இலங்கையில் கொ ரோனாவை அ ழிக்க ஜப்பான் அனுப்பிய ம ருந்தினால் பயன் இல்லை!!

கொ ரோனா

கொ ரோனா தொ ற்றுக்குள்ளானோருக்கான சி கிச்சைகளை வழங்கும் எ விகன் என்ற ம ருந்து வகை ஜப்பானினால் இலங்கைக்கு நேற்று இறக்குமதி செய்யப்பட்டது. எனினும் இந்த ம ருந்து கொ ரோனாவுக்கு வெ ற்றிகரமான சி சிச்சை அ ல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் Hydroxy chlroquine என்ற ம ருந்து பயன்படுத்தும் நடவடிக்கை இதுவரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய காலத்திற்குள் (சுமார் 15 நிமிடங்கள்) சோ தனை ந டைமுறைகள் மூலம் நோ யாளியை உ றுதி செய்யும் ப ரிசோத னைகள் தற்போது வரையில் உலகம் முழுவதும் பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை இலங்கையினுள் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் ஆபத்தான பகுதியாக மாறும் யாழ்ப்பாணம் : உயிரிழந்த 2வது நபரினால் ஏற்பட்டுள்ள நிலை!!

யாழ்ப்பாணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த 2வது நபர் பங்கேற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 150 பேரை அடையாளம் காணும் நடவடிக்கையில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தின் உஸ்மானியா கல்லூரி பகுதியில் நேற்று தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, யாழ். போதனா வைத்தியசாலையில், ஆறு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இவர் கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்த இரண்டாவது நபர் ஆவார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் அவர் கலந்துகொண்டிருந்தார். இதனையடுத்து அவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இடங்களை பொலிஸார், இராணுவம் மற்றும் சுகாதார அதிகாரிகள் சோதனை செய்தனர்.

குறித்த நபர் உயிரிழந்த உடனேயே, குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள் மார்ச் 30ம் திகதி மாலை முதல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள ஐந்து சந்தி பகுதியில் நேற்று தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இதனையடுத்து, பெரும் சிரமங்களுக்கு மத்தியில், திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 120 பேரின் விபரங்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அத்துடன், உயிரிழந்த நபர் தங்கியிருந்த இடங்களின் விபரங்கள் மற்றும் அவர் சந்தித்த நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் குறித்து ஆபத்தான பகுதியாக யாழ்ப்பாணம் மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் நோயாளி இறந்தால் : இலங்கை சுகாதார அமைச்சு வெளியிட்ட விதிமுறை!!

கொரோனாவால் நோயாளி

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமாவோரின் உடல்கள் தகனம் செய்யப்படவேண்டும் என்ற அடிப்படையிலான “நிரந்தரமான நடவடிக்கை ஒழுங்குமுறை” என்ற அடிப்படையில் விதிகளை இலங்கையின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில் இந்தமுறை பின்பற்றப்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நீர்கொழும்பில் கொரோனா வைரஸால் இறந்தவரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படாமல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்ப்பு வெளியிப்பட்டுள்ள நிலையிலேயே சுகாதார அமைச்சு புதிய ஒழுங்குவிதிகளை அறிவித்துள்ளது.

அதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மரணமாவோரின் உடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்பதை நோயின் பரிந்துரைக்கப்பட்ட வரலாறு கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இறந்தவரின் உடல் கழுவப்படக்கூடாது. அது சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட பின்னர் தகனம் செய்யப்படும் வரை காவல்துறை, பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் கண்காணிப்பில் தகனம் செய்யப்பட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சின் ஒழுங்கு விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 10 கொரோனா நோயாளர்களின் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!!

