தேர்தலில் போட்டியிட்ட 13 கலைத்துறை பிரபலங்கள்!!

அரசியல் கட்சிகளின் சார்பில் கலைத்துறை சேர்ந்த 13 பேர் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்டதுடன் அவர்களில் நான்கு பேர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் சார்பில் அனுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்ட நடிகர் உத்திக பிரேமரத்ன அதிகமான விருப்பு வாக்குகளை பெற்றார்.

அவர் அந்த மாவட்டத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 350 வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

அடுத்ததாக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட பிரபல நடிகர் ரஞ்சன் ராமநாயக்க ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 992 வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

பொதுஜன பெரமுனவின் சார்பில் காலி மாவட்டத்தில் போட்டியிட்ட பிரபல திரைப்பட நடிகை கீதா குமாரசிங்க 63 ஆயிரத்து 358 வாக்குகளை பெற்ற வெற்றி பெற்றதுடன்,

அதே கட்சியில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடட பிரியல் நிஷாந்த டி சில்வா ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 904 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

இவர்களை தவிர பொதுஜன பெரமுனவின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட பாடகர் மதுமாதவ அரவிந்த 28 ஆயிரம் வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட நடிகை ஓசாதி ஹேமாமத்தும 10 ஆயிரத்து 957 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கொழும்பில் போட்டியிட்ட சட்டத்தரணியும் நடிகருமான சுஜீவ சேனசிங்க 30 ஆயிரத்து 572 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான யாளுவோ (நண்பர்கள்) என்ற சிங்கள திரைப்படத்தில் நடித்துள்ளார்.

குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட பாடகர் ரூகாந்த குணதிலக்க 26ஆயிரத்து 88 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட நடிகர் ரவிந்திர யசஸ் குமாரநாயக்க 9 ஆயிரத்து 836 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கலைஞர் விமல் கெட்டபே ஆராச்சி 12 ஆயிரத்து 913 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

இதனை தவிர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக நடிகர் ஜயந்த கொட்டகொட நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் நடிகை டயனா கமகே, தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இசை கலைஞரான நநீதி குருகே, நடிகை தீபானி சில்வா, நடிகர் ஜகத் மனுவன ஆகியோர் இடம்பெற்றனர்.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு!!

தங்கம் மற்றும் வெள்ளி..

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2000 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் தங்க விற்பனையாளர்கள் அதிகளவான லாபத்தை ஈட்ட முயற்சித்தமையினால் இவ்வாறான விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தல் மற்றும் உலக பொருளாதாரத்திற்கு சேரும் பணத்தை தங்கமாக வைத்துக் கொள்வதற்கு முதலீட்டாளர்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அமெரிக்க மற்றும் சீனாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதல் நிலையை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் விலை பாரியளவு அதிகரிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் சந்தையில் வெள்ளி விலையும் பாரியளவு அதிகரித்துள்ளது. சமகாலத்தில் காணப்படும் நெருக்கடி நிலைமை மேலும் நீடித்தால் தங்கம் மற்றும் விலையில் மேலும் பாரிய அதிகரிப்பு ஏற்படும் என முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் திடீரென அதிகரித்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை!!

கொரோனா..

இலங்கையில் இன்று மாலை மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் முழுமையான எண்ணிக்கை 2867ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள கைதிகள் என தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 14 பேர் இன்றைய தினம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மன்னார் வீதி செப்பனிடும் பணிகள் துரித கதியில் முன்னெடுப்பு!!

வவுனியா மன்னார் வீதி..

10 வருடங்களுக்கு மேலாக குன்றும் குழியுமாக காணப்பட்ட வவுனியா – மன்னார் பிரதான வீதி செப்பனிடும் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியுடன் இணைக்கப்பட்ட வீதிகள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இவ் புனரமைக்கப்படுகின்றன.

குறித்த வீதிகள் செப்பனிடும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிந்த போதிலும் கோவிட்-19 காரணமாக முற்றாக தடைப்பட்டிருந்தது.

