72ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாமைக்கு இதுவே காரணம்?

இலங்கையின் 72ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு நேற்றைய தினம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் போது தமிழில் தேசிய கீதம் பாடப்படாமை தொடர்பில் பல தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

தமிழில் தேசிய கீதம் பாடப்படாமை தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழில் தேசிய கீதம் பாடவில்லை எனும் கோஷம் குறுகிய அரசியல் நோக்கம் கொண்டது. அதனை விட சிறந்த நல்லிணக்கம் நேற்றைய தினம் ஏற்கெனவே உருவாகிவிட்டது.

தமிழில் தேசிய கீதம் பாடவில்லை என்று கோஷம் எழுப்பும் தரப்பினர், நேற்றைய 72ஆவது சுதந்திர தின விழாவில் மிகச் சிறந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்திய விடயத்தை மறந்து விட்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு சுருக்கம், ஜனாதிபதியின் தமிழ் மொழிப்பெயர்பாளர்களால் சுமார் 8 நிமிடங்கள் இடம்பெற்றது.

தமிழில் தேசிய கீதம் 3 நிமிடங்களே பாடப்படும். ஆனால் தமிழ் மொழி தெரியாத 98 வீதமானோர் நேற்றைய தினம் கலந்துக்கொண்டனர். 8 நிமிடம் ஒலிபரப்பான தமிழ் மொழிப்பெயர்ப்பினை சகித்துகொண்டமை சிறந்த நல்லிணக்கம் இல்லையா ?

நல்லிணக்கம் – சகவாழ்வு என்ன என்று தெரியாத, ஆழம் புரியாதவர்களே இந்த தேசிய கீத பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர்.

அவர்களுக்கு வேறு உள்நோக்கங்கள் இருப்பது தெளிவாகிறது. அரசியல் இலாபம் மட்டும் நோக்கில் சிலர் வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவர். ஆனால் உண்மை நிலை என்ன என்பதை பொதுமக்கள் நன்கு அறிந்துகொள்வர். தற்சமயம் அதனை நன்கு தெரிந்துகொண்டிருப்பர் என்பது தெளிவு.

8 நிமிடங்கள் தமிழில் மொழிப்பெயர்ப்பு இடம்பெற்றமை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உரை பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தூதுவர்களாலும் நன்கு பாராட்டப்பட்டுள்ளது. அனைத்து வித மதத்தவரும் தமக்குரிய மத அனுஷ்டானங்களை சுதந்திரமாக மேற்கொள்ள முடியும். சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்க முடியும். ஊடக சுதந்திரம் முழு அளவில் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டுமல்லாது முழு நாட்டு மக்களுக்கும் தாம் ஜனாதிபதி என குறிப்பிட்டமை இவையெல்லாம் பல்லின சமூகங்கள் வாழும் இலங்கை நாட்டுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.

நேற்றைய தினம் ஜனாதிபதியின் உரையில் சிறுபான்மை மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. நாட்டில் பல இனங்கள் வாழ்கின்றன என்ற கோட்பாடு முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருந்தன.

இத்தகைய உயர்ந்த சிந்தனை நிச்சயமாக பாதுகாப்பான தேசம் – சுபீட்சமான நாட்டு பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும் என்பதில் ஐயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஏ9 வீதியில் கோர விபத்து : மாணவன் உட்பட மூவர் படுகாயம்!!

கோர விபத்து

வவுனியா கண்டி வீதியில் இன்று (05.02.2020) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவன் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக பட்டா ரக வாகனத்தினை சாரதி பின்நோக்கி செலுத்திய சமயத்தில் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா நகரிலிருந்து கண்டி வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த இரு துவிக்கரவண்டிகள் மீது பட்டா ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த பாடசாலை மாணவன் மற்றும் இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்தில் இரு துவிச்சக்கரவண்டிகளும் பட்டாரக வாகனத்தின் சில்லினுள் அகப்பட்டு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் பட்டாரக வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தலைமையிலான போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

திருமணத்திற்கு முன்பே காலையில் குழந்தை பெற்ற இளம் பெண்ணுக்கு மாலை நடந்த திருமணம்!!

