மணமேடையில் திருமணத்தை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்த மணப்பெண் : தெரியவந்த காரணம்!!

மணப்பெண்..

இந்தியாவில் மணமேடையில் மணப் பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், வானபார்தி மாவட்டத்தில் உள்ள சார்லபள்ளி என்னும் கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த வெள்ளி கிழமை திருமணத்திற்கான ஏற்பாடுகள் வெகு விமர்சையாக நடைபெற்றுகொண்டிருந்தது.

திருமணத்திற்கு மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் வருகை தந்திருந்தனர். முகூர்த்தத்திற்கான நேரம் வந்த போது, மணமகன் திருமண மேடைக்கு வந்து மணப்பெண்ணின் வருகைக்காக காத்திருந்தார்.

அப்போது மண மேடைக்கு மணப்பெண் வந்து அமர்ந்தார். பின்னர் தாலியை எடுத்து உறவினர்கள் மற்றும் பெரியவர்களின் ஆசிர்வாதத்தை பெற்று மண மகளின் கழுத்தில் கட்ட மணமகன் சென்றபோது திடீரென, யாரும் எதிர்பாராதவிதமாக மண மேடையில் இருந்து எழுந்த மணப்பெண், தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

இதைக் கண்டு அ திர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை தடுக்க முயன்ற போது, யாருடைய பேச்சையும் கேட்காமல் அங்கிருந்து சென்றுள்ளார்.

இது குறித்து மணமகளின் பெற்றோர், திருமண மேடைக்கு வருவதற்கு முன்பு மண மகள் அவருடைய முன்னாள் காதலனை பார்த்துள்ளதாகவும் அதனால் திடீரென மனம் மாறி திருமணத்தை நிறுத்திவிட்டதாகவும்,

தற்போது அந்த இளைஞன் மற்றும் என்னுடைய மகனை கண்டுபிடிக்க முடியவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வவுனியா இளைஞன் 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்று சாதனை!!

க.நிசோபன்..

31 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியாவை சேர்ந்த க.நிசோபன் தங்கப்பதக்கத்தை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம் தோறும் நடாத்துகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27ம் திகதி வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் இடம்பெற்ற 20 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண்களுக்கான பிரிவில் 10000 மீற்றர் ஓட்டப்போட்டியில் 10000 மீற்றர் தூரத்தை 35.16.10 நிமிடத்தில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை பெற்று வவுனியா மாவட்டத்துக்கும், வடமாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இதேவேளை 29ம் திகதி இடம்பெற்ற 20 வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்களுக்கான பிரிவில் 5000 மீற்றர் வேக நடை போட்டியில் 5000 மீற்றர் தூரத்தை 32.21.42 நிமிடத்தில் ஓடி முடித்து வவுனியாவை சேர்ந்த ஜெ.தனுசியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார் .

இதேவேளை வவுனியா மாவட்டமானது தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கபடி போட்டியில் 3ம் இடத்தையும், ஆண்களுக்கான உதைபந்து போட்டியில் 2ம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க ஊழியர்களுக்காக அறிமுகமாகும் புதிய நடைமுறை!!

புதிய நடைமுறை..

அரசாங்க ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய கடித ஆவணங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் இணையத்தில் சேர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சின் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரச முகாமைத்துவ அமைச்சுக்கு கிடைக்கும் ஆவணங்களில் ஓய்வூதியம் பெறுவதற்காக சமர்ப்பக்கப்படும் ஆவணங்களே அதிகமாக உள்ளதென அவர் கூறியுள்ளார்.

சில தனிப்பட்ட ஆவணங்களில் உள்ள குறைப்பாடுகள் காரணமாக அதனை தயாரிப்பதற்கு தாமதம் அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆவணங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் வைத்துக் கொள்வதற்காகவும் அதிக இடம் தேவைப்படுவதனாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தகவல்களை இணையத்தில் சேர்ப்பதற்காக அமைச்சிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு க டத்தப்படவிருந்த பிலிப்பைன்ஸ் பெண்கள்!!

பிலிப்பைன்ஸ் பெண்கள்..

தெற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா வழியாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு க டத்தப்படவிருந்த 110 பிலிப்பைன்ஸ் பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்சின் Zamboanga துறைமுகம் வழியாக மலேசியாவின் Sandakan துறைமுகத்தை போ லியான ஆவணங்களுடன் சென்றடைய முயன்ற 56 பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக பிலிப்பைன்ஸ் குடிவரவு ஆணையர் ஜைமி மோரெண்ட் கூறியுள்ளார்.

