இளம் வயது திருநங்கைகள் தான் குறி : ஆசை வார்த்தை கூறி சொகுசாக வாழ்ந்து வந்த இளைஞன் : அம்பலமான மோசடி!!

திருநங்கைகள்..

தமிழகத்தில் திருநங்கைகளை குறிவைத்து ஏமாற்றி பண மோ சடி செய்த நபர் குறித்த தகவல் வெளியாகி அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் திருநங்கை பிரியங்கா. இவருக்கும் புழல் பகுதியை சேர்ந்த முகமது உசேன் என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

திருநங்கை பிரியங்காவை திருமணம் செய்துகொண்டு வாழ்வதாக ஆசை வார்தைகள் கூறி அவருடன் பழகிவந்த முகமது உசேன் தான் கப்பலில் பணியாற்றுவதாகவும் கூறியுள்ளார்.

பிரியாங்காவின் டெபிட் கார்ட் கைபேசி என அனைத்தையும் முகமது பயன்படுத்திவந்துள்ளார். இதனை பயன்படுத்தி பிரியங்காவின் வங்கி கணக்கில் இருந்து அவ்வபோது 5ஆயிரம் 10ஆயிரம் என 2லட்சத்துக்கும் மேல் பணத்தை உசேன் திருடி சொகுசாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தெரிந்து பிரியங்கா உசேனிடம் விசாரித்த போது பிரியங்காவுடனான தொடர்பை உசேன் துண்டித்துள்ளார். இந்நிலையில் முகமது உசேன் மீது நடவடிக்கை எடுக்ககோரி கடந்த மார்ச் மாதம் பிரியங்கா அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட பொலிசார் சிஎஸ்ஆர் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி அருகே ஸ்ரீவைகுண்டம் பகுதியில் யுவஸ்ரீ என்ற திருநங்கை கடந்த வாரம் மண்ணெனய் ஊற்றிக்கொண்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

த ற்கொ லை தொடர்பான புகைப்படங்கள் திருநங்கைகளின் வாட்ஸ் ஆப் குழுக்களில் பரவியுள்ளது அதை பார்த்தபோதுதான் சென்னை அமைந்தகரை சேர்ந்த திருநங்கை பிரியங்காவை ஏமாற்றிய முகமது உசேன் தூத்துக்குடியில் யுவஸ்ரீயுடன் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து முகமது உசேனையை அமைந்தகரை பொலிசார் மோசடி புகாரின் அடிப்படையில் தூத்துக்குடியில் கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.

இதோடு யுவஸ்ரீ கடன் தொ ல்லையால் த ற்கொ லை செய்து கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, தற்போது முகமதிடம் பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஜோதி வ ன்கொ டுமை செய்யப்பட்டு கொ லையா?

ஜோதி..

ஊரடங்கு காலத்தில் 1200+ கி.மீ தந்தையை சைக்கிளில் அழைத்து சென்ற ஜோதி வ ன்கொ டுமை செ ய்யப்பட்டு கொ ல்லப்பட்டார் என காட்டுத்தீயாய் பரவி வரும் தகவல் உண்மையல்ல என தெரியவந்துள்ளது.

ஜோதியின் தந்தை மோகன் பஸ்வான் குருகிராமில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார். லாக் டவுன் அமல்படுத்தப்பட்ட நேரத்தில் மோகனுக்குக் காயமும் ஏற்பட்டிருக்கிறது.

இதனால், அன்றாட உணவுக்கே வழியில்லாத நிலை. கடும் வறுமையில் வாடிய நிலையில், தந்தையைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்திருக்கிறார் 8ம் வகுப்புப் பயின்று வரும் சிறுமி ஜோதி குமாரி.

இதையடுத்து தங்களிடம் இருந்த சொற்பக் காசை வைத்து அப்பகுதியில் ஒரு சைக்கிளை வாங்கியிருக்கிறார்கள். குருகிராமிலிருந்து சுமார் 1,200 கி.மீ தூரத்தில் பீகாரில் இருக்கும் தங்கள் கிராமத்துக்குத் தந்தையும் மகளுமாகக் கடந்த 10ம் திகதி பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

காயமடைந்த தனது தந்தையை சைக்கிளின் பின்னால் இருக்கையில் அமரவைத்து ஒரு பையுடன் 7 நாள்கள் தொடர்ச்சியாகப் பயணித்துக் கடந்த 16ம் திகதி பீகாரில் இருக்கும் சொந்த கிராமத்தை அடைந்தனர்.

