குழந்தை பெற்ற பெண்ணுக்கு வீங்கிய வயிறு : உள்ளே இருந்த பழைய துணி : நேர்ந்த விபரீதம்!!

நேர்ந்த விபரீதம்

தமிழகத்தில் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் திடீரென உ யிரிழந்த நிலையில் அவர் வயிற்றில் பழையதுணி மற்றும் பஞ்சு இருந்ததாலேயே வீக்கம் ஏற்பட்டு உயிர் பிரிந்தது என வெளியான தகவல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தின் கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (27). இவருடைய மனைவி பிரியா (24). தலைப்பிரசவத்துக்காக பிரியா விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அ றுவை சி கிச்சை மூலம் பிரியாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

தொடர்ந்து தாயும், குழந்தையும் மருத்துவமனை கண்காணிப்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 31ம் திகதி பிரியாவின் வயிறு திடீரென வீங்க தொடங்கியது, மேலும் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரியா நேற்று முன்தினம் இரவு இ றந்தார். இந்த நிலையில் பிரியாவின் உறவினர்கள் நேற்று விருத்தாசலம் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர்.

பின்னர் அவர்கள், அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்போது பிரியாவின் வயிற்றில் பஞ்சு, பழைய துணியை வைத்து மருத்துவர்கள் தையல்போட்டு விட்டனர். இதனால் தான் அவரது வயிற்றில் வீக்கம் ஏற்பட்டு இ றந்துவிட்டார்.

எனவே இந்தளவு அஜாக்கிரதையாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த பொலிசார் போ ராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரியா ம ரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து மரணங்கள் : அனாதையாக நிற்கும் சகோதரர் : துயர சம்பவம்!!

துயர சம்பவம்

தமிழகத்தில் பெற்றோர் இறந்து இரண்டு ஆண்டுகள் கூட முழுமையாக ஆகாத நிலையில், மகனும் புத்தாண்டு அன்று பரிதாபமாக இ றந்த சம்பவம் மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கிழக்கு தாம்பரம், ரயில்வே குடியிருப்பை சேர்ந்த தம்பதி கௌதம சந்திரசேகரன்-செல்வி ரேணுகாதேவி. இந்த தம்பதிக்கு விக்னேஸ்வரன் (30) மற்றும் செந்தில் (26) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.

கெளதம் சந்திரசேகரன் சில ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்த போது, உ யிரிழந்தார். இவர் இறந்த அடுத்த இரண்டு மாதத்தில், செல்வி ரேணுகாதேவி ஒரு விபத்தில் பரிதாபமாக உ யிரிழந்தார். மூத்தமகான விக்னேஷ்வரனுக்கு திருமணம் ஆகிவிட்டதால்,

அவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரயில்வே குடியிருப்பில் வசித்து வருகிறார். தாய், தந்தையர் இல்லாததால் அண்ணன் குடும்பத்துடன், தம்பி செந்தில் வசித்து வந்தார். செந்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் புத்தாண்டு அதிகாலை உள்ளூர் நேரப்படி 1:30 மணி அளவில், பணி முடிந்து, வேளச்சேரி – தாம்பரம் பிரதான சாலையில் சேலையூர் காவல் நிலையம் எதிரே வீட்டிற்கு செந்தில் நடந்து சென்ற போது, திடீரென்று மழை பெய்து, சாலை முழுவதும் மழைநீர் தேங்கியதால்,

சாலையோரம் இருந்த மண் மேட்டின் மீது ஏற நினைத்து, அங்கிருந்த மண் மேட்டை நோக்கி தாண்டி குதித்த போது, எதிர்பாரதவிதாமாக அவரால் நிற்கமுடியாத காரணத்தினால், கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மின் கம்பத்தை பற்றி பிடித்துள்ளார். அவர் பிடித்த மின்கம்பத்தில் ஏற்கனவே மின் கசிவு இருந்ததால், மின் கம்பத்தை பிடித்த அடுத்த நொடியே செந்தில் சம்பவ இடத்திலே பரிதாபமாக துடி து டித்து இ றந்தார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரியவந்ததால், செந்திலின் உ டலைக் கைப்பற்றிய பொலிசார் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த மரணங்களால் தாய், தந்தை மற்றும் சகோதரனை இழந்த மூத்த மகன் விக்னேஷ்வரன் மிகவும் வேதனையில் உள்ளார்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் : ஒருவர் பலி : இருவர் காயம்!!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (03.01.2020) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – காத்தான்குடி, கல்லடி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதன்போது படுகாயமடைந்த மூவரில் ஒருவர் உ யிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உ யிரிழந்தவர் வயது 72 உடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் பெண்கள், ஊழியர்களுக்கு எதிரான வ ன்முறை களுக்கு எதிராக போ ராட்டம்!!

