விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய மனைவி-குழந்தை : உ யிரிழந்த கணவனின் இறுதி பேஸ்புக் பதிவு!!

இறுதி பேஸ்புக் பதிவு..

கேரளாவில் விமான விபத்தில் உ யிரிழந்த நபர், இ றப்பதற்கு முன் தன்னுடைய பேஸ் புக் பக்கத்தில் சொந்த ஊருக்கு திரும்புகிறோம் என்று மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

விபத்தில் சி க்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானத்தில், துபாயில் ஏறிய உடனே கேரளாவின் கோழிகோடைச் சேர்ந்த Sharafu Pilassery என்பவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் back to home, அதாவது சொந்த ஊருக்கு திரும்புகிறோம் என்று மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார்.

ஆனால் அவரின் அந்த ஆசை நிறைவேறவில்லை. ஏனெனில் இந்த விமான விபத்தில் சி க்கி தற்போது வரை உ யிரிழந்துள்ள 17 பேரில் இவரும் ஒருவர், ஆனால் இவருடன் வந்த மனைவி மற்றும் குழந்தை அதிர்ஷ்டவசமாக கா ப்பாற்றப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Sharafu Pilassery துபாயின் தனது மனைவி மற்றும் மகளுடன் நீண்டகாலமாக வசித்து வந்துள்ளார். சமூக ஊடகங்கள் மற்றும் சமூக நடவடிக்கைகளில் தீவிரமாக இருப்பவர் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், Sharafu Pilassery உ யிரிழந்த விவகாரம் அவருடைய மனைவிக்கு தெரிவிக்கப்பட்டதா? என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. இருப்பினும் குடும்பத்தினருடன் ஆசையாக சொந்த ஊருக்கு திரும்பிய அவர் பரிதாபமாக இ றந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ம ந்திரவாதியிடம் ம னைவியை அ ழைத்து செ ன்ற க ணவன் : பி ன் அ ரங்கே றிய அ திர்ச்சி ச ம்பவம்!!

இந்தியா…

இ ந்தியாவில் ம ந்திரவாதி தா க் கி யதில் 2 மா த கு ழந்தையின் தா யான இ ளம் பெ ண் ஒ ருவர் உ யிரிழந்த ச ம்பவம் பெ ரும் ப ரப ரப்பை ஏ ற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்தவர் மல்லேஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரஜிதா என்ற பெ ண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ரஜிதா 2 மாதங்களுக்கு முன்பு குழந்தை பெற்றெடுத்துள்ளார். பிரசவம் நடந்த நாளிலிருந்து ரஜிதா உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது.

இ தனால் ம னைவிக்கு பே ய் பி டித்திருப்பதாக நி னைத்து கொ ண்டு, ம ல்லேஷ் உ ள்ளூர் பே ய் ஓ ட்டியான ஷி யாம் எ ன்பவரை வீ ட்டிற்கு கூ ட்டி செ ன்றுள்ளார்.

இ தன் பி ன்னர் ர ஜிதாவின் மீ து இ ருக்கும் பே யை ஓ ட்டுவதாக கூ றி, அ வரை அ டி த் து தா க் கியு ள்ளார். ஒ ரு க ட்டத்தில், அ டி தா ங் க மு டியா மல், உ டல்நி லை மி கவும் மோ சமாகி ர ஜிதா, அ ந்த இ டத்திலே ம யங்கி வி ழுந்துள்ளார்.

இ தையடுத்து உடனடியாக அவர் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை ப ரிசோதித்து பா ர்த்த ம ருத்துவர்கள் ரஜிதா ஏற்கனவே உ யிரிழந்து விட்டார் என கூறியுள்ளனர்.

மே லும், இ த்தனை நா ட்கள் உ டல்நிலை ச ரியில்லாமல் இ ருந்த பெ ண்ணை ஏ ன் ம ருத்துவமனைக்கு அ ழைத்து வ ரவில்லை எ ன்று அ வர்கள் கே ள்வி எ ழுப்ப, இ ந்த வி வகாரம் உ டனடியாக பொ லிசாருக்கு தெ ரியவந்தது.