மாலை நடந்த திருமணம்

தமிழகத்தில் திருமணம் ஆகாமலே பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு அன்று மாலையே காதலருடன் திருமணம் நடந்த சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திண்டிவனம் அருகே உள்ள கடவம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவருக்கு கோகிலா என்ற 20 வயது மகள் உள்ளார்.

தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ.ஆங்கிலம் 30ஆம் ஆண்டு படித்து வரும் கோகிலா, அதே பகுதியை சேர்ந்த செங்கேணி என்பவரின் மகன் பரமசிவம்மை(25) காதலித்துள்ளார்.

அதன் பின் இருவரும் தங்கள் காதலை வளர்த்துள்ளனர், ஒரு கட்டத்தில் இருவரும் பலமுறை தனிமையில் இருந்தனர், அதன் காரணமாக கோகிலா கர்ப்பமானார். இது வீட்டிற்கு தெரிந்தால், பெரிய பிரச்சனையாகிவிடும் என்பதால், அதற்கு ப யந்தே கோகில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியான நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று கோகிலாவிற்கு வயிற்று வ லி ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் ஆவணிப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு கல்லூரி மாணவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. உடனடியாக மருத்துவர்கள், குழந்தையின் தந்தை பெயரை கேட்டனர். ஆனால் கோகிலா திருதிருவென விழித்துள்ளார். இதனால் ச ந்தேகமடைந்த மருத்துவர்கள், திண்டிவனம் மகளிர் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் பொலிசார் விரைந்து சென்று, கோகிலாவிடம் விசாரித்தனர். அதன்பிறகுதான் அவர், காதலர் பரமசிம் மூலம் தாயானது தெரியவந்ததை அடுத்து பரமசிவத்தை அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது அவர், கோகிலாவை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். பின்னர் 2 பேரும் திண்டிவனம் மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பிறகு காவல்நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருவரும், மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.

காலையில் பிரசவம் ஆனநிலையில், மாலையில் காதலரை கல்லூரி மாணவி திருமணம் செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் ப ரபரப் பை ஏற்படுத்தியது.

கொரோனா வைரஸ் : இலங்கையில், 20 பேருக்கு சிகிச்சை!!

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொற்று என சந்தேகத்தில் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீனப் பெண் தொடர்ந்தும் வைத்தியசாலையில் இருக்கின்றார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் குணமாகிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்டு வருவதாக தகாவல்கள் வெளியாகியுள்ளன.

சீனப் பெண்ணின் இரத்த மாதிரிகள் மற்றும் உமிழ்நீர் என்பன தினமும் பெற்று பரிசோதனை செய்யப்படுவதாக ஐ.டி.எச் என்ற தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையின் விஷேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இதேவேளை நீர்கொழும்பு வைத்தியசாலையில் கொரோனா தொற்று என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட மூன்று விமானப் பணிப்பெண்கள் இன்று ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று வரை இலங்கையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 20 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, வுஹானில் இருந்த இலங்கையர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஶ்ரீ லங்கன் விமான சேவை ஊழியர்கள் தமது சேவைக்கான கொடுப்பனவை பெற பணிவுடன் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தமது விமான சேவைக்கான கொடுப்பனவை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேவையான முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை பெற்றுக் கொள்வதற்காக நன்கொடையாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த மாதம் எனக்கு திருமணம் : கொரோனா பா திப்பு பகுதியில் க தறும் இந்திய இளம் பெ ண்!!

