வவுனியா உட்பட வடக்கில் இம்மாதம் மின்தடை ஏற்படும் இடங்களின் விபரங்கள்!!

மின்தடை

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக வடக்கில் கடந்த முதலாம் திகதியிலிருந்து எதிர்வரும் 29ம் திகதி வரை சில இடங்களில் மின்சார தடை ஏற்படுத்தப்படும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாண மின்வழங்கல் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் இது தொடர்பில் இலங்கை மின்சாரசபையின் வடமாகாண மின்வழங்கல் கட்டுப்பாட்டு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரங்கள் பின்வருமாறு,

வவுனியா வளாகத்தில் புதிய கற்கைகள் பீடம் ஆரம்பம்!!

புதிய கற்கைகள் பீடம்

யாழ்.பல்கலைகழகத்தின் வவுனியா வளாகத்தில் புதிதாக தொழில்நுட்ப கற்கைகள் பீடத்தினை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக வவுனியா வளாக முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனவரி மாதம் 30ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வவுனியா வளாகத்தில் தொழில்நுட்பவியல் கற்கைகள் பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் துறையும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா வளாகத்தில் வியாபார கற்கைள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் என்பன ஏற்கனவே செயற்பட்டுவந்த நிலையில் மூன்றாவது பீடமாக இப்பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் தொழில்நுட்பவியல் துறை மற்றொரு பீடத்தின் அலகாக இணைக்கப்பட்டிருந்த நிலையில், 100 மாணவர்கள் கற்கை செயற்பாடுகளை மேற்கொண்டு வந்திருந்தனர். தற்போது தனிப் பீடமாக உருவாக்கப்பட்டுள்ளதால் இனிவரும் காலங்களில் 150 மாணவர்கள் வரை அனுமதிக்கபடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வவுனியா வளாகத்தின் முதல்வர் மற்றும் கல்வி, கல்விசாரா ஊழியர்களின் கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் உயர்கல்வி அமைச்சின் அனுமதியுடன் குறித்த பீடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1991ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி வடமாகாணத்தில் இணைக்கப்பட்டு பல்கலைகழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட இவ்வளாகம் 1997ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இரண்டு பீடங்களுடன் யாழ்.பல்கலைகழகத்தின் வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டிருந்தது.

23 வருடங்களிற்கு பின்னர் மூன்றாவது பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறித்த வளாகத்தை பல்கலைகழகமாக தரமுயர்த்தப்படவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் விசேட சோ தனையில் 60 கிலோ க ஞ்சா மற்றும் 600 கிராம் ஹெ ரோயின் மீட்பு : 29 பேர் கைது!!

வவுனியாவில்

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வாகனங்களை வவுனியாவின் நான்கு இடங்களில் ம றித்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோ தனை நடவடிக்கையின் போது 60 கிலோ கேரளா க ஞ்சாவும், 600 மில்லிக்கிராம் ஹெ ரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,

இவற்றை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 25 ஆம் திகதி தொடக்கம் இன்று வரையிலான 09 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட விசேட சோ தனை நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்தவின் வழிகாட்டலில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸல்லால் டி சில்வா மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் விசேட கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார்,

வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம், கனகராயன்குளம், ஓமந்தை, ஈரப்பெரியகுளம் ஆகிய பகுதிகளில் ஏ9 வீதியில் பயணித்த வாகனங்களை வழி மறித்து சோ தனையிட்ட போதே, பயண பைகளில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இருந்த,

60 கிலோ கேரளா க ஞ்சா மற்றும் 600 மில்லிக்கிராம் ஹெ ரோயின் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டு பொலிசாரால் கைப்பற்றப்பட்டன. இவற்றின் பெறுமதி சுமார் என்பது இலட்சம் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இவற்றை உடமையில் வைத்திருந்தமை மற்றும் கொண்டு சென்றமை தொடர்பில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

நீராடச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!!

நீராடச் சென்ற..

திருகோணமலை, டைக் பீஸ் பகுதியில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (03.02.2020) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மூன்று இளைஞர்களும் ம ரண வீட்டுக்குச் சென்ற பின்னர் கடலில் குளிப்பதற்காக சென்ற வேளை, மூவரில் இருவர் த ப்பித்த நிலையில் மற்றொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் கடல் பா துகாப்புப் பிரிவினர் வருகை தந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட பின்னர், ஒரு மணி நேரத்துக்குள் சடலத்தை மீட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு உ யிரிழந்தவர் திருகோணமலை வைத்தியசாலை விடுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ஜெரோம் எனத் தெரியவருகின்றது.

