வவுனியா குருமன்காடு பகுதியில் பேரூந்துடன் மோதுண்டு வான் விபத்து!!

விபத்து..

வவுனியா மன்னார் பிரதான வீதியில் குருமன்காடு பகுதியில் இன்று (29.02.2020) மதியம் 12.30 மணியளவில் பேரூந்துடன் வான் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் காவல் அரணுக்கு அருகாமையில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வீதி ஒரத்தில் தரித்து நின்ற வான் வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் வவுனியா மன்னார் பிரதான வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேரூந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் பேரூந்தும் வானும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீதேவி பூ தேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய நுழைவாயில் வளைவு திறப்பு!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீதேவி பூ தேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு தேவஸ்தானம் ஆலய நுழைவாயில் வளைவு திறப்பு விழா கடந்த 26 ஆம் திகதி நடைபெற்றது.

வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் (1.6 மில்லியன் ரூபாய் செலவில் ) நிர்மானிக்கப்பட்ட  நுழைவாயில் வளைவு  பாராளுமன்ற உறுப்பினரால்  வைபவ ரீதியாக  திறந்து வைக்கப்பட்டது .

கொரோனா வைரஸ் SARS ஐ விட 1000 மடங்கு மோசமானது : விஞ்ஞானிகள் எ ச்சரிக்கை!!

கொரோனா வைரஸ்..

கொரோனா வைரஸ் SARS ஐ விட 1,000 மடங்கு அதிகமான தொற்றுநோயாக இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

COVID-19 இன் பரவல் 2002/3 இல் SARS வெ டித்த அதே பாதையை பின்பற்றும் என்று நிபுணர்கள் ஆரம்பத்தில் கருதினர், ஏனெனில் வைரஸ்கள் மரபணு ரீதியாக கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கின்றன.

ஆனால் மனித உடலில் உள்ள உயிரணுக்களுடன் இது பிணைக்கும் விதம் எச்.ஐ.வி மற்றும் எபோலா போன்ற மிகவும் ஆக்கிரோஷமான நோய்களுக்கு ஒத்ததாக இருப்பதை அவர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

இது SARS ஐ விட ‘100 முதல் 1,000 மடங்கு’ மக்களைப் பாதிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று வடக்கு சீனாவின் தியான்ஜினில் உள்ள நங்கை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

SARS, அல்லது க டுமையான சுவாச நோய்க்குறி, உலகளவில் 8,000 பேரை பாதித்தது மற்றும் 2002 ஆம் ஆண்டில் மட்டும் 774 பேரைக் கொன்றது.

ஆனால் தற்போதைய கொரோனா வைரஸ் இரண்டு மாதங்களுக்குள்ளாக ஏற்கனவே கிட்டத்தட்ட 3,000 பேரைக் கொ ன்றது மற்றும் 82,000 நோயாளிகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தீவிரம் : வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை பா துகாக்க நடவடிக்கை!!

கொரோனா வைரஸ்

புதிய கொரோனா வைரஸ் என்ற திட்டத்திற்குள் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய வலயத்தில் வாழும் இலங்கையர்களின் பா துகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில், கொரோனா பரவியுள்ள நாடுகளில் வாழும் இலங்கையர்கள் எவருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதுக் குழுவினரினால் இவர்களின் பா துகாப்பு மற்றும் சேமநலனுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஏற்படக்கூடிய நிலைமைகள் தொடர்பில் தவறாது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் வெளிநாட்டு தொடர்புகள் அமைச்சரினால் இந்த நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பான க ண்காணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் சமர்ப்பித்த தகவல்களை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.

கல வரத்தால் நின்றுபோன இந்துப் பெண்ணிற்கு திருமணம் நடத்தி வைத்த இஸ்லாமியர்கள்!!

நெகிழ்ச்சி சம்பவம்

டெல்லியில் இரு கு ழுவினருக்கு இடையே நடைபெற்ற க லவரத்தால் நின்றுபோன இந்து பெண்ணின் திருமணத்தை இஸ்லாமியர்கள் நடத்தி வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு டெல்லியில் முஸ்லிம்கள் அதிகம் வசித்து வரும் பகுதியை சேர்ந்த சாவித்ரி பிரசாத் (23) என்பவருக்கு, கடந்த 24ம் திகதியன்று திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் குடியுரிமை சட்டதிருத்தத்தை எ திர்த்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியின் போது, இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோ தல் க லவரமாக மாறியது.

