வவுனியாவில் சூடுபிடித்துள்ள றம்புட்டான் விற்பனை!!

றம்புட்டான் விற்பனை..

நாட்டில் தற்போது றம்புட்டான் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் நாட்டின் அனைத்து பாகங்களிலும் அதன் விற்பனையும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் றம்புட்டான் பழ விற்பனை சூடுபிடித்துள்ளதனை காணக்கூடியதாய் உள்ளது.

குறிப்பாக றம்புட்டான் பழத்தின் பிரதான உற்பத்தி இடமான மல்வானையில் இருந்து அதிகளவான றம்புட்டான் பழங்கள் வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு வவுனியா நகரில் குவிந்து கிடக்கும் றம்புட்டான் பழங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முண்டியடித்துக் கொண்டு வாங்குவதனை அவதானிக்க முடிகின்றது.

இ ரவில் வீட்டுக்கு வந்து.. அம்மா சேலையை தேடி எடுத்து இ ளைஞன் எ டுத்த வி பரீத முடிவு!!

இ ளைஞன்..

டியூட்டி முடிச்சிட்டு நைட் வீட்டுக்கு வந்ததும், அம்மா புடவையை தேடி எடுத்து கொண்டு, மாட்டுக் கொ ட் ட கை க்கு போய் தூ க் கு போ ட் டுக் கொ ண் டார் ஒரு போ லீ ஸ் கா ரர்.. இந்த ச ம் பவம் திருச்சி மா வட்டத்தில் நடந்துள்ளது.

திருச்சி மா வட்டம் ஸ்ரீரங்கம் திருப்பரைது பெரிய நகரில் வசித்து வந்தவர் ஆனந்த்.. 26 வயசாகிறது.. இவர் வாத்தலை போ லீஸ் ஸ்டேஷனில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்றிரவு இவர் டியூட்டி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.. 11 மணி வரை உட்கார்ந்திருந்தார். பிறகு தி டீ ரெ ன தன்னுடைய அம்மா புடவையை தேடி எடுத்தார்.. பிறகு வீட்டுக்கு பின்னாடி இருந்த மாட்டுக் கொ ட் ட கை சென்று, அங்கேயே தூ க் கு மா ட் டி த ற் கொ லை யும் செ ய் து கொ ண் டா ர்.

இதனை பார்த்த குடும்பத்தினர் அ தி ர் ச்சி அ டை ந் து அ ல றி து டி த் த னர்.. தகவலறிந்து ஜீயபுரம் போ லீ சா ரும் வந்துவிட்டனர். ஒரு கட்டத்தில் இந்த கடன் தொகையே அ தி க மா கி விட்டது.

ம ன உ ளைச் ச லை தீ ர் த்து கொ ள் ள ரம்மி விளையாட போய், அதனாலேயே இன்னும் அ தி க மான ம ன உ ளை ச் சல் இவருக்கு வந்துவிட்டது.. இதன் காரணமாகவே தூ க் கு போ ட் டு த ற்கொ லை செ ய் து கொ ண் டி ரு ப் பதாக முதல்கட்டமாக போ லீ சா ர் சொல்கிறார்கள். எனினும் உண்மை காரணத்தை தொடர்ந்து வி சா ரி த்து வருகிறார்கள்.

இப்படித்தான் சென்னையில் 10 நாளைக்கு முன்பு நித்திஷ் என்ற இளைஞர் த ற் கொ லை செய் து கொ ண்டா ர் .. அவரும் ஆன்லைனில் சீட்டு விளையாடி, பணத்தை தொலைத்து, க ட னை வா ங் கி, அந்த க ட னை திருப்பி செலுத்த முடியாமல் த ற் கொ லை செ ய் து கொ ண் டா ர்.