குறித்த இளைஞனின் ச டலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் இரண்டு மணி நேரம் மின் விநியோகம் துண்டிப்பு!!

மின்தடை

இலங்கை மின்சார சபை இன்று முதல் நாடு முழுவதும் தினமும் இரண்டு மணி நேரம் மின் விநியோகத்தை துண்டிக்க உள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மாறி மாறி இரண்டு மணி நேரங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான எரிபொருளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் விநியோகிக்காமையே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

நீர்மின் உற்பத்தி நிலையங்களில் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் அனல் மின் உற்பத்தி நிலையங்களே தேவைப்படும் மின்சாரத்தை விநியோகித்து வருகிறது. இன்று முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் வரை கீழ் காணப்படும் நேரங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட உள்ளது.

A- 8.30 – 10.30

B – 10.45 -12.45

C -12.45- 2.45

D – 2.45 – 4.45

ஆகிய நேரங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட உள்ளது. மின் விநியோக கட்டமைப்பை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் எனவும், கடந்த சில வருடங்கள் அதிகரித்த மின்சார தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கான புதிய மின் உற்பத்தி திட்டங்கள் செயற்படுத்தப்படவில்லை என்பதால் அடுத்த சில மாதங்களில் கடும் மின்சார நெருக்கடி ஏற்படும் எனவும் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

கோழியை கா ப்பாற்றப் போய் உ யிரிழந்த மூ ன்று இ ளைஞர்கள்!!

கோ ழியை கா ப்பாற்றப் போய்..

அவிசாவளையில் மூ ன்று இளை ஞர்கள் உ யிரிழந்துள்ளதாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர். அவிசாவளை சீத்தாவக்கை பகுதியில் கைவி டப்பட்ட சுர ங்க கு ழிக்குள் வி ழுந்தே குறித்த மூ வரும் உ யிரிழந்துள்ளனர்.

கு ழிக்குள் வி ழுந்த இ ரண்டு கோ ழிகளை கா ப்பாற்ற சென்ற போதே இ ளைஞர்கள் உ யிரிழந்துள்ளனர். இந்த ச ம்பவம் நேற்றிரவு ஏற்பட்டுள்ளது.

17, 25 மற்றும் 27 வ யதுடைய இ ளைஞர்களே இ வ்வாறு உ யிரிழந்துள்ளனர். உ யிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொ லிஸார் வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீதியாக வேலை தேடாமல், தனது அதீத திறமையினால் சொந்தக் காலில் சாதனை படைக்கும் யாழ் மாணவி!!

யாழ் மாணவி

பல்கலைக்கழக படிப்பை முடித்து அரசாங்கத்தில் அல்லது வேறு நிறுவனங்களில் மட்டும் வேலையைத் தேடிக் கொண்டிருப்பதை விடுத்து தன் சொந்தக் காலில் நிற்கும் இணுவையூர் யசோதா.

இயற்கையான சூழலில் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது வீடு. முன்னுள்ள சிறிய கொட்டகையில் இருந்து தான் தன் கற்பனைத்திறனுக்கு ஏற்றவாறு அணிகலன்கள் அலங்காரப் பொருள்களை உருவாக்கி வருகிறார் இணுவிலில் வசிக்கும் யசோதா பாலச்சந்திரன்.

இவர் பாலச்சந்திரன் – மகேஸ்வரி தம்பதிகளின் கடைசி மகள். செய்த கைவினைப் பொருள்களில் அழகும், நேர்த்தியும் தெரிகிறது. சூழலில் கிடைக்கும் இயற்கையான பொருள்களைக் கொண்டு பல்வேறு கைவினைப் பொருள்களையும் உருவாக்கியுள்ளார்.

பெரும்பாலும், தனக்குத் தெரியாத கைவினைப் பொருள்களின் வடிவமைப்புக்களை இணையத்தை பார்த்து கற்றுக் கொண்டு, பின் அவற்றைத் திறம்பட வடிவமைக்கிறார்.

Art and design பட்டப்படிப்பை யாழ் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் 2015 ஆம் ஆண்டில் முடித்துள்ளார். படிப்பை முடித்துவிட்டு அரசாங்கத்தில் அல்லது வேறு நிறுவனங்களில் மட்டும் வேலையைத் தேடிக் கொண்டிருப்பதை விடுத்து, தன் சொந்தக் காலில் நிற்கும் சுயதொழில் முயற்சியை தன்னார்வத்துடன் செய்து வருகிறார்.

