கப்பலை கரை சேர்ப்பது போரில் வெல்வது போல : இந்தியாவின் முதல் மாலுமியான தமிழ் பெண் பகிர்வு!!

முதல் மாலுமியான தமிழ் பெண்

விண்வெளி, மருத்துவம், சட்டம், காவல்துறை என பெண்கள் கால்பதிக்காத துறையே இல்லை எனும் அளவுக்கு நாளுக்கு நாள் சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில், தான் எடுத்துக்கொண்ட துறையில் சாதனை படைத்த முதல் பெண்ணாக இருப்பதற்கு பெருமை கொள்வதைவிட தன்னைப்போல் அதிக பெண்கள் அந்த துறைக்கு வந்தால் அதைவிட பெருமையடைவேன் என்கிறார் சென்னையில் பிறந்து மேற்கு வங்கத்தில் பணியாற்றி தற்போது உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கும் இந்தியாவின் முதல் பெண் கப்பல் பைலட் ரேஷ்மா நிலோஃபர்.

“ஒரு தமிழ்ப் பெண்ணாக என்னை அடையாளப்படுத்திக்கொள்வதில் நான் பெருமையடைகிறேன். சென்னையில் பிறந்து வளர்ந்த நான் முதன்முதலில் பயிற்சிக்காக மேற்கு வங்கம் சென்றபோது மொழி மற்றும் கலாசாரம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டேன்” என்று கூறும் ரேஷ்மா தனது சாதனைக்கு பின்னால் உள்ள சவால்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.

2011-ஆம் ஆண்டு செய்தித்தாள் விளம்பரம் ஒன்றை பார்த்து பயிற்சி நிலை மாலுமி பணிக்கு விண்ணப்பித்து, ஆறரை ஆண்டுகள் பயிற்சிக்கு பிறகு 2018-ஆம் ஆண்டில் நதி மற்றும் கடல் மாலுமியாக தகுதி பெற்ற ரேஷ்மா தற்சமயம் கொல்கத்தாவிலுள்ள ஹூக்ளி துறைமுகத்தில் பைலட்டாக,

விமான பைலட் குறித்து அனைவரும் அறிவார்கள். ஒரு கப்பலில் பைலட்டின் பணி என்ன? என்று நிலோஃபரிடம் கேட்டோம். ”விமானத்தை போன்று கடல் சார்ந்த பணிகளிலும் பைலட் என்ற முக்கியத்துவம் வாய்ந்த பணி இருப்பது குறித்து பலருக்கும் தெரியவில்லை.

ஒரு கப்பல் என்று எடுத்துக்கொண்டால் டெக் எனப்படும் கப்பலின் மேல்தட்டு பிரிவு மற்றும் இன்ஜினியரிங் எனப்படும் நுட்பம் தொடர்பான தளம் என இரு பிரிவுகள் உள்ளன. கப்பலை செலுத்துவது, கடல் மார்கத்தை திட்டமிடுவது, நீர்வழி போக்குவரத்து நெரிசல் குறித்து தொடர்ந்து கண்காணிப்பது, மற்ற பணியாளர்களுடன் தொடர்பு கொள்வது, போன்றவை கப்பலின் மேல்தட்டு பிரிவு அதிகாரிகளின் (டெக் ஆஃபீசர்) முக்கிய பணிகளாகும்” என்று அவர் கூறுகிறார்.

”நுட்ப பிரிவின் உயரதிகாரி கப்பலின் கேப்டன் என்று அழைக்கப்படுகிறார். அதே போல கப்பலின் மேல்தட்டு பிரிவு அதிகாரிகளின் தலைமை அதிகாரிதான் பைலட். ஒட்டுமொத்த கப்பலுக்கு தலைமை வகிப்பவர் கேப்டன் என்றாலும் அந்த கேப்டனுக்கு கடல்சார்ந்த அறிவுரைகளை வழங்குவதுடன் ஒரு துறைமுகத்தை பற்றிய அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்தான் பைலட்” என்கிறார் 31 வயதாகும் தமிழ்ப் பெண் ரேஷ்மா.

