கொழும்பிலிருந்து பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்த இளைஞர் உ யிரிழப்பு!!

புகையிரதத்தின் முன் பாய்ந்த..

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞரொருவர் உ யிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தலவாக்கலை மற்றும் கொட்டக்கலை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான சென்கிளையார் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உ யிரிழந்தவர் தலவாக்கலை சென்கிளையார் தோட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் அருள் பிரசாத் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த இளைஞர் த ற்கொ லை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தனியார் பேருந்து மற்றும் வான் நேருக்கு நேர் மோதியதில் நால்வர் காயம்!!

விபத்து..

அம்பாறையில் தனியார் பேருந்து மற்றும் வான் என்பன நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதமுனை பிரதான வீதியில் நேற்று(19.07.2020) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் தனியார் பேருந்து பகுதியளவில் சேதமடைந்ததுடன் வான் முற்றாக சேதமடைந்துள்ளது. இதன்போது வானில் பயணம் செய்த நால்வர் காயமடைந்த நிலையில்,

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தனியார் பேருந்தை செலுத்திய சாரதி கல்முனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

வங்கிகளில் அதிகரித்த வட்டி வீதம் : கண்டுகொள்ளாத இலங்கை மத்திய வங்கி?

அதிகரித்த வட்டி வீதம்..

கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை குறைக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தனியார் வங்கிகள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடன் அட்டை வட்டி நூற்றுக்கு 15 வீதம் வரை குறைப்பதாக அரசாங்கம் அறிவித்த போதிலும், இலங்கை மத்திய வங்கியினால் இதுவரையில் அவசியமான ஆலோசனைகள் வங்கிகளுக்கு வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கிளால் வழங்கப்படும் கடன் அட்டைகளின் வட்டி நூற்று 28 வீதத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடன் வட்டி நூற்று 4 வீதம் குறைந்துள்ள நிலையில் கடன் அட்டையின் வட்டியும் அதனுடன் ஒப்பிட்டு குறைக்க வேண்டும். எனினும் இதுவரையில் அந்த நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இரண்டு மாதங்களாக கடன் தவணையை அறவிடாமல் இருப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை சில நிறுவனங்கள் மாத்திரமே அமுல்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வவுனியா கனகராயன்குளத்தில் யானைகள் அட்டகாசம் : 20 இற்கு மேற்பட்ட பயன்தரு தென்னை மரங்கள் நாசம்!!

கனகராயன்குளத்தில்..

வவுனியா, கனகராயன்குளம் வடக்கு பகுதியில் யானைகளின் அட்டகாசம் காரணமாக 20 இற்கு மேற்பட்ட பயன்தரு தென்னை மரங்கள் அழிவடைந்துள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று (18.07) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கனராயன்குளம் வடக்கு பகுதியில் ஆற்றங்கரையை அண்டியதாக உள்ள மேட்டுக் காணியில் காணப்படும் தென்னந்தோட்டத்திற்குள் இரவு வேளை புகுந்த யானைகள் அங்கு நின்ற பயன்தரு தென்னை மரங்களை முறித்து வீழ்த்தியுள்ளதுடன் அதனை சேதப்படுத்தியும் உள்ளன.

யானைகளின் அட்டகாசம் காரணமாக காய்த்துக் கொண்டிருந்த 20 வரையிலான தென்னை மரங்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அதன் உரிமையாளர், தமது வருமானம் தரும் பயிர்களை யானைகளிடம் இருந்து காப்பாற்ற உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இப்பகுதியில் தொடர்ச்சியாக இரவு வேளைகளில் யானைகளின் நடமாட்டம் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையாரை திருடியவர் சி.சி.டி.வியில் அகப்பட்டார்!!

சி.சி.டி.வி..

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கொமர்சல் பகுதியில் வீடு ஒன்றில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து பிள்ளையார் சிலை ஒன்று சொகுசு கார் ஒன்றில் வந்த இளைஞர் ஒருவரால் திருடப்பட்டு மூன்று நிமிடத்தில் மீண்டும் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் முன்புறம் இருந்த பிள்ளையார் சிலையினை காலையில் பார்க்கும் போது அது இருந்த இடத்திலிருந்து வேறொரு இடத்தில் இருப்பதனை கண்டு வீட்டில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கெமராவினை பரிசோதித்துள்ளனர்.

