கட்டுப்பாட்டு விலையினை மீறி அதிக விலை பொறிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த அரிசி மூடைகளை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் அதிரடியாக செயற்பட்டு முற்றுகையிட்டனர்.
அரசாங்கத்தின் உத்தரவாத விலையையும் விட கூடுதலான விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் அரிசி ஆலைகளை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கையில் இன்று (22.04.2020) மதியம் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி வெளிக்குளம் பகுதியில் அமைந்துள்ள அரிசி ஆலையினை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட சமயத்தில் அதிக விலை பொறிக்கப்பட்ட 400க்கு மேற்பட்ட அரிசி மூடைகளை கைப்பற்றினர்.
சம்பா அரிசி 1கிலோ 90 ரூபா கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் குறித்த அரிசி ஆலையில் காணப்பட்ட 400க்கு மேற்பட்ட அரிசி மூடைகளிலும் 98 ரூபா என பொறிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் காணப்பட்டது.
இதனையடுத்து கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி மூடையில் அதிக விலை பொறிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரினால் குறித்த அரிசி ஆலை உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த அரிசி ஆலை உரிமையாளருக்கு எதிரான வழக்கு வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் மாதம் (05) 26ம்திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் நீதிமன்றில் சான்றுபடுத்துவதற்காக அதிக விலை அச்சிடப்பட்ட சில அரிசி மூடைகளை பாவனையாளர் அதிகார சபையினர் எடுத்துச் சென்றனர்.
மேலும் மிகுதி அரிசி மூடைகளை கட்டுப்பாட்டு விலையினை அரிசி மூடையில் மாற்றம் செய்து மக்களுக்கு விற்பனை செய்யுமாறு பாவனையாளர் அதிகார சபையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் மக்களின் நலனில் கருத்தில் கொண்டு பல வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றமை மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளது.
ம க்கள் ம த்தியில் இர த்ததானம் செய்தல் தொடர்பில் வி ழிப்புணர்வு கு றைவாகவே காணப்படுவதினால் நா டளாவிய ரீ தியில் இர த்த வ ங்கிகளில் கு ருதித் த ட்டுப்பாடு நி லவுகின்றது.
இ தனால் வ ருகின்ற 2 தி னங்களில் வவுனியா மாவட்ட பொ து வை த்தியசாலை இர த்த வ ங்கியில் கா ணப்படும் இரத் தங்கள் முடிவடையவுள்ளமையினால் அ வசரமாக கு ருதியினை வ ழங்குமாறு வவுனியா மாவட்ட பொ து வை த்தியசாலை நி ர்வாகத்தினர் கோ ரிக்கை வி டுத்திருந்தனர்.
இதனையடுத்து இ ளைஞர்கள் ப லர் ஒன் றிணைந்து வவுனியா மாவட்ட பொ து வை த்தியசாலை இர த்த வ ங்கியில் இன்று (22.04.2020) காலை 10.00 மணி தொடக்கம் 12.00 மணிவரையிலான காலப்பகுதியில் இர த்ததானம் வ ழங்கி வை த்தனர்.
இதன்படி O,A,B போன்ற எ திர்ம றை இ ரத்தவகைகளுக்கு கூ டுதல் த ட்டுப்பாடு நி லவுகின்றது. அதனை நி வர்த்தி செ ய்வதற்கு பொதும க்கள் முன்வரவேண்டும் எ னினும் ம க்களிடையே இர த்ததானம் ப ற்றிய ச ரியான வி ழிப்புணர்வு இ ல்லாமையே இ தற்கு காரணம் என வைத்தியசாலை நிர்வாகத்தினர் சு ட்டிக்காட்டியிருந்தனர்.
அம்பாறையைச் சேர்நத புனுவினுர குமாரசிங்க (19) என்ற பல்கலைக்கழக அனுமதிக்காகக் காத்திருக்கும் அம்பாறை டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி மாணவனால் இவ் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டள்ளது.
இந்த இயந்திரம் இன்றைய தினம் புதன்கிழமை (22.04) அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவிடம் அவரது காரியாலயத்தில் வைத்து செயற்படுத்திக் காண்பிக்கப்பட்டதுடன், அவரிடம் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.
அம்பாறை டி.எஸ்.சேனாயநாயக்க கல்லூரியில் உயர்தரம் தொழில்நுட்பப்பிரிவில் கல்வி கற்று கடந்த வருடம் உயர்தரப்பரீட்சை எழுதி பல்கலைக்கழக அனுமதிக்காகக் காத்திருக்கிறார். இந்த இயந்திரத்தினை அலுவலகங்கள், வங்கிகள் போன்ற மக்கள் பாவனையுள்ள இடங்களில் பொருத்திப் பயன்படுத்த முடியும்.
