நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் பலி!!

விபத்துக்கள்..

நாட்டில் வாகன விபத்துக்களினால் ஏற்படுகின்ற இறப்பு சம்பவம் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர்.

பொரளை, ஹங்வெல்ல, பன்னலை மற்றும் சப்புகஸ்கந்த ஆகிய பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொரளை பகுதியில் நேற்று (28) மாலை இடம்பெற்ற விபத்தில் 42 வயதுடைய பெண்ணொருவர் பலியாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, ஹங்வெல்ல அட்டிகல மீகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததுடன் எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்து சம்பவம் நடந்துள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பதுளையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றும் இதேவேளை, பன்னலை – குளியாப்பிட்டி வீதியின் யக்பில பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார்சைக்கிளொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யக்பில பகுதி​யைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே விபத்தில் பலியாகியுள்ளார்.

இதேவேளை, சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முந்திச்செல்ல முற்பட்ட மோட்டார்சைக்கிள் ஒன்று கொள்கலனொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கடவத்தையைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரிடம் சொல்லாதீர்கள் என்னிடம் சொல்லுங்கள் : மக்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!!

ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை..

போ தைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாராருக்கு வழங்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த தகவல்களை நேரடியாக ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். குருநாகல் மாவட்ட மக்கள் முகம் கொடுத்துள்ள பாரிய பிரச்சினைகளில் ஒன்றாக போ தைப்பொருள் பிரச்சினை காணப்படுகின்றது.

இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியும் எந்த பலனும் கிடைக்கவில்லை என பொதுமக்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் பொரிஸாரிடம் அந்த தகவல்களை வழங்காமல் தன்னிடம் வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வாரத்தில் விடுமுறை!!

அரச பாடசாலைகளுக்கு விடுமுறை..

இந்த வருடம் பொதுத்தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் நான்கு நாட்கள் இலங்கையில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த விடயத்தை அறிவித்துள்ளார். அந்த வகையில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4, 5, 6 மற்றும் 7ஆம் திகதி வரை பாடசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் 11, 12, 13ஆம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கடந்த 27ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும் ஏனைய தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள 11, 12, 13ஆம் தர மாணவர்களுக்கே தேர்தலை முன்னிட்டு வழங்கப்படும் விடுமுறை பொருந்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியாவில் திருடப்பட்ட 7 சைக்கிள்கள் மீட்பு : இருவர் கைது!!

7 சைக்கிள்கள் மீட்பு..

வவுனியாவில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளதாக வவுனியா கு ற்றத்தடுப்பு பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் திருடப்பட்ட 7 சைக்கிள்களை மீட்டுள்ளதுடன், அதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு உபபொலிஸ் பரிசோதகர் பிரனீத் திஸாநாயக்க தலைமையில், பொலிஸ் சாஜன்களான திஸாநாயக்க (37348), திலீப் (61461), பொலிஸ் கொஸ்தாபல் தயாளன் (91792) ஆகியோர் அடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவத்தில் வவுனியா குகன்நகர் மற்றும், யாழ்.புத்தூர் பகுதியை சேர்ந்த 25,29 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் கொ லை செய்யப்பட்டவருக்கு குசல் மென்டிஸ் வழங்கிய உதவி!!

குசல் மென்டிஸ்..

இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் செலுத்திய வாகனத்தில் மோதுண்டு ஒருவர் உ யிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்களை கண்டுக்கொள்ளாமல் விட்டால் அது பிழையான எடுகாட்டாக மாறிவிடும். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையில் உள்ள ஒப்பந்தங்களுகு்கமைய இவ்வாறான சம்பவத்தில் ஒழுக்காற்று பரிசோதனை நடத்துவதற்காக அதிகாரம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு உள்ளது.

பாணந்துறையில் குசல் மென்டிஸின் வாகனத்தில் மோதுண்டு 64 வயதான நபர் ஒருவரே உ யிரிழந்தார். உ யிரிழந்தவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் வழங்கியுள்ளார். கடந்த 6ஆம் திகதி நீதிமன்றத்தில் வைத்து அவர் இந்த பணத்தை வழங்கியுள்ளார்.

உ யிரிழந்தவரின் இறுதி கிரியை செலவினத்திற்காக 95 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான காணி பரப்பையும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கு குசல் மென்டிஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

வவுனியாவில் கிரவல் அகழ்வதால் குளங்களுக்கான நீர் விநியோகம் தடை!!