முக்கிய தகவல்

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளர்கள் 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை உறுதி செய்யப்பட்ட 10 பேரும் புத்தளம் மாவட்டத்தைச் சேர்நதவர்கள் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த 10 பேரும் வைத்திய பரிசோதனையின் மூலமே கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் என உறுதி செய்யப்பட்டதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் இதுவரையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பிலான எந்தவிதமான ஆரம்ப அறிகுறிகளும் தென்படவில்லை என்பது விசேட அம்சமாகும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் குறித்து நாட்டு மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தங்களையும் தாம் சார்ந்த சூழலை பாதுகாக்க அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 143 ஆகும். இதில் 17 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் யாருக்கேனும் ஏற்பட்டால் வைத்தியசாலைக்கு வர வேண்டாம் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சந்தேகம் இருந்தால், வீட்டில் இருந்தே பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இன்றி அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற முயற்சித்தால் கொரோனா நோயை பரபரப்ப முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“உங்களுக்கு இந்த கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக சந்தேகம் இருந்தால் தயவு செய்து வைத்தியவசாலைக்கு வர வேண்டாம். வீட்டிலேயே இருங்கள். உங்களுக்கு அவசியமாக வசதிகளை நாங்கள் ஏற்படுத்துவோம். பொலிஸாருக்கு தெரியப்படுத்துங்கள். சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அவ்வாறின்றி வைத்தியசாலைக்கு சென்றால் அது கொலை முயற்சி சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படும். இதனால் தீங்கிழைக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம். தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளுங்கள்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் கொ லை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெ ண் : 28 வயதான நபர் கை து!!

யாழ் பெ ண்

கனடாவில் சு ட்டுக் கொ லை செ ய்யப்பட்ட யாழ்ப்பாண பெ ண்ணின் கொ லையுடன் தொ டர்புடையவர் என்ற கு ற்றச்சா ட்டில் ஒ ருவர் கை து செ ய்யப்பட்டுள்ளார். 28 வயதாக Steadley Kerr என்பர் நேற்று கை து செய்யப்பட்டதாக பொ லிஸார் தெரிவித்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி Scarboroughவில் 38 வயதான தீபா சீவரத்னம், அவரது இ ல்லத்தில் வை த்து சு ட்டுக் கொ ல்லப்ப ட்டார். இந்த வ ன்மு றையின் போது தீபாவின் தா யார் பா ரிய கா யங்களுக்கு உள்ளான நிலையில் வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த கு ற்றச்சா ட்டுடன் தொ டர்புடையவர் என்ற ச ந்தேகத்தில் ந பர் ஒ ருவர் நேற்று கை து செ ய்யப்பட்டுள்ளார். ச ந்தேக ந பரை எதிர்வரும் 9ஆம் திகதி நீதிமன்றில் ஆ ஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொ லிஸார் தெரிவித்துள்ளார்.

ப டுகொ லை செய்யப்பட்ட தீபா சீவரட்னம் யாழ்ப்பாணம் கொற்றாவத்தை பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு : நகரில் குறைந்தளவு மக்கள் நடமாட்டம்!!

ஊரடங்கு தளர்வு..

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் வவுனியா மாவட்டத்தில் 8 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு வருகை தந்த மக்களின் எண்ணிக்கை குறைந்த அளவில் காணப்பட்டது.

நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு பூராகவும் ஊரடங்குச சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வவுனியா உள்ளிட்ட வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் தவிர்ந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் இன்று (01.04.2020) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வருகிறது.

இதனையடுத்து அத்தியாவசிய பொருட்கள், மருந்துப் பொருட்கள், மரக்கறிகள் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காகவும் வங்கிகளில் பணம் பெறுவதற்காகவும் மக்கள் நகரிருக்கு வருகை தந்துள்ளதுடன் வங்கிகள், வர்த்த நிலையங்களின் முன்னால் வரிசையில் காணப்படுகின்றனர்.