இந்த சம்பவத்தில் 38 பேர் உ யிரிழந்ததோடு, நூற்றுக்கும் அதிகமானோர் ப டுகாயமடைந்தனர். ஆயிரக்கணக்கான கடைகள் எரிந்து நாசமாகின.

இந்த சம்பவத்தால் திருமணத்தை தள்ளி வைக்குமாறு மணமகனின் குடும்பத்தினர் அ ழுத்தம் கொடுத்தனர். இதனால் மருதாணி வைத்து திருமணத்திற்கு ஆசையுடன் தயாராக இருந்த சாவித்ரி, வீட்டில் அ ழுதுகொண்டே இருந்துள்ளார்.

ஆனால் நிலைமை மோ சமாகிக்கொண்டே இருந்ததால், செவ்வாய்க்கிழமை நடக்கவிருந்த திருமணம் நடக்கவில்லை. திருமணம் செவ்வாய்க்கிழமைக்கு பதிலாக புதன்கிழமை மாற்றப்பட்டது.

இருப்பினும், ஊ ரடங்கு உத்தரவு மற்றும் பெரும்பாலான சந்தை இடங்கள் மூடப்பட்டிருந்ததால் மணமகனும் அவரது உறவினர்களும் மணமகளின் திருமணத்திற்கு வருவது மிகவும் ஆ பத்தானது. எனவே சாவித்திரியின் தந்தை திருமணத்தை மேலும் ஒத்திவைக்க முடிவு செய்தார்.

சாவித்ரியின் குடும்ப அவலநிலை குறித்து அக்கம் பக்கத்திலுள்ள முஸ்லிம்களுக்குத் தெரிய வந்ததும், மணமகனின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடைய உறவினர்களுக்கு பா துகாப்பு கொடுப்பதாக உறுதியளித்து திருமணத்தை நடத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

அதன்படி அக்கம்பக்கதை சேர்ந்த முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுகூடி, சாவித்ரிக்கு புதன்கிழமையன்று திருமணம் செய்து வைத்துள்ளனர்.

வவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்றம் : பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் முடிவு!!

நடமாடும் நீதிமன்றம்..

மாதத்தில் இரண்டு தடவை வவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்ற நடவடிக்கையை முன்னெடுக்க பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் த.தர்மேந்திராவின் ஒழுங்குப்படுத்தலில் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் தர்மபால செனவிரட்ன தலைமையில் வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது முன்னர் வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் நடமாடும் நீதிமன்றம் இயங்கியது. ஆனால் யு த்த நடவடிக்கைகள் காரணமாக அது பின்னர் கைவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மாதத்தில் இரண்டு நாட்கள் வவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்றத்தை ஏற்படுத்தி தருமாறு கிராம மட்ட பொது அமைப்புக்கள் உதவிப் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதனை குறித்த அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானத்திற்காக முன்வைத்த போது இது தொடர்பான கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அபிவிருத்தி குழுத்தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்றத்தை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியதுடன், அது ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் உதவிப் பிரதேச செயலாளர் குறித்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட நீதிபதிகளுடன் பேசி விடயத்தை முன் நகர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!!

வெளிநாடுகளில் பணியாற்றும்..

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த விடயத்தை அறிவித்துள்ளார். நாட்டுக்கு பாரிய வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் சுமார் 10 லட்சம் பேர் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள வேலைக்கொள்வோருடன் கலந்துரையாடி ஓய்வூதிய திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார மையம் விடுத்துள்ள அதி உச்ச எச்சரிக்கை!!

கொரோனா வைரஸ்..

