இலங்கையர்கள் எதிர்நோக்கியுள்ள ஆ பத்து : ம ரணத்தையும் ஏற்படுத்தலாம்!!

பக்கவாதம்

இலங்கையில் தமது வாழ்நாளில் நான்கு பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் பக்கவாத ஆ பத்தை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் நிபுணரான மருத்துவ கலாநிதி காமினி பத்திரன அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், எனினும் பக்கவாதம் என்பது தடுக்கக்கூடிய அதேபோன்று சுகமாக்கக்கூடிய ஒன்று. கொழும்பை பொறுத்த வரையில் 1000 பேரில் 9 பேர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இலங்கையில் 2 இலட்சம் பக்கவாத நோயாளிகள் உள்ளனர். முன்னதாக பக்கவாதம் என்பது 6 பேருக்கு ஒருவர் என்ற ரீதியிலேயே இருந்தது. எனினும் தற்போது அது தீவிரமடைந்துள்ளது.

முன்னர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 16 வீதத்தினர் ஒரு மாதத்துக்குள் மரணமாகும் சந்தர்ப்பங்கள் இருந்தன. எனினும் அரைவாசிப்பங்கினர் சிறிய இயலாமையுடன் வாழக்கூடியவர்களாக இருந்தனர்.

இலங்கையை பொறுத்தவரையில் ம ரணத்தை ஏற்படுத்தும் நான்காவது ஏதுவாக பக்கவாதம் அமைந்துள்ளது. இலங்கையில் மரணத்தை ஏற்படுத்தும் முதலாவது ஏதுவாக மாரடைப்பு உள்ளது. இரண்டாவது ஏதுவாக புற்றுநோய் உள்ளது.

இதேவேளை உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய், அதிக கொழுப்பு அளவு, மன அழுத்தம் போன்ற பிற சுகாதார நிலைகளின்போது மக்கள் மத்தியில் உள்ள அனுபவ குறைவே பக்கவாதத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.

சாதாரணமாகவே பக்கவாதம் என்பது முன்கூட்டிய எச்சரிக்கை இன்றி ஏற்படும் நோயாகும். எனினும் 90 வீதமான பக்கவாத நோய்களை தடுக்க முடியும்.

நோயாளிகளுக்கு மூன்று மணித்தியாலங்களுக்குள் சிகிச்சை அளித்தால் அவர்களுக்கான இயலாமையை குறைக்க முடியும். எனவே பக்கவாதம் ஏற்பட்ட நோயாளிகளுக்கு எவ்வித குடிநீரையும் கொடுக்காது உடனடியாக வைத்திசாலைக்கு அழைத்து செல்ல வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அனுராதபுரத்தில் யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தொற்றியதாக சந்தேகிக்கப்படும் யுவதி அனுராதபுரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அனுராதபுரம் ஹிதேகம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான ஒருவர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேவையாற்றி வரும் ஊழியர் என தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமைக்கான அறிகுறியை அடுத்து அந்த யுவதி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கியிருந்து அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாரதி அனுமதிப் பத்திர விநியோகத்தை பொறுப்பேற்கும் அரசாங்கம்!!

சாரதி அனுமதிப் பத்திரம்

ஸ்மார்ட் காட் சாரதி அனுமதிப் பத்திர விநியோகத்தை அரசாங்கம் பொறுப்பேற்கும் என போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இந்த விநியோகத்தை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று அவர் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அமைச்சர் இந்த பதிலை வழங்கியுள்ளார். ஸ்மார்ட் காட் சாரதி அனுமதிப்பத்திர விநியோகத்தை தனியார் நிறுவனம் ஒன்று 2009ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது. இந்த காலத்துக்குள் பாரிய நிதி மோ சடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மெட்ரோ பொலிட்டன் குருப் ஒப் கொம்பனீஸ் இந்த செயற்பாட்டை மேற்கொள்ளும் போது உடன்பாட்டை மீறி செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்போது 7 வருடங்களுக்குள் அந்த நிறுவனம் 6 பில்லியன் ரூபாயை வருவாயாக பெற்றுள்ளது.

அந்த நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி மாதம் ஒன்றுக்கு 22500 ஸ்மார்ட் சாரதி அனுமதிப் பத்திரங்களையே விநியோகிக்க முடியும். எனினும் குறித்த நிறுவனம் 55 ஆயிரம் அட்டைகளை விநியோகித்துள்ளதென்றும் நளிந்த ஜெயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலய சப்பர திருவிழா!(படங்கள்,வீடியோ)

வவுனியா நகரின் மத்தியில்   அமைந்துள்ள  ஸ்ரீ கந்தசாமி  ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின்  சப்பர திருவிழா நேற்று 06.02.2020  வியாழக்கிழமை  இடம்பெற்றது.