அதே போல், கடந்த பிப்ரவரி 10ம் திகதி மலேசியா செல்ல முயன்ற 37 பெண்களும் அதற்கு அடுத்த வாரத்தில் 17 பெண்களும் மீ ட்கப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்சிலிருந்து மலேசியா சென்ற பின்னர் அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக பணியாற்ற கொண்டு செல்லப்படவிருந்ததாகக் கூறப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

மோட்டார் சைக்கிளில்..

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் விபத்திற்கு இலக்காகியுள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளி வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

வீதியை குறுக்கறுத்த பெண்ணுக்கு வழி விடும் போது சைக்கிள் திசைமாறி மின் கம்பத்தில் மோதியதாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இளைஞன் ஆபத்தான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

54 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி 28 இலட்சம் ரூபா கொள்ளை!!

திருமணம் செய்வதாக..

54 வயதுடைய பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து 28 இலட்சம் ரூபாய் கொள்ளையடித்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பிரதேசத்தில் வைத்து 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தான் திருமணம் செய்யாதவர் என கூறிய நபர் 54 வயதான பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதற்கு விருப்பம் தெரவித்துள்ளார்.

புத்தல பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது காணி ஒன்றை ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய்க்கு விற்பனை விற்பனை செய்து அந்த பணத்தை மொனராகலை பிரதேச வங்கி கிளையில் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் வைப்பு செய்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் அவரை திருமணம் செய்வதாக கூறி நெருக்கமாக இருந்த இளைஞன் வங்கி கடன் அட்டை பெறுவதற்கு அழைத்து சென்றுள்ளார். இதன் போது கடன் அட்டை தன்னிடம் வைத்துக் கொண்ட இளைஞன் பெண்ணுக்கு வேறு கடன் அட்டையை வழங்கியுள்ளார்.

அதன் பின்னர் 48 முறை பதுளை மற்றும் சுற்றியுள்ள பிரதேசங்களில் உள்ள ATM இயந்திரங்களில் 28 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளார். தனது கணக்கில் பணம் குறைவது தொடர்பில் இந்த பெண் பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ள்ளார்.

முறைப்பாட்டிற்கமைய மேற்கொண்ட விசாரணையில் இந்த இளைஞர் 28 லட்சம் ரூபாய் பணத்தில் பேருந்து ஒன்று கொள்வனவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பூநகரி பகுதியில் கோர விபத்து : ஸ்தலத்திலயே ஒருவர் ப லி!!

கோர விபத்து..

கிளிநொச்சி – பூநகரி சங்குபிட்டி வீதியில் இடம்பெற்ற வாகன வி பத்தில் ஒ ருவர் ஸ் தலத்திலயே ப லியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றுமொரு வாகனத்துடன் மோ தி வி பத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் இ ளைஞர் ஒ ருவர் ச ம்பவ இ டத்திலேயே உ யிரிழந்துள்ளார். இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா பண்டாரிகுளத்தில் ஆவா குழு அட்டகாசம்?

பண்டாரிகுளத்தில்..

வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன் பெற்றோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் சுவரில் ஆவா குழு என  பொறிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரிகுளம், கூமாங்குளம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் முன்னால் மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் அவ்விடத்தில் நின்றுவிட்டு வீட்டு கேற் முன்பாக பெற்றோல் குண்டு வீச்சு நடத்தியுள்ளதுடன்,

வீட்டு சுவரில் ஆவா 001  என ஸ்பிறே பெயின்ரால் பொறித்துள்ளனர். அத்துடன் வீட்டில் இருந்தவர்களை அக்கா, அக்கா எனக் கூப்பிட்டதாகவும், வீட்டில் இருந்தவர்கள் அச்சத் தினால் வெளியில் வராமையால் கேற் மீதும் கூரிய ஆயுதங்களால் அடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதிக்கு சென்ற அயலவர்கள் வீட்டாருடன் பேசி பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பண்டாரிகுளம் மற்றும் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளின் போது மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்த இளைஞர் ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் சிறிய பிளாஸ்டிக் போத்தல் ஒன்றில் பெற்றோல் ஊற்றி கொழுத்தியுள்ளதாகவும் பெற்றோல் குண் டு வீச்சு இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

டயபர் அணிந்து கொண்டு தொட்டிலில் தூங்கி குழந்தையாக வாழும் 25 வயது அழகிய இளம்பெண்!!

அழகிய இளம்பெண்

அமெரிக்காவில் வசிக்கும் 25 வயது இளம்பெண், குழந்தை போல டயபர் அணிந்து கொண்டும், தொட்டிலில் தூங்கி கொண்டும் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் பெண் பைஜி மில்லர் தனது வாழ்க்கையை முழுநேரமும் குழந்தைகளை போல் வாழ்ந்து வருகின்றார். குழந்தைகளை போல டயப்பருடன் தூங்குவது, விளையாடுவது என நாள் முழுவதும் குழந்தைகளை போல டயப்பர் அணிந்துகொண்டு தனது வேலைகளை செய்கின்றார்.