அதனை தொடர்ந்து பொலிசார் ரஜிதாவின் உ டலை கை ப்பற்றி பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இந்த சம்பவம் தொடர்பாக ம ந்திரவாதி ஷியாம், மல்லேஷின் உறவினர் ஒருவரை கைது செய்துள்ளனர். த ப்பி ஓ டிய பெ ண்ணின் க ணவர் ம ல்லேஷை பொலிசார் தேடி வருகின்றனர்.

70 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

இம்முறை பொதுத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்னற உறுப்பினர்கள் 70க்கும் அதிகமானவர்கள் மக்களினால் நிராகரிப்பட்டுள்ளனர்.

கடந்த நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய 23 பேருக்கும் அதிகமானோர் இம்முறை பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, ரவி கருணாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம், நவீன் திஸாநாயக்க, வஜிர அபேவர்தன, தயா கமகே, ருவன் விஜேவர்தன, அர்ஜுன ரணதுங்க, அஜித் மான்னப்பெரும,

ஹிருணிக்கா பிரேமசந்திர, சுஜீவ சேனசிங்க, அஜித் பீ பெரேரா, பாலித தெவரபெரும, ஏ.எச்.எம்.பௌசி, சதுர சேனாரத்ன, விஜித் விஜேமுனி, எட்வெட் குணசேகர, விஜேபால ஹெட்டிஆராச்சி, பியசேன கமகே, பந்துலால் பண்டாரிகொட,

பாலித ரங்கே பண்டார, லக்ஷ்மன் விஜேமான்ன மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகிய ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் உறுப்பினர்களே இவ்வாறு தோல்வியடைந்துள்ளனர்.

அத்துடன் கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் 10 பேருக்கும் அதிகமானோர் இம்முறை தோல்வியடைந்துள்ளனர்.

திலங்க சுமதிபால, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, டீ.பீ.ஏக்கநாயக்க, எஸ்.பீ.நாவின்ன, தாரானாத் பஸ்நாயக்க, லக்ஷ்மன் வசந்தர பெரேரா, இந்திக்க பண்டாரநாயக்க,

நிரோஷன் பிரேமரத்ன மற்றும் துலிப்ப விஜேசேகர ஆகியோர் கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்த போதும் இம்முறை தோல்வி அடைந்துள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய சுனில் ஹந்துன்நெத்தி, வைத்தியர் நலிந்த ஜயசிஸ்ஸ மற்றும் நிஹால் கல்ப்பத்தி ஆகிய முன்னாள் உறுப்பினர்கள் இம்முறை தோல்வியடைந்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா மற்றும் மற்றும் பீ.சரவணபவன், எஸ்.சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீகந்தராசா ஆகியோரே இவ்வாறு உறுப்பினர் பதவிகளை இழந்துள்ளனர்.

புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான 8 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!!

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் பெறப்பட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்திற்கு எட்டு பெண் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களுமே இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு மக்களின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் இரத்தினபுரி தேர்தல் மாவட்டத்தில் இருந்து மட்டும் மூன்று பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட பவித்ரா வன்னியராச்சி, முதிதா சொய்சா, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிட்ட முன்னாள் நீதி அமைச்சர் தலதா அத்துகோரலே ஆகியோரே இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ரஜிகா விக்ரமசிங்க சப்பரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்திலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே மற்றும் கோகிலா குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கீதா குமாரசிங்க காலி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்ட ரோஹினி காவிரத்னேவும் நாடளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இருப்பினும், அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த தேசிய பட்டியல்கள் வழியாக பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களைப் பொறுத்து நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் இலங்கை வரலாற்றில் இதுவரையில் 6.5% ஐ தாண்டவில்லை.

2015-2020 நாடாளுமன்றத்தின் போது, ​​பெண் பிரதிநிதித்துவம் 5.3% ஆக இருந்தது, 225 உறுப்பினர்களில் 12 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாடாளுமன்ற ஆசனங்களை அலங்கரிக்கும் 64 புதிய உறுப்பினர்கள்!!