மாலையில் வசந்தமண்டப  பூஜை இடம்பெற்று  தொடர்ந்து  நடன  நிகழ்வுகள் இடம்பெற்று  7.30 மணியளவில்   முருகப்பெருமான் சப்பரத்தில்   ஆரோகணித்து  வவுனியா நகரை  வலம்  வந்த  நிகழ்வு இடம்பெற்றது .

 


 

 

சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு

சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான மருத்துவச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் இலகுப்படுத்தப்படவுள்ளன.

இதன்படி நாட்டின் 150 ஆதார மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளில் அமைக்கப்படும் சிறப்பு பிரிவுகளால் இந்த ம ருத்துவச் சா ன்றிதழ்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

அமைச்சரவை இதற்கான முடிவை எடுத்துள்ளது. தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகமே தற்போது சாரதி அனுமதி பத்திரங்களை வழங்குவதற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்ட பிரிவாக அமைந்துள்ளது. இந்தநிலையில் ஜனாதிபதி கோட்டாபயவின் பணிப்புரையின் கீழ் புதிய முறை பின்பற்றப்படவுள்ளது.

இதேவேளை ஜனவரி 27ம் திகதி முதல் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான முன்கூட்டிய பதிவுகளை இணையம் மூலம் பெற்றுக்கொள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சீன பொருட்களுக்கு இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து!!

சீன பொருட்களுக்கு..

கொரோனா வைரஸ் அ ச்சம் காரணமாக சீனாவில் இருந்து வரும் கப்பல் பொருட்களை திருப்பியனுப்பும் செயற்பாடுகளில் இறக்குமதியாளர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களில் தாம் இறக்குமதி செய்த பொருட்கள் வருகின்ற போதும் அதனை இலங்கைக்குள் கொண்டு வருவதற்கு இலங்கையின் இறக்குமதியாளர்கள் த யக்கம் வெளியிடுகின்றனர். சில இறக்குமதியாளர்கள் பொருட்களை திருப்பியனுப்பியும் உள்ளதாக தெரியவருகிறது.

சீனாவின் பொருட்கள் இவ்வாறு நிராகரிக்கப்படுமானால் வரும் வாரங்களில் சீன பொருட்களுக்கு சந்தையில் பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்று அ ச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள முன்னணி வர்த்தக நிறுவனம் ஒன்று கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரும் வரை தமக்கு பொருட்களை அனுப்ப வேண்டாம் என்று சீனாவில் உள்ள தமது பங்காளி நிறுவனத்துக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் ஆட்கள் மத்தியிலேயே பரவும் ஆபத்து கொண்டிருக்கிறது. அது பொருட்களின் ஊடாக பரவாது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ் பல்கலைக் கழகத்தில் ப கிடிவ தை என்ற பேரில் பா லியல் கொ டுமை : த ற்கொ லைக்கு முயன்ற மா ணவி!!

யாழ் பல்கலைக்கழகத்தில்

இலங்கையில் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுவரும் ப கிடிவ தைகள் இன்று கட்டுக்கடங்காமல் செல்கின்றன. ப கிடிவ தைகள் தொடர்பில் பல்வேறு சட்டதிட்டங்கள் அமுல்ப்படுத்தப்பட்டுவருகின்ற போதிலும் அவற்றையெல்லாம் தாண்டி தொழில்நுட்பத்தினை சாதகமாகப் பயன்படுத்தி எ ல்லைமீ றல்கள் தொடர்ந்துவருகின்றன.

இதற்கு சான்றாக யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுவரும் ப கிடிவ தைகள் மாறிவருகின்றன. யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீடத்திற்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்ட மா ணவிகள் மீது மிகக் கொ டூரமான முறையில் ப கிடிவ தை மேற்கொள்ள முற்பட்டுள்ளதாக அ திர்ச்சித் த கவல்கள் கசிந்துள்ளன.