அமெரிக்காவில் குடியேறுவதற்கான கிரீன்காட் முறை 60 நாட்களுக்கு தற்காலிகமாக தடை செய்யப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தொழில்களை இழந்த அமெரிக்கர்களை பாதுகாக்கும் வகையில் இந்த குடிவரவு கட்டுப்பாடு அறிவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக போரை மேற்கொண்டிருந்த நிலையிலேயே கொரொனா வைரஸ் பரவல் ஏற்பட்டது. எனவே இது தொடர்பில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் அதிகமாக பேச வேண்டியிருப்பதாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுஹான் நகரிலேயே வைரஸ் பரவல் ஆரம்பித்ததாக அமெரிக்க புலனாய்வு துறையினர் நம்புகின்றனர். எனினும் புலனாய்வுத்தகவல் என்பதால் அது தொடர்பில் கலந்துரையாட விரும்பவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பிரித்தானியாவில் கடந்த 20வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் தேசிய புள்ளிவிபர அலுவலக தகவல்படி கடந்த 10ஆம் திகதியின் பின்னர் 18500 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இதில் மூன்றாவது காரணியாகவே கொரொனாவைரஸ் தாக்கம் உள்ளது. ஏனைய காரணிகள் காரணமாகவே மரணங்கள் அதிகரித்துள்ளன. நாட்டில் முடக்கல் நிலை அறிமுகப்படுத்தப்பட்டமையால் ஏற்பட்ட மறைமுகமான சுகாதார தாக்கங்களே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிபுணர்களின் கொரோனா வைரஸ் காரணமாகவே இந்த மரணங்கள் அதிகரித்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதால் இலங்கையில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் நாட்டில் சிக்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பற்றி தேடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை சுற்றுலா வல்லுநர்கள் மற்றும் தொழிற்சங்கம் இணைந்து ஆரம்பித்துள்ளது.
அவர்களுடன் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்துள்ளது. கட்டுநாயக்க பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தை நாடு முழுவதும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சுற்றுலா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் கண்டுபிடித்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என சுற்றுலா சங்கம் தெரிவித்துள்ளதோடு, தேடல் நடவடிக்கையும் தொடர்கிறது என தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் ஆபத்து முடிவுக்கு வந்துள்ளதாகவும் வைரஸ் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியான போதிலும் இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் உச்சத்தை நெருங்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் சம்பந்தமாக தற்போதுள்ள நிலைமைக்கு அமைய எவ்வித எதிர்வுகூறல்களையும் முன்வைக்க முடியாது. வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அரச அதிகாரிகள் அறிவித்து மறுநாள் அதிகளவான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
அரசாங்கம் நாட்டில் ஆபத்தான பிரதேசம், கூடுதல் ஆபத்தான பிரதேசம், ஆபத்து குறைந்த பிரதேசம் என வேறுப்படுத்திய சில பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டத்தை நீக்கியுள்ளது. இதுவும் அபாயகரமானதாக அமைந்து விடலாம் எனவும் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பிரதேசங்களை பிரிக்க வேண்டுமாயின் அந்த பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட நபர்களிடமாவது பரிசோதனைகளை நடத்த வேண்டும். அரசாங்கம் தினமும் மேற்கொண்டு வரும் பரிசோதனை எண்ணிக்கை தொடர்பில் திருப்தியடைய முடியாது.
சில முன்னேற்றமடைந்த ஆபிரிக்க நாடுகள் கூட தினமும் இலங்கையை விட அதிகளவான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.இலங்கைக்கு இணையான சனத்தொகையை கொண்ட வியட்நாம் இலங்கையை விட 24 மடங்கு அதிகமான பரிசோதனைகளை நடத்துகிறது.
