விமானத்துடன் வெ டித்து சி தறிய 176 பேர் : நீடிக்கும் கருப்பு பெட்டியில் உள்ள ம ர்மம் : அடாவடி காட்டும் ஈரான்!!

விமானத்துடன்..

உக்ரேனிய விமானத்தில் இருந்து மீட்க்கப்பட்ட கருப்பு பெட்டிகளை விரைவில் பிரான்ஸ் அல்லது உக்ரைனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஈரானுக்கு கனடா மீண்டும் கோரிக்கையை விடுத்துள்ளது.

கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜவாத் ஜரீஃப் உடன் இந்த விஷயம் தொடர்பாக பேசியதாக கூறினார்.

கருப்புப் பெட்டிகளை உக்ரைன் அல்லது பிரான்சுக்கு விரைவாக அனுப்ப வேண்டும் என்ற கனடாவின் நிலைப்பாட்டை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

எனவே நிபுணத்துவம் இருக்கும் இடத்தில் இதைச் ஆய்வு செய்ய முடியும், அது வெளிப்படையான முறையில் செய்யப்படலாம் என்று ஷாம்பெயின் கூறினார். ஈரானை அவர்களின் வார்த்தைகளால் அல்ல, ஆனால் அவர்களின் செயல்களால் தீர்மானிப்பதாக ஷாம்பெயின் கூறினார்.

ஜனவரி 8ம் திகதி தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே உக்ரைன் விமானம் தற்செயலாக சு ட்டு வீ ழ்த்தப்பட்டது, 57 கனேடியர்கள் உட்பட விமானத்தில் இருந்த 176 பேரும் கொ ல்லப்பட்டனர்.

ஈரான் தற்போதைக்கு கறுப்பு பெட்டிகளை தாங்களே வைத்திருக்க விரும்புகிறது என்று ஈரானின் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் வி சாரணைத் தலைவரான ஹசன் ரெசாய்பாரின் கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உக்ரேனிய விமானத்தின் கருப்பு பெட்டி ஈரானில் உள்ளது, தற்போது அதை அனுப்ப எங்களுக்கு எந்த திட்டமும் இல்லை என்று ஈரானிய அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.

அசிட் கொண்டு எ ரிக்கப்பட்டு நி ர்வாண நி லையில் மீ ட்கப்பட்ட இளம் பெ ண்ணின் ச டலம்!!

இளம் பெ ண்ணின்..

உத்திரபிரதேச மாநிலத்தில் அசிட் கொண்டு எ ரிக்கப்பட்ட இளம்பெண் ஒருவரின் ச டலம் நி ர்வாண நி லையில் மீ ட்கப்பட்டுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஹ்ரைச் மாவட்டத்தில் கஜ்ராலா சிவ் கிராமத்தில் உள்ள ஒரு பழத்தோட்டத்தில், நி ர்வாண நிலையில் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் ச டலம் க ண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவருடைய முகம் அ சிட் போன்ற வேதிப்பொருளால் எ ரிக்கப்பட்டிருப்பதால் பொலிஸார் அடையாளம் கா ணமுடியாமல் திணறுகின்றனர். தற்போது அவருடைய உ டலை பி ரேத ப ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிஜ்னோர் காவல் நிலைய பொறுப்பாளர் ரமேஷ் சந்திர சர்மா கூறுகையில், அந்த பெண் பழத்தோட்டத்தில் சு ட்டுக் கொ ல்லப்பட்டிருக்கலாம். பின்னர் அவரை அடையாளம் காண முடியாதபடி ஆ சிட் கொண்டு முகம் எ ரிக்கப்பட்டிருக்கலாம்.

அந்தப் பெண்ணை இன்னும் அடையாளம் காண முடியவில்லை, மர ணத்திற்கான சரியான காரணமும் தெரியவில்லை. பா லியல் வ ன்கொ டுமை நடந்ததா இல்லையா என்பது பி ரேத ப ரிசோதனைக்கு பின்னர் கண்டறியப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மசூதிக்குள் கோலகலமாக நடந்த இந்து திருமணம் : மெய்சிலிர்க்க வைத்த மாமனிதர்கள் : நெகிழ வைக்கும் சம்பவம்!!

மசூதிக்குள்..