தற்போது இலங்கையில் கோவிட் – 19 இன் தாக்கம் குறைவடைந்துள்ள நிலையில் துரித கதியில் வீதி செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது வவுனியா – மன்னார் பிரதான வீதியில் காணப்படும் பாலங்களை அமைக்கப்பட்டு வருவதுடன் கற்பகபுரம் – பம்மைமடு போன்ற பகுதி வரை காபற் ஈடுவதற்குரிய முதற்கட்ட நடவடிக்கையும் இடம்பெற்று வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கண்துடைப்புக்காக வீதிகளின் குழிகளை அடைக்கும் பணிகளே வருடாவருடம் இடம் பெறுகின்ற போதும் குழிகளும் முழுமையாக அடைக்கப்படவில்லை என தெரிவித்துள்ள மக்கள்,

பிரமணாலங்குளம் பகுதியில் வவுனியா மன்னார் பிரதான வீதியில் வீதியின் நடுவே ‘மன்னார் வீதி விவசாய நிலமாக மாற்றப்பட்டுள்ளது’ என்ற வாசகத்தினை தாளில் எழுதி அதனை வாழை மரத்தில் கட்டி வாழை மரத்தினை வீதியில் நடுவே காணப்பட்ட குழியினுள் நாட்டிய சம்பவங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கை பகுதியில் பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 20 பேர் கைது!!

20 பேர் கைது..

தென்னிலங்கை – ஹொரன, மில்லேனிய பகுதியில் 5 பெண்கள் உட்பட 20 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து ஒன்றின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விருந்தின் போது ஹெ ரோ யி ன் உட்பட்டபோ தை ப் பொ ருட்கள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இவ்வாறான பல விருந்துகள் பொலிஸாரினால் பல இடங்களில் முற்றுகையிடப்பட்டன.

இதேவேளை அண்மையிலும் மஹரகம பகுதியில் பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட ச ட்டவி ரோத உந்துருளி பந்தயமொன்று பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா உட்பட நாடு முழுவதும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்!!

மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்..

பொதுத் தேர்தல் இடம்பெற்ற வாரத்தினுள் நான்கு நாட்கள் (ஆகஸ்ட் மாதம் 4, 5, 6 மற்றும் 7ஆம் திகதி) இலங்கையில் அனைத்து அரச , தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் இன்றையதினம் (10.08.2020) நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

200 மாணவர்களுக்குக் குறைவாகக் கொண்ட பாடசாலைகளின் நடவடிக்கைகள் வழமை போன்று ஐந்து நாட்களும் நடைபெறும். 200 மாணவர்களுக்கு கூடுதலாக உள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு கல்வி நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படும்.தரம் ஐந்து மாணவர்கள் ஐந்து தினங்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

தரம் ஒன்று முதல் தரம் நான்கு வரையான மாணவர்கள் வாரத்தில் சில நாட்கள் மாத்திரம் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டும். திங்கட்கிழமை தரம் ஒன்று மாணவர்களும், செவ்வாய்க்கிழமை தரம் இரண்டு மாணவர்களும்,  புதன்கிழமை தரம் மூன்று மாணவர்களும் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டும்.

தரம் நான்கு மாணவர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும். இதேவேளை, தரம் ஆறு மாணவர்கள் திங்கட்கிழமையும், தரம் ஏழு மாணவர்கள் செவ்வாய்க்கிழமையும்,

தரம் எட்டு மாணவர்கள் புதன்கிழமையும் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். தரம் ஒன்பது மாணவர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டும்.

தரம் பத்து முதல் தரம் 13 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் ஐந்து நாட்களும் பாடசாலைகளுக்குச் செல்ல முடியும். ஒரு மீற்றர் இடைவெளியைப் பேண முடியுமாயின் சகல மாணவர்களும் ஐந்து நாட்களும் பாடசாலைகளுக்குச் செல்லலாம் என கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை வான் விபத்தில் பெண்ணொருவர் காயம்!!

வான் விபத்தில்..

திருகோணமலை-ஹொரவபொத்தானை பிரதான வீதியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். இவ்விபத்து நேற்று (09.08.2020) திருகோணமலை – மிரிஸ்வெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த வான் வீதியை விட்டு விலகி வீதியிலிருந்த கல்வெட்டுடன் மோதி மறுபக்கம் குடைசாய்ந்துள்ளது. குறித்த வானில் பயணித்த ஆறு பேரில் பெண்ணொருவருக்கு மாத்திரம் காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த பெண் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனது விருப்பத்தின் படி வீட்டுக்குச் சென்றுள்ளதாகவும், வவுனியா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு கையொப்பமிட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் கடலில் கரையொதுங்கிய 700 கிலோ எடையுள்ள மீன்!!