வழியில் கிடைத்த இடத்தில் ஓய்வு, உணவு என இடைவிடாமல் பயணித்து தந்தையைப் பத்திரமாக ஊர் சேர்த்திருக்கிறார் அந்த இரும்பு மனுஷி.

இந்த தகவல் ஊடகங்களில் வெளியாக இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் பாராட்டுகளை பெற்றார் ஜோதி. இந்நிலையில், இந்தப்பெண் வ ன்கொ டுமை செய்யப்பட்டு கொ லை செய்யப்பட்டுள்ளார் என்று இந்தப் பெண்ணின் படத்துடன் பலரும் ட்விட்டரில் பகிர்ந்தனர், அது உண்மையல்ல என தெரியவந்துள்ளது.

அவருடைய பெயரும் ஜோதி என்பதால் தவறாக புகைப்படம் பரவி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. யார் அந்த சிறுமி? மாம்பழங்களைத் தி ருடிய கு ற்றத்துக்காக வ ன்கொ டுமை செய்யப்ப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் இந்த 14வயது சிறுமியான ஜோதி.

இதில் கு ற்றவாளியான அர்ஜூன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கு ற்றத்தில் அர்ஜூனின் மனைவியும் கு ற்றவாளியாகக் கருதப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்று நாட்களாக மாயமான இளம்பெண் தொடர்பில் பெற்றோர் நெகிழ்ச்சி தகவல்!!

இளம்பெண்..

பிரித்தானியாவில் வெய்டன்ஸ்டோன் பகுதியில் மூன்று நாட்களாக மாயமானதாக கூறப்பட்ட இளம்பெண் பாதுகாப்பாக இருப்பதாக பெற்றோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தங்கள் கோரிக்கையை ஏற்று மனமுவந்து உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அவர் குடியிருப்புக்கு திரும்பினாரா? அல்லது அவர் இந்த மூன்று நாட்களும் எங்கே சென்றிருந்தார் உள்ளிட்ட தகவல்களை அவர்கள் வெளியிட மறுத்துள்ளனர்.

இருப்பினும் North East Command Unit பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணையை முன்னெடுப்பார்கள் என நம்பப்படுகிறது. புதனன்று பகல் சுமார் 10.30 மணியளவில் வழக்கமான நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார் 23 வயதான பர்தீப் கவுர் பிளாஹா என்வர்.

வெய்டன்ஸ்டோன், வால்தம் வனப்பகுதி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்த இவர், பொதுவாக முக்கால் மணி நேரத்தில் நடைப்பயிற்சி முடித்து திரும்புவார் என கூறப்படுகிறது.

ஆனால் புதனன்று சென்றவர் மூன்று நாட்களாக குடியிருப்புக்கு திரும்பாத நிலையில் கவலையடைந்த பெற்றோரும் அவரது நண்பர்களும் பொதுமக்கள் உதவ வேண்டும் என்ற கோரிக்கையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

இந்த நிலையிலேயே, பர்தீப் கவுர் பத்திரமாக உள்ளார் என்ற தகவலை அவரது பெற்றோரும் நண்பர்களும் சமூக ஊடகம் வாயிலாக வெளியிட்டுள்ளனர்.

பெ ண் வே டமிட்டு மா ணவியை பின் தொடர்ந்து வந்த இ ளைஞன் செ ய்த மோ சமான செ யல்!!

பெ ண் வே டமிட்டு..

லண்டனில் அ திகாலையில் சா லையில் ந டந்து செ ன்ற பெ ண்ணை பெ ண் வே டத்தில் து ரத்திய ஆ ண் அ வரிடம் த வறாக ந டந்து கொ ண்ட ச ம்பவத்தின் வ ழக்கு வி சாரணை நீதிமன்றத்தில் ந டைபெற்று வ ருகிறது.

இந்த ச ம்பவம் கடந்தாண்டு செப்டம்பர் 20ஆம் திகதி நடந்துள்ளது. 18 வ யதான மா ணவி ஒ ருவர் இ ரவு த னது ந ண்பர்களுடன் வெ ளியில் செ ன்றுவிட்டு அ திகாலை த னது வீ ட்டை நோ க்கி வ ந்து கொ ண்டிருந்தார்.