கிரவல் அகழ்வதால்..

வவுனியா – கண்ணாட்டி,கணேசபுரம் பகுதியில் கிரவல் அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருவதால் அப்பகுதியை சூழவுள்ள விவசாயம் மேற்கொள்ளும் நான்கு குளங்களுக்கு செல்ல வேண்டிய நீரேந்துப்பகுதிகளுக்கு தண்ணி செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயம் செய்கை மேற்கொள்ள முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும், கிரவல் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இடங்களில் தண்ணி நிரம்பியுள்ளதென்று இன்று அப்பகுதிக்கு ஆய்வு மற்றும் கள விஜயம் மேற்கொண்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த முறை சிறுபோகம் மேற்கொள்வதற்கு குளத்தில் தண்ணீர் இன்மையால் சிறுபோகச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ணாட்டி,கணேசபுரம் கமக்கார அமைப்பு , கிராம அபிவிருத்திச்சங்கம் என்பன இணைந்து கடந்த மாதம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்திருந்தனர்.

இதன் ஆரம்பகட்ட நடவடிக்கையாக இன்று அப்பகுதிக்கு சென்ற வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் , கமநல அபிவிருத்தி தொழிநுட்ப அலுவலகர், வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் கனியவள திணைக்கள அதிகாரிகள் குழுவினர் இணைந்து மேற்கொண்ட கள ஆய்வின் போது அப்பகுதியிலுள்ள குளங்களுக்குச் செல்ல வேண்டிய தண்ணீர் கிரவல் அகழ்வுப்பணியால் தடுக்கப்பட்டுள்ளதாகவும் கள ஆய்வின் போது தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியிலுள்ள 300 ஏக்கர் பகுதியில் 25 தொடக்கம் 30 ஏக்கர் வரையான நிலப்பகுதிகளில் கிரவல் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்குள்ள நான்கு குளங்களுக்குச் செல்ல வேண்டிய தண்ணீருக்கு தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியிலுள்ள விசாயிகள் விவசாய நெற்செய்கைளை மேற்கொள்ள முடியவில்லையென இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட அப்பகுதி அமைப்புக்கள் கடந்த மாதம் அரசாங்க அதிபரைச் சந்தித்து தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றிணைக் கையளித்திருந்தனர்.

இதையடுத்து கள விசாரணைகள் மாவட்ட அரசாங்க அதிபரினால் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிரவல் அகழப்பட்ட குழிகள் ஊடாக கால்வாய் வெட்டி தண்ணீர் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், தொடர்ந்தும் அப்பகுதியில் கிரவல் அகழ்வுப்பணி மேற்கொள்வதற்கு தடை ஏற்படுத்துமாறும், அமைப்புக்கள் கோரியுள்ளனர்.

குறித்த பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட அரசாங்க அதிபர் கிரவல் அகழ்வுப்பணியை நிறுத்துவது எனது முடிவல்ல. இங்கு பார்வையிட்டு அறிக்கை ஒன்றிணை வழங்குமாறு அரசாங்க அதிபர் என்னிடம் பணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊழியர்களுக்கு சம்பளம் தொடர்பில் மகிழ்ச்சியான தகவல்!!

தனியார் ஊழியர்களுக்கு..

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீரவனிவால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைக்கமைய கொரோனா காலத்தில் பணிக்கு வருபவர்களுக்கும் வீட்டில் இருந்து பணியாற்றும் தனியார் பிரிவு ஊழியர்களுக்கும் வழமையை போன்று அவர்களுக்கு சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

14500 ரூபாய் என்ற குறைந்தபட்ச சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படாதென அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. செப்டெம்பர் மாதம் வரை எந்தவொரு பணிகளிலும் ஈடுபடாமல் வீடுகளில் தங்கியிருக்கும் ஊழியர்களுக்கு மாத்திரமே 14500 ரூபாய் சம்பளம் வழங்கப்படவுள்ளதாக ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.

கனடாவில் பிரபல தமிழ் தொழிலதிபர் ஒருவர் மீது து ப்பாக்கிச் சூ டு!!

கனடாவில்..