இதோடு தனது வீடு முழுவதையும் பொம்மைகளை வாங்கி வைத்து அதனோடு விளையாடி வருகின்றார் பைஜி. இந்த இளம்பெண் தனது வாழ்க்கை முறையை பராமரிப்பதற்காக மாதத்திற்கு சுமார் 250 டொலர்கள் வரை செலவிடுவதாக தெரிவிக்கபட்டுள்ளது.

பைஜி கடந்த மே 2018 முதல் இந்த வாழ்க்கை முறையை கடைப்பிடித்து வருகிறார். இது குறித்து பேசிய பைஜி, நான் ஒரு குழந்தையைப் போல உடை அணியலாம்.

நான் யாருக்காகவும் எனது வாழ்க்கையை மாற்றி கொள்ளமாட்டேன். என் விருப்பப்படி வாழுவேன் என கூறினார். பைஜியின் நண்பர்கள், உறவினர்கள் இவரின் இந்த செயலை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

நான் பொது இடங்களில் இவ்விதம் நடந்து கொள்வதில்லை. வீட்டில் மட்டும் குழந்தை தன்மையுடன் இருப்பதாக பேஜ் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு அவரது துணையும் இதற்கு எவ்வித தடையும் தெரிவிக்கவில்லை.

பைஜிக்கு திருமணம் நிச்சயிக்க பட்டவர் இது போன்ற செயல் பாடுகளில் ஈடுபடுவதில்லை எனவும் பைஜியின் செயல்பாடுகளில் அவரால் இடர்பாடுகள் ஏதும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

நாட்டு மக்களுக்கு வானிலை அவதான மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

நாட்டு மக்களுக்கு..

நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலையின்போது 11 மாவட்டங்களின் மக்கள் பா துகாப்பான முறைகளை கையாளுமாறு வானிலை அவதான மையம் கோரியுள்ளது. வடமேற்கு, மேல்,தென், சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மாவட்ட மக்களுக்கும் குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முதியோர் மற்றும் நோயாளர்கள் இவ் விடயத்தில் கவனமெடுக்க வேண்டுமெனவும் அதிகளவிலான நீர் அருந்த வேண்டுமெனவும் குழந்தைகளை சரிவர கவனிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

மன்னார், புத்தளம், குருநாகல், கம்பஹா, கேகாலை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் கடும்வெப்பம் நிலவும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

குறித்த பிராந்தியங்களில் வசிப்பவர்கள் அடுத்த சில நாட்களுக்கு, குறிப்பாக காலை வேளையில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதுபோனால் பக்கவாதம், தசைப்பிடிப்புகள் மற்றும் வெப்பச் சோர்வு போன்ற அசௌகரியங்கள் ஏற்படக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கடற்கரையில் இரவு குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்த தாய் : காலையில் காத்திருந்த து யரம்!!

கடற்கரையில்..

சென்னை கடற்கரையில் படுத்துறங்கிய பெண்ணின் 8 மாத கு ழந்தை க டத்தி செல்லப்பட்ட சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியை பூர்விகமாக கொண்டவர் சினேகா. நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவர், கணவரைப் பிரிந்து தனது 8 மாத குழந்தை ராஜேஸ்வரியுடன் சென்னைக்கு வந்துள்ளார்.

அங்கு ஊசிமணி, மாலைகள், பலூன்கள் விற்று வந்த சினேகா, கடற்கரை சாலையோர நடைபாதையில் நரிக்குறவர் மக்களுடன் வசித்து வந்துள்ளார். சினேகா கடந்த வியாழக்கிழமை அன்று இரவு வழக்கம்போல, தனது குழந்தையுடன் தூங்கிய நிலையில் காலையில் எழுந்து பார்த்துபோது குழந்தை அருகில் இல்லாமல் பாய் மட்டும் இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.

எங்கு தேடியும் கிடைக்காததால், சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வரதட்சணை வேண்டாம்… உங்கள் மகள் இது மட்டும் செய்தால் போதும் : ஆச்சரியபட வைத்த கலெக்டர்!!

ஆச்சரியபட வைத்த கலெக்டர்..

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர் ஒருவர் மணப்பெண் வீட்டாரிடம் வித்தியாசமாக வரதட்சணை கேட்டு திருமணம் செய்து கொண்டது தற்போது தெரியவந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவகுரு பிரபாகரன். பொறியல் படிப்பு முடித்த இவர், அதன் பின் ஐஐடியில் எம்.டெக் முடித்த பின்பு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற லட்சியம் எழுந்துள்ளது.