கொரோனா வைரஸ் தொடர்பில் உலக சுகாதார மையம் அதி உச்ச எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த தொற்றினால் ஈரானில் மாத்திரம் 210 பேர் ப லியாகியுள்ள நிலையிலேயே உலக சுகாதார மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஏற்கனவே சீனாவில் இந்த தொற்றினால் 2500க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். அத்துடன் புதிதாக பலர் இந்த தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் தா க்கத்தினால் சர்வதேச நாடுகளில் பங்கு சந்தைகளில் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இரண்டு இலங்கையர்கள் நேற்று அங்கொட தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் வறுமையினால் உண்ண உணவில்லாமல் உ யிரிழந்த அரச ஊழியர் : மனதை உருக்கும் சம்பவம்!!

மனதை உருக்கும் சம்பவம்..

கிளிநொச்சி பிரதேசசபை ஊழியர் ஒருவர் வறுமையினால் உண்ண உணவில்லாமல் உ யிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. 44 வயது அரச ஊழியரே இவ்வாறு பரிதாபகரமாக உ யிரிழந்தவராவார்.

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் தற்போது வசித்துவரும் குறித்த ஊழியர் யு த்த காலத்தில் இந்தியாவிற்குச் சென்று வாழ்ந்த நிலையில் 2011ஆம் ஆண்டு நாடு திரும்பிய நிலையில் பட்டதாரி என்ற வகையில் 2015இல் அரச நியமனம் பெற்றிருந்தார்.

நோய்வாய்ப்பட்ட தாயார் நடக்க முடியாத சகோதரன் என மிகவும் வறுமையில் வாடிய இவர் இருப்பிடம் இன்மையால் கடனைப் பெற்று அதனை அமைத்துக்கொண்டார்.

இவ்வாறு கடன் பெற்ற நிலையில் அதற்குரிய தவணைப் பணம் கழிக்கப்பட்டு மிகவும் சொற்ப பணமே கையில் கிடைக்கும் நிலையில் அப்பணம் வைத்திய செலவிற்கே போதுமானதாக இன்மையால் முறையான உணவு இல்லாமையால், கடுமையான நோய்வாய்ப்பட்டுள்ளார்.

இதனால் சில சந்தர்ப்பங்களில் சக ஊழியர்கள் உதவி புரிந்துள்ளனர். இவ்வாறு தொடர் வறுமையின் காரணமாக உணவின்றிப் பரிதாபகரமாக கடந்த சனிக்கிழமை உ யிரிழந்தவரின் இறுதிக் கிரிகைகளிற்கும் உதவிகள் மூலமே மேற்கொள்ள வேண்டிய அவலம் காணப்பட்டதோடு,

சகோதரன் சிகிச்சைக்கு வைத்தியசாலைக்குச் சென்றால் ஒரு காலை அகற்றி விடுவர் என அஞ்சி வைத்தியசாலைக்கும் செல்ல மறுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஓர் 44 வயதினையுடையவர் தனது குடும்பத்திற்காக தன்னை வருத்தி உ யிரிழந்தமை பெரும் கொடுமையாக பார்க்கப்படுகின்றது.

கொரோனா வேகமாக பரவி வருகின்றது : உலகின் ஒவ்வொரு நாட்டையும் தாக்கும் அபாயம்!!

கொரோனா வைரஸ்..

கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகில் இருக்கும் ஒவ்வொரு நாட்டையும் சென்றைடையக் கூடிய ஆற்றலை கொண்டுள்ளதாகவும், இதன் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், உலக சுகாதர அமைப்பின் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சீனாவில் பரவிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகில் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக சீனாவில் இப்போது கொரோனா வைரஸால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து ஐரோப்பிய நாடுகளில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி அதிகமாகவும் பரவி வருகிறது.

இதனால் ஒவ்வொரு கண்டங்களிலும் இருக்கும் நாடுகளில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த பட்டியலை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், உலக சுகாதார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், கோவிட் -19 நோயின் பரவல் அதிகமாகி வருகிறது, இது அனைத்து நாடுகளையும் அடையக் கூடும் என்று கூறியுள்ளார்.

மேலும், உலக சுகாதர அமைப்பின் தலைவரான Tedros Adhanom Ghebreyesus, இந்த வைரஸ் ஒரு தொற்று நோயை கொண்டுள்ளது, உலக நாடுகள் ஒரு முக்கிய கட்டத்தில் இருக்கின்றன.