அப்போ து பெ ண்ணொ ருவர் த ன்னை பி ன் தொ டர்ந்து வ ருவதை அ வர் க ண்டார். த னது வீ டு வ ந்ததும் உ ள்ளே நு ழைய மு யன்ற மா ணவியை அப் பெ ண் கீ ழே த ள்ளிவி ட்டு த வறுதலாக ந டக்க மு யன்றார்.

அப்போ து தா ன் மா ணவிக்கு எ திரில் நி ற்பது பெ ண் இ ல்லை ஆ ண் எ ன தெ ரியவந்து அ திர்ச்சியடை ந்தார். பி ன்னர் அ லறிது டித்த மா ணவி ஒருவ ழியாக அ ங்கிருந்து த ப்பிய மா ணவி பொ லிசில் இ து கு றித்து பு கார் அ ளித்தார்.

பு காரை தொ டர்ந்து பொ லிசார் பெ ண் வே டமிட்டு வ ந்த இ ளைஞனான Mark Brownஐ (30) கை து செ ய்தனர். மே லும் அ வர் பெ ண் வே டத்தில் செ ல்லும் சிசிடிவி பு கைப்படங்களும் வெ ளியாகியுள்ளது.

அ வர் மீ து தொ டர்ந்து நீ திமன்ற வி சாரணை ந டந்து வ ருகிறது.
ச மீபத்திய வி சாரணையின் போ து Mark Brown கூ றுகையில், நா ன் அந் த மா ணவியிடம் கொ ள்ளையடிக் கவே வ ந்தேன், அ வரிடம் த வறுதலாக ந டக்கவில்லை எ ன கூ றினார். தொட ர்ந்து இ ந்த வ ழக்கு வி சாரணை ந டைபெறவுள்ளது.

முன்பின் தெரியாத பெண்ணை வீட்டுக்குள் அனுமதித்த கோடீஸ்வரர் : சில நாட்களில் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கோடீஸ்வரர்..

கேரளாவில் கோடீஸ்வர தொழிலதிபரை சில புகைப்படத்தை வைத்து மோ சடி செய்து ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறிந்த பெண் உள்ளிட்ட நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அடிமலி நகரை சேர்ந்தவர் விஜயன். இவர் தொழிலதிபர் ஆவார். கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி லதாதேவி என்ற பெண் விஜயன் வீட்டுக்கு வந்தார். விஜயனுக்கு முன்பின் அறிமுகம் இல்லாத அவர், விஜயன் உறவினரின் 9.5 செண்ட் நிலம் வாங்குவது தொடர்பாக அவருடன் பேசினார்.

அப்போது விஜயன் அருகில் உட்கார்ந்து கொண்டு இருவரும் சேர்ந்திருப்பது போல லதாதேவி அவருக்கு தெரியாமல் தன் செல்போனில் புகைப்படங்கள் எடுத்து கொண்டார்.

இதன் பின்னர் பிப்ரவரி 4ஆம் திகதி விஜயனுக்கு ஷைஜன் என்பவர் போன் செய்து தான் ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். பின்னர் விஜயனிடம், நீ லதாதேவியுடன் தவறாக நடந்து கொண்டதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.

நான் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் உன் மீது துஷ்பிரயோக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வைப்பேன் என மி ரட்டினார். இதோடு சில புகைப்படங்களை பார்த்து பயந்து போன விஜயன் பணம் கொடுக்க ஒப்பு கொண்டார்.

இதை தொடர்ந்து பென்னி என்ற வழக்கறிஞர் மூலம் ரூ 70,000-ஐ விஜயன் கொடுத்தார். இதன் பின்னர் மீண்டும் இதை சொல்லியே மி ரட்டி ரூ 1.37 லட்சத்தை விஜயனிடம் இருந்து அந்த கும்பல் வாங்கியுள்ளது.

இதோடு சமீபத்தில் விஜயனை நேரில் சந்தித்து அவரிடம் மி ரட்டி ரூ 7 லட்சம் நிரப்பப்பட்ட காசோலையில் கையெழுத்து வாங்கினார்கள். இனியும் அவர்களின் மி ரட்டலை பொறுக்க முடியாத விஜயன் பொலிசில் புகார் கொடுத்தார். அதில், எந்த தவறும் செய்யாத தன்னை மிரட்டி ஒரு கும்பல் பணம் ப றிப்பதாக கூறினார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் இந்த ஏமாற்று வேலையில் ஈடுபட்ட லதாதேவி, பென்னி, ஷைஜன் மற்றும் அவர்களுக்கு உதவிய ஷிமீர் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதே போல லதாதேவியை அனுப்பி புகைப்படம் எடுக்க வைத்து பலரை மிரட்டி அந்த கும்பல் பணம் பறித்தது தெரியவந்தது. மேலும் அந்த கும்பலிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் மா ணவி ஒருவரின் சடலம் மீட்பு!!