கடல் சார்ந்த பணி எவ்வளவு ஆபத்தானது? : கப்பல்களில் பணியாற்றுபவர்கள் குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கவோ அல்லது தேவை ஏற்பட்டால் உடனடியாக வீட்டிற்கு செல்லவோ முடியாது என்றும் தொடர்ந்து பல மாதங்கள் ஒரே கப்பலிலேயே பணியாற்ற வேண்டுமென்றும் பரவலாக கூறப்பட்டு வருகிறது.

அந்த வகையில் உண்மையிலேயே கப்பலில் பணியாற்றுவது என்பது எந்தளவுக்கு சவால் நிறைந்தது என்று ரேஷ்மாவிடம் கேட்டபோது, “பெருங்கடல் பகுதியில் சிக்கிக்கொண்டால் கடலை கடக்க சுமார் பத்து நாட்கள் ஆகலாம்.

கப்பலில் அவசரநிலை ஏற்பட்டால் ஹெலிகாப்டரை உடனே வரவழைத்து அங்கிருந்து தப்பிக்க முடியாது. பல மணி நேரமோ சில நாட்களோ உதவி வரும்வரை காத்திருந்து துறைமுகத்தை அடையும்வரை பொறுமையுடன் இருக்க வேண்டும். இதன் காரணமாக தனிப்பட்ட வாழ்க்கையில் பல முக்கியமான தருணங்களை இழக்கும் சூழ்நிலை நேரிடலாம்.”

”கப்பலில் கேப்டனுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அவருக்கு மாற்றாக அடுத்த நிலை அதிகாரி பொறுப்பேற்பார். ஆனால் மாலுமிக்கு மாற்று வேறு யாருமே கிடையாது. ஒருவேளை மாலுமிக்கு உடல் நலம் சரியில்லாமல் போனால் கப்பல் நடுக்கடலில் நங்கூரமிட்டு காத்திருக்க வேண்டியதுதான்.

மாலுமி இல்லாமல் கப்பல் ஒரு அடிகூட நகரவோ துறைமுகத்திற்குள் நுழையவோ முடியாது” என்று ரேஷ்மா கூறுகிறார். ‘கப்பலை கரை சேர்ப்பது போரில் வெல்வது போல”

இந்தியாவின் முதல் பெண் கடல் மாலுமி மட்டுமின்றி நதிகளில் கப்பலை இயக்கும் முதல் பெண் மாலுமியாகவும் அறியப்படும் ரேஷ்மாவிடம், கடற்பரப்பில் கப்பலை செலுத்துவதற்கும், நதிகளில் கப்பலை செலுத்துவதற்கும் உள்ள வேறுபாடு குறித்து கேட்டபோது, “கடலில் பயணிப்பதைவிட நதிகளில் கப்பலை செலுத்துவது மிகவும் ஆபத்தானது.

நதிகள் கடல் அளவுக்கு ஆழமானது இல்லை என்றாலும் அதன் அலைகள் மிகவும் வேகமானது. அதுமட்டுமின்றி, எல்லா நதிகளிலும் கப்பல்கள் பயணிக்க முடியாது. அந்த வகையில், நான் பணிபுரியும் ஹூக்ளி நதியில் அமைந்துள்ள கொல்கத்தா துறைமுகம், கப்பல் பயணம் மேற்கொள்ளக்கூடிய உலகின் மிகவும் ஆபத்தான நதி வழி பாதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

சுருங்க சொன்னால் ஒரு கடல் மாலுமி ஆவதற்கு ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்; நதி மாலுமி ஆவதற்கு இரண்டு ஆண்டுகால பயிற்சி தேவைப்படும்” என்று கூறுகிறார் ரேஷ்மா.

இதுவரை இவர் கண்டம் விட்டு கண்டம் தாண்டி சுமார் நாற்பது நாடுகளுக்கு கப்பலை இயக்கிச் சென்றுள்ளார். கடந்த ஆண்டு மகளிர் தினத்தன்று, பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘நாரி சக்தி புரஸ்கார் விருது’ ரேஷ்மாவுக்கு வழங்கப்பட்டது.