நாங்கள் உண்மையில் மிகவும் நுட்பமான சூழ்நிலையில் இருக்கிறோம், அதில் பாதிப்பு எந்த திசையிலும் நாம் அதை எவ்வாறு கையாளுகிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார். இதுவரை குறைந்தது 53 நாடுகளில் 83,000 க்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோய் இப்போது வேகமாக பரவுகிறது, இது இப்போது பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் வடக்கு இத்தாலியில் பல உ யிர்களை வாங்கியுள்ளது. இதன் காரணமாக அரசாங்கங்கள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

கண்ணில் டாட்டூ குத்திக்கொண்ட அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த வி பரீதம்!!

இளம்பெண்..

போலந்தில் கண்ணில் கருமை நிற டாட்டூ போட்ட இளம்பெண் பார்வையை இழந்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோக்லாவ் நகரத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா.

மொடலான இவர், ராப் இசை பாடகர் மற்றும் ஃபைட்டரான போபெக்கின் ரசிகையாக இருக்கிறார். போபெக் தனது இரண்டு கண்களிலும் கருமை நிற டாட்டூவை போட்டிருப்பார். இந்நிலையில் அதேபோன்று தனக்கு கண்ணில் டாட்டூ போட வேண்டும் என அலெக்சாண்ட்ரா, ஒரு டாட்டூ போடும் நபரை அணுகியுள்ளார்.

கண்ணில் டாட்டூ போடும் அனுபவம் இல்லாத போதிலும், பணத்திற்காக அந்த நபர் பொ ய் கூறி அலெக்சாண்ட்ராவிற்கு டாட்டூ போட்டதாக தெரிகிறது.

கண்ணில் கருமை நிறத்தை வைத்து டாட்டூ போட்டு முடித்தவுடன், இரண்டு கண்களும் எ ரிச்சலாக இருப்பதாகவும், வ லிப்பதாகவும் அலெக்சாண்ட்ரா தெரிவித்திருக்கிறார்.

ஆனால் சிறிது நேரத்தில் சரியாகிவிடும் எனக்கூறி, வ லி நிவாரணி ஒன்றை கொடுத்து அப்பெண்ணை டாட்டூ போடும் நபர் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் தனது இடது கண் பார்வையை அலெக்சாண்ட்ரா இ ழந்துள்ளார். உடனே மருத்துவர்களிடம் அப்பெண் சென்றிருக்கிறார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணில் கருமை நிற டாட்டூ ப ரவியுள்ளது, அதனை சரி செய்ய முடியாது என தெரிவித்ததுடன், வலது பக்க கண்ணிலும் பார்வை போக வாய்புள்ளது என அ திர்ச்சியளித்துள்ளனர்.

அழகிற்கு முக்கியத்துவம் கொடுத்த அ லட்சியதால் மட்டுமே இந்த சம்பவம் நடந்துள்ளது என பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனிடையில் அலெக்சாண்ட்ராவுக்கு டாட்டூ குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகில் முதல் முறையாக நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

கொரோனா வைரஸ்..

ஹொங்ஹொங்கில் வாழும் பெண் ஒருவரின் செல்லப்பிராணியான நாய் ஒன்றுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Yvonne Chow Hau Yee என்ற அந்த பெண்ணுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உள்ளது. எனவே, மனிதர்களிடமிருந்து நோய் தொற்றிய முதல் விலங்காக அந்த நாய் இருக்கலாம் என கருதப்படுகிறது.

Yvonne, தனது பொமரேனியன் வகை நாயை விலங்குகள் நல மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு அதன் உடலிலிருந்து மாதிரிகள் எடுத்து சோதிக்கப்பட்டதில், அந்த நாயின் உடலில் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது.

ஆனால், அதற்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை. என்றாலும், 14 நாட்களுக்கு அந்த நாய் தனிமைப்படுத்தப்பட உள்ளது.

மீண்டும் மீண்டும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, அதன் உடலில் வைரஸ் முற்றிலுமாக இல்லை என்பது தெரியவந்தபின்னர் அந்த நாய் விடுவிக்கப்படும்.