வவுனியாவில்..

“பெண்கள், ஊழியர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம்” என்ற தொனிப்பொருளில் வவுனியா மாவட்ட உள்ளுராட்டசி மன்ற பெண்கள் ஒன்றியம் , சிவில் சமூக அமைப்புக்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து போ ராட்டமொன்றினை முன்னேடுத்திருந்தனர்.

குறித்த போ ராட்டம் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (03.01.2020) காலை 9.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மிதிக்காதே மிதிக்காதே பெண் மீது மிதிக்காதே , உதைக்காதே உதைக்காதே பெண் என்ன உதைப்பந்தா, அடிக்காதே அடிக்காதே காலால் அடிக்காதே,

அவமதிக்காதே அவமதிக்காதே தொழிலாளர்களை அவமதிக்காதே போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் போ ராட்டத்தின் இறுதியில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக கண்டி வீதியூடாக வவுனியா நகரசபையை சென்றடைந்து வவுனியா நகரசபை உபதவிசாளர் குமாரசாமியிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.

இப் போ ராடத்தில் வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், நகரசபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா மக்களுக்காக வீதியில் இறங்கிய முச்சக்கரவண்டி மற்றும் வர்த்தக சங்கத்தினர்!!

வவுனியா மக்களுக்காக..

வவுனியாவை குப்பையற்ற பிரதேசமாக மாற்றும் நோக்கில் வவுனியா பொலிஸாருடன் இணைந்து முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர், வர்த்தக சங்கத்தினர் இன்று (03.01.2019) மாபெரும் சிரமதான பணியினை தொடர்ந்தனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒன்று கூடிய முச்ச்கரவண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் வர்த்தக சங்கத்தினர் உறுப்பினர்கள் அங்கிருந்து பகுதி பகுதியாக பிரிந்து சென்று சிரமதான பணியினை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா நகர், புகையிரத நிலைய வீதி, பழைய பேருந்து நிலையம், பஜார் வீதி, மணிக்கூட்டு கோபுரம், முதலாம் குருக்குத்தெரு போன்ற வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் சிரமதானப் பணி இடம்பெற்றது.

யாழில் கடலுக்கு குளிக்கச் சென்ற இளைஞன் உ யிரிழப்பு!!

யாழில்..

யாழ்.தொண்டமனாறு பகுதியில் நீரில் அ டித்துச் செல்லப்பட்ட இளைஞன் ஒருவர் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொண்டமனாறு பகுதியில் உள்ள கடல் நீரேரியில் இன்று பிற்பகல் தனது 5 நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கையில் குறித்த இளைஞன் நீரில் அ டித்துச் செல்லப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் இணைந்து சுமார் ஒரு மணிநேரமாக தே டுதல் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்ததுடன், குறித்த இளைஞனை உ யிரிழந்த நிலையில் ச டலமாக மீ ட்டுள்ளனர்.

யாழ்.பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த 26 வயதுடைய கந்தசாமி கஸ்தூரன் இளைஞரே இவ்வாறு நீரில் மூ ழ்கி உ யிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வாகனங்கள் கொள்வனவு செய்வதில் ஜனாதிபதி போட்ட தடை உத்தரவு!!