அத்துடன் வவுனியா பொலிஸார், போக்குவரத்து பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் நிலமைகளை கட்டுப்படுத்துவதுடன் வவுனியா பொலிஸாரினால் விழிப்புணர்வு அறிவித்தலும் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் மரக்கறி வியாபாரத்திற்காக வவுனியா மன்னார் வீதியில் காமினி மகா வித்தியாலத்திற்கு முன்பாக நகரசபையினரினால் இடம் ஒதுக்கி வழங்கப்பட்டு நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் வவுனியா பஜார் வீதி, மீன் சந்தை, மரக்கறி சந்தை ஆகிய பகுதிகளுக்காக வீதியூடாக வாகனங்கள் செல்வதற்கும் பொலிஸாரினால் தடை விதிக்கப்பட்டு வீதிகள் மூடப்பட்டு மோட்டார் சைக்கில், துவிச்சக்கரவண்டிகளுக்கு மாத்திரம் அனுமதியளிக்கப்படுகின்றது.

மரக்கறி விற்பளை நிலையங்கள் பரவலாக்கப்பமட்டுள்ளமையால் ஒரு பகுதியில் அதிகளவிலான மக்கள் குவிவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் கொரோனா வைரஸ் தொடர்பிலான விழிப்புணர்வு பதாதைகளும் வர்த்தக நிலையங்கள் முன்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மக்கள் வேகமாக பொருட்களை கொள்வனவு செய்வதினை அவதானிக்க முடிகின்றது.

ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் இறங்குவோருக்கு எச்சரிக்கை!!

அங்கீகாரம் வழங்கப்பட்டவா்களைத் தவிர ஊரடங்கு சட்ட உத்தரவை மீறி வீதிகளில் இறங்குவோர் கைது செய்யப்படுவார்கள் என இன்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரதான வீதிகளிலோ அல்லது உள் வீதிகளிலோ எவரும் இறங்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உத்தரவை மீறி வீதிகளில் இறங்குவோர் கைது செய்யப்பட்டால் அவர்களுக்குப் பொலிஸ்பிணை வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் 16 வீதி சோதனைச் சாவடிகள்!!

கொழும்பு நகரின் பாதுகாப்புக்காக நகருக்குள் பிரவேசிக்கும் அனைத்து வழிகளும் உள்ளடங்கும் வகையில் விசேட அதிரடிப் படையினர் 16 வீதி சோதனை சாவடிகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த விடயத்தை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை சேர்ந்த நபர்கள் கொழும்பு நகருக்கு வருவதை தடுக்கும் நோக்கில் இந்த வீதி சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் கொழும்பு நகரின் நடவடிக்கைகளுக்கு தடையேற்படுத்தும் வகையில் நகருக்குள் வரும் நபர்களை சோதனையிடுதல், ஊரடங்குச் சட்டத்தை மீறுவோரை கைது செய்தல், வாகன சோதனைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த வீதி சோதனை சாவடிகள் மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 10 பேருக்கு கொரோனா : 142 ஆக அதிகரித்தது தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை!!

புதிய இணைப்பு : இலங்கையில் மேலும் 10 பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய நாளில் மட்டும் 20 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது.

இரண்டாம் இணைப்பு : இலங்கையில் மேலும் 3 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போதைய நிலையில் நாட்டில் 132 ​பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு : இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் 7 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு நோயாளர்கள் முழுமையாகாகக் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இதுவரை 16 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாகக் குணமடைந்துள்ளனர். இதேவேளை, நாட்டில் இதுவரை 129 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், அதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 111 கொரோனா நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், நாட்டின் பல வைத்தியசாலைகளில் 173 பேர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனாவிடம் இருந்து தப்பிக்க அமெரிக்கரின் முப்பரிமாண முக கவசம்!!

கொரோனா வைரஸ் பரவி வரும் பின்னணியில் அமெரிக்க பிரஜை ஒருவர் முப்பரிமாண முக கவசம் ஒன்றை தயாரித்துள்ளார்.

