இலங்கையில் 2 இந்திய வங்கிகளின் சேவை நிறுத்தம்!!

இந்திய வங்கிகள்

இலங்கையில் இயங்கி வரும் இரண்டு இந்திய வங்கிகள் தங்களுக்கான சேவைகள் அனைத்தையும் நிறுத்தி கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

இரண்டு வங்கியின் தலைமை வேண்டுகோளுக்கு இணங்க ஐ.சி.ஐ.சி-ஐ மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகளின் சேவை இலங்கையில் நிறுத்தப்பட உள்ளது.

இதன் அடிப்படையில், இலங்கை மத்திய அரசு நிதி நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ள அனுமதி அளித்துள்ளது. வங்கிகளின் செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டபின்னர், இந்த வங்கிகளுக்கு அளிக்கப்பட்ட உரிமத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்யும்.

அதன் பின் பொதுமக்களிடமிருந்து வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வது உள்பட வங்கி நடவடிக்கைகள் எதுவும் இலங்கையில் மேற்கொள்ள அனுமதிப்படாது.

கல்யாணம் பண்ணிக்கோடானு கெஞ்சினேன்… ஆனால் அவனோ? இளம் பெண் சொன்ன கண்ணீர் தகவல்!!

இளம் பெண்

தமிழகத்தில் காவலரை காதலித்த பெண் ஒருவர், அவரால் ஏமாற்றப்பட்டதால் சேர்த்து வைக்கும் படி மிகவும் வேதனையுடன் க ண்ணீர் மல்க கூறியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த சரஸ்வதி, அழகுக்கலை நிபுணராக உள்ளார். இவர் கமிஷ்னர் அலுவலகம், மகளிர் ஆணையம் மற்றும் காவல்நிலையம் ஆகிய இடங்களில் பொலிசார் ஒருவர் தன்னை ஏ மாற்றிவிட்டதாக புகார் கொடுத்து வருகிறார்.

ஆனால் பொலிசார் அதைப் பற்றி கண்டுகொள்வதே என்று மிகவும் வேதனையுடன், பிரபல தமிழ் ஊடகமான விகடனில் கூறியுள்ளார். அதில் அவர் தொடர்ந்து கூறுகையில், என்னுடைய அப்பா கூலித் தொழிலாளியாக உள்ளார்.

காவலர் தேர்வுக்கான பயிற்சியின் போது வீரமணி என்பவர் எனக்கு அறிமுகமானார். அவரின் பேச்சைக் கேட்டு, அவரை காதலித்தேன். அவருக்கு காவலர் பணி கிடைத்ததால், மிகவும் சந்தோஷமடைந்தேன்.

ஆனால் வேலைக்கு சென்ற பின்னர் வீரமணியின் நடவடிக்கைகள் எல்லாம் மாறிவிட்டன. அவர் என்னிடம் போனில் கூட பேசுவதில்லை. நாங்கள் காதலித்த போதே கணவன், மனைவியாக வாழ்ந்துவிட்டோம், இப்போது எங்கள் வீட்டில் வசதி இல்லை என்பதற்காக வீரா வீட்டில் திருமணத்திற்கு த டை போடுகிறார்கள்.

காதலுக்கு குடும்பத்தில் எ திர்ப்பு வந்தாலும் காதலித்த பெண்ணை கைவிடக் கூடாது. என்னைப் பதிவுத் திருமணம் செய்துகொள்ளும்படி வீராவிடம் கூறியபோது அவர் சம்மதிக்கவில்லை.

வீராவின் அப்பா காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதால், அந்த செல்வாக்கை பயன்படுத்தி, வீரா மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில், கடந்த 31.05.2019 புளியந்தோப்பு மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், வீராவை அழைத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது வீரர் என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்தார், ஆனால் மகளிர் ஆணையத்தில் வேறுவிதமாக பேசுகிறார். நான் விசாரணைக்காக சென்ற போது, அப்போது என்னை வழி மறித்த வீரர் இனிமேலும் நீ புகார் கொடுத்தால் ரோட்டில் வைத்து பெட்ரோல் ஊ ற்றி எ ரித்துவிடுவேன் என்று மி ரட்டுகிறார்.