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள மசூதிக்குள் இந்து திருமணம் நடந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

இந்தியாவில் சிஏஏ சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போ ராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மசூதியில் இந்து திருமணம் நடைபெற்றுள்ள சம்பவம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

சேரவள்ளி முஸ்லிம் ஜமாத் மசூதியின் வளாகத்தில், பிந்து மற்றும் அசோகனின் மகள் அஞ்சு, மற்றும் சரத் ஆகியோர் திருமணம் காலை 11:30 மணி முதல் மதியம் 12:30 மணிக்குள் நடைபெற்றது. திருமணம் முழு இந்து பாரம்பரியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவர் அசோகன் இறந்த பிறகு, பிந்து கடன்களால் போ ராடி வருகிறார், அவர் தனது மூன்று குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

மகள் அஞ்சு திருமணத்தை நடத்த அவர் பணத்திற்காக சிரமப்பட்டபோது, அவரது அண்டை வீட்டுக்காரரான ஜமாத் செயலாளர், ஜமாத் குழுவை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

பிந்து உதவி கோரியபோது மத வேறுபாடுகள் குறித்து கவலைப்படாமல், ஜமாத் கமிட்டி உதவ முன்வந்துள்ளது. ஜமாத் உறுப்பினர்களில் ஒருவர் திருமண செலவுகளை ஏற்க முன்வந்துள்ளார்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்தவர்களிடம் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அவர்களும் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர். ஜமாத் கமிட்டி திருமண பரிசாக அன்ஜூவுக்கு 10 சரவன் தங்க நகை மற்றும் ரூபாய் 2 லட்சம் வழங்கியுள்ளனர்.

இந்து சடங்குகளின் படி திருமணம் நடைபெற்றது. சுமார் 1,000 பேருக்கு நாங்கள் சைவ உணவு ஏற்பாடு செய்துள்ளோம் என்று சேரவள்ளி ஜமாத் குழுவின் செயலாளர் நுஜுமுதீன் ஆலும்மூட்டில் தெரிவித்துள்ளார்.

நான் அவர்களின் இளைய குழந்தை படிப்புக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்தேன். இந்த முறை, திருமணத்திற்கான செலவுகள் மிக அதிகமாக இருப்பதால் ஜமாத் குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனவே, குடும்பத்திற்கு உதவ குழு முடிவு செய்தது என்று நுஜுமுதீன் கூறினார்.

கேரளாவிலிருந்து ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இச்சம்பவம் நடந்திருப்பதாக நெகிழ்ச்சியடைந்த அம்மாநில முதல்வர் பினராய் விஜயன், டவிட்டரில் புதுமணத் தம்பதிகள், குடும்பங்கள், மசூதி அதிகாரிகள் மற்றும் சேரவள்ளி மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

வேலை தேடி வந்த இடத்தில் கிடைத்த அதிர்ஷ்டம் : கோடீஸ்வரரான தொழிலாளி!!

இந்திய மாநிலம் கேரளாவில் தொழிலாளி ஒருவர் லொட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் பா துகாப்பு கேட்டு அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று உதவியை நாடியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் 34 வயதான தஜ்முல்ஹக். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பிழைப்பு தேடி கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு வந்துள்ளார்.

தொடர்ந்து கட்டிடத்தொழிலில் ஈடுபட்டு வந்த அவர் அங்கேயே தங்கி விட்டார். அவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள அரசின் காருண்யா பாக்கியஸ்ரீயின் ரூ.1 கோடி லொட்டரிச் சீட்டை வாங்கியுள்ளார். தற்போது அவர் வாங்கிய லொட்டரிச் சீட்டுக்கு முதல் பரிசான ரூ.1 கோடி கிடைத்துள்ளது.

இதையறிந்த தஜ்முல்ஹக், பெருமகிழ்ச்சி அடைந்தது மட்டுமின்றி தனது லொட்டரிச்சீட்டை யாரும் பறித்து விடக்கூடாது என அருகாமையில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று உதவியை நாடியுள்ளார்.

பணியில் இருந்த பொலிசாரும் லொட்டரிச்சீட்டை வாங்கி பார்த்து அந்த சீட்டுக்கு ரூ.1 கோடிகிடைத்து இருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து பொலிசார் அவரை உரிய வங்கிக்கு அழைத்துச் சென்று லொட்டரிச்சீட்டில் கிடைத்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய தஜ்முல்ஹக், பிழைப்புக்காக இதுவரை நானும், எனது குடும்பமும் மிகவும் கஷ்டப்பட்டோம்.

இனி லொட்டரிச்சீட்டில் கிடைத்த பணத்தை கொண்டு வாழ்க்கையை மேம்படுத்த ஆவன செய்வோம் என்றார்.

