இலங்கைக்குள் இன்று இரவு 9 வரையில் 9பேர் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 2880ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியா, சவூதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களே தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைத்து கொரோனா தொற்றாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் வைத்தியசாலைகளில் 247பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதேவேளை இன்று மாத்திரம் 29பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடுதிரும்பினர். இதனையடுத்து தொற்றில் இருந்து குணமானோரின் மொத்த எண்ணிக்கை 2622ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் வீட்டுக்குள் ச டலமாக கிடந்த நிலையில் பி ரேத ப ரிசோதனை அறிக்கையில் அ திர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அடுத்த லோட்தா கிராமத்தில் கேவல்ராம் என்பவரின் குடும்பம் வசித்து வந்தது. பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானுக்கு வந்தவர்கள் தங்களிடம் இருந்த பணத்தை கொண்டு பண்ணை ஒன்றை விலைக்கு வாங்கி அதில் விவசாயம் செய்து வந்தனர்.
பண்ணையின் ஒரு பக்கத்தில் ஒரு சிறிய வீடு ஒன்றை அமைத்திருந்தனர். சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வெளியில் படுத்திருந்த கேவல் ராம் காலையில் கண்விழித்து பார்த்த போது தோட்டத்திற்குள் சில மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
இதை கண்ட அவர் அதனை விரட்டி விட்டு வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என சத்தமிட்டவாறே வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார்.
அப்போது வீட்டுக்குள் படுத்திருந்த கேவல்ராமின் தந்தை புதாராம், தாய் அந்தரா தேவி 4 சகோதர, சகோதரிகள், 5 குழந்தைகள் என 11 பேரும் பேச்சு மூச்சில்லாமல் ச டலமாக கிடப்பதை கண்டு அ திர்ச்சி அடைந்தார்.
உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ச டலமாக கிடந்த இடத்தின் அருகே சில காலி மருந்து பாட்டில்கள் மற்றும் ஊசி போடும் சிரிஞ்சுகள் கிடந்தன. மேலும் உ யிரிழந்த அனைவரது கைகளிலும் ஏதோ ஊசி போட்டது போல தழும்பு காணப்பட்டது.
இதையடுத்து அவர்களின் ச டலங்கள் பி ரேத ப ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 11 பேரின் உடலிலும் ஒரு நச்சு பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உ யிரிழந்தவர்களில் 5 பேர் சிறுவர், சிறுமிகள் ஆவார்கள். இதற்கிடையில் கேவல்ராம், தன்னை விட்டு பிரிந்து வாழும் தனது மனைவி ஒரு செவிலியர் என்றும் அவரது தூண்டுதலின் பேரில் தனது குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கும் வி ஷ ஊ சி போடப்பட்டிருக்கலாம் என்றும் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து கேவல்ராமின் மனைவி மற்றும் சிலரை பொலிசார் கைது செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையில் சம்பவம் நடந்த வீட்டில் கிடைத்த குறிப்பில், உறவினர்களால் தங்கள் உ யிருக்கு ஆ பத்து இருப்பதாக எழுதப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தீவிர வி சாரணை நடந்து வரும் நிலையில் மேலும் பல எதிர்பார்க்காத தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் செய்த சேவையை கெளரவிக்கும் வகையில் தமிழகத்தை சேர்ந்த தமிழ் தம்பதிக்கு உயர் விருது வழங்கி கௌரவித்துள்ளது அந் நாட்டு அரசு. இந்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது.
தமிழகத்தில் செட்டிநாட்டை பூர்வீகமாக கொண்டு, மதுரையில் பிறந்தவர் வள்ளிக்கண்ணன் மருதப்பன். இவர் கனடாவின் பதிவு செய்த லாப நோக்கமற்ற கனடா தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்து வருகிறார்.
வள்ளிக்கண்ணன் கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் தமிழ் நாட்டு நடனக் கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள் மற்றும் மேடை இசைக் கலைஞர்களுக்காக யூடியூப் நிகழ்ச்சி செய்து பண உதவி செய்துள்ளார்.