ஜனாதிபதி போட்ட தடை உத்தரவு

எதிர்வரும் 3 வருடங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கு புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்வதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்தியுள்ளார் இது தொடர்பில் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அதற்கமைய தற்போது அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கைகளை கணக்கெடுத்து அதனை முகாமைத்துவம் செய்யும் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு அரச நிறுவனத்திற்கும் வாகனம் கொள்வனவு செய்து அவசியம் என்றால், அது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து கோரிக்கை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதுவரையில் அரச நிறுவனங்களின் வாகன முகாமைத்துவம் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக தேவையற்ற வாகன கொள்வனவுகள் காரணமாக பொது மக்களின் பணம் கோடி கணக்கில் வீணாக செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 75 ஆயிரம் ரூபாவை கடந்த தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை

இலங்கையின் தங்க வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கத்தின் விலை 75 ஆயிரம் ரூபாவை கடந்துள்ளதாக தெரியவருகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக அதிகரித்துச் செல்வதுடன், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சி கண்டு வருகிறது.

இதன் கரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையிலேயே இலங்கையில் ஒரு பவுண் (24 கரட்) தங்கத்தின் விலையானது 79,108.53 ரூபாவாக பதிவாகியுள்ளது.

1 Ounce = 28.3495 Gram = 1,543.7 அமெரிக்க டொலர் (Today) = 280,335.92‬ இலங்கை ரூபா 1 Pavan = 8 Grams = 435.62 அமெரிக்க டொலர் (Today) = 79,108.53 இலங்கை ரூபா.

இவ்வாறான நிலையில் இன்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கமானது (Gold price per ounce) 1,543.7 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. ஒரு அமெரிக்க டொலரானது 181.60 இலங்கை ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தின் வரலாற்றுச் சாதனை!!

வரலாற்றுச் சாதனை

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட ஓமந்தை கோட்டத்தில் அமைந்துள்ள  சேமமடு சண்முகானந்தா வித்தியாலயம்  கடந்த வருடம் (2019)  நடைபெற்று  முடிந்த க.பொ.த.உயர்தர பரீட்சையில்  முப்பது வருடங்களின் பின்னர் மிகச் சிறந்த பெறுபேற்றினைப்  பெற்று  சாதனை படைத்துள்ளது.

இப் பாடசாலையில் இருந்து கலைப்பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய  ஆறு மாணவர்களும்  100% சித்தியடைந்து   பல்கலைகழகத்திற்கு தெரிவாகும்  வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இவர்களில் சி.அஸ்வினி என்ற மாணவி – 2A,B  பெறுபேற்றுடன்  மாவட்ட மட்டத்தில் ஏழாமிடத்தை பெற்றுள்ளார். மேலும், வி.வினோதினி -2A,B       மாவட்ட நிலை -28, செ.கம்சிகா- 2A,B மாவட்ட நிலை-29, ச.தனுசன் – 2A,C மாவட்ட நிலை-60, இ.இளங்கீரன் – A,2B மாவட்ட நிலை-92, ச.விந்துசன் – A,B,C          மாவட்ட நிலை-113 பெற்றுள்ளனர்.

பாடசாலையின் அதிபர் பொ.கணேசலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் ஆசிரியர்களான திரு.சி.ஸ்ரீ சங்கர சர்மா புவியியல் பாடத்தினையும், திருமதி.சந்திரிக்கா மற்றும் மேலதிகமாக E.S. வரதன் அவர்களும் தமிழ் பாடத்தினையும்  கற்பித்திருந்தனர்.

பாடசாலையில்  இந்து நாகரீக பாடத்துக்கான ஆசிரியர் இல்லாத நிலையில்  பாடசாலையின் பழைய மாணவர்களின் நிதி அனுசரணையுடன்  திரு.ரதிக்குமார் ஆசிரியர் மாணவர்களுக்கு இந்துநாகரீக பாடத்தை கற்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹப்புத்தளை நகரில் உலங்கு வானூர்தி விபத்து : நால்வர் ப லி!!