அமெரிக்கா தற்போது கொரோனா வைரஸ் பரவும் கேந்திர இடமாக மாறியுள்ளதுடன் அங்கு ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன் அங்கு முக கவசத்திற்கான தட்டுப்பாடும் நிலவுகிறது. இதற்கு தீர்வாக ஒக்லஹோமா மாகாணத்தை சேர்ந்த 35 வயதான ஜோ குவார் என்ற நபர் முப்பரிமாண தொழிற்நுட்படுத்தை பயன்படுத்தி முககவசம் ஒன்றை அச்சிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்களை வீடுகளை இருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் காலத்தை வீணடிக்காமல் இப்படியான தயாரிப்பு ஒன்றை செய்ய எண்ணியதாக ஜோ கூறியுள்ளார்.

முப்பரிமாண முககவசங்களை அச்சிடும் அதே வேளையில் அவர் இணைத்தளம் வழியாக மாயாஜால கண்காட்சி மற்றும் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.

எவ்வாறாயினும் ஜோ தான் தயாரிக்கும் முக கவசங்களுக்கு மக்களிடம் பணத்தை அறவிடுவதில்லை என்பதுடன் அதற்கு பதிலாக முககவசங்களை செய்ய பிளாஸ்டிக் மூலம் பொருட்களை மாத்திரம் அன்பளிப்பாக பெற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் மக்களுக்காக தீயணைப்பு படையினருடன் களத்தில் இறங்கிய விசேட அதிரடிப்படையினர்!!

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளை சுத்தம் செய்யும் விசேட அதிரடிப்படையினரின் நடவடிக்கையின் மூன்றாம் கட்ட செயற்றிட்டம் இன்று (31.03.2020) காலை முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளை சுத்தப்படுத்தி கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்களை காப்பற்றும் நோக்கில் மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறங்கியுள்ளனர்.

வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் வவுனியா பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஆகியோருடன் இணைந்து விசேட அதிரடிப்படையினரினால் முன்னெடுக்கப்பட்ட இச் செயற்றிட்டம் வவுனியா நகரசபை முன்றலில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினர் கடந்த (24.03.2020) மாலை வவுனியா புதிய பேரூந்து நிலையம், பழைய பேரூந்து நிலையம், வங்கிகள், எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்களை சுத்தப்படுத்தியதுடன், இரண்டாம் கட்டமாக (25.03.2020) காலை வவுனியா புகையிரத நிலையம், வவுனியா மாவட்ட செயலகம், வவுனியா பிரதேச செயலகம், பொதுச்சந்தை, வங்கிகள், எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்கள் போன்றவற்றை சுத்தப்படுத்தப்பட்டது.

இன்றையதினம் (31.03.2020) மூன்றாம் கட்டமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை, வவுனியா நீதிமன்ற வளாகம், சந்தை, ஆலயங்கள் என்பவற்றை சுத்தப்படுத்தும் பணியில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது 1990 அவரச அம்புலன்ஸ் சேவை வாகனங்களுக்கு சுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குடும்ப உறுப்பினர்கள் எவருமின்றி நள்ளிரவில் தகனம் செய்யப்பட்ட கொரோனா நோயாளியின் உடல்!!

கொரோனா தொற்றினால் உயிரிழந்த இரண்டாவது இலங்கையரின் உடலை தகனம் செய்யும் நடவடிக்கை இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான பொது கல்லறையில் அவரது உடல் பாதுகாப்பாக எரியூட்டப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பிரதானிகள், நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய உறவினர்கள் இருவர் மாத்திரம் இறுதி நடவடிக்கையில் கலந்து கொள்ள முடியும். எனினும் அவரது தகன நடவடிக்கையின் போது எந்தவொரு உறவினரும் கலந்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபர் இவராகும். நீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸின் தீவிரம் : யாழில் 10 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!!