முறையான கல்வித் தகுதியுடன் முதலில் ஒரு கப்பலுக்கு கேப்டனாக சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகே ஒருவர் துறைமுகங்களில் மாலுமியாக முடியும். ஒவ்வொரு கப்பலையும் பல போ ராட்டங்களைத் தாண்டி பாதுகாப்பாக கரை சேர்ப்பது ஒரு போரில் வெல்வது போன்றது என்றும் தான் தினமும் ஒரு போ ரில் வெற்றி பெறுவதால் இந்த பணி மிகுந்த மன நிறைவை தந்துள்ளதாக இவர் கூறுகிறார்.

கப்பல் பணிகளில் குறைவான பெண்களே இருக்க என்ன காரணம்? உலகளவில் கப்பல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை வெறும் இரண்டு சதவிகிதம் மட்டுமே என்கிறது சர்வதேச கடல்சார் நிறுவனத்தின் அதிர்ச்சி அளிக்கும் தரவு.

இந்நிலையில், மற்ற துறைகளை போன்று பெண்கள் கப்பல் சார்ந்த பணிகளில் சாதிப்பதற்கு தடையாக இருப்பது எது என்று அவரிடம் கேட்டபோது, “கப்பலில் ஏற கயிற்றால் செய்யப்பட்ட ஏணி இருக்கும்.

நிலையாக இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கும் இந்த ஏணியை பிடித்து ஏற வேண்டும் என்பதே பெண்களுக்கு சவாலான பணிதான்” என்றார். ”நான் இயக்கிய கப்பலில் இதுவரை நான் மட்டுமே ஒரே பெண்ணாக இருந்திருக்கிறேன். கப்பல் துறையில் கட்டளையிடும் தலைமை பணியில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே உள்ளனர்.

ஆனால், சாதிக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் பெண்களுக்கு வானம் கூட எல்லை இல்லை. ஏனென்றால் வானையும் தாண்டி விண்வெளியிலும் பெண்கள் சாதித்திருக்கிறார்கள். வலி, அழுத்தம், ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது போன்ற திறன்கள் இயற்கையாகவே பெண்களுக்கு அமைந்திருக்கின்றன.

ஆனால் பெண்களால் இதை செய்ய முடியாது அதை செய்ய முடியாது என்று சமூகம் சொல்வதை கேட்டு வளர்வதால் பெண்கள் தங்கள் திறமை மீதே சந்தேகம் கொள்கின்றனர்” என்று கூறுகிறார் அவர். ”இந்தியாவில் பெண்களைக்கூட பைலட் ஆக்குகிறார்களா?…”

ஒரு பெண் மாலுமி தனது கப்பலை இயக்கப்போகிறார் என்பது தெரிந்ததும் பயணிகள் என்ன கூறுவார்கள்? ஏதாவது சுவாரஸ்யமான சம்பவம் குறித்து பகிருங்கள் என்று நிலோஃபரிடம் கேட்டிருந்தோம். அதற்கு அவர், ”பைலட்டாக ஒரு பெண்ணா? இவர் நம்மை பாதுகாப்பாக கரை சேர்த்துவிடுவாரா? என்ற சந்தேகத்தோடு பலரும் என்னை பார்த்திருக்கிறார்கள்.

சிலர் எங்கள் கப்பலை ஒரு பெண் மாலுமி இயக்குகிறார் என்பது பெருமையாக உள்ளது. உங்களை போல் பல பெண்கள் இந்த துறைக்கு வர வேண்டும் என்பார்கள்” என்றார்.

ஒரு நாள் இரவு, தனக்கு சீன கப்பலை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அப்போது தான் கப்பலுக்குள் வருவதை பார்த்தவுடன், பின்னால் ஆண் யாராவது வருகிறாரா என்று அதன் கேப்டன் பார்த்துக்கொண்டிருந்ததாகவும், நான் தான் பைலட் என்று சொன்னவுடன் அவர் மிகவும் ஆச்சர்யமடைந்ததாகவும் ரேஷ்மா கூறுகிறார்.

“இந்தியாவில் பெண்களையெல்லாம் பைலட் ஆக்குகிறார்களா என்று அவர் கேட்டார். நீங்கள் அதிஷ்டசாலி, அதனால் இந்தியாவில் உள்ள ஒரே பெண் பைலட் இன்று உங்களுடன் பணியாற்ற போகிறார் என்று சொன்னேன்.