இதன் போது நபரொருவர் சொகுசு கார் ஒன்றில் நேற்று அதிகாலை 5.27 மணியளவில் வந்து பிள்ளையார் சிலையினை திருடி செல்வதும் அதனை மூன்று நிமிடத்தில் மீண்டும் கொண்டு வந்து வைப்பதும் கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.

இதேவேளை இதற்கு முன்னர் தனது வீட்டருகில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் அது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் கொவிட்-19 விழிப்புணர்வு!!

கொவிட்-19 விழிப்புணர்வு..

நாட்டில் கொவிட்-19 வைரஸ் அ ச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டு வருகின்ற நிலையில் அதனை வடமாகாணத்தில் கட்டுப்படுத்தும் நோக்குடன், நோய் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் ஒன்று வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் “இலண்டன் என்பீல்ட் நாகபூசணி” அம்மன் ஆலயத்தின் நிதி அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டுவரும் குறித்த செயற்பாடானது வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் பொது இடங்கள், அரசஅலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், கடைத்தெருக்கள், மற்றும் முச்சக்கரவண்டிகளில் இவ் விழிப்புணர்வு சுவரொட்டிகள் அண்மையில் காட்சிப்படுத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து யாழ்பேருந்து நிலையப்பகுதி, நல்லூர் ஆலயம்,
மற்றும் மன்னார் பிரதேசசெயலகம், மன்னார் வலயக்கல்வி அலுவலகம், கிளிநொச்சி பொது நூலகம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து யாழ்மாவட்ட மேலதிக அரசஅதிபர் ம.பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசஅதிபர் க.கனகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன்,

யாழ்போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, நல்லூர் பிரதேச செயலாளர் அ.எழிழரசி, கரைச்சி பிரதேச செயலாளர் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் வழங்கிவைக்கப்பட்டது.

அவை வடக்கில் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களில் பொதுமக்கள் அதிகமாக வருகின்ற பகுதிகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் யாழ்ஊடக மன்றத்தினர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

இராணுவத்தில் இருந்த வீரருக்கு மனைவி இ றந்ததாக வந்த தகவல் : ஊருக்கு உடலை பார்க்க வந்த போது ஏற்பட்ட அ திர்ச்சி!!

மனைவி இ றந்ததாக வந்த தகவல்..

தமிழகத்தில் கொ லை செ ய்யப்பட்ட இரா ணுவ வீ ரரின் மனைவி, தாயார் உ டல் அ ழுகியதால் உறவினர்கள் அ திருப்தி அடைந்ததோடு இது தொடர்பில் மாவட்ட ஆட்சியரிடம் பு கார் கொடுத்துள்ளனர்.

சிவகங்கையின் காளையார்கோவில் அருகே முடுக்கூரணியைச் சேர்ந்த இரா ணுவ வீரர் ஸ்டீபனின் மனைவி சினேகா, தாயார் ராஜகுமாரி ஆகிய இருவரையும் ஜூலை 14-ம் திகதி கொ லை செ ய்துவிட்டு 75 பவுன் நகைகளை சி லர் கொ ள்ளையடித்துச் சென்றனர்.

இந்நிலையில் லடாக்கில் பணிபுரியும் இரா ணுவ வீ ரர் ஸ்டீபனுக்கு இது குறித்து தகவல் தரப்பட்ட நிலையில் அவர், இறுதிச் ச டங்கில் பங்கேற்பதற்காக இ றந்தவர்களின் உ டல்கள் பி ரேதப் ப ரிசோ தனைக்கு பிறகு சிவகங்கை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன.

ஸ்டீபன் நேற்று ஊருக்கு வந்ததையடுத்து மருத்துவமனையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இருவரது உ டல்களை எடுத்தபோது அ ழுகிய நி லையில் இ ருந்தது.

இதை பார்த்து ஸ்டீபன் மற்றும் உறவினர்கள் அ திர்ச்சியும், அ திருப்தியும் அடைந்தனர். தொடர்ந்து உ டல்களைச் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர்.

