லங்கா பிரிமியர் லீக் போட்டிகளை நடத்த தீர்மானம்!!

லங்கா பிரிமியர் லீக்..

லங்கா பிரிமியர் லீக் போட்டிகளை 2020 ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 20ம் திகதி நடத்த முடியும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சு அனுமதி தருமாகயிருந்தால் இந்தப்போட்டிகள் நடத்தப்படும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.

இந்தப்போட்டிகள் ஆகஸ்ட் 8ம் திகதி நடைபெறவிருந்தபோதும் கொரோனா காரணமாக பின்தள்ளி வைக்கப்பட்டன.

இந்தநிலையில் சுகாதார அமைச்சு அனுமதி வழங்குமானால் அடுத்த மாத இறுதியில் இந்தப்போட்டிகளை நடத்தமுடியும்.

ஏற்கனவே இந்தப்போட்டிகளில் பங்கேற்க 70 சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் 10 வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களும் இணக்கம் வெளியிட்டிருந்தனர்.

இந்தநிலையில் போட்டிகளுக்கான அனுமதியின் நிமித்தம் சுகாதார அமைச்சுடன் சந்திப்பு ஒன்று நடத்தப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மேலாளர் எஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தப்போட்டிகளில் கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ளை, யாழ்ப்பாணம் அணிகள் பங்கேற்கவுள்ளன.

ஒவ்வொரு அணியும் 6 சர்வதேச வீரர்களை இணைத்துக்கொள்ளுமாறு கேட்கப்படும். இதேவேளை போட்டிகள் ஆர் பிரேமதாச, ரங்கிரி தம்புள்ளை, பல்லேகல்ல, சூரியவேவ ஆகிய மைதானங்களில் நடத்தப்படவுள்ளன.

கட்டாரில் சிக்கியிருந்த 55 பேர் நாடு திரும்பினர்!!

55 பேர் நாடு திரும்பினர்..

வெளிநாட்டிலிருந்து இலங்கையர்கள் உட்பட பயணிகள் 55 பேர் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர். கட்டாரிலிருந்து QR 668 எனும் விமானம் மூலம் அதிகாலை 1.30 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

வெளிநாடுகளுக்கு சொந்தமான கப்பல்களில் சேவையாற்றிய இலங்கையர்கள் 47 பேரும், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவராலயங்களில் பணியாற்றும் 02 குடும்பங்களை சேர்ந்த அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் 08 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த இவ்விமானப் பயணிகள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மகனை மீட்டுத்தருமாறு கோரி சிறீதரனிடம் கண்ணீர்விட்ட தாய்!!

கண்ணீர்விட்ட தாய்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிறீதரனிடம் மகனை மீட்டுத்தருமாறு கோரி தாய் ஒருவர் க ண்ணீர்விட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

இன்று இரவு கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிறீதரனிடம் அதே பகுதியை சேர்ந்த தாயொருவர் தனது 17 வயது மகனை மீட்டுத்தருமாறு கோரி பிரச்சாரக் கூட்டத்தில் க ண்ணீர் விட்டு க தறியுள்ளார்.

கடந்த வருடம் சாதாரண பரீட்சைக்கு தோற்றிவிட்டு குடும்ப கஸ்டம் காரணமாக முந்திரிகை விதைகளை எடுத்து விற்றுவந்த அவர் விற்ற முந்திரிகை விதைக்கான பணத்தினை பெற வீட்டில் இருந்து சென்ற எனது மகனை து ப்பாக்கி ச ன்னங்கள் வைத்திருந்தார் என கு ற்றம் சா ட்டி இரா ணுவத்தினர் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

எவ்வித ஆதாரங்களும் அவர்களிடம் இல்லை. வீட்டில் இருந்து காசு வாங்குவதற்காக சந்திக்கு சென்ற எனது மகனிடம் எவ்வாறு புதிய து ப்பாக்கி சன்னங்கள் வந்தது?

இவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள விடயம் எனது ஒரே ஒரு மகனை கடந்த 42 நாட்களாக சிறையில் விட்டு விட்டு மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றோம்.

