இந்திய கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாகும் லொஸ்லியா!!

லொஸ்லியா

தமிழ் திரையுலகில் நடிகராக கால்பதித்திருக்கும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லொஸ்லியா நடிக்க உள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட ஆரம்பித்ததில் இருந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மொழியில் அதிகமாக பதிவுகளை வெளியிட ஆரம்பித்தார்.

இதனால் அவருக்கு அதிகமான தமிழ் ரசிகர்கள் உருவெடுத்தனர். இதனையடுத்து அவர் நடிகர் சந்தானம் நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வரும் `டிக்கிலோனா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

அதனை தொடர்ந்து தற்போது ‘பிரண்ட்ஷிப்’ என்கிற படத்தில் கதாநாயனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதனை `அக்னிதேவி’, `சென்னையில் ஒருநாள் 2′ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர்கள் ஜான்பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இயக்க உள்ளனர்.

இந்த நிலையில் படத்தில் ஹர்பஜனுக்கு ஜோடியாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த லொஸ்லியா நடிக்க உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேபோல நெடுஞ்சாலை படத்தின் மூலம் பிரபலமான ஆரி நடிப்பில், உருவாகவிருக்கும் படத்திலும் லொஸ்லியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா வெங்கல செட்டிக்குளம், பிரதேச செயலகம் நடாத்திய தைத்திருநாள் விழா!!

தைத்திருநாள் விழா

வவுனியா வெங்கல செட்டிக்குளம், பிரதேச செயலகமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய தைத்திருநாள் விழா நேற்று முன்தினம் வீரபுரம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய அறநெறி மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு. க.சிவகரன் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக பொங்கல் நிகழ்வும் வழிபாடுகளும் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து முட்டி உடைத்தல் கிளித்தட்டு முதலான பல பாரம்பரிய விளையாட்டுக்களும், கலை நிகழ்வுகள் சொற்பொழிவுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் வீரபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு அருட்திரு யோகசிகாமணி குருக்கள், வெங்கல செட்டிகுளம் பிரதேச சபைத் தவிசாளர் ஆ.அந்தோனி, மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் ஜெ.தட்சாயினி,

கிராம அலுவலர்களான பா.பாலஶ்ரீ, எஸ்.கஜேந்திரன், இ.தேவகி, இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமார், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.சற்சுருவேணு மற்றும் இந்து ஆலய ஒன்றிய உறுப்பினர்கள், கலாசார பேரவை உறுப்பினர்கள், அறநெறி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

வவுனியாவில் கைவிடப்பட்ட வயற்காணிகளில் பயிர்ச்செய்கை ஆரம்பித்து வைப்பு!

பயிர்ச்செய்கை

‘கைவிடப்பட்ட வயற்காணிகளில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளல்’ நிகழ்வின் வவுனியா மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ நிகழ்வானது வெங்கலச் செட்டிக்குள பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அருவித்தோட்டம் கிராமத்தில் நடைபெற்றது.

நாடு முழுவதும் கைவிடப்பட்ட வயற் காணிகளை விவசாய காணிகளாக மாற்றி பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் திட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்திற்கான நிகழ்வானது கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் செட்டிகுளம் கமநலசேவைகள் நிலையத்தின் ஏற்பாட்டில் அருவித் தோட்டம் பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகரன், வவுனியா நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர் கே.இமாஷலன், திணைக்கள உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பினர், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டு கைவிடப்பட்ட நிலத்தில் பயிற்செய்கை நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தனர்.

வவனியாவில் பொதுஜன பெரமுன கட்சியின் சுதந்திர தின நிகழ்வுகள்!!

சுதந்திர தின நிகழ்வுகள்

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட காரியாலயத்தில் இன்று (04.02.2020) காலை 10.30 மணியளவில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான தர்மபால செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முதல் நிகழ்வாக தர்மபால செனவிரட்ன தேசியக் கொடியினை ஏற்றி வைத்ததுடன் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பொதுஜன பெரமுன கட்சியின் வவுனியா மாவட்ட தமிழ் பிரிவிற்கான அமைப்பாளர் பிரேம் , பிரதேச இணைப்பாளர்கள் , கட்சியின் உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்ட இரு யாழ்ப்பாண மாணவர்கள்!!

