யாழ்ப்பாணத்தை அடுத்து மட்டக்களப்பிலும் சர்வதேச விமான நிலையம்!!

மட்டக்களப்பிலும் சர்வதேச விமான நிலையம்

மட்டக்களப்பு விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த அபிவிருத்தி நடவடிக்கைக்கு இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் தனது விமான பயணங்களை மட்டக்களப்பு விமான நிலையம் வரை மேற்கொள்ள விரும்புவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

நாட்டிலுள்ள ஏனைய சர்வதேச விமான நிலையங்களான கட்டுநாயக்க, யாழ்ப்பாணம் ஆகிய விமான நிலையங்களுக்கு இந்திய விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை மற்றும் ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பேருந்துகளில் வரும் புதிய நடைமுறை : மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை!!

புதிய நடைமுறை

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து சத்தம் குறைவாக பாடல்களை இசைக்காத தனியார் பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 1955 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதிக சத்தமாக பேருந்துகளில் பாடல் இசைக்கப்படுவதன் காரணமாக பேருந்துகளில் பயணிப்போர் முகம் கொடுக்கும் சிக்கல்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக 1000 பாடல்கள் கொண்ட இசைத்தட்டு ஒன்றை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தயார் செய்துள்ளது. இந்த இசைத்தட்டு எதிர்வரும் 31ஆம் திகதி தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த இசைத்தட்டில் உள்ள பாடல்களை மாத்திரமே ஒலிபரப்பப்பட வேண்டும். சத்தமாக ஒலிபரப்பினால் 1955 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

தடம்புரண்ட டிப்பர் : சாரதியின் கதி?

தடம்புரண்ட டிப்பர்

மன்னார் – கொழும்பு பிரதான வீதியின் கட்டையடம்பன் பகுதியில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் நோக்கி வேகமாக சென்ற டிப்பர் வாகனமே தொலைபேசி கம்பத்தில் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று காலை குறித்த டிப்பரை சாரதி செலுத்தி சென்ற நிலையில் அவர் குறித்த விபத்தில் காயமேதுமில்லால் அதிஸ்ரவசமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாடு ஒன்று குறுக்கே வந்ததாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சாரதி தெரிவித்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் வரலாற்று சாதனை படைத்த மாணவி!!

பாலசந்திரன் கிருபாலினி

கிளிநொச்சி மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் வர்த்தக பிரிவில் கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலய மாணவி மாவட்ட ரீதியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன் ஒரு பின்தங்கிய கிராமம் அக் கிராமத்தின் அக்கராயன் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற பாலசந்திரன் கிருபாலினி என்னும் மாணவி இவ்வாறு மாவட்ட ரீதியில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, தான் ஒரு கணக்காளராக வரவேண்டும் என்று தெரிவித்தார்.

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை

அண்மைக்காலமாக இலங்கையர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வெளிநாட்டு தவறிய அழைப்புகள் (Missed call) பாரியளவு கிடைப்பதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு இவ்வாறான தவறிய அழைப்புகள் வருவது அதிகரித்துள்ளது.

பாவனையாளர்களுக்கு அறிமுகமில்லாத இலங்கை தொலைபேசி இலக்கங்களில் இருந்து பல்வேறு வகையான குறுந்தகவல்கள் கிடைப்பதாக தெரியவந்துள்ளதென தொழில்நுட்ப சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை கையடக்க தொலைபேசி பயனாளர்கள் பெறுமதியான பரிசு வென்றுள்ளதாகவும், பரிசினை பெற ஒரு பணத்தொகையை செலுத்த வேண்டும் என குறும்தகவல்கள் அனுப்பப்படுகின்றன.

இவ்வாறு மோ சடியான முறையில் வரும் குறுந்தகவல்கள் குறித்து மிகவும் அவதானத்துடன் மக்கள் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறுந்தகவல்களில் கோரும் தனிப்பட்ட தகவல்கள் எதனையும் வழங்க வேண்டாம் எனவும், அவர்கள் வழங்கும் வங்கி கணக்கு இலக்கத்திற்கோ அல்லது bitcoin walletஇற்கு பணத்தை வழங்க வேண்டாம் என இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிநாட்டிலிருந்து பல்வேறு தொலைபேசி இலக்கங்கள் ஊடாக Missed call வருவதாகவும், அந்த இலக்கத்திற்கு மீண்டும் தொடர்பு கொண்டால் பெருமளவு பணம் பறிமுதல் செய்யப்படுவதுடன் தனிப்பட்ட தரவுகளும் திருடப்படுவதாக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!!