இதனால் என் குடும்பத்தினருக்கும், என்னுடைய உயிருக்கும் ஆ பத்து உள்ளது, மருத்துவ பரிசோதனைக்கு நான் தயாராக இருக்கிறேன், ஒரு பெண்ணாக நான் காதலித்தது தப்பா என்று வேதனையுடன் கூறி முடித்தார்

மேலும் வீரமணி சரஸ்வதியை திருமணம் செய்ய சம்மதித்தாலும், சரஸ்வதி வீரமணி என்னை திருமணம் செய்தாலும் என் வாழ்க்கைக்கு அவர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் புகாரில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூட்டிய காருக்குள் கிடந்த மூன்று சடலங்கள் : உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவன்!!

பூட்டிய காருக்குள்..

அதிவேக நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த காருக்குள் இருந்து மூன்று பேரின் ச டலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று தனித்து நின்றுகொண்டிருந்துள்ளது.

ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸார் அருகாமையில் சென்று பார்த்தபோது உள்ளே சிலர் இ றந்துகிடந்திருப்பது தெரியவந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக கண்ணாடியை உடைத்து உள்ளிருந்தவர்களை மீட்க முயற்சித்தார். துரதிஷ்டவசமாக உள்ளிருந்த சிறுவனை தவிர மற்ற அனைவரும் இ றந்த நிலையில் கிடந்தனர்.

இதனையடுத்து சிறுவனை மீட்ட பொலிஸார், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அங்கு சோதனை மேற்கொண்டு ஓட்டுனரின் கையில் இருந்த து ப்பாக்கி மற்றும் கடித குறிப்பையும் கைப்பற்றினர்.

பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் நீரஜ் அவரது மனைவி நேஹா மற்றும் மகள் தன்யா ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் ஷவுர்யா என்பதும் தெரியவந்தது. கொ லைக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து எஸ்.பி கூறுகையில், டெல்லியில் தங்கியிருந்த நீரஜ் குடும்பத்தினர் புத்தாண்டு தினத்திற்காக இங்கு வந்துள்ளனர். அப்போது நீரஜ் தனது குடும்பத்தை சேர்ந்த 3 பேரையும் து ப்பாக்கியால் சு ட்டுவிட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார் என கூறியுள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம் : 6 பேர்பரிதாபமாக பலி!!

புத்தாண்டு கொண்டாட்டத்தில்..

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, 70 அடி உயரத்தில் இருந்து லிப்ட் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான புனீத் அகர்வால் என்பவரது பண்ணை வீட்டிலே இச்சம்பவம் நடந்துள்ளது.

இந்தூரின் படல்பானி பகுதியில் இவருக்கு சொந்தமாக பண்ணை வீடு உள்ளது. புனீத் அகர்வால், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் நேற்று மாலை புத்தாண்டு கொண்டாட அங்கு சென்றுள்ளார்.

கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக புனீத் அகர்வால், அவரது மகள் மற்றும் உறவினர்கள் பண்ணை வீடு அமைந்துள்ள கட்டிடத்தின் ஒரு கோபுரத்தில் உள்ள லிப்டில் ஏறி மேல் தளத்திலிருந்து வெளி அழகை பார்வையிட்டுள்ளனர்.

பின்னர் லிப்டில் இறங்கி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் கோளாறால் 70 அடி உயரத்தில் இருந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் புனீத் அகர்வால்(53), அவரது மகள் பாலக் அகர்வால் (27), மருமகன் பால்கேஷ் அகர்வால் (28), பேரன் நாவ் (2), உறவினர்கள் கவுரவ் (40), ஆர்யவீர் (11) ஆகியோர் அதே இடத்தில் பலியாகினர்.