யாழ்ப்பாண மாணவர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான சீனாவின் வூஹான் நகரிலிருந்து அழைத்துவரப்பட்ட 33 இலங்கை மாணவர்களில் இருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். 6 பேர் புத்தளத்தைச் சேர்ந்தவர்கள்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்களையடுத்து சீனாவில் கல்வி கற்றுக் கொண்டிருந்த இலங்கை மாணவர்களை, இலங்கை அரசு விசேட விமானம் மூலம் கடந்த சனிக்கிழமை நாட்டுக்கு அழைத்து வந்துள்ளது. அவர்கள் தியத்தலாவையிலுள்ள இராணுவ பயிற்சி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 14 நாட்கள் கண்காணிப்புக்குப் பின்னரே அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

வட்டுக்கோட்டை மற்றும் பருத்தித்துறையைச் சேர்ந்த இரு மாணவிகளும் அழைத்து வரப்பட்ட 33 மாணவர்களில் உள்ளடங்குகின்றனர். இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் புத்தளத்தைச் சேர்ந்தவர்கள்.

“கடந்த ஒரு வாரமாக சீனாவில் பெரும் அச்சத்துடன் தனித்தே வாழ்ந்தோம். அந்தப் பகுதியில் வெளியில் செல்வதற்கே ஓர் மரண பீதி நிலவியது. நாட்டுக்கு வந்ததே போதும் என்ற மனநிலையில் உள்ளோம்” என்று தியத்தலாவையிலுள்ள மாணவர்கள் சிலர் தெரிவித்தனர்.

முதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்!!

மன்னாரில்..

மன்னாரில் அதிகூடிய நிறை கொண்ட கணவாயொன்று பிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மீன்பிடிக்க சென்ற போது அதிஷ்டவசமாக அந்த மீனவருக்கு இந்த கணவாய் கிடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கணவாய் 12.25 கிலோகிராம் நிறை கொண்டது என தெரிவிக்கப்படுகிறது. அதி கூடிய நிறை கொண்ட கணவாய் பிடிபட்டமை இதுவே முதல் தடவை என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

அதிகூடிய நிறை கொண்ட கணவாயொன்று பிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மீன்பிடிக்க சென்ற போது அதிஷ்டவசமாக அந்த மீனவருக்கு இந்த கணவாய் கிடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஆறு சிறைக் கைதிகள் விடுதலை!!

சிறைக் கைதிகள்

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் வவுனியா சிறைச்சாலையிலிருந்து ஆறு சிறைக் கைதிகள் இன்று (04.02.2020) காலை 10 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு கு ற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதாக வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04.02.2020) இலங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இரு பிள்ளைகளின் தாயை காணவில்லை : பொலிஸில் முறைப்பாடு!!

மகேஸ்வரி செந்தில்செல்வன்

வவுனியா பூந்தோட்டம் பகுதியினை சேர்ந்த 47வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான மகேஸ்வரி செந்தில்செல்வன் என்பவரை கா ணவில்லை என தெரிவித்து அவரது கணவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளார்.

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் குறித்த பெண் கடந்த 29.01.2020 அன்று காலை 8.30 மணியளவில் வவுனியா நகருக்கு செல்வதாக தெரிவித்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் காலை 10.30 மணியளவில் குறித்த பெண்ணுக்கு அவரின் கணவர் தொலைபேசி மூலம் அழைப்பினை ஏற்படுத்திய சமயத்தில் அவரின் தொலைபேசி செயலிழந்து இருந்துள்ளது. அதன் பின்னர் அன்றையதினம் மாலை வரை அவரை பல இடங்களில் தேடியும் குறித்த பெண்ணை கா ணவில்லை.

பின்னர் 30.01.2020 வவுனியா பொலிஸ் நிலையத்தில் குறித்த விடயத்தினை தெரிவித்து கணவரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. ஆறு நாட்கள் கடந்த நிலையிலும் இன்று வரை குறித்த பெண்ணை கா ணவில்லை.