நியூசிலாந்து இலங்கையை விட 40 மடங்கு அதிகமான பரிசோதனைகளை நடத்துகிறது. கொரோனா வைரஸ் தொற்றியுள்ளவர்களை அடையாளம் காண இந்த நாடுகள் நடத்தும் பரிசோதனைகள் அதிகரித்துள்ளதன் காரணமாகவே அவை இதில் வெற்றி பெற்றுள்ளன எனவும் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி இரவு 8 மணி முதல் நாடு தழுவிய ரீதியாக மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் பிரிவுகளை தவர்ந்த பகுதிகளில் அதிகாலை 05 மணித் தொடக்கம் இரவு எட்டு மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
கொழும்பு , கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களுக்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வௌியேறவும் அனைவருக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஏனைய பகுதிகளில் தற்போது பகுதியளவில் தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி இரவு 8 மணி தொடக்கம் 27 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலப்பகுதியில் அத்தியாவசியத் தேவைகளை முன்னெடுக்கவும் விவசாயத்தில் ஈடுபடவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் திருத்தமின்றி அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு அமெரிக்காவில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 800 பேருக்கு மேல் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
உலக நாடுகளில் இதுவரை 25 இலட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், இதுவரை 25 இலட்சத்து 57 ஆயிரத்து 214 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 6 இலட்சத்து 90 ஆயிரத்து 672 பேர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன், நேற்று மட்டும் 7 ஆயிரத்து 62 ஆக மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை மொத்தமாக ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 641 பேர் மரணித்துள்ளனர். அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 2 ஆயிரத்து 804 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 45 ஆயிரத்து 318 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், நேற்று மட்டும் 25 ஆயிரத்து 985 பேர் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 18 ஆயிரத்து 744 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 14 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்தோர் இதுவரை 82 ஆயிரம் பேரே குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் நியூயோர்க் மாகாணமே கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதுடன் அங்கு நேற்று மட்டும் 764 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் அங்கு 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.அந்தவகையில், இதுவரை 19 ஆயிரத்து 693 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், குறித்த மாநிலத்தில் மட்டும் 2 இலட்சத்து 56 அயிரத்து 555பேர் வைரஸ் தொற்றுக்கு இதுவரை இலக்காகியுள்ளனர்.
இதனைவிட அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியூஜெர்ஸியில் நேற்று 376 பேர் மரணித்துள்ளதுடன், மொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்து 753 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து நேற்று பென்சில்வேனியாவில் 266 பேர் மரணித்துள்ளதோடு, மிச்சிகன் மாகாணத்தில் 232 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை 42 இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை ஒரு இலட்சத்து 7 ஆயிரத்து 906 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன், நேற்று குறித்த நாடுகளில் 3 ஆயிரத்து 415 பேர் உயிரிழந்துள்ளதுடன் கடந்த நாட்களைவிட உயிரிழப்புக்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. ஐரோப்பிய நாடுகளில் நேற்று 26 ஆயிரத்து 955 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனினும் கடந்த சில வாரங்களை விட தற்போது ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பு குறைந்துள்ளது. இந்நிலையில் மொத்தமாக 11 இலட்சத்து 40 ஆயிரத்து 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் இதுவரை 3 இலட்சத்து 44 ஆயிரத்து 820 பேர் குணமடைந்துள்ளனர்.
குறித்த நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின். பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வந்தநிலையில் நேற்று கணிசமாக உயிரிழப்புக்கள் குறைந்துள்ளன. அமெரிக்காவை அடுத்து அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள இத்தாலியில் நேற்று ஒரேநாளில் 534 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 24 ஆயிரத்து 648 ஆகப் பதிவாகியுள்ளன.
மேலும், நேற்று புதிய நோயாளர்கள் 2 ஆயிரத்து 729 பேர் பதிவாகியுள்ள நிலையில் மொத்தமாக அங்கு ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 957 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை பதிவாகியுள்ளது.
இதனைவிட, ஸ்பெயினில் நேற்று 430 பேரின் மரணங்கள் பதிவாகியதுடன் மொத்த மரணங்கள் 21 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளன. அத்துடன், புதிய நோயாளர்கள் 3 ஆயிரத்து 968 ஆக உள்ளதுடன் இதுவரை 2 இலட்சத்து 4 ஆயிரத்து 178 ஆக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு 82 ஆயிரத்து 514 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையடுத்து, பிரான்ஸில் கடந்த ஒருவார காலமாக ஆயிரத்து 500 வரை உயிரிழப்புக்கள் பதிவான நிலையில் கடந்த 3 நாட்களாக கணிசமாகக் குறைந்துள்ளதுடன் நேற்று 531 ஆக மரணங்கள் பதிவாகியுள்ளன. பிரான்ஸில் மொத்தமாக 20 ஆயிரத்து 796 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 50 பேராக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பிரித்தானியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வைரஸால் நேற்று மட்டும் 828 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 17 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன், நேற்று மட்டும் 4 ஆயிரத்து 301 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 44 ஆக அதிகரித்துள்ளது.