அத்துடன் 3 வருடங்களாக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் கைவினைத் துறையில் Visiting Instructor ஆக மாணவர்களுக்குப் கற்பித்து வருகின்றார். யசோதாவிடன் பேசியதில் இருந்து,

முதலில் குழந்தைகளுக்கு தேவையான சிறிய அணிகலன்கள், கைப்பணிப் பொருட்களை உருவாக்கினேன். பின்னர் பெண்கள் கழுத்தில் போடும் முத்து மாலைகளில் இருந்து, பல்வேறு வகையான மாலைகளையும் செய்து சமூக வலைத்தளத்தில் எனது பக்கத்தில் பதிவேற்றுவேன்.

அவற்றுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பின்னர் எங்கள் சூழலில் கிடைக்கும் இயற்கையான பொருள்களை கொண்டும் பெண்களுக்கு தேவையான அணிகலன்களை நிறைய உருவாக்கியிருக்கிறேன்.

நெல் மணியில் செய்த கழுத்தணி எல்லோரிடமும் வரவேற்பை பெற்றது. இங்கு, நான் தான் முதன் முதலில் இப்படியான முயற்சியை செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். நெல்மணியில் ‘ஆரம் செட்’ செய்ய நான்கு நாட்கள் தேவையாக உள்ளது. இந்த தொழிலுக்கு உச்சப்பட்ச பொறுமை தேவையாக உள்ளது.

ஆனால், பேப்பர்களில் செய்யும் அணிகலன்கள், அலங்காரப் பொருட்களுக்கும், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் அலங்காரப் பொருட்களுக்கும் எம் ஊர்களில் பெரிதாக சந்தைவாய்ப்பு இல்லை.

ஆனால், நான் பங்கேற்ற கண்காட்சிகளில் சிங்களவர்கள், வெளிநாட்டவர்கள் எல்லோரும் குறித்த பொருள்களை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்து அட்டைகளையும் தயாரித்து வருகிறேன். இம்முறை காதலர் தினத்தத்துக்கு காதலர் தின அட்டை செய்திருந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இதையும் தவிர ஓவியங்களையும் உருவாக்கி வருகிறேன்.பெண்களின் விருப்பங்கள், தேவைகள் மாறும் போது நாமும் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரி தான் செய்வேன் என சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. அதனால், புதிய புதிய, பிந்திய வடிவங்களை கற்றுக் கொண்டு அணிகலன்களை உருவாக்கி வருகின்றேன்.

இவைகளுக்கு புலம்பெயர் தேசத்து தமிழ் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருக்கிறது. புலம்பெயர் நாடுகளுக்கும் அனுப்பி வருகிறேன். வெளிநாடுகளில் இருப்பவர்கள் இங்குள்ள தமது உறவினர்களிடம் சொல்லியும் இப்படியான வடிவமைப்புக்களில் செய்து தரச் சொல்லி கேட்டு வாங்குகின்றார்கள்.

எனக்கு தெரிந்த கைவினைப் பொருள்களை செய்யும் முறையை ஆர்வமுள்ளவர்களுக்கு தொலைக்காட்சிகளிலும் நேரிலும் சொல்லிக் கொடுத்து வருகின்றேன்.

எதிர்காலத்தில் சொந்தமாக அணிகலன்கள், கைவினைப் பொருள்கள் காட்சியறை திறக்கும் எண்ணமும் உள்ளது. எனது வாழ்வாதாரத்தையும் முழுமையாக இதனை நம்பி கொண்டு போகும் நிலைக்கு வரவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பாகும்.

கைவினைப் பொருள்கள் தயாரிப்பில் எதிர்காலத்தில் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே என் விருப்பமாகும். அதற்கு வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு என்றும் கிடைக்கும் என நம்புகின்றேன் என்றார். பெண்களுக்கு முன்மாதிரியாக திகழும் இவரின் தொழில்துறை மேலும் மேன்மையடைய நாமும் மனதார வாழ்த்துகின்றோம்.

வவுனியாவைச் சேர்ந்த பெண் திருகோணமலையில் பா லியல் விடுதியில் வைத்து கைது!!