3 நாட்களாக மா யமாகியிருந்த பள்ளி ஆசிரியை : தலைமுடி அ றுக்கப்பட்டு அ ழுகிய நிலையில் மீ ட்பு!!

பள்ளி ஆசிரியை

கேரளாவில் மூன்று நாட்களாக மாயமாகியிருந்த பள்ளி ஆசிரியை, தலைமுடி அ றுக்கப்பட்டு அ ழுகிய நிலையில் ச டலமாக க ண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவின் காசராகோடு மாவட்டத்தை சேர்ந்த கூட்டுறவு வங்கி ஊழியர் சந்திரசேகரனின் மனைவி ரூபாஸ்ரீ (44). இவர் மியாபடவுவில் உள்ள எஸ்.வி. மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த ஜனவரி 16ம் திகதியன்று ஹொசங்காடியில் ஒரு சக ஊழியரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக நண்பகலில் பள்ளியில் இருந்து வெளியேறிய ரூபாஸ்ரீ, அங்கிருந்து மஞ்சேஸ்வரத்தில் உள்ள தனது மகளின் பள்ளிக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவருடைய இரண்டு செல்போன்களுக்கு உறவினர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அதில், ஒரு தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ​​மற்றொன்று ஒலித்துக் கொண்டிருந்தது. ஆனால் யாரும் அதை எடுக்கவில்லை.

இதனையடுத்து அவருடைய உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். விசாரணையின் ஆரம்பத்தில், ஹோசங்காடியிலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள துர்கிபால் சாலையோரத்தில் ரூபாஸ்ரீயின் ஸ்கூட்டர் கைவிடப்பட்டிருப்பதைக் பொலிஸார் கண்டறிந்தனர்.

இந்த நிலையில் சனிக்கிழமையன்று, சிதைந்த நிலையில் பெ ண் சடலம் ஒன்று கடற்கரை ஓரத்தில் கிடப்பதை பார்த்து மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அவர் அணிந்திருந்த திருமண மோதிரத்தை வைத்து உடலை அடையாளம் கண்டுபிடித்தனர். பின்னர் பி ரேத ப ரிசோதனைக்காக அவருடைய உ டலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்லைன் ஊடாக ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவுகள்!!

ரயில் பயணச்சீட்டு

எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் ரயில் பயணச்சீட்டை ஒன்லைன் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் ரயில் பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து ரயில்வே நிலையங்களுக்கு அருகில் பேருந்து சேவைகளை ஆரம்பிப்பதற்காக ரயில் – பேருந்து கூட்டு சேவை வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட உள்ளதுடன், அனைத்து ரயில் நிலையங்களுக்கு அருகாமையிலும் சுமார் 100 வாகனங்கள் தரித்து நிற்கக்கூடிய வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருட இறுதிக்கு முன்னர் புதிதாக 9 ரயில் எஞ்சின்கள் கிடைக்க உள்ளன. இவை மலையக ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய வகையில், பழமைவாய்ந்த முறைக்கு அமைவாக, ரயில் ஒன்று தற்போது இரத்மலானை ரயில்வே தொழிற்சாலையில் செப்பனிடப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் 3 மாத காலப்பகுதிக்குள் கொழும்பில் இருந்து பண்டாரவளை வரையில் இந்த ரயில் சேவையில் இணைத்துக் கொள்ளப்படும்.

ரயில் திணைக்களம் ரயில்களின் தேவைக்கு ஏற்றவகையில் திட்டங்களை வகுத்து வருவதாகவும், இதேவேளை நாளாந்தம் காலை வேளையிலிருந்து 48 அலுவலக ரயில் சேவைகள் இடம்பெறுகின்றதாகவும் பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

வாகனத்தின் மேலதிக டயரை திருடுவதற்காக பல உயிர்களை கொ ன்ற நபர்கள்!!

டயரை திருடுவதற்காக..

வெல்லவாய – திம்புலாமுர பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றின் மேலதிக டயரை திருடுவதற்காக வீட்டின் பா துகாப்பிற்கு இருந்த நாய்கள் இரண்டு விஷம் வைத்து கொ ல்லப்பட்டுள்ளன.

