கம்பளையில் 2 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!!

இரண்டு வயது குழந்தைக்கு..

கம்பளை பம்பரதெனிய பிரதேசத்தில் இரண்டு வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலக்கரத்ன தெரிவித்துள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் சேவை செய்த ஆலோசகரின் மகளுக்கே தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் குழந்தையின் தாய் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 14ஆம் திகதி ஆலோசகருக்கு கொரோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டதனை தொடர்ந்து அவரது குடும்பத்தில் 8 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனை முடிவுகளுக்கமைய குறித்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய இதுவரையில் மத்திய மாகாணத்தில் முழுமையாக 10 கொரோனாா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

10 வயது சிறுமியின் மரணத்தில் சந்தேகம்!

10 வயது சிறுமி..

புத்தளத்தில் 10 வயது சிறுமி ஒருவரின் ம ரணத்தில் ச ந்தேகம் காணப்படுவதாக புத்தளம் வைத்தியசாலை காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த சிறுமி அதிக இரத்தப்போக்கு காரணமாக மரணமடைந்துள்ளார் என புத்தளம் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் குறித்த சிறுமியை அவரது தாயார் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார். தனது மகளை நாகம் சீண்டியதாக வைத்தியர்களிடம் குறித்த தாய் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிறுமிக்கு அதிதீவிர சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. எனினும் சிகிச்சை பலனின்றி சிறுமி உ யிரிழந்துள்ளார். அதிகமான இரத்தப்போக்குதான் சிறுமியின் ம ரணத்திற்கு காரணம் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆனால் சிறுமியின் மரணத்தில் ச ந்தேகம் காணப்படுவதாக புத்தளம் வைத்தியசாலை காவல் துறை புத்தளம் காவல் துறை பிரதான அலுவலகத்திற்கு அறிவித்துள்ளது.

இந்நிலையிலேயே சிறுமியின் ம ரணத்தில் ச ந்தேகம் ஏற்பட்டுள்ளதோடு, சி றுமியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக இன்றைய தினம் அனுப்பிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறுமி ம ரணம் அதிக இரத்தப்போக்கு காரணமாக ஏற்பட்டதா, கொ லை செய்யப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் விசேட வி சாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

T&J Call Taxi

இலங்கை மக்களுக்கு பெரும் ஆபத்தாக மாறிய கொரோனா நோயாளி வெளிப்படுத்திய தகவல்!!

கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உறுதியானவர் ஒருவர் தனது நிலை தொடர்பில் சர்வதேச ஊடகத்திடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

பிரசாத் தினேஷ் என்ற 33 வயதுடைய இளைஞனே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். அவர் இலங்கையின் 206வது கொரோனா நோயாளியாகும்.

தினேஷிற்கு கொரோனா தொற்று உறுதியாகியவுடன் கடற்படையினர் அவரது கிராமத்தை சுற்றிவளைத்ததுடன், அவருடன் தொடர்புடடையவர்களை தனிமைப்படுத்த முயற்சித்தனர்.

அத்துடன் தினேஷினால் 1100 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அதிகாரிகள் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

அரச அதிகாரிகள் அவரை 206 நோயாளி என்றே குறிப்பிட்டு ஊடகங்களில் குற்றம் சாட்டியிருந்தனர். அவரால் 3 கொரோனா கொத்துக்கள் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நோயாளி அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து, கொழும்பில் இருந்து 19 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ஜாஎல பகுதியில் கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்கப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 900 கடற்படையினர் கொரோனா தொற்றுக்குள்ளாகினார்கள்.

எப்படியிருப்பினும், இலங்கையில் ஒரு கு ற்றமாகக் கருதப்படும் போ தைப் ப ழக்கம் அவரை ஒரு ப லிக்கடாவாக்கியதாக தினேஷ் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாத காலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, வீடு திரும்பியவர் சர்வதேச ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும் போது இவ்வாறு கூறியுள்ளார்.

கடற்படையினர் உட்பட இத்தனை பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியதன் பொறுப்பை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

தொற்றுநோய் இலங்கையில் பரவுவதற்கு முன்னர், நாட்டை முழுவதுமாக மூட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். முச்சக்கர வண்டி சாரதியான தினேஷினால் ஒரு வேலையை தேடிக் கொள்ள முடியாமல் போயுள்ளது.