கனடா ஒன்ராறியோ Pickering பகுதியில் பிரபல தமிழ் தொழிலதிபர் ஒருவர் மீது அவரது வீட்டில் வைத்து து ப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ப டுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை ஐந்து மணிக்கு இடம்பெற்றுள்ளதாகவும், அவரது வீட்டுக்கு வந்த சிலர் அவர் மீது து ப்பாக்கி பி ரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

து ப்பாக்கிச் சூ ட்டை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், ப டுகாயமடைந்துள்ள அவர் அ வசர சி கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் 4 ஆண் ச ந்தேக ந பர்களையும் ஒரு வெள்ளை நிற வாகனத்தையும் காவல்துறையினர் அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த ஒளித் தொகுப்பொன்றை Durham பிராந்திய காவல்துறையினர் வெளியிட்டனர்.

கடற்பரப்புகளில் கடல் அலைகள் மேலெழும்பும் சாத்தியம் : சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை…

நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய காலநிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும்மாத்தறைமாவட்டங்களிலும்சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்தை அண்டிய பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் அலைகள் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

மழை நிலைமை : நாட்டிற்கு வடகிழக்காக, கிழக்காக மற்றும் தென்கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 3.0 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

100 இலங்கையர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய வாய்ப்பு : அந்நாட்டு அரசாங்கம் அறிவிப்பு!!

100 இலங்கையர்களுக்கு..

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான பா துகாப்பு உபகரணங்களை தயாரிக்கும் நடவடிக்கையை இலங்கை ஆடை உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா இணக்கம் வெளியிட்டுள்ளது.

ஆடைத் தொழிற்சாலை சங்கத்தின் கூட்டமைப்பு வெளியிட்ட தகவலுக்கமைய, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொள்ளும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் 100 பேருக்கு அமெரிக்க சந்தையில் நுழைய சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

இந்த திட்டத்திற்காக சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனமான Delloitte Consulting நிறுவனம் நிதி வழங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தனிப்பட்ட பா துகாப்பு உபகரணங்கள், உணவு மற்றும் மருந்து நிர்வாக விதிமுறைகளின்படி தயாரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அவற்றினை இறக்குமதி செய்வதற்காக அமெரிக்காவில் இருந்து சிறப்பு அனுமதி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

-தமிழ்வின்-

நீதிபதி இளஞ்செழியன் இலங்கைக்கு கிடைத்த அதிர்ஷ்டம் : தென்னிலங்கை ஊடகங்கள் புகழாரம்!!

நீதிபதி இளஞ்செழியன்..

நீதிபதி இளஞ்செழியனின் மனிதாபிமான செயற்பாட்டினை பாராட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் நீதிபதி இளஞ்செழியனை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட து ப்பாக்கிச் சூ ட்டில் அவரது மெய்பாதுகாவலரான பொலிஸ் அதிகாரியான ஹேமசந்திர என்பவர் உ யிரிழந்தார்.

குறித்த பொலிஸ் அதிகாரி உ யிரிழந்த தகனம் செய்யப்பட்ட தினத்தன்று அவரது பிள்ளைகள் இருவருக்கும் தான் தந்தையாக இருப்பேன் என நீதிபதி இளஞ்செழியன் வாக்குறுதி வழங்கியிருந்தார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் நீதிபதி, இம்முறையும் பொலிஸ் அதிகாரியின் நினைவுத்தினமான கடந்த 23ஆம் திகதி சிலாபத்தில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.

பிள்ளைகளின் கல்விக்கான தொடர்ந்தும் உதவிகளை மேற்கொண்டு வரும் நீதிபதி அவர்களது போக்குவரத்து வசதிக்காக ஸ்கூட்டர் ஒன்றையும் பொலிஸ் அதிகாரியின் மகளுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.

நீதிபதியின் மனிதாபிமான செயற்பாடு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருந்த நிலையில், சிங்கள ஊடகங்கள் அதனை பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தியில் “இப்படியான ஒரு சிறந்த மனிதன் நாட்டிற்கு கிடைத்த அதிஷ்டம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த கொரோனா நோயாளிகள் : கடவுச்சீட்டு அலுவலகத்தில் சிக்கியதால் நேர்ந்த கதி!!

கொரோனா நோயாளிகள்..

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கடவுச்சீட்டு திணைக்களத்திற்கு சென்ற இருவர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த கொரோனா தொற்றாளர்கள் இருவர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தங்கள் கடவுச்சீட்டினை புதுபிப்பதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு வருகைத்தந்துள்ள சந்தர்ப்பத்தில் புலனாய்வு பிரிவினால் கொஸ்கொட தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இருந்து கடந்த 10ஆம் திகதி இலங்கைக்கு வந்த குறித்த இருவரும் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். கொரோனா தொற்றுக்குள்ளான அவர்கள் இருவரும் ராஜகிரிய தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24ஆம் திகதி தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த பின்னர் சுயதனினமைப்படுத்தலுக்காக அவர்கள் கிளிநொச்சி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நபர்கள் இருவரும் தங்கள் விமான கடவுச்சீட்டினை புதுப்பிப்பதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளனர். புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் சுயாதீன இளைஞர்களின் ஏற்பாட்டில் எழுத்து பயிற்சிப் பட்டறை!!