கடைசியாக இவர் வவுனியா நகருக்கு சென்ற சமயத்தில் பிங் கலர் சேலை அணிந்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை கண்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கோ அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 076 – 1560361 (மகன்) , 077 – 40112323 (கணவர்) , 076 – 6647509 (மருமகன்)

வவுனியா நகரசபையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் மயங்கி விழுந்த பாடசாலை மாணவி!!

பாடசாலை மாணவி

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04.02.2020) காலை 8.00 மணிக்கு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நகரசபை மைதானத்தில் நின்ற பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பின் போது வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தினை சேர்ந்த மாணவியொருவர் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக குறித்த மாணவியை மாவட்ட செயலக ஊழியர்கள் நோயாளி காவு வண்டி மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.

வவுனியா நகரசபை தலைவரின் வாகனத்தினால் ஏற்பட்ட பதற்றம் : மூடப்பட்ட வாயில்!!

வவுனியா நகரசபை

வவுனியா நகரசபையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் நகரசபை வாளாகத்தினுள் நுழைய முற்பட்ட நகரசபை தலைவரின் வாகனத்தினால் நகரசபை தலைவருக்கு பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதன் காரணமாக நகரசபையின் பிரதான வாயில் மூடப்பட்டது.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04.02.2020) காலை 8.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்காக இன்று காலை 6.30 மணி தொடக்கம் நகரசபை இரு பிரதான வாயிலிலும் பொலிஸார் கடமைக்கு நியமிக்கப்பட்டு முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் மாத்திரமே நகரசபை வாளாகத்தினுள் செல்ல அனுமதி வழங்கியிருந்தனர்.

இந் நிலையில் இன்று காலை 7.15 மணியளவில் வாகனமொன்று நகரசபைக்குள் செல்ல முயன்ற போது வாயிலில் பா துகாப்பு கடமையில் இருந்த பொலிஸார் குறித்த வாகனத்தினை மறித்து நீங்கள் யார் என வினாவியுள்ளனர்.

அதற்கு வாகனத்தில் இருந்த பிரமுகர் தான் நகரசபை தலைவர் என தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பொலிஸார் வாகனத்தினை உட்செல்ல அனுமதித்தனர். இதன் போது நகரசபை தலைவருக்கு பொலிஸாருக்குமிடையில் சில கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றன.

நகரசபை வளாகத்தினுள் சென்ற நகரசபை தலைவர் இ.கௌதமன் குறித்த வாயிலை மூடுமாறு நகரசபை பா துகாப்பு ஊழியருக்கு உத்தரவு பிறப்பித்து பூட்டினால் வாயிலை மூடினார். இதன் காரணமாக குறித்த வாயிலுடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

குறித்த வாயிலுக்கு வருகை தந்திருந்த மாணவர்கள் , இராணுவத் தளபதி, மாவட்ட செயலக அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் ஏமாற்றதுடன் திரும்பி நகரசபையின் மற்றைய வாயிலூடாக சுதந்திர தின நிகழ்வுக்கு சென்றனர்.

மூடப்பட்ட குறித்த வாயில் சுமார் 30 நிமிடங்களின் பின்னர் திறக்கப்பட்டு சுதந்திர தின நிகழ்விற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இலங்கையில் மின் விநியோகத் துண்டிப்பு இடைநிறுத்தப்படும்!!

மின் விநியோகத் துண்டிப்பு

மின் விநியோகத் துண்டிப்பு இடைநிறுத்தப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருட்களை வழங்குவதற்கு பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாகவும், அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி மின்சார சபையினால் அறிவிக்கப்பட்டிருந்த மின் துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளாந்த மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கிடைக்கப் பெறுவதனால் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியமில்லை என மின்சார சபை அறிவித்துள்ளது.

மின்சார சபைக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்கி வந்த எரிபொருளுக்கான கொடுப்பனவுகள் செலுத்தாத காரணத்தினால் கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்திற்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டது.

