வவுனியா அரச உத்தியோகத்தர் குடியிருப்பு மக்கள் ஆர்ப்பாட்டம்!!

அரச உத்தியோகத்தர் குடியிருப்பு மக்கள்

வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள அரச உத்தியோகத்தர் குடியிருப்பில் வசிக்கும் மக்கள் தமது குடியிருப்பு பகுதியில், குடியிருக்காத மக்களின் காணிகளை சுவீகரித்து காணியற்றவர்களுக்கு வழங்குமாறு கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

8 வருடங்களுக்கு முன்னர் வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களில் காணியற்றவர்களுக்கு என ஓமந்தை பகுதியில் காணிகள் வழங்கப்பட்டு 800 இற்கும் அதிகமானவர்கள் குடியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் தற்போது வரையில் அக்குடியிருப்பு பகுதியில் 87 குடும்பங்களே வசித்து வருவதனால் ஏனைய பகுதிகள் பற்றைக்காடுகளாகவும் மக்கள் நடமாட்டமற்ற பகுதியாகவும் காணப்படுவதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலான நிலை காணப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் குறித்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்படவில்லை.

எனவே காணி உறுதிப்பத்திரங்களையும் வழங்க வேண்டும் எனவும் காணிகளில் குடியிருக்காதவர்களின் காணிகளை சுவீகரித்து உண்மையில் காணி அற்றவர்களுக்கு வழங்கி அப்பகுதியில் மக்கள் அச்சமின்ற வாழ வழிவகை செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த குடியிருப்பு பகுதிக்கு முன்பாக உள்ள வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கிராமத்திற்கான அடிப்படை வசதிகளையும் செய்து தருமாறும் குடிநீர் பிரச்சனைக்கு தாம் முகம் கொடுப்பதுடன் வீதிகளும் கிரவல் வீதிகளாக காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

சுமார் 2 மணி நேரமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தாம் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்ட வேண்டி ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தனர்.

புத்தாண்டு தினத்தில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து : ஸ்தலத்தில் ப லியான இளைஞர்கள்!!

புத்தாண்டு தினத்தில்..

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உ யிரிழந்துள்ளனர்.

தம்புள்ளையிலிருந்து மரக்கறிகளை ஏற்றி வந்த லொறி கிளிநொச்சி கனகபுரம் பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறியை விநியோகித்து விட்டு திரும்பி வருகின்ற வேளை எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் குறித்த லொறியுடன் மோதியதில் இரு இளைஞர்களும் சம்பவ இடத்தில் உ யிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்த 23 வயதுடைய வரதராஜா ஜெமினன் மற்றும் யாழ்ப்பாணம் செட்டியார் மடம் அராலி மேற்கைச் சேர்ந்த 29 வயதுடைய செல்வநாயகம் அஜிந்தன் ஆகிய இருவருமே உ யிரிழந்துள்ளனர்.

உ யிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

யாழில் சோற்றுப் பானை கவிழ்ந்து விழுந்ததில் சிறுமி பரிதாபமாக ம ரணம்!!

யாழில்

யாழ்ப்பாணம், பெரியத்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றில் உணவு சமைத்துக் கொண்டிருந்த நிலையில் சிறுமி ஒருவரின் மீது சோற்றுப் பானை கவிழ்ந்ததில் அச் சி றுமி உ யிரிழந்துள்ளார்.

அடுப்பில் இருந்த சோற்று பானையில் நீர் நன்கு கொதித்திருந்த சந்தர்பத்தில் இவ்வாறு சோற்று பானை கவிழ்ந்து கீழே விழுந்துள்ளது. இதன்போது பாரிய எரிகா யங்களுக்கு உள்ளான சி றுமி யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கவலைக்கிடமாக உ யிரிழந்துள்ளார்.

இரண்டு வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். சிறுமியின் உடல் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

உணவுப் பொதியின் விலை இன்று முதல் அதிகரிப்பு!!

உணவுப் பொதி

உணவுப் பொதிகளின் விலை இன்று முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

அரிசி மற்றும் காய்கறிகளின் விலையின் அதிகரிப்பால், இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உணவுப் பொதிகளின் விலை இன்று முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

2020 புத்தாண்டு பலன் : மீன ராசி : முழுமையான பலன்கள்!!