எனவே அவரை எப்படியாவது நீங்கள் தான் மீட்டுத்தர வேண்டும் அவருடன் சேர்த்து மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளார்கள் என க ண்ணீர் விட்டுக் க தறி உள்ளார்.

குறித்த கைது விடயத்திற்கான சட்டவிடயங்களுக்கு தான் உதவுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிறீதரன் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் மா ணவர்களை து ஷ்பிர யோகம் செ ய்த ஆ சிரியர் தொடர்பில் வெளியான பல தகவல்கள்!!

கொழும்பில்..

கொழும்பில் மேலதிக வகுப்பு நடத்து நோக்கில் சி றுவர்களை து ஷ்பிரயோ கம் செ ய்தமை தொ டர்பில் கை து செய்யப்பட்ட ஆ சிரியரிடம் மேற்கொள்ளப்பட்ட வி சாரணைக்கமைய பல்வேறு தகவல்கள் க ண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரால் 16 வ யதிற்குட்பட்ட ஆ ண் பி ள்ளைகளே து ஷ்பிரயோ கத்திற்கு உ ட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த ஆ சிரியரால் து ஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட 3 மா ணவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலதிக வகுப்பு மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஈடுபடும் சந்தே நபர் அதன் ஊடாக அடையாளம் காணும் மா ணவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

வீட்டில் பல மா ணவர்களை அவர் து ஷ்பிர யோகத்திற்குட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் ஆசிரியரின் வீட்டில் மீட்கப்பட்ட பல பு கைப்படங்கள் து ஷ்பிரயோ கத்தின் போது எ டுக்கப்பபட்டதாகும். இவர் தொடர்பில் மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடல் நீர் நிலப்பகுதிக்கு வரும் சாத்தியம் : விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!!

சிவப்பு எச்சரிக்கை..

இலங்கையின் வானிலை தொடர்பில் வானிலை அவதான மையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று ஜூலை 28ஆம் திகதி மாலையிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என வானிலை அவதான மையம் எதிர்வுகூறியுள்ளது.

இந்தநிலையில் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்தப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

களுத்துறையிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்தை அண்டிய பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் நீர் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

கொழும்பில் தப்பிச் சென்ற கொரோனா நோயாளி பயணித்த சைக்கிளுக்கு நடந்தது என்ன?

கொரோனா நோயாளி..

கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி அங்கொடையில் திருடிய சைக்கிளை பெற்ற நபர் இதுவரையில் பொலிஸ் நிலையத்தில் சரணடையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நோயாளி தான் திருடிய சைக்கிள் தொடர்பில் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. அந்த சைக்கிளை யாரோனா ஒருவர் பொறுப்பேற்றுள்ளார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த சைக்கிளில் கொரோனா பரவும் அளவிற்கு கிருமி இல்லை என சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார். இதனால் சைக்கிள் தொடர்பில் அ ச்சம் அடையத் தேவையில்லை. எனினும் சைக்கிள் பெற்றுக் கொண்ட நபரை கண்டுபிடிப்பது அவசியம் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது ஓரளவிற்கு குறைவடைந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று : உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

கொரோனா தொற்று..

கொரோனா வைரஸை எதிர்த்து உலகம் எவ்வளவு முயற்சி செய்தாலும் முன்னே நீண்ட ஒரு கடினமான பாதை இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.

கொரோனா என்பது இதுவரை தமது அமைப்பால் அறிவிக்கப்பட்ட மிகக் கடுமையான உலகளாவிய சுகாதார அவசரநிலை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வைத்திய கலாநிதி டெட்ரோஸ் அத்தனொம் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்தில் உலக சுகாதார நிறுவனம் தமது அவசரக்குழுவை கூட்டி கொரோனா தொடர்பில் மறு ஆய்வை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தினால் ஐந்து தடவைகள் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டன. இரண்டு தடவைகள் எபோலா பரவல்கள், ஜிகா, போலியோ மற்றும் பன்றிக்காய்ச்சல் ஆகிய சந்தர்ப்பங்களிலேயே இந்த அவசர நிலைகள் அறிவிக்கப்பட்டன.