புதுமுக மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களை வாங்கும் மாணவர்கள் அநாகரிகமான முறையில் அவர்களுடன் உரையாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் இவர்களின் தொ ல்லை காணரமாக மன உ ளைச்சலுக்கு உள்ளான மாணவி ஒருவர் த ற்கொ லைக்கு முயற்சித்துள்ளார். இதனை அடுத்து குறித்த மா ணவியின் தந்தை அவரிடம் விசாரித்த போது பல அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.

அதாவது மா ணவியின் தொலைபேசி இலக்கத்திற்கு ஏராளமான தொலைபேசி இலக்கங்களில் இருந்து தொடர்ச்சியாக அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் வாட்ஸ் குழு ஒன்றினை உருவாக்கிய அவர்கள் மா ணவியிடம் நி ர்வா ணப் படங்களை அனுப்புமாறும் மி ரட்டியுள்ளனர். இவ்வாறான அழைப்புக்கள் குறித்த மாணவி உட்பட்ட ஏனைய மா ணவிகளுக்கும் வந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிநுட்பத்தின் அசுர வளர்ச்சி இவ்வாறு பல்கலைக் கழக மாணவர்களிடையே அநாகரிகமாக செயற்பட்டு வருவதனை ஏன் பல்கலைக் கழக நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்பது கேள்விக்குறியே.

பல்கலைக்கழகங்களிற்குள் ப கிடிவ தையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எ திராக ச ட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான ஒழுங்குகள் செய்யப்பட்டு வருவதாக அண்மையில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

இதற்கேற்ப இவ்வாறு யாழ்.பல்கலைக்கழகத்தில் ப கிடிவ தை என்ற போர்வையில் நி ர்வாண ப்படம் கேட்டு மா ணவிகளிடம் அ நாகரிகமாக நடந்துவரும் மாணவர்களை எவ்வாறு எப்போது தண்டிக்கப்போகின்றீர்கள்.

நாட்டின் நாளைய கல்விமான்களாக திகழவிருக்கும் மாணவச் செல்வங்களை ப கிடிவ தை என்ற பெயரில் ஏன் இவ்வாறு அ சிங்கப்படுத்துகின்றார்கள் சக மாணவர்கள். அதற்கு இடம்கொடுப்பது யார்? யாழ் பல்கலைக் கழக நிர்வாகமோ , யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் தலைவரோ இதனைக் கண்டுகொள்வதில்லை போலும்.

தயவுசெய்து இவ்வாறான இழிசெயல்கள் இனிமேலும் நடக்காதவாறு யாரால் தட்டிக்கேட்க முடியுமோ அவர்கள் தாமதமின்றி இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொரோனா நோயாளியிடமிருந்து விலகி ஓடும் தாதிகள் : அதிர வைக்கும் வீடியோ!!

தாதிகள்

கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள நோயாளியிடமிருந்து செவிலியர்கள் விலகி ஓடும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீடியோ நோய் தோன்றிய சீனாவின் வுஹான் நகரில் உள்ள தடுப்பு காப்பகத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

சீனாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா அறிகுறி உள்ளவர்கள் நோய் தடுப்பு காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது.

காப்பகத்தில் அடிப்பைட வசதி மட்டுமே உள்ளதாகவும், நோய் கண்டறியும் சாதனங்கள் கூட இல்லை, செவிலியர்கள் கவனிப்பும் சரியில்லை என உள்ளுர் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தற்போது அதை நிரூபிக்கும் வகையில் காப்பகம் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவர், கோபமடைந்து திட்டிய படி செவிலியர்களுக்கு அருகே செல்கிறார். நோயாளி அருகில் வர வர அவர்கள் விலகிச்செல்கின்றனர்.

செவிலியர்கள் பா துகாப்பு உடை அணிந்து சிகிச்சை அளித்தாலும், பாதிக்கப்பட்ட நோயாளிகளில் சிலர் நோயை பரப்பும் நோக்கத்தோடு, அவர்களின் மாஸ்கை கழட்டி எச்சில் துப்புவதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜயின் பிகில் பட வருவாய் 300 கோடி ரூபாய் : குறைத்துக் காட்டியது அம்பலம் : சிக்கிய ஆதாரங்கள்!!