இந்திய இளம்பெண்

கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த சீனாவின் வுஹான் நகரத்தில் சி க்கித் த வித்து வரும் இந்திய பெ ண் ஒருவர் தன்னை மீ ட்கும்படி வீடியோ மூலம் கோ ரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவில் த வித்து வரும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மத்திய அரசு சிறப்பு விமானங்களை வுஹான் நகரத்திற்கு அனுப்பி வைத்தது.

அங்கு தவித்து வந்த 647 இந்தியர்கள் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். எனினும், அதிகப்படியான காய்ச்சல் காரணமாக 10 இந்தியர்கள் மட்டும் விமானத்தில் ஏற்றப்படவில்லை.

இந்நிலையில், அங்கேயே விடப்பட்டு வந்த 10 பேர்களில், ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த அன்னம் ஜோதி என்பவரும் ஒருவர். தமக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதால், உடனடியாக தாய்நாடு திரும்புவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் தற்போது காய்ச்சல் குறைந்திருப்பதால் உடனடியாக மீட்டுச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களில், மருத்துவ ப ரிசோதனையின் முதற்கட்ட பட்டியல்படி 406 பேருக்கு கொரோனா வைரஸ் பா திப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ம னைவியின் ச டலத்தை கட்டியணைத்து க தறிய கணவன் : கு ழந்தைகளுடன் ர யில்முன் பா ய்ந்த சோ கம்!!

சோ கம்

மனைவி த ற்கொ லை செய்துகொண்ட மறுநாளே கு ழந்தைகளுடன் க ணவனும் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் ராணிப்பேட்டையில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் (30), பெங்களூரில் தங்கி முதியவர் ஒருவருக்கு செவிலியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி நிர்மலா (23) மற்றும் குழந்தைகள் சஞ்சனாஸ்ரீ (3), ரித்திகாஸ்ரீ (1) ஆகியோர் மாமியார், மாமனாருடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் மாமனார், மாமியாருடன் நிர்மலாவிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ம னமுடைந்த நிர்மலா 2ம் திகதி வீட்டிலேயே தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டார். இந்த சம்பவம் அறிந்து பெங்களூரில் இருந்து வந்த வெங்கடேசன், மனைவியின் ச டலத்தை க ட்டிப்பி டித்து க தறித்துடி த்துள்ளார்.

ம னைவி இ றந்த து க்கத்தில் இருந்து மீள முடியமால் சோ கமாகவே இருந்துவந்த வெங்கடேசன், நேற்று தன்னுடைய குழந்தைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு வாலாஜாபேட்டை ரயில் நிலையம் அருகே சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற ர யில் மு ன் பா ய்ந்து த ற்கொ லை செய்துகொண்டார்.

அடுத்தடுத்த நாளில் ஒரு குடும்பமே சி தைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அ திர்ச்சியையும் சோ கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்னிலங்கையிலுள்ள உணவகத்தில் பெற்ற சிற்றுண்டிக்குள் பூரான்!!

சிற்றுண்டிக்குள் பூரான்

தென்னிலங்கையிலுள்ள உணவகம் ஒன்றில் பெற்றுக்கொண்ட சிற்றூண்டியில் பூரான் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலி அஹங்கம – ஷாரிபுத்ர வித்தியாலயத்தில் உள்ள உணவகத்தில் பெற்றுக் கொண்ட உழுந்து வடைக்கு பூரான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வடை பெற்றுக் கொண்ட பாடசாலை மாணவன் அதிபர் ஊடாக ஹபராதுவ சுகாதார சேவை வைத்திய அதிகாரிகள் அலுவலத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைய உணவகத்திற்கு எ திராக நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் குறித்த பாடசாலை மைதானத்தில் நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. அங்கு பாடசாலை உணவகத்தில் மாணவன் உழுந்து வடை ஒன்று பெற்றுக் கொண்டுள்ளார்.

பின்னர் மாணவர்கள் சிலர் ஒன்றாக இணைந்து வடையை பகிர்ந்த சந்தர்ப்பத்தில் இந்த பூரானை அவதானித்த மாணவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். வடையை பொறுப்பெடுத்த அதிபர் உணவகத்திற்கு எ திராக முறைப்பாடு செய்துள்ளனர்.

வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்!!

சுதந்திர தின கொண்டாட்டம்

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தோணிக்கல் கிராம சேவையாளர் அலுவலகத்திலும் இன்று (04.02.2020) காலை 7.29 மணியளவில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

கிராமசேவையாளர் க.பரராஜசிங்கம் தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக கிராம சேவையாளர் தேசிய கொடியினை ஏற்றி வைத்ததுடன் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தோணிக்கல் கிராம அலுவலக வளாகத்தில் மரம்நாட்டும் வைபவமும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சினிமா பாணியில் நடந்த ம ர்மக் கொ லை : 35 நாட்களுக்கு பின் அம்பலமான உண்மை!!

சினிமா பாணியில்..

‘பாபநாசம்’ பட பாணியில் கொ லை செய்து, பாதிக்கப்பட்டவரின் உடல், பைக் ஆகியவற்றை 10 அடி ஆழத்தில் பு தைத்து வைத்திருந்த மூன்று பேரை பொலிஸார் நேற்று கை து செய்துள்ளனர்.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் திலீப் கிராம்கர் (32) என்பவர் ஹல்திராம் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 28ம் திகதி அன்று தனது இருசக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியேறிய பங்கஜ், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பல இடங்களில் தேடிப்பார்த்த அவருடைய மனைவி இறுதியாக பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட வந்த பொலிஸார், நேற்று சாலையோரத்தில் உணவுக்கடை வைத்திருக்கும் அமர்சிங் என்ற லல்லு ஜோகேந்திரசிங் தாக்கூர் (24), மற்றும் அவரது சமையல்காரர் மனோஜ் என்ற முன்னா ராம்பிரவேஷ் திவாரி (37) மற்றும் மற்றொரு கூட்டாளியான சுபம் என்ற துஷார் ராகேஷ் டோங்ரே (28) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பேசிய பொலிஸார், பங்கஜின் மனைவியுடன் அமர்சிங்கிற்கு உறவு இருந்து வந்துள்ளது. இதனால் ம னமுடைந்த பங்கஜ் தனது குடும்பத்துடன் அங்கிருந்து வெளியேறி வேறு இடத்தில் குடியேறியுள்ளனர்.

மேலும், அமர்சிங்கின் கடைக்கு சென்று தனது மனைவியுடன் இருக்கும் உறவை முறித்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வா க்குவா தத்தில், அமர்சிங் இரும்பு கம்பியால் பங்கஜ் த லையில் ஓ ங்கி அ டித்துள்ளார்.

இதில் அவர் உ யிரிழந்ததை அடுத்து, தனது கடையில் வேலை செய்த இருவரின் உதவியுடன் உடலை இரும்பு டிரம்மில் வைத்து, கு ற்றத்தின் ஆதாரங்களை அ ழிக்க ச தித்தி ட்டம் தீட்டியுள்ளார்.

உள்ளூரை சேர்ந்த ஒருவரை அழைத்து கடைக்கு பின்னால் 10 அடி ஆழ கு ழி தோண்டுமாறு கூறியுள்ளார். பின்னர் அந்த குழியில் பங்கஜின் உடல் மற்றும் அவருடைய இருசக்கர வாகனத்தை புதைத்து, விரைவில் மக்க வேண்டும் என்பதற்காக 50கிலோ உப்பை கொட்டி மூடியுள்ளார்.

மேலும் அவருடைய செல்போனை ராஜஸ்தான் செல்லும் ஒரு லொறியில் வீசியெறிந்துள்ளார். இதற்கிடையில் பங்கஜ் மனைவி கொடுத்த புகாரின் பேரில், வி சாரணையை ஆரம்பித்த பொலிஸார் மாறுவேடத்தில் பலமுறை அமர்சிங் கடைக்கு சென்று ஆதாரங்களை சேகரித்து வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் மூன்று பேரும் கொ லை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நேற்று கடையை சுற்றிவளைத்து கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.