எனினும் தற்போதுள்ள நிலை மோசமான ஒன்றாகும். கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 மில்லியன்களை விட அதிகரித்துள்ளது.

650,000 பேர் வரை உ யிரிழந்துள்ளனர் கொரோனா இன்று உலகத்தை மாற்றிவிட்டது. சமூகங்களையும் நாடுகளையும் ஒன்றிணைந்து பின்னர் தவிர்த்து விட்டது. கடந்த ஆறு வாரங்களில் மாத்திரம் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் கொரோனா வைரஸை எ திர்த்து உலகம் எவ்வளவு முயற்சி செய்தாலும் முன்னே நீண்ட ஒரு கடினமான பாதை இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாயவை நெகிழ வைத்த இஸ்லாமிய சிறுமி!!

நெகிழ வைத்த இஸ்லாமிய சிறுமி..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சிறுவர்கள் இருவர்கள் நெகிழ வைத்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்த போது வெவ்வேறு இரு சந்தர்ப்பங்களில் இது இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியை ஓவியமாக வரைந்த சிறுவன் அதனை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி புகைப்படம் ஒன்று எடுத்துக் கொண்டுள்ளார்.

இதேவேளை, ரிதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மற்றுமொரு பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி சென்றிருந்த போது, இஸ்லாமிய சிறுமி ஒருவர் ஜனாதிபதியை ஓவியமாக வரைந்து படத்தை வழங்கியிருந்தார்.

அதனை மகிழ்ச்சியடன் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த சிறுமியுடனும் புகைப்படம் ஒன்றையும் எடுத்துள்ளார். சிறுவர்களின் புகைப்படங்களையும் ஜனாதிபதி தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்!!

விபத்தில் ஒருவர் மரணம்..

வவுனியா பறண்நட்டகல் பகுதியில் இன்று (28.07.2020) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து ஓமந்தை பக்கமாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் சிகிச்சை பயனின்றி மரணமடைந்துள்ளார்.

விபத்தினால் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் குடைசாய்ந்துள்ளதுடன் அதன் சாரதி சிறுகாயங்களிற்கு உள்ளாகினார். சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் இரு கட்சியினருக்கிடையில் மோ தல் : நால்வர் வைத்தியசாலையில்!!

இரு கட்சியினருக்கிடையில்..

வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் நேற்று (27.07.2020) இரவு றிசாட் பதியூதீன் மற்றும் மஸ்தான் ஆகியோரது ஆதரவாளர்களிற்கிடையில் இ டம்பெற்ற மோ தலில் 4 பேர் காbயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மஸ்தானின் ஆதரவாளர்கள், செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரகூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு சாளம்பைக்குளம் பகுதியில் ஒருவரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றிருந்தோம்.

இதன்போது அங்குவந்த முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் ஆதரவாளர்கள் த ம்மீது தா க் கு த ல் ந டாத்தினர். இதனால் தமது ஆதரவாளர்கள் 6 பேர் கா யமடைந்துள்ளதுடன், த மது வா கனங்களின் க ண்ணாடிகளும் உ டைக்கப்பட்டதாக தெ ரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த றிசாட் பதியூதீனின் ஆதரவாளர்கள் தமது கிராமத்தில் அரசியல்வாதிகளின் சுவரொட்டிகள் எவையும் ஒட்டுவதற்கு தாம் அனுமதிப்பதில்லை என்றும் இது கிராமத்தில் வசிக்கும் மக்களின் முடிவாக இருக்கும் நிலையில்,