சிக்கிய ஆதாரங்கள்

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு முக்கிய காரணம் பிகில் படத்தின் வசூல் தான் என்று கூறப்பட்ட நிலையில், அது தொடர்பான வருமான வரித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நேற்று திடீரென்று நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக இன்றும் விஜயிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது விசாரணை பிகில் படத்தில் தான் எவ்வளவு சம்பளம் வாங்கினேன் என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

சுமார் 18 மணி நேர விசாரணையை தொடர்ந்து விஜய் மற்றும் சங்கீதாவிடம் வாக்குமூலம் பெற்று வரும் நிலையில், இந்த திடீர் விசாரணை மற்றும் சோதனைக்கு காரணம் பிகில் படத்தின் வசூல் தான் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் பிகில் படம் 300 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்ததாக கூறி, விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தகவல்களை பரப்பினார். அது தான் முக்கிய காரணம் என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது,

இதையடுத்து சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடந்தப்பட்டு வரும் சோதனையில் 77கோடி ரூபாய் தற்போது வரை சிக்கியுள்ளது.

மேலும் விஜய் வீட்டில் இருந்து எந்த ஒரு பணமும் கைப்பற்றபடவில்லை எனவும், அவரிடம் பிகில் படத்தின் சம்பளத்தை பற்றியே அதிகாரிகள் கேட்டுள்ளதாகவும், அதற்கு விஜய் அந்த படத்தில் மூலம் கிடைத்த பணத்தை வைத்து அசையா சொத்துக்கள் வாங்கியதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இது குறித்து வருமானவரி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5ம் திகதி தமிழ் திரையுலகில் இருக்கும் முக்கிய நான்கு நபர்களான, படத்தின் தயாரிப்பாளர், நடிகர், சினிமா பைனான்சியர் மற்றும் விநியோகஸ்தர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இவர்கள் சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்று கூறப்பட்ட பிகில் திரைப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள், படம் 300 கோடிக்கு மேல் வசூல் என்று கூறப்பட்டதால், பைனான்சியரான அன்புச்செழியன் மற்றும் நடிகர் விஜய் ஆகியோருக்கு தொடர்புடைய 38 இடங்களில், வருமானவரித்துறை குழுவினர் நேற்று முதல் சோதனை நடத்தினர்.

இதில், 300கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்கள் , சொத்து பத்திரங்கள், முன் திகதியிட்ட காசோலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் பிகில் படம் மூலம் 300 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாக தெரிவித்திருந்தது. இந்த வருமானம் சரி தானா என்பதை பார்ப்பதற்காகவே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அதில், படத்தின் மொத்த வசூல் 300 கோடிக்கு மேல் அதிகமாக இருப்பதை வருமான வரி துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 300 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிவிட்டு, அதன் பின் 300 கோடி ரூபாய் தான் வருமானம் என்று குறைத்து காட்டியது தற்போது அம்பலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஒரு கிலோ நெல் 50 ரூபாவிற்கு கொள்வனவு!!

நெல் கொள்வனவு

பெரும்போகத்தில் அரசாங்கம் நெல் கொள்வனவு செய்யும் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ கிராம் நெல்லை 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் நடவடிக்கை வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த செயற்றிட்டம் வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள நெல் களஞ்சியசாலையில் இன்று (06.02.2020) காலை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த வருடங்களில் நாட்டரிசி நெல் ஒரு கிலோகிராம் 38 ரூபாவுக்கும் சம்பா நெல் ஒரு கிலோகிராம் 41 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்பட்டது.

இந்தத் தடவை அனைத்து ரக நெல்லுக்கும் ஆகக்கூடிய விலை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அரசாங்கம் ஒரு கிலோ கிராம் நெல் 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுகின்றது.

விவசாயிகள் பலர் ஆர்வத்துடன் நெல் விற்பனைக்கு வருகை தந்திருந்தனர். இந்த வேலைத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு விசேட சலுகைகளாக முதல்தடவையாக ஈரத்தன்மையுடன் கூடிய நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா சந்தேகம் : 15 பேர் சிகிச்சைக்காக அனுமதி!!

கொரோனா வைரஸ் சந்தேகம்

இலங்கை முழுவதும் உள்ள சில வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 15 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் மூன்று நோயாளிகளும், குருணாகல் வைத்தியசாலையில் இரண்டு பேரும், கண்டி வைத்தியசாலையில் நான்கு பேரும், நீர்கொழும்பு வைத்தியசாலையில் இரண்டு பேரும், ராகமை, கம்பஹா, பதுளை, யாழ்ப்பாணம் வைத்தியசாலைகளில் தலா ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனப் பிரஜைகள் அதிகமாக காணப்படும் கொழும்பு, தெஹிவளை, இரத்மலானை பிரதேசங்களில் சுகாதார அதிகாரி அலுவலகங்கள் ஊடாக அவர்களை கண்காணித்து வருவதாகவும் அனில் ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் ஆலயத்தை வழிபட சென்றவருக்கு நடந்த விபரீதம்!!