அதே போல வள்ளிக்கண்ணன் மனைவி பார்வதி அங்கு ஊரடங்கு காலத்தில் தவித்த மாணவர்களுக்கு சுமார் 10 வாரங்கள், 40க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு விநியோகம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வள்ளிக்கண்ணன் மற்றும் பார்வதியின் இந்த சமுதாயப் பணி, சேவை மனப்பான்மையை கெளரவிக்கும் வகையில் STA EVENTS மற்றும் SUPREME GROUP OF COMPANYS KUWAIT இணைந்து கனடா நாட்டின் Real HEROES of COVID 19 என்னும் விருது வழங்கி பாராட்டி கெளரவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர் என சந்தேகிக்கப்படும் நபர் நேற்று உ யிரிழந்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உ யிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறையை சேர்ந்த கணபதிப்பிள்ளை சிவகுரு என்பவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். இவர் ஈரல் நோய்த் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் விடத்தல் பளை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பாக உறுதி செய்யப்பட்டது.
இதன் காரணமாக அவர் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற வைத்தியசாலையின் விடுதியில் சிகிச்சை பெற்றவர்கள், மருத்துவ உத்தியோகத்தர்கள் 70 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அவ்வாறு அறிவுறுத்தப்பட்டிருந்தவர்களில் கணபதிப்பிள்ளை சிவகுருவும் உள்ளார்.
கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய மறுநாளே சிவகுரு யாழ். போதனா வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சுய தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தார்.
பின்னர் குறித்த நபருக்கு கொரோனாத் தொற்ற இல்லை என்று மருத்துவ அறிக்கை வெளியான நிலையில் அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில் சிவகுருவும் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று உ யிரிழந்துள்ளார்.
அவருக்கு கொரோனாத் தொற்றுத் தொடர்பிலான பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவருக்கு தொற்று கண்டறியப்படவில்லை என சுகாதார உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மொரீஷியஸ் தீவிற்கு அருகில் ஆயிரம் தொன் எரிபொருளுடன் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியது.
இதனால் இலங்கை கடல் எல்லை தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை கடல் எல்லைகளிலும் இவ்வாறான விபத்துக்கள் நிகழ்வது அதிகம் என அதன் அதிகாரி பேராசிரியர் டர்னி பிரதிப் குமார தெரிவித்துள்ளார்.
இலங்கை கடல் எல்லைக்கு அருகில் இவ்வாறான விபத்துகள் எற்பட்டால் அது நாட்டின் கடல் எல்லைக்கு அ ச்சுறுத்தலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கப்பல் விபத்துக்குள்ளானதில் 1,000 தொன் அளவிலான எண்ணெய் கடலில் கசிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய இலங்கை இதனை விடவும் தயாராக இருப்பது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செட்டிகுளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இ.போ.சாலைக்கு சொந்தமான பேருந்தொன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த அனர்த்தம் இன்று (11.08.2020) காலை பூவரசன்குளம் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே பேருந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் நேரவில்லை என்ற போதும்,
வீதியோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த இரண்டு மாடுகள் உ யிரிழந்துள்ளன. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள விமான விபத்தில் தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவத்தில், அவர்களின் இறுதிச்சடங்கில் தந்தை கலந்து கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில், நடந்த விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்தில் ரெம்யா என்பவரும், அவரின் மகள் Shivathmika-வும் பரிதாபமாக உயிரிழந்தனர். இருப்பினும் ரெய்யாவின் மகன் Yadhudev அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்.
குறித்த விபத்து செய்தியை அறிந்தவுடனே குழந்தைகள் மற்றும் மனைவியைப் பற்றி எந்த ஒரு உறுதியான தகவலும் கிடைக்காததால், துபாயில் பணி புரிந்து வந்த கணவர் முரளிதரன் உடனடியாக மறுநாளே விமானத்தில் காலிகட்டுக்கு பறந்தார்.
இருப்பினும் இவரால் மனைவி மற்றும் மகளின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது. ஏனெனில் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர், அப்படி இருக்க 16-ஆம் திகதி நடைபெறும் இறுதிச்சடங்கில் இவர் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரெம்யாவின் உறவினர் ஒருவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு, விபத்து நடந்த மறுநாளே முரளிதரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பற்றிய தகவல்களைப் பெற முடியாததால் காலிகட்டுக்கு பறந்தார்.
மனைவி மற்றும் மகள் உயிரிழந்த நிலையில், தனது மகனைப் பற்றி மிகவும் கவலைப்பட்டாலும், முரளிதரனால் அவரை மருத்துவமனையில் பார்க்க முடியாது .