அங்கு கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது ஸ்டீபனின் உறவினர்கள், அரசு மருத்துவமனையில் குளிர்சாதன இயந்திரம் முறையாக இயங்காததால் உ டல்கள் அ ழுகிவிட்டன.

இதுகுறித்து முன்கூட்டியே தெரிவித்திருந்தால், நாங்களே குளிர்சாதன இயந்திரத்திற்கு ஏற்பாடு செய்திருப்போம். இரா ணுவ வீ ரரின் குடும்பத்திற்கே இந்தநிலையா?,’ என்று மாவட்ட ஆட்சியரிடம் ஆதங்கப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர் கூறுகையில், உ டல்கள் அ ழுகியது குறித்து விசாரிக்கப்படும் என்றார். அதைத்தொடர்ந்து சினேகா, ராஜகுமாரி உ டல்களை உறவினர்கள் அ டக்கம் செ ய்தனர். உ யிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் தலா 2 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில் இரா ணுவ வீரரின் ம னைவி, தா யார் கொ லை வழக்கை வி சாரித்து வரும் காளையார்கோவில் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உட்பட 7 பேருக்கு கொ ரோனா இருப்பது தெரியவந்தது. இதனால் வழக்கு வி சாரணையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

திருமணம் ஆன காதலன் குடும்பத்தை ஒரே தொலைபேசி அழைப்பில் கெடுத்த காதலி : பரிதாபமாக இ றந்த மனைவி!!

ஒரே தொலைபேசி அழைப்பில்…

தமிழகத்தில் கணவனின் காதல் விளையாட்டு மனைவிக்கு தெரிந்ததால், அவர் த ற் கொ லை செய்து கொண்ட சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியிர்ந்த நிலையில், காதலி மற்றும் அவரின் மாமியார் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்குமார். இவர் ஷோபனா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் ஷோபனா த ற் கொ லை செய்து கொண்டார். த ற் கொ லைக்கு முன், கணவன் மற்றும் மாமியர் செய்து கொ டுமைக ளை வீடியோவில் சொல்லி, அதை தன் குடும்பத்தினருக்கு அனுப்பியிருந்தார்.

சென்னை ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த விஜயகுமார் வேலையிழந்ததாக கூறப்பட்டது. அந்த வேலை இழந்ததற்கு முக்கிய காரணம் இவர் தான், ஒழுங்காக பணி செய்யாத காரணத்தினால் அந்த நிர்வாகம் இவரை பணியில் இருந்து தூக்கியுள்ளது.

ஆனால், விஜய்குமாரின் அம்மாவோ, இதற்கு எல்லாம் காரணம் இவள் வந்த நேரம் தான் என்று ஷோபனாவை மிகவும் மோசமான வார்த்தைகளால் தி ட்டியுள்ளார்.

இதற்கிடையில், திருமணத்திற்கு முன்பு இருந்தே தன்னுடன் காதல் மொழி பேசி வந்த ஈரோட்டை சேர்ந்த முன்னாள் காதலி அனு என்பவர் விஜய்குமாரை தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது அனு கேட்ட பணத்தை விஜய்குமார் கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஆ த்திரமடைந்த் அனு விஜய்குமார் தன்னிடம் பள்ளிப்பாளையம் சிக்கன் சமைத்து கேட்டது தொடங்கி,

3 முறை கர்ப்பத்தை கலைத்தது வரையிலான அனைத்து காதல் ரகசியங்களையும் மொத்தமாக ஷோபனாவிடம் கூறவே குடும்பத்தில் புயல் வீசியது.

இது குறித்து கேட்ட மனைவி ஷோபனாவை, கூடுதல் வரதட்சனை வாங்கிவரச்சொல்லி விஜய்குமார் அ டி த் து கொ டுமைப்ப டுத்திய நிலையில் இதனால் விரக்தி அடைந்த ஷோபனா, தனது ஒரு வயது மகனை தவிக்க விட்டு தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்டார்.