வ லியால் அ வஸ்தை : திருமணமான 4 மாதத்தில் கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு புதுப்பெண் எடுத்த முடிவு!!

புதுப்பெண்

தமிழகத்தில் திருமணமான 4 மாதங்களில் புதுப்பெண் த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் அது தொடர்பான பின்னணி தெரியவந்துள்ளது.

கொளத்தூர் பகுதியை சேர்ந்த தீபக் என்பவரும் அவரின் அத்தை மகளான வேதவள்ளியும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் வேதவள்ளி கணவன் தீபக்கை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் வீட்டிற்குள் அ லறல் ச த்தம் கேட்க பெற்றோர் சென்று பார்த்த போது, வேதவள்ளி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயி ட்டுக் கொண்டதை பார்த்து அ திர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, உ யிருக்கு போ ராடிய வேதவள்ளி, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை ப லனின்றி அவர் உ யிரிழந்துள்ளார். மனைவி தீக்கு ளித்த செய்தியறிந்த கணவர் தீபக், எலி மருந்தை குடித்து த ற்கொ லைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் வேதவள்ளி த ற்கொ லை தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தினார்கள்.

இதில் வேதவள்ளி தனது சிறுநீரகத்தில் படிந்துள்ள கற்களால் ஏற்பட்ட வ லியை தாங்கிக்கொள்ள முடியாமல் அ வதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்தே இனியும் வ லியை பொறுத்து கொள்ள முடியாது என த ற்கொ லை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.

4 நாட்களாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ச டலமாக மீ ட்பு!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்

பூட்டிய வீட்டிலிருந்து ஒரே கு டும்பத்தை சேர்ந்த 5 பேர் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ள சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தின் ஃபதேபூரின் சாந்திபூர் பகுதியில், நான்கு நாட்களாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து து ர்நா ற்றம் வீசுவதாக, கிராமத்தை சேர்ந்த சிலர் பொ லிஸாருக்கு த கவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், க தவை உ டைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது 5 பே ர் ச டலமாக கிடந்துள்ளனர்.

இதனையடுத்து 5 பேரையும் மீ ட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொ லிஸார் சம்பவம் குறித்து வி சாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அதில், இற ந்த கி டந்தவர்கள் ஷியாமா மற்றும் அவரது நான்கு மகள்கள் பிங்கி, பிரியங்கா, நாங்கி, வர்ஷா என்பது தெரியவந்தது.

மேலும், ஷியாமாவின் க ணவர் தி னமும் ம து அ ருந்திவி ட்டு ம னைவியை து ன்புறு த்தி வந்ததாக தெரிகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன் கணவன்- மனைவிக்கு இடையே கைக லப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவ தொடர்பாக பொலிஸார் வி சாரணையை ஆரம்பித்துள்ளனர்.

நடுவானிலே குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி : அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!

நடுவானிலே..

தோஹாவிலிருந்து பாங்கொக் நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்ததால், அவசரமாக கொல்கத்தாவில் விமானம் தரையிரக்கப்பட்டுள்ளது.

கத்தார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான QR-830 என்கிற விமானம், தோஹாவிலிருந்து பாங்காக் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, பெயர் வெளியிடப்படாத 23 வயது தாய்லாந்து பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு விமானத்திலேயே குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து அதிகாலை 03:09 மணியளவில் கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிங்க, விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரியிடம் விமானி அனுமதி கேட்டார்.

அதற்கு அனுமதி கிடைத்த உடனே விமானம் பத்திரமாக தரையிங்கியது. விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக்குழு வேகமாக தாய் மற்றும் குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவக்குழு செய்தி வெளியிட்டது. பெரும்பாலும் விமான நிறுவனங்கள் கர்ப்பிணிப் பெண்களை 36 வாரங்களுக்குப் பிறகு நான்கு மணி நேரத்திற்கு மேல் பறக்க அனுமதிக்காது.