(சும்மாவே விலங்குகளை கோரமாக கொ லை செய்தார்கள் சீனர்கள், இந்த தகவல் தெரிந்தால் என்ன செய்யப்போகிறார்களோ தெரியாது.)

வவுனியாவில் கிணற்றிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு!!

கிணற்றிலிருந்து..

வவுனியா – ஓமந்தை பகுதியில் கா ணாமல் போன இளைஞனொருவர் கிணற்றிலிருந்து ச டலமாக மீட்கப்ட்டுள்ளார்.

ஓமந்தையில் நேற்று இரவு முதல் கா ணாமல் போயிருந்ததாக கூறி தேடப்பட்டு வந்த இளைஞரே இன்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா- ஓமந்தை அலகல்லுபோட்டகுளம் பகுதியில் வசித்து வந்த 26வயதுடைய அர்ச்சுணன் அருள்குமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் கா ணாமல் போயிருந்த நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டு வளவிலுள்ள தோட்டக் கிணற்றில் தண்ணீர் இறைக்கப்பட்டு தே டுதல் மேற்கொள்ளப்பட்டபோது கிணற்றில் அவரது சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் குறித்து ஓமந்தை பொலிஸாருக்கும் அப்பகுதி கிராம அலுவலகருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மரண விசாரணை அதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த இளைஞன் மனநலம் குன்றிய நிலையில் சில காலங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா விவசாய பணிப்பாளரின் இடமாற்றத்தில் இழுபறி நிலை!!

பேராதனை விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானுவிற்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில்

புதிய வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக அருந்ததி வேல்சிவானந்தன் இன்று (28.02.2020) காலை 8.30 மணியளவில் அவரது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அருந்ததி வேல்சிவானந்தன் SLAGS GRADE 01 தரம் ஒன்றினை சேர்ந்தவராவார்.

வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்களம் மற்றும் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை ஆகியவற்றின் பல்வேறு குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில்,

வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக கடமையாற்றிய அ.சகிலாபாணுவிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இடமாற்றம் வழங்கப்பட்ட வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அ.சகிலாபானு தான் மேல் முறையீடு செய்துள்ளதாகவும் இடமாற்றம் பெற்று செல்ல முடியாது என தெரிவித்து அவரது அறையினை மூடிவிட்டு சாவியினை எடுத்து வெளியே சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

20 வயது பெண்ணை உயிராக காதலித்த 17 வயது சிறுவனுக்கு நடந்த விபரீதம்!!

17 வ யது சி றுவன்..

தமிழகத்தில் 20 வயது இளம்பெண்ணை தீ விரமாக காதலித்த 17 வ யது சி றுவன் காதல் தோ ல்வியில் தீக்கு ளித்து த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் குலமங்கலம் ஏடி காலனியை சேர்ந்தவர் தெய்வேந்திரன். கூலிவேலை செய்யும் இவருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தால் தனது மூன்றாவது மகனுக்கு சேவாக் என்று பெயரிட்டுள்ளார்.

17 வயதான இவர் ஆலங்குளத்தில் டூவீலர் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். சேவாக் அதே அப்பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணை தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார்.

இதை அந்த பெண்ணும் பெண் வீட்டாரும் கண்டித்துள்ளனர். ஆனால் எனக்கு வயது ஒரு பொருட்டல்ல என்று காதலில் சேவாக் உறுதியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் சேவாக் ஒருதலையாக காதலித்த பெண்ணுக்கு நேற்று முன்தினம் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனால் ம னமுடைந்த சேவாக் அந்த பெண்ணை சந்தித்து நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

குலமங்கலம் வீட்டிலிருந்து இரவு 12 மணியளவில் தனது இருச்சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு சென்றுள்ளார்.

த ற்கொ லை செய்ய முடிவு செய்த சேவாக், தான் ஓட்டி வந்த வாகனத்தில் இருந்து பெ ட்ரோலை எடுத்து ம து அ ருந்துவதற்காக த ண்ணீர் எடுத்து வந்த கேனில் அதை பிடித்து உ டலில் ஊ ற்றி நெ ருப்பு வைத்துக் கொண்டார்.