புனீத் அகர்வாலின் மனைவி நிதி அகர்வால் காயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அகர்வாலின் மகன் நிபூன் கோபுரத்திலே நின்று விட்டதால் அவர் இந்த கோர விபத்தில் இருந்து தப்பியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் ஜனாதிபதியின் பசுமைத் திட்டத்தின் கீழ் மரநடுகை!!

மரநடுகை

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் பசுமைத் திட்டத்தின் கீழ் புத்தாண்டு தினமான நேற்று (01.01.2019) வவுனியாவில் மரநடுகை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதியின் சிந்தனையின் கீழ் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் இத் திட்டத்தின் கீழ் வவுனியாவில் பல பகுதிகளில் மரநடுகை இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா மரம் ஒன்றினை நாட்டி பசுமைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இதேபோல், வவுனியா பிரதேச செயலகம், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம், வவுனியா வடக்கு பிரதேச செயலகம் மற்றும் குருமன்காடு காளி கோவில் வீதி என்பவற்றில் இம் மரநடுகை இடம்பெற்றது. இதில் அரச அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இலட்சம் ரூபாய் சம்பளத்தை உதறிவிட்டு சாதித்து காட்டி தமிழ்ப் பெண் : எதில் தெரியுமா?

தமிழ்ப் பெண்

தமிழகத்தில் லட்சக்கணக்கில் சம்பளத்தை உதறி தள்ளிவிட்டு, தன்னுடைய முதல் முயற்சியில் இளம் பெண் ஒருவர் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் குரூப் 1 தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேர்காணலுக்கு 362 பேரின் பட்டியல் வெளியானது. இதில் 257 பேர் பெண்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா என்ற பெண் முதலிடம் பெற்றுள்ளார்.

இவர் கல்லூரி வளாக நேர்காணலிலேயே, தேர்ச்சி பெற்று தனியார் ஐ.டி. நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்த இவரின் சம்பளம் சுமார் 1 லட்சம் ரூபாயும் தாண்டி இருந்தது.

ஆனால், அரசுப் பணியின் மீது கொண்ட ஆர்வத்தால் தனது பணியை ராஜினாமா செய்த இவர், அரசு தேர்வான குரூப்-1 தேர்வுக்கு தயாரானார்.

அதன் படி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தன்னுடைய முதல் முயற்சியிலே அர்ச்சனா தேர்ச்சி பெற்றுள்ளதால், அவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அர்ச்சனா இந்த தேர்விற்காக, நாள் ஒன்றிற்கு 10 மணி நேரம் தயாரானதாகவும், அதுமட்டுமின்றி என்னுடைய குடும்பத்தினரின் ஒத்துழைப்பும், முறையான பயிற்சியும் உதவிகரமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

சிக்கன் குழம்பை சாப்பிட்டு உயிருக்கு போராடிய போது தண்ணீர் கேட்ட கணவன் : சயனைட் கலந்து கொடுத்த மனைவி!!

கேரளாவில்..

கேரளாவில் கணவர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை கொ லை செய்த பெண் வழக்கில் புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோழிக்கோட்டில் உள்ள கூடத்தை கிராமத்தை சேர்ந்த ஜோலி (47) என்ற பெண் கடந்த 14 ஆண்டுகளில் தன் குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை கொ லை செய்துள்ளார்.

2002ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆண்டுக்குள் தனது முதல் கணவர், இரண்டாம் கணவரின் முதல் மனைவி உள்ளிட்டோரை அவர் கொ ன்றார். பணம், ஆடம்பர உல்லாசத்திற்கு ஆசைப்பட்டே ஜோலி இந்த கொ டூர செயல்களை செய்தார்.

