பாடசாலை மாணவர்கள்..

முதலாம் இணைப்பு : யாழில் பாடசாலை மாணவர்கள் 61 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையைச் சேர்ந்த குறித்த மாணவர்கள் சீருடையுடன் வீதியில் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கின் போ ர் என அழைக்கப்படும் துடுப்பாட்ட போட்டி யாழின் இரு பிரபல பாடசாலைகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு பிரபல ஆண்கள் பாடசாலை மாணவர்கள் பாடசாலை சீருடையில், பாடசாலை கொடிகளுடன் பாண்ட் வாத்தியங்கள் இசைத்தவாறு சிறிய ரக வாகனங்களில் வீதிகளில் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவாறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

மாணவர்களின் கொண்டாட்டங்களால் வீதியில் பயணிப்போர் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததால் அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் குறித்த மாணவர்களை கைது செய்து விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.

புதிய இணைப்பு : யாழில் பிரபல ஆண்கள் பாடசாலையைச் சேர்ந்த 61 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் விசாரணையின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. க டுமையான எ ச்சரிக்கையின் பின்னர் குறித்த மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





































