இதனால் பிற துறைகளில் கிடைத்த வேலை வாய்ப்புகளை எல்லாம் துறந்தார். தன்னுடைய ஆரம்ப காலத்தில் பொறியியல் படிப்பு படிக்கும் போது, தாய்-தந்தையார் ஆடு, மாடு மேய்த்து அதில் கிடைத்த வருமானத்தில் தான் படித்து வந்துள்ளார்.

அதன் பின் நண்பர்களும் அவர் படிப்பதற்கு உதவியுள்ளனர். கல்லூரியில் படிக்கும் காலத்தில், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாரான போதும் செல்போன் ரீ-சார்ஜ் கடையில் பகுதிநேர ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 2018-ல் ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 101-வது இடத்தையும், தமிழக அளவில் 3-வது இடத்தையும் பிடித்தார்.

இதையடுத்து இவருக்கு திருமணத்திற்கான வரன்கள் பார்க்கப்பட்டது. ஆனால் எத்தனையோ வரன்கள் வந்தும், அவர் சேவை செய்யும் மருத்துவர் தான் வேண்டும் என்று கூறியுள்ளார். அதன் படி இவர் கடந்த 26-ஆம் திகதி இவர் டாக்டர்.கிருஷ்ணபாரதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன்னதாக மணப்பெண் வீட்டாரிடம் சிவகுரு வரதட்சனை என்ற அடிப்படையில் விதித்த நிபந்தனை, திருமணத்திற்கு பிறகு வாரத்தில் 2 முறை, நான் பிறந்த ஒட்டங்காடு கிராமத்தை சுற்றியிருக்கும் கிராமத்தில் இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

இதற்கு மணப்பெண்ணின் பெற்றோரும் சம்மதம் தெரிவிக்க, அவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. மாவட்ட ஆட்சியரின் இந்த முடிவு சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

அடுத்தடுத்து உ யிரிழந்த தா ய், த ந்தை : அக்காவை கவனித்து கொள்ள 15 வயது தம்பி எடுத்த க ண்ணீர் முடிவு!!

15 வயது தம்பி..

இந்தியாவில் தா ய் மற்றும் த ந்தை அடுத்தடுத்து உ யிரிழந்ததால் ஆதரவற்ற நிலையில் மாற்றுத்திறனாளி அக்காளை கவனிக்க சிறுவன் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய சம்பவம் க ண்ணீரை வரவழைத்துள்ளது.

மைசூர் மாவட்டம் ஆலனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதிக்கு அனுஷா (17) என்ற மகளும், ஆகாஷ் (15) என்ற மகனும் உள்ளனர். இதில் அனுஷா மூளைவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி ஆவார்.

சிறுவன் ஆகாஷ் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். இதனால் மஞ்சுளா-குமார் தம்பதி அனுஷாவை கவனித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சுளாவும், குமாரும் அடுத்தடுத்து உ யிரிழந்தனர். தாய், தந்தையை இழந்த அனுஷாவும், ஆகாசும் ஆதரவற்றனர்.

தான் பள்ளிக்கு சென்றால், அக்காளை கவனிக்க முடியாதே என கருதிய ஆகாஷ் தனது பள்ளி படிப்பை திடீரென்று பாதியில் நிறுத்தினான். இதுபற்றி தாசில்தார் மஞ்சுநாத்திற்கு தகவல் தெரியவந்தது.

இதைதொடர்ந்து மஞ்சுநாத் சிறுவன் ஆகாஷிடம் விசாரித்தார். அப்போது தனது தாய், தந்தை இ றந்துவிட்டதாகவும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ள அக்காளை பார்க்க ஆள் இல்லை எனவும், எனவே அக்காளை கவனிப்பதற்காக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியதாகவும் அவன் தெரிவித்தான்.

இதைகேட்டு அ திர்ச்சி அடைந்த தாசில்தார் மஞ்சுநாத், சிறுவன் ஆகாஷ் மீண்டும் பள்ளி செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும், அவனது அக்காளை காப்பகத்தில் சேர்த்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக அவனிடம் உறுதி அளித்தார்.