சீனாவில் தொடங்கி இன்று உலகளாவிய ரீதியில் அனைவரையும் கொன்று குவிக்கும் கொரோனா வைரஸால் இலங்கையிலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்றைய தினம் நீர்கொழும்பில் வசிக்கும் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் மூன்று வீடுகளைச் சேர்ந்த குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் நாவாந்துறை ஐந்து சந்திப் பகுதியில் ஹாதி அபூபக்கர் வீதியில் உள்ள மூன்று வீடுகளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த நபர் அண்மையில் திருமண நிகழ்வு ஒன்றுக்காக யாழ்ப்பாணம் வந்து போனதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

கடந்த 7ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்பதற்குச் சென்றுள்ளார். அங்கு இரு நாள்கள் தங்கியிருந்த பின்னர் நீர்கொழும்பு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபருடைய நடமாட்டங்கள், பழகிய, சந்தித்த நபர்கள் குறித்த விசாரணையை குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இலங்கையில் உள்ள சகல புலனாய்வு கட்டமைப்புக்களும் நேற்று மாலையே ஆரம்பித்திருக்கின்றன.

இதன்படி யாழ்.மாவட்டத்திலும் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டிருப்பதுடன், யாழ்ப்பாணத்தில் அவர் தங்கியிருந்த இடம், சந்தித்த நபர்கள், திருமண வீட்டில் கலந்து கொண்டவர்கள்,என சுமார் 120 பேருடைய பெயர் பட்டியல் முதல் கட்டமாக தயாரிக்கப்பட்டு அவர்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

அதன்பின்னர் குறித்த திருமணம் நடைபெற்ற வீடு உள்ளடலங்கலாக மூன்று வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தற்போது 10ற்கு மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டதோடு 3 வீடுகள் முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதி கிராமசேவகர் மற்றும் பொலிஸாரின் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனுமதியின்றி பயணிப்போர் பிடியாணையின்றி கைது செய்யப்படுவார்கள்!!

அனுமதிக்கப்பட்ட சேவை அடையாள அட்டை அல்லது ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரம் இன்றி வீதிகளில் பயணிக்கும் அனைவரும் பிடியாணையின்றி கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்கள் பயணம் செய்யும் வாகனங்கள் கைப்பற்றப்படும் எனவும் கொரோனா வைரஸ் ஆபத்து தனியும் வரை அந்த வாகனங்களை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பில் வைத்திருக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கைதுசெய்யப்படுபவர்கள் குற்றவாளியாக கருதப்படுவார்களானால் அவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை வழங்க சட்டத்தில் இடமுண்டு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவையேற்படின் கைதுசெய்யப்படுபவர்கள் பொதுசுகாதார அதிகாரி அல்லது சட்டவைத்திய அதிகாரியின் முன் பிரசன்னப்படுத்தப்பட்டு அவர்களின் அறிக்கை பெறப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்த தவறினால் மிகப்பெரிய உயிரிழப்புகள் ஏற்படலாம்!!

அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்கள் நாட்டு மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஜயருவான் பண்டார எச்சரித்துள்ளார்.

பாதுகாப்பற்ற சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றிவர்கள் நடமாடி இருப்பதால், இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே ஜயருவான் பண்டார இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமந்த ஆனந்த கருத்து வெளியிடுகையில்,

“சில தரப்பினர் மிகவும் பொறுப்பின்றி நடந்து கொள்வதை காண முடிகிறது. இப்படி சென்றால், எம்மால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். அதன் மூலம் மிகப் பெரிய உயிரிழப்புகள் ஏற்படலாம்.

மக்கள் தொடர்ந்தும் பொறுப்பின்றி நடந்துக்கொள்வார்கள் என்றால், இந்த செயற்பாடுகளில் அர்த்தமில்லை. மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால், நாங்கள் எமது கடமைகளை கைவிட்டு உயிரை பாதுகாக்க வீட்டில் இருப்பது சிறந்தது.

தயது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இப்படியே சென்றால், முழு நாட்டையும் மூடி விட்டு அனைவரும் வீட்டில் இருக்க நேரிடும். அப்படி நடந்தால் மக்களே மீண்டும் அசௌகரியங்களுக்கு உள்ளாவர்.

எந்தளவுக்கு விளக்கி கூறினாலும் இதன மக்கள் புரிந்துக்கொள்ளாது எமக்கு ஆச்சரியமாக இருக்கின்றது” என சமந்த ஆனந்த குறிப்பிட்டுள்ளார்.