யாழில் வாகனம் பழுதுபார்த்து கொண்டிருந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்!!

யாழில்..

யாழ்.நீர்வேலி பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் இடத்தில் வாகனமொன்றின் சுமை பெட்டி விழுந்ததில் இளைஞரொருவர் நேற்று உ யிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கனரக வாகனங்கள் திருத்தும் இடத்தில் டிப்பர் வாகனமொன்றின் சுமை பெட்டியை ஜக் மூலம் துாக்கிவிட்டு அதன் கீழிருந்து பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது ஜக் நழுவி சுமைப்பெட்டி இளைஞன் மீது விழுந்துள்ளது.

இதன்போது குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளார். சம்பவத்தில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

400 அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து : இருவர் பலத்த காயம்!!

லொறி விபத்து..

ஏறாவூர் பகுதியிலிருந்து நுவரெலியா வழியாக பொகவந்தலாவ பகுதிக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (06.07.2020) காலை 10.30 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாரே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், படுங்காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லொறியில் இருந்த 400 அரிசி மூட்டைகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா!!

இலங்கை..

தமது நாட்டுக்கு வரும் சுற்றுலாத்துறையினரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாத நாடுகளின் பட்டியலில் இலங்கையை, பிரித்தானியா இணைத்துக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரித்தானியா கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையை பாதுகாப்பற்ற நாடாக பட்டியல்படுத்தியுள்ளது.

நேற்று முன் தினம் பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் என்பன தனது நாட்டு பிரஜைகளுக்கா புதுப்பித்து வெளியிட்டுள்ள உலகளாவிய சுற்றுலா அறிவுறுத்தலிலே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி அவுஸ்திரேலியா, தென் கொரியா, மலேசியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகியவை பிரித்தானியர்களுக்கு பயணிக்க பாதுகாப்பான நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எனினும் கொரோனவைரஸை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள இலங்கையை தமது நாட்டவர்களுக்கு சுகாதார ரீதியாக பாதுகாப்பற்ற நாடாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

வவுனியா குருமன்காட்டில் இராணுவ சோதனைச் சாவடி : மக்கள் அசௌகரியம்!!

சோதனைச் சாவடி..

வவுனியா, குருமன்காடு சந்திக்கு அண்மையில் புதிதாக இராணுவ சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தீடீரென்று இன்று காலை குறித்த சோதனை சாவடி இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவ்வீதியால் பயணிக்கும் சில வாகனங்கள் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

சன நடமாட்டம் அதிகமுள்ள குருமன்காடு பகுதியில் இராணுவ சாவடி அமைக்கப்பட்டுள்ளமையால் அவ்வீதி வழியாக பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம்கொடுத்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களுக்கு 6 மாதங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!!

பாடசாலை மாணவர்களுக்கு..

அனைத்து பாடசாலை மாணவர்களின் வெளிபுற செயற்பாடுகளுக்கு எதிர்வரும் 6 மாதங்களுக்கு முழுமையாக தடை விதிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை கல்வி நடவடிக்கைகளுக்கு மாத்திரம் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அனைத்து அதிபர்களுக்கும் அறிவித்துள்ளது.

அதற்கமைய விளையாட்டு போட்டிகள், விவாத போட்டிகள் மற்றும் சாகித்திய போட்டிகள் போன்றவற்றில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் சர்வதேச அகில இலங்கை போட்டிகளில் மாத்திரம் ஈடுபடுவதற்கு பாடாசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

கல்வி ஊழியர்கள் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விடுமுறை பெற்றுக் கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வவுனியாவில் தொலைபேசியை தூக்கிச் சென்ற குரங்கு!!

குரங்கினால்..

வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியபரிபாலகர் ஒருவரின் பெறுமதிமிக்க தொலைபேசியை குரங்கு ஒன்று தூக்கிசென்ற சம்பவம் நேற்று (06.07.2020) இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை வவுனியா வைத்தியசாலைக்குள் நுழைந்த குரங்குகள் அங்கு வைக்கப்பட்டிருந்த தாதியபரிபாலகர் ஒருவரின் தொலைபேசியை தூக்கிச்சென்றுள்ளது.