இப்படி, இளைஞர்களை மெல்ல மெல்ல கொ ன் று வருகிறது இந்த ஆன்லைன் விளையாட்டுக்கள்.. விளையாட்டில் மூ ழ் கி வி டுவதால், அப்படியே மா ர டை ப்பு ஏற்பட்டு 16 வயது சிறுவன் உ யி ரி ழந்த ச ம் ப வ மும் ஈரோட்டில் நடந்தது.. இதெல்லாம் அநியாய ம ர ண ங் கள்.. டிக்டாக் மாதிரி இதற்கெல்லாம் த டை வி தி த் தாலும் நல்லாதான் இருக்கும்.

ச ட ல த்தை கைப் ப ற் றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து, வி சா ரணை யையும் ஆரம்பித்தனர். அப்போதுதான் இந்த போ லீ ஸ் கா ரர் ஆனந்த், ரம்மி விளையாடுபவர் என தெரியவந்தது.

எப்பவுமே ஆன்லைனில் ரம்மி விளையாடுவாராம்.. இந்த ரம்மி விளையாட்டுக்காக தன்னுடைய நண்பர்களிடம் க ட ன் வாங்கியும் விளையாடி வந்திருக்கிறார்.

உழவு இயந்திரத்தில் சி க்கி ப லி யா கிய விவசாயி!!

உழவு இயந்திரம்…

உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் ப லி யா கியுள் ளதாக பொ லி ஸா ர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு பொ லி ஸ் பிரிவின் பண்டாரியாக்கட்டு வயல் பகுதியில் இந்த வி ப த் து இடம்பெற்றுள்ளது.

வி பத்தில் வேப்பவெட்டுவான், கிராமத்ததைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான உதயராசா மயூரன் (வயது 27) என்பவரே ப லி யா கியு ள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ச ம் ப வம் தொடர்பில் தெரிய வருகையில், தனது தந்தையின் நெல் வயலை உழுது பண்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்து உழவு இயந்திரத்தைச் ஓட்டிச் சென்று நெல் வரப்புக் கட்டில் ஏறும்போது உழவு இயந்திரம் குடைசாய்ந்துள்ளது.

அச்சந்தர்ப்பத்தில் இவர் உழவு இயந்திரத்தின் கீழே ந சு ங்கு ண் டு ப டுகா யம டைந் துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே இவர் உ யிரி ழ ந்துள் ளார்.

ச ட ல ம் பி ரே த ப ரி சோ த னை களு க்காக மட்டக்களப்பு போதனா வை த்திய சாலை க் கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இ ச்சம் ப வம் தொடர்பில் பொ லி ஸா ர் வி சா ர ணை க ளை மே ற்கொ ண்டு வ ருகின்றனர்.

நீரில் மூழ்கிய கண்டி நகரம்!!

கண்டி நகரம்..

இன்று அதிகாலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக கண்டி நகரத்தில் சில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இலங்கை வங்கி கட்டடம், வாகனம் நிறுத்துமிடத்திற்கு அருகில் உள்ள பிரதேசங்கள் உட்பட பல இடங்கள் வெள்ள நீரில் மூழ்கியதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்த பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகள் உட்பட வர்த்தக நிலையங்கள் மூன்று அடி வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.

இதற்கு முன்னர் கடுமையான மழை பெய்த சந்தர்ப்பங்களில் இவ்வாறான நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் நகர சபை அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்த போதிலும் தீர்வு கிடைக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

வவுனியாவில் பிரதமராக மஹிந்த பதவியேற்றதையடுத்து கேக் வெட்டி கொண்டாட்டம்!!

கேக் வெட்டி கொண்டாட்டம்..

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து வவுனியாவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது,

இன்று மாலை 4.30 இற்கு இந்நிகழ்வு பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட வன்னி மாவட்ட வேட்பாளர் கேணல் ரட்ணப்பியரிய பந்து தலைமையில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது பிரதமராக மஹிந்த பதவியேற்றதை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன், கட்சி ஆதரவாளர்கள் பலரும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கிடைக்கும் சிறப்புரிமைகள்!!

சிறப்புரிமைகள்..