கத்தார் ஏர்வேஸ் நிறுவனமும், 36 வது வாரத்தில் அல்லது அதற்கு அப்பால் உள்ள பெண்களை பறக்க அனுமதிக்காது என வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் தற்போது குழந்தை பெற்றெடுத்த பெண் எந்த மாதத்தில் இருந்தார் என்று குறிப்பிடப்படவில்லை.

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்து ஆச்சரியப்படுத்திய தமிழ் மாணவன்!!

தமிழ் மாணவன்

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளேன் என தமிழ் மாணவன் ஒருவர் கூறிய நிலையில் அவரின் முயற்சியை பலரும் பாராட்டியுள்ளனர். சீனாவை தொடக்கம் கண்ட கொரோனா வைரஸால் இதுவரை 400க்கும் அதிகமானோர் அங்கு இறந்துள்ளனர்.

இந்தச் சூழலில், கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டேன் என தமிழத்தின் திருப்பூரைச் சேர்ந்த 9-வது படிக்கும் மாணவன், மருந்து பாட்டிலுடன் ஆட்சியரை தேடிவந்த சம்பவம் நடந்திருக்கிறது.

வெங்கடாசலம் – தங்கம் தம்பதியரின் மகன் இசக்கிராஜ் (14). இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாவும், அதை கொடுத்து ஆய்வகத்தில் பரிசோதனை செய்ய வந்திருக்கிறேன் எனவும் கூறி கையில் மருந்து பாட்டிலுடன் ஆட்சியரை சந்திக்க வந்திருந்தார்.

இசக்கிராஜ் கூறுகையில், கொரோனா வைரஸால் சீனாவில் எத்தனையோ பேர் உ யிரிழந்திருக்காங்க. பலரும் பாதிக்கப்பட்டிருக்காங்க. இதை என்னால தாங்கிக்கவே முடியலை.

அதனால தான் என் பாட்டிகிட்ட ஆலோசனை கேட்டு கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபுடிச்சிருக்கேன். மூலிகைச் செடி, மருத்துவம் சம்பந்தமான புத்தகத்தை ஏற்கெனவே படிச்சிருக்கேன்.

வேப்பிலை, துளசி, நிலவேம்பு, தூதுவளை, பப்பாளி இலை, சஞ்சீவி வேர் மற்றும் வெட்டிவேர் போன்ற 11 வகை மூலிகைகளை ஒருநாள் முழுக்க வெயிலில் காய வைத்து அதை மறுநாள், அதை நீரில் கொதிக்கவைத்து, இறக்கி வடிகட்டி சேகரித்தேன்.

கொரோனாவுக்கான மருந்து தயாரானது. இந்த மூலிகைச் சாற்றை சாப்பிட்டால், வெள்ளையணுக்கள் அதிகமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, நோய் பரவலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்படுத்தும் என கூறியுள்ளார்.

சிறுவனின் தலைக்குள் சென்ற அம்பு : X – Ray வை பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்!!

இந்தியாவில் அம்பு சிறுவனின் தலைக்குள் 4 இன்ச் சென்ற நிலையில் ஸ்கேன் மற்றும் xray மூலம் அது இருக்கும் இடத்தை சரியாக கண்டுபிடித்த மருத்துவர்கள் இரண்டு மணி நேர அறுவை சிகிச்சை பின்னர் அம்பை வெளியில் எடுத்து சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அலிராஜ்பூரை சேர்ந்த 3 வயது சிறுவன் தலையை நோக்கி யாரோ அம்பு எய்தியுள்ளனர்.