இதுகுறித்து தாசில்தார் மஞ்சுநாத் கூறுகையில், தாய், தந்தையை இழந்ததால் ஆகாசும், அவனது சகோதரி அனுஷாவும் ஆதரவில்லாத நிலையில் உள்ளனர். அனுஷா மூளைவளர்ச்சி குன்றியவர் ஆவார். அவரை பராமரிக்க மைசூருவில் உள்ள கருணாலயத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மேலும் ஆகாஷ் மீண்டும் பள்ளி செல்ல நடவடிக்கை எடுத்துள்ளோம். அரசு சார்பில் ஆகாஷ்- அனுஷாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

ஹோட்டலுக்கு வேலைத் தேடிச்சென்ற இருவர் செய்த காரியம்!!

இருவர் செய்த காரியம்..

ஹோட்டலுக்கு வேலைத் தேடிச்சென்ற இருவர், அங்கு பணிபுரிந்த மற்றுமொரு ஊழியரின் தொலைபேசியை திருடிய சம்பவம் பதுளை நகரில் இன்று இடம்பெற்றுள்ளது.

மேற்படி நபர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என ஹோட்டல் உரிமையாளர் உறுதியளித்ததையடுத்து தமக்கு தங்குமிட வசதி இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து ஹோட்டலின் மேல் மாடியில் அவர்கள், தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டன என்று ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

ஆடை மாற்றிவிட்டு வருவதாக கூறி, மேல்மாடிக்கு சென்ற இருவரும், திட்டமிட்ட அடிப்படையிலேயே இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

சுமார் 20 ஆயிரம் ரூபா பெறுமதியான தொலைபேசியே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது என பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவர் தொடர்பான காட்சிகள் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரீ.வி. கமராவில் சிக்கியுள்ளன.

இலங்கையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட 898 வெளிநாட்டவர்கள்!!

வெளிநாட்டவர்கள்..

இலங்கையில் விசா இன்மை மற்றும் வேறு காரணங்கள் காரணமாக 898 வெளிநாட்டவர்கள் இருந்து நாடு க டத்தப்பட்டுள்ளனர். கடந்தாண்டு நாடு க டத்தப்பட்ட வெளிநாட்டவர்களில் 54 பெண்களும் உள்ளடங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அவ்வாறு நாடு க டத்தப்பட்டவர்களில் இந்தியர்கள், சீன நட்டவர்களே அதிகமானவர்கள் என தெரியவந்துள்ளது. கடந்த வருடம் இந்திய நாட்டவர்கள் மாத்திரம் 597 பேர் நாடு க டத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடு கடத்தப்பட்ட சீனர்களின் எண்ணிக்கை 147 ஆகும்.

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 39 பேரும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 18 பேரும் நைஜீரியா நாட்டை சேர்ந்த 15 பேரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 11 பேரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியா செல்ல காத்திருந்த மகனின் அதிர்ச்சிகர முடிவு : க ண்ணீருடன் தந்தை வெளியிட்ட தகவல்!!

மகனின் அதிர்ச்சிகர முடிவு..

கடந்த வாரம் மத்திய வங்கி கட்டடத்தில் இருந்து கு தித்து உ யிரிழந்த சி றுவன் பட்டப்படிப்பிற்காக அவுஸ்திரேலியா செல்ல காத்திருந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் உயர் அதிகாரியின் மகன் ஒருவரே கடந்த வாரம் த ற்கொ லை செய்துக் கொண்டார். மகனின் இ றப்பு தொடர்பில் க ண்ணீருடன் கருத்து வெளியிட்ட தந்தை,

“எனது மகன் காதல் தொடர்புகள் எதுவும் கொண்டிருக்கவில்லை. அப்படி இருந்தால் நிச்சயம் என்னிடம் கூறியிருப்பார். மகன் குடுபத்துடன் மிகவும் அன்பாக நடந்துக் கொள்ளும் ஒருவர். எதனையும் மறைக்க மாட்டார்.

சம்பவ தினத்தன்று என்னை பார்க்க வந்தார். நான் அலுவலகத்தில் காத்திருக்குமாறு கூறிவிட்டு கூட்டம் ஒன்றிற்கு சென்றுவிட்டேன். எனினும் ஏன் இந்த முடிவிற்கு மகன் வந்தார் என்பது எங்களுக்கு இன்னமும் புரிய வில்லை.

மிகவும் அன்பான இரக்க குணமுடைய மகனின் நினைவுகளால் மீண்டு வர முடியவில்லை. அவர் அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்பு மேற்கொள்வதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். எனினும் திடீர் ம ரணம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாம் எங்களது பிள்ளைகளுக்கு எங்கள் நேரத்தை அதிகமாக வழங்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். நாங்கள் அவர்களின் மனதில் என்ன உள்ளது என அறிய தவறுவதே நாங்கள் செய்யும் தவறாகும்.

பிள்ளைகளுக்கு அதிக அக்கறை செலுத்தி அவர்களின் மணங்களை புரிந்துக் கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.