வவுனியாவைச் சேர்ந்த பெண்

திருகோணமலை – உப்புவெளி பகுதியில் வீடொன்றில் ச ட்டவிரோதமான முறையில் நடத்தி வந்த பா லியல் விடுதியொன்று முற்றுகையிடப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போ தைப்பொருள் த டுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது நடத்துனரான உவர்மலை வீதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரையும், வவுனியா பூந்தோட்டத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவரையும் கைது செய்துள்ளதாக போ தைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பிராந்திய போ தைப்பொருள் த டுப்பு பிரிவினருக்கு பொதுமக்கள் வழங்கிய இர கசிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கைது செய்யப்பட்ட இருவரையும் திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரனைகளை தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தீவிரமடையும் கொரோனா வைரஸ் : உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

கொரோனா வைரஸ்

சீனாவில் கொரோனா வைரஸின் பாதிப்புக்குள்ளாகி உ யிரிழந்தோரின் எண்ணிக்கை 360 ஆக உயர்ந்துள்ளது. இது 2002- 2003 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட சார்ஸ் தொற்றினால் இறந்தோரின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

நேற்று வரை இந்த தொற்றினால் உ யிரிழந்தோரின் எண்ணிக்கை 304 ஆக இருந்த நிலையில்,14300 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதிதாக மேலும் 56 பேர் இந்த தொற்றினால் உ யிரிழந்துள்ளதையடுத்து 360 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை நேற்றைய தினம் பிலிப்பைன்ஸில் சீனர் ஒருவரும் உ யிரிழந்த சம்பவமும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் 19 வயதுடைய மா ணவன் தூ க்கிட்டு த ற்கொ லை!!

யாழில்..


யாழ்ப்பாணத்தில் க.பொ.த உயர்தர மா ணவனொருவன் த வறான மு டிவெடுத்து உ யிரை மா ய்த்துள்ளார். கல்வியங்காடு, 3 ஆம் கட்டைப் பகுதியை சேர்ந்த சிவகுமார் டினோஜன் (19) என்ற மா ணவனே இவ்வாறு உ யிரை மா ய்த்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பாடம் கற்று வருகிறார்.

நேற்று முன்தினம் (01.02) வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அ றை ஒ ன்றில் தொலைபேசி வ யர் மூலம் தூ க்கில் தொ ங்கியுள்ளார். வெளியில் சென்ற அவரது தாயும், சகோதரியும் வந்து பார்த்தபோது அவர் தூ க்கில் தொ ங்கிய நி லையில் கா ணப்பட்டுள்ளார்.

உடனடியாக அவரை மீ ட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சி கிச்சை அளிக்கப்பட்ட போதும் நேற்று மதியம் 12 மணியளவில் சிகிச்சை ப லனின்றி மா ணவன் உ யிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மே லதிக வி சாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்றிய இலங்கை வைத்தியர்கள் : சீனப் பெண்ணின் உருக்கமான தகவல்!!

சீனப் பெண்

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீன பெண் தற்போது முழுமையாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில் தன்னுயிரை கா ப்பாற்ற முயற்சி செய்த அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

தன்னை குணப்படுத்திய வைத்திய குழுவினருக்கு சீனப் பெண் நன்றி தெரிவித்ததுடன், அவர்களுடன் இணைந்து புகைப்படம் ஒன்றையும் எடுத்துள்ளார். “வைத்திய ஊழியர்களுக்கும், விசேடமாக தலைமை தாதிக்கும் சீன பெண் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது தன்னை கவனித்துக் கொள்ள எவரும் அருகில் வரவில்லை. எனினும் தன்னை ஆ பத்தான கட்டத்திலிருந்து கா ப்பாற்ற பின்னர் அனைவரும் முன் வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுயிரை காப்பாற்றுவதற்காக இலங்கை சுற்றுலா அதிகார சபை மேற்கொண்ட நடவடிக்கைக்கும் குறித்த பெண் நன்றியை தெரிவித்திருத்துள்ளார்.

43 வயதான குறித்த சீனப் பெண் கொரோனா வைரஸிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக நேற்றைய தினம் தலைமை வைத்திய அதிகாரி அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுமியொருவர் பரிதாபமாக உ யிரிழப்பு!!

யாழில்..

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, வல்வைப் பகுதியில் வீடொன்றில் உள்ள பா துகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து சி றுமியொருவர் உ யிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அச்சுவேலி வல்வைப் பகுதியினைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் அட்சயா என்ற 5 வயதுடைய சிறுமியே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். வெளி முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சி றுமி திடீரென கா ணாமல் போயுள்ள நிலையில், பா துகாப்பற்ற கிணற்றில் விழுந்து கிடந்துள்ளார்.