மஸ்தானின் ஆதரவாளர்கள் கிராமத்திற்குள் வருகைதந்து சுவரொட்டிகளை ஒட்டமுனைந்ததாகவும், அதனை தடுக்கமுற்பட்டபோது த ம்மீது தா க் கு த ல் மே ற்கொண்டதாகவும் தெரிவித்தனர். இதேவேளை தமது கிராமத்தை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தா க் கு த லி ல் கா யமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த ச ம்பவத்தால் இரண்டு தரப்பின் ஆதரவாளர்களும் சாளம்பைக்குளம் பகுதியில் ஒன்றுகூடியிருந்தனர் இ தனால் ப தட்டமான சூழல் ஏற்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர்,

மற்றும் பூவரசங்குளம் பொலிசார், விசேட அ திரடிப் ப டையினரின் உதவியுடன் பா துகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன் குழப்பநிலையை கட்டுப்படுத்தியிருந்தனர்.

இரவு 12 மணிக்கு பின்னர் நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதுடன், விசேட அ திரடிப டையினர் மற்றும் து ப்பாக்கி ஏந்திய பொலிசார் சாளம்பைக்குளம் பகுதியில் பா துகாப்பு கடமையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் சந்திக்கசென்றதாக தெரிவிக்கப்படுபவரின் குடும்பத்தினர் பா துகாப்பு கருதி பொலிசாரால் அழைத்துச்செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கணவரை சமீபத்தில் விவாகரத்து செய்த இளம்பெண் : நள்ளிரவில் கேட்ட அ லறல் சத்தம்!!

இளம்பெண்..

இந்தியாவில் கணவரை இரண்டு மாதத்துக்கு முன்னர் விவாகரத்து செய்துவிட்டு தந்தை வீட்டில் வசித்து வந்த இளம்பெண் நள்ளிரவில் ம ர்ம ந பர்களால் கொ லை செ ய்யப்பட்டுள்ள சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பாரதி (23). இவருக்கும் சுராஜ் என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் தம்பதிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதன்பின்னர் தனியாக வசித்து வந்த பாரதி இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது தந்தை மற்றும் அத்தை வசிக்கும் வீட்டுக்கு வந்தார்.

அங்கு தனது அத்தையுடன் நேற்று இரவு தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த ம ர்ம ந பர்கள் கூ ரான ஆ யுதத்தால் பாரதியை கு த் தி கொ ன் ற ன ர். அவரின் அ லறல் ச த்தம் கேட்டு அத்தை கண்விழித்து பார்த்த போது பாரதி இர த்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அ திர்ச்சியடைந்தார்.

பின்னர் அவர் சத்தம் போட முயன்ற நிலையில் க த்தினால் கொ லை செ ய்துவிடுவோம் என அவரை மி ரட்டிவிட்டு ம ர்ம ந பர்கள் தப்பி சென்றார்கள்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து பாரதியின் ச டலத்தை கைப்பற்றினார்கள். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கமெரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் பொலிசார் கூறுகையில், இந்த கொ லை தொடர்பில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது, விரைவில் கொ லையாளிகளை கைது செய்துவிடுவோம். அதற்கு பின்னரே இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளிவரும் என தெரிவித்துள்ளனர்.

சகோதரருக்கு கடைசியாக… சடலத்தையாவது மீட்டுத் தாருங்கள் : இளம்பெண் க ண்ணீர் கோரிக்கை!!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு கு ம்பலால் க டத்திச் சென்று கொ லை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் இதுவரை மீட்கப்படாத நிலையில் அவரது சகோதரி கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.

ச டலத்தை அங்குள்ள பாண்டு ஆற்றில் வீசியதாக கைதானவர்கள் தெரிவித்த தகவலை அடுத்து பொலிசார் தே டி வருகின்றனர்.
இதனிடையே, பொலிசாருக்கு எ திராக க டும் விமர்சனங்களை பா திக்கப்பட்ட குடும்பத்தினர் முன்வைத்துள்ளனர்.

