வவுனியா சேமமடுவில் யானைகள் அ ட்டகாசம் : இரண்டு வீ டுகள் சே தம்!!

சேமமடுவில்..

வவுனியா சேமமடு பகுதியில் நேற்று அதிகாலை ஊருக்குள் புகுந்த யானைகள் இரண்டு வீடுகளை சே தப்படுத்தி சென்றுள்ளதுடன், வீட்டில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நெல்லினையும் உண்டுவிட்டு சென்றுள்ளது.

சேமமடு கிராமத்தில் தொடர்சியாக யானைகளின் அ ட்டகாசம் அதிகரித்து வருவதுடன் இதனால் பயிர்ச்செய்கை உட்பட ஏனைய செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் க வலை தெரிவித்துள்ளனர்.

நீண்டகாலமாக தொடர்ந்து வருகின்ற இப்பி ரச்சனையை நிவர்த்தி செய்து யானைகளின் அ ட்டகாசத்தை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை சேமமடுப்பகுதியில் யானையினால் கடந்த வருடங்களில் ஒருவர் ம ரணமடைந்திருந்ததுடன், ஒருவர் கா யமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

இலங்கைக்கு வர வெளிநாடுகளில் காத்திருக்கும் 50000 இலங்கையர்கள்!!

இலங்கையர்கள்..

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் வேலைத்திட்டங்களை எதிர்வரும் நாட்களில் விரைவுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

94 நாடுகளில் இருந்து 20850 இலங்கையர்கள் இதுவரையில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அமைச்சின் புதிய செயலாளர் அட்மிரால் ஜயனாத் கொலம்பபே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் மத்திய கிழக்கு மற்றும் மாலைத்தீவில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆபிரிக்க நாடுகளில் வாழும் பெருமளவு இலங்கையர்களை நாட்டிற்கு அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அவர்களை அழைத்து வருவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு அழைக்குமாறு கோரி இதுவரையில் 50 ஆயிரம் இலங்கையர்கள் இதுவரையில் விண்ணப்பித்து காத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

கொழும்பை விட யாழில் பாரியளவில் அதிகரிக்கும் தங்கத்தின் விலை : காரணம் என்ன?

தங்கத்தின் விலை..

வட மாகாணத்தில் தங்கத்தின் விலையில் பாரியளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் உட்பட வடபகுதி வர்த்தக நிலையங்களில் தங்கம் ஒரு பவுனின் விலை, கொழும்பில் விற்பனை செய்வதை விடவும் 10 – 15ஆயிரம் ரூபாயில் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் 24 கரட் தங்கத்தின் விலை 97500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் யாழ்ப்பாணத்தில் அது ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கத்தின் விலை கொழும்பை விடவும் யாழ்ப்பாணத்தில் 12000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாண வர்த்தகர்கள் கருத்து வெளியிடுகையில்,

எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஆலய திருவிழாக்கள் நடைபெறும். இந்த மாதங்களில் திருமண நிகழ்வுகளும் அதிகமாக நடைபெறுவதால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இந்து மக்கள் மே மற்றும் ஜுன் மாதங்களிலேயே திருமண நிகழ்வுகளை அதிகம் ஏற்பாடு செய்கின்றனர். எனினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த நிகழ்வுகள் பிற்போடப்பட்டுள்ளது.

இதனால் அடுத்த இரண்டு மாதங்களில் அதிகளவான திருமணங்கள் நடைபெறவுள்ளமையினால் தங்கத்தின் விலை பாரியளவு அதிகாரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சமூகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி : ஆசிரியர்கள் உட்பட 100 பேர் தனிமைப்படுத்தல்!!

கொரோனா..

அனுராதபுரம், ராஜாங்கன யாய 5 பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். இதன் காரணமாக பாடசாலை ஆசிரியர்கள் உட்பட 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வட மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ராஜாங்கன யாய 5 நவோத்யா வித்தியாலயத்தில் 11ஆம் வகுதிப்பில் கற்கும் 16 வயதுடைய மாணவனுக்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அந்த பிரதேசத்தில் முதல் முறையாக கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் வீட்டிற்கு முன்னால் இந்த மாணவன் வசித்து வருகின்றார்.