206வது நோயாளியான அவருக்கு ஒருவரும் வேலை வழங்கவில்லை. தென்கொரியாவின் 31வது நோயாளியுடன் அவரை ஒப்பிட்டுள்ளனர்.

அவரால் நாட்டிற்கு பாரிய ஆபத்து ஏற்பட்டு விட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டிருந்தார்.

ஏப்ரல் 5ஆம் திகதி ஒரு கொ ள்ளை சம்பவத்தின் போது அதிகாரிகள் தினேஷை கைது செய்ததாகவும், இதன் போது அவரது காலி காயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காயத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தன் மீது அரச அதிகாரிகள் வீன் ப ழி சுமத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தான் போ தை பொ ருளுக்கு அ டிமையானவன் அல்ல. போ தை பொ ருள் அருந்தும் போதிலும் அதற்குள் அ டிமையாகவி ல்லை என அவர் கூறியுள்ளார்.

நான் எனது பிள்ளைகளுக்காகவே வாழ்கின்றேன். என் மீது போ லி கு ற்றச்சாட்டு சுமத்தி எனக்கு அ ச்சத்தை ஏற்படுத்த விட்டார்கள்.

நான் இரண்டு வாரங்களில் சாதாரண நிலைமைக்கு திரும்பிவிட்டேன். நான் போ தை பொ ருளுக்கு அ டிமையாக இருந்தால் என்னால் அவ்வளவு இலகுவாக கொரோனாவில் இருந்து மீண்டிருக்க முடியாது.

கொரோனாவின் பின்னர் நான் போ தை பொ ருள் பாவனையை முழுமையாக நிறுத்தி விட்டேன். எனது பிள்ளைகள் இருவரை பார்த்துக் கொள்ளவே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!!

முகக் கவசம்..

நாத்தாண்டிய, கொட்டராமுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் முகக் கவசம் அணியாமல் பயணித்த 10 பேருக்கு எதிராக மாரவில மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாத்தாண்டிய – கொட்டாரமுல்ல பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான இளைஞர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 25 வயதுடைய அவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்டுள்ளார்.

அவர் அடையாளம் காணப்பட்டுள்ளதனை தொடர்ந்து அவரது தந்தை மற்றும் மகன் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பிரதேசத்தில் மேலும் 10 குடும்பங்களை சேர்ந்த 47 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தற்போதைய ஆபத்தான நிலையில் அந்தப் பகுதியிலுள்ள அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என சுகாதார பரிசோதகரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதனை கருத்திற்கொள்ளாமல் முகக் கவசம் அணியாமல் பயணித்த நபர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய 10 பேர் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாமியார் வீட்டில் வ ரதட்சணை கொ டுமையால் இளம் பெ ண்ணிற்கு நடந்த சோ கம் : அனாதையான கைக் குழந்தை!!

இ ளம் பெ ண்..

க ணவன் மற்றும் மா மியாரின் கொ டுமையை தா ங்கிக் கொ ள்ள மு டியாமல் இ ளம் பெ ண்ணொருவர் தனது ஒரு வயது குழந்தையை த விக்க விட்டுவிட்டு த ற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் இருக்கின்ற விருதாச்சலம் எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோபனா. இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த விஜயகுமாருக்கு திருமணத்தின் போது சோபனாவின் பெற்றோர் 50 சவரன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனம், வீட்டிற்கு தேவையான பொருள்கள் வ ரதட்சணையாக கொ டுத்துள்ளனர்.

இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு வயதுடைய ஆண் குழந்தை உள்ள நிலையில், மாமியார் ஷோபனாவிடம் வ ரதட்சணை கே ட்டு கொ டுமைப்ப டுத்தி உ ள்ளார். மேலும், ஆ பா ச வா ர்த்தைகளாலும் தி ட்டியுள்ளார். இந்த நிலையில், சென்னையில் உள்ள ஐ.டி கம்பெனியில் ரூ.85 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்த விஜயகுமார், கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

தற்போது விஜயகுமார் வீட்டில் இருந்த நிலையில், விஜயகுமாருக்கு ஈரோட்டை சேர்ந்த பெண்ணொருவர், அவரது தொலைபேசிக்கு அழைத்துள்ளார். இதன் போது, ஷோபனா தொலைபேசியை எடுத்து பேசிய நிலையில், விஜயகுமாரின் காதலி என்று பேசத் தொடங்கி சுமார் 45 நிமிட உரையாடலில், விஜயகுமாரின் காதல் விளையாட்டுகளையும் கூறியுள்ளார்.