நெடுங்கேணி பகுதியில்

வவுனியா நெடுங்கேணி பகுதியில் இன்று (06.02.2020) காலை இடம்பெற்ற விபத்தில் பேருந்து நடத்துனர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,

முல்லைதீவில் இருந்து வவுனியா நோக்கிசென்ற தனியார் பேருந்து நெடுங்கேணி நொச்சியடி ஜயனார் ஆலயத்தில் வழிபாட்டிற்காக நிறுத்தப்பட்டது.

இதன்போது பேருந்தின் நடத்துனர் ஆலயத்தின் உண்டியலில் பணத்தினை இடுவதற்காக வீதியை கடந்து சென்றபோது திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கார் அவரை மோதியது.

விபத்தில் பேருந்தின் நடத்துனர் காயமடைந்த நிலையில் நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து தொடர்பாக நெடுங்கேணி போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா பெண்ணுக்கு கொரோனா வைரஸ் சந்தேகம் : யாழ் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை!!

வவுனியா பெண்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சேர்க்கப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த பெண்ணிற்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வவுனியாவைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவர் நேற்று சேர்க்கப்பட்டார்.

நோயாளியின் குருதி மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதன் பரிசோதனை அறிக்கை கிடைக்கும்வரை நாங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கி வருகின்றோம்.

எனினும் குருதி மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை வரும் பட்சத்தில் தான் அவருக்கு ஏற்பட்ட வைரஸ் தொற்று தொடர்பில் கூறமுடியும் என்றும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

வவுனியாவில் 24 வயதுப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ்?

கொரோனா வைரஸ் என சந்தேகிக்கப்படும் 24வயதுடைய வவுனியாவை சேர்ந்த பெண்ணொருவர் இன்று (05.02.2020) காலை 10.30 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சமுதாய வைத்திய நிபுனர் வைத்தியர் ஆர்.கேசவன் தெரிவித்தார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வவுனியாவை சேர்ந்த 24வயதுடைய குறித்த பெண் சீனா நாட்டிக்கு கல்விக்காக சென்ற நிலையில் கடந்த 28ம் திகதி நாடு திரும்பியுள்ளார்.

குறித்த யுவதிக்கு மெல்லிய காய்ச்சல் மற்றும் தடிமல் இருந்தமையினால் குறித்த யுவதி சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கு இன்று (05.02.2020) காலை சென்று அவரது விடயங்களை தெரிவித்துள்ளார்.

குறித்த யுவதி கொரோனா வைரஸின் மையப்புள்ளியான சீனாவின் வுஹான் நகரில் இருந்து வெகு தொலைவில் தான் வசித்துள்ளார்.

எனினும் மெல்லிய காய்ச்சல் மற்றும் தடிமல் போன்ற விடயங்கள் கோரோனா வைரஸின் அறிகுறிகளாக இருக்கலாம் என்ற அ ச்சத்தில் அவரை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட விசேட விடுதியில் தங்கவைக்கப்பட்டு,

வடமாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள வைத்தியசாலையான யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாலை 3.00 மணியளவில் நோயாளர் காவு வண்டி மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த யுவதிக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டு பின்னரே குறித்த யுவதி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளரா?வவுனியாவில் என்ற விடயத்தினை உறுதிப்படுத்த முடியுமென மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போ தை மா த்திரைகள் : வர்த்தக சங்கம் அதிரடி நடவடிக்கை!!

வர்த்தக சங்கம் அதிரடி நடவடிக்கை

வவுனியாவில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போ தை ஏற்றும் ம ருந்துகளின் பாவனைகள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தி நல்லதொரு சமுகத்தினை உருவாக்கும் நோக்கத்துடன்,

வர்த்தக சங்கத்தின் ஒழுங்கமைப்பில் வவுனியா மாவட்ட மருந்தக உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் செயலமர்வு வவுனியா இரண்டாம் குருக்குத்தெரு வீதியில் அமைந்துள்ள வர்த்தக சங்க காரியாலயத்தில் இன்றையதினம் காலை இடம்பெற்றது.

வர்த்தக சங்க செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மகேந்திரன் , வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி பீ.ஆர்.மானவடு,

சுகாதார வைத்திய அதிகாரி யூட் பீரிஸ், உணவு மருந்து சுகாதார பரிசோதகர் பார்த்தீபன் ஆகியோர் பங்குபற்றி வவுனியா மாவட்ட மருந்தக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினர்.

அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் சிபாரிசு இன்றி மருந்துக்களை வழங்க வேண்டாம் அவ்வாறு வழங்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் , பாடசாலை மாணவர்களுக்கு மருந்துகளை வழங்கும் சமயத்தில் மிகுந்த அவதான செலுத்தப்பட வேண்டும்,

அங்கீகரிக்கப்பட்ட விநியோகத்தர்களிடம் மருந்துகளை கொள்ளவனவு செய்தல் வேண்டும் . கட்டாயம் அனைத்து மருந்தகங்களிலும் குளிரூட்டி பயன்படுத்தப்பட வேண்டும் . மருந்துகள் சீராக பா துகாக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன் இதனை மீறும் மருந்தக உரிமையார்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் காரணமாக 24,589 பேர் ப லி : உண்மையை மறைக்கும் சீனா!!

உண்மையை மறைக்கும் சீனா

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக உ யிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள விபரங்களுடன் ஒப்பிடும் போது பாரிய வித்தியாசம் இருப்பதை உறுதிப்படுத்தும் செய்தியை தாய்வான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சீனாவில் இருக்கும் இரண்டாவது பெரிய நிறுவனமான Tencent நிறுவனம் அறியாமல் கொரோனா வைரஸ் சம்பந்தமான புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளதாக தாய்வான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

Tencent நிறுவனம் ஏற்பட்டுள்ள தொற்று நோய் நிலைமை சம்பந்தமான தகவல்கள் அடங்கிய இணைய பக்கத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 24 ஆயிரத்து 589 பேர் இ றந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 23 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது சீன அரசாங்கம் சர்வதேசத்திற்கு மறைக்கும் உண்மையான புள்ளிவிபரமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் சம்பந்தமான தகவல்களை வெளியிட்டுள்ள Tencent நிறுவனத்தில் சீன அரசாங்கமே அதிகமான பங்குகளை கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தவுடன் சீனா அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு மாத்திரமல்லாது சர்வதேசத்திற்கும் உண்மையை மறைத்தமை சம்பந்தமாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக 563 பேரே உ யிரிழந்துள்ளதாக சீனா அரசாங்கம் அறிவித்தள்ளது. இதனிடையே சவுதி அரேபியா அரசாங்கம், சீனாவுக்கு விஜயம் செய்ய வேண்டாம் என அறிவித்து பயண தடைவிதித்துள்ளது.

அத்துடன் சீனாவுக்கு சென்று திரும்பும் தனது பிரஜைகள் அல்லாத சவுதியில் நிரந்தரமான தங்கியிருக்கும் நபர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!!

முக்கிய எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுவதாக பிரச்சாரம் செய்து கடைகளில் விற்பனையாகும் மருந்துகளை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம் என அரசாங்க ஆயுர்வேத வைத்தியர் சங்கம் கேட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட வைத்தியர் டெனிஸ்டர் எல் பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“வைரஸ் என்பது விஞ்ஞான துறை மற்றும் மருத்துவ துறைக்கு எப்போதுமே பாரிய சவாலான ஒரு விடயமாகும். எனினும் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக இலங்கையில் மருந்துகள் விற்பனையாகின்றன.

கொரோனா போன்ற வைரஸை நுண்ணுயிர் கொல்லி மாத்திரைகளினால் கட்டுப்படுத்த முடியாது. அத்துடன் இந்த நோயை குணப்படுத்த என்னால் முடியும் என எந்தவொரு தனி நபரால் கூறப்பட்டாலும் விஞ்ஞான ரீதியாக அவ்வாறு முடியாது.

சீன அதிகாரிகளும் அதற்கு இன்னமும் உரிய மருந்தினை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளனர். நான் இலங்கை கடைகளில் லேபல் மாற்றி விற்பனை செய்யப்படும் மருந்துகளை அவதானித்தேன். அவற்றினை நம்பி ஏமாற வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 562 பேர் உ யிரிழந்துள்ளனர்.

சமகாலத்தில் சீனாவுக்கும் இலங்கைக்கும் நெருக்கிய தொடர்புகள் உள்ளதால் அங்கிருந்து வருபவர்களால் நாட்டில் வைரஸ் தொற்று ஏற்படலாம் என மக்கள் அ ச்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.