பயிற்சிப் பட்டறை..

வவுனியா சுயாதீன இளைஞர்களின் ஏற்பாட்டில் எழுதும் கலைஞர்களுக்கான எழுத்துப் பயிற்சிப் பட்டறை நேற்று(27.07.2020) மாலை மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் நிதுஜன் பாலா வளவாளராக கலந்து கொண்டிருந்ததுடன் ஈழத்திலிருந்து இளம் படைப்பாளர்களின் எழுத்துத் திறனை விருத்தி செய்யும் நோக்கில் இடம்பெற்ற இப் பயிற்சிப்பட்டறையில் பெருமளவான இளைஞர் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரின் அதிரடி நடவடிக்கை : மாற்றப்பட்ட காவலரண்!!

காவலரண்..

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் காணப்பட்ட பொலிஸ் காவலரண் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த உத்தரவின் பேரில் வவுனியா புகையிரத நிலைய பிரதான வீதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பண்டாரிக்குளம் செல்லும் பிரதான பாதை ஒடுங்கிய பாதையாக காணப்படுவதுடன் அவ்விடத்தில் அமைந்துள்ள பொலிஸ் காவல் அரணில் பொலிஸார் வாகனத்தினை மறித்து சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவதனாலும் அப்பகுதியில் போக்குவரத்து நேரிசல் ஏற்படுவதாக வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த உடனடியாக செயற்பட்டு குறித்த பொலிஸ் காவலரணை அகற்றி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாதவாறு புகையிரத நிலைய பிரதான வீதியில் மாற்றியமைத்துள்ளார்.

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் மேய்சலுக்கு செல்லும் மாடுகளை ப லியாக்கும் புலி!!

ஓமந்தை நாவற்குளம் பகுதியில்..

வவுனியா, ஓமந்தை நாவற்குளம் பகுதியில் மேய்சலுக்கு செல்லும் மாடுகளை புலி வே ட்டையாடி வருவதாக அப் பகுதி தெரிவித்துள்ளனர். வவுனியா, ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் குடிமனைகளை அண்டியதாக உள்ள சிறிய காட்டுப் பகுதியிக்குள் ஆறு சிறுத்தைப் புலிகள் நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த காட்டுப் பகுதியை அண்மித்தாக மாடுகள் மேய்சலில் ஈடுபடும் போது புலிகள் குறித்த மாடுகளை வேட்டையாடி உணவாக உட் கொள்கின்றன.

ஒரு வருட காலத்தில் 37 மாடுகள் புலிகளினால் இரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மக்கள் சில நாட்களில் ஒரே நாளில் 5 மாடுகள் கூட மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் புலிகளின் நடமாட்டத்தை அவதானிக்க முடிவதாகவும், அவற்றின் அ ச்சுறுத்தலால் தமது கால்நடைகரைள வளர்க்க முடியதாதுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

புலிகள் , யானைகள் நிறைந்த குறித்த காட்டுப்பகுதியில் மிகுந்த அ ச்சத்தின் மத்தியில் நாம் சென்று செய்திகளை சேகரித்திருந்தோம்.

தேசிய அடையாள அட்டை விண்ணப்பதாரிகளுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த 17ஆம் திகதி வரை கிடைத்த விண்ணப்பங்களுக்கு மாத்திரமே தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த 17ஆம் திகதிக்கு பின்னர் இன்றைய தினம் வரை கிடைத்த விண்ணப்பங்களுக்காக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளரின் கையெழுத்துடன் தற்காலிக அடையாள பத்திரம் வழங்கப்படும் என ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான 30 ஆயிரம் விண்ணப்பங்கள் இதுவரை கிடைத்துள்ளன. இவற்றுக்காக தற்காலிக அடையாள பத்திரங்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த தற்காலிக அடையாள பத்திரங்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் எனவும் அங்கிருந்து மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் ஊடாக கிராம சேகவர்களிடம் கையளிக்கப்பட்டு, அவர்கள் அதனை உரிய நபர்களிடம் கையளிப்பார்கள் எனவும் ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.