இந்நிலையில் ஜோலி வழக்கில் சிறப்பு பு லனாய்வு காவல்துறையினர் 1800 பக்கங்கள் கொண்ட கு ற்றப் பத்திரிகையை தாமரசேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதில் பல திடுக்கிட வைக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஜோலியின் இரண்டு குழந்தைகள் உட்பட 246 சாட்சிகள் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜோலி தனது கணவரை எப்படி இரக்கமின்றி கொ லை செய்தார் என்பது குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது சிக்கன் குழம்புடன் ச யனைடை கலந்து ஜோலி, கணவருக்கு கொடுத்துள்ளதாக குற்றப்பத்திரிக்கையில் பொலிசார் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ச யனைட் கலந்த குழம்பை சாப்பிட்ட கணவர் உ யிருக்குப் போ ராடிய போது ஜோலியிடம் தண்ணீர் கேட்டுள்ளார். இதையடுத்து ஜோலி தான் கொடுத்த தண்ணீரிலும் ச யனைடை கலந்ததாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா போக்குவரத்து சபை பேரூந்துக்கள் வழமைக்கு திரும்பின!!

போக்குவரத்து சபை பேரூந்துக்கள்

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையின் ஊழியர்களினால் இன்று (02.01.2020) காலை மேற்கொள்ளப்பட்ட பணிபகிஸ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் காலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் 11 மணியளவில் கைவிடப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலைக்கு சொந்தமான எந்த பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டிருக்கவில்லை.

இந்நிலையில் ஊழியருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்த நிலையில் பகிஸ்கரிப்பு தொடர்ந்து இடம்பெற்று வந்திருந்தது.

இதன்போது பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடிய சாலை முகாமையாளர் அவர்களது கோரிக்கையான பதவி உயர்வு வழங்கப்பட்டு அப்பதவி இரத்து செய்யப்பட்டவர்களை தொடர்ந்தும் அதே பணியில் வைத்திருக்காது நியமன கடிதத்தின் பிரகாரம் எவ்வாறான பதவி வழங்கப்பட்டதோ அப்பதவிகளுக்கே அவர்களை இன்றிலிருந்து நியமிப்பதாக தெரிவித்ததையடுத்து பணி பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டு சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

கோர விபத்தில் இருவர் பலி!!

கோர விபத்தில்..

அம்பலாங்கொடை – ருகுணு ரிதியகம பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டியும் காரும் நேற்று நேருக்கு நேர் மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த 27 மற்றும் 28 வயதான இளைஞர்களே இதன்போது உயிரிழந்துள்ளனர். சம்பவம் குறித்து அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் தீர்த்தமாடச் சென்ற இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு!!

தீர்த்தமாடச் சென்ற இளைஞன்

வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் பிள்ளையார் ஆலயத்திற்கு பிள்ளையார் கதை தீர்த்தமாடல் நிகழ்வுக்கு சென்ற இளைஞரொருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஈச்சங்குளம் பகுதியில் பிள்ளையார் கதை தீர்த்தமாடல் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வின் இறுதியில் ஊர்மக்கள் கூடி தவசியாகுளம் தீர்தக்குளத்தில் கொடிக்கம்பம் நாட்டி தீர்த்தமாடும் நிகழ்வு மரபுரீதியில் பாரம்பரியமாக நடைபெற்று வருகின்றது.

இதன்போது குறித்த தீர்த்தக்குளத்தில் நீராடிக்கொண்டிருந்த ஈச்சங்குளத்தைச் சேர்ந்த ஜெகநாதன் துஷ்யந்தன் வயது 27 என்ற இளைஞர் தாமரைக் கொடியில் சிக்கி நீரில் மூழ்கியுள்ள நிலையில்,

பல மணி நேர போராட்டங்களின் பின் குறித்த இளைஞரை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் வடமாகாண ஆளுநரிற்கு அமோக வரவேற்பு!!

ஆளுநரிற்கு அமோக வரவேற்பு

வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எம்சார்ள்ஸினை வரவேற்கும் நிகழ்வு இன்று(02.01.2020) வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் செ.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா நகர எல்லையில் வைத்து வாகன பவனியாக புதிய ஆளுநர் அழைத்து வரப்பட்டார்.