சிறுவர் இல்லத்தில்..

வவுனியாவில் சிறுவர் இல்லமொன்றில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் மாணவியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாளைய தினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகள் இல்லத்தினால் இன்று(05.07.2020) மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது குறித்த மா ணவியை நீண்ட நேரம் கா ணாத நிலையில் இல்லத்தில் இருந்தவர்கள் அவரை தே டியுள்ளனர்.

இதன்போது விடுதியின் முதலாவது மாடியில் அமைந்துள்ள குளியலறையில் தூ க்கில் தொ ங்கிய நி லையில் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி மானவடு தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது ராஜி செல்வராணி என்ற 17 வயது மா ணவியே இவ்வாறு ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார். இவர் வவுனியா கோவில்புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்று வருவதுடன்,

இவ்வருடம் இடம்பெறவிருந்த க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்தமை குறிப்பிடத்தக்கது இவர் 2016ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றத்தின் ஊடாக குறித்த இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலியால் கதறி அழுதேன்… காவல் நிலையத்திற்குள் பெண்ணுக்கு நடந்த துயரம்!!

காவல் நிலையத்திற்குள்..

தமிழகத்தில் வி சாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண், பல முறை அ டித்து உ தைத்த சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்தவர் சாந்தி. இவர் எஸ்.பி.ஜெயக்குமாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், நான், தூத்துக்குடி தனியார் பள்ளியில் இந்தி, ஆங்கில ஆசிரியையாக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன்.

எனது அண்ணன் வாசுதேவன், தமிழ்நாடு மின் வாரியத்தில் தூத்துக்குடியில் கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 22-ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு அவருடைய உயரதிகாரிகள் தமிழக முதல்வர் வருகை இருப்பதால் அவசரகால மின்சார பழுதை பார்ப்பதற்கு வருமாறு அழைத்ததன் பேரில் சென்றார்.

ஆனால் காலையில் அவர் விபத்தில் இ றந்ததாக தகவலறிந்து அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு நின்ற பொலிசார் என் அண்ணன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து விட்டதாக கூறினர்.

நாங்கள் விசாரித்தபோது அங்கு அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்றும், என் அண்ணனை ரோந்து பணியில் இருந்த பொலிசார் ஒருவர் பைக்கால் இடித்து, அ டித்து காயப்படுத்தியது தெரியவந்தது.

இதனால் நாங்கள் அ திர்ச்சியடைந்து காவல்துறை அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு உள்துறை அதிகாரிக்கும் நீதி வேண்டும் என்று கேட்டு புகார் அளித்து இருக்கிறோம்.

இந்நிலையில் இந்த புகார் மனுக்கள் மீது காவல் நிலையத்தில் வி சாரணை இருக்கிறது என்று சொல்லி காவலர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டதன் பேரில் ஜூன் 1-ஆம் திகதி காலை 11 மணி அளவில் தென்பாகம் காவல் நிலையம் சென்றேன்.

அங்கிருந்த இன்ஸ்பெக்டர் மிகவும் கோ பப்பட்டு எங்களது புகார் மனுக்களை வாபஸ் வாங்கும்படி வற்புறுத்தினார். நான் மறுத்ததால் அவர் எனது தலைமுடியை பிடித்து இழுத்து உள் அறைக்குள் கொண்டுபோய் தன் கைகளால் முதுகில் பலமுறை ஓங்கி கு த்தினார்.

வ லியால் அ ழுத போ து காலால் என் வயிற்றில் பல முறை எ ட்டி உ தைத்தார். தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் என் மீது பொலிசாரை பணி செய்யவிடாமல் தடுத்து மி ரட்டியதாக பெண் பொலிஸ் ஒருவரிடம் புகார் பெற்று, கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில், என்னை இரவு 8 மணி அளவில் ஆஜர்படுத்தினார்.

அதுவரை என்னை காவல் நிலையத்தில் வைத்து அ டித்து கொ டுமைப்படுத்தினர். எனக்கு குடிக்க தண்ணீர், சாப்பாடு எதுவும் தரவில்லை. அதன் பின்னர் என்னை சிறையில் அடைத்தனர்.