இதனை அறிந்த சோபனா க டும் வே தனையில் இருந்த நிலையில், இந்த விடயம் குறித்து கணவரிடம் கேட்ட போது, இதனை ம றைக்க வ ரதட்சணை கே ட்டு ம னைவியை அ டித்து உ தைத்து து ன்பு றுத்தியுள்ளார்.

இதனால் க டுமையான வி ரக்தியில் இருந்த சோபனா, தூ க்கி ட்டு தற் கொ லை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதன் பின்னர் தனது தொலைபேசியில் இரண்டு வீடியோக்களை பதிவு செய்து தனது கணவரின் பெண் தொடர்பு மற்றும் மாமியாரின் வ ரதட்சணை கொ டுமை கு றித்து கூ றியுள்ளார்.

மேலும், தனது கணவர் த ன்னை அடி க்கும் போ து வீ ட்டுக்குள் சென்று அறையை பூ ட்டி அ டிக்க சொ ல்லி மா மியார் கூ றியதாகவும், தனது ஒரு வயது குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும், தனது அப்பா இ றந்த இ டத்திலேயே தன்னை அ டக்கம் செய்ய வேண்டும் என்றும் வீடியோ பதிவு செய்து உறவினர்களுக்கும், தாய்க்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இரண்டு வீடியோக்களையும் ஆதாரமாக உறவினர்கள் காவல்துறையினரிடம் வழங்கியுள்ளனர். இதன்பேரில், காவல் துறையினர் விசாரணையை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து மேலும், இது போன்ற பிர ச்சனை இருந்தால் பா திக்கப்படும் பெ ண்கள் காவல் நிலையத்தில் வந்து புகா ர் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறையினர் தரப்பில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் 14 வயதுச் சிறுவனை காணவில்லை என பொலிசில் முறைப்பாடு!!

விஜேந்திரன் பிரசாத்..

வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை காணவில்லை என வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, சாம்பல் தோட்டம், தம்பனைபுளியங்குளம் பகுதியில் தனது உறவினர்களுடன் வசித்து வந்த 14 வயதுடைய விஜேந்திரன் பிரசாத் என்ற சிறுவன் நேற்று (15.07) உறவினர் வீட்டில் இருந்து கடைக்கு சென்ற நிலையில் வீடு திரும்ப வில்லை.

இதனையடுத்து குறித்த சிறுவனை இரவு வரை தேடிய உறவினர்களும், அயலவர்களும் சிறுவன் கிடைக்காமையால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் இடம்பெறும் மூன்றாம் கட்ட தபால் மூல வாக்களிப்பு!!

தபால் மூல வாக்களிப்பு..

பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் முப்படையினர், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று (17.07.2020) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியாவில் மாவட்ட செயலகம் , பொலிஸ் நிலையம் , இரானுவ தலமையகம் போன்ற இடங்களில் காலை 8.30 மணி தொடக்கம் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 13ம் திகதி இடம்பெற்றிருந்ததுடன் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் முப்படையினர், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அரச உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களிப்பு இடம்பெற்றிருந்தது.

இன்று (16) மற்றும் நாளையதினம் (17) முப்படையினர், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் ஆகியோருக்கான வாக்களிப்புகள் இடம்பெறுகின்றன.

கோவிட்-19 வைரஸ் அச்சம் காரணமாக முகக்கவசம் அணிந்து வாக்களிப்பில் ஈடுபட்டிருந்தமையினை அவதானிக்க கூடியதாகவிருந்தது.

வவுனியாவில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்!!

ஆடிப்பிறப்பு..

வவுனியா தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப் புலவர் நினைவுச் சிலையடியில் இன்று (16.07.2020) காலை 8.30 மணியளவில் வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் அனுசரணையில் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சோமசுந்தரப் புலவரின் நினைவுரையினை தமிழருவி சிவகுமார் நிகழ்த்தியதுடன் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்களின் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை பாடசாலைப் பாடியதுடன் சோமசுந்தரப் புலவரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் ரவீந்திரன், வெளிச்சம் அறக்கட்டளை அமைப்பின் தலைவர் லம்போதரன்,

வர்த்தக சங்க உறுப்பினர்கள், நகரசபை ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இறுதியில் ஆடிப்பிறப்பை முன்னிட்டு கூழ் வழங்கப்பட்டது.