இதனையடுத்து வவுனியா நகரசபை வாயிலில் சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள் இசைவாத்தியம் முழங்க அழைத்து வர வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் புதிய ஆளுநரை வரேவேற்றிருந்தார்.

பொது அமைப்புக்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து மண்டபத்திற்கு அழைத்து வந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பித்திருந்தது.

வரேவேற்புரையினையும் தலைமையுரையினையும் தமிழ் விருட்சத்தின் தலைவர் செ.சந்திரகுமார் நிகழ்த்த ஆசியுரையினை நான்கு மதத்தலைவர்களும் வழங்கியிருந்தனர்.

இதேவேளை ஏற்புரையினை வடமாகாணத்தின் புதிய ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் நிகழ்த்தியிருந்ததோடு, இந்நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தீர்த்தமாடச் சென்ற இளைஞன் உயிரிழப்பு!!

தீர்த்தமாடச் சென்ற இளைஞன்..

வவுனியா – தவசியாகுளம் தீர்த்தக்குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உ யிரிழந்துள்ளார். வவுனியா ஈச்சங்குளம் பிள்ளையார் ஆலயத்தின் பிள்ளையார் கதை தீர்த்தமாடல் நிகழ்வு இன்று (02.01.2020) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இறுதியில் ஊர்மக்கள் கூடி தவசியாகுளம் தீர்தக்குளத்தில் கொடிக்கம்பம் நாட்டி தீர்த்தமாடும் நிகழ்வு மரபுரீதியில் பாரம்பரியமாக நடைபெறும். அந்த வகையில் இன்று வழமைபோல ஊர்மக்கள் கூடி தீர்த்தமாடச் சென்றனர்.

இதன்போதே ஈச்சங்குளத்தைச் சேர்ந்த ஜெகநாதன் துஷ்யந்தன் (வயது 27) என்ற இளைஞர் தாமரைக் கொடியில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார்.

அவரை கா ப்பாற்றுவதற்கு முயற்சி செய்த ஊர்மக்கள், சுமார் 20 நிமிடம் போ ராடி இளைஞரை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உ யிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா ஆதி விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கஜமுகா சூரன்போர்!!

ஆதி விநாயகர் ஆலயத்தில்..

வவுனியா ஆதி விநாயகர் ஆலயத்தில் கஜமுகா சூரன்போ ர் சிறப்பாக நேற்று(01.01.2020) மாலை இடம்பெற்றது.

இந்துக்களின் விசேட விரதங்களில் ஒன்றே பிள்ளையார் பெருங்கதை. 20 நாட்கள் பிள்ளையார் பெருங்கதை இடம்பெற்று அடியார்கள் விரதம் அனுஸ்டித்து 21 ஆம் நாள் கஜமுகா சூரன்போ ர் இடம்பெறும்.

தீயவற்றை அழித்து நல்லவற்றைப் போதிக்கும் முகமாக கஜமுகா சூரனை விநாயகப் பெருமான் வ தம் செய்ததாக புராணக் கதைகள் கூறுகின்றன.

அந்தவகையில், வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதிவிநாயர் ஆலயத்தில் ஆலய பிரதமகுரு சஞ்சீவ காந்த குருக்கள் தலைமையில் பிள்ளையார் பெருங்கதையின் இறுதி நாயான நேற்று விசேட அபிசேகங்கள், பூஜை வழிபாடுகள் இடம்பெற்று ஆதி விநாயகப் பெருமான் உள்வீதி வலம் வந்து வெளி வீதிக்கு காட்சி கொடுத்தார்.

அங்கு பக்த அடியார்களின் அரோகரா கோசத்திற்கும், மேளதாள வாத்தியங்கள், மயிலாட்டம், குதிரையாட்டம் என்பவற்றுக்கு மத்தியில் கஜமுகா சூரன்போ ர் இடம்பெற்றது.