இதில், துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், விமான விபத்து நடந்த மறுநாளிலேயே முரளிதரன் தனது குடும்பத்தினருக்காக பறந்து வந்தாலும், அவர் தனிமைப்படுத்தப்படுவதன் காரணமாக மனைவி மற்றும் மகளின் இறுதி சடங்குகளில் இருக்க முடியாது என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று (11.08.2010) மதியம் 12 மணியளவில் முதியவர் ஒருவர் மீது இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து ஏறியதில் முதியவர் மரணமடைந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து குருநாகல் நோக்கி புறப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து பேரூந்துக்கு முன்பாக நின்ற முதியவரை கவனிக்காமல் புறப்பட்டுள்ளது.
இதன் போது பேரூந்து முதியவரை மோதித்தள்ளி அவர் மீது ஏறியுள்ளது. இதனை அவதானித்த பொதுமக்கள் சத்தமிட்டதினையடுத்து பேரூந்தின் சாரதி பேரூந்தினை நிறுத்தியுள்ளார்.
இச் சம்பவத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிசிக்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் பேரூந்தின் சாரதியினையும் கைது செய்துள்ளனர்.
கனடாவில் பெ ண்ணொருவரை க டத்திய கு ற்றச்சா ட்டின் கீbழ் த மிழ் இ ளைஞர் ஒ ருவரை கா வல்துறை யினர் தே டி வ ருகின்றனர். ச ந்தேக த்தின் பே ரில் 34 வ யதான சந்தோஷ்குமார் செல்வராஜா எ ன்பவரை ரொரன்றோ கா வல்துறை யினர் தே டிவருகி ன்றனர்.
Scarboroughவில் வை த்து பெ ண் ஒ ருவரை வா கனம் ஒ ன்றில் ப லவந்த மாக ஏ ற்றி க டத்திச் செ ன்றதாக அ வர் மீ து கு ற்றம் சா ட்டப்பட்டு ள்ளது. இ ந்த ச ம்பவம் Empringham Dr & Sewells Rd ச ந்திப்புக்கு அ ருகாமையில் அ ந்நா ட்டு நே ரப்படி நே ற்று மா லை 5:40 ம ணியளவில் நி கழ்ந்ததாக பொ லிஸார் தெ ரிவித்துள் ளனர்.
இ ந்தக் க டத்தலுக்கு CKJE 528 எ ன்ற இ லக்க த்தகடு பொ றிக்கப்பட்ட க றுப்பு நி ற AcuraTSX வா கனம் ப யன்படுத்தப்பட்டு ள்ளது. க டத்தல் ச ம்பவம் தொ டர்பில் எ வரும் அ றிந்தால் உ டனடியாக கா வல்துறை யினரை 911 எ ன்ற இ லக்கத்தை தொ டர்பு கொ ண்டு அ றியத் த ருமாறு பொ துமக்க ளிடம் கோ ரப்பட்டு ள்ளது.
மொரீஷியசிஸ் (Mauritius) கடலில் விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து 1,000 தொன் அளவிலான எண்ணெய் கடலில் கசிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் நிறுவனமொன்றுக்கு சொந்தமான வகாஷியோ ( Wakashio) என்ற கப்பல் 3,800 தொன் அளவிலான எண்ணெய்யுடன் கடந்த மாதம் 25ம் திகதி மொரீஷியஸ் கடல் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்த போது பவளப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து கப்பலில் பயணித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டபோதும் சேதமடைந்த கப்பலில் இருந்து பாரிய அளவில் எண்ணெய் கசிய ஆரம்பித்துள்ளது.
1,000 தொன் அளவிலான எண்ணெய் கடலில் கசிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மீதமுள்ள 3 ஆயிரம் டன் எண்ணெயை கப்பலில் இருந்து வெளியே எடுக்கும் பணிகள் நடந்தன. எனினும் இந்த முயற்சி தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் கப்பலிலிருந்து இதுவரை 1,000 தொன் எண்ணெய் கடலில் கசிந்து விட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இச்சம்பவத்தினையடுத்து அந் நாட்டுப் பிரதம் பிரவிந்த் ஜுக்நாத் (Pravind Jugnauth) நாடு தழுவிய சுற்றுச்சூழல் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். சர்வதேச உதவியையும் அவர் நாடியுள்ளார்.