இந்நிலையிலேயே கொரோனா இவ்வாறு ஆசிரியர்கள் உட்பட 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

இலங்கையில் பாடசாலை மாணவனுக்கு கொரோனா!!

கொரோனா..

இலங்கையில் இன்று சமூக மட்டத்தில் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜாங்கன பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவன் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக அந்தப் பகுதி சுகாதார வைத்திய அதிகாரி சந்தியா அபேரத்ன தெரிவித்துள்ளார்.

ராஜாங்கன யாய 5 நவோத்யா வித்தியாலயத்தில் 11ஆம் வகுதிப்பில் கற்கும் 16 வயதுடைய மாணவனுக்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அந்த பிரதேசத்தில் முதல் முறையாக கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் வீட்டிற்கு முன்னால் இந்த மாணவன் வசித்து வருகின்றார்.

பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 102 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் 101 பேர் ஆரோக்கியமாக உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான மாணவன் சிரி செவன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் குறித்த மாணவன் கற்கும் பாடசாலையில் உள்ள மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் பாடசாலை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் ஏனைய பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லை என தம்புத்தேகம கல்வி வலய இயக்குனர் ஜீ.கே.ஆர்.எம்.கே.பண்டார தெரவித்துள்ளார்.

பெற்றோருடன் வசித்து வந்த ம கள் செ ய்த செ யல் : அ வமானத்தில் த ற் கொ லை செ ய்த பெ ற்றோர்!!

மகள் செ ய்த செ யல்..

தமிழகத்தில் வி வாகரத்து பெ ற்று வீ ட்டில் வ சித்து வ ந்த ம கள் கா தலனுடன் ஓ ட்டம் பி டித்ததால் அ வமானத்தில் அ வர் பெ ற்றோர் த ற் கொ லை செ ய்து கொ ண்டுள் ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தின் கோரகுப்பம் கிரா மத்தை சே ர்ந்தவர் ஏழுமலை (60). வி வசாயி. இ வருடைய ம னைவி பா க்கியம் (55). இ வர்களுக்கு அலமேலு(32), சந்தியா(29), ரோசி(27) எ ன 3 ம கள்கள் உ ள்ளனர்.

இ வர்களில் அலமேலு, சந்தியா ஆ கியோருக்கு ஏ ற்கனவே தி ருமணம் மு டிந்து அ தே கி ராமத்தில் உ ள்ள அ வரவர் க ணவர் வீ ட்டில் வ சித்து வ ருகின்றனர். க டைசி ம கள் ரோசிக்கும், ப ள்ளிப்பட்டு தாலுகா ராஜாநகரம் மோட்டூர் கி ராமத்தை சே ர்ந்த ஒ ருவருக்கும் க டந்த 2 ஆ ண்டுகளுக்கு மு ன்பு தி ருமணம் ந டந்தது.

க ணவன், ம னைவி இ டையே ஏ ற்பட்ட க ருத்து வே றுபாடு கா ரணமாக ரோசி, க ணவரை வி வாகரத்து செ ய்துவிட்டு பெ ற்றோர் வீ ட்டில் வ சித்து வ ந்தார். இ தற்கிடையில் ரோசிக்கும், அ தே கி ராமத்தை சே ர்ந்த ஒ ருவருக்கும் காதல் ம லர்ந்ததாக கூ றப்படுகிறது.

கா தலர்கள் இ ருவரும் செ ல்போன் மூ லம் த ங்களது கா தலை ர கசியமாக தொ டர்ந்து வ ந்தனர். ம களின் இ ந்த கா தல் வி வகாரம் அ றிந்த அ வரது பெ ற்றோர், ரோ சியை க ண்டித்தனர். ஆ னாலும் ரோசி, த னது கா தலை தொ டர்ந்தார்.