நடந்து முடிந்த 2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் 64 புதிய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 53 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 6 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா : கலாநிதி நாலக கொடஹேவா, சஹன் பீரிஸ், கோகிலா ஹர்சனி குணவர்ன, நளின் ருவான் ஜீவ பெர்னாண்டோ, மிலான் சஜித் ஜயதிலக்க, உபுல் மகேந்திராய்

கொழும்பு : மேஜர் பிரதீப் உந்துகொட, மதுர விதானகே, பிரேமநான் சீ. தொலவத்த, ஜகத் குமார

களுத்துறை : கஞ்ஜீவ எதிரிமான்ன, அனுபா பஸ்குவல், லலித் எல்லாவள.

அனுராதபுரம் : பேராசிரியர் சன்ன ஜயசுமன, எச்.நந்தசேன, கே.பி.எஸ்.குமாரசிறி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரோஹன பண்டார விஜேசுந்தர.

கண்டி : வசந்த யாப்பா பண்டார, குணதிலக்க ராஜபக்ச, உதயன சாமிந்த கிரிந்கொட.

நுவரெலியா : ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன், நிமல் ஜயதிஸ்ஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் உதய குமார்.

காலி : சம்பந்த அத்துகோரள, இசுரு தொடங்கொட, ஷான் விஜேலால் டி சில்வா.

மாத்தறை : நிபுண ரணவக்க, கருணாதாச கொடித்துவக்கு, வீரசுமண வீரசிங்க.

ஹம்பாந்தோட்டை : மருத்துவர் உபுல் கலப்பத்தி, அஜித் ராஜபக்ச.

குருணாகல் : கலாநிதி குணபால ரத்னசேகர, அசங்க நவரத்ன, சமன்பிரிய ஹேரத், சுமித் உடுகும்புர.

கேகாலை : ராஜிகா விக்ரமசிங்க, சுதத் மஞ்சுள, உதயகாந்த குணதிலக்க.

இரத்தினபுரி : காமினி வலேபொட, அகில எல்லாவள, முதிதா பிரசாந்தி டி சொய்சா, ஆகியோர் புதிதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில், சாகர காரியவசம், அஜித் நிவாட் கப்ரால், அலி சப்றி, ஜயந்த வீரசிங்க, மஞ்சுளா திஸாநாயக்க, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, பேராசிரியர் சரித ஹேரத், கெவிந்து குமாரதுங்க, யதாமினி குணவர்தன, கலாநிதி சுரேன் ராகவன், சீதா அரம்பேபொல, பலில் மர்ஜான் ஆகியோர் புதிதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் இழப்பை சந்தித்த கூட்டமைப்பு!!

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களது பெயர்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது.

2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் பங்களிப்புடன் இடம்பெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 22 நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெற்றுக்கொண்ட நிலையில், 2010ஆம் ஆண்டு 14 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தபோதிலும், 2015ஆம் ஆண்டு 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தனர்.

இந்நிலையில் நல்லாட்சி அரசு காலத்தில் அரசாங்கத்தின் பல்வேறு செயற்பாடுகளுக்கு மறைமுக ஆதரவளித்ததன் ஊடாக கடும் விமர்சனங்களை சந்தித்திருந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு 2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்தித்திருந்தது.

இந்நிலையில் வடக்கு கிழக்கில் 10 ஆசனங்களை பெற்றுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்னி தேர்தல் தொகுதியில் 3 ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளது.

கடந்த முறை செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வைத்தியகலாநிதி சி. சிவமோகன், சிவசக்தி ஆனந்தன் என தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேசியப்பட்டியலின் ஊடாக சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவும் நாடாளுமன்ற பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இதன் காரணமாக வன்னியில் 5 நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துடன் செயற்பட்ட கூட்டமைப்பு இம்முறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி. சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோருடன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய சிவசக்தி ஆனந்தனையும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் இருந்து வன்னி வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர்.