நாய்கள் இரண்டிற்காக உணவில் வைக்கப்பட்ட வி ஷம் காரணமாக பூனைகள் மற்றும் 5 கோழிகள் உ யிரிழந்துள்ளன. சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், வாகனத்தின் மேலதிக டயரை தி ருடுவதற்காக அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வீட்டிற்கு வந்துள்ளனர். எப்படியிருப்பினும், வீட்டின் பா துகாப்பிற்கு இருந்த நாய்கள் இரண்டு குரைத்தமையினால் அவற்றுக்கு உணவில் வி ஷம் வைத்து கொ லை செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, அந்த வீட்டில் உணவு பெற தினமும் வரும் 3 பூனைகளும் 2 கோழிகளும் இந்த உணவை உற்கொண்டு உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்து : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

கோர விபத்து

கதிர்காமம் – கொழும்பு பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

நேற்று இரவு 8.50 மணியளவில் பேருந்து ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினால் விபத்து ஏற்பட்டது.

 

இந்த விபத்தில் பேருந்து சாரதி, பேருந்தில் பயணித்த நபர் ஒருவரும், பெண் ஒருவரும் 3 வயதுடைய சிறுமி ஒருவருமே உ யிரிழந்தனர்.

குறித்த நால்வரும் ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தங்காலை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னரே உ யிரிழந்துள்ளனர்.

அத்துடன் பேருந்து மற்றும் டிப்பரில் பயணித்த 7 ஆண்கள், 7 பெண்கள் மற்றும் 5 சிறுவர்கள் உட்பட 20 பேர் படுகாயமடைந்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் உ யிரிழந்தவர்களின் ச டலங்கள் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முறையற்ற காதலால் வந்த விபரீதம் : கொ லை செய்து விட்டு தலைமறைவாகியிருக்கும் நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு!!

முறையற்ற காதலால்..

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நுவரெலியா சுற்றுவட்ட பிரதான வீதியில் நானுஓயா சமர்செட் தோட்டம் ஈஸ்டல் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் ஒருவர் கூ ரிய ஆ யுதத்தால் கொ லை செய்யபட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொ லை செய்த நபருடைய மனைவிக்கும் சம்பவத்தில் ப லியான நபருக்குமிடையில் த காத உ றவுமுறை ஒன்று இருப்பதை அறிந்து கொண்ட நபர், இவர்கள் இருவரும் அப்பகுதியில் சென்றுக் கொண்டிருந்த வேளையில் குறித்த நபரை அ டித்துள்ளார்.

இதன் போது சம்பவ இடத்தில் கள்ளக் காதலன் ப லியானதோடு, கொ லை செய்த நபர் த ப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ப லியான நபர் புத்தளம் வென்னப்புவ பகுதியில் வசிக்கும் ஏ.ஜி. சசேந்திர பெர்ணாண்டோ வயது 43 என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா கைரேகை அடையாளப் பிரிவினர் ப ரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், மோப்ப நாய்களை விட்டு ஆராய்ந்ததோடு, நீதவானும் மரண வி சாரணைகள் தொடர்பில் வி சாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கபட உள்ளதாகவும், கொ லை செய்து விட்டு த லைமறைவாகியிருக்கும் நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நானுஓயா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக வி சாரணைகளை நானுஓயா பொலிஸாரும், நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு நோக்கி வந்த பேருந்து கோர விபத்து : 5 பேர் பலி : பலர் படுகாயம்!!

கோர விபத்து

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு – கதிர்காமம் வீதியில் ஹூங்கம பகுதியில் சற்று முன்னர் டிப்பர் ஒன்றும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.

ஐந்து பேர் பலியானதுடன் மேலும் பலர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயம் அடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளமையினால் உ யிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அ ச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் நடைபெற்ற சட்ட ஆலோசனை முகாம்!!

சட்ட ஆலோசனை முகாம்

டிரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் நிறுவனத்தில் ஏற்பாட்டில் PARL நிறுவனத்தின் அனுசரனையுடன் இலவச சட்ட ஆலோசனை முகாம் வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் நேற்று (18.01.2020) இடம்பெற்றது.

இலவச சட்ட ஆலோசனை முகாமில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப் பட்டறையும் இடம்பெற்றது.

இப்பயிற்சி பட்டறையின் வளவாளராக வினேதினி பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு தகவல் அறியும் சட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தியிருந்தார்.

மேலும் வழக்கறிஞர்களினூடாக இலவசமாக சட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டது . விசேடமாக காணி பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் தங்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை பெற்று பயனடைந்தனர்.

இவ் இலவச சட்ட ஆலோசனை முகாமில் வடமாகாணத்தினை சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயனடைந்திருந்தனர்.