தொடக்கத்தில் என் பணித்திறன் குறித்து சந்தேகித்த அவருக்கு, நான் பேச பேச என் மீதான நம்பிக்கை அதிகரித்தது. வேலை முடிந்தவுடன், நான் உங்களை குறைத்து எடை போட்டுவிட்டேன்.

அதற்கு முதலில் மன்னிக்கவும். நீங்கள் சிறப்பாக பணியாற்றினீர்கள் என்று பாராட்டினார்” என்று பெருமைப்பட கூறும் ரேஷ்மா இந்த சம்பவத்தை தன்னால் மறக்கவே முடியாது என்றார். ”முயற்சிக்கும் முன்னரே முடியாது என்று சொல்லாதீர்கள்”

”இப்போதைக்கு என்னுடைய இலக்கு உலகம் முழுவதிலும், குறிப்பாக இந்திய பெண்களுக்கு கப்பல் பணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த கடல் உலகில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை அவர்களுக்கு புரிய வைப்பதே” என்கிறார்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை உட்பட பல நாடுகளுக்கு சென்று பெண்களை மத்தியில் ஊக்க உரையாற்றிவரும் ரேஷ்மா. கடல் சார் பணிகளில் அதிக பெண்கள் வருவதற்காக அவர்களை ஊக்குவிப்பதோடு மட்டுமின்றி, பல பெண்கள் குழுக்களில் உறுப்பினராக இருப்பதன் மூலம் அவர்களுக்கு உதவியும் வருகிறார்.

“ஒன்றை முயற்சித்து பார்த்தால்தான் நம்மால் அதை செய்ய முடியுமா என்றே தெரியவரும். உங்களுக்கு நீச்சல் அடிக்க வராது என்று நினைத்தால் மறுநாளே நீச்சல் வகுப்பில் சேருங்கள். முயற்சிக்கும் முன்னரே முடியாது என்று யாரவது சொன்னால் அதை புறந்தள்ளிவிட்டு முன்னேறுங்கள்.”

– BBC – Tamil

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த யு வதிகளுக்கு நடந்த கொ டுமை!!

பிரித்தானியாவில் இருந்து..

பொத்துவில் பிரதேச ஹோட்டலில் வெளிநாட்டு பெ ண் ஒ ருவரை பா லியல் து ஷ்பிர யோகம் செய்யப்பட்டதுடன் ம ற்றொரு பெ ண்ணை பா லியல் து ஷ்பிர யோகம் செய்ய மு யற்சித்த ந பர் ஒ ருவர் கை து செய்யப்பட்டுள்ளார்.

பா லி யல் து ஷ்பிரயோ கத்திற்குள்ளாகிய பிரித்தானிய நாட்டை சேர்ந்த 18 வ யதுடைய பெ ண் தற்போதுவரையில் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ச ந்தேக நப ரால் பா லியல் து ஷ்பிர யோகம் செ ய்ய மு யற்சிக்கப்பட்டவர், கு றித்த பி ரித்தானிய பெ ண்ணின் 19 வ யதுடைய ந ண்பி என தெரியவந்துள்ளது. அவரும் பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து மற்றுமொரு ஹோட்டலுக்கு சென்று திரும்பி வரும் போது இந்த ச ம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கை து செய்யப்பட்ட 28 வ யதுடைய ச ந்தேக ந பர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதிய வாகனம் : ஒருவர் வைத்தியசாலையில்!!

மின் கம்பத்தில் மோதிய வாகனம்

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தோப்பூர் சந்தியில் டிப்பர் வாகனமொன்று மின் கம்பமொன்றில் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு காயங்களுக்கு இலக்கான நபர் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை மீறி பயணித்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையர்கள் உட்பட 14 நாட்டவர்களுக்கு தடை விதித்த கட்டார்!!

14 நாட்டவர்களுக்கு..

கட்டார் நாட்டிற்கு செல்லும் 14 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கட்டார் அறிவித்துள்ளது. 14 நாட்டு பயணிகளில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

கட்டார் நாட்டிற்குள் கொரோனா தொற்று பரவுவதனை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் பேஸ்புக் விருந்து : பெருமளவு பெண்கள் கைது!!

பேஸ்புக் விருந்து..