வவுனியா புளியங்குளத்தில்..

வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,

யாழிலிருந்து பதுளை நோக்கி சென்ற இ.போ.ச பேருந்து, புளியங்குளம் சந்திக்கு அண்மித்த பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் வீதிக்கு ஏற முற்பட்ட போது பேருந்து மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன் போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த 13 வயது சிறுவன் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணை புளியங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அத்தோடு பேருந்தினையும், சாரதியையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் அம்மா தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காகவே சாதித்த மாணவி!!

தனுசியா கணேசன்

அம்மா தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காகவே நான் சாதித்தேன் என வவுனியா மாவட்டத்தில் கலைப் பிரிவில் முதல்நிலை பெற்ற சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி தனுசியா கணேசன் தெரிவித்துள்ளார்.

வெளியாகிய கல்விப் பொது தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் புவியியல், தமிழ், கிறிஸ்தவ நாகரிகம் பாடத்தில் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலையினை சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி தனுசியா கணேசன் பெற்றுள்ளார்.

அம் மாணவி தனது வெற்றி பற்றி தெரிவிக்கையில், நான் சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கல்வி கற்றேன். நான் இருப்பது தவசிகுளம். பாடசாலையில் இருந்து 7 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது.

வானில் தான் பாடசாலை செல்கிறனான். ரியூசன் வகுப்புக்கு அம்மா, அண்ணா ஏற்றி இறக்குவார்கள். எனக்கு இந்த பெறுபேறு வருவதற்கு கடவுள் தான் காரணம். அவர் கொடுத்த அறிவை சரியாக பயன்படுத்திக் கொண்டேன்.

அதற்குப் பின்னர் அம்மா. அம்மா பட்ட கஸ்ரம். அம்மாவின் ஆசை. அக்காவும் சிறந்த பெறுபேறு பெற்று பல்கலைக்கழகம் சென்றார். அது போல் நான் போக வேண்டும் என்ற ஆசை இருந்தது.

தனியார் கல்வி நிலைய ஆசிரியர்களும் எனக்கு சிறப்பாக வழிகாட்டியிருந்தார்கள். பாடசாலையில் எனது ஆசிரியர்கள், எனது நண்பி சஜீவினி ஆகியோருக்கும் நன்றிகள்.

நாங்கள் கஸ்ரப்பட்ட குடும்பம் தான். எனக்கு 2005 ஆம் ஆண்டில் இருந்து அப்பா இல்லை. அம்மா அந்த குறை தெரியாது வளர்த்தார். அப்பா இல்லை என்பதைக் கூட சிரித்துக் கொண்டே சொல்வேன்.

ஏன் எனில் அம்மா எந்தக் குறையும் வைக்கவில்லை. தான் கஸ்ரப்பட்டு வேலை செய்து எம்மை படிக்க வைத்தார். அம்மா தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காகவே நான் சாதித்தேன். தொடர்ந்தும் படித்து விரிவுரையாளராக வர வேண்டும் என்பதே எனது விருப்பம் எனத் தெரிவித்தார்.

காதல் திருமணம் : கெளரவக் கொ லை செய்யப்போவதாக மி ரட்டல் : இளம்பெண் ப ரபரப்பு புகார்!!

இளம்பெண்

தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த பெண்ணை அவரது பெற்றோர் க டத்திச் சென்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் பூதப்பாண்டியை சோ்ந்த பியூட்லினும் வெள்ளிச்சந்தையை சோ்ந்த சரண்யாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா்.

இருவேறு பிரிவைச் சோ்ந்த இவா்களுடைய காதலுக்கு சரண்யாவின் பெற்றோர்கள் கடும் எ திர்ப்பு தெரிவித்து வந்துள்ளனா். ஆனால் சரண்யா, பியூட்லினை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்துள்ளார்.

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன் காதலா்கள் இருவரும் கோவில் ஒன்றில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனா். இவா்களின் திருமணத்தை பியூட்லினின் பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டதால் அவா்களை தங்கள் வீட்டில் அனுமதித்துள்ளனா்.

ஆனால் சரண்யாவின் பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கு கடும் எ திர்ப்பு தெரிவித்து வெள்ளிச்சந்தை பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளனா். இதனையடுத்து பொலிலிசார் அந்த காதல் தம்பதிகளை கடந்த 25 ஆம் திகதி விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துள்ளனா்.