மீன ராசி

நீண்ட நாட்களுக்குப் பிறகு வெற்றியடையப் போகும் மீன ராசியினரே நீங்கள் அவசரமாக எதையும் செய்யும் தயங்காத குணமும் உடையர்கள். இந்த வருடம் பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிதொடர்புகளில் எச்சரிக்கை தேவை.

தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு அதிக ஆர்டர்கள் கைக்கு வரும். புதிய ஒப்பந்தங்கள் பலவற்றில் கையெழுத்திடுவீர்கள். ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ற விஷயங்களைச் செய்து ரசிகர்களை கவர்வீர்கள். அரசியல்வாதிகள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக யோசித்து செயல்பட்டால் காரியங்களை சாதித்துக் கொள்ளலாம். உங்கள் கட்சி பிரச்சனைகள் குடும்ப சந்தோஷத்தை கெடுக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சாதகமான முடிவு பெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு பாடங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அவ்வப்போது பாடத்தில் உள்ள சந்தேகங்களை போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம் : இந்த வருடம் ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகை கைக்கு கிடைக்கும்.

உத்திரட்டாதி : இந்த வருடம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதே நேரத்தில் பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.

ரேவதி : இந்த வருடம் எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும்.

பரிகாரம் : செவ்வாய் கிழமைதோறும் முருகனை வணங்கி வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து கூடும். கடன் பிரச்சனை தீரும். அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய் – வியாழன்

2020 புத்தாண்டு பலன் : கும்ப ராசி : முழுமையான பலன்கள்!!

கும்ப ராசி

பிறரிடம் பேசும் போது வார்த்தைகளை கவனமாக பிரயோகிக்கும் ஆற்றல் பெற்ற கும்ப ராசியினரே இந்த வருடம் பணம் வரும் வாய்ப்பு உள்ளது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும்.

பல விதத்திலும் நன்மை செய்யும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். சுபச்செலவுகள் அதிகரிக்கச் செய்யும். வேண்டியவர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில் அக்கறை தேவை. சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. விபரீத ஆசைகள் ஏற்படலாம். கவனம் தேவை.

தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக அமைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு புகழ் சேர்க்கும் விதமாக வேலைகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் பணத்தை எதிர்பார்த்ததை விட புகழ் சேர்க்கும் விதமாக அமையும்.அரசியல்துறையினருக்கு நிம்மதியான காலமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உல்லாச பயணமாகவும் அது அமையும். பேசும் போது மட்டும் கவனமுடன் இருப்பது நல்லது.

பெண்களுக்கு எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முன்னேற்றத்திற்கு உதவும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள் : இந்த வருடம் எதிர்பார்த்த நல்ல செயல்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.

சதயம் : இந்த வருடம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் : இந்த வருடம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். பணம் வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும்.

பரிகாரம் : வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றி வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும். எதிர்ப்புகள் அகலும். அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள் – புதன்

2020 புத்தாண்டு பலன் : மகர ராசி : முழுமையான பலன்கள்!!

மகர ராசி

எடுத்த காரியங்களை முகம் சுளிக்காமல் செய்து விடும் மகர ராசியினரே இந்த வருடம் பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வீண் மன குழப்பங்களை தோன்றினாலும் முடிவில் தெளிவு உண்டாகும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.

தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றலாம். மிகவும் கவனமாக பேசுவது நன்மை தரும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை எழுந்தால் பேசி சமாளிப்பது நல்லது. பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி நிலைமை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும்.

கலைத்துறையினர் திறம்பட செயல்பட்டு அனைவரிடமும் பாராட்டு பெறுவீர்கள். அதன் மூலம் புதிய ஆர்டர்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் வந்துசேரும்.அரசியல்துறையினருக்கு மனம் மகிழும்படியான செய்திகள் வந்து சேரும். மேலிடத்திலிருந்து பணி நிமித்தமாக முக்கிய செய்திகள் வந்து சேரும்.

பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மேற்படிப்பு படிக்கும் ஆர்வம் உண்டாகும். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் : இந்த வருடம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப்பெறுவார்கள். லாபம் கூடும்.

திருவோணம் : இந்த வருடம் எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும்.

அவிட்டம் : இந்த வருடம் பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள். எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம் : சனிக்கிழமையில் சனிபகவான், விநாயகரை வழிபடுவது எல்லா காரியங்களும் நன்றாக நடக்க உதவும். கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள் : புதன் – வெள்ளி

2020 புத்தாண்டு பலன் : தனுசு ராசி : முழுமையான பலன்கள்!!