இதனைவிட, ஜேர்மனியில் ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 453 பேருக்கு வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 95 ஆயிரத்து 200 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அந்நாட்டில் நேற்று 224 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 5 ஆயிரத்து 86 ஆக அதிகரித்துள்ளன.
மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் நேற்று 170 பேர் மரணித்துள்ளதுடன் அங்கு மொத்த மரணங்கள் 5 ஆயிரத்து 998 ஆக அதிகரித்துள்ளன. அங்கு 40 ஆயிரம் பொருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைவிட, நெதர்லாந்தில் நேற்று மட்டும் 165 பேர் மரணித்துள்ளதுடன் ரஷ்யாவில் 51 பேரும், அயர்லாந்தில் 43 பேரும் சுவீடனில் அதிகபட்சமாக 185 பேரும் நேற்று மரணித்துள்ளனர்.
அத்துடன் பிரெஸிலில் நேற்று 154 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அமெரிக்க நாடான கனடாவில் நேற்று 144 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த மரணங்கள் ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளன. இதனிடையே அடுத்த மாதம் 22ஆம் திகதிவரை அமெரிக்காவுக்குச் செல்லும் எயார் கனடா விமானங்களை அந்நிறுவனம் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
ஆசியாவில் நேற்று 377 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் அதில் துருக்கியில் 119 பேர் மரணித்துள்ளதுடன் ஈரானில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பேரவத் தொடங்கிய சீனாவில் நேற்று 11 பேருக்கு வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளில் 600 இற்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுகூடங்களில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன. இது தொடர்பான தரவுகளை உலக சுகாதார அமைப்பும் அமெரிக்க தேசிய மருத்துவ நூலகமும் கண்காணித்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கொரோனா வைரஸ் தொற்று ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் மனிதரை தாக்க கூடும் என ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி தொடர்பான பேராசிரியர் Sarah Gilbert தெரிவித்துள்ளார்.
பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தற்போது 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுப்பிடிக்கும் நடவடிக்கையில் உலகின் முக்கிய நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், முறையான வகையில் நிதி கிடைக்குமானால் இந்த வருடத்தின் செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனாவிற்கு தடுப்பூசி (Vaccinology) ஒன்றை தயாரிக்கலாம் என பேராசிரியர் Sarah Gilbert குறிப்பிட்டுள்ளார்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை விட தடுப்பூசி மூலம் அதிக எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, பேராசிரியர் Sarah Gilbert கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி குழுவின் தலைவராகவும் செயற்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 34 ஆயிரத்து 500 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இவர்களிடமிருந்து 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த விடயம் தொடர்பில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், மேலும் தெரிவித்ததாவது,
“கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் கொழும்பு, கம்பஹா,களுத்துறை ,புத்தளம் , வரக்காப்பொல, அலவத்துகொட மற்றும் அக்கறைப்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குத் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
ஏனைய பகுதிகளுக்குத் தளத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு வார நாட்களில் இரவு 8 மணிமுதல் காலை 5 மணிவரை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுக்கவுமே இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் அத்தியாவசிய தேவை இன்றி முறையற்று செயற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.
இதேவேளை, இந்தக் காலப்பகுதியில் விநோத பயணங்கள், உற்சவங்கள், விநோத நிகழ்வுகள் மற்றும் யாத்திரைகள் ஆகியவற்றில் ஈடுபட வேண்டாம். இந்தக் காலப்பகுதியை உற்பத்தி செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அதற்கமைய இதுவரையிலான 24 மணித்தியாலயத்துக்குள் மாத்திரம் 650 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 165 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு கடந்துள்ள ஒரு மாத காலத்துக்குள் மாத்திரம் 34 ஆயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, சந்தேகநபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன” – என்றார்.
இலங்கையில் திடீரென கொரோனா நோயாளர்களின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையினால் மக்கள் மத்தியில் அ ச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்கள் அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டவர்கள் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக கண்டுபிடிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அல்லது அவர்களுக்கு அருகில் பழகியவர்கள் என அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் நோயாளிகள் அருகில் இருந்தவர்களை தேடி செல்வதற்கு பாதுகாப்பு பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் கடந்த 4 மாதங்களில் இடம்பெற்ற தி ருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சி றுவர்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 10 பவுண் தங்க நகைகள், பணம், நகை அடகு பற்றுச் சீட்டுக்கள், மற்றும் கையடக்க தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சம்பவத்தில் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 15 வயதுடைய சி றுவர்கள் இருவர் உட்பட 18, 21 மற்றும் 25 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் இருவர் சகோதரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவு பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களில் இடம்பெற்ற 4 கொள்ளைகள் மற்றும் தி ருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது தி டுக்கிடும் உண்மைகள் அம்பலமானது.