க டத்திச் சென்று கொ ல்லப்பட்ட சஞ்சீத் யாதவின் ச டலத்தையாவது பொலிசார் மீட்டுத்தர வேண்டும் எனவும், கடைசியாக தமது சகோதரரின் கைகளில் பாசத்தின் அடையாளமாக தனக்கு ராக்கி கட்ட வேண்டும் என சகோதரி ருச்சி யாதவ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சஞ்சீத் யாதவ் க டத்தப்பட்ட பின்னர் அவரை உ யிருடன் மீட்டுவருவதாக உறுதி அளித்தவர்களுக்கு அதை நிறைவேற்ற முடியாமல் போனது. அவர்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன், எனது சகோதரரின் ச டலத்தையாவது மீட்டுத் தாருங்கள் என்றார்.

ஒரு மாதம் முன்பு திடீரென்று ஒரு நாள், சஞ்சீத் யாதவ் மா யமானார். தொடர்ந்து குடும்பத்தினர் பொலிசாரை நாடியிருந்தும் வி சாரணை ஏதும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், சஞ்சீத் யாதவ் தங்கள் வசம் இருப்பதாகவும், பணயத் தொகையாக 30 லட்சம் பணம் வேண்டும் எனவும் ஒரு கும்பல் கோரிக்கை வைத்தது.

இதனையடுத்து பொலிசாரின் ஆலோசனையின் அடிப்படையில், அந்த கும்பலுக்கு பணம் தர சஞ்சீத் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.

குறிப்பிட்ட நாளில் பொலிசாரின் முன்னிலையில், அந்த கும்பல் பணத்தைப் பெற்றுக் கொண்டாலும், பொலிசாரால் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்க முடியாமல் போனது.

பொலிசாருக்கும் க டத்தல் கு ம்பலுக்கும் தொடர்பு இருப்பதாக பத்திரிகைகள் குற்றம் சாட்டின. இதனையடுத்து, உயரதிகாரிகள் தலையிட்டு, இந்த விவகாரத்தை விரிவாக விசாரிக்க முடிவு செய்தனர்.

தொடர்ந்து, சஞ்சீத்தின் நண்பர் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட நால்வரை பொலிசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பாண்டு ஆற்றில் சடலத்தை பொலிசார் தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த முன்னேற்றவும் இல்லை என தெரியவந்துள்ளது.

திருமண ஆசையில் இருக்கும் பெண்களை குறி வைத்து இளைஞன் செய்து வந்த செயல்!!

இளைஞன் செய்து வந்த செயல்..

தமிழகத்தில், நான் அவன் இல்லை பட பாணியில் திருமணத்திற்கு வரன் பார்க்கும் பெண்களை குறி வைத்து மோ சடியில் ஈடுபட்ட நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லை வாயலைச் சேர்ந்தவர் ராகேஷ்(36). பொறியியல் பட்டதாரியாக இவர் கொடுங்கையூரில் வசிக்கும் இளம் பெண்ணிடம், திருமண தகவல் மையம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஆசை வார்த்தைகள் கூறிய அவர், அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஐந்தரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் 20 சவரன் நகைகளை வாங்கியுள்ளார். அதன் பின், அவரின் நடத்தையில் சந்தேகம் வர, உடனடியாக இது குறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின் இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் ராகேஷ் சர்மா குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது தான், ராகேஷ் சர்மா மீண்டும் இந்த பெண்ணை தொடர்பு கொண்டு, தனக்கு 2 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இது குறித்து அவர் பொலிசாரிடம் தெரிவிக்க, பொலிசாரின் அறிவுறுத்தல் படி மாதாவரம் ரவுண்டான அருகே வந்து பணத்தை வாங்கிக் கொள்ளும் படி அவர் கூறியுள்ளார்.

அதன் படி கடந்த வெள்ளிக் கிழமை இரவு அந்த பெண்ணுடன் சென்ற பொலிசார் மறைந்து நின்றுள்ளனர். அதைத் தொடர்ந்து ராகேஷ் பணம் வாங்க வரும் நேரம் பார்த்து, அவரை பிடித்து கைது செய்தனர். அவனிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், ராகேஷ் சர்மா ஏற்கெனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

கத்தாரில் வேலை பார்த்து வந்த அவர் நான் அவனில்லை படத்தை பார்த்து திருமண மோசடியில் ஈடுபட முடிவு செய்துள்ளார். சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களை குறி வைத்து ஆசை வார்த்தைகள் கூறி வலை வீசி உள்ளார்.