தனுசு ராசி

பிறர் மனதிற்கு தெம்பு தரும் வகையில் வார்த்தைகளை பேசும் தனுசு ராசியினரே இந்த வருடம் எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். மன சஞ்சலம் ஏற்படுத்தும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். போட்டிகள் நீங்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். செய்து கொண்டிருக்கும் வேலைகள் மிகச் சிறப்பாக நடந்து முடியும்.அரசியல்வாதிகளுக்கு பணம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக நடந்து முடியும். தனது பேச்சுத் திறமையால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மேலிடத்தில் மதிப்பு இருக்கும்.

பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலை களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும்.

மூலம் : இந்த வருடம் குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது.

பூராடம் : இந்த வருடம் கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்.

உத்திராடம் 1ம் பாதம் : இந்த வருடம் எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்க மாட்டீர்கள். பிரச்சனையை கண்டு பயப்படாமல் கையாள்வீர்கள். கோபமான பேச்சு, டென்ஷன் குறையும்.

பரிகாரம் : குருவுக்கு வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். அறிவுத் திறன் கூடும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வியாழன்

வவுனியாவில் புத்தாண்டு தின ஆராதனை நிகழ்வு!!

ஆராதனை

வவுனியா நாற்சதுர சுவிசேச சபையில் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 12.00 மணிக்கு விசேட ஆராதனை நிகழ்வு நடைபெற்றது.

வவுனியா குருமன்காடு மன்னார் வீதியில் அமைந்துள்ள நாற்சதுர சுவிசேச சபையில் புதுவருட பிறப்பை முன்னிட்டு விசேட ஆராதனை நிகழ்வு ஆலயத்தின் தலைமை போதகர் பி.என். சேகர் தலைமையில் நடைபெற்றது.

விசேட புதுவருட ஆராதனை நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கடமைகளை பொறுப்பேற்றனர்!!

அரச உத்தியோகத்தர்கள்..

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து 2020 ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அந்தவகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் காலை 9.30 மணிக்கு மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபாவினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு புதுவருட சத்தியபிரமாணத்தை அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் செய்து கொண்டனர்.

தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன், புதுவருட வாழ்த்துக்களை பரிமாறி தமது கடமைகளை பொறுப்பேற்றனர். இதன்போது மாவட்ட செயலக வளாகத்தில் மரம் ஒன்றும் அரச அதிபரால் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் காலை 8 மணி வரை கடும் பனி!!

கடும் பனி

வவுனியாவில் இன்று (06.11.2019)காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர்.

வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 8.00 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள் எனப் பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

ஏ-9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 8 மணிவரை ஒளியைப் பாய்சியபடி சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அண்மைக்காலமாக குளிருடன் கூடிய காலநிலை வவனியாவில் காணப்பட்ட போதிலும் இன்றைய நிலை போன்றதான பனி மூட்டம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் விழுந்த வாகனம் : நால்வர் காயம்!!

குளத்தில் விழுந்த வாகனம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்றுகொண்டிருந்த கயஸ் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள கல்குண்டாமடு குளத்தினுள் விழுந்து மூழ்கியுள்ளது.

வவுனியா, கல்குண்டாமடுவில் இன்று(01.01.2020) அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

வாகனத்தில் பயணித்தவர்கள் விரைவாக செயற்பட்டு வானிலிருந்து கீழே இறங்கியமையால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

குறித்த வானில் 4 பேர் பயணித்த நிலையில் அவர்கள் சிறு காயங்களிற்கு உள்ளாகி, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

2020 புத்தாண்டு பலன் : விருச்சிக ராசி : முழுமையான பலன்கள்!!

விருச்சிக ராசி

உடன் பிறந்தோரிடம் விட்டுக் கொடுத்துப் போகக் கூடிய விருச்சிக ராசியினரே இந்த வருடம் எதிர்ப்புகள் அகலும். எல்லா நலன்களும் உண்டாகும். விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்கள் நட்பு உண்டாகும். வாகன மூலம் லாபம் வரும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பல விதத்திலும் புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்சனைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள்.

குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும். புதிய வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு லாபமான காலமாக இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய ஆர்டர்களில் கையெழுத்திடுவீர்கள் பெரிய அளவிலான ஒப்பந்தகளும் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் வாக்கு வன்மை அதிகரிக்கும். பேசி சில காரியங்களைச் சாதிக்க முற்படுவீர்கள். சில முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழ்நிலை உருவாகும்.