2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு கடந்த நாடாளுமன்ற தேர்தலிகளில் தோல்வியுற்றிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக வினோ நோகதாரலிங்கம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வன்னியில் கடும் சவாலாக காணப்பட்ட பொதுஜன பெரமுனவின் முதன்மை வேட்பாளரான கே.கே.மஸ்தானும் இரண்டாவது தடவையாகவும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து 40 நாட்களில் தேர்தலை சந்தித்திருந்த மஸ்தான் சுதந்திர கட்சியில் சிறுபான்மை இனங்களில் வெற்றிபெற்ற ஒரு வேட்பாளராக காணப்பட்டிருந்தார் என்பதுடன் இடையில் எற்பட்ட அரசியல் மாற்றத்தினால் 53 நாட்கள் பிரதி அமைச்சராகவும் செயற்பட்டிருந்தார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியினூடாக இம்முறை வன்னியில் களமிறங்கிய ரிசாட் பதியுதீன் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச காலத்தில் மீள்குடியேற்ற அமைச்சராகவும் நல்லாட்சி காலத்தில் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சராக இருந்த ரிசாட் பதியுர்தீன் வில்பத்து காடழிப்பு விவகாரம், ஈஸ்டர் கு ண்டுத் தா க் கு த ல் விடயங்கள் தொடர்பில் கடும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துவரும் நிலையில் வன்னியில் அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளார்.

இதேவேளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட கு.திலீபன் வேறு எந்த தேர்தலிலும் போட்டியிடாது நேரடியாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையின் புதிய நாடாளுமன்றத்தில் விசித்திரம் : தந்தை – மகன்களாக மூன்று குடும்பங்கள்!!

திய நாடாளுமன்றத்தில் விசித்திரம்..

இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று தந்தை – மகன் ஜோடிகள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

முதலாவது ஜோடியாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

அத்துடன் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் ஷஷிந்திர ராஜபக்ஷ ஆகியோரும், முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் அவரது மகன் பிரமித பண்டார தென்னகோன் ஆகியோரே தெரிவாகியுள்ளனர்.

கடந்த நாடாளுமன்றத்தில் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகன் சத்துர சேனாரத்ன ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டனர். எனினும் சத்துர சேனாரத்ன இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வெற்றிக் கொண்டாட்டம்!!

வெற்றிக் கொண்டாட்டம்..

வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முதன்மை வேட்பாளர் குலசிங்கம் திலீபன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சி 111,18 வாக்குகளைப் பெற்றுள்ளது. இதில் குலசிங்கம் திலீபன் 3203 விருப்பு வாக்குகளைப் பெற்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் முதல் முறையாக புதிய உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதனை முன்னிட்டு அவரின் வீட்டின் முன்பகுதியில் கட்சி ஆதரவாளர்களினால் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மக்களால் நேரடியாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 25 தமிழர்கள்!!

நடந்து முடிந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 25 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் சார்பில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் :  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கஜன் ராமநாதன், இலங்கை தமிழரசு கட்சி சிவஞானம் சிறிதரன்,எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழமக்கள் ஜனநாயக கட்சி டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சீ.வி. விக்னேஸ்வரன்.

திருகோணமலை : இலங்கை தமிழரசு கட்சி இரா.சம்பந்தன்.

வன்னி : இலங்கை தமிழரசு கட்சி சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், எஸ். ஜெயராஜலிங்கம், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் குலசிங்கம் திலீபன்,

மட்டக்களப்பு : தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), இலங்கை தமிழரசு கட்சி சாணாக்கிய ராகுல், கோவிந்தன் கருணாகரன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எஸ். வியாழேந்திரன்,

கொழும்பு : ஐக்கிய மக்கள் சக்தி மனோ கணேசன்.

கண்டி : ஐக்கிய மக்கள் சக்தி வேலு குமார்

நுவரெலியா : ஐக்கிய மக்கள் சக்தி பழனி திகம்பரம், வேலுச்சாமி ராதாகிருஷ்ணன், எம். உதயகுமார், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன்.

பதுளை : ஐக்கிய மக்கள் சக்தி வடிவேல் சுரேஷ், அரவிந்தகுமார் ஆகியோர் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மக்களால் நேரடியாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.

தேர்தலில் தெற்கில் மக்களால் நிராகரிக்கப்பட்ட 23 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியானது!!