எனினும் அதனை துரத்திசென்ற நிலையில் மதில் வழியாக பாய்ந்த குரங்கு திருடிய தொலைபேசியுடன் ஏ9 வீதியில் உள்ள மரம் ஒன்றில் ஏறிக்கொண்டுள்ளது.

பல முயற்சிகள் எடுத்த நிலையில் நீண்ட நேரமாகியும் குறித்த குரங்கு தொலைபேசியை கீழே வீசவில்லை.

வவுனியா நகரப்பகுதியில் சிறியான் ரக குரங்குகளின் தொல்லைகள் அதிகரித்து வருவதுடன் வியாபார நிலையங்களிற்குள் செல்லும் அவை அங்கிருக்கும் பொருட்களையும், பணப்பைகளையும், தூக்கிச்செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தரம் 5,11,13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!!

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்..

நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இரண்டாம் கட்டமாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்றையதினம் (06.07.2020) திறக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்திலும் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் தரம் 05, 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் சுகாதார நடைமுறைகளை பேணி (சமூக இடைவெளி , கைசுத்தம் , முகக்கவசம்) நடைபெறுகின்றது.

தரம் 5 முதல் தரம் 11 வரையான மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் நடைபெறவுள்ளதுடன் தரம் 13 மாணவர்களுக்காக காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளரின் பெயரில் பொலிசாருக்கு கடிதம்!!

தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளரின் பெயரில்..

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ஒருவரின் பெயரில் பொலிசாருக்கு எதிராக போடப்பட்ட மொட்டை கடிதம் குறித்து செட்டிகுளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வேட்பாளர் எஸ்.தவபாலன் பெயரில் புளியங்குளம் பொலிசாருக்கு எதிராக செட்டிகுளத்தில் உள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தால் புளியங்குளம் பொலிசார் ஊடாக அழைப்பாணை வழங்கப்பட்டிருந்தது.

குறித்த அழைப்பாணை தொடர்பில் இன்று (05.07) புளியங்குளம் பொலிசாரிடம் சென்று குறித்த வேட்பாளர் கேட்டபோது வவுனியா போலீசிற்கு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியா பொலிசிற்கு சென்ற வேட்பாளரை வவுனியா, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு பொலிசார் அனுப்பியுள்ளனர்.

அங்கு சென்ற பின் செட்டிகுளம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு செல்லுமாறு வேட்பாளரிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு சென்ற வேட்பாளரிடம் அவரது பெயரில் வந்த கடிதம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக வாக்கு மூலம் பெற்ற பொலிசார் குறித்த கடிதத்திற்கும் வேட்பாளருக்கும் சம்மதம் இல்லை என தெரிவித்ததையடுத்து, அவரை விடுவித்துள்ளதுடன், குறித்த கடிதம் தொடர்பான விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவூடாக தலைமன்னார் நோக்கி பயணிக்கும் மிகப் பெரிய ஊர்திகள்!!

தலைமன்னார் நோக்கி..

இலங்கை மின்சார சபையுடன் இணைந்து காற்றாலையால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி காற்றாலைகள் வவுனியா – மன்னார் வீதியூடாக இன்று (05.07.2020) இரவு 9.00 மணியளவில் எடுத்து செல்லப்பட்டது.

மன்னாரில் பொருத்தப்படும் குறித்த காற்றாலைக்கான பாகங்களே இவ்வாறு இரவு நேரத்தில் மிகப்பெரிய ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்டது.

குறிப்பாக வவுனியா – மன்னார் வீதி பல வருடங்களாக குன்றும் குழியுமாக காணப்பட்டு தற்போது வீதி செப்பனிடப்படும் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில் இவ்வாறான பார ஊர்திகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

ஒரே ஒரு கையை அசைத்ததால் பல கோடிகளை இழந்த நமீதா!!

நமீதா..

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு கவர்ச்சி நடிகை வருவார். அவரின் மார்க்கெட் இருக்கும் வரை ரசிகர்கள் பலம் இருக்கும்.

அவர்கள் மார்க்கெட் முடிந்த பிறகு அவர்களும் அரசியல், சின்னத்திரை, வெளிநாட்டு மாப்பிள்ளை என செட்டில் ஆகிவிடுவார்கள்.

அப்படித்தான் நமீதா, அதிமுக-வில் உறுப்பினராக சேர்ந்த போது ஒரு கூட்டத்திற்கு 5 லட்சம், அதுவும் அனைத்து மாவட்டத்திலும் பல கூட்டத்திலும் பங்கேற்க வேண்டும் என ஜெயலலிதா கூறினாராம்.