இ தற்கிடையில் நே ற்று மு ன்தின ம் அ வரது பெ ற்றோருக்கு தெ ரியாமல் வீ ட்டைவி ட்டு வெ ளியேறிய ரோசி, த னது கா தலனுடன் ஓ ட்டம் பி டித்தார். த னது மகள் கா தலனுடன் ஓ டியதை அ றிந்த அ வரது பெ ற்றோர் அ திர்ச்சி அ டைந்தனர். ப ல இ டங்களில் தே டியும் ம களை க ண்டுபிடிக்க மு டியவில்லை.

வி வாகரத்து பெ ற்று வீ ட்டில் இ ருந்த த ங்கள் ம கள், கா தலனுடன் ஓ டிவிட் டதால் அ வமானம் தா ங்க மு டியாமல் த வித்த ஏழுமலை, அ வருடைய ம னைவி பாக்கியம் இ ருவரும் வீ ட்டில் உ ள்ள மி ன்விசி றிகளில் தூ க் கு ப் போ ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டனர்.

த னது பெ ற்றோர் தூ க் கி ல் பி ண மா க தொ ங் கு வ தை க ண்டு அ திர் ச்சி அ டைந்த அ வர்களது மூ த்த ம கள் அலமேலு, க த றி அ ழு தா ர். இ து ப ற்றி த கவலறிந்த பொ லிசார் அ ங்கு வ ந்து இ ருவரது உ டல்களையும் கைப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்காக ம ருத்துவமனை க்கு அ னுப்பி வை த்தனர். மே லும் இ து கு றித்து பொ லிசார் வி சாரணை ந டத்தி வ ருகின்ற னர்.

2 மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் வீட்டுக்கு வருவார் : அடுத்தடுத்து தீக்கு ளித்த கணவன் மற்றும் மனைவி!!

அடுத்தடுத்து…

தமிழகத்தில் குடும்ப பி ரச்சினையில் கணவன் – மனைவி அடுத்தடுத்து தீக்கு ளித்து த ற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அல்லிகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராம் (38). இவருடைய மனைவி கனி (33). இவர்களுக்கு கவின் (15) என்ற மகனும், தர்ஷினி (13) என்ற மகளும் உள்ளனர்.

ஜெயராம் சொந்தமாக லொறி வைத்து ஓட்டி வந்தார். அவர் லொறியில் வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி சென்று வருவார். 2 மாதங்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து, ஒரு வாரம் தங்கி விட்டு மீண்டும் லொறியை ஓட்டிச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் அவர் வெளிமாநிலத்துக்குச் சென்றிருந்த போது லொறி பழுதடைந்து விட்டது. போதிய பணம் இல்லாமல் அதை சரி செய்ய முடியாமல் அவர் லொறியை அங்கேயே விட்டுவிட்டு பணத்துக்கு ஏற்பாடு செய்ய ஊருக்கு வந்து விட்டார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பணம் ஏற்பாடு செய்ய முடியாமல் சிரமத்தில் இருந்து வந்தார். இதனால் அவர் ம ன உ ளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் வெளியே சென்று ம து அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும், அவருடைய மனைவி கனிக்கும் வா க்குவா தம் ஏற்பட்டது.

த கராறு முற்றியதில் ஜெயராமும், அவரது மனைவியும் அடுத்தடுத்து தங்களது உ டலில் ம ண்எண் ணெயை ஊ ற்றி தீக்கு ளித்தனர். இதனால் அவர்கள் இருவரும் அ லறியபடி அங்கும் இங்கும் ஓடினர். இதில் வீட்டில் இருந்த அவர்களது பிள்ளைகள் கவின், தர்ஷினி மீதும் தீப்ப ற்றியது.

இந்த ச த்தம் கே ட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராம் மற்றும் கனி உ யிரிழந்த நிலையில் கவினும், தர்ஷினியும் லேசான கா யங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

திடீரென வயிற்று வலியால் துடிதுடித்த திருமணமாகாத பெண் : சில மணிநேரத்தில் பிறந்த குழந்தை!!

திருமணமாகாத பெண்..

சென்னையில் இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரவாயலை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுக்கு திருமணமாகவில்லை, இந்நிலையில் நேற்று வயிற்று வ லிப்பதாக கூறியுள்ளார்.