தற்போது எனக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது. பெண் என்றும் பாராமல் என்னிடம் மிருகத்தனமாக நடந்து கொண்ட பொலிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, இது குறித்து விசாரிக்க மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி கணேசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பில் யாசகர் ஒருவரின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான பணம் கண்டுபிடிப்பு!!

யாசகர் ஒருவரின் வங்கிக் கணக்கில்..

கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலம் மேற்கொண்ட விசாரணையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹெ ரோயின் போ தைப்பொ ருள் விற்பனையாளரான மர்வின் ஜானா என்பவருக்கு சொந்தமான பணமே இவ்வாறு யாசகரின் வங்கி கணக்கில் வைப்பிடப்பட்டுள்ளது.

இந்த யாசகரின் பெயரில் அத்திடிய தனியார் வங்கி ஒன்றில் கணக்கு திறந்து பணம் வைக்கப்படப்பட்டுள்ளது. வங்கி புத்தகம் மற்றும் வங்கி அட்டை மர்வினின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாசகரின் கணக்கிற்கு கடந்த 11 மாதங்களில் 1400 இலட்சம் ரூபாய் வைப்பிடப்பட்டுள்ளது. மர்வின் ஜானா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து : 5 கடைகள் எரிந்து நாசம்!!

பாரிய தீ விபத்து..

வெள்ளவத்தையில் இன்று நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தினை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 10 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

W.C சில்வா மாவத்தைக்கு அருகாமையிலுள்ள காலி வீதியிலுள்ள கட்டட தொகுதிகளில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தீ அனர்த்தம் காரணமாக 5 கடைகள் முழுமையாக எரிந்துள்ளதுடன் அருகிலுள்ள வீடொன்று பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, சம்பவ இடத்திலுள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பூநகரி பகுதியில் விபத்து : பல்கலைக்கழக மாணவர் பலி!!

விபத்து..

கிளிநொச்சி- பூநகரி பகுதியில் இன்று (05.07.2020) காலை டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மொறட்டுவை பல்கலைக்கழக இறுதிவருட மாணவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல உடற்கல்வி ஆசிரியர் மோகனின் மகனான மோ.ஆகாஸ் என்ற
பல்கலைக்கழக மாணவரே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவனுமானார்.

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்பப் பெண் மரணம்!!

குடும்பப் பெண்..

தீயில் எரிந்த நிலையில் படுகாயமடைந்து சிகிச்சைபெற்றுவந்த இளம் குடும்ப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (04.07.2020) மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம் 8 ஆம் திகதி வவுனியா மகாறம்பைக்குளம் ரம்பவெட்டி பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றுக்கும் அயல் குடும்பம் ஒன்றுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது இளம் குடும்ப பெண் ஒருவர் எரிந்த நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

29 வயதுடைய பெண்ணே தீயில் எரிந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 25 நாட்களின் பின்னர் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மாமடு பொலிசாரால் சந்தேகத்தின் அடிப்படையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பெண்ணின் மரணம் தொடர்பாக வவுனியா மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளின் பிரகாரம் உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு அயலில் வசிக்கும் பெண் ஒருவர் இவரை தீமூட்டி எரித்ததாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் நபர் ஒருவரும் தன்னிடம் சாட்சியம் வழங்கியுள்ளதாக தெரிவித்த மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர்,

பெண்ணின் மரணத்திற்கு எரிகாயங்களே காரணமாக இருந்துள்ளதாகவும் தெரிவித்தார்.இதேவேளை உயிரிழந்த பெண்ணின் இரு சகோதரர்கள் காணாமல் போனவர்கள் பட்டியலில் உள்ளமை குறிப்பிடதக்கது.

அண்மையில் நாடு திரும்பிய இலங்கையர்களை மீண்டும் விமான நிலையம் வருமாறு அழைப்பு!!

அண்மையில் நாடு திரும்பிய இலங்கையர்களை..

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கைக்கு வந்துவுடன் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்ட பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை தினம் முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 9ஆம் திகதி முதல் மே மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் நாட்டிற்கு வந்த விமான பயணிகளுக்கு தீர்வையற்ற பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்காக நாளை முதல் தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை விமான நிலையத்திற்கு வருகைத்தர வேண்டும்.
இது தொடர்பில் மேலதிக தகவல் பெற 0112263017 என்ற இலக்கத்தில் அழைப்பேற்படுத்தி தகவல் பெற முடியும் என விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூன்று மாதங்களின் பின் பாடசாலை செல்லவுள்ள மாணவர்கள் : சில நெருக்கடிகள் ஏற்படலாம் என தெரிவிப்பு!!