இதன் மூல பல கோடிகள் நமீதா சம்பாதிக்கும் நிலை இருந்தது, ஆனால், நமீதா ஜெயலலிதா இருக்கும் போதே, மேடையில் எல்லோருக்கும் கை அசைத்தாராம்.

இதை கவனித்த அவர், இனி இவரை கூட்டத்திற்கு வரச்சொல்லக் கூடாது என முடிவு எடுத்து, கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். தற்போது இவர் பிஜேபியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

திருமணமான ஒருநாளில் மனைவியை வேறொரு நபருக்கு விற்ற கணவன் : அதிர்ச்சிக் காரணம்!!

திருமணமான ஒருநாளில்..

பாகிஸ்தானில் திருமணமான ஒருநாளுக்கு பின்னர், கணவன், மனைவியை வேறொரு நபருக்கு விற்றுவிட்டு வந்த சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் Gujranwala பகுதியைச் சேர்ந்த உஸ்மான் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான ஒரு நாள் கழித்து மனைவியை லாகூருக்கு பயணமாக அழைத்து செல்வதாக, மனைவியை உடன் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால், அங்கு உஸ்மான் யாரோ ஒருவருக்கு தன்னுடைய மனைவியை சுமார் 6,600( இலங்கை மதிப்பில் 12,26,593 ருபாய் ) திர்ஹாமிற்கு விற்றுவிட்டு, அங்கிருந்து வந்துள்ளார்.

இதனால், அந்த நபரிடம் மூன்று வாரங்கள் சிக்கியிருந்த அந்த பெண், ஒரு வழியாக அவரிடம் இருந்து தப்பி, தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு வந்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததால், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், உஸ்மான தன்னுடைய மனைவியை திருமணம் சுற்றுப்பயணமாக லாகூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு நபர் ஒருவரிடம் சுமார் 6,600 திர்ஹாமிற்கு விற்றுள்ளார். அதன் பின் அவர் அங்கிருந்து மூன்று வாரங்களுக்கு பின் தப்பி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலு, அந்த பெண்ணின் பெயர் யார்? வாங்கியவர் யார்? இடையில் என்ன நடந்தது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை, தொடர் விசாரணைக்கு பின்னரே அடுத்தடுத்த தகவல்கள் வெளி வரும்.

தங்கையை காதலித்து திருமணம் செய்து விட்டு அவன் இப்படி செய்யலாமா? இளைஞனின் அதிரவைக்கும் வாக்குமூலம்!!

தங்கையை காதலித்து..

தமிழகத்தில் இ ரட்டைக் கொ லை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞன், காதல் திருமணம் செய்து விட்டு, தங்கையுடன் வாழ மறுத்ததால் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை பரும்பு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் (52). இவருடைய மனைவி முத்துப்பேச்சி (42). இவர்களுக்கு விக்னேஷ்ராஜா (21) என்ற மகன் உள்ளார்.

இன்ஜினீயரிங் கல்லூரி மாணவரான இவர், அருகில் இருக்கும் பொட்டர் கிராமத்தை சேர்ந்த செல்வம் மகள் சங்கீதா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இதையடுத்து இந்த தம்பதி கடந்த மாதம் 17-ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மனைவியின் வீட்டில் வசித்த விக்னேஷ்ராஜா தன்னுடைய மனைவியிடம் வரதட்சணை கேட்டது தொடர்பான பி ரச்சனையில், பிரிந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2-ஆம் திகதி இரவில் 3 பேர் கொண்ட கும்பல், சிவகளையில் சென்று விக்னேஷ்ராஜா, அவருடைய உறவினர் அருண் (21), விக்னேஷ்ராஜாவின் தந்தை லட்சுமணன், தாய் முத்துப்பேச்சி ஆகிய 4 பேரை அ ரிவாளால் வெ ட்டியது.