க டன் தொ ல்லையால் குடும்ப பெ ண் எடுத்த வி பரீத மு டிவு! கதறும் குடும்பம்!!

இந்தியா..

இந்தியாவில் திருவாரூர் மாவட்டத்தில் கடன் தொ ல்லை தா ங்க மு டியாமல் கு டும்ப பெ ண்ணொருவர் த னக்கு தா னே தீ மூ ட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் பேரளம் ஐயனார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி தனலட்சுமி (வயது 35). இவர்கள் இருவருக்கும் அபிநயா என்ற 12 வயது மகளும், மாதேஷ் என்ற 8 வயது மகனும் உள்ளனர். ஐயப்பன் தச்சு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் கடந்த 5 வருடத்திற்கு முன்னதாக சொந்த வீடு கட்டுவதற்காக, தனியார் வங்கி மற்றும் நிதி நிருவனத்திடம் கடன் வாங்கியுள்ளனர். இந்த கடனை மாதம் தோறும் தவணை முறையில் செலுத்தி வந்துள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் தவித்துள்ளனர்.

இதன் காரணமாக அன்றாட செலவிற்கே பணம் இல்லாது பெ ரும் சி ரமத்திற்கு மத்தியில் மாதம் தோறும் பணம் கட்ட இயலாமல் த வித்துள்ளனர். மேலும், கடனை கேட்க வருபவர்களின் நெ ருக்கடியில் இருந்து தப்பிக்க இயலாமல் கணவன் – மனைவி த வித்து வந்துள்ளனர்.

க டன் தொ ல்லையால் ம ன வே தனை அ டைந்த தனலக்சுமி, த னது உ டலில் ம ண்ணெண்ணையை ஊ ற்றி தீ வை த்து தற் கொ லைக்கு மு யன்றுள்ளார். இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் தீ க்கா யத்துடன் சிகிச்சை பெற்று வந்த பெ ண்மணியிடம் வாக்குமூலம் பெற்றனர். இதில், கடன் பணம் கொடுத்தவர்களின் நெ ருக்கடி கா ரணமாக தீ க்குளித்து த ற்கொ லைக்கு மு யன்றதாக தெ ரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் மகளிர் சுய உதவி குழுவில் இருந்து, வங்கி கடன்கள் வரை யாரும் பயனாளர்களை பணம் கே ட்டு தொ ந்தரவு செய்ய கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இந்த சோ கம் அர ங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயம்!!

விபத்தில்..

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா செட்டிக்குளம் பிரதான வீதியின் பாவற்குளம் பகுதியில் இன்று (16.07.2020) மதியம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் விபத்தில் மடுக்கந்தை பகுதியை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செட்டிகுளம் பாவற்குளம் பிரதான வீதியூடாக சென்ற மோட்டார் சைக்கிளினை டிப்பர் முந்திச் செல்ல முற்பட்ட போது மோட்டார் சைக்கிளின் திசை மாறி டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உலுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிலையம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!!

விமான நிலையம்..

விமான பயணங்களை மீண்டும் ஆரம்பிக்கும் வரை, கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர்களில் மூன்றில் இரண்டு வீதமானவர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் விமான நிலையத்திற்குள் பரவுவதை தடுப்பதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் தற்போது கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக பணிக்கு அழைக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவினால் விமான நிலையத்திற்கு பெரிய பிரச்சினை ஏற்படும். இதனால், இதற்கு முன்னர் அரசாங்கம் அறிவித்திருந்தமைக்கு அமைய ஊழியர்களில் மூன்றில் இரண்டு வீதமானவர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்க மீண்டும் தீர்மானித்துள்ளோம்.

15ஆம் திகதி முதல் சாதாரண பயணிகள் விமானங்கள் வருவதில்லை. விமானங்கள் வராமல் ஊழியர்களை பணிக்கு அழைப்பதில் பயனில்லை.

இதனால், பயணிகள் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் வரை குறைவான ஊழியர்களை சேவைக்கு அழைக்க தீர்மானித்துள்ளோம் எனவும் சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார். விமான சேவைகள் நிறுவனத்தில் 4 ஆயிரத்து 200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து வெளியாகியுள்ள தகவல்!!

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது..