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கு கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாறு மக்களால் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு பல சிறப்புரிமைகள் கிடைக்கும்.

இதனடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 54 ஆயிரத்து 285 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். பிரதியமைச்சர் ஒருவருக்கு 63 ஆயிரத்து 500 ரூபாவும் ராஜாங்க அமைச்சர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு 65 ஆயிரம் ரூபாவும் சம்பளமாக வழங்கப்படும்.

அத்துடன் சபாநாயகருக்கு 68 ஆயிரத்து 500 ரூபாவும் பிரதமருக்கு 71 ஆயிரத்த்து 500 ரூபாவும் சம்பளமாக வழங்கப்படும். இதனை தவிர நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலக கொடுப்பனவாக ஒரு லட்சம் ரூபாய், போக்குவரத்து கொடுப்பனவாக 10 ஆயிரம் ரூபாய், தொலைபேசி கொடுப்பனவாக 50 ஆயிரம் ரூபாய், அலுவலகம் மற்றும் செல்போன் கொடுப்பனவாக 50 ஆயிரம் ரூபாய்,

அஞ்சல் கொடுப்பாவாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், சாரதி மற்றும் விருந்து கொடுப்பனவாக 4 ஆயிரத்து 500 ரூபாய் என்பவற்றுடன் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துக்கொள்வதற்காக நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும்.

நாடாளுமன்ற கூட்டங்கள் நடைபெறாத நாட்களில் தெரிவுக்குழுக் கூட்டங்களில் கலந்துக்கொள்வதற்காக மேலதிகமாக 2 ஆயிரத்து 500 கூடுதலாக வழங்கப்படும்.

இதனிடையே ஆடம்பர வாகனத்தை கொள்வனவு செய்ய சுங்க தீர்வையற்ற அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். இவர்கள் 30 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் வாகனத்தை இரண்டு கோடியே 590 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும்.

-தமிழ்வின்-

இலங்கை நாடாளுமன்ற தேர்தலும் ஐந்து சுவாரஸ்ய தகவல்களும்!!

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை பெற்று பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் புதிய பிரதமராக பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஐந்து சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சுவாரஸ்ய தகவல்கள் குறித்து தொகுப்பை கீழே காணலாம்,

ஒரு ஆசனத்திற்கான பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய விருப்பு வாக்குகள் : மஹிந்த ராஜபக்ச (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – குருநாகல் மாவட்டம்) – 527,364 வாக்குகள்.

ஒரு ஆசனத்திற்கான பெற்றுக்கொள்ளப்பட்ட குறைந்தபட்ச விருப்பு வாக்குகள் : குலசிங்கம் திலீபன் (ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – வவுனியா) – 3,203 வாக்குகள்.

மாவட்டத்திற்கான வாக்குகளுடன் ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையிலான விருப்பு வாக்குகள் (பிரதான 2 கட்சிகள்)

மஹிந்த ராஜபக்ச (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – குருநாகல் மாவட்டம்) – 81.1%
சஜித் பிரேமதாச (ஐக்கிய மக்கள் சக்தி – கொழும்பு மாவட்டம்) – 78.9%
மிகப்பெரிய இழப்பு (அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றும் வெற்றிபெற முடியாமல் போன வேட்பாளர்கள்)

லக்ஷ்மன் யாபா அபேவர்தனே (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – மாத்தறை மாவட்டம் ) – 71,106 வாக்குகள்
தில்ஷன் விதானகமகே (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – காலி மாவட்டம்) – 56,484 வாக்குகள்
இப்திகர் ஜமீல் (ஐக்கிய மக்கள் சக்தி – களுத்துறை மாவட்டம்) – 54,305 வாக்குகள்

ஒரு ஆசனத்தை வெல்ல விருப்பு வாக்குகளின் குறைந்த வேறுபாடு

416 வாக்குகள், ஐக்கிய மக்கள் சக்தி – மாத்தலை மாவட்டம்

வெற்றி – ரோஹினி குமாரி விஜரத்னே – 27,587 வாக்குகள்
தோல்வி – ரஞ்சித் அலுவிஹரா – 27,171 வாக்குகள்
455 வாக்குகள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – வன்னி மாவட்டம்