700 கிலோ எடையுள்ள மீன்..

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, ஆதாம் பாலத்திற்கு உட்பட்ட தேசிய வனப்பூங்கா பகுதியில் பாரிய மீனொன்று ச டலமாக கரையொதுங்கியுள்ளதை தொடர்ந்து வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

தலைமன்னார் வன ஜீவராசிகள் திணைக்கள வட்டாரக் காரியாலய பகுதிக்குட்பட்ட நடுக்குடா கடல் வளப்பூங்கா கரையோரப்பகுதியில் ‘கடற்பன்றி’ என பெயருடைய பாரிய மீன் கரையொதுங்கியிருந்தமையை கடற்கரையோர ரோந்துப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் அவதானித்து வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

அதனை தொடர்ந்து குறித்த திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வந்து குறித்த மீனை பார்வையிட்டதுடன், ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

அதனடிப்படையில் குறித்த மீனின் ஒரு பகுதி உணவுக்காக வேட்டையாடப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த மீனின் உடல் கூற்றுப்பரிசோதனை வன ஜீவராசிகள் திணைக்கள வைத்திய அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கடற்பன்றி இனமானது தற்போது அருகிவரும் பாலூட்டி மீன் இனத்தைச் சேர்ந்தது என்பதுடன், கரையொதுங்கிய கடற்பன்றி 3.3 மீற்றர் நீளமானதும் சுமார் 700 கிலோ கிராம் எடை கொண்டதாகும்.

குறித்த கடற்பன்றியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர் குறித்த அறிக்கையானது மன்னார் நீதவான் நீதிமன்றிற்கு சமர்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

பேஸ்புக்கில் கோடிக்கணக்கான ரூபாவை செலவிட்ட இலங்கை அரசியல்வாதிகள்!!

பேஸ்புக்கில்..

நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்காக சமூக வலைத்தளங்கள் பெருமளவு பணத்தை செலவு செய்து விளம்பரம் செய்த அரசியல்வாதிகள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை அரசியல்வாதிகளால் பேஸ்புக் ஊடாக மேற்கொண்ட தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக 111 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை செலவிட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய 2020 மே மாதம் முதல் கடந்த 6ஆம் திகதி பேஸ்புக் ஊடாக, தற்போது எதிரணி உறுப்பினர்களாக மாறியுள்ள அரசியல்வாதிகளின் பெயரில் மாத்திரம் இந்த அளவு செலவிடப்பட்டுள்ளது.

அதற்கமைய பேஸ்புக் ஊடாக அதிக பணத்தை சஜித் பிரேமதாஸவே செலவிட்டுள்ளார். அவர் 124 விளம்பரங்கள் செய்துள்ளார். அதற்காக 40 இலட்சத்து 86 ஆயிரத்து 556 ரூபாவை செலவிட்டுள்ளார்.

அதற்கமைய அடுத்தப்படியாக சுனேத்ர சமரகோன் 36 இலட்சத்து 96 ஆயிரத்து 644 ரூபாவை செலவிட்டு 412 விளம்பரங்களை காட்சிப்படுத்தியுள்ளார்.

மூன்றாவதாக அதிக பணத்தை அங்கஜன் ராமநாதன் செலவிட்டுள்ளார். அவர் 30 இலட்சத்து 65 ஆயிரத்து 528 ரூபாவை செலவிட்டு 273 விளம்பரங்கள் செய்துள்ளார்.

அதேபோல் வெரோன் குணரத்ன, கனிஷ்க சேனாநாயக்க, ஹர்ஷ டி சில்வா, விஜேதாஸ ராஜபக்ஷ, திலங்க சுமத்திபால, எஸ்.எம்.மரிக்கார், மதுர விதானகே ஆகிய 10 உறுப்பினர்களே அதிக பணத்தை செலவிட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கின்னஸ் சாதனை படைத்த தமிழ் சிறுமி!!

சங்கவி ரதன்..