கொழும்பில் போ தைப்பொருள் விருந்து நடத்திய பெண்கள் உட்பட 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பன்னிப்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேஸ்புக் விருந்து ஒன்றில் போ தைப்பொட்களுடன் 17 பெண்கள் உள்ளிட்ட 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சு ற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கஞ்சா உள்ளிட்ட போ தை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சில நாடுகளுக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக வெளிநாடொன்றுக்கான விமான சேவைகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இடைநிறுத்தியுள்ளது.

அந்த வகையில் குவைத்துக்கான விமான சேவைகளையே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இடைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்று பரவுகையை அடுத்து குவைத் இலங்கை உட்பட்ட 6 நாடுகளின் விமான சேவைகளை இடைநிறுத்தியது.

இதனையடுத்தே எதிர்வரும் 12ஆம் திகதி வரை குவைத்துக்கான சேவைகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இணைய பாவனையால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

சைபர் மோ சடியாளர்கள் தொடர்பில் நாட்டிலுள்ள பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

வீட்டிலுள்ள இல்லத்தரசிகள் நாள் முழுவதும் இணையத்தளம் மற்றும் முகப்புத்தகத்தை பயன்படுத்துவதனால் மோ சடியாளர்களிடம் சி க்குவது தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் இதுவரையில் கிடைத்துள்ள முறைப்பாடுகளில் நூற்றுக்கு 50 வீதமானவைகள் அவ்வாறான முறைப்பாடுகள் என குறிப்பிடப்படுகின்றது.

இல்லத்தரசிகள் தங்கள் புகைப்படங்களை மோ சடி நபர்களின் வட்ஸ்அப் மற்றும் முகப்புத்தகத்தில் அனுப்புவதனால் பண மோ சடி மற்றும் பா லியல் ரீதியான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முகப்புத்தகம் ஊடாக அறிமுகமாகும் புதிய நண்பர்களுக்கு பெண்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் அனுப்புவதனால் பிர்ச்சினைகள் ஏற்படுவதாக நூற்றுக்கு 30 வீதமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

பெண்களில் பெரும்பாலானோர் தங்கள் கையடக்க தொலைபேசி ஊடாக இணையத்தளம் பயன்படுத்துவதனால் அதனை நூற்றுக்கு 98 வீதமானோர் கணக்கிடப்பட்டுள்ளது.

இதனால் முகப்புத்தகத்தில் அறியாத நண்பர்களுடன் எவ்வித கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பெண்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் தனியார் நிகழ்வுகள் மற்றும் உல்லாசப் பயணங்களின் புகைப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவிட வேண்டாம் என இலங்கையர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வான் கவிழ்ந்து கோர விபத்து : மூவர் வைத்தியசாலையில்!!

கோர விபத்து..

கிண்ணியாவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற வான் ஒன்று மூதுார் இறால்குழிப்பாலத்திற்கு (உப்புக்காச்சி மடு) முன்னால் மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில்,

அதில் பயணித்த மூவர் பலத்த காயங்களுடன் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் நேற்று (08.03.2020) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதில் கிண்ணியாவிலிருந்து பயணித்த மத்ரஸா மாணவர்கள் மூவரே படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

வானின் சாரதியும் சிறுகாயங்களுக்கு உள்ளாகி மூதுார் தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதுார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாலையில் மரத்துடன் மோதி கோர விபத்து : 6 பேர் பலி, 3 பேர் படுகாயம்!!

விபத்து..

இன்று அதிகாலை தென்னிலங்கையில் ஏற்பட்ட கோர விபத்தில் 6 பேர் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.

லுனுகம்வெஹேர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இவர்கள் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து காரணமாக மேலும் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் பயணித்த வேன் ஒன்று மரத்துடன் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இன்று அதிகாலை 2.00 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் ஒன்றே விபத்திற்கு உள்ளாகியுள்ளதென தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

யாழில் அப்பாவி முதியவரின் உயிரைப் பறித்த விபத்து!!

யாழில்..

வட்டுக்கோட்டை – தெல்லிப்பளை வீதியில் சித்தன்கேணிச் சந்தியில் நேற்று (08.02.2020) நண்பகல் உழவு இயந்திரம் மோதி வயோபதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்தார்.

