ளகப் பாதுகாப்பு , உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச மற்றும் பல விசேட அதிதிகள் கலந்து கொண்ட நிகழ்வில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமையினால் கேட்போர் கூடம் சில நிமிடங்கள் இருளில் முழ்கியிருந்தது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் 55 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கேட்போர் கூடத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச மங்கள விளக்கேற்றிய பின்னர் அதிதிகள் கதிரையில் அமர முற்பட்ட சமயத்தில் திடீரென கேட்போர் கூடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக கேட்போர் கூடம் சில நிமிடங்கள் இருளில் முழ்கியிருந்ததுடன் பாதுகாப்பு பிரிவினர் அமைச்சரை சூழ்ந்து கொண்டனர்.

அதன் பின்னர் கேட்போர் கூடத்திற்கு மின்பிறப்பாக்கி மூலம் மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது.

 

வவுனியாவில் மாபெரும் இந்து எழுச்சி ஊர்வலம் : அணி திரண்ட மக்கள்!!

இந்து எழுச்சி ஊர்வலம்..

இந்துக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய பிரச்சினைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து வவுனியா மாவட்ட இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி இடம்பெற்றது.

குறித்த பேரணி இன்று (01.10.2020) காலை 8.30 மணியளவில் குருமன்காடு காளிகோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி காலை 11.40 மணியளவில் வவுனியா கந்தசுவாமி கோவில் முன்றலில் முடிவடைந்தது.

வவுனியா மாவட்டம் மட்டுமல்லாது உலகெங்கும் வாழ்கின்ற இந்துக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை ஒழுங்குப்படுத்தி வரிசைப்படுத்தி வவுனியாவில் இருக்கின்ற இந்த அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து இந்த பேரணியை முன்னெடுத்திருந்தனர்.

காலை 08.00 மணியளவில் வவுனியா குருமன்காடு காளிகோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகிய பேரணியானது குருமன்காட்டு சந்தி ஊடாக சென்று அங்கிருந்து புகையிரத நிலைய வீதியின் ஊடாக நகர மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரம் சென்று அங்கிருந்து பஜார் வீதியூடாக சென்று ஹொரவப்பொத்தானை வீதியூடாக அங்கிருந்து வவுனியா கந்தசுவாமி கோவில் முன்றலை சென்றடைந்து ஊர்வலம் நிறைவுற்றது.

இந்து சமயத்தின் கலை, கலாச்சாரங்கள், தமிழர்களின் பண்பாடுகளை உள்ளடக்கிய பல்வேறு அம்சங்கள் பேரணியில் உள்ளடங்கியிருந்தன.

குறித்த மாபெரும் ஊர்வலத்தில் இந்து சமய தலைவர்கள், குருக்கள், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள் என இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்துக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய பிரச்சினைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகயானது,

எமது கோரிக்கைகளாக பசு வதையை எவ்வடிவிலும் தடுத்தல் அதனை அரசாங்கத்திற்கு சட்டமாக்க கோருதல், மத மாற்றத்தை தடுத்தல் அதனை தடுக்க அரசாங்கத்தை சட்டமாக்க கோருதல்.

இந்து மதம் சார்ந்த புராதன இடங்கள் எல்லாவற்றிலும் இந்து மதம் சார்ந்தவர்கள் எந்தவித தடையும் இன்றி வணக்கம் செய்வதற்கும், வழிபாடு செய்வதற்கும் ஆவண செய்தல்

ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிக் கல்விக்கு முக்கியம் கொடுத்து மற்றைய வகுப்புக்கள் நிகழ்வுகளை தடை செய்து அறநெறியை வளர்த்தல்,

வவுனியா மாவட்டத்திலே பல வீதிகளிற்கு கிராமங்களிற்கு இந்து மதம் சார்ந்த பெயர்கள் மாற்றப்படுகின்றமை போன்ற கோரிக்கைகளாகும்.