மூன்று மாதங்களின் பின்..

சுமார் மூன்று மாதங்களுக்கு பின்னர் தெரிவு செய்யப்பட்ட வகுப்பு மாணவர்களுக்காக நாளைய தினம் பாடசாலைகள் ஆரம்பமாகின்றன. இந்த நிலையில் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு பாடசாலை நிர்வாகங்களுக்கு கல்வி அமைச்சு உத்தரவிடடுள்ளது.

ஆசிரியர்களுக்கான கடமைகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது. எனினும் வகுப்பு ஒன்றுக்கு 50 மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும் என்ற பணிப்பின்கீழ் அதற்கு அதிகமாக இருக்கும் வகுப்புக்களின் மாணவர்களுக்கு ஒன்றுக்குமேற்பட்ட தடவைகளில் ஒரு ஆசிரியர் ஒரே பாடத்தை கற்பிக்கும் நிலை ஏற்படும் என்று ஆசிரியர்கள் மத்தியில் கருத்துக்கள் எழுந்துள்ளன.

இதேவேளை மாணவர்களின் கைகளை கழுவும் மற்றும் அவசர நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதி போதுமானதாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் இந்த செயற்பாட்டுக்காக மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து பத்தாயிரம் ரூபா முதல் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபா வரை அனுமதித்திருக்கிறது.

எனினும் நோயாளர் அறை ஒன்றை அமைப்பதற்கு நிதியை தேடவேண்டிய நிலை பாடசாலை நிர்வாகங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைவிட முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்போது வகுப்பு அறைகளின் இடவசதிகள் அதற்கு பாதகமாக இருக்கும் என்று ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையருக்கு கிடைத்த அபூர்வ வாழைப்பழம்!!

அபூர்வ வாழைப்பழம்..

இலங்கையில் ஒருவருக்கு அபூர்வ வாழைப்பழம் ஒன்று கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரந்தொலுகம பிரதேசத்தை நபர் ஒருவருக்கே இந்த வாழைப்பழம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் கடந்த வாரம் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்வனவு செய்த வாழைப்பழ சீப்பில் வித்தியாசமான வாழைப்பழம் ஒன்று கிடைத்துள்ளது.

ஒரு வாழைப்பழத்திற்குள் 8 பழங்கள் காணப்பட்டடுள்ளது. இதனை குறித்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு..

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து மூடப்பட்டிருந்த பாடசாலைகள் அனைத்தினதும் கற்றல் நடடிக்கைகள் மூன்று மாதங்களின் பின்னர் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது கட்டத்தின் கீழ் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழல் கடந்த வாரம் முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்திரானந்த தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் 5, 11 மற்றும் 13ஆம் வகுப்பு மாணவர்களின் கற்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 13ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்தர பரீட்சை எழுதவுள்ளனர். இதனால் காலை 7.30 மணி முதல் காலை 3.30 மணி வரை உயர்தர மாணவர்களுக்காக பாடசாலைகள் இயங்கும்.

5ஆம் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு வழமை போன்று காலை 7.30 முதல் 1.30 மணி வரை இயக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த காலத்தை நீடிக்க அவசியம் இருப்பின் அதற்கான அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு மாணவர்கள் பருகுவதற்காக நீர்ப் போத்தல்கள் மற்றும் முகக் கவசம் வழங்குவதன் பொறுப்பு பெற்றோர்களுடையதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கற்கை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அனைத்து ஆசியரியர்களும் காலை 7.30 மணிக்கு பாடசலை வருவது கட்டாயமல்ல. அந்த ஆசிரியர்கள் கற்கவுள்ள காலப்பகுதிக்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் பாடசாலைகளுக்கு வர வேண்டும்.

10 ஆம் மற்றும் 12ஆம் வகுப்பிற்கு அடுத்த கட்டத்தின் கீழ் ஜுலை மாதம் 20ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நான்காவது கட்டத்தி்ன கீழ் ஜுலை மாதம் 27ஆம் திகதி 3, 4, 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கைது!!

குசல் மெண்டிஸ்..

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குசல் மெண்டிஸின் வாகனம் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை, ஹெரென்துடுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில், 74 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குசல் மென்டிஸின் மோட்டார் வாகனம் மோதியாில் குறித்த நபர் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.