பண்டத்தரிப்பு – வல்லசுட்டியைச் சேர்ந்த கிருஸ்னன் இராஜதுரை (வயது-65) என்ற முதியவரே சம்பவத்தில் உ யிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உணவகத்தில் சாப்பாடு எடுத்துக் கொண்டு துவிச்சக்கர வண்டியை ஓட முற்பட்ட முதியவரை எதிரே வந்த உழவு இயந்திரம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

அத்துடன் உழவு இயந்திரம் சம்பவ இடத்திலிருந்த கடை ஒன்றுக்குள் புகுந்தது இதன்போது கடையில் இருந்த பெண் ம யிரிழையில் உயிர் தப்பினார். சம்பவத்தை அடுத்து உழவு இயந்திரச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து : 6 பேர் பலி : 3 பேர் படுகாயம்!!

கோர விபத்து..

தென்னிலங்கையில் அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 6 பேர் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.

லுனுகம்வெஹேர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இவர்கள் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து காரணமாக மேலும் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் பயணித்த வேன் ஒன்று மரத்துடன் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இன்று அதிகாலை 2.00 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் ஒன்றே விபத்திற்கு உள்ளாகியுள்ளதென தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற அணிக்கு 11பேர் கொண்ட கிரிக்கெட் தொடர்!!

கிரிக்கெட் தொடர்

வவுனியாவில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற அணிக்கு 11பேர் கொண்ட 125 000, 100 000, 75 000,50 000 பணப் பரிசல்கள் கொண்ட பிரமாண்டமான ஜனக நந்த குமார வெற்றிக் கிண்ணத்தை நியூ சன் விளையாட்டு கழகம் தனதாக்கிக் கொண்டது.

இரண்டாம் இடத்தினை யங் பைட் விளையாட்டுக் கழகமும் மூன்றாம் நான்காம் இடங்களை பரலோக மாதா அடைக்கல மாதா அணியினரும் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக விஜய், தொடர் ஆட்ட நாயகனாக அருள், சிறந்த பந்து வீச்சாளராக தனுசன், சிறந்த துடுப்பாட்ட வீரராக தயா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இப் பணப் பரிசானது மென்பந்து தொடரிலே மிகவும் அதிகமான பரிசில்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வான் விபத்து : மூவர் வைத்தியசாலையில்!!

வான் விபத்து..

கிண்ணியாவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற வான் ஒன்று மூதுார் இறால்குழிப்பாலத்திற்கு (உப்புக்காச்சி மடு) முன்னால் மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவர் பலத்த காயங்களுடன் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதில் கிண்ணியாவிலிருந்து பயணித்த மத்ரஸா மாணவர்கள் மூவரே படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

வானின் சாரதியும் சிறுகாயங்களுக்கு உள்ளாகி மூதுார் தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதுார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைப் பெண் தமிழ்நாட்டில் செய்த மோசமான செயல் : பொலிசில் சிக்கியது எப்படி?

இலங்கைப் பெண்..

தமிழகத்தின் கோயம்புத்தூர் கோனியம்மன் கோவில் தேரோட்டத்தின் போது கூட்ட நெரிசலில் செயின் ப றிப்பில் ஈடுபட்ட 10 பேரிடமிருந்து 35 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, மூன்று பெண்கள் அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்தது தெரியவந்தது.

திருச்சூரை சேர்ந்த பாண்டிய ராஜன் என்பவரது மனைவி இந்துமதி (27), இலங்கை கொழும்பைச் சேர்ந்த ரஞ்சித்குமார் மனைவி பராசக்தி (36), லண்டனை சேர்ந்த சின்னத்தம்பி மனைவி செல்வி(36) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்தியா முழுவதும் கோவில்களில் எங்கு திருவிழா நடந்தாலும் இதுபோன்று செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். மேலும் பொலிசிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், உறவினர் முறையில் நாங்கள் அனைவரும் அக்கா, தங்கைகள்.

இணையதளம் மூலம் கோவில் திருவிழா நடப்பதை தெரிந்து கொள்வோம், லண்டன், இலங்கையிலிருந்து வந்து அறை எடுத்து தங்கியிருந்து கோவிலுக்கு சென்று நோட்டமிடுவோம்.