உலங்கு வானூர்தி விபத்து

ஹப்புத்தளை நகரில் உலங்கு வானூர்தி விபத்தில் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது என ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரவில பகுதியில் இருந்து ரத்மலான நோக்கி 4 பேருடன் பயணத்தை ஆரம்பித்த இலங்கை விமானப் படைக்கு சொந்தமான Y-12 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கேப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

உ யிரிழந்தவர்களில் இரண்டு விமானப்படை வீரர்களும் மற்றும் க ண்காணி ப்பாளர்கள் இருவரும் இருந்ததாக பா துகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளான பின்னர் தீப் பற்றி எ ரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் சம்பவ இடத்திற்கு ஹப்புத்தளை பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

முதன்முறையாக விமானத்தில் பறக்கவிருந்த நபர் : உயிர் பயத்தில் செய்த காரியத்தால் நடந்த விபரீதம்!!

நடந்த விபரீதம்

விமான பயணத்தின் போது அசம்பாவிதம் ஏற்பட கூடாது என்பதற்காக பயத்தில் நாணயங்களை தூக்கி வீசிய நபருக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த லு சாவோ என்ற 28 வயது நபர், கடந்த ஆண்டு பிப்ரவரி 17 ஆம் திகதி அன்று, தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஏங்கிங்கிலிருந்து குன்மிங்கிற்கு லக்கி ஏர் விமானத்தில் பறக்க இருந்தார்.

முதன்முறையாக விமானத்தில் ஏறிய அவர், உயிர்பயத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக பிராத்தனை செய்துவிட்டு 2 நாணயங்களை விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக வீசி எறிந்துள்ளார். அதில் ஒருநாணயம் அடியிலும், மற்றொன்று இடது இயந்திரத்தின் முன்னால் ஒரு மீட்டர் (3.3 அடி) தரையிலும் காணப்பட்டது.

160கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் அன்று இரவு தங்கவைக்கப்பட்டனர். மறுநாள் காலையில் வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்ட பின்னரே அங்கிருந்து அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட லு சாவோ மீது, நாணயங்களை இயந்திரத்தின் முன் வீசி பாரிய விபத்து ஏற்படுத்த முயன்ற கு ற்றத்திற்காக வழக்கு பதியப்பட்டது.

லு சாவோவின் மூட நம்பிக்கையால் அன்று இரவு மட்டும் பயணிகளை தங்கவைத்து, மாற்று விமானத்தில் அனுப்பியதற்காக 140,000 யுவான் (இந்திய மதிப்பில் 14,31,000) செலவானதாக விமான நிர்வாகம் புகாரில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணைகளை கேட்டறிந்த நீதிமன்றம், லு சாவோவிற்கு 123,358 யுவான் அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.

நடுவானில் ப ழுதடைந்த விமானம் : குழந்தைகள், நீதிபதிகள் உட்பட 18 பேர் ப லி!!

ப ழுதடைந்த விமானம்..

சூடானில் பழங்குடியினர் வ ன்மு றை வெ டிப்பிற்கு மத்தியில் இரா ணுவ விமானம் வெ டித்து சி தறிய விபத்தில் குழந்தைகள் உட்பட 18 பேர் ப லியாகியுள்ளனர்.

சூடானின் மேற்கு டார்பூர் மாகாணத்தில் டார்பூர் அரபு மற்றும் ஆப்பிரிக்க மசாலிட் பழங்குடியினரிடையே, கடந்த சில தினங்களாகவே வ ன்மு றை நடந்து வருகிறது.

இதன் விளைவாக நடந்த ச ண்டையில் பொதுமக்கள் பலரும் கொ ல்லப்பட்டுள்ளனர். மசாலிட் பழங்குடித் தலைவர்கள் மோ தல்களில் குறைந்தது 30 பேர் உ யிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து சோ தனை செய்வதற்காக அன்டோனோவ் 12 என்கிற இரா ணுவ விமானம் வியாழக்கிழமை இரவு, மேற்கு டார்பூரில் உள்ள எல் ஜெனீனா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.

அதில், மூன்று நீதிபதிகள், அதிகாரிகள், குழந்தைகள் என 18 பேர் சென்றுள்ளனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையில் வி ழுந்து நொ றுங்கியதாக கூறப்படுகிறது.

இந்த விப த்தில் நான்கு குழந்தைகள் உட்பட இரா ணுவ விமானத்தில் பயணித்த 18 பேரும் உ யிரிழந்துவிட்டதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் அமர் முகமது அல்-ஹசன் தெரிவித்துள்ளார்.