வெற்றி – காதர் மஸ்தான் – 13,454 வாக்குகள்
தோல்வி – ஜனக் நந்தகுமார்– 12,999 வாக்குகள்
742 வாக்குகள், இலங்கை தமிழரசு கட்சி – யாழ்ப்பாணம் மாவட்டம்

வெற்றி -தர்மலிங்கம் சித்தார்தன் – 23,840 வாக்குகள்
தோல்வி – சசிகலா ரவீராஜ் 23,098 வாக்குகள்
715 வாக்குகள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – கேகாலை மாவட்டம்

வெற்றி -சுதாத் மஞ்சுலா – 45,970 வாக்குகள்
தோல்வி – சந்த குணசேன – 45,255 வாக்குகள்

அனைத்து பாடசாலைகளையும் ஆரம்பிப்பது குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்!!

முக்கிய தகவல்..

இலங்கையில் பொதுத்தேர்தலை முன்னிட்டு கடந்த நான்காம் திகதி தொடக்கம் நேற்று முன்தினம் வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் முழுமையாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 200 ஐ விட அதிக மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில்,

திங்கட்கிழமை – 1, 2ஆம் வகுப்புக்கள்
செவ்வாய்கிழமை – 2 , 5ஆம் வகுப்புக்கள்
புதன்கிழமை – 3 , 5ஆம் வகுப்புக்கள்
வியாழக்கிழமை , வெள்ளிக்கிழமை – 4 , 5ஆம் வகுப்புக்கள் என்ற ரீதியில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. குறித்த பாடசாலைகளில் ஏனைய வகுப்புக்கள்,

திங்கட்கிழமை – 6 , 10 , 11 , 12 மற்றும் 13ஆம் வகுப்புக்கள்
செவ்வாய்கிழமை – 7 , 10 , 11 , 12 மற்றும் 13ஆம் வகுப்புக்கள்
புதன்கிழமை – 8 , 10 , 11 , 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்கள்
வியாழக்கிழமை , வெள்ளிக்கிழமை – 9 , 10 , 11 , 12 மற்றும் 13ஆம் வகுப்புக்கள் என்ற ரீதியில் ஆரம்பமாகவுள்ளன.

பாடசாலைகளில் ஒரு மீற்றர் இடைவெளியை பேண முடியுமானால் அனைத்து மாணவர்களையும் அழைக்க முடியும் என்பதோடு பாடசாலை நிறைவடையும் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி 6 , 7 , 8 , 9ஆம் தர வகுப்புக்கள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி பகல் 1.30 இற்கு நிறைவடையும். அத்துடன் 10 , 11, 12 மற்றும் 13ஆம் வகுப்புக்களுக்கு காலை 7.30 மணி தொடக்கம் மாலை 3.30 மணி வரை கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதனால் அனைத்து ஆசிரியர்களும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று பாடசாலைக்கு வருகை தர வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படும் திகதி தொடர்பாக வெளியான செய்தி!!

விமான நிலையம்..

சுற்றுலா பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கப்படுவது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார்.

விமான நிலையம் திறக்கப்பட்டாலும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை வழமை போன்று முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.சுற்றுலா பயணிகளின் தனிமைப்படுத்தல் காலம் தொடர்பில் சுகாதார பிரிவு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கை வருவதற்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கைக்கு அமைய இரண்டு விமானங்கள் மூலம் அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தலைமையில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் கலையரசனுக்கு!!

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணப்பிள்ளை துரைராசசிங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் இணக்கப்பாட்டுடன் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் யானையுடன் மோதிய புகையிரதம்!!

கனகராயன்குளம் பகுதியில்..

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் காட்டு யானையுடன் மோதி தடம் புரண்டதால் வடக்கிற்கான புகையிரத சேவை பாதிப்படைந்துள்ளது.