காவல்துறையினரின் அழைப்பை ஏற்று அந்த காதல் தம்பதிகள் காவல் நிலையம் சென்றுள்ளனர். அப்போது அங்கு நின்று கொண்டியிருந்த சரண்யாவின் பெற்றோர்களும் உறவினா்களும் பியூட்லினை தா க்கி விட்டு சரண்யாவை க டத்திச் சென்றுள்ளனா்.

இந்த நிலையில் பியூட்லினின் தாயார் தாசம்மாள் மற்றும் உறவினா்கள், தனது மருமகளை கெளரவக் கொ லைக்காக அவளின் பெற்றோர்கள் க டத்தி சென்று இருப்பதாகவும், மருமகள் சரண்யாவை கெளரவக் கொ லை செய்ய போகிறோம் என போனில் மி ரட்டுவதாகவும், எனவே மருமகளை மீட்டு தர வேண்டுமென்று மனு அளித்துள்ளார்.

வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்களுக்காக வருகிறது புதிய நடைமுறை!!

சாரதி அனுமதிப் பத்திரம்..

வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை விநியோகிப்பதற்காக SMS தொழிநுட்பத்தை பயன்படுத்த மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின் அதனை பூரணப்படுத்தி மீண்டும் வழங்குவதற்கான குறிப்பிட்ட நேரத்தை விண்ணப்பதாரருக்கு SMS மூலமாக அறிவிப்பதற்கு இந்த வேலைத்திட்டத்தின் மூலம் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் உபாலி ஜயசேகர தகவல் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், திணைக்களத்தின் தொழிநுட்ப பிரிவின் ஒத்துழைப்புடன் இந்த புதிய நடவடிக்கையை 2 வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு தேவையுள்ள விண்ணப்பதாரர் தமது விண்ணப்ப படிவத்தை கையளித்தால் எமது அதிகாரிகள் 2 மணித்தியாலத்திற்கு பின் வருமாறு கூறுகின்றனர்.

இருப்பினும் சில சந்தர்ப்பத்தில் கால தாமதம் ஆவதினால் இந்த புதிய முறை ஊடாக சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் சாரதி அனுமதிப்பத்திரம் தயாரிக்கப்பட்ட பின் அது குறித்து SMS ஊடாக அவருக்கு அறிவிக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

48 நாடுகளுக்கு விசா கட்டணம் நீக்கம் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெ ருக்கடி!!

விசா கட்டணம் நீக்கம்

48 நாடுகளுக்கு விசாக் கட்டணம் நீக்கப்பட்டமையினால் இலங்கைக்கு பாரிய நெ ருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் விசா கட்டணத்தை நீக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக 6000 மில்லியன் ரூபா வருமானத்தை இலங்கை இழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 48 நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கான விசா கட்டணம் அறவிடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

ஒஸ்ட்ரியா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, கம்போடியா, சீனா, குரோசியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீஸ், ஹங்கேரி, இந்தியா, இந்தோனேஷியா, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், லத்வியா, லிதுவேனியா, லக்சம்பேர்க், மலேஷியா, மோல்டா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, பிலிப்பைன்ஸ், போலந்து, போர்த்துக்கல், ரொமேனியா, ரஷ்யா,

சிங்கப்பூர், தென் கொரியா, ஸ்லோவாகியா குடியரசு, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, உக்ரைன் மற்றும் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கே இவ்வாறு விசாக் கட்டணம் நீக்கப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற சம்பவம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் துடிதுடித்து உ யிரிழந்த இளைஞர்கள் : ஊருக்கு முன்பதிவு செய்த விமானத்தில் வந்த ச டலம்!!

விமானத்தில் வந்த ச டலம்..

இந்தியாவை சேர்ந்த இரு இளைஞர்கள் வெளிநாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சென்ற போது உ யிரிழந்த நிலையில் அவர்களின் ச டலங்கள் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்துள்ளது.

கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்கள் சரத்குமார் (21) மற்றும் ரோகித் கிருஷ்ணகுமார் (19). இதில் சரத்குமார் அமெரிக்காவில் தங்கி படித்து வந்தார், அதே போல ரோகித் பிரித்தானியாவின் மான்செஸ்டர் பல்கலைகழகத்தில் மருத்துவம் படித்து வந்தார்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தங்கள் வீடு அமைந்திருக்கும் துபாய்க்கு சரத்குமாரும், ரோகித்தும் சென்றனர்.

கடந்த 25ஆம் திகதி ரோகித்தை தனது காரில் ஏற்றி கொண்டு சரத்குமார் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் நடைபாதையை இடித்து கொண்டு பின்னர் பயங்கர வேகத்தில் மரத்தின் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் சரத்குமார் மற்றும் ரோகித் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே து டிது டித்து உ யிரிழந்தனர்.