மக்களால் நிராகரிக்கப்பட்ட..

ஸ்ரீலங்காவின் 9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.இந்த தேர்லில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

42 வருட அரசியல் வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு ஆசனம் கூட கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்க விடயமாகும். எனினும் 8ஆவது நாடாளுமன்றத்தில் பிரகாசித்த 23 முன்னாள் எம்.பி க்கள் தற்போதைய 9 ஆவது நாடாளுமன்றத் தெரிவில் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 24 பேருக்கும் இம்முறை நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு இல்லை. இவர்களின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவையாவன..

ரணில் விக்ரமசிங்க,
சதுர சேனரத்ன,
விஜித் விஜயமுனி சோய்சா,
சுனில் ஹந்துன்நெத்தி
ரவி கருணாநாயக்க,
நிரோஷன் பிரேமரத்னே,
லக்ஷ்மன் யப்பா அபேவர்தன,
வஜிரா அபேவர்தன,
நலிந்த ஜெயதிஸ்ஸ,
பாலித தேவரப்பெரும,
சுசந்த புஞ்சினிலமே,
நவின் திசாநாயக்க,
தயா கமகே,
அகிலா விராஜ் காரியவசம்,
அசோகா அபேசிங்க,
ஜே.சி. அலவதுகொட,
பாலித ரங்கே பண்டார,
மனோஜ் சிறிசேன,
தலதா அத்துகோரல,
ஹிருனிகா பிரேமச்சந்திர,
அர்ஜுன ரனதுங்க,
ருவன் விஜேவர்தன,
AHM பௌசி

கொழும்பு மாவட்டத்தில் விரும்பு வாக்குகளை பெற்றவர்கள் விபரம் : மனோ கணேசன் வெற்றி!!

2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான கொழும்பு மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றவர்களின் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

சரத் வீரசேகர – 328,092

விமல் வீரவங்ச – 267,084

உதய பிரபாத் கம்மன்பில – 136,331

விஜேதாஸ ராஜபக்ஷ – 120,626

பந்துல குணவர்தன – 101,644

பிரதீப் சமன் குமார – 91,958

தினேஸ் சந்திர ரூபசிங்க குணவர்தன – 85,287

மதுர விதானகெ – 70,205

பிரேமனாத் சீ தொலவத்த – 69,055

காமினி குலவங்ச லொகுகே – 62,543

சுசில் பிரேமஜயந்த – 50,321

ஜகத் குமார – 47,693

ஐக்கிய மக்கள் சக்தி

சஜித் பிரேமதாஸ – 305,744

எஸ்.எம் மரிக்கார் – 96,916

முஜிபுர் ரஹ்மான் – 87,589

ஹர்ஷ த சில்வா – 82,845

பாட்டாலி சம்பிக்க ரணவக்க – 65,574

மனோ கணேஷன் – 62,091

ஐந்து இலட்சம் விருப்பு வாக்குகளை பெற்று மஹிந்த வரலாற்று சாதனை!!

மஹிந்த ராஜபக்ச..

இலங்கை தேர்தல் வரலாற்றில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் என்ற சாதனையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச படைத்துள்ளார். குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த 5 லட்சத்து 27 ஆயிரத்து 364 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

2015 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 5 லட்சத்து 566 விருப்பு வாக்குகளைப் பெற்றார். பொதுத்தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக இது பதிவானது.

1994ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் சந்திரிக்கா குமாரதுங்க 4 லட்சத்து 64 ஆயிரத்து 588 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 5 லட்சத்து 27 ஆயிரத்து 364 வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னி தேர்தல் மாவட்டம் : முழுமையான முடிவுகள் ஆசனப் பகிர்வுடன்!!

முழுமையான முடிவுகள்..

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த வகையில் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்று முன்தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், நேற்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் வன்னி தேர்தல் தொகுதியில் கட்சிகள் பெற்ற வாக்குகள் வருமாறு.