இன்று அதிகாலை 3.45 மணியளவிலேயே குறித்த விபத்து இடம்பெற்றது. காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஸ்ரீ தேவி அதிவேக புகையிரதம் மாங்குளத்திற்கும் புளியங்குளத்திற்கும் இடையே பயணித்த போது புகையிரத தண்டவாளத்தை ஊடறுத்துச் சென்ற காட்டு யானையுடன் மோதி தடம் புரண்டுள்ளது.

குறித்த விபத்தில் யானை சம்பவ இடத்திலேயே ப லியாகியுள்ளதுடன், புகையிரதம் பாதையைவிட்டு விலகி தடம்புரண்டது. எனினும் அதிஸ்டவசமாக பயணிகளிற்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

சம்பவ இடத்திற்கு சென்ற கனகராயன்குளம் பொலிசார் மற்றும், வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விபத்து காரணமாக பலமணி நேர தாமதத்திற்கு பின்னரே புகையிரதம் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையின் 28வது பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ!!

பிரதமராக பதவியேற்ற மஹிந்த..

இலங்கையின் 28 ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளார்.

அனுராதபுரம் களனி ரஜமஹா விகாரையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பதவி ஏற்பு நிகழ்வில் மஹா சங்கத்தினர் உள்ளிட்ட மத குருமார்கள் மற்றும் வௌிநாட்டு இராஜதந்திரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட வெற்றி பெற்ற உறுப்பினர்களும் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.

பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்று, இலங்கை அரசியல் வரலாற்றில் சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருட்டு : திருடர்கள் பகலில் துணிகரம்!!

வவுனியாவில் பட்டப்பகலில் திருடர்கள் இன்று (08.08.2020) மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா கற்குளி பகுதியில் இன்று மாலை வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (BOXER MODAL NPHI-6704) மோட்டார் சைக்கிளை திருடர்கள் கள்ள சாவி போட்டு திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் முன்னால் வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டியை இனந்தெரியாத இருவர் திருடிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து மோட்டார் வண்டியின் உரிமையாளர் சம்பவம் தொடர்பாக பொலிசில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பாக வவுனியா பொலிசார் கற்குளி பகுதிக்குச் சென்று வி சாரணைகளை மேற்கொண்டனர்.

வவுனியா கற்குளி பிரதேசத்தில் போ தைப்பொ ருள் வியாபாரம் மற்றும் தி ருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும்,

பொலிசாருக்கு எழுத்து மூலம் முறைப்பாடுகள் பதிவு செய்தும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மேலும் பட்டப்பகலில் திருடர்களால் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் சைக்கிள் திருட்டு காரணமாக தாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

பொலிசார் கற்குளி பகுதியில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு சந்தேகத்திற்கிடமானவர்களை வி சாரணை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தனர்.

நிந்தவூர் கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கிய ச டலம்!!

கரையொதுங்கிய ச டலம்..

சம்மாந்துறை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பள்ளம் கடற்கரை பிரதேசத்தில் இன்று மாலை 52 வயது மதிக்கத்தக்க நபரெருவரின் ச டலம் கரையொதுங்கி உள்ளது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான அருணாசலம் என்பவரின் ச டலம் இவ்வாறு கரையொதுங்கி உள்ளது. இவர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் வசித்து வந்தவர் என தெரியவருகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள சம்மாந்துறை பொலீஸார் இது தொடர்பான வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்ப்பமான இலங்கை தா தாவின் 27 வயது காதலி : க ருவை க லைக்க செ ய்த செயல்!!

அங்கொட லொக்கா..

இலங்கை தா தா அங்கொட லொக்காவின் கா தலிக்கு க ருக்க லைப்பு சி கிச்சை முடிந்துள்ள நிலையில் சென்னை புழல் சி றைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி (36). இவர் கோவை சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் தங்கியிருந்த தனது உறவினர் பிரதிப்சிங் (35) என்பவர் மா ரடைப்பால் உ யிரிழந்து வி ட்டார் என, பீளமேடு பொ லிசாரிடம் பு கார் செய்தார்.