பின்னர் விழா நடைபெறும் போது எங்கள் கைவரிசையை காட்டுவோம் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இவர்களது பாஸ்போர்டை முடக்கிய பொலிசார், இந்துமதியின் கணவரை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே திருப்பதி, புதுச்சேரி போன்ற பகுதிகளில் பொலிசிடம் சிக்கி வெளியே வந்ததும் தெரியவந்துள்ளது.

-தமிழ்வின்-

சென்னையில் தூ க்கில் தொ ங்கிய இலங்கைத் தமிழ்ப் பெண் : திருமணமான 4 மாதத்தில் விபரீதம்!!

தமிழ்ப் பெண்..

தமிழகத்தில் திருமணமான 4 மாதத்தில் இலங்கைத் தமிழ்ப் பெண் தூ க்கில் ச டலமாக தொ ங்கிய சம்பவம் தொடர்பாக வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராயலாநகர், கோத்தாரி நகரைச் சேர்ந்தவர் அருண் (36).
இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

அருணுக்கும் இலங்கையை சேர்ந்த தமிழ்ப்பெண் காஞ்சனா (29) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட த கராறில் காஞ்சனா வீட்டில் உள்ள அ றைக்குள் சென்று தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று தூ க்கில் தொ ங்கிய காஞ்சனா உ டலை மீ ட்டு பிரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அருணுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் பேஸ்புக் மூலம் இலங்கை பெண்ணான காஞ்சனாவுடன் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அந்த திருமணத்தை பதிவு செய்வதற்கான பணிகள் நடந்து வந்தது.

இந்த நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி த கராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் இருவருக்கும் த கராறு ஏற்பட்டது.

இதனால் வி ரக்தி அ டைந்த காஞ்சனா, தான் அறைக்குள் சென்று த ற்கொ லை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் விளையாட்டாக கூறிவிட்டு செல்வதாக நினைத்து அருண் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டார்.

சிறிதுநேரம் கழித்து உள்ளே சென்று பார்த்தபோதுதான் காஞ்சனா உண்மையிலேயே தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷ ஊசி போட்டு த ற்கொ லை செய்து கொண்ட பெண் மருத்துவர் : காதலால் நடந்த வி பரீதம்!!

பெண் மருத்துவர்

தமிழகத்தில் பெ ண் ஒருவர் காதல் தோல்வி காரணமாக வி ஷ ஊ சி போட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி காந்தி மார்க்கெட்டை சேர்ந்தவர் ஜெயசந்திரன். இவருக்கு புனிதவதி(31) என்ற ம கள் இருந்தார். புனிதவதி மருத்துவருக்கு படித்துவிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பொது மருத்துவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் புனிதவதியின் பெற்றோர் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் புனிதவதியை கோவிலுக்கு அழைத்துள்ளனர். ஆனால் அவர் வராத காரணத்தினால், வீட்டில் விட்டு விட்டு கோவிலுக்கு சென்றுள்ளனர்.

கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய பெற்றோர், புனிதவதியின் அறையில் விளக்கு எரிவதை கண்டுள்ளனர். மகள் ஏதோ படித்து கொண்டிருப்பாள் என்று நினைத்து, அவர்கள் தூங்க சென்றுவிட்டனர்.

அதன் பின் மறுநாள் காலை எழுந்தும், புனிதவதியின் அறையில் தொடர்ந்து விளக்கு எரிந்த படி இருந்ததால், ச ந்தேகமடைந்த பெற்றோர், அறையின் கதவை தட்டியுள்ளனர்.

ஆனால் கதவு திறக்காததால், உடனடியாக உறவினர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, புனிதவதி ம யங்கிய நி லையில் கி டக்க, அருகில் ஊசி, சிரிஞ்ச் கிடந்ததைக் கண்டு அ திர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இ றந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து புனிதாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, விரைந்த வந்த பொலிசார் அவரின் உ டலை மீ ட்டு பி ரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் புனிதவதி வி ஷ ஊசி  போ ட்டு த ற்கொ லை செய்தது தெரியவந்தது.
இவர் சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடந்தததால் அன்றைய தினத்தில் இருந்து அவர் ம னவே தனையில் இருந்து வந்துள்ளார்.

இந்த வி ரக்தியின் காரணமாக த ற்கொ லை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் காதல் தோல்வியா அல்லது வேறு எதுவும் காரணமா? என பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.