இந்நிலையில் கேரளாவுக்கு வியாழன் அன்று தனது தாய் மற்றும் பாட்டியுடன் வருவதற்கு சரத்குமார் விமான டிக்கெட்கள் முன்பதிவு செய்திருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அவரின் ச டலம் தான் விமானம் மூலம் ஊருக்கு வந்தடைந்தது.

அதே போல ரோகித்தின் ச டலம் இன்று காலை விமானம் மூலம் கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டது. இருவரும் சடலங்களுக்கும் இன்றே இ றுதிச்சடங்கு நடக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

வவுனியாவில் வீதிக்கு இறங்கிய பெண்கள் அமைப்புக்கள் : வர்த்தக சங்கம் அதிரடி நடவடிக்கை!!

வீதிக்கு இறங்கிய பெண்கள்

வவுனியா நகர்வாழ் அன்பான வர்த்தக பெரு மக்களே உங்கள் பெண் பணியாளர்கள் உங்கள் கண்மணி ஆனவர்கள் அவர்களை பா துகாக்கும் இமைகள் நீங்களே எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணி ஒன்று இடம்பெற்றது.

பெரியார்குளம் , பூந்தோட்டம் கிராம பெண்கள் அமைப்பின் ஒருங்கினைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் விழிப்புணர்வு பேரணியானது வவுனியா வாடி வீடு முன்றலில் இன்று (28.12.2019) காலை ஆரம்பமாகி புகையிரத நிலைய வீதியுடாக பஜார் வீதி,

தர்மலிங்கம் வீதி, ஹொரவபொத்தானை வீதியூடாக சென்று வர்த்தக நிலையங்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுமும் கையளித்தனர்.

இப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் உரிமைகள் உண்டு பெண் பணியாளர்களுக்கு அதனை காக்க கடமைகள் உண்டு உங்களிற்கு, து ன்புறுத் தல்களின்றியே பெண் பணியாற்றினால் அவர்கள் இன்புற பணியாற்றி இலாபம் பெருகுமே ,

ஆண்களிற்கு சரிநிகர் சமானமென்றால் ஏன் பெண் பணியாளர்களிற்கு மட்டும் பராபட்சம்?, தலை நிமிர்ந்து பெண்கள் பணி புரிந்தால் உங்கள் நிலை உயர்ந்து நிற்கும் தரணியிலே போன்ற பல்வேறு பாதாதைகளை ஏந்தியிருந்தனர்.

விழிப்புணர்வு பேரணியானது இறுதியாக வர்த்தக சங்கத்தினரிடம் சென்றடைந்தனர். இதன் போது வர்த்தக சங்கத்தினர் அவர்களை அழைத்து கலந்துரையாடியதுடன் அவர்களுக்கு குளிர்பானமும் வழங்கினார்கள்.

குறித்த சந்திப்பின் போது பெண்கள் அமைப்பினர் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்துமாறு கோரி வவுனியா வர்த்தக சங்கத்தினரிடம் மகஜர் கையளித்தனர்.

இதன் போது வர்த்தக சங்கத்தின் யாப்பில் வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நலனில் அக்கறை செலுத்துவதுடன் பிரச்சனை ஏற்படுமிடத்து அவற்றினை ஆராய்து பொருந்தமான தீர்வினை காண வேண்டும் என உள்ளது.

எனவே ஊழியர்கள் நலன் சார் விடயங்களை மீறும் வர்த்தக நிலையங்களுக்கு எ திராக இனிவரும் காலங்களில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வர்த்தக சங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

வறுமை இவளுக்கு ஒரு பொருட்டல்ல : தடைகளை தாண்டி சாதனை படைத்த மாணவி!!

பாத்திமா முஸாதிகா

திருகோணமலை ஸாஹிறா கல்லூரியில் விஞ்ஞான பிரிவில் கற்ற மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த மீராசா பாத்திமா முஸாதிகா விஞ்ஞான பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் 01 ஆம் நிலையினை பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகி தான் பிறந்த மூதூருக்கும், தனது பெற்றோருக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.

மருத்துவ துறைக்கு தெரிவான முஸாதிகாவின் வீட்டுக்குச் சென்று அவர்களது குடும்பத்தாரோடு பேசும் சந்தர்ப்பம் இன்று காலை கிடைத்தது.

அதன்போது அவர்களது குடும்ப பின்னணியையும் முஸாதிக்கா கல்வி கற்ற கடின நிலையினையும் அறிய முடிந்தது.