 

வவுனியா கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகம் தேசியமட்ட கரப்பந்தாட்டப் போட்டிக்கு தெரிவு!!

கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகம்

வவுனியா மாவட்டசெயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.

தரணிதீபம் விளையாட்டுக் கழகத்திற்கும் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையே நேற்று (18.01.2020) கரப்பந்தாட்ட இறுதிப் போட்டி நடைபெற்றது.

இப் போட்டியில் தரணிதீபம் விளையாட்டுக் கழகத்தினை 3:2 புள்ளிகள் வித்தியாசத்தில் கூமாங்குளம் சுப்பர் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று தேசிய ரீதியில் நடைபெறும் கரப்பந்தாட்ட போட்டிக்கு தெரிவாகியது

இவர்கள் தொடர்ச்சியாக பல போட்டிகளில் வெற்றிபெற்று தேசிய ரீதியில் நடைபெறும் கரப்பந்தாட்டப் போட்டிக்குத் தெரிவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த வெற்றியினூடாக கூமாங்குளம் கிராமத்திற்கு மட்டுமன்றி வவுனியா மாவடத்திற்கும் பெருமையினை தேடித்தந்துள்ளனர்.

பட்டப்பகலில் மி ருகத்தனமாக எ ரித்துக் கொ ல்லப்பட்ட 10 இசைக் கலைஞர்கள்!!

பட்டப்பகலில்..

மெக்சிகன் போ தைப் பொருள் க டத்தல் கு ம்பலால் கொ டூரமாக எ ரித்து கொ லை செய்யப்பட்டதாக சந்தேக்கிக்கப்படும் 10 இசைக் கலைஞர்களின் எ ச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தெற்கு மெக்ஸிகோவில் 10 பழங்குடி இசைக் குழுவினரின் எ ரிக்கப்பட்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு கொ டூரமான போ தைப் பொருள் கும்பல் மி ருகத்தனமான ப டுகொ லைகளை நடத்தியதாக விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

சென்சாசியன் இசைக் குழுவின் 10 உறுப்பினர்களின் ச டலங்கள் தெற்கு மாநிலமான குரேரோவில் உள்ள கிராமப்புற மெக்ஸல்க்சிங்கோ சமூகத்தில் கண்டெடுக்கப்பட்டன.

மெக்ஸிகோவில் மிகப் பெரிய நஹாஸ் சுதேசியக் குழுவைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள், சாலையில் இரண்டு வேன்களில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பிரபலமற்ற லாஸ் ஆர்டிலோஸ் குற்ற சிண்டிகேட்டுடன் இணைக்கப்பட்ட ‘அமைதி மற்றும் நீதி’ குழுவின் ஆ யுதமேந்திய குழு, சோ தனைச் சாவடியில் அவர்களை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆ யுதமேந்தியவர்கள் முதலில் இரண்டு வேன்களை எ ரித்தனர், பின்னர் அனைத்து இசைக் கலைஞர்களையும் கொ ன்றதாக உள்ளூர் பொலிசார் கூறுகின்றனர்.

Televisa ஊடகத்தின் கூற்றுப்படி, உள்ளூர் முதலாளி நடத்திய விருந்தில் கலந்துகொண்டுவிட்டு திரும்பியபோது, பிற்பகல் 2 மணியளவில் பட்டப்பகலில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது.

மனைவி, குழந்தைகளை தலையணையால் அ ழுத்தி கொ ன்றுவிட்டு த ற்கொ லை செய்துகொண்ட கணவன்!!

மனைவி, குழந்தைகளை..

மனைவி, குழந்தைகளை தலையணையால் அ ழுத்தி கொ ன்றுவிட்டு, க ணவன் தூ க்கு போ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் லக்னோவில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த பிந்து குப்தா (32) என்பவர் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்கிற மனைவியும், நேஹா (8) மற்றும் நைட்டிக் (6) என்கிற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கணவன் மனைவிக்கு இடையே ச ண்டை ஏற்பட்டதாக தெரிகிறது.
மறுநாள் விடிந்து நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், ச ந்தேகமடைந்த வீட்டில் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கதவை திறந்துகொண்டு உள்ளே சென்ற போது, பிந்து தூ க்கில் தொ ங்கிய நிலையில் இற ந்து கி டந்துள்ளார். அதேசமயம், அவருடைய மனைவி மற்றும் கு ழந்தைகள் படுக்கையில் இ றந்து கிடந்துள்ளனர்.