உடனடியாக மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றதும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாகவும், சில மணிநேரங்களில் குழந்தை பிறந்துவிடும் எனவும் கூறியுள்ளனர்.

இதை கேட்டதும் பெற்றோர்கள் அ திர்ச்சியில் உறைந்து போயினர், சில மணிநேரங்களில் அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. இதனையடுத்து அந்த பெண்ணிடம் விசாரித்ததில்,

லோகேஷ் என்பவரை காதலித்து வந்ததாகவும், திருமண ஆசை காட்டி தன்னை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து லோகேஷ் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

வி சாரணையில், கடந்தாண்டு வேலையாக மதுரவாயல் வந்துள்ளார் லோகேஷ், அவர் வந்த பைக் பஞ்சராகிவிட தாகத்துக்கு அருகிலிருந்த வீட்டில் தண்ணீர் கேட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் தண்ணீரை வழங்க, அவளது அழகில் மயங்கிய லோகேஷ் போன் நம்பரை எழுதி கொடுத்துவிட்டு வந்துள்ளார். ஒரு வாரம் வரை காத்திருந்தும் அப்பெண் போன் செய்யாததால் மறுபடியும் வீட்டுக்கு சென்று தண்ணீர் கேட்டுள்ளார்.

இப்படி தொடர்ந்து அப்பெண் செல்லும் இடமெல்லாம் துரத்திச் சென்று காதல் வலையில் சிக்கவைத்துள்ளார். ஆசை வார்த்தைகள் கூறி அப் பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றியது தெரியவந்துள்ளது. லோகேசுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமாகி 45 நாட்களில் புதுப்பெண் கொ லை : கு ற்றவாளிகளின் தி டுக்கிடும் வாக்குமூலம்!!

புதுப்பெண்..

தமிழகத்தில் திருமணமாகி 45 நாட்களேயான புதுப்பெண் கொ லை செ ய்யப்பட்ட ச ம்பவம் குறித்து பொலிசார் தீவிர வி சாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தின் பெரியார் காலனியை சேர்ந்தவர் செல்வபாண்டியன், இவருக்கும் சத்யா நகரை சேர்ந்த மோனிகா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

மாப்பிள்ளை வீட்டில் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த நிலையில் கடந்த சனியன்று மோனிகா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் புகுந்த ம ர்ம ந பர்கள், மோனிகாவை தா க் கி வி ட் டு க ழுத்தை அ றுத்துக் கொ ன்ற துடன் தாலி மற்றும் ஒரு பவுன் தங்கச்சங்கிலியை தி ருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்த தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த பொலிசார் அதிகாரிகள் ச டலத்தை மீட்டுவிட்டு விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 5 வாலிபர்களை பிடித்து விசாரித்ததில் கொ லை செய்தவர்களின் விபரம் தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு சிவகாசி கிழக்கு இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார் மற்றும் பொலிசார் திருத்தங்கல் – ஆலமரத்துப்பட்டி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன் (20), டைசன் என்கின்ற சேகர் (19) ஆகியோர் சிக்கினர். இவர்கள் இருவரும் புதுப்பெண் மோனிகாவை கொ லை செ ய்துவி ட்டு நகையுடன் தப்பியவர்கள் என தெரிய வந்தது.

இவர்களை கை து செய்த பொலிசார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். வி சாரணையில், பட்டாசு ஆலையில் வேலை செய்து வந்த தங்களுக்கு செலவுக்கு போதிய பணம் இல்லாததால் நகைக்காக வீடு புகுந்து புதுப்பெண் மோனிகாவை க ழுத் தை அ றுத்து கொ ன்றதாக வாக்குமூலம் அளித்தனர்.

இந்த கொ லை தொடர்பாக கோடீஸ்வரனின் தாய் பரமேஸ்வரிக்கும் (40) தெரியும் என்று வி சாரணையின் போது, கைதான 2 பேரும் பொலிசாரிடம் கூறியதாக தெரிகிறது.