தற்காலிகமாக தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகளை அடுத்த வாரம் திறக்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் ஏற்பட்ட கொரோனா தொற்றாளர்களை சரியாக அடையாளம் கண்டு, அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்துள்ளதாக இராணுவ தளபதி மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் அரசாங்கத்திற்கு உறுதிப்படுத்தியுள்ளனர் என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அடுத்த வாரம் பாடசாலைகளை ஆரம்பித்த பின்னர் பரீட்சைகளை சரியான முறையில் நடத்த முடியும் என அரசாங்கம் நம்புவதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

12 வயது சிறுமியை ஒரே மாதத்தில் இரண்டு ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்த தந்தை : அ திர்ச்சி சம்பவம்!!

12 வயது சிறுமி..

கென்யாவில் 12 வயது சிறுமி ஒரு மாத காலத்திற்குள் இரண்டு ஆண்களுடன் பெற்றோர் திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், அதிகாரிகளால் மீ ட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் தந்தை, தலைநகர் நைரோபியின் மேற்கே நரோக் பகுதியில், 51 வயதான ஒருவரை திருமணம் செய்து கொள்ளும்படி க ட்டாயப்படுத் தியுள்ளார்.

ஆனால் அங்கிருந்து த ப்பிய அந்த சி றுமி 35 வயதான நபருக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார். இதனிடையே தகவல் அறிந்து, சி றுவர் உ ரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளால் மீ ட்கப்பட்டுள்ளார்.

கென்யாவை பொறுத்தமட்டில், 18 வயதிற்குட்பட்ட ஒருவரை திருமணம் செய்வது என்பது கு ற்றச்செய லாகும். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வறுமை மற்றும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது கு ழந்தை திருமண வழக்குகளை அதி கரிப்பதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

சில குடும்பங்கள் பல நாட்களாக க டும் ப ட்டினியுடன் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு அல்லது மூன்று மாடுகளை வரதட்சணையாகப் பெறுவதற்கான வாய்ப்பு அமையும்போது, இதுபோன்ற நடவடிக்கைகளில் பெற்றோர்கள் ஈடுபடுவதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

நரோக் கவுண்டியில் வசிக்கும் மாசாய் சமூகத்தினரிடையே வயதுக்குட்பட்ட சி றுமிகளை தி ருமணம் செய்வது வழக்கமாக கண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.

மாசாய் சி றுமிகள் பெ ற்றோர்களால் வருவாய் ஈட்டும் பொருளாகவே கருதப்படுகிறார்கள், மேலும் கா ல்நடைகளுக்கு ஈடாக தந்தையால் தெரிவுசெய்யப்பட்ட ஆ ணுடன் தி ருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள்.

அரசாங்கம் குறித்த பாரம்பரியத்தை முறியடிக்க முயன்று கொண்டிருக்கிறது, ஆனால் தற்போதுள்ள சட்டங்களை சரியாக அமுல்படுத்தாததால் அது இன்னும் ஓரளவு வளர்கிறது. தொடர்புடைய 12 வ யது சி றுமிக்கு வரதட்சணையாக அந்த 51 வயது நபர் நான்கு மாடுகளை வழங்க முன்வந்துள்ளார்.

ஆனால் சி றுமி இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, அவரது ஆண் உறவினர்களால் கடுமையாக அ டிக்கப்ப ட்டார் என உள்ளூர் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய சி றுமி, அந்த திருமணத்தில் இருந்து நான் நான் தப் பித்தேன், ஆனால் குடும்ப உறுப்பினர்களால் த ண்டிக்கப்ப டுவேன் என்ற பயத்தில் என் தந்தையின் வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாததால், திருமணமான 35 வயதுடைய ஒருவருடன் நான் ஓ டிவிட்டேன் என்றார்.

ஆனால் சி றுமியின் தந்தை இந்த தகவல் அறிந்து, சிறுமியை வ லுக்கட்டா யமாக மீட்டு வந்து அந்த 51 வயது நபரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த நிலையிலேயே அதிகாரிகள் தரப்பு சிறுமியை மீ ட்டுள்ளது. அந்த 51 வயது நபர் பொலிசாருக்கு ப யந்து த லைமறைவா கியுள்ளார்.

தற்போது த லைமறைவா கிவிட்ட தந்தை மற்றும் சிறுமியை திருமணம் செய்த இரண்டு நபர்களையும் பொலிசார் தே டி வருகின்றனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கு ற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சி றைக்கு அனுப்பப்படலாம் அல்லது 1 மில்லியன் கென்ய ஷில்லிங் வரை ($ 10,000) அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பூட்டிய வீட்டுக்குள் சட லமாக 30 வயது இளம்பெண் : 15 மணிநேரமாக தொடக்கூட தயங்கிய அதிகாரிகள்!!