இதனையடுத்து 4 பேரின் உடல்களை கைப் பற்றி பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், பிந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொ ன்றுவிட்டு த ற்கொ லை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தடவியல் குழுவினர், ஆய்வு செய்து வருகின்றனர்.

பிச்சைக்காரனின் ஆங்கில புலமையை பார்ந்து அதிர்ந்த பொலிசார் : நம்பமுடியாத உண்மை!!

பிச்சைக்காரனின் ஆங்கில புலமை..

இந்தியாவில் வீதியில் பிச்சையெடுத்து வந்த நபரின் ஆங்கில புலமையை பார்த்து பொலிசார் வியந்த நிலையில் அவர் பொறியாளர் என தெரியவந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜகன்நாதன் கோவில் வாசலில் பிச்சையெடுத்து வருபவர் கிரிஜா சங்கர் மிஸ்ரா (51). நேற்று இவருக்கும் ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்கும் இடையே ச ண்டை ஏற்பட்ட நிலையில் இருவரும் சாலையில் கட்டி புரண்டு அடித்து கொண்டனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று புகார் மனுவை எழுத சொன்னார்கள்.

அப்போது பிச்சைக்காரன் சங்கர் சரளமான ஆங்கிலத்தில் தவறின்றி புகாரை எழுதியதை பார்த்து பொலிசார் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர். அவரிடம் இது குறித்து விசாரித்த போது சங்கரின் தந்தை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி என தெரியவந்தது.

மேலும் சங்கர் தான் ஒரு பொறியியல் பட்டதாரி எனவும் படித்து முடித்துவிட்டு நல்ல சம்பளத்தில் பெரிய பணியில் இருந்ததாகவும் கூறினார். ஆனால் எதனால் பணியை விட்டு பிச்சை எடுக்கிறார் என அவர் கூறவில்லை.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கர், அது என் தனிப்பட்ட விடயம், பணியில் இருந்த போது என் மூத்த அதிகாரிகளுடன் எனக்கு பி ரச்சனை ஏற்பட்டது.

ஆனால் அது குறித்து விவரமாக என்னால் கூற முடியாது, அந்த ப யம் மட்டும் என்னிடம் அப்படியே உள்ளது என கூறினார். சங்கர் மனநிலையில் கோளாறு இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

திருமண ஆசையில் இருந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி..

தமிழகத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் பல லட்சம் ரூபாய் மோ சடி செய்த நபரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜசிம்மன் (46). இவர், திருமணம் செய்துகொள்ள பெண் தேவை என்று தனியார் இணையதளம் ஒன்றில் விளம்பரம் கொடுத்துள்ளார்.

இந்த விளம்பரத்தை கண்ட ஹைதரபாத்தை சேர்ந்த உமாராணி(42) என்ற பெண், குறித்த இணையதளத்தில் இருந்த ராஜசிம்மனின் தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, இருவரும் தங்களது விவரங்களை பகிர்ந்து கொண்டு, திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த 6 மாதங்களாக இருவரும் செல்போனில் அடிக்கடி பேசியதால் நெருக்கம் ஏற்பட்டது. ராஜசிம்மன், தனக்கு செலவுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் உமாராணியிடம் கேட்டுள்ளார்.

அவரும், திருமணம் செய்யப்போகும் நபர்தானே என, அவர் கேட்கும் பணத்தை அவ்வப்போது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். மேலும், சொந்தமாக தொழில் தொடங்கப்போவதாக கூறி, அந்த பெண்ணிடம் இருந்து ரூபாய் 27 லட்சம் வரை வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஒரு கட்டத்தில் உமாராணி என்னை எப்போது திருமணம் செய்துகாள்ள போகிறீர்கள் என்று ராஜசிம்மனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பல்வேறு காரணங்களை கூறி திருமண பேச்சை தவிர்த்துள்ளார்.

இந்நிலையில், ராஜசிம்மன் செல்போனுக்கு அந்த பெண் தொடர்புகொண்டபோது, பல நாட்களாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து குறித்த இணையதளத்தில், பதிவு செய்திருந்த முகவரியை வைத்து சென்னைக்கு வந்து, ஆயிரம் விளக்கு பகுதியில் தேடி பார்த்துள்ளார்.

எங்கு தேடியும் கிடைக்காததால் வேறுவழியின்றி ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், ராஜசிம்மன் திருச்சியில் ப துங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பொலிசார் திருச்சிக்கு சென்று ராஜசிம்மனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இதேபோல் ராஜசிம்மன் வேறு பெண்களை ஏமாற்றியுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.