பழங்குடியினர் அதிகம் வாழும் அப்பகுதியில் இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் அம்பு வீசியவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து வலியால் துடித்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

அங்கு அம்பு சரியாக எத்தனை இன்ச் ஆழம் உள்ளே சென்றது மற்றும் எந்த பகுதியில் சென்றது என்பதை அறிய மருத்துவர்கள் ஸ்கேன் மற்றும் xray எடுத்தனர்.

அதில் தெரிந்த காட்சியை பார்த்து மருத்துவர்கள் சிறிது நிம்மதியடைந்தனர். காரணம், உடலின் முக்கிய உறுப்புகளை இயக்கும் பகுதியில் அம்பு படாமல் இருந்தது அதில் தெரிந்தது.

இதன் பின்னர் இரண்டு மணி நேர ஆப்ரேஷனுக்கு பின்னர் அம்பு வெளியில் எடுக்கப்பட்டது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அதிர்ஷ்டவசமாக சிறுவனின் உயிரை பாதிக்காத பகுதியில் அம்பு சிக்கி கொண்டது எங்களுக்கு xrayவில் தெரிந்தது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறிது நேரத்திலேயே சிறுவனுக்கு சுயநினைவு திரும்பியது. ஆனாலும் அவனின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

மன்னாரில் 48 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கும் சாக்கு சாமியார்!!

மன்னாரில்..

நாட்டின் 72 ஆவது சுதந்திர தினமான இன்று நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டி மன்னாரில் தவம் இருந்து உண்ணாவிரதத்தை இன்று மதியம் 12 மணியளவில் ‘சாக்கு சாமியார்’ என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பு கிறிஸ்ணன் டயஸ் என்பவர் ஆரம்பித்துள்ளார்.

நாட்டில் சமாதானம் ஏற்படவும் சாதி, மத, இன, மொழி பேதமின்றி மக்கள் ஒற்றுமையாக வாழவும், மன்னாரில் சாக்கு சாமியார் என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பு கிறிஸ்ணன் டயஸ் என்கின்ற குருஜி இவ்வாறு 48 நாட்கள் தொடர்ச்சியாக தவம் இருந்து உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினமான இன்று மன்னார் பிரதான பாலம் வங்காலை சரணாலய சுற்று வட்டார காரியாலயத்திற்கு அருகாமையில் ஓலைக் குடிசை அமைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் உண்ணாவிரதம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார், திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கண்ணண் குருக்கள், மூர்வீதி ஜீம்மா பள்ளி மௌலவி எஸ்.அசீம், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.செல்வக்குமரன் டிலான், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்ச்சியாக 48 நாட்கள் தவம் இருந்தும், உண்ணாவிரதம், மௌனவிரதம் இருந்தும் மேற்கொள்ளப்படும் இந்த விரதம் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி மதியம் 12 மணியுடன் முடிவடையும்.

குறித்த சாமியார், கடந்த வருடம் நாட்டின் சுதந்திர தினத்தன்று நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி மன்னார் தள்ளாடி அந்தோனியார் ஆலயத்தில் இருந்து அநுராதபுரம் சிறிமா போதி வரை அங்கப் பிரதட்சை மேற்கொண்டார். சுமார் 130 கிலோ மீற்றர் தூரம் இவ்வாறு உருண்டு யாத்திரை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கட்டாக்காலி மாடுகளினால் அதிகரிக்கும் விபத்துக்கள் : மௌனம் காக்கும் நகரசபை?

கட்டாக்காலி மாடுகள்

வவுனியா நகர பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குழைவதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு பிரச்சினைகள் தினமும் ஏற்படுகின்றன.

குறிப்பாக வவுனியா நகரம், வவுனியா – மன்னார் பிரதான வீதி, பட்டனிச்சூர், வேப்பங்குளம், குருமன்காடு சந்தி போன்ற பகுதிகளில் நடு வீதிகளில் கால்நடைகள் நிற்பதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன.

கட்டாக்காலி மாடுகளினால் கடந்த மாதத்தில் மாத்திரம் 10க்கு மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த நகரசபையினர் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.