இதில் ப லத்த கா யம் அடைந்த அருண், முத்துப்பேச்சி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலே உ யிரிழந்தனர். ப டுகா யம் அடைந்த விக்னேஷ்ராஜா, லட்சுமணன் ஆகியோருக்கு தீ விர சி கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இ ரட்டைக் கொ லை சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், சங்கீதாவின் அண்ணன் முத்துராமலிங்கம் என்ற ராஜா (24), உறவினர்களான மீனாட்சிசுந்தரம் மகன் முத்துச்சுடர் (21), திருவேங்கடம் மகன் அருணாசலம் (34) ஆகிய 3 பேரும் சேர்ந்து அருண், முத்துப்பேச்சி ஆகியோரை கொ லை செய்ததும், விக்னேஷ்ராஜா, லட்சுமணனை வெ ட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து முத்துராமலிங்கம் உள்ளிட்ட 3 பேரையும் பொலிசார் கைது செய்தனர். கைதான முத்துராமலிங்கம் என்பவர் பொலிசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், என்னுடைய தங்கை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்த விக்னேஷ்ராஜா எங்களுடைய வீட்டில்தான் வசித்து வந்தார்.

எனினும் அவர் சங்கீதாவிடம் வரதட்சணையாக நகைகளை கேட்டு பி ரச்சினை செய்தார். நகைகளை கொடுக்காததால், விக்னேஷ்ராஜா தனியாக அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.

எங்களது சம்மதம் இல்லாமலே காதலித்து திருமணம் செய்து விட்டு, பின்னர் வரதட்சணை கேட்டு பி ரச்சினை செய்து, தங்கையுடன் வாழ மறுத்து பிரிந்து சென்றதால், விக்னேஷ்ராஜாவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டோம்.

இதை தடுக்க முயன்ற அருண், லட்சுமணன், முத்துப்பேச்சி ஆகியோரையும் வெ ட்டினோம். இதில் அருண், முத்துப்பேச்சி ஆகிய 2 பேரும் உ யிரிழந்தாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருமணமான 4 நாட்களில் அடுத்தடுத்து உ யிரிழந்த புதுமணத்தம்பதி!!

புதுமணத்தம்பதி..

திருமணமான 4 நாட்களில் கணவன் மற்றும் மனைவி அடுத்தடுத்து மர்மமான முறையில் உ யிரிழந்து கிடந்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை கசியாபத்தை சேர்ந்தவர் விஷால். இவரும் நிஷா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலை இரு குடும்பத்தாரும் ஏற்கவில்லை.

பின்னர் தொடர் பேச்சுவார்த்தையால் இரு குடும்பத்தாரும் திருமணத்துக்கு சம்மதித்தனர். இதையடுத்து நான்கு நாட்களுக்கு முன்னர் விஷால் – நிஷா திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் தம்பதி மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்.

இந்த நிலையில் பணிக்கு செல்வதாக கூறிவிட்டு நேற்று முன் தினம் விஷால் வெளியில் சென்ற நிலையில் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் ப தறிபோ ன குடும்பத்தார் அவரை தேடினார்கள். அப்போது அங்குள்ள இரயில் தண்டவாளத்தில் விஷால் ச டலமாக கிடந்தார். இதையடுத்து அவரின் சடலத்தை பொலிசார் மீட்டனர்.

இந்த சோ கம் அடங்குவதற்குள் நிஷா நேற்று காலை தனது வீட்டில் தூ க்கில் தொ ங்கிய நி லையில் சட லமாக கண்டெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து இரு குடும்பத்தாரிடமும் பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

திருமணமான நான்கு நாட்களில் புதுமணத்தம்பதி அடுத்தடுத்து உ யிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ப ரபரப் பை ஏற்படுத்தியுள்ளது.

எனக்கு மறுப்பு சொல்லிவிட்டு இன்னொருவருடன் திருமணமா? இளைஞர் செய்த மோசமான செயல்!!

இளைஞர் செய்த..

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவரின் திருமணம் அடுத்த சில நாட்களில் நடக்க இருந்த நிலையில், அவரும் அவரது தந்தையும் திருமண கொண்டாட்டங்களுக்காக நடனமாடிக் கொண்டிருந்திருக்கின்றனர்.

அப்போது திடீரென அங்கு வந்த சிலர் அந்த வீட்டிற்குள் சரமாரியாக து ப்பாக் கியால் சு ட்டுள்ளனர். இதில், ஆன்ச்சல் என்ற அந்த மணப்பெண்ணும் அவரது தந்தை ராஜ்குமாரும் சம்பவ இடத்திலேயே கொ ல்லப்பட,

மணப்பெண்ணின் சகோதரர் காயமடைந்துள்ளார். வி சாரணையில், சாகர் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆன்ச்சலிடம் கேட்டுள்ளார்.