வரதட்சனை கேட்டு கொ டுமைப்படு த்தியதோடு, அ டி த் து து ன்புறு த்தி ஷோபனாவை த ற் கொ லைக்கு தூ ண்டியதாக ஐ.டி ஊழியர் விஜய்குமார் அவரது தந்தை அன்பழகன், தாய் செல்வராணி ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கை து செய்தனர்.

காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் தலையை கவிழ்ந்தபடி வேகமாக சென்று வேணில் ஏறிய விஜய்குமார் உள்ளிட்ட 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஷோபனாவின் ஒரு வயது ஆண்குழந்தை அவரது விருப்பபடியே அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே விஜய்குமாருக்கு திருமணம் ஆன தகவல் தெரிந்தே அவருடன் ஊர் சுற்றியதோடு, ஷோபனாவுக்கு மனக்குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக பேசி த ற் கொ லைக்கு தூண்டிய காதலி அனுவையும் கை து செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா நகரில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கில் மோதி விபத்து : ஒருவர் காயம்!!

விபத்து..

வவுனியா மணிக்கூட்டு சந்தியடியில் இன்று(17.07.2020) இரவு 9 மணியளவில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வவுனியா புகையிரத நிலைய வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மணிக்கூட்டு சந்தியூடாக கண்டி வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் கண்டி வீதியூடாக பயணித்த முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் இரு வாகனங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிலின் சாரதியான 28 வயது மதிக்கத்தக்க நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானியாவில் வேலையிழந்த இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

லம்போர்கினி கார்..

கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து கஷ்டப்பட்ட இளைஞருக்கு பிரித்தானியாவில் நடந்த gaming contestல் லம்போர்கினி கார் பரிசாக விழுந்துள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் ஷிபு பவுல், இங்கிலாந்தில் பொறியாளராக பணியாற்றி வந்தவருக்கு கொரோனாவால் வேலை பறிபோனது.

இவரது மனைவி Lynette, மருத்துவ தாதியாக பணியாற்றிவரும் இவர் பொழுதுபோக்காக ஒன்லைன் கேம் விளையாடியுள்ளார்.

1999ம் ஆண்டு தொடங்கப்பட்ட Best of the Best என்ற நிறுவனத்தின் ஒன்லைன் கேமிலேயே இவர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

முதலில் இரண்டு முறை தோற்றாலும், மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் ஷிபு தம்பதியினர். தங்கள் வீட்டில் வாசலில் லம்போர்கினி காரை பார்த்தும் பேச்சே வரவில்லை என்கிறார் ஷிபு.

மேலும் ஒரு வருட இன்சூரன்ஸ் மற்றும் பெட்ரோல் செலவும் இலவசமாம், இதுதவிர 20,000 பவுண்ட்ஸ்கள் பணமும் கிடைத்துள்ளதால் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

வவுனியாவில் விபத்து : மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!!

விபத்து..

வவுனியா – கண்டி வீதியில் பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகே இன்று (17.07.2020) இரவு 7.50 மணியளவில் மின்சாரசபை வாகனத்துடன் மீன் ஏற்றி வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கண்டி வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த இலங்கை மின்சார சபையின் வாகனம் இரண்டாம் குருக்குத்தெரு வீதிக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் கண்டி வீதியூடாக தென்பகுதி நோக்கி மீன் ஏற்றிச் சென்ற குளிரூட்டி வாகனம் மின்சாரசபையின் வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மீன்களை ஏற்றி சென்ற குளிரூட்டி வாகனம் பகுதியளவில் சேதமடைந்ததுடன் வாகனத்தின் சாரதிகள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று கண்களுடன் பி றந்த அதிசய கு ழந்தை : வைரலாகும் வீடியோ!!

அதிசய கு ழந்தை ..

ச மூகவலைத்தளங்களில் மூன்று க ண்ணுடன் இருக்கும் கு ழந்தையின் வீ டியோ அ திகமாக ப கிரப்பட்டு வரும் நிலையில், அதன் உ ண்மை என்ன என்பது தெரியவந்துள்ளது.