இதனை தொடர்ந்து மீ ட்கப்பட்டு சி றுமியை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த போது சி றுமி ஏற்கனவே உ யிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உ யிரிழந்த சிறுமியின் ச டலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கில் சோதனை நடவடிக்கையால் அல்லலுறும் பயணிகள்!!

வடக்கில்..

வடக்கில் ஏ9 வீதியை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் சோ தனை நடவடிக்கைகளால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக ஆனையிறவு, மாங்குளம், புளியங்குளம், ஓமந்தை போன்ற பகுதிகளில் இராணுவச் சோ தனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பேருந்துகள் சோ தனை செய்யப்பட்டு வருகின்றது.

பயணிகள் பேருந்துகளே முழுமையாக சோ தனையிடப்பட்டு வருவதுடன், கடந்த ஒரு வாரகாலமாக போ ர் காலத்துடன் ஒப்பிடும் வகையில் பேருந்துகளில் செல்லும் பயணிகள் முழுமையாக இறக்கிவிடப்பட்டு அவர்களது பயணப்பொதிகள் சோ தனையிடப்படுகின்றது. இதனால் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பொதுமக்கள் தமது பயணத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.

வன்னி பகுதியில் மாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சோ தனைச் சாவடிக்கு அடுத்த படியாக புதூர் சந்தியில் 15 கிலோமீற்றர் இடைவெளியில் மற்றொரு சோ தனைச் சாவடியும், அதற்கு அடுத்ததாக 15 கிலோ மீற்றர் தூர இடைவெளியில் ஓமந்தையிலும் ஒரு சோ தனைச் சாவடி அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் சோ தனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சோ தனை கடமையில் இருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில் அதிகமான பேருந்துகள் வருகை தரும் போது கால தாமதம் ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றமை குறிப்பிடதக்கது.

வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலய பாடசாலை சமூகம் விடுத்த கோரிக்கை!!

ஊடகங்களின் மூலம் எமது பாடசாலைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தாதீர் என பாவற்குளம் கணேஸ்வரா வித்தியால பாடசாலை சமூகம் கோரிக்கை விட்டுள்ளது.

இது தொடர்பில் அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கபபட்டுள்ளதாவது,

எமது பாடசாலையின் அதிபர், பிரதி அதிபரின் கைப்பை மற்றும் ஆவணங்கள் போன்றவற்றை ஆசிரியர்கள், மாணவர்கள் முன்பாகவோ அல்லது வேறு பாடசாலை சமூகத்தின் முன்பாகவோ எந்தப் சந்தர்ப்பங்களிலும் சோதனையிடவில்லை என்பதை சம்பந்தப்பட்ட பிரதியதிபரின் சம்மதத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதிபர் சோதனை செய்ததாக வலயக் கல்விப் பணிமனையிடமோ அல்லது மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிடமோ எந்த முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் சில இணையத்தளங்கள் எமது பாடசாலையின் முகப்பு படத்தினை பிரசுரித்து எமது பாடசாலை அதிபர், பிரதி அதிபரின் கைப்பையை ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னால் சோதனை செய்ததாகவும் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் போலியான செய்திகளை வெளியிட்டுள்ளன.

இவ்வாறான செய்தி தொடர்பில் நாம் மனம் வருந்துவதுடன் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என ஒட்டுமொத்த பாடசாலை சமூகமும் இணைந்து இச் செய்தியை கண்டிப்பதுடன்,

எமது பாடசாலையின் வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்தும் வகையில் அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவை வந்தடைந்த மாற்றுத்திறனாளிகளின் நாடு முழுவதுமான சக்கர நாற்காலிப் பயணம்!!

சக்கர நாற்காலிப் பயணம்

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி 3 மாற்றுத்திறனாளிகள் இணைந்து இந்த நடைபவனியை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட ம.மொகமட் அலியுடன் இணைந்து ஜெகதீஸ்வரன், சகோதர மொழிபேசும் பிறேமச்சந்ர ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதற்காகவும்,

மும்மதங்களுக்கிடையிலான சமூக நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காகவும் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட சக்கர நாற்காலி பயணம் இன்று (02.02.2020) காலை 11.20 மணியளவில் வவுனியா புதிய பேருந்து நிலையத்தினை வந்தடைந்தது.

குறித்த நடைபவனியானது யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (01.02) ஆரம்பமாகி இன்று (02.02) வவுனியாவை வந்தடைந்து.

வவுனியா ஊடாக இலங்கையின் அனைத்து பாகங்களுக்கும் சென்று நான்காம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள சுதந்திர நிகழ்வினை சென்றடையவுள்ளது.