ஆனால் ஆன்ச்சல் அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இந்நிலையில், ஆன்ச்சலுக்கு வேறொருவருடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டதை அறிந்த சாகர் ஆ த்திரமடைந்துள்ளார்.

ஆகவே, அவரும் அவரது நண்பர்கள் ஐவரும் மோட்டார் சைக்கிள்களில் வந்து ஆன்ச்சல் வீட்டாரை து ப்பாக் கியால் சு ட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. து ப்பாக்கி யால் சு ட்டவர்களில் இருவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், சாகர் த லைமறை வாகிவிட்டார்.

மாமியாரும், மனைவியும் தான் என் சா வுக்கு காரணம் : திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளையின் விபரீத முடிவு!!

புதுமாப்பிள்ளை..

தமிழகத்தில் திருமணமான இரண்டு மாதத்தில் மனைவி தன்னை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த கணவர் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார்.

வேலூரை சேர்ந்தவர் அஜய்குமார் (30). இவரும் அர்ச்சனா என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் கடந்த மே மாதம் 8ஆம் திகதி வீட்டுக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். இதன் பின்னர் தனிவீடு வாடகைக்கு எடுத்து காதல் தம்பதி தங்கி வந்தனர்.

திருமணமான மூன்றாவது நாளே அஜய்குமாருக்கு, அர்ச்சனா நடத்தை சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர் செல்போனில் இருந்த சில ஆண்கள் புகைப்படங்களை பார்த்து அது குறித்து ச ண்டை போட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் அர்ச்சனாவுக்கு கர்ப்பபை சிகிச்சை நடந்த நிலையில் தனது தாய் வீட்டுக்கு ஓய்வெடுக்க சென்றார். ஆனால் மனைவி தன்னை விட்டு விலகுவதாக நினைத்த அஜய்குமார் கடந்த ஒரு வாரமாக மாமியார் வீட்டுக்குச் சென்று மனைவியைத் தன்னுடன் வருமாறு அழைத்திருக்கிறார்.

அப்போது முதலில் உன்னுடைய சந்தேகப் பார்வையை மாற்றிக்கொள் என்று அஜய்குமாரை மாமியார் கண்டித்திருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிய அஜய்குமார் நேற்று இரவு முழுவதும் தூங்காமல் புலம்பியதோடு இன்று அதிகாலையில் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

த ற்கொ லைக்கு முன்னர் அஜய்குமார் பதிவு செய்த வீடியோவில், நல்லா வாழ்ந்துகிட்டு இருந்த நேரத்துல அவ அம்மா வீட்டுக்கு போன பிறகு வேற மாதிரி பேசுறா. நம்ம வீட்டுக்குப் போகலாம்னு கூப்பிட்டும் வர மறுத்துட்டாள்.

மாமியாரும் அசிங்க அசிங்கமா பேசுறாங்க. ‘நீ எதுக்கு என் மகள்கிட்ட பேசுற, பிரிஞ்சிடு’ன்னு சொன்னாங்க. என் சாவுக்கு முழுக்க முழுக்க காரணம், என் மனைவி அர்ச்சனாவும், மாமியார் கவிதாவும் தான் என கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்காவின் திருமணம் முடிந்து ஒரு மணிநேரத்தில் உ யிரிழந்த தம்பி : நடந்த விபரீதம்!!

திருமணம் முடிந்து ஒரு மணிநேரத்தில்..

அக்காவின் திருமணம் முடிந்த ஒரு மணி நேரத்தில் தம்பி விபத்தில் ம ரணமடைந்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டன்.

இவரது மனைவி எல்லம்மா. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருந்த நிலையில், இளைய மகன் தமிழரசன்(20) கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தமிழரசனின் அக்காவிற்கு நேற்று காலை அப்பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் காலை 5 மணிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அக்காவின் திருமணம் முடிந்த ஒரு மணி நேரத்தில் தமிழரசன் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் தமிழரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ப லியானார்.

தவலறிந்த அப்பகுதி பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று தமிழரசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அக்கா திருமணம் முடிந்த 1 மணி நேரத்தில் தம்பி இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.