பல்வேறு நிலைகளில் வலம் வந்த கஜமுகா சூரனை வ தம் செய்த விநாயகப் பெருமானம் பக்த அடியார்களுக்கு அருள்பாலித்தார்.

அரச ஊழியர்களுக்கு மற்றுமொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி!!

அரச ஊழியர்களுக்கு..

அரச நிறுவனங்களில் உயர்மட்ட அதிகாரிகளால் எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களும் அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் அரச நிறுவனங்களின் தீர்மானங்கள் தொடர்பில் உயர் அதிகாரிகள் போன்று சாதாரண அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாயம் அறிவிக்க என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளிடம் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி உட்பட அமைச்சரவையில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் தொடர்பில் உயர் மட்ட அதிகாரிகள் அறிந்திருந்த போதிலும் சாதாரண அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அறியாமல் உள்ளனர்.

அரச சேவையை அதிகரித்து, ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு அரசாங்கத்தின் தீர்மானங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் தொடர்பில் உயர் அதிகாரிகள் போன்று சாதாரண ஊழியர்களும் சரியான விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தனது ஆட்சியின் கீழ் திறமையான மற்றும் மனிதாபிமான அரச சேவையை முன்னெடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதி ஆரம்பித்துள்ள வேலைத்திட்டங்களுக்கு அமைய இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பேஸ்புக் விருந்து நடந்த பகுதி சுற்றிவளைப்பு : ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது!!

பேஸ்புக் விருந்து

பண்டாரவளை பிரதேசத்தில் ச ட்டவி ரோத போ தைப்பொ ருளுடன் விருந்து ஒன்று நடக்கவிருந்த பகுதியை பொலிஸார் சு ற்றிவளை த்துள்ளனர். நேற்றிரவு இடம்பெறவிருந்த பேஸ்புக் விருந்து மற்றும் இசை நிகழ்ச்சியை சுற் றிவளை ப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மிகப்பெரிய இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தும் வகையில், அமைப்பு ஒன்றினால் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பண்டாரவளை, மல்வத்தை பிரதேசத்தை சேர்ந்த கணவன் , மனைவி மற்றும் அவர்களின் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மாணவன் மிகக் குறைந்த வயதில் தேசிய குத்துச்சண்டை அணியில் இடம் பிடித்து சாதனை!!

ஆர்.கே.கெவின்

வடக்கு மாகாணத்திலிருந்து மிகக்குறைந்த வயதில் தேசிய குத்துச்சண்டை அணிக்கு மாணவன் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் 21ம் திகதி பாகிஸ்தானில் நடைபெறும் போட்டியில் அவர் பங்குபற்றவுள்ளார்.

வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 6இல் கல்வி கற்றுவரும் ஆர்.கே.கெவின் (வயது 11) என்ற மாணவனே தேசிய ‘கிக் பொக்சிங்’ அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு தொடக்கம் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கெடுத்துவரும் குறித்த மாணவன் 2019ம் ஆண்டு தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை பெற்று வவுனியாவிற்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அந்தவகையில் பிரஞ்சு சவாட் குத்துச்சண்டை அமைப்பின் தலைவரும், சர்வதேச கிக் பாக்சிங் பயிற்றுவிப்பாளருமான சி.பூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 21ம் திகதி பாக்கிஸ்தான் லாகூரில் அமைந்துள்ள கடாபி விளையாட்டு மைதான அரங்கத்தில் நடைபெறவுள்ள சர்வதேச குத்தச்சண்டை போட்டியில் பங்குபற்ற கெவின் தெரிவாகியுள்ளார்.

வடக்கு மாகாண குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமாரின் பயிற்சியின் மூலம் தேசிய ரீதியில் பல பதக்கங்களை பெற்று சாதனை படைத்த மாணவனை பலரும் பாராட்டி கௌரவித்திருந்த நிலையில் குறித்த மாணவன் இலங்கை தேசிய குத்துச்சண்டை அணிக்குள் இடம்பிடித்து வடக்கு மாகாணத்திற்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.