இலங்கை தமிழரசுக் கட்சி – 69915 வாக்குகள் 3 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 41824 வாக்குகள் 1 ஆசனம்
ஐக்கிய மக்கள் சக்தி – 33700 வாக்குகள் 1 ஆசனம்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 11308 வாக்குகள் 1 ஆசனம்

வவுனியா மாவட்ட செயலகத்தில் பல மணிநேரமாக ஒர் ஆசனத்திற்காக இடம்பெற்ற இழுபறியில் 3203 விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்ற உறுப்பினராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முதன்மை வேட்பாளர் குலசிங்கம் திலீபன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வன்னிமாவட்டத்தின் விருப்பு வாக்குகள். உத்தியோகபூர்வ இறுதி முடிவு.

சாள்ஸ் நிர்மலநாதன் : 25668.

செல்வம் அடைக்கலநாதன்-18563.

வினோநோகராதலிங்கம்-15190.

ரிஷாட் பதியூதீன்-28203

காதர் மஸ்தான்-13454

குலசிங்கம் திலீபன்-3203

வன்னி – வவுனியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி – 22,849
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 18,696
ஐக்கிய மக்கள் சக்தி -11,170
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 4,926
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 3,993
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 4,610

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் -114,674
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -87,371
செல்லுபடியான வாக்குகள் -81,242
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -6,129

வன்னி – முல்லைத்தீவு தேர்தல் தொகுதி.

இலங்கை தமிழரசு கட்சி – 22,492
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 8307
ஐக்கிய மக்கள் சக்தி – 6087
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3694
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2472
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 2155

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 74,510
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 57,180
செல்லுபடியான வாக்குகள் – 50,934
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 6,246

வன்னி – மன்னார் தேர்தல் தொகுதி.

இலங்கை தமிழரசு கட்சி – 20,266
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 12,050
ஐக்கிய மக்கள் சக்தி – 14,632
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 2,086
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,198
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 1,288

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 78,850
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 62,676
செல்லுபடியான வாக்குகள் – 58,652
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4,024

வன்னி தேர்தல் மாவட்டம் : முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகள்!!

வன்னி தேர்தல் மாவட்டம்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் வன்னி தேர்தல் தொகுதியில் கட்சிகள் பெற்ற வாக்குகள் வருமாறு..

இலங்கை தமிழரசுக் கட்சி – 69916 வாக்குகள் 3 ஆசனங்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 41824 வாக்குகள் 1 ஆசனம்
ஐக்கிய மக்கள் சக்தி – 33883 வாக்குகள் 1 ஆசனம்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 11310 வாக்குகள் 1 ஆசனம்

வன்னி – வவுனியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி – 22,849
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 18,696
ஐக்கிய மக்கள் சக்தி -11,170
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 4,926
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 3,993
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 4,610

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் -114,674
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -87,371
செல்லுபடியான வாக்குகள் -81,242
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -6,129

வன்னி – முல்லைத்தீவு தேர்தல் தொகுதி

இலங்கை தமிழரசு கட்சி – 22,492
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 8307
ஐக்கிய மக்கள் சக்தி – 6087
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3694
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2472
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 2155

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 74,510
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 57,180
செல்லுபடியான வாக்குகள் – 50,934
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 6,246

வன்னி – மன்னார் தேர்தல் தொகுதி

இலங்கை தமிழரசு கட்சி – 20,266
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 12,050
ஐக்கிய மக்கள் சக்தி – 14,632
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 2,086
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,198
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 1,288

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 78,850
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 62,676
செல்லுபடியான வாக்குகள் – 58,652
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4,024

வவுனியா தேர்தல் தொகுதி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்!!

வவுனியா..

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் வவுனியா தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, இலங்கை தமிழரசு கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 22,849
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 18,696
ஐக்கிய மக்கள் சக்தி – 11,170
தமிழர் சமுக ஐனநாயக கட்சி – 6,758
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 4,926

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தல் : முல்லைத்தீவு தேர்தல் முடிவுகள்!!

முல்லைத்தீவு..

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் முல்லைத்தீவு தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, இலங்கை தமிழரசு கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 22,492
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 8,307
ஐக்கிய மக்கள் சக்தி – 6,087
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3,694
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2,472

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.