பூட்டிய வீட்டுக்குள்…

தமிழகத்தில் பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் ச டலமாக கிடந்ததால் கொரோனா ப யத்தில் அடக்கம் செய்ய அதிகாரிகளும், மக்களும் தயங்கியதால் ப ரபர ப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரியின் மத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் வசித்து வரும் பெண் கவிதா(வயது 30, பெயர் மாற்றப்பட்டுள்ளது). சென்னையில் வேலை செய்து வந்த கவிதா, கடந்த மார்ச் தான் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது.

திருமணமாகி விவாகரத்தானவர் என்பதால் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மத்தூர் பகுதியில் உள்ள சில மருத்துவமனைகளில் கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தார்.

கடந்த சில வாரங்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார், அந்த பெண் உறவினர்கள் யாருடனும் தொடர்பில் இல்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த பெண் வெளியே வரவில்லை.

இதனால் ச ந்தேகம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் பூட்டிய வீட்டுக்குள் காய்ச்சல் அறிகுறியுடன் பெண் இருப்பது குறித்து மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் மருத்துவ அலுவலர்கள் ஆம்புலன்சுடன் வந்து பார்த்த போது அவர் ஏற்கனவே இ றந்து வி ட்டது தெரியவந்தது. சுகாதாரத்துறையினர் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என சளி, ரத்த மாதிரிகளை எடுத்துக் கொண்டனர்.

எனினும் கொரோனா தொற்றின் காரணமாக அப்பெண் இ றந்திருக்கலாம் என நினைத்த அப்பகுதி மக்கள் அடக்கம் செய்ய மறுத்ததுடன் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் சுகாதார மற்றும் வருவாய்த்துறையினர் கொரோனா பீதியால் அந்த உ டலை அ டக்கம் செய்ய தயக்கத்துடன் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பதற்றம் அதிகரித்த நிலையில் காலையிலிருந்து மாலை சடலம் அப்படியே இருந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த மனித நேய மக்கள் கட்சியினர் சுமார் 15 பேர், கவச உடைகளுடன் அப்பெண் அ டக்கம் செய்துள்ளனர்.

வீட்டுக்குள் வரிசையாக கிடந்த 4 ச டலங்கள் : அழகான குடும்பத்துக்கு நடந்தது என்ன?

வீட்டுக்குள் வரிசையாக..

இந்தியாவில் மனைவி மற்றும் இ ரண்டு கு ழந்தைகளின் க ழுத்தை நெ ரித்து கொ லை செ ய்துவிட்டு தா னும் த ற்கொ லை செ ய்து கொ ண்ட க ணவனின் செ யல் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் அமோல் ஜக்தீப் (37). இவர் மனைவி மயூரி (27). இந்த தம்பதிக்கு ஆதித்யா மற்றும் ஆயுஷ் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஹொட்டரில் தொழில் நடத்தி வந்த அமோல் அதிகளவில் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்த முடியாமல் திணறி வந்தார். மேலும் கொரோனா லாக்டவுன் காரணமாக ஹொட்டலை திறக்காததால் தொழிலும் நஷ்டம் அடைந்தது.

இதனால் மிகுந்த ம ன அ ழுத்தத்தில் இருந்த அமோல் நேற்று தனது ம னைவி ம ற்றும் கு ழந்தைகளை க ழுத்தை நெ ரித்து கொ லை செ ய்துவி ட்டு தனது உ றவினர்களுக்கு போன் செய்து கூறினார்.

இதை கேட்டு அ திர்ச்சியடைந்த உறவினர்கள் அவர் வீட்டுக்கு வந்த போது மேலும் அ திர்ச்சியடைந்தனர். காரணம் அமோலும் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டது தெரிந்தது. சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்த நிலையில் நால்வர் ச டலமும் வரிசையாக இருந்தது.

நால்வரின் ச டலத்தையும் கைப்பற்றிய பொலிசார் இது குறித்து வி சாரணை நடத்தி போது க டன் தொ ல்லை கா ரணமாக இம்முடிவை அமோல் எடுத்தது தெரியவந்தது. அழகான மற்றும் அன்பான குடும்பமாக இருந்த நால்வர் உ யிரிழந்தது அந்த பகுதி மக்களை சோ கத்தில் ஆ ழ்த்தியுள்ளது.