உடல் முழுவதும் தீ பரவிய நிலையில், நள்ளிரவில் அலறல் ச த்தத்தோடு ஊருக்குள் ஓடி வந்துள்ளார். ச த்தம் கே ட்டு வெளியே வந்தவர்கள் பா தி எ ரிந்த நிலையில் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

80 சதவீத தீக்கா யத்துடன் அனுமதிக்கப்பட்ட சேவாக் சிகிச்சை ப லனின்றி பரிதாபமாக உ யிரிழந்தார். முன்னதாக பொலிசாரிடம் அளித்த ம ரண வாக்குமூலத்தில் தான் ஒருதலை காதலால் த ற்கொ லை செய்து கொள்கிறேன் என கூறியிருக்கிறார். சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோழிக்கறியை சாப்பிட்டதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டாரா தமிழக இளைஞர்?

கொரோனா வைரஸ்

தமிழகத்தில் கடனுக்கு சிக்கன் தர மறுத்த கடையில் உள்ள கோழிகளில் கொரோனா வைரஸ் இருப்பதாக வதந்தி பரப்பிய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பீ தியிலும், அ திர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையில் கொரோனா வைரஸ் கோழி உள்ளிட்ட பறவைகள் மூலம் பரவுவதாக வெளியாகும் செய்திகள் இந்தியா முழுவதிலும் பீதியைக் கிளப்பியிருக்கின்றன. இதன் காரணமாக பல இடங்களில் கோழிக் கறியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் நெய்வேலியில் வசிக்கும் பாண்டி என்பவர் சில தினங்களுக்கு முன்னர் அங்குள்ள சிக்கன் கடையில் 1 கிலோ சிக்கன் வாங்கியுள்ளார்.

அதை வீட்டில் சமைத்துச் சாப்பிட்டபோது மதியம் 12 மணிக்குக் கடும் வயிற்று வ லி ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றபோது அவருக்கு கொரோனோ வைரஸ் இருப்பதாகவும் அதற்கான மருந்துகள் தங்களிடம் இல்லாததால் கடலூர் அரசு மருத்துவனைக்குச் செல்லும்படி அந்த மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

தற்போது, அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது பாண்டு மகன் பாண்டிக்கு மருத்துவர்கள் 48 மணி நேரம் கெடு விதித்திருக்கிறார்கள்.

அவரது உடல் கவலைக்கிடமாக இருக்கிறது என்பதாக ஒரு தகவல் கடந்த சில தினங்களாக கடலூர், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளின் வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. நெய்வேலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவலால் அப்பகுதி மக்கள் அ திர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து பாண்டி கறி வாங்கிய கடைக்கு கூட்டம் வராததால் அ திர்ந்து போன அதன் உரிமையாளர் பக்ருதீன், நண்பர்கள் வாயிலாக நடந்ததை தெரிந்து கொண்டார். இதையடுத்து சக்திவேல் என்ற சிறுவனே அனைத்துக்கும் காரணம் என பொலிசில் புகார் அளித்தார்.

அதில், தனது கடையில் அடிக்கடி சிக்கன் வாங்கிய 17 வயது சிறுவன் சக்திவேல் அதற்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தான், மீண்டும் கடனுக்கு சிக்கன் கேட்ட போது நான் தரவில்லை.

இதையடுத்து என்னை பழிவாங்குவதாக சவால் விட்டு வேண்டுமென்றே கொரோனா வ தந்தியை பரப்பியுள்ளான் என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சக்திவேல் கைது செய்த பொலிசார் அவனை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இது குறித்து பேசிய பொலிஸ் அதிகாரி லதா, பாண்டி என்பவருக்கு கொரோனா ஏற்பட்டது என்பது முழுவதும் சக்திவேல் பரப்பிய வதந்தி தான், சிக்கன் தராததாலும் தனது நண்பர் பாண்டியைக் கலாய்ப்பதற்காகவும் சக்திவேல் இவ்வாறு செய்துள்ளார் என கூறியுள்ளார்.