இதனை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டு கப்பற்படை கப்பல், இராணுவ விமானம் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அந்த பகுதிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த அரசாங்கத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான 32 உறுப்பினர்கள் அவர்களுக்கான ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 5 வருட காலங்கள் பூர்த்தி செய்யாதவர்களே இவ்வாறு ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் ஓய்வூதியம் பெற தகுதி பெற உறுப்பினர் ஒருவர் தொடர்ந்து 5 வருடங்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க வேண்டிய கட்டாயமாகும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் வாக்குகள் மற்றும் தேசிய பட்டியலில் புதிய உறுப்பினர்களாக பலர் தெரிவாகிய நிலையில், அவர்கள் 4 வருடங்களும் 8 மாதங்களுமே நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக செயற்பட்டுள்ளனர்.
எனவே கடந்த நாடாளுமன்றத்தை முதல் முறையாக பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்கள் 5 வருடங்கள் அவர்களால் நாடாளுமன்றத்தை முழுமைப்படுத்த முடியாமல் போயுள்ளது.
5 வருடங்கள் முழுமையாக நாடாளுமன்ற உறுப்பிராக செயற்பட்டவர்களுக்கு உறுப்பினர் பதவியின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதி ஓய்வூதியமாக கிடைக்கும்.
அவ்வாறு ஓய்வூதியம் இழந்தவர்களில் அதிகமானவர்கள் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களாகும். அவர்களின் எண்ணிக்கை 23ஆகும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் இருவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 4 பேரும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் ஒருவரும் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.
அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய மலிக் சமரவிக்ரம, ஹிருணிக்கா பிரேமசந்திர, சதுர சேனாநாயக்க, ஆனந்த அழுத்கமகே, பந்துலால் பண்டாரிகொட, சந்திம கமகே, கருணாரத்ன பரணவித்தான,
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த பேராசிரியர் ஜயம்பதி விக்ரமரத்னவும் ஓய்வூதியத்தை இழந்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிணயின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன, மனோஜ் சிறிசேன மற்றும் தேசிய பட்டியல் உறுப்பினரான மிலத் ஜயதிலக்க ஆகியோரும் இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகாமையினால் அவர்களும் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியின் நலிந்த ஜயதிஸ்ஸவும் ஒய்வூதியத்தை இழந்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் சிவபிரகாஷம் சிவமோகன், கவிந்திரன் கோடீஸ்வரன், ஈஸ்வரன் சரவணபவன் ஆகியோரும் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.
சமூகத்திற்குள் கொரோனா கொத்தணி ஏற்படும் ஆபத்து இன்னமும் நீங்கவில்லை என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொது மக்கள் உரிய சுகாதார ஆலோசனைக்கு அமைய தினமும் செயற்பட வேண்டும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார ஆலோசனைக்கு அமைய செயற்படுவதன் மூலம் கொரோனா தொற்று சமூகத்திற்குள் பரவுவதனை தவிர்க்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மாத்திரம் 27 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய இலங்கையில் இதுரையில் 2871 பேர் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கடற்கரைப்பகுதியில் டொல்பின் மீன் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. கடற்கரையோர பகுதியில் மிதந்து இறந்த நிலையில் மிதந்து வந்த குறித்த மீன் இனம் இன்று கரையை அடைந்துள்ளதை அவதானிக்க முடிந்தது.
அதனை தொடர்ந்து உரிய அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வந்து குறித்த மீனை பார்வையிட்டதுடன் ஆய்வுகளையும் மேற்கொண்டனர்.
மேலும் அண்மைக்காலமாக அம்பாறை மாவட்ட கரையோரங்களில் அரிதான மீன் இனங்கள் உயிருடனும் இறந்த நிலையிலும் கடற்கரையில் வந்து அடைகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
வவுனியா நகரிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள குருமன்காடு பகுதியில் குளிரூட்டப்பட்ட அதி நவீன வசதிகளை உள்ளடக்கிய வீடு வாடகைக்கு விடப்படவுள்ளது.
குளிரூட்டப்பட்ட மூன்று படுக்கையறைகளுடன் ஒர் வரவேற்பு மண்டம் , சமையல் அறை மற்றும் விசேடமாக இருக்கைகள், படுக்கை கட்டில் மெத்தை தளபாடங்களும் உள்ளடங்களாக வாடகைக்கு விடப்படவுள்ளது.
இன்று முதல் வழமை போன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றும் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், உட்பட பலர் மீண்டும் ஒரே நேரத்தில் சமூகத்திற்கு செல்வதனால் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார முறையை தொடர்ந்து அதே முறையில் பின்பற்றுமாறு அவர் அறிவித்துள்ளார். இலங்கையில் இதுவரையில் 2867 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 2579 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 252 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.