இதற்காக அவர் பிரதாப் சிங்கின் அடையாள சான்றாக ஆதார் அட்டையை வழங்கினார். இதையடுத்து வ ழக்கு ப திவு செய்த பொ லிசார் பி ரேதப் ப ரிசோ தனைக்கு பின் ச டலத்தை ஒ ப்படைத்தனர்.

சிவகாமி சுந்தரி மற்றும் உ யிரிழந்தவருடன் தங்கியிருந்த இலங்கை கொழும்பை சேர்ந்த அமானி தான்ஜி, (27) இருவரும் ச டலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்று எ ரித்துள்ளனர்.

இந்நிலையில், இவ் வ ழக்கு குறித்து ச ந்தேகம டைந்த பொ லிசார் தீ விர வி சாரணை மே ற்கொண்டனர். வி சாரணையில் உ யிரிழந்தவரின் உண்மையான பெயர், அங்கொட லொக்கா எனத் தெரிந்தது.

இவர், இலங்கையில் போ தைப் பொ ருள் க டத்தும் நி ழல் உ லக கு ம்பலைச் சே ர்ந்தவர், ப ல கொ லை வ ழக்குகளில் தொ டர்புடையவர் எ ன்பதும் தெ ரியவந்தது.

லொக்கா தனது கா தலி அமானி தான்ஜியுடன் கோவை தங்கியிருந்தது தெரியவந்தது. மேலும் அங்கொடா லொக்கா முக அ றுவை சி கிச்சை செய்து உ ருவத்தை மா ற்றியது அ ம்பலமானது. இ ந்த நி லையில் லொக்காவின் காதலி அமானி இரண்டு மாதங்கள் க ர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.

இதையடுத்து க ருக்கலைப்பு செ ய்ய மா த்திரைகளை சா ப்பிட்ட அமானி அதற்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை முடிந்து சென்னை புழல் சி றைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புழல் சி றையில் அ டைக்கப்பட்டுள்ள அமானி தான்ஜியின் முன்னாள் கா தலனை துபாயில் வை த்து அங்கொட லொக்கா கொ லை செ ய்தார் என்றும் கு ற்றசா ட்டு உள்ளது.

அந்த கோ பத்தில் இருந்த அமானி தான்ஜி தி ட்டம் தீ ட்டி அங்கொட லொக்காவுடன் ப ழகி சா ப்பாட்டில் வி ஷம் வை த்து கொ லை செ ய்திருக்க லாம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

191 பேருடன் சென்ற விமான விபத்து நடந்த இடத்தில் தனியாக தவித்த குழந்தை : பெற்றோர் தெரியாததால் வெளியிடப்பட்ட புகைப்படம்!!

குழந்தை..

இந்தியாவில் 191 பேருடன் சென்ற விமான விபத்தில் தனியாக தவித்த குழந்தையின் புகைப்படம் வெளியிடப்பட்டு உதவி கேட்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் Air India Express நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வர சென்றது.

அதன் படி, 174 பயணிகள், 10 கைக்குழந்தைகள், 2 விமானிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் என மமொத்தம் 191 பேருடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கேரளாவின் கோழிக்கூடுக்கு புறப்பட்டு வந்துள்ளது.

விமானம் தரையிரங்கிய போது ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் விழுந்து, விமானம் விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்து நொறுங்கியது. இதன் காரணமாக விமானி உட்பட 2 பேர் ப லியாகியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் 30 முதல் 40 பயணிகள் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.’ இந்நிலையில் தற்போது இந்த விமான விபத்து நடந்த பகுதியில் குழந்தை ஒன்று தனியாக நின்றுள்ளது. அந்த குழந்தை அங்கிருக்கும் Kondotty மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதனால் இவரைப் பற்றி யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.