இதை தொடர்ந்து போலீசார் பரமேஸ்வரியையும் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டிலிருந்து அரிவாள் மற்றும் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

 

யாழ் இளைஞனைக் காதலித்து மோட்டார் சைக்கிளை வாங்கியதன் பின் காதலைத் துண்டித்த பெண்!!

யாழ்ப்பாணம்..

யாழ். நகரில் யுவதியொருவரிடமிருந்து இளைஞர் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர்கள் அவரை வழிமறித்தபோது, குறித்த யுவதிக்கு அந்த மோட்டார் சைக்கிளை தானே வாங்கிக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். நேற்று மதியம் இந்த சம்பவம் நடந்தது.

நகரிலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றின் முன்பாக இந்த சம்பவம் நடந்தது. யுவதி சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை கொள்வனவு செய்து விட்டு, வெளியில் வந்த மோட்டார் சைக்கிளில் ஏற முற்பட்டபோது, இளைஞர் ஒருவர் திறப்பை பறித்து மோட்டார் சைக்கிளை இயக்கியதுடன், யுவதியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்.

இதன்போது யுவதி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அவர் யுவதியின் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து செல்ல முற்பட்டபோது, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் ஓடிவந்து அந்த இளைஞனை வழிமறித்த போது, அந்த மோட்டார் சைக்கிளை யுவதிக்கு தானே கொள்வனவு செய்து கொடுத்ததாக குறிப்பிட்டு அதற்கான பற்றுச்சீட்டுக்களை காண்பித்துள்ளார்.

யுவதியுடனான காதல் உறவை பேணிய போது மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொடுத்ததாகவும் சில மாதத்தில் தன்னுடனான உறவை அவர் துண்டித்து விட்டதாகவும் மோட்டார் சைக்கிளை ஒப்படைக்கும்படி தகவல் அனுப்பியும் யுவதி அதை திருப்பித் தராததால் பறித்ததாக தெரிவித்தார்.

இந்த சர்ச்சையை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக் கொள்ளும்படி அங்கிருந்தவர்கள் இளைஞனுக்கு ஆலோசனை தெரிவித்தனர். எனினும் சர்ச்சையை தொடர விரும்பாத யுவதி முச்சக்கர வண்டியொன்றை மறித்து அதில் ஏறி சென்று விட்டார். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயம்!!

வாகன விபத்தில்..

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில், இன்று(13.08.2020) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்விபத்தில் காயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதவாச்சி பகுதியிலிருந்து வவுனியா நோக்கி வருகைதந்த முச்சக்கரவண்டி ஈரப்பெரியகுளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கரையில் இருந்த மின்சார தூணுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக ஈரப்பெரியகுளம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

வவுனியாவில் சலூன் உடைக்கப்பட்டு பணம் திருட்டு!!

சலூன்..

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் சலூன் ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக இன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள சலூன் ஒன்று பூட்டப்பட்டிருந்த நிலையில் இரவு அதன் கதவை உடைத்து உள்ள சென்ற நபர்கள் அங்கு உள்ள பண வைப்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

காலை அதன் உரிமையாளர் சென்ற போது சலூன் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வவுனியா பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சீசீரிவி கமரா வீடியோவின் உதவியுடன் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலய மஹா கும்பாபிஷேகம் தொடர்பில் அரச அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!!

கோவில்குளம் சிவன் ஆலய மஹா கும்பாபிஷேகம்..

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இம்மாதம் 24ஆம் திகதியிலிருந்து 28ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள மஹா கும்பாபிஷேக நிகழ்வு ஏற்பாட்டுக்கான கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் மாவட்ட அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (12.08.2020) மாலை இடம்பெற்றுள்ளது. சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெறவுள்ள மஹா கும்பாபிஷேக நிகழ்வுகளின் ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதுடன்,

அதற்கான ஆயத்த முன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பொறுப்புக்களும் உரிய தரப்புக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன்போது பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டுள்ளது.