ஒரு வீட்டில் அந்த வீட்டு சிறுவனுடன் நட்புக் கொண்ட சந்தேக நபர்கள், அவனிடம் சிகரெட்டை வழங்கி பிடிக்க வைத்து படம் எடுத்துள்ளனர். அந்தப் படத்தை வைத்து மி ரட்டி அந்தச் சிறுவனின் தாயாரின் நகைகளை எடுத்துவரச் சொல்லி ப றித்தெடுத்துள்ளனர்.
இவ்வாறு சந்தேக நபர்கள் சிறுவனை குறிப்பிட்ட காலத்துக்கு மி ரட்டி வந்ததுடன், அவனின் தாயாரின் 14 பவுண் நகைகள், ஐ-பாட் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கனேடியன் டொலர்களைப் பறித்து எடுத்துள்ளனர். அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையிலேயே சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட வி சாரணைகளில் உருக்கப்பட்ட தங்கம் உட்பட 10 தங்கப் பவுண் நகைகள், 10 ஆயிரம் ரூபா பணம், 2 அலைபேசிகள், ஒரு ஐபேட் மற்றும் அரச மற்றும் தனியார் வங்கிகளில் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்த பற்றுசீட்டுக்கள் என்பன மீட்கப்பட்டன.
சந்தேக நபர்கள், கொள்ளையிட்ட நகைகளில் பலவற்றை உடுப்பிட்டியை சேர்ந்த குடும்பப் பெண் ஒருவருக்கு மிகக் குறைந்த பணத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.
அந்தப் பெண் அவற்றை கூடிய தொகைக்கு அடகு வைத்துள்ளார். இந்நிலையில் மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு உதவும் வகையில் இந்திய இராணுவம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த நாடுகளுக்கு தனி அணிகளை அனுப்பி உதவுவதற்கு இந்திய இராணுவம் தயாராகி வருவதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கையாள்வதற்கான திறன்களை அதிகரிக்க அந்த நாடுகளுக்கு உதவுவதற்கு இந்திய இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகங்களை அமைக்கவும், உள்ளூர் மருத்துவ நிபுணர்களுக்கு தொற்றுநோயை எதிர்த்து போராடவும் உதவுவதற்காக 14 பேர் கொண்ட இந்திய இராணுவ குழு கடந்த மாதம் மாலைதீவுக்கு அனுப்பப்பட்டது.
அத்துடன், இந்த மாத ஆரம்பத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்தியா 15 பேர் கொண்ட இராணுவக் குழுவை குவைத்துக்கு அனுப்பியது.
இந்நிலையிலேயே, தொற்றுநோயை எ திர்த்துப் போ ராடுவதற்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து நட்பு நாடுகளுக்கும் உதவி வழங்குவதற்கான இந்தியாவின் கொள்கையின் ஒரு பகுதியாக இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான அணிகள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மார்ச் 15ம் திகதி இடம்பெற்றிருந்த ஒரு காணொளி மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சார்க் பிராந்தியத்தில் COVID-19 ஐ எ திர்த்துப் போ ராடுவதற்கான ஒரு கூட்டு மூலோபாயத்தை வகுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமகாலத்தில் பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் பயணிகள், சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பின்பற்ற கூடிய சுகாதார பாதுகாப்பு விதி முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிக்காட்டல்களுக்கு அமைய இந்த விதிமுறை தயாரிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை நடத்தி செல்வதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் மூலம், பொது சுகாதார சேவைகள், பொது பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனிக்காத பல சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
அதற்கமைய, அனைத்து பொது போக்குவரத்து சேவைகளையும் ஆரம்பிப்பதற்கும் முன்னர் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என பதில் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது போக்குவரத்து சேவையில் பயணிக்கும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், ஒருவருக்கு ஒருவர் இடையில் ஒரு மீற்றர் தூரம் கடைபிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பதில் பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பேருந்து நிறுத்துமிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு நுழையும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள திரவத்துடன்னான போத்தல்களில் கைகளை சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். பேருந்துகளில் உள்ள கம்பிகளை பிடிக்காமல் பேருந்திற்குள் நுழையவும் இறங்கவும் சாரதியினால் பயணிகளுக்கு நேரம் வழங்க வேண்டும் என பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.