பெண்களுக்கு எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாக படிக்க வேண்டி இருக்கும். கல்வி தொடர்பான பிரச்சனைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும்.

விசாகம் 4ம் பாதம் : இந்த வருடம் எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பதும் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.

அனுஷம் :  இந்த வருடம் காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும்.

கேட்டை :  இந்த வருடம் எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்து சேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை.

பரிகாரம் : மாரியம்மனை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய் – வெள்ளி

2020 புத்தாண்டு பலன் : துலாம் ராசி : முழுமையான பலன்கள்!!

துலாம் ராசி

முன்னுக்கு பின் முரண்பாடாக பேசுபவர்களை நொடியில் மடக்கி விடும் துலா ராசியினரே இந்த வருடம் பணவரத்து இருக்கும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். பயணங்கள் ஏற்படலாம். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும்.

உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் முன் யோசிப்பது நல்லது. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

கலைத்துறையினருக்கு அலைச்சல் குறையும். ஓய்வு கிடைக்கும். பயணங்கள் சந்தோஷமானதாக இருக்கும். நிம்மதியான காலகட்டமாக இருக்கும்.அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருந்து மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். தொகுதி மக்களைச் சந்திப்பீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும்.

பெண்களுக்கு எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்க சூழ்நிலை ஏற்படும். செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது. கவுரவம் உயரும். மாணவர்களுக்கு நிதானத்தை கடை பிடிப்பது வெற்றிக்கு உதவும். பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

சித்திரை 3, 4 பாதங்கள் : இந்த வருடம் மனோ தைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும். எந்த சூழ்நிலையையும் அனுசரித்து செல்வீர்கள். வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும்.

சுவாதி : இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தனபோக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள் : இந்த வருடம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம்.

பரிகாரம் : துர்க்கை தேவிக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்க எல்லா பிரச்சனைகளிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வெள்ளி.

2020 புத்தாண்டு பலன் : கன்னி ராசி : முழுமையான பலன்கள்!!

கன்னி ராசி

துரிதமாக வேலைகளை முடிக்கக் கூடிய கன்னி ராசியினரே இந்த வருடம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும்.

குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல் சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும்.

கலைத்துறையினருக்கு சற்று மந்தமான சூழ்நிலை காணப்படும், இந்த காலகட்டத்தை ஓய்வெடுக்க பயன்படுத்திக்கொள்ளுங்கள். வேலைகள் சற்று தாமதமாக வந்து சேரும். கவலை வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவிஷயங்கள் நல்ல முறையில் நடந்து முடியும்.

மேலிடத்திலிருந்தும் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களை வந்தடையும்.பெண்களுக்கு பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண் பெற அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள் :  இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

அஸ்தம் :  இந்த வருடம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.

சித்திரை 1, 2, பாதங்கள் :  இந்த வருடம் திறமையாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும்.

பரிகாரம் : புதன்கிழமையில் நவகிரகத்தில் புதனுக்கு பால் அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வணங்கி வருவது புத்தி சாதுரியத்தை தரும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள். அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள் – புதன்

2020 புத்தாண்டு பலன் : சிம்ம ராசி : முழுமையான பலன்கள்!!

சிம்ம ராசி

பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கக் கூடிய சிம்ம ராசியினரே நீங்கள் வசீகர பேச்சாற்றல் கொண்டவர். இந்த வருடம் எல்லா வகையிலும் நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பாராத சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை தரும்.

குடும்பத்தில் கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். சுதந்திரமான எண்ணம் ஏற்படும்.

தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேல் அதிகாரிகள் உதவி கிடைக்கும். சக ஊழியர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் விலகும்.

கலைத்துறையினர் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நன்மை தரும். அலைச்சலைக் குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.அரசியல்துறையினருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமான பணிகளை உங்களுக்கு கொடுப்பார்கள்.

பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை தேவை. பயணம் செல்ல வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது.

மகம் : இந்த வருடம் கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை.

பூரம் : இந்த வருடம் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. மனகஷ்டம், பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

உத்திரம் 1ம் பாதம் :  இந்த வருடம் மனதெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும்.

பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமையில் சிவசூரியனை தீபம் ஏற்றி வழிபட்டு வர கடன் பிரச்சனை குறையும். முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு – புதன்