மின்சாரம் வழங்கும் முறைகள் சுகாதார நடைமுறைகள், ஊடகம் ஒளிபரப்பு என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. வவுனியா சிவன் ஆலயத்தில் 12 வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறவுள்ள மஹா கும்பாபிஷேகம் நிகழ்வுகள் இவ்வருடம் 3ஆவது தடவையாக இடம்பெறவுள்ளது.

இக் கலந்துரையாடலின் போது மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர், வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சுகாதார உத்தியோகத்தர்கள், மாவட்ட கலாச்சார அலுவலகர், உதவி பிரதேச செயலாளர், மின்சார சபை அதிகாரி, போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி, ஆலய நிர்வாக தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வியமைச்சு மேற்கொண்டுள்ள திருத்தம்!!

கல்வியமைச்சு மேற்கொண்டுள்ள திருத்தம்..

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்ட ஆலோசனை கோவையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

200 இற்கும் அதிகமான மாணவர்களை கொண்ட பாடசாலைகளில், கல்வி நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு தரத்திற்கும் வெவ்வேறு தினங்கள் ஒதுக்கப்பட்டன.

எனினும், கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, அந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் N.H.M. சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், சுகாதார வழிமுறைகளுக்கு ஏற்ப கல்வி நடவடிக்கைகளை தொடர முடியுமாயின் வழமை போன்று மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதில் எவ்வித தடையும் இல்லை என கல்வி அமைச்சு, அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு : கையடக்க தொலைபேசிகள் இரத்தாகும் அபாயம்!!

விசேட அறிவிப்பு..

தொலைத்தொடர்பு உபகரணங்களை வாங்கும் போது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் கொள்வனவு செய்யுமாறு, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத தொலைத்தொடர்பு உபகரணங்களை ( சிம் அட்டையில் இயங்கும் உபகரணங்கள்) தொலைபேசி இணைப்புகளுக்கு தொடர்புபடுவதற்கான நடவடிக்கை விரைவில் இடைநீக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள சிம் அட்டையுடன் இணைப்பிலுள்ள உபகரணங்களுக்கு இந்த தடை ஏற்படாதென தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையினுள் தொலைத்தொடர்பு உபகரணங்களை வாங்கும் போது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் வர்த்தக அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

தொலைத்தொடர்பு சட்டத்திற்கமைய இது சட்டத்தை மீறும் செயல் எனவும் இது தண்டனை வழங்கும் குற்றமாகும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

 

திருமணம் முடிந்த சில மாதத்தில் பிச்சையெடுக்க தொடங்கிய நபர் : அவரிடம் குவிந்த பணத்தை வைத்து செய்த ஆச்சரிய செயல்!!

பூல்பாண்டியன்..

தமிழகத்தில் பிச்சை எடுத்த பணத்தில், 8வது முறையாக ரூ.10,000 கொரோனா நிவாரண நிதி வழங்கிய முதியவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

இதுவரை அவர் 80 ஆயிரம் ரூபாய், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன் (65). இவர், திருமணம் முடிந்த சில மாதங்களில், குடும்பத்தை பிரிந்து மும்பை சென்றார்.

அங்கு வேலை கிடைக்காததால், பிச்சை எடுக்க துவங்கினார். ஊருக்கு திரும்பியவரை குடும்பத்தினர் சேர்க்கவில்லை. பிச்சை எடுத்து வந்தவருக்கும் அதிகம் பணம் கிடைத்தது.

அதில் செலவு போக மீதி பணத்தை, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல மாநிலங்களிலுள்ள பள்ளிகளுக்கு, மேஜை, நாற்காலிகள் வாங்க வழங்கினார். மும்பையில், 20 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கி ஆச்சரியப்படுத்தினார்.

இவர், மே முதல் பிச்சை எடுத்து சேமித்த பணம் தலா, 10 ஆயிரம் ரூபாய் வீதம் 7 முறை, மதுரை கலெக்டரிடம், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று எட்டாவது முறையாக, 10 ஆயிரம் ரூபாயை, கலெக்டர் வினய்யிடம் வழங்கியுள்ளார்.