பதினொரு வயது நிரம்பிய செல்வி சங்கவி ரதன் இடுப்பில் வளையம் ஒன்றைச் சுற்றியவாறு றூபிக்கின் கனசதுரத்தின் தனித்தனி நிறங்களை ஒரு கையினால் ஒழுங்குபடுத்தி கின்னஸ் உலகசாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

இவர் ஆகஸ்ட் முதலாம் திகதி கனடா மிஸிஸாகா நகரில் கின்னஸ் சாதனை நிறுவனப் பிரதிநிதிகள் முன்னிலையில் 55 நிமிடங்களில் 30 தடவைகள் 3×3 றூபிக்கின் கனசதுரத்தினை ஒழுங்குபடுத்தி, 25 தடவைகள் என்றிருந்த முன்னைய கின்னஸ் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.

யாழ், தீவகம் அனலைதீவைச் சேர்ந்த பெற்றோர்களான பாலசிங்கம் ரதன் – வரதராஜன் வசந்தி தம்பதிகளின் இளைய மகளான சங்கவி கொரோனா காலத்திலான முடக்கத்தில் வீட்டில் இருந்த காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தி இந்த உலக சாதனையைப் புரிந்துள்ளார்.

புத்தகம் ஒன்றை வாசித்தும் பல காணொளிகளைப் பார்த்தும் இதில் உள்ள நுட்பங்களைக் கற்றுத் தெறிந்து மூன்று மாதங்களாகப் பயிற்சி செய்து இவர் இதனைச் சாத்தியமாக்கியுள்ளார்.

இடுப்பில் வளையம் சுற்றுவதை தனது இளவயதில் கற்றிருந்ததும் சங்கவி இந்தச் சாதனையை நிறைவேற்ற உதவியாக இருந்தது.

புது விடயங்களைக் கற்பதில் ஆர்வமுள்ள சங்கவி இசைக்கருவி வாசித்தல், வாய்ப்பாட்டு, விளையாட்டுக்கள் என்பவற்றில் ஆர்வமாக ஈடுபட்டு வருபவர்.

பிறப்பின்போது ஏற்பட்ட காயம் ஒன்றினால் வலக்கரம் இயங்க முடியாத நிலையிலும் தனது இடக்கரத்தினால் இவர் இந்தச் சாதனையினை மேற்கொண்டு பலருக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்.

மண்ணில் புதைந்த தமிழ்க் குடும்பம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் ப லி!!

தமிழ்க் குடும்பம்..

இந்தியாவின், கேரளாவில் பெய்த கனமழை காரணமாக, நிலச்சரிவில் சி க்கி ஏராளமான தமிழர்கள் உ யிரிழந்திருக்கும் நிலையில், தற்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் ப லியாகியிருப்பது தெரியவந்துள்ளது.

கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக, தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. மழை ஓய்ந்த நிலையில், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

இந்த நிலையில், மீண்டும், மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எ ச்சரிக்கை விடுத்தது. அதன் படி, சில தினங்களுக்கு முன்பு, மாநிலம் முழுவதும் இ டி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்த கனமழை காரணமாக இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சி க் கி இதுவரை 55 தமிழர்கள் உ யிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், மூணாறு அருகே நிலச்சரிவில் சி க்கி ப லியானவர்கள் மற்றும் மா யமானவர்கள் அனைவரும் துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் என்றும், இதில் துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறை சேர்ந்தவர்கள், 60 ஆண்டுகளுக்கு முன், மூணாறு வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

தலைமுறை தலைமுறையாக இவர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளனர். அதில், அனந்தசிவன், அவரது சகோதரர்கள் கணேசன், மயில்சாமி ஆகியோரின் குடும்பத்தைச் சேர்ந்த, 21 பேர் மண்ணிற்குள் பு தைந்து ப ரிதாபமாக ப லியாகியுள்ளனர்.

மூணாறு ஊராட்சியில், அனந்தசிவன் வார்டு உறுப்பினராகவும், மயில்சாமியும், கணேசனும் வனத்துறையில் டிரைவராகவும் பணியாற்றி வந்துள்ளனர். அவர்களது குடும்பத்தில், மூணாறு காலனியில் வசிக்கும் சண்முகம், அவரது மனைவி ஆகியோர் மட்டுமே த ப்பியுள்ளனர்.