வவுனியாவை வந்தடைந்த அவர்களுக்கு புதிய பேருந்து நிலைய முன்றலில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீனிவாசன் மற்றும் வர்த்தகர்கள், பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு கௌரவம் வழங்கினார்கள்.

அத்துடன் வவுனியா வர்த்தக சங்கத்தினர் ரூபா 10,000 மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பினர் ரூபா 10,000 அவர்களின் செலவுக்காக அன்பளிப்பாக வழங்கி வைத்தனர். இவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளான நாம் சமூக நல்லிணக்கம் வேண்டியும் எம்மைப் போன்ற நாடு முழுவதிலுமுள்ள மாற்றுத்திறனுடையோரின் சிறப்பான எதிர்கால வாழ்வு கருதியும் சக்கர நாற்காலியில் இலங்கையைச்சுற்றி வலம் வருகிறோம். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் பின்வரும் கோரிக்கைகளை நாம் இந்த சமூகத்திற்கு முன் வைக்கிறோம்.

1. இன ரீதியான நல்லிணக்கத்தை இந்த நாட்டில் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

2. மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் ஏனையோர் அனுபவிக்கும் சகல உரிமைகள் சலுகைகளையும் அனுபவிக்க வழிசமைக்க வேண்டும்.

3. நாட்டிலுள்ள சகல மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்த கொடுப்பனவு 5000 ரூபாவை வழங்கி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

4. மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக சமய கலாச்சார விளையாட்டு கல்வி பொருளாதார விடயங்களில் சமவாய்ப்பு சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும்.

5. அனைவருக்கும் அணுகு வசதிகளை பொது நிறுவனங்கள், அரங்கு மேடைகள், பொது மலசலகூடங்கள், பொதுப்போக்குவரத்துகள், பொதுக்கட்டிடங்கள், அலுவலகங்கள், வைத்தியசாலைகள், சேவை மையங்கள், போக்குவரத்து தரிப்பிடங்கள் என சகல துறைகளிலும் அணுகும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

6.வங்கிகள் வைத்தியசாலைகள் போன்ற சேவை பெறும் மையங்களில் எமக்கு முன்னுரிமை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.

மேற்குறித்த எமது உரிமைகள் சலுகைகள் என்பவற்றைப் பெற்றுத்தரும் நல்ல நோக்கம் கொண்ட எமது நாட்டு ஜனாதிபதியாகிய தாங்கள் பல வகைககளில் எமக்கு பக்கப்பலமாக உறுதுணையாக இருக்கிறீர்கள்.

உங்கள் சிந்தனையில் இவற்றையும் கருத்தில் கொண்டு செயற்படுத்த வேண்டுமென இதில் பங்குபற்றும் மூவராலும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட உள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிற்குள் புகுந்து 33 பேரை காப்பாற்றிய இலங்கை குழு : நாட்டில் குவியும் பாராட்டு!!

இலங்கை குழு

சீனாவில் மிகவும் ஆ பத்தான பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வுஹான் பிராந்தியத்திலிருந்து இலங்கை மாணவர்களை கா ப்பாற்றிய குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸினால் மிகவும் மோ சமாக பாதிக்கப்பட்டுள்ள வுஹான் பிராந்தியம் சீனாவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தமது உ யிரை பணயம் வைத்து குறித்த பகுதிக்குள் சென்று இலங்கை மாணவர்கள் 33 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

தன்னார்வமாக முன்வந்து இந்த பணியினை முன்னெடுத்து விமானிகள் தலைமையிலான குழுவினருக்கு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை பாராட்டு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய குறித்த மாணவர்களை கா ப்பாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான US 1423 என்ற விமானம் கொழும்பில் இருந்து வுஹான் நோக்கி சென்று அங்கிருந்த மாணவர்களை ஏற்றியுள்ளது. குறித்த விமானம் அங்கிருந்து புறப்பட்ட விமானம், மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

33 மாணவர்களும் தீவிர சோதனையின் பின்னர் தியத்தலாவ இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு அங்கு தங்க வைக்கப்பட்டு கொரோனா வைரஸ் தா க்கம் உள்ளதா என்பது தொடர்பில் கண்டறியப்படவுள்ளது.

இதேவேளை சீனாவில் கொரோனா வைரஸ் தா க்கம் காரணமாக இதுவரை 304 பேர் உ யிரிழந்துள்ளனர். 13781 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் பலர் ஆ பத்தான கட்டத்தில் உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.