இருப்பினும் சில விடயங்களை கருத்தில் கொண்டு விவரிக்க முடியவில்லை. அதனையும் தாண்டி மகிழ்ச்சியில் எமக்கு வழங்கிய உபசரிப்பு மெய்சிலிர்க்க வைத்தது. சுருங்க கூறினால் வறுமை கல்விக்கு தடையல்ல என்பதற்கு எடுத்து காட்டு முஸாதிக்கா.

முஸாதிக்காவின் எதிர்கால கனவு VOG ஆக வந்து இனமத பேதங்களுக்கு அப்பால் சேவையாற்ற வேண்டும் என்பதாகும் அது நிறைவேற இறைவன் அருள்புரிவானாக.

இறுதி யு த்தத்தில் தந்தையை இழந்த மாணவி சுடர்நிலா 3A பெற்று சாதனை!!

மாணவி சுடர்நிலா

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கெருடமடு மடுக்கரை பகுதியில் வசித்து வருகின்ற குறித்த மாணவி இறுதி யு த்தத்தின் போது தனது தந்தையாரை இழந்த நிலையிலும் 3A சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவருடைய தங்கை 2021 கலைப்பிரிவில் கல்வி கற்கின்ற நிலையில் குறித்த மாணவியின் சகோதரன் மேசன்வேலை செய்து தன்னுடைய தங்கைகள் இருவரையும் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் கற்பித்த நிலையில் இம் மாணவி சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவியை மனதார வாழ்த்துவதுடன் பல்கலைக்கழக கல்விக்கு உதவிட நல்லுள்ளம் கொண்டவர்கள் முன்வருமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மாணவி சுவாகி சாதனை!!

மாணவி சுவாகி

கிளிநொச்சி மாவட்டத்தில் உயிர் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன.

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உயிர் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவி சுவாகி சுந்தரமூர்த்தி 2 பி, 1 C பெறுபேறு பெற்றுள்ளார்.

இவர் கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலையையும் அகில இலங்கை ரீதியில் 31 ஆவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வவுனியாவில் கூலி வேலை செய்யும் தந்தையை தனது சாதனை மூலம் பெருமைப்படுத்திய மாணவன்!!

கணேசமூர்த்தி கலையரசன்

பின்தங்கிய கிராமத்திலிருந்து தினமும் 3 கிலோமீற்றர் தூரம் துவிச்சக்கரவண்டியில் சென்று படித்து சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளேன் என வவுனியா மாவட்டத்தில் வர்த்தகப் பிரிவில் இரண்டாவது இடத்தினை பெற்ற கணேசமூர்த்தி கலையரசன் தெரிவித்தார்.

வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தினை சேர்ந்த கணேசமூர்த்தி கலையரசன் 2AB சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாவது நிலை பெற்றுள்ளார்.

தனது பரீட்சைப் பெறுபேறு குறித்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் கடந்த முறை கடந்த முறை கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி ஏ,2பி பெறுபேற்றினை பெற்றேன். அப்போது அத்துடன் எனது படிப்பினை முடிந்துக்கொள்ள முனைந்தேன்.

எனது ஆசிரியர்கள் என்னை மீண்டும் பரீட்சையில் தோற்றுமாறு தெரிவித்து எனக்கு அறிவுரை வழங்கியதன் பின்னர் எனது குடும்பத்தின் எதிர்காலத்தின் நலனையும் எனது நலனையும் கருத்தில் கொண்டு இந்த முறை பரீட்சைக்கு தோற்றினேன்.

எனது கிராமம் ஓர் பின்தங்கிய கிராமமாகும். அங்கிருந்து தினசரி மூன்று கிலோமீற்றர் தூரம் துவிச்சக்கரவண்டியில் பயணித்து பாடசாலைக்கு சென்று எனது கல்வியினை மிகவும் கஸ்டத்தின் மத்தியிலும் தொடர்ந்தேன்.

எனது குடும்பம் வறுமைகோட்டிற்குட்பட்டதாகும். தந்தை கூலி வேலை செய்துதான் என்னை படிப்பித்தவர். அண்ணாவும் கூலி வேலை தான் செய்து வருகின்றார். எனது குடும்பத்தில் படித்தது நான் மட்டும் தான்.

அத்துடன் எதிர்கால மாணவர்கள் குடும்ப நிலையோ வறுமையோ நினைத்து துவண்டு விடாமல் கல்வியை தொடர்ந்தால் வெற்றியை அடைய முடியும். எனது எதிர்கால இலட்சியம் சிறந்த கணக்காளராக வருவதே ஆகும் என தெரிவித்தார்.