சண்முகம் மகன்கள் தினேஷ்குமார்(22) நிதிஷ்குமார்(18) ஆகியோர் பெரியப்பா அனந்தசிவனின் வீட்டிற்கு பிறந்த நாள் கொண்டாட வந்தபோது நிலச்சரிவில் சி க்கினர்.

இந்த நிலச்சரிவில் தென்காசி மாவட்டம், கலிங்கப்பட்டி பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பா திக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் ப லியாகியிருப்பது தெரியவந்துள்ளதால், இது ஏற்கனவே 55 பேர் இ றந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டவர்களில் இருந்தவர்களா? இல்லை இது புதிததாக இ றந்தவர்களா? என்பது குறித்து தகவல் இல்லை.

இலங்கையில் மேலதிக வகுப்புக்கு சென்ற 11 மாணவர்களுக்கு நேர்ந்த கதி : ஒருவர் உயிரிழப்பு!!

விபத்தில்..

பொலன்னறுவை – அரலகங்வில பகுதியில், போகாஸ் சந்திக்கு அருகே இடம்பெற்ற விபத்தில், மாணவர் ஒருவர் உ யிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெயத்தகண்டியிலிருந்து அரலகங்வில நோக்கி வேகமாக பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று மேலதிக வகுப்புக்காக வீதியில் பயணித்த மாணவர்கள் மீது மோ தியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 14 முதல் 16 வயது வரையிலான 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் 4 பேர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 07 பேர் அரலகங்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ப டுகா யமடைந்த 16 வயது மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உ யிரிழந்துள்ளார்.

ரத்மல்தென்ன பிரதேசத்தை சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

த ற்கொ லை செ ய்த த ந்தை : புகையிரதம் முன் பா ய்ந்து த ற்கொ லை செ ய்த மகள்கள்!!

பு கையிரதம் மு ன்..

இந்தியாவின், ஆந்திரா மாநிலத்தில் ம கள் அ னுபவிக்கும் க ஷ்டத்தை பா ர்க்க மு டியாமல், த ந்தை த ற் கொ லை செ ய்து கொ ண்ட நி லையில், ம கள்களும் இர யில் மு ன் பா ய் ந் து த ற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச்சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரை சே ர்ந்தவர் பாபு ரெட்டி. எ லக்ட்ரிகல் கா ண்ட்ராக்டரான இ வருக்கு ஸ்வேதா எ ன்ற 26 வ யதிலும் சா யி எ ன்ற 20 வ யதிலும் இ ரண்டு ம கள்கள் இ ருந்த னர்.

ஸ்வேதாவிற்கு தி ருமணம் ஆ கிவி ட்ட நி லையில் த னியார் இ ன்ஜினியரிங் க ல்லூரியில் ப டித்து வ ந்துள் ளார். இ ரண்டு ம கள்க ளையும் பாபுரெட்டி பா சத்துடன் வ ளர்த்து வ ந்துள்ளார்.

ஆ னால் தி ருமணத்திற்கு பி ன்னர் ஸ்வேதா வா ழ்க்கையில் பு யல் வீ ச ஆ ரம்பித் தது. அ வருடைய க ணவன் சுரேஷ் குமார் ரெட்டி ஸ்வேதாவை தி னமும் அ டி த் து து ன்பு றுத்தி கொ டு மை ப் ப டு த் தி வ ந்துள் ளார்.

ம கள் அ னுபவிக்கும் சி த் தி ர வ தை க ளை ம ன ரீ தியாக தா ங்க இ யலாத பாபு ரெட்டி க டைசியில் த ன் உ யி ரை வி டுவதென தீ ர்மானித்து, த ன் ம ரணத்தி ற்கு கா ரணம் ம ருமக ன் சுரேஷ்குமார் தா ன் எ ன கூ றி வீ டியோ ஒ ன்றை ப திவு செ ய்துவி ட்டு த ன் வீ ட்டுக்கு அ ருகே உ ள்ள ம ரத்தில் தூ க் கு போ ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டார்.

த ங்கள் த ந்தையின் ம ர ண செ ய்தியை கே ட்டு ம கள்கள் இ ருவரும் து டித்து ப் போ யினர். த ங்கள் மீ து த ந்தை வை த்திருந்த பா சத்தால் தா ன் இ ந்த நி லை எ ன்பதை அ றிந்த 2 பே ரும் நே ற்று மா லை இர யில் மு ன் பா ய் ந் து த ற் கொ லை செ ய்து கொ ண்டனர்.