அதில் சிக்கிய பெண்களை ஏமாற்றி நான் அவனில்லை பட பாணியில் பணம், நகைகளை பறித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது போல் சென்னை உட்பட பல பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை வாங்கி மோ சடி செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ராகேஷ் சர்மாவிடம் ஏமாந்த பெண்கள் அவர் குறித்து புகார் அளிக்க வந்தால், அவர்கள் இழந்த பணம் மற்றும் நகைகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

வவுனியாவில பெண்ணொருவர் அதிரடியாக கைது!!

பெண் கைது..

போ தைப்பொருட்களை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வவுனியாவில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, மடுகந்தை விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த தகவலிற்கமைய,

நேற்றையதினம் இரவு வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் சோ தனைகளை மேற்கொண்ட விசேட அதிரடிப்படையினர் போ தைப்பொருளை உடமையில் வைத்திருந்த 25 வயது பெண் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

அவரிடம் இருந்து ஒருகிலோ 5 கிராம் கேரளா க ஞ்சாவும், 2 கிராம் 60 மில்லிகிராம் கெ ரோயின் போ தைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண்ணை பொலிஸார் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 5 மணிநேரம் விசாரணை!!

றிசாட் பதியுதீனிடம்..

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் வைத்து கு ற்றப் புலனாய்வு பிரிவினர் 5 மணிநேரம் வி சாரணைகளை முன்னெடுத்துள்னளனர்.

அவரை இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கடந்தவாரம் அழைப்பாணை விடுத்திருந்தது.

ஈஸ்டர் தா க் கு த ல் தொடர்பிலான விவகாரத்தில், வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட், ஆஜராக வேண்டுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரி இந்த அழைப்பாணையை விடுத்திருந்தார்.

அவரது தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைக்கு அழைப்பதை, தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு தேர்தல் ஆணையாளர் எழுத்துமூலம் அறிவித்திருந்த நிலையிலும், இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, குறித்த விசாரணையை வவுனியாவில் முன்னெடுக்குமாறு றிசாட் தரப்பு தனது சட்டத்தரணிகளூடாக கோட்டை நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதனை ஆராய்ந்த கோட்டை நீதவான், வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிரிவில் இன்று (27.07) ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு பணித்திருந்தார்.

அதற்கமைய இன்றயதினம் காலை 10 மணிக்கு முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆஜராகிய நிலையில் மாலை 3 மணிவரையிலான 5 மணிநேரம் வாக்கு மூலம் பெறப்பட்டது.

இதன்போது அவரது ஆதரவாளர்கள் ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தின் முன்பாக குவிந்திருந்தமையையும், முன்னாள் அமைச்சர் விசாரணை முடிந்து வந்த பின் அவரை வரவேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன்பின் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தனக்கும் ப யங்கரவாத தா க் கு த லு க் கு ம் எந்த சம்மந்தமும் இல்லை. இது ஏற்கனவே விசாரணைகள் மூலம் தெரியப்படுத்தப்பட்டு விட்டது. தற்போது 15 மாதங்கள் கழித்து தேர்தல் நேரத்தில் அரசாங்கம் தன்னை திட்டமிட்டு பழிவாக்குவதாக குற்றம் சாட்டினார்.

9 வருடங்களின் பின்னர் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் பாரியளவு அதிகரித்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. 2011ஆம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வார இறுதியில் 1900 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த வாரத்தில் மாத்திரம் உலக சந்தையில் தங்கத்தின் விலை நூற்றுக்கு 4 வீதமாக அதிகரித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய தங்க கொள்வனவாளர்களை கொண்டாக நாடாக இந்தியா உள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம் தங்க கொள்வனவு நூற்றுக்கு 30 வீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.