இதனால் கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் இன்று ஸ்தம்பிதம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆபத்தான கொரோனா வைரஸ் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொற்று குறித்து இலங்கையர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான பெண் இனங்காணப்பட்டு சிகிச்சையின் மூலம் குணமடைந்துள்ளார். எனினும் அதன்மூலம் கொரோனா வைரஸின் தாக்கம் அகன்றுவிட்டதாக எண்ணக்கூடாது என சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுஹான் நகரில் முதல் முதலாக கொரோனா நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அது சீனாவின் வேறு பகுதிகளுக்கும் பரவியது. தற்போது உலகின் பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொடர்பில் மக்களுக்கு சரியான மதிப்பீட்டு ஆலோசனை வழங்க வேண்டும். உடலுக்குள் வைரஸ் சென்றால் 14 நாட்களுக்கு நோய் அறிகுறிகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், ஒரு நோயாளியிடம் இருந்து இன்னுமொரு நோயாளிக்கு எந்தளவு பரவுகின்றது என்பது தொடர்பில் உரிய தகவல் இன்னமும் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக கொரோனா வைரஸ் ஆபத்தான நோய் அல்ல என்ற எண்ணத்தை ஒரு போது இலங்கை மக்களின் மனங்களில் ஏற்படுத்த கூடாதென அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், பொதுமக்களை எச்சரித்துள்ளது.

கொழும்பிலிருந்து பயணித்த சொகுசு பேருந்து விபத்து : மூவர் வைத்தியசாலையில்!!

பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு சென்ற சொகுசு பேருந்தொன்று பாதையை விட்டு விலகி விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் 34, 56 மற்றும் 26 வயதுடைய மூவரே காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்து ஏற்பட காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வரலாற்றில் முதல் முறையாக இராணுவ பதக்கத்துடன் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய!!

ஜனாதிபதி கோட்டாபய

72வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தற்போது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகின்றது. இதன் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ பதக்கத்தை அணிந்து தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

ஜனாதிபதி ஒருவர் வரலாற்றில் முதல் முறையாக தனக்கான இராணுவ பதக்கத்தை அணிந்து தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட சந்தர்ப்பம் இதுவே முதல் முறையாகும்.

இராணுவத்தினருக்கு மரியாதை செலுத்திய ஜனாதிபதி, தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரம் பாடி தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட துயரம் : இளம் மருத்துவர் பரிதாபமாக பலி!!

இளம் மருத்துவர்

கிழக்கு மாகாணத்தில் இளம் மருத்துவர் ஒருவர் டெங்கு காச்சலினால் பரிதாபமாக உ யிரிழந்துள்ளார். திருமதி கௌதமன் தரண்ணியா எனும் இளம் வைத்தியரே இவ்வாறு டெங்கினால் ப லியாகியுள்ளார்.


அவரின் மரணம் பிரதேசவாசிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதேவேளை கிழக்கில் இன்னும் டெங்கினால் இன்னும் எத்தனை மரணங்கள் நிகழ் போகின்றதோ என கவலை வெளியிட்டுள்ள சமூக ஆர்வலர்கள்,

ஒவ்வொரு குடும்பமும் தம்மைச் சுற்றியுள்ள இடங்களை டெங்கு பெருகாதவாறு துப்பரவாக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்!!

72 ஆவது சுதந்திர தினம்

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04.02.2020) காலை 8.00 மணிக்கு இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன உட்பட பிரதம விருந்தினர், அதிதிகள் பா துகாப்பு பொலிஸ் பிரிவினரின் மோட்டார் வாகன பேரணியுடன் அழைத்து வரப்பட்டனர்.

அத்துடன் இந் நிகழ்வின் பிரதம விருந்தினர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தானை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வரவேற்றார்.

நகரசபை மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட இடத்தில் தேசியக் கொடியினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் ஏற்றி வைத்ததுடன் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதமும் இடம்பெற்றது. அதன் பின்னர் பாடசாலை மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், கடற்ப்படை அதிகாரிகள் , விமானப்படை அதிகாரிகள் , சிவில் பா துகாப்புப் படை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் நகரசபை, உள்ளுராட்சி மன்றம் , மாவட்ட செயலகம், வைத்தியசாலை போன்றவன்றின் தலைவர்கள்,

அரச உத்தியோகத்தர்கள், அரசியல் பிரமுகர்கள், வர்த்தக சங்கத்தினர், பாடசாலை மாணவர்கள், சர்வ மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.