3 பே ரின் ச டலங்களையும் மீ ட்ட பொ லிசார் வி சாரணை ந டத்தி வ ருகின்ற னர். இ தற்கெல்லாம் கா ரணமான ம ருமக ன் சுரேஷ்குமார் மீ து வ ழக்குப்ப திவு செ ய்யப்ப ட்டு வி சாரணை ந டைபெற்று வ ருகிறது.

பா சப் போ ராட் டம் ந டத்திய ம கள்க ளும், த ந்தையும் ஒ ரே நா ளில் அ டுத்தடு த்து உ யிரிழ ந்த ச ம்பவம் உ றவினர்கள் ம த்தியில் சோ கத்தை ஏ ற்படுத்தியு ள்ளது.

10 நாட்களில் முதலாம் ஆண்டு திருமண விழா : விமான விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி மனைவி!!

கேரள விமான விபத்தில்..

கேரள விமான விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி மனைவியை பார்ப்பதற்காக துபாயில் இருந்து அவரது கணவன் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் துபாயில் இருந்து வந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியதால், 19 பேர் ப லியாகிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் கோழிக்கோடை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க Manal Ahmed என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார்.

முதலாம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடுவதற்கு இன்னும் 10 நாட்களுக்கும் குறைவாக இருந்த நிலையில், Manal பரிதாபமாக உயிரிழந்தார். இவர் சுற்றுலா விசா மூலம் கணவரைப் பார்க்க அங்கு சென்றுள்ளார்.

அது காலாவதியான நிலையில், கேரளா திரும்பிய போது, இந்த துயர சம்பவம் நடந்துவிட்டது. இதனால் அவருக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதி சடங்குகள் போன்றவைகளில் கலந்து கொள்வதற்காவும் அவரது கணவர் Athif Muhammed இந்தியா திரும்பியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து Athif Muhammed-ன் தந்தை Ismail. இது குடும்பத்திற்கு ஒரு கடினமான கட்டம். முதலில் அவரின் மரண செய்தியை கேட்டு அ திர்ச்சியடைந்தோம்.

இருப்பினும் ம ரணம் குறித்து எந்த ஒரு நம்பகமான தகவல் வராததால், சற்று தைரியமுடன் இருந்தோம். கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம். ஏனெனில் பலர் மீட்கப்பட்டு வருவதாக செய்தி வெளியானதால், அவர் கண்டிப்பாக உயிர் பிழைத்திருப்பார் என்று நினைத்தோம்.

ஒரு நன்கு படித்த மற்றும் லட்சியம் கொண்ட பெண்ணாக இருந்தார். கடந்த மார்ச் மாதம் ஒரு விபத்தில் அவர் தனது தந்தையை இழந்துவிட்டார்.
தம்பதிக்கு கடந்த ஆகஸ்டில் திருமணம் நடைபெற்றது.

Athif Muhammed அண்மையில் துபாயில் கணக்காளராக பணிபுரிந்த பின்னர் அஜ்மானுக்கு குடிபெயர்ந்தார். பிப்ரவரி மாதம் Manal ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்ததாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கடலலையின் திடீர் கொந்தளிப்பு : எதிர்பாராமல் பறிபோன இளைஞனின் உயிர்!!

கன்னியாகுமரி…

நேற்றைய தினம் திடீரென கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில் அருகே இருக்கும் அழிக்கால் என்ற மீனவ கிராமத்தில், கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால், கடல் நீர் அங்கிருக்குந்த வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

இதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்த அஸ்வின் என்ற இளைஞர், தன்னுடைய வீட்டிற்கு முன்பாக கடல் மணல் மூட்டைகளை கொண்டு வீட்டிற்கு புகும் கடல் நீரை தடுக்க முயற்சி செய்துள்ளார்.

அப் போது எதிர்பாராதவிதமாக வந்த கடல் அலையானது வேகமாக மதில்சுவர் மீது மோ தியதில் அஸ்வின் மீது மதில் இ டிந்து வி ழுந்துள்ளது. இ டிந்த வி ழுந்ததில் அவர் படுகாயமுற்று உ யிரிழந்தார்.

இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட கோட்டாட்சியர் மயில் என்ற அதிகாரியை, அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டு போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீண்ட காலமாக தங்களுடைய பிரதேசத்தில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் மற்றும் தூண்டில் வளைவு உள்ளிட்டவை அமைத்து தருமாறு மனு கொடுத்துடும் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்காதது ஏன் என்பது குறித்து கேள்வி எழுப்பி, வா க்குவா தம் செய்துள்ளனர்.

இணைய வகுப்பில் சரிவர பங்கேற்கவில்லை : 12ம் வ குப்பு மா ணவி எ டுத்த வி பரீத மு டிவு : க தறி அ ழும் பெ ற்றோர்!!

சென்னை..

சென்னையில் வளசரவாக்கம் ராமாபுரம் ப குதியில் வ சிப்பவர் சின்னையா. இ வர் மே ஸ்திரி யாக ப ணியாற்றி வ ருகிறார். இ வரது ம னைவி சுவர்ணா. இ வர் த னியார் நி றுவனத்தில் ப ணிபுரிந்து வ ருகின்றார்.

இ த் த ம்பதிக்கு கோபி எ ன்ற ம கனும், யாமினி எ ன்ற ம களும் இ ருக்கின்றனர். கோபி வளசரவாக்கம் ம ண்டல அ லுவலகத்தில் அ திகாரியாக ப ணியாற்றி வ ருகிறார். யாமினி அ ங்குள்ள அ ரசு ப ள்ளியில் த ற்போது 12 ஆ ம் வ குப்பில் ப டித்து வ ருகின்றார்.

இ ந்த நி லையில் ஊ ரடங்கு கா ரணமாக ப ள்ளிகள் மூ டப்பட்டு ள்ள நி லையில், வீ ட்டிலிருந்து இ ணையதளம் மூ லமாக க ல்வி க ற்று வ ந்துள் ளார். மே லும், ஆ ன்லைன் மூ லமாக க ல்வி க ற்க த னக்கு அ லைபேசி வா ங்கி த ரும்ப டி பெ ற்றோரிடம், அ ண்ணனிடமும் கே ட்ட நி லையில், இ ன்னும் இ ரண்டு நா ட்களில் அ லைபேசியை வா ங்கித் த ருவதாக கூ றியுள்ளனர்.

அ துவ ரை த னது சி த்தியின் அ லைபேசியை ப யன்படுத்தி ஆ ன்லைன் வ குப்புகளில் ப ங்குபற் றிய நி லையில், அ வரது செ ல்போனுக்கு அ டிக்க டி அ ழைப்புகள் வ ந்ததால், வ குப்புகளில் ச ரிவர க வனம் செ லுத்த மு டியவி ல்லை.

இ தனால் த னக்கு பெ ற்றோர்கள் அ லைபேசியை வா ங்கித் த ரவில்லை எ ன்ற வி ரக்தியில், நே ற்று இ ரவு வீ ட்டில் யா ரும் இ ல்லாத நே ரத்தில் தூ க் கி ட்டு த ற் கொ லை செ ய்து கொ ண்டுள் ளார். ப ணியை மு டித்துவி ட்டு வீ ட்டிற்கு வ ந்த பெ ற்றோர், ம கள் தூ க் கில் தொ ங் கு வ தை க ண்டு பெ ரும் அ திர்ச்சிக்கு ள்ளாகி உ ள்ள னர்.

ம களின் உ டலை க ட்டியணைத்து க த றி ய ழு த நி லையில், இ ந்த வி டயம் கு றித்து பொ லிஸாருக்கு த கவல் தெ ரிவிக்கப்பட்டு ள்ளது. ச ம்பவ இ டத்திற்கு வ ந்த பொ லிஸார், யாமினியின் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோ தனைக்காக அ னுப்பிவை த்தனர்.

மே லும் இ ந்த வி டயம் தொ டர்பாக த கவல் அ றிந்த யாமினியின் ச க தோ ழிகள், நே ரில் வ ந்து அ வரது உ டலுக்கு அ ஞ்சலி செ லுத்தினர். இ ந்த ச ம்பவம் அ ப் ப குதியில் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தி உ ள்ளதாக தெ ரிவிக்கப்படுகி ன்றது.