த ற்போது இருக்கும் கா லகட்டத்தில் ச மூகவலைத்தளங்களில் கொஞ்சம் வி த்தியாசமான வீ டியோ ப கிரப்பட்டால், அது உ டனடியாக வை ரலாகிவிடுகிறது.

அந்த வீடியோ உண்மை தானா? என்பதை எல்லாம் பலர் பார்ப்பதில்லை, அதில் என்ன இருக்கிறதோ, அதை அப்படியே பின்பற்றி ப கிர்ந்து விடுகின்றனர்.

அப்படி ஒரு வீடியோ தான் கடந்த சில நாட்களாக ச மூகவலைத்தளங்களில் வை ரலாகி வருகிறது. அதில் கு ழந்தை ஒன்று மூன்று கண்களுடன் இருப்பது போன்று உள்ளது.

இது குறித்து பி ரபல ஆ ங்கில ஊ டகம் ந டத்திய ஆய்வில், இது உ ண்மையில்லை, வீ டியோ எ டிட்டிங் என்று குறிப்பிட்டுள்ளது. அந்த கு ழந்தையின் வ லது கண்ணும், நெ ற்றிக் கண்ணும் ஒரே மாதிரியான அ சைவுகளை கொண்டுள்ளது.

மூன்றாவது க ண்ணோடு கு ழந்தைகள் பி றப்பது மிகவும் அரிது, இது டி ப்ரோசோபஸ் என்று அழைக்கப்படும் ஒரு அரிய பிறவி கோளாறின் ஒரு பகுதியாக நி கழ்வதாக கூறப்படுகிறது.

வவுனியாவில் முகக்கவசம் அணியாது நடமாடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

முகக்கவசம்..

வவுனியாவில் முகக்கவசங்கள் அணியாமல் வீதிகளில் நடமாடுபவர்கள், உரிய முறையில் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை பின்பற்ற தவறியவர்களுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

வீதிகளில் மோட்டார் சைக்கிள்கள் வாகனம் என்பனவற்றில் பயணிப்பவர்கள் உரிய முறையில் முககவசம் அணிந்து செல்லாதவர்களுக்கு எதிராகவே பொலிஸார் நடவடிக்கைகளை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெருக்கெடுக்க தொடங்கியுள்ளதை அடுத்து சுகாதாரத்துறையினர் மற்றும் பொலிஸார் பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டு யானை தா க் கி தம்பதியினர் பரிதாபமாக ப லி!!

தம்பதியினர்..

புத்தளம், தம்பேயய – ஒக்கம்பிட்டிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற காட்டு யானை தா க் கி வயோதிப தம்பதியினர் உ யிரிழந்துள்ளர்.

70 வயதான கணவரும், 57 வயதான மனைவியுமே இவ்வாறு உ யிரிழந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உ யிரழந்துள்ளனர்.

இந்நிலையில், பி ரேத ப ரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும், சம்பவம் குறித்து மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் பலி!!

வாகன விபத்தில்..

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி, மாவடிச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று(17.07.2020) இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை, மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசிக்கும் 19 வயதுடைய நாஸர் நஜாத் என்ற இளைஞரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

மாவடிச்சேனை பாடசாலை வீதியில் இருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில் மட்டக்களப்பு பகுதியில் இருந்து பொலனறுவை பகுதிக்கு சென்று கொண்டிருந்த கனரக வாகனத்தில் மோதி ஏற்பட்ட விபத்திலே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்துடன் தொடர்புபட்ட வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படவில்லை : பிரதமர்!!

கொரோனா..

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பற்றி கூறி மக்களை தவறாக வழிநடத்த சிலர் தற்போது தேர்தல் மேடையை பயன்படுத்தி வருகின்றனர் எனவும் அப்படியான எந்த அலையும் ஏற்படவில்லை எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கில் இப்படியான பிரச்சாரங்கள் மற்றும் பல்வேறு வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர்.

கந்தகாடு, சேனபுர முகாம்களுடன் சம்பந்தப்பட்ட 533 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. சுகாதார துறையினர், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து அந்த நிலைமையை சிறப்பாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனால், மக்கள் இந்த நிலைமை தொடர்பான தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-