பிள்ளையை கொ ன்று விட்டு த ற்கொ லை செய்துகொண்ட இளம் தாய்!!

இளம் தாய்

பதுளை, கொஸ்லந்தை ஊவா மாவேலகம தமிழ்நாடு பிரதேசத்தில் நேற்று தனது இரண்டு மகள்களை தூ க்கில் இட்டு கொ லை செய்ய முயற்சித்து விட்டு, தாய் ஒருவர் த ற்கொ லை செய்து கொண்டுள்ளதாக கொஸ்லந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் ஒரு மகள் உ யிர் த ப்பியுள்ளார். மற்றுமொரு மகள் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளார். 20 வயதான திலானி மஞ்சு என்ற இளம் தாயும், அவரது மூன்றரை வயதான மகளுமே சம்பவத்தில் உ யிரிழந்துள்ளனர்.

வீட்டில் சே லையை பயன்படுத்தி இந்த பெண் த ற்கொ லை செய்துக்கொண்டுள்ளார். த ற்கொ லைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பயணிகள் பேருந்துகளில் மற்றுமொரு மாற்றம் : அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!!

பயணிகள் பேருந்துகளில்

இலங்கையில் சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளுக்கும் ஒரே விதமான கவனஈர்ப்பு ( ஹோர்ன்) ஒலியெழுப்பல் ஒழுங்குகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

பொதுமக்கள் மத்தியில் பேருந்துகளின் ஒலியெழுப்பும் சம்பவங்கள் குறித்து செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கென ஒரு குழுவை அமைத்து நடைமுறைகள் பற்றி ஆராயுமாறு அமைச்சர் மஹிந்த சமரவீர பணித்துள்ளார்.

இதேவேளை, பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் அதிகமான சத்தங்ளுடன் கூடிய பாடல்கள் ஒலிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. சத்தம் குறைவாக பாடல்களை இசைக்காத தனியார் பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 1955 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், தற்போது, சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளுக்கும் ஒரே விதமான கவனஈர்ப்பு ( ஹோர்ன்) ஒலியெழுப்பல் ஒழுங்குகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

27 ஆண்டுகளாக சிறையிலிருந்த தமிழ் அரசியல் கை தி ஒருவர் ம ரணம்!!

அரசியல் கை தி

27 ஆண்டுகளாக சி றையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் உ யிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையை சேர்ந்த தமிழ் அரசியல் கைதி செல்லப்பிள்ளை மகேந்திரன் என்பவரே தனது 46வது வயதில் நேற்று உ யிரிழந்துள்ளார். 1993ம் ஆண்டு மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன் இடம்பெற்ற சு ற்றிவ ளைப்பில் மகேந்திரன் கை து செய்யப்பட்டார்.

27 ஆண்டுகள் சி றைத் த ண்டைனைக்கு உள்ளான இவர் நீரிழிவு நோ யால் பா திக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே நேற்றைய தினம் அவர் உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தினார் ஜனாதிபதி கோட்டாபய!!

ஜனாதிபதி கோட்டாபய

எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது ஜனாதிபதிக்காக தீர்க்கப்படவிருந்த 21 மரியாதை வேட்டுக்கள் மற்றும் வீதியின் இருமருங்கிலும் இடம்பெறவிருந்த இராணுவ மரியாதை ஆகிய சம்பிரதாயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய இடம்பெறாது என பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய, அதி விசேட வர்த்தமானி மூலம் கடந்த இரண்டாம் திகதி நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் தலைமை உரையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆற்றவுள்ளார். இதன்போது அரசியலமைப்பின் பிரகாரம், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி முன்வைக்கவுள்ளார்.

அரசாங்கத்திற்கு வீண் செலவுகளை ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொண்டு வருகிறார். அதற்கமைய கடந்த ஒன்றரை மாதங்களில் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானங்கள் காரணமாக அரசாங்கத்திற்கு இரண